மோகநிலவே! காதல் மலரே!

This entry is part 2 of 4 in the series மோகநிலவே! காதல் மலரே

மோகநிலவே! காதல் மலரே

மோகநிலவே! காதல் மலரே!

மோகநிலவே! காதல் மலரே!

மோகநிலவே! காதல் மலரே!

மோகநிலவே! காதல் மலரே!

மோகநிலவே! காதல் மலரே!

மோகநிலவே! காதல் மலரே!

மோகநிலவே! காதல் மலரே!

மோகநிலவே! காதல் மலரே!

மோகநிலவே! காதல் மலரே! 18

அபி ஸ்கூட்டியிலிருந்து உள்ளுக்குள் உதறலுடன் இறங்க அந்த நான்கு தடியர்களும் அவளை நோக்கி முன்னேறினர்.. குறுக்கே வந்து நின்றான் தீனா.. 

“என்ன வேணும் உங்களூக்கு”.. தீயாய் முறைக்க “உனக்கு இந்த பொண்ணு என்ன வேணும்”.. திரும்ப கேள்வியே பதிலாக வந்தது..

“என் கேர்ள் பெஸ்ட்டி”.. தோளைக் குலுக்கினான்.. “அட வீணாப் போனவனே அதெல்லாம் அவங்களுக்கு தெரியாதுடா.. சார் இவன் என் ஃபிரெண்ட்”.. என்று அபி விளக்கம் கொடுக்க அப்போதும் கல்லை முழுங்கியது போல நின்றிருந்தனர் அவர்கள்..

“ஏய் அதுவும் புரியல போலடி”.. காதுக்குள் கிசுகிசுத்தான் தீனா..

“ஃபிரெண்ட்ஸ்க்கு இருட்ல தனிமைல என்ன வேலை”.. ஒருவன் இடுப்பில் கைவைத்து இந்தியில் கேட்க “அதானே.. இதோ இப்போ கிளம்பிடறோம்”.. என பைக்கை நோக்கி செல்லப் போனவனை வழிமறித்தான் இன்னொருவன்..

“அப்படியெல்லாம் விட முடியாது.. வாங்க போலிஸ் ஸ்டேஷன் போகலாம்”.. என இருவரையும் சூழ

“எதுக்கு நாங்க போலீஸ் ஸ்டேஷன் போகனும்”.. புருவம் சுருக்கினான் தீனா.. “ஆமா விபச்சாரம் பண்ணா அங்கதானே போகனும்”.. ஏளனமாய் சிரித்தது அந்தக் கூட்டம்..

“அய்யோ கடவுளே” காதைப் பொத்தினாள் அபி..

காதுமடல் சிவக்க கோபம் வந்துவிட “ஏய் என்னங்கடா நானும் போனாப் போகுதுனு பொறுத்துப் போனா ஓவராப் போறீங்க”.. என எதிரே நின்றவன் மூக்கில் குத்து விட்டான் தீனா.. அடிவாங்கியவன் மூக்கில் வடிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டே “ஏய்” என உறுமிக் கொண்டே “இவனை பிடிங்கடா.. அந்தப் பொண்ணைத் தூக்கி வண்டில போடு”.. என சட்டென எதிர்பாராத நேரத்தில் இருவர் அவனை பிடித்துக் கொள்ள மூன்றாமவன் அபியை நெருங்க “ஏய் அவளை விடுங்கடா”.. என முடிந்தவரை போராடிப் பார்த்தான் தீனா.. தன்பலம் கொண்டு ஒருவனை இழுத்து கீழே தள்ளி தன் கைப் பிடித்திருந்த இன்னொருவனை எட்டி உதைக்க அந்த இடமே களேபரமானது.. நெஞ்சம் பதைபதைக்க நின்றிருந்தாள் அபி.. அதற்குள் இன்னொரு ஜீப்பில் ஆட்கள் தபதபவென இறங்க நிலமை விபரீதமாவதை உணர்ந்தாள்.. வந்தவர்கள் தீனாவை அடிக்கப் பாய அவனும் சிறுத்தை போல முறுக்கிக் கொண்டுதான் நின்றான்.. அவனால் இவர்களுடன் மோதி முழுசாக வீடு போய் சேரமுடியாதே.. 

