மாரனின் மகிழ் வதனி
அத்தியாயம் 14
மாரனின் மகிழ் வதனி
மதன் காரை தன் வீட்டின்
முன் நிறுத்த.. தயங்கியபடி இறங்கினாள் கீர்த்தி..
“உள்ளே போ.. இனி நீ என்
அனுமதியில்லாமல் வெளியே எங்கையும் போக கூடாது” என்று கண்டிப்பான குரலில்
ஜெயாவிடம் அப்பாவுடன் ஊட்டிக்கு போகிறேன் என்ற தகவலை மட்டும் தான் தெரிவித்திருந்தாள் கீர்த்தி.
சற்று நிமிடங்களில் தாயின் முன்னே தான் விக்னேஷை காதலிக்கிறோம் என்று தெரிந்தால் தாயின் மனது தவித்து போய் விடும் அல்லவா..
அதற்கு தவிர்ப்பிக்கு நான் காரணமாகிவிட்டேனே என்று எண்ணி மயக்கமடைந்தாள் கீர்த்தி.
வதனி ஒரு கணம் தாமதிக்காமல்
காரிலிருந்து சட்டென இறங்கி தன் தோள்களில் தாங்கியிருந்தாள் கீர்த்தியை
“கீர்த்து.. கீர்த்து..
கண் விழித்துப்பாருமா?” என்று அவளின் கன்னம் தட்டினாள் வதனி
கண்விழித்தாள் தானே கீர்த்தியின்
உள்ளம் உலைகலன் போல் அல்லவா கொதித்து கொண்டிருக்கிறது.
அனைத்தும் என்னாலே தானே
நடந்தது என நெஞ்சினில் பாரம் ஏறி.. தன் பாசம்மிகு அண்ணன் தன்னை அணைக்க கூட தகுதியில்லாதவளாக
போய் விட்டேனே.. இதற்கெல்லாம் காரணம் தன் காதல் தான் என்று தன்னை தானே குற்றம் சொல்லி
கொண்டாள்.. சிறு பெண்ணவளான கீர்த்தி.. இதையெல்லாம் நினைத்து மயங்கி விட்டாள் மங்கை
ஆனால் தமையனோ தங்கைக்கு
சிறு காயம் பட்டாலும் துடித்து போகிறவன்.. இன்று தங்கை மயங்கிய நிலையில் இருப்பது கண்டு
பாறை போல் நின்றிருக்கிறான்..
யாரை குற்றம் சொல்வது?
காலம் செய்த கோலம்..
“மதன் தண்ணீர் எடுத்து
தாங்க கீர்த்து மயங்கிட்டா” என்று கூறியும் அசையாது கல் போன்று நின்றிருந்த
கணவனை காணும் பெணுக்கு அச்சமே வந்தது.
உதிரத்தில் உதிர்த்த தங்கைக்கே
இந்த நிலை என்றால்?
தான் கணவனிடம் விக்னேஷ்
தன் நண்பன் என்பதை மறைத்ததை அறிந்தால்..தன் நிலை எப்படியிருக்குமோ என்று நினைக்கும்
போதே வதனியின் மனம் ஆலி பேரலையை ஆர்பரித்தது.
வதனியின் குரல் கேட்டு
வந்த ஜெயா கீர்த்தி மயக்கியதும் கண்டு மருகியும்.. மதன் அழுத்தமான காலடியுடன் கையில்
தண்ணீர் பாட்டிலுடன் தன்னை நோக்கி வருவதையும் எண்ணி..
ஏதோ ஒரு புயல் வீசி இருக்கிறது
என்பதை அறிந்து கொண்டார்.
“அம்மா கீர்த்திக்கு தண்ணீரை
கொடுக்க” என்று அவரை கிஞ்சித்தும்
கூட பார்க்காமல் உள்ளே சென்றான்.
ஜெயா வேக நடையுடன் மயங்கியிருக்கும்
தன் மகளின் முகத்தில் தண்ணீரை தெளிக்க.. கீர்த்தி தன் இமைகளை மெல்ல திறக்க..
தன் கண்முன்னே இருக்கும்
தாயை கண்டு
“அம்மாமா.. நா. நான் தப்பு
பண்ணிட்டேன்” என்று அழுகையுடன்
வீட்டை சுற்றி தங்களை யாராவது
கவனிக்கிறார்களா என்று ஒரு முறை பார்த்து விட்டு
“மருமகளை என்ன நடந்தது” என்று விசாரிக்க
வதனி “அத்தை வீட்டுக்குள்ளே
போய் பேசிக்கொள்ளலாம்” என்று கீர்த்துவை தோளில் சாய்த்த படி நடந்தாள்.
மூவரும் ஹாலுக்குள் செல்ல
மதன் யூனிபார்ம் அணிந்து வெளியே வர.. வதனி ஏதோ ஒரு ப்ரளயம் நடக்க போகிறது என யூகித்து
அத்தை கீர்த்துவை பார்த்துக்கோங்க
என்று இறுக்கமான முகத்துடன் நின்றிருந்த மதனை பார்த்துக் கொண்டே உள்ளே செல்ல.
“நில்லு வதனி என்ன நடந்தது என்று சொல்லி விட்டு போ”என்று வழிந்த கண்ணீரை சேலைத்தலைப்பால் துடைத்தபடி
“மாம் நானே சொல்லுறேன்.. உங்க ஆசை மக என்ன காரியம் செய்திருக்கா தெரியுமா?”
“எனக்கு பிடிக்காத அதான் உங்க வீட்டுக்காரர் கூட உங்க மக கீர்த்தி அப்பா அப்பான்னு பாசமழை பொழியுறாங்க.. இத்தனை நாள் எங்கே போனாங்க இவங்களோட அப்பா என்ற அழுத்தம் கொடுத்தான் அப்பாவில்”
“இவள வளர்க்க நீங்க எத்தனை கஷ்டபட்டிருப்பீங்க மாம்”என்று பாறையிலும் நீர் சுரக்கும் என்பது போல மதனின் விழிகளின் ஒரம் ஈரம் பட்டது.
“மதன் நா. நான் உன்கிட்ட
பேசணும்ப்பா” என்று தழுதழுத்த குரலுடன்
ஜெயாவின் குரலில் இருந்த
தவிப்பை பார்த்தவன் அம்மாவும் தன்னிடம் உண்மையை மறைந்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு
“எல்லாரும் என்கிட்ட ஒரேடியா
உண்மையை உடைச்சு சொல்லிடுங்க.. இல்லைன்னா இந்த பாறை மனசுக்காரன் மனது இன்னும் இறுகி
போய் விடும்”
மகனின் சீற்றத்தை கண்டு “ஐய்யோ அப்படியில்லைப்பா”என்று மதன் கைப்பிடிக்க.. “மாம்”என்று பாசத்துடன் தன்னை அணைக்கும் மகன் இன்று கையை தட்டிவிட
ஜெயா பேச ஆரம்பித்தார் “கீர்த்தி உங்க அப்பாகிட்ட பேசுவது எனக்கு தெரியும்”என்று மெல்லிய குரலில் பேச
தாயின் சொல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தான்.. “மேலே சொல்லுங்க”என்று தலையசைத்தான்
“நீ தலைவலி என்று வீட்டுக்கு வந்தப்ப கீர்த்தி போன் செய்தது அப்பாவுடன் ஊட்டி செல்கிறேன் என்ற விபரம் சொல்வதற்கு தான்”என வாட்டம் மிகுந்த குரலுடன் கூற
“எனக்கு தெரியும்” என்றான் சீற்றமாக..
“மாம் நான் ஒரு போலீஸ்
அதிகாரி.. என்கிட்டயே
நீங்க எல்லாரும்” என்று வதனியை ஒரு பார்வை
பார்த்துவிட்டு எத்தனை உண்மையை மறைத்து வீட்டிங்க..
“இந்த வீட்டில் நானும்
ஒரு ஆண்பிள்ளை” என்று இருந்திருக்கிறேன்
ஒரு மடையனை போல.. தனது கையை சுவற்றில் குத்திய படி
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா
கீர்த்தி உங்க வீட்டுக்காரர் சாக்லேட் கம்பெனியில வேலை செய்ததும் மட்டும் தான் தெரியும்..
“அதுமட்டுமல்ல உங்களுக்கு இன்னொரு உண்மையும் இப்போது சொல்லுறேன்.. நன்றாக காது கொடுத்து கேளுங்க”
“கீர்த்தி உங்களை கை குழந்தைகளுடன் வெளியே அனுப்பிய உங்க வீட்டுக்காரரின் தங்கை மகன் விக்னேஷை உயிருக்குயிராக லவ் பண்ணுறாங்க அது தெரியுமா?”என்று பல்லைக்கடித்தபடி சொல்ல
மதன் கூறுவதை கேட்டு விக்கித்து
நின்றார் ஜெயா..
ஜெயா கீர்த்தியை குற்றம்
சாட்டும் பார்வையுடன் பார்க்க.. குற்றவாளியாய் நின்றாள் கீர்த்தி
ஒரு பெண் காதலிப்பது குற்றமா?..
கோபம் கொண்டவன் தங்கை வேறு யாரையும் காதலிருந்தால் தன் உயிரை கொடுத்து அந்த ஆடவனுடன்
சேர்த்து வைத்திருப்பான்
ஆனால் மதன் தன் பரம எதிரியாக
நினைக்கும் விக்னேஷை விரும்புகிறாள் என்று தெரிந்து தன் தங்கை மேல் இருந்த இனிப்பான
பாசம் இன்று வேப்பங்காய் போல கசந்தது.
ஜெயா கீர்த்தியின் அருகில் சென்று “அவனை நீ மறந்துவிடு இல்லையென்றால் என்னை உயிரோடு பார்க்க முடியாது”என்று விறுவிறுவென்று அறைக்குள் புகுந்து கொண்டார்.
வதனி உயிரற்ற உடலாக உறுதியற்று
நின்றிருந்தாள்.. என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டும் என்று நினைப்பவள்
இன்று கால்கள் தள்ளாடியபடி நின்றிருந்தாள்.
“அண்ணி நீங்களாவது என்னை
புரிந்துக்குவீங்களா” என்ற வதனியை அணைத்துக்கொள்ள
“ஹே.. எதுக்கு இப்படி அழுது கரையுற.. நீ ஒண்ணும் கொலை குற்றம் செய்யுல”என்று மதனை ஒரு பார்வை பார்த்த படி பேச
மதன் உனக்கு ஒரு பூஜை இருக்கு..
எல்லாரும் ஒரே நேரத்தில் பூஜை போடக்கூடாது..உனக்கு ஸ்பெசல் பூஜை வச்சிருக்கேன்டி என்று
ஸ்டேசன் செல்வதற்கு ஜீப்பின் சாவியை எடுத்தான்.
வதனி ஓஓ இவன் விக்கியை
அரெஸ்ட் பண்ண போகிறான்.. இன்று வெள்ளிக்கிழமை இன்று தன் நண்பனை கைது செய்தால் நாளை
சனி ஞாயிறு கோர்ட் விடுமுறை என்பதை அறிந்தவள்
“மதன் ஒரு நிமிசம் நில்லுங்க” என்றிட
“என்ன சொல்லு என்பது போல
புருவத்தை உயர்த்தினான்.
“நீங்க விக்னேஷை கைது செய்ய போறீங்களா..அப்படி நினைத்திருந்தாள் அதை நான் நடக்க விடமாட்டேன்.. அவன் போதை மருந்து கலப்பதை நீங்க நேரில் பார்த்தீங்களா.. இல்ல அதற்கான ஆதாரம் உங்க கிட்ட இருக்கா”என்று பல கேள்விகளை போலீஸ் ஆக கேட்டாள்.
தன் நண்பனை காப்பாற்ற ஏதாவது
வழி இருக்குமா என்று ..
மதன் விட்டாக்கொண்டான்
அவன் வாயிலிருந்து உண்மையை கறக்கு முடியுமா.. இதை அறியாமல் போனாள் பேதை பெண்
வதனி கூறியதை கேட்டு அழுத்தமாக
காலடிகளுடன் வதனியை நோக்கி வர..
“கீர்த்தி உள்ளே போ “என்று
உரக்கச் சொல்ல..
கீர்த்தி அழுதபடியே உள்ளே
செல்ல..
“ஒரு நிமிசம் கோழைத்தனமா
எந்த மூளைகெட்டச் செயலையும் செய்ய மாட்டாய் என்று நினைக்கிறேன்” என்று கூறிவிட்டு
“இன்னும் எனக்கு தங்கை
என்ற பாசம் இருக்கு அதை கெடுக்கும் படி செய்து விடாதே” என்று கீர்த்தியை எச்சரித்து
அனுப்பினான்
கீர்த்தி வாயில் கையை பொத்திய படி விம்மிகொண்டே.. “நான் தவறான முடிவை எடுக்க மாட்டேன் அண்ணா”என்று கூறிவிட்டு திரும்பி பாராமல் அறைக்குள் சென்று விட்டாள்
வதனியை நோக்கி வந்தவன்
அவளின் கையை பிடித்து இழுத்து வெளிய வர..
“விடுங்க மதன் கை வலிக்குது”..
“கை வலிக்குதா நீயும் போலீஸ்தானேடி
இந்த பிடி உனக்கு வலிக்குதா”
“வலிக்கட்டும் என்னை ஏமாற்றிய
துரோகியே என்றதும்.. விக்கித்து தன் கால்கள் தள்ளாட மயக்கம் வருவது போலவும்.. தன் காலுக்கு
கீழே பூமி பந்து நழுவதும் போலவும் இருக்க
மதனை முகத்தில் எப்படி
விழிப்பது என்று மதிமயங்கி கையை பிசைந்து நிற்க
“ஏண்டி எனக்கு எதுவும்
தெரியாதுன்னா நினைச்ச.. நீ பீச்சல போன் பேசும் போதே நான் உசாராகிட்டேன்டி.. அப்போதிருந்த
நான் உன்னை கண்காணித்தேன்..என்கிட்ட இன்னும் எத்தனை பொய் உரைத்திருக்கிறாய் சொல் என்பது
போல அவளது கன்னத்தை பற்றி அழுத்த
“ப்ளீஸ் மதன் நான் சொல்வதை
கொஞ்சம் கேளுங்க”..
வதனி கூறுவதை கொஞ்சம் நிதானமாக கேட்டிருந்தால் பின்னால்
வரும் பிரச்சனைகளை சமாளித்திருக்கலாம்
ஆனால் மதனை கோபம் என்ற
அரக்கன் ஆட்கொண்டிருக்கிறான்.. அரக்கனுக்கு இப்போது சொந்த பந்தத்தை பற்றி பேசினால்
அவன் கேட்கும் நிலையில் இல்லை என்று அறியாத சிறுபெண் என்ன செய்வாள்
“நிறுத்துடிடிடி இன்னும் என்ன பொய் சொல்ல போகிறாய்.”.
“ஏங்க பி..பிரிந்த குடும்பத்தை
ஒ..ஒண்ணு சே..சேர்க்க” என்று திக்கி திணறி
பேச..
“ஏய் இத்தனை நாள் எங்கம்மாவோட வீட்டுக்காரர் கூட பேசாமலிருந்தவன் இப்போ நீ வந்து என்னிடம் சொல்லிவிட்டாள் நான் உடனே அப்பா அப்பா என்ற அவரின் காலில் போய் விழுவேன்”என்று நினைத்தாயாடி என்று அவளின் கையை முறுக்கினான் அரக்கன் என்ற மதன்.
மதனுக்குள்ளே மதயானை புகுந்ததை
கண்டு கொண்டு வதனி அவனை அடக்கும் வழிதெரியாது விக்கித்து நின்றாள்.
“வா வா.. உன் நண்பனை நான் கையை செய்ய போவதை கண் குளிர பாரு”என்று அவளை ஜீப்பில் ஏற்றிவிட
“என் நண்பனை என் அனுமதியில்லாமல் நீங்க அரெஸ்ட் செய்ய முடியாது”என்று சண்டைக்கோழியாய் பேச
“ம்ம்.. பார்க்கதான் போறடி”என்று ஜீப்பை புயலென ஓடினான் விக்கியின் வீட்டை நோக்கி
விக்னேஷ் எது நடந்தாலும்
பார்த்து விடலாம் என்று துணிச்சலோடு இருந்தான்
சங்கர் சற்று பதட்டத்துடன்
வக்கிலிடம் பேசி முன் ஜாமீன் கிடைப்பதற்கு
போனில் பேசிக்கொண்டிருந்தார்
விக்னேஷ் கீர்த்தியை நினைத்து
கலங்கிக்கொண்டிருந்தான்.. தன்னிடம் இத்தனை நாட்கள் பழகியும், அவளிடம் தான் கொண்ட நெருக்கத்தை
புரியாமலும்.. அவள் மேல் கொண்ட காதல் நம்பிக்கை வைக்காமல் இருந்ததை கண்டு மனம் உடைந்து
சுக்கு நூறாய் போனான்
கீர்த்தியின் மேல் ஒருபக்கம்
கோபம் இருந்தாலும.. கீர்த்தியை தவிர வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்ய முடியாது..
உன்னையும் வேறு யாருக்கும் திருமணம் செய்ய விட மாட்டேன் என்று மன உறுதியுடன் இருக்க
உங்க ஒண்ணன் என்ன செய்கிறான்
என்று பார்க்கிறேன்.. அவன் பெரிய போலீஸ் அதிகாரியா இருந்தாலும் சட்டப்படிதானே நடக்க
வேண்டும் என்று நினைத்தான்.
விதி வேறுவிதமாக நினைத்தது..
சாரதியும், குணாவும் மறைந்திருந்தனர்..
விக்னேஷ் அவர்களை தேடிக் களைத்து போய் அமர்ந்திருந்தான்.
மதன் விக்னேஷின் வீட்டின்
முன் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய அவனின் கால் கூசியது.. இந்த வீட்டின் வாசலில்
நின்று தானே தானும் தன் அம்மா கைக்குழந்தையுடன் வெளியேறினோம் என்று அதை நினைக்க..
மதனுக்குள் மதயானை புகுந்து
கொண்டது.
விறுவிறுவென் வீட்டினுள்
செல்ல. அங்கே ஷோபாவில் தலைசாய்த்து கலக்கத்துடன் படுத்திருக்கும் சங்கரை பார்த்து சிறிது
கவலை கொள்ளாமல்..
சங்கரின் அருகில் அமர்ந்திருக்கும்
விக்னேஷை பார்த்து
“மிஸ்டர் விக்னேஷ் உங்களை
அரெஸ்ட் பண்ணுறேன்” என்று முகத்தை இறுக்கமாக
வைத்து கொண்டு விலங்கை விக்கியின் முன் நீட்டினான்
விக்கியும் பயப்படாமல்
எந்த ஆதாரத்தை வைத்து என்னை அரெஸ்ட் பண்ணப்போறீங்க என்று பயமின்றி பேசினான்
“ஆதாரம் ஆதாரம் இருக்கு
மிஸ்டர் விக்னேஷ்” என்று தன் மொபைலில் இருந்த
வீடியோவை காண்பிக்க .
அதில் சாரதியும், குணாவும்
போதை மருந்தை சாக்லேட் கலப்பது பதிவாகியிருந்தது
சங்கரும் விக்கியும் அந்த
வீடியோவை அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.
சங்கர் நண்பன் என்று மாயவலையால்
சிக்குண்டது நினைத்து வருத்தம் கொண்டார்.
“இந்த ஒரு ஆதாரம் போதுமே உங்களை கைது செய்ய”என்று நக்கல் கலந்த குரலில்
“போதை மருந்தை நான் கலக்க வில்லை.. அந்த கேடுகெட்ட வேலை நான் செய்ய மாட்டேன்.. அந்த பாவத்தை செய்த ரெண்டு பேரையும் நானே பிடித்து உங்களுக்கு தருகிறேன்.. ஒருநாள் அவகாசம் தாருங்கள்”என்று மதனிடம் பரிந்து பேசினான்.
“சாரதியும், குணாவும் உங்க
கையில் கிடைக்க மாட்டாங்க விக்கி சார்.. அவங்களை நான் சிறிது நேரத்திற்கு முன்பு தான்
கை செய்து விட்டேன்” என்று கூற..
இம்முறை திடுக்கிட்டது
விக்னேஷ் மட்டுமல்ல.. சங்கரும் வதனியும் தான்..
“எல்லாரையும் கட்டம் கட்டி
தூங்கி விட்டேன்” என்று அட்டகாசமாய் சிரித்தான்
மன்மதன் என்ற ஏ.சி.பி
கதை படிக்கும் நண்பர்கள்.. கதை எப்படியிருக்குன்னு சொல்லுங்கள்.. நீங்க சொன்னா எனக்கு தெரியும்.. கமெண்ட்ஸ் போடுங்க.. உங்கள் கமெண்ட்ஸ்தான் எனக்கு பூஸ்ட்டப்.
