மோகத்தை வென்றவளே

This entry is part 21 of 28 in the series மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே – 11

மோகத்தை வென்றவளே – 11

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே

மோகத்தை வென்றவளே



மோகம் – 21 


கவின் கூறிய வார்த்தைகள் அவளை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றன.

ஒரு ஆல்ட்டர் நினைத்தால் நிஜமான கேரக்டரை வெளியே வராது தடுக்க முடியுமா….? 

ஆம் ஒருவரினுள்ளே உள்ள ஆல்ட்டர் அந்த நபரை விட அதீத மன பலத்தை கொண்டிருந்தால் நிஜமான நபரை விட அந்த ஆல்ட்டரே வெளியே அடிக்கடி வெளிப்படும்.

ஆதி சற்று பலவீனமாக இருந்தாலும் அவனை கவினால் இலகுவாக கட்டுப்படுத்த முடியும்.

தன்மயாவால் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. “நீ…. நீ இப்படி பண்ணக் கூடாது கவின்….” என கண் கலங்கினாள் மாது.

“பேபி ப்ளீஸ் அழாத…. இந்தக் கவின் வர்றதே உனக்காகத்தான். உனக்காக மட்டும்தான்.” என்றவனிடம் தன் கரங்களை நீட்டினாள் தனு.

“என்ன பேபி….?”

“எனக்கொரு ப்ராமிஸ் பண்ணிக் கொடு கவின்.”

“என்ன ப்ராமிஸ் பேபி….?”

“ஆதியை நீ எப்பவுமே கன்ட்ரோல் பண்ணக் கூடாது.”

“ம்ப்ச் பேபிமா. ஆதி ஒன்னும் அவ்ளோ பலவீனமானவன் இல்ல. அவனோட மைன்ட் உன்கூட இருக்கும் போது ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குன்னு நினைக்கிறேன்.” என்றவன் “ஹேய் பசிக்குது மயா ஏதாவது செஞ்சு கொடேன் ப்ளீஸ்.” என்றான் கவின்.

“ம்ம் சரி.” என்றவள் கவினுடைய அறையினுள் ஒரு ஒயிட் போர்ட்டை மாற்றினாள்.

“என்ன பேபி இதெல்லாம் இதை எதுக்கு என் ரூம்ல மாட்டுற….?”

“ஆஆஆஆ அட்டென்டன்ஸ் எடுக்க போறேன்.”

“வாட்….?”

“நீ எப்போ வெளியே வர்றியோ அப்போல்லாம் இந்த போர்ட்ல நீ வர்ற டைமை எழுதி சைன் பண்ணணும்.” என்றதும் அவனது உடலோ சிரிப்பில் குலுங்கத் தொடங்கியது.

“ஹா…. ஹா…..”

“ஏய் இப்போ எதுக்குடா சிரிக்கிற….?”

“ஒரு கிரேட் பிஸ்னஸ் மேனை நீ ஸ்கூல் பையன் மாதிரி அட்டென்டன்ஸ் எல்லாம் எடுக்கிறியே. அதை நினைச்சு சிரிச்சேன்.”

“ஓ…. நீ பிஸ்னஸ்லாம் பண்றியா கவின்….?”

“அடிப்பாவி. ஆதி எங்கடி பிஸ்னஸ் பத்திலாம் திங் பண்றான்….? அவனோட பிஸ்னஸ் மனி மெயின்டெய்ன் பண்றதெல்லாமே நான்தான் பண்றேன். நான் இல்லைன்னா அவனோட பிஸ்னஸ்ஸே ஊத்திக்கும். அவன் டிப்ரஷன்ல இருக்கும் போதுலாம் நான்தான் அவனோட பிஸ்னஸ்ஸை ரன் பண்ணுவேன்” என்றவன் சட்டென தன் பேச்சை நிறுத்தினான். 

தன்னுடைய ஆல்ட்டர் உருவாகியதற்கான நிஜ காரணம் தெரிந்தால் கவினை கட்டுப்படுத்த முடிந்துவிடும் அல்லவா.? சட்டென தன் பேச்சை நிறுத்தியவன் அவள் மாட்டி வைத்த போர்ட்டை நெருங்கினான்.

அதில் அன்றைய திகதியிட்டு அவன் வந்த நேரத்தையும் குறிப்பிட்டு அவள் கூறியதைப் போலவே தன்னுடைய கையொப்பத்தையும் வைத்தான்.

“ஹேய் கவின் உன்னோட ஹேன்ட் ரைட்டிங் ரொம்ப கேவலமா இருக்குடா. ஹா…. ஹா… கோழி குப்பையை கிளறிவிட்ட மாதிரி இருக்கு….”

“ஹா…. ஹா…. கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு இருக்கு அவ்ளோதானே” என சமாளித்தான் கவின். 