தீனாவை அடிக்க அந்த கும்பல் கட்டையை ஓங்க அவன் நெஞ்சில் போய் விழுந்தாள் அபி.. “பிளீஸ் லீவ் ஹிம்.. ஹீ இஸ் மை ஹஸ்பண்ட்”.. அவள் கத்த ஓங்கிய கைகள் அப்படியே நின்று விட்டன.. “புருஷன்னு சொல்ற.. தாலியைக் காணும்”.. ஒருவன் தலையை சாய்த்து அழுத்தமாக கேட்க “அது.. அது”.. திருட்டு முழி முழித்தாள்..

கையோடு வைத்திருந்த திருமாங்கல்யத்தை அவனிடம் நீட்டியவன் “கட்டினா உயிர் வாழ்வே.. இல்லை நீ சாவே.. அவ போலீஸ் ஸ்டேஷன்ல கம்பி எண்ணுவா”.. என்று வந்தவன் மிரட்ட தீனா  விக்கித்துப் போய் அபியை பார்க்க அவளோ  “டேய் கட்டித் தொலையேன்டா.. முதல்லை இங்கிருந்து கிளம்பலாம்.. பயமா இருக்குடா”.. அவள் அவசரப் படுத்தினாள்..

இவள் என்ன சாதாரணமாக சொல்கிறாள் எனப்பதறிப் போனவன் “ஏய் என்னடி உளர்றே.. எனக்கு என்கேஜ்மென்ட் ஆகிடுச்சு”.. என விரலில் கிடந்த மோதிரத்தைக் காட்ட “அய்யோ எனக்கும் அது தெரியும்.. இப்போதைக்கு வேற வழியே இல்ல.. இது இவங்க ஏரியா போல.. நிறைய ஆளுங்க இருக்காங்க.. தேவையில்லாத பிரச்சினை வேணாம்.. இப்போ கட்டு.. வீட்டுக்கு போய் கழட்டிக் கொடுத்துடுவேன்.. நீ நிச்சயம் பண்ண பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ.. நான் குறுக்கே நிக்க மாட்டேன்.. பல்லைக் கடித்து மெதுவான குரலில் அவள் தமிழில் பேச அங்கிருந்தவர்களுக்கு நல்லவேளை ஒன்றும் புரியவில்லை..

அவனுக்கும் இப்போதைக்கு இதைத் தவிர வேறெதுவும் யோசனை பிடிபடவில்லை.. எதிர்த்து போராடலாம்.. ஆனால் கஷ்டம்.. ஆட்கள் இன்னொரு சுமோவிலும் வந்து இறங்கினர்..

தயக்கத்துடன் தாலியை வாங்கியவன் ஏய் கழட்டிக் கொடுத்துருவல.. என்று சங்கடத்துடன் கட்டும்முன்னே அபசகுனமாய் கேட்க “கட்டித் தொலைடா பன்னி”.. என்றாள் பற்களைக் கடித்து.. 

அதற்கு மேல் யோசிக்காமல் அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட.. “ஆமா இங்கே பிரச்சினையா.. யார்டா அவன்.. பிரச்சினை பண்றது” என்ற ரீதியில் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு வாழ்த்திவிட்டு சென்றனர் அந்த ஆட்கள்..

கழுத்தில் தாலி வாங்கியவளும் அதைக் கட்டியவனும் மட்டும் மலங்க மலங்க விழித்து நின்றனர்..

“என்ன பண்ணி வைச்சிருக்கேன் நான்” .. தலையில் அடித்துக் கொண்டான் தீனா.. 

“தீனா நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே”.. என்றவளை என்ன என்பது போல கடுப்பாக பார்த்தான் தீனா.. 

“நீ அதிதியை விரும்பறியா”.. என்று தயக்கத்துடன் கேட்க கடும் கோபத்தில் கண்களை மூடித் திறந்தவன் “ஏய் சாவடிக்காதடி..  சின்ன வயசிலயே எனக்கு அவ.. அவளுக்கு நான்னு முடிவு பண்ணியாச்சு.. அதோட நாங்க ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்.. காலை 3 மணி வரைக்கும் அவகிட்டேதான் பேசிட்டு இருந்தேன்.. நீ வேணா பாரு”.. என அவளிடம் ஃபோனை காட்ட கால் டியூரேஷன் 2hours 45 min.. எனக் காட்டியது திரையில்.. ஒருவித ஏமாற்றம் அவளையும் அறியாமல் நெஞ்சில் படராமல் இல்லை.. 

மறுபடி அதிதி காலிங் என ஃபோன் திரையில்  ஒளிர “சரி நீ முன்னாடி போ.. நான் பைக் எடுத்துட்டு உன்னை ஃபாலோ பண்றேன்”.. என்றவன் ஃபோனை காதில் வைத்து “ஹலோ அதிதி” என்றபடி பைக்கை நோக்கி செல்ல இதயத்தில் சுள்ளென்ற வலியுடன் தன் ஸ்கூட்டியை நோக்கி சென்றாள்.. என்னதான் பொய்க்கல்யாணம். பொம்மைக் கல்யாணம் என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டாலும் கழுத்தில் மாங்கல்யம் ஏறிய தருணத்தை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..

வீடுவரை துணைக்கு வந்தவன் வாசலில் நிற்க “உள்ளே வா தீனா” என்று அழைக்க “இல்லை.. இப்போ ரோஜாவும் இல்லை.. நீ தனியா இருக்கே.. உள்ளே வந்தா தப்பா போய்டும்..சரி நேரமாச்சு தாலியை கழட்டிக் கொடு”.. என்றான் இறுகிய முகத்துடன்..

அவன் வார்த்தையில் நெஞ்சடைத்துப் போனது.. சொல்ல முடியா உணர்வு தொண்டையை அடைக்க விழிநீர் துளிர்க்க கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தில் கை வைத்தாள் அபி..

“என்ன உருட்டிக்கிட்டு இருக்கே.. சீக்கிரம்டி”.. பற்களை கடித்து அவசரப்படுத்த இதயத்தை கல்லாக்கிக் கொண்டு கழுத்தில் கிடந்த தாலியைக் கழட்டி அவன் கையில் கொடுத்திருந்தாள் அபி..

இங்கோ இரவு தாண்டியும் அலுவலக அறையில் உருட்டிக் கொண்டிருக்கும் ரேயன் இப்போதெல்லாம் மணி ஆறைத் தாண்டும் முன் வீட்டில் நிற்கிறான்.. காரணம் அவன் கார்ச்சத்தம் கேட்டவுடன் துள்ளிக் குதித்து நான்கு கால்களில் தவழ்ந்து ஓடிவரும் அவன் மகன்.. அப்போ ரோஜா?.. அவளை பாத்து நான் என்ன பண்ணப் போறேன்.. என்பான் தெனாவட்டாக.. 

ஆனால் தரையில் தவழ்ந்து வரும் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு மனைவியைத்தான் முதலில் தேடும் அவன் கண்கள்..

“எங்கேடி போய்த் தொலைஞ்சே.. வந்தவுடனே கண்ணுக்கு முன்னாடி வந்து குளிர்ச்சியா நிக்கனும்னு தெரியாதா இவளுக்கு.. அடியேய்” எனக் கத்துவான்.. இதோ வந்துட்டேன்.. என இடுப்பில் சேலையை இழுத்து சொருகி வருகையில் ஒரு கிறக்கம் என்றால் மாடர்ன் உடையில் பார்க்கையில் வேறு வித மயக்கம்.. 

பிள்ளைக்காக உன்னை அனுமதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பிள்ளையை பெற்ற அம்மாவை சுற்றி வருவதையே வழக்கமாக வைத்திருக்கிறான் திருட்டுப் பயல்.. 

பிரணவ் சமத்து என்பதால் சின்ட்ரெல்லா பொம்மையை விளையாடக் கொடுத்துவிட்டு நிஜ சின்ட்ரெல்லாவை தேடி சென்றுவிடுவான்.. இரவுக்கும் உறவுக்கும் குறைவில்லை.. விடிய விடிய அவளை நாடுவான்.. 

“சீக்கிரம் புள்ளைய தூங்கவை ரோஜா.. முடியலடி.. இன்னும் எவ்ளோ நேரம்”.. பக்கத்தில் படுத்து அவள் காதைக் கடித்து விரல்களை மேனியெங்கும் மேயவிட்டு தன் சிறுபசியை தணித்துக் கொள்கிறேன் என பெரும்பசியாக்கி படாதபாடு படுவான்.. ரோஜா அருகில் இல்லையென்றால் பைத்தியமே பிடிக்கும்.. 

இதழ்களுக்கு இடைவேளையே இன்றி இடைவிடாத வேலை இருக்கும் இரவு முழுவதும்.. குட்டிப் பிள்ளை போல துங்க வேண்டும் என்றால் அவள் வேண்டும்.. அவள் மீது உதடுகள் உரசிக் கொண்டே இருக்க வேண்டும்.. விரல்கள் ஆங்காக்கே கிள்ளியெடுக்க தூக்கத்தில் கூட முனக வைப்பான் அவளை.. 

அன்று நெடிய இரவு முழுவதும் கூடிக்களைத்தும் அவளை விடாது ஆடைகளை கொடுக்காமல் முரண்டு பிடித்து ஆணவனின் முரட்டு இதழ்கள் பெண்மையின் அதீத மென்மை ரகசியங்களில் இடம்பார்த்து இடம்பெயர்ந்த வேளையில் படுக்கை விரிப்பை இறுகப் பிடித்து கீழுதட்டைக் கடித்துக் கொண்டவள் உச்சக்கட்ட இன்ப அவஸ்தையில் “வேண்டாம் பிளீஸ்..  அதிஇஇ”.. எனக் கத்தி விட்டாள்.. 

சட்டென நிமிர்ந்தவன் அவள் அழைப்பில் உடலெங்கும் ஜிவ்வென்று இழுக்க பிடரி சிலிர்க்க கண்கள் இன்னும் மோகத்திலும் காதலிலும் சிவந்து போக மேலேறி வந்து அவள் விழிகளை ஆழ நோக்கினான்.. 

என்ன சொல்லிக் கூப்பிட்டே.. அவன் கரகரத்த குரலில் கேட்க பயந்து போனது பசுங்கிளி.. சா..சாரி சார்.. தெரியாம பேர் சொல்லிட்டேன்.. மன்னிச்சிருங்க.. மிரளும் விழிகள்.. துடிக்கும் இதழ்கள் அழகோ அழகு.. இதற்காகவே பயமுறுத்திக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.. விபரீத ஆசைதான்..

அவள் தனிமையில் தவித்த நாட்களில் பசலை நோய் கண்டு தலைவனை மானசீகமாக கொஞ்சும்போது அவள் அழைக்கும் பிரத்யேக அழைப்பு..

“சொல்லுடி”.. குரலூயர்த்தி மிரட்டினான்.. பூமொட்டை கசக்கி காயப்படுத்தினான்.. கொஞ்சி காரியம் சாதிக்க பொறுமை இல்லை.. “அதி.. அதிஇஇ”.. வலியும் சுகமும் சேர முனகவும் திரும்ப சொல்லு என்றான்..

“அதிஇஇ”… முடிக்கும் முன் இதழைக் கவ்வி பரிசாக ஒரு நெடிய முத்தம்..  கணக்கில்லாமல் தன்னை அழைத்த இதழுக்கு இச் இச் நிறைய கொடுத்தான்.. எனக்கு? என சிவந்த கன்னம் இரண்டும் கூட கேட்டுவாங்கி தலைவனின் முத்தங்களை கணக்கில்லாமல் பெற்றன.. கழுத்தின் கீழ் கிடந்த செழித்த மென்மை அவர்களுக்கு மட்டும் மென் முத்தம்.. எங்களுக்கு மட்டும் பசித்தவன் பாய்ந்தது போல சத்தை உறிஞ்சிக் கொண்டு காயங்கள்மட்டும்.. பாரபட்சம் கொண்ட அரக்கன் நீ.. என திட்டிதீர்க்க இதோ அள்ளி வழங்குவேன் என் கட்டி தங்கங்களுக்கு.. என இடைவிடாத முத்தத்தில் சிவக்க வைத்தான் முழு அங்கத்தை..

மோக நரம்புகள் முறுக்கேற “அதிஇஇ சொல்லுடி”.. சொல்லிக்கிட்டே இரு.. என அவளை அழைக்க வைத்து அழைத்த இதழுக்கு சன்மானம் வழங்கி கண்சொக்கி வேறு ஒரு புது உலகத்திற்கு பெண்ணவளை அழைத்து சென்று இன்னொரு கூடலை நிகழ்த்தி திக்குமுக்காட செய்திருந்தான் ரேயன்.. அதன்பின் மனதுக்குள் ஏக்கம் இருந்தாலும் அதி என்று அழைக்க சொல்லவில்லை.. ஆனால் சார் என்று அழைக்கையில் இனம்புரியா வலி கண்டான்..

நாட்கள் அழகாகத்தான் சென்றது.. எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த நிமிடங்களை மகனுடன் அனுபவித்து வாழ்ந்தனர் இருவரும்.. இருவருக்கிடையான புரிதல் ஊடல் கூடல் என ஒவ்வொரு நிமிடமும் ரசித்துதான் வாழ்ந்தனர்..

வித விதமாய் உடைகள் போடவைத்து அழகு பார்த்தான்.. தாய் வீட்டில் கல்லூரிக்கு செல்லும் வரையிலும் கூட கிழிந்த உடை அணிந்து பலரின் கேலி கிண்டலுக்கு ஆளானவள் இப்போது ஒரே உடையை வாரம் இருமுறை அணிந்தாலே “ஏன்டி வாங்கிவைச்ச டிரசெல்லாம் எங்கே போச்சு.. போட்டதையே போட்டு நிக்கிற”.. என இன்னும் இரண்டு புடவைகளை வாங்கி வந்து அவள் தலையில் கட்டுவான்.. கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்தான்.. கேட்காததையும் வாங்கிக் கொடுத்தான்.. நடு நடுவே இதெல்லாம் கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு எனத் திட்டியும் தீர்ப்பான்.. “என் பிள்ளையை பாத்துக்கிறவ பாக்க ரிச்சா இருந்தாதானே அவனுக்கும் பெருமை.. இங்கேருந்து போனபிறகு உன் இஷ்டத்துக்கு கந்தத் துணியை கசக்கி கட்டு.. எனக்கென்ன”.. எனக் காரணம் கண்டுபிடித்து காயப் படுத்துவான்.. பொறுத்துக் கொண்டாள்.. பொங்கியெழும் நாள் இன்னும் வரவில்லை.. அடுத்தநிமிடமே அதீத காதலை கொடுத்து காயத்தை ஆற்றிவிடுவான்..

ஆனால் அவனே தன் வாயால் ரோஜாவை இவள் என் மனைவி என்று சொல்லும் நாளும் வந்தது.. அன்றே ரோஜா ஒரு விபரீத முடிவையும் எடுத்தாள்.. 

அவன் கம்பெனி புராடெக்ட் சக்சஸ்ஃபுல்லாக லான்ச் செய்யப்பட்டு விற்பனையில் உச்சம் தொட அதற்காக பார்ட்டி ஒன்றை செவன்ஸ்டார் ஹோட்டலில்  ஏற்பாடு செய்திருந்தான் ரேயன்.. சினிமா பிரபலங்களையும் முக்கிய புள்ளிகளையும் அழைத்திருந்தான்.. அங்கே..

தொடரும்..

லைக் வருமா செல்லம்ஸ்.. 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *