முற்றிலும் அந்நியனுடன்
Next Shot அசுரன் 9
5 MA
என்னடி போலீஸ் கீலிஸ்.. எங்குற? ஒய்யாரமாய் படுத்திருந்தவன்.. அதறி பதறி எந்திரிக்க..
ஆமாம்.. உன் பொண்டாட்டிக்கு போலீஸ் எழுதி கொடுத்துட்டு வந்த மாதிரி நான் விலகித் தான் இருக்கேன்.. நீதான் வந்திருக்க.. நாளைக்கு அவ போலீசுக்கு போறதுக்கு முன்னாடி நான் போய்ட்டா சேஃப்ல..
நான் உன் புருசன்டி
திருட்டு புருஷன் கள்ள புருஷன் உன் முத பொண்டாட்டி அசிங்கமா சொல்லுவா.. வெளில போ..
இப்ப கூட கால விரிச்சிட்டு கிடந்தியேடி .. புதுசா பத்தினி வேஷம் போடுற..
ஒரு நப்பாசை இருந்தது.. பிள்ள பொண்டாட்டி ன்னு பாசமா மனம் திருந்தி வந்திட்டியோ? தடுமாறினேன்.. அந்த கேப்பில் நீ யூஸ் பண்ணிட்ட.. என் பிள்ளய நீ நோஞ்சான் சொன்னியோ.. அப்பவே முடிஞ்சது.. ஓடிப்போயிரு.. அசிங்கப்பட்டு போயிருவ..
உங்கக்காவை முதலில் வர வேணாம்னு சொல்லுடி நந்தினி ப்ளீஸ்.. உன் காலில் கூட விழுறேன்..
ஓநாய் அருகில் வந்து இவளை தொட்டு பலகீனம் செய்ய முயல..
கிட்டே வராதே.. அவங்களாம் வரதுக்குள்ள கிளம்பு நீ..
இவள் முகத்தை இறுக்கி வைத்து நிக்க..
அவன் ஓசி சுகம் கெட்டு போச்சே! சோகத்தில் சட்டையை போட்டு.. தலையை வார..
அவன் இப்போவும் ஸ்டைல் பண்ணுவதை பார்த்து .. என்னை போல எத்தனை பேரை ஏமாற்ற இந்த ஒப்பனையோ?போலீஸ் ஸ்டேஷனுக்கு இவ்ளோ அலங்காரம் தேவை இல்லை வினோ..
எங்க மாமா இரும்பு பட்டறையில் வேலை செய்றவரு.. கோவக்காரு வேற.. ஓங்கி அடிச்சாருன்னா எப்படி இருக்கும்ன்னு பார்த்துக்கோ..
இரக்கமேயில்லாது நந்தினி சொல்ல..
தே__ மு___ போனப்போடுடி வரவேணாம் ன்னு.. அவன் பயத்தில் கத்த…
அக்கா.. இதோ நானே வரேன் ..
…….
போயிட்டாரு..
…..
மனம் திருந்திட்டான்.. நான் இவ்ளோ கஷ்டப்படுறத பார்த்து ரத்த கண்ணீர் வடிக்கிறான்.. ஊருக்கு போனதும் விஷம் குடிச்சு செத்துடுறேன் சொல்லிட்டான்.. நான் இன்னோரு கல்யாணம் பண்ணிகனுமாம்.. அப்போ தான் அவன் ஆத்மா சாந்தியடையுமாம்..
……
அந்த துபாய்க்காரனை செவ்வாய் வர சொல்லிரு.. மாமா பார்த்து சொன்னா போதும்.. கட்டிக்கிறேன்..
…….
எல்லாம் உன் இஷ்டம்க்கா..
அக்காவுடன் பேசும் பொழுதே வினோவை கத்தி வச்சு கீறாமல் கொலை செய்தாள் நந்தினி.. ஆணுக்கு அவன் பலம் ஆயுதம் பாவப்பட்ட பெண்ணுக்கு புத்தியும் வாயும் தான் தற்காப்பு ஆயுதம்..
இந்த பாம்பு இனி வீட்டுக்குள் வரக்கூடாது.. அவளின் எதிர்பார்ப்பு அவ்ளவே..
வினோ இவ்ளோ பேச்சுக்கெல்லாம் அடங்கல்ல.. இங்கேயா இருக்கப்போறான்.. முன்பிருந்த அப்பாவி நந்தினியா நினைச்சு அடிமை பண்ணிக்கலாம்.. ஒவ்வோர் ஊரில் ஒருத்தி ராஜாவா சுத்தலாம் என்று ஒரு ஐடியா.. இப்போ ஊத்திக்கிச்சி அவளோதான்.. வேற ஆள் செட் பண்ணிக்கலாம் ஏமார்ந்தவரை இலாபம்
போவதுக்குள் இன்னோரு முறை வலுக்க அனுபவிக்க இப்போ ஏதாச்சும் சென்டிமென்ட் வசனம் பேசணும்.. ம்ம்ம்
அந்த ஆந்தை யோசிக்க ஆரம்பித்தது..