“ஹா…. ஹா…. நல்லாவே சமாளிக்கிறடா நீ.” 

“ஹேய் பேபி உன்னோட சைனை என் பேரு பக்கத்துல வை. உன்னோட ஹேன்ட் ரைட்டிங் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.” என்றான் கவின்.

அவனுடைய கரத்தில் இருந்த மார்க்கரை வாங்கியவள் தன்னுடைய கையொப்பத்தை அவனுடைய பெயரின் கீழே வைத்தாள். 

“ஹேய் மயா பேபி. ரொம்ப அழகான ஹேன்ட் ரைட்டிங்டி.”

“தேங்க் யு மிஸ்டர் கவின்.” என புன்னகைத்தவளின் கரத்தில் இருந்த மார்க்கரை மீண்டும் வாங்கியவன் இரண்டு பேரின் பெயருக்கும் நடுவே இருந்த இடைவெளியில் ஒரு இதயம் வரைந்து அதில் அம்பும் வரைய இப்போது சிரிப்பது தன்மயாவின் முறையாகிப் போனது.

“ஹேய் நீ நைன்டீஸ் கிட்டா….? ஹாங் இருபத்தாறு வயசுன்னு சொன்னேல்ல. நைன்டீஸ் கிட்டேதான். ஹா…. ஹா…. இந்த ஹார்ட்டு விடுறது அதுல அம்பு வரையுறது எல்லாம் என்கிட்ட வ்வேணாம்.” என சிரித்தபடியே எச்சரித்தாள் அவள்.

“சரிங்க பேபி மேடம்.” 

“தேங்க்ஸ் கவின். நான் சொன்னதும் சைன் பண்ணதுக்கு. இனி நீ எப்போ வந்தாலும்  ஸ்ட்ரைட்டா இங்க வந்து சைன் பண்ணிரு ப்ளீஸ்.”

“சரிங்க மேடம்.” என்றவன் அருகே இருந்த இன்னுமொரு ஒயிட் போர்ட்டை பார்த்து அவளை கேள்வியாக ஏறிட்டான்.

“இந்த போர்ட் சித்துக்கு. இனி உங்க ரெண்டு பேர்ல யார் வந்தாலும் எனக்கு உடனே அப்டேட் பண்ணணும்.”

“ஹேய் எங்களை உன்னோட கன்ட்ரோல்ல வெச்சுக்க நினைக்கிறியா பேபி….?” 

“ம்ஹூம் இல்ல கவின். உங்க எல்லாரைப் பத்தியும் நல்லா புரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன்.”

“ஸ்மார்ட் ஆன்ஸ்ஸர் மயா.” என்றவனைப் பார்த்து புன்னகைத்தவள் “உனக்கு என்ன டிஷ் வேணும் கவின்.? சிக்கன் ஃப்ரை பண்ணித் தரவா….?” எனக் கேட்டாள்.

“ஓ. காட் நோஓ…. நோ…. சிக்கனா உவ்வே…. ஐ அம் அ ப்யூர் வெஜிடேரியன் பேபி.” என முகத்தை சுளித்தவாறு கூறினான் அவன்.

“அடப்பாவி இது வேறையா….?” தன் தலையில் கை வைத்தாள் தன்மயா. 

“எஸ். எனக்கு நான்வெஜ்னாலே அலர்ஜி.” 

“ஓ…. ஓகே ஓகே.” 

“ஏதாவது வெஜ் சமைச்சு கொடு மயா.” என்றவனை பார்க்க அவளுடைய மனம் பிசையத் தொடங்கியது. 

“சரி…. சரி…. நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா கவின்.” என்றவாறு சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் தன்மயா. 

அவனுக்கு சுடச் சுட தோசை வார்த்து சட்னி செய்தவள் தட்டில் வைத்து அவனிடம் கொடுக்க, அவனோ ப்ரிட்ஜினுள் இருந்த கேரட் மற்றும் தக்காளியை எடுத்து மென்று கொண்டிருந்தான்.

“ஆடு மாடே உன்கிட்ட தோத்துப் போயிரும்டா கவின்.”

“ஹா…. ஹா…. கொடு பேபி.” என்றவாறு அவள் கொடுத்த தோசையை வாங்கியவன் அதனை ரசித்து உண்ணத் தொடங்கினான்.

“ஹேய் சூப்பர் பேபி.”

“சட்னி வைக்கவா….?” 

“ம்ம் வை.”

அவனுக்கு சட்னியை வைத்தவள் ராமுவின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

இன்று எப்படியாவது ஆதியை தாரதியிடம் அழைத்துச் செல்ல வேண்டுமென அவளுள்ளம் எண்ணித் தவித்தது. 

சாப்பிட்டுக் கொண்டிருந்த கவினோ சட்டென தன் கையில் இருந்த தட்டை தள்ளி வைத்தான்.

“என்னாச்சு கவின் பிடிக்கலையா….?”

“குட் மார்னிங் ம்மா….” என்ற மழலை குரலில் வந்திருப்பது சித்து என்பது புரிய அவளுடைய இமைகள் ஒரு கணம் மூடித் திறந்தன. 

அவனை சமாளிப்பதற்கு ஏற்றவாறு தன்னை தயார் படுத்திக் கொண்டவள் “ஹாய் சித்து கண்ணா குட் மார்னிங். எதுக்குப்பா பிளேட்டை தள்ளி விட்ட….?” எனக் கேட்டாள்.

“எனக்கு தோசையே பிடிக்காதுமா.”

“ஓ…. ஓகேடா உனக்கு என்ன டிஷ் பிடிக்கும்.”

“பீட்ஸா,  பர்கர்,  சான்விட்ச், இட்லி , பரோட்டா” என அடுக்கிக் கொண்டே போனவனைப் பார்த்து மலைத்தவள் “சான்விட்ச் பண்ணித் தரட்டுமா….?” எனக் கேட்டாள்.

“ஹேஏஏஏஏ ஜாலிஇஇஇ  ஓகே மாம். ஐ அம் வெயிட்டிங்.” 

தன்மயாவோ யஷ்விந்த் குட்டிக்கு பாலை எடுத்துக் கொண்டு சித்துவையும் அழைத்துக் கொண்டு மேலே சென்றாள்.

யஷ்விந்தை எழுப்பி அவனுக்கு பாலை கொடுக்க, அவனைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டான் சித்தார்த்.

“ம்மா நானே தம்பிக்கு பாலை கொடுக்கட்டுமா.”

“சரிப்பா….” 

அவனோ யஷ்விந்தை தூக்கி கொஞ்சியவாறு அவனுக்கு பால் போத்தலில் பாலைப் புகட்டத் தொடங்கினான்.

“சித்து கண்ணா அம்மா சொல்றதை கேட்பியா….?”

“எஸ்மா. நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்.” என்றதும் அவனுடைய சிகையை வருடியவள் அவனை கவினுடைய அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

அங்கே அவனுக்கென மாட்டப் பட்டிருந்த ஒயிட் போர்ட்டை காட்டி அவன் செய்ய வேண்டியவற்றைக் கூற சமத்தாக ஒத்துக் கொண்டான் சித்து.

அவனும் அதில் குண்டு குண்டு எழுத்துக்களில் தன் பெயரை எழுதி கையொப்பத்தை வைத்துவிட்டு தன்மயாவைப் பார்த்து கிளுக்கிச் சிரித்தான்.

“குட் பாய். ஓகே கண்ணா வா. நான் உனக்கு சான்விட்ச் செஞ்சு தர்றேன்.” என்றவாறு மீண்டும் சமையல் அறைக்குச் சென்று சித்து கேட்டதை செய்யத் தொடங்கினாள் அவள்.

யஷ்விந்தும் சித்துவும் ஒருவரோடு ஒருவர் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து இவள் உள்ளம் கசியத் தொடங்கியது.

உண்மையில் இரண்டு பேருமே சிறு பிள்ளைகள் தானே. என எண்ணியவள் சான்விட்சை சித்துவிற்கு ஊட்டி விடத் தொடங்கினாள். 

“வாவ் யம்மீஈஈஈ….” 

“ம்ம்  சாப்பிடு….” என்றவாறு ஊட்டி முடித்தவள் பிளேட்டை கழுவத் தொடங்க, 

அவளுடைய பின்புறமாக நெருங்கி அவளின் மெல்லிய இடையினூடாக தன் கரத்தை நுழைத்து அவளை இழுத்து தன் உடலோடு அணைத்து பிடித்தவன் அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்தான். 

“ஆ…. ஆ…. ஆதீஈஈஈ….?” என்றவளுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது.

அவளை அவளுடைய அனுமதி இன்றி அவனைத் தவிர வேறு எவரால் இப்படி அத்து மீறித் தொட முடியும்….? 

“எஸ் ட்ராமா குயின்.” என்றவன் அ
வளது முதுகில் படர்ந்திருந்த  கருங் கூந்தலை விலக்கி அவளுடைய பின்னந் தலையில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

“ஸ்ஸ்…. வ்விடுங்க ஆதி. பிளேட் கழுவிட்டு இருக்கேன்….” என்றவளின் பின்னங் கழுத்தில் மீண்டும் அழுத்தமாக முத்தம் பதித்தவன் அவள் கழுவிக் கொண்டிருந்த மார்பிள் பிளேட்டை பறித்து தொப்பென தரையில் போட்டு உடைத்தான்.

“படார்….” என விழுந்து நொறுங்கிய பிளேட்டின் சத்தத்தில் உடல் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.

“ஜஸ்ட் இந்த பிளேட்டுக்காகவா என்னை விடச் சொன்ன….? ம்ம்….? ஹௌ டேர் யு ட்ராமா குயின்….?” என்றவன் ஒரு கையால் அவளை அணைத்தவாறு மறு கையால் அவள் கழுவி வைத்திருந்த அத்தனை பிளேட்டையும் தரையில் போட்டு உடைக்கத் தொடங்கினான்.

அவை நொறுங்கும் சத்தத்தில் அதிர்ந்து நடுங்கி விலக முயன்றவளை தன்னோடு இன்னும் இன்னும் இறுக அணைத்தவன் “எனக்கு யார் ரூல்ஸ் போட்டாலும் பிடிக்காது குயின்.” என்றான்.

அந்தக் குரலில் மொத்த உடலும் சில்லிட்டுப் போனது அவளுக்கு.

“சா…. சா… சாரி சார்.” என தடுமாறி அழுகையோடு கூறியவளின் கழுத்தில் மீண்டும் முத்தம் வைத்தான் அவன்.

முத்தத்தையும் சினத்தையும் ஒரே நேரத்தில் காட்ட முடியும் என்று அப்போதுதான் அவள் அறிந்து கொண்டாள்.

பிளேட் நொறுங்கிய சத்தத்தில் வீறிட்டு அழத் தொடங்கினான் யஷ்விந்த்.

மகனின் அழுகையில் உள்ளம் துடிக்க அவனிடம் இருந்து விலக முடியாது பரிதவித்துப் போனாள் தனு.

மீண்டும் விலக முயன்றால் அவன் ஏதும் செய்து விடுவானோ என்ற அச்சம் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

அவனோ கழுத்தில் தொடங்கி அவளது வெற்று முதுகிலும் தன் முத்த ஊர்வலத்தை தொடர, சடாரென அவன் முகம் பார்த்தவாறு திரும்பி நின்றாள் அவள்.

“ம்மாஆஆ…. ம்மாஆஆஆஆ….” என யஷ்விந்தின் அழுகையில் அவளது விழிகளும் உவர் நீரை வடிக்கத் தொடங்கின. 

அழுகையில் துடித்த இதழ்களை நெருங்கியவன் பின் அவளை விட்டு விலகி நின்றான்.

“போய் அவனைத் தூக்கு. இன்னும் அஞ்சு மினிட்ல நீ திரும்ப இதே இடத்துக்கு வரணும்.” என்றதும் ஓடிச் சென்று தன் மகனைத் தூக்கி சமாதானம் செய்தவள் அவனுக்கு பந்து ஒன்றை எடுத்துக் கொடுத்து விட்டு மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

“ஹேய் ட்ராமா குயின். பசிக்குதுடி சாப்பிட என்ன இருக்கு….?” எனக் கேட்டான் அவன்.

‘அடப்பாவிகளா இது வயிறா இல்ல வேற ஏதுமா….?’ என எண்ணிக் கொண்டவள் “தோசை , சான்விட்ச் இருக்கு..” என்றாள்.

“ஷிட் இதை மனுஷன் சாப்பிடுவானா….? நீ சூப் வெச்சு கொடு குயின்.” என்றதும் அவளுக்கோ விழிகள் பிதுங்கத் தொடங்கின.

“வெஜ் சூப்பா….?” 

“ச்சீஈஈஈ…. நோ நோ நான்வெஜ்தான் வ்வேணும். சிக்கன் சூப் ஓக்கேடி.” என்றவனை மலங்க மலங்க விழித்துப் பார்த்தபடி நின்றாள் தன்மயா. 

‘மூணும் முணு விதம் போல.’ என எண்ணி சலித்தவள் ஆதியைப் பார்த்து “உங்க ஹேண்ட் ரைட்டிங் எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருக்கு சார். உங்க சைன் ப்ளீஸ்.” என பயந்தபடியே கேட்டாள் அவள்.

அருகே இருந்த பேனாவை எட்டி எடுத்தவன் அவள் கொடுத்த காகிதத்தை கசக்கி எறிந்து விட்டு அவளுடைய புடவையை ஒதுக்கி  அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து அவளுடைய வெண்ணிற இடையில் தன்னுடைய கையொப்பத்தை வைக்க அவள் பேச்சு மூச்சற்று உறைந்தே போனாள். 

அவளது உதடுகள் மாத்திரம் “நீ ஒரு டெவில் ஆதி….” என முணுமுணுத்தன..
 
 💜💙மோக வேட்டை தொடரும்💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *