மவுனமாய் ஓர் மரணம்

This entry is part 2 of 2 in the series மவுனமாய் ஓர் மரணம்

மவுனமாய் ஓர் மரணம்

மவுனமாய் ஓர் மரணம்

மவுனமாய் ஓர் மரணம்

மவுனமாய் ஓர் மரணம்

மவுனமாய் ஓர் மரணம்

மவுனமாய் ஓர் மரணம்… (பகுதி_2)
அழுது அழுது வீங்கி போயிருந்தது முனுசாமியின் முகம்! 
தன் ஒரே மகளை கண்ணிமைக்கும் நேரத்தில் பறி கொடுத்ததில் மனுசன் ரொம்பவே கலங்கி போயிருந்தார்! 
“எக்ஸ் க்யூஸ் மீ சார்… “
குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் முனுசாமி! 
” உங்களை இந்த நேரத்துல தொல்லை பண்றதுக்கு மன்னிக்கணும் சார்… 
பட் இது என் டியூட்டி… “
கையில் வைத்திருந்த துண்டை தன் வாயில் வைத்து அழுகையை அடக்க முயன்றார் முனுசாமி! 
” சார் நீங்க எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தாதான் குற்றவாளியை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்… “
” எப்படி சார்… யார் சார்…என் ஒரே பொண்ணு சார் அவ… 
அவளுக்கு இன்னைக்கு கல்யாணம் நடக்கறதா இருந்துச்சி சார்… 
ஆனா… 
ஆனா…. ”  அதற்குமேல் பேச முடியாமல் அழுதார் முனுசாமி! 
” சார் உங்க பொண்ணு மேல புல்லட் அட்டாக் ஆகும்போது நீங்க கூடத்தான் இருந்தீங்க இல்லையா??? “
” ஆ… ஆமாம் சார்… “
” புல்லட் எந்த டிரக்சன்ல இருந்து வந்துச்சி… அதாவது நீங்க உங்க மக கூட பேசிக்கிட்டு இருக்கும்போது அவ மேல புல்லட் அட்டாக்காகி உயிரை விட்டாங்கனு சொல்லியிருக்கீங்க… நீங்க எந்த திசையில இருந்து பேசினீங்க… 
புல்லட் எந்த திசையில இருந்து வந்துச்சினு யோசிச்சி சொல்ல முடியுமா??? “
” சார் நான் என் மகளை வெளியே வாசல்ல நின்னுகிட்டு கூப்பிட்டு பேசிகிட்டிருந்தேன்…வடக்கு பார்த்த வாசல் அதனால புல்லட் தெற்கே இருந்துதான் வந்துச்சி சார்… “
” உங்க பொண்ணு புல்லட் அட்டாக் ஆனதுக்கப்புறம் எவ்ளோ நேரம் உயிரோட இருந்தாங்க… ஐ மீன் உங்ககிட்ட எதாச்சும் பேசினாங்களா??? “
” இல்ல சார்…புல்லட் அட்டாக் ஆனதும் சரிஞ்சி விழுந்துட்டா… “
” சோ… உங்ககிட்ட ஒண்ணும் பேசலை அப்படித்தானே??? “
” ஆ… ஆமாம் சார்… சார்… ஆனா அவ மேல புல்லட் அட்டாக் ஆகுறதுக்கு முன்னாடி என்கிட்ட எதுவோ பேசணும்னு சொன்னா சார்… “
” ரியலி… அது என்னவாயிருக்கும்னு உங்களுக்கு ஏதாச்சும் ஐடியா இருக்கா… “
” தெ… தெரியலை சார்… “
” சரி உங்க பொண்ணு எப்படி??? “
” எப்படினா??? “சற்றே கோவமாகவே திருப்பி கேட்டார் முனுசாமி! 
” கோவப்படாதீங்க சார்… உங்க பொண்ணு விநோதினிக்கு காதல் அப்படி இப்படினு எதாவது??? “
” சார்… நீங்க நினைக்கிற போல இல்ல சார் என் பொண்ணு… அவகிட்ட கேட்டேன் உன் மனசுல யாருனா இருந்தா சொல்லுமானு… அதுக்கு அவ அப்படி யாரும் இல்லைனு தீர்மானமா சொன்னதாலத்தான் நான் மாப்பிள்ளையே பார்த்தேன் சார்… “
இன்ஸ்பெக்டர் விக்ரமின் மொபைல் சிணுங்க அதை எடுத்து பேசியவரின் முகம் மாறியது! 
” என்னாச்சி சார்… “
” இன்னொரு மர்டர் கொஞ்ச நேரம் முன்னாடி நடந்திருக்கு… அதுவும் இதே போல ஹிடன் அட்டாக்… “
****************, *******, **, *, *******************************************************
” மகேஷ் என்ன இருந்தாலும் நீ அப்பாவை அப்படி பேசியிருக்க கூடாது… “
” மகா நான் உன்னை தான் லவ் பண்றேன்… உங்கப்பா சொன்னாப்போல அவர்கிட்ட இருக்க பணத்தையில்லை… “
” ம்ம்ம்… அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம் மகேஷ்… 
இது போல ஒரு மாப்பிள்ளை கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும் மகானு சொன்னார்… 
சீக்கிரம் உங்க வீட்ல பேசிட்டு சொல்ல சொன்னார்… “
” அதுக்கென்ன மகா தாராளமா பேசிடலாம்… “
” உங்க வீட்ல நம்ம காதலை ஏத்துப்பாங்களா மகேஷ்… “
” கண்டிப்பா ஏத்துப்பாங்க மகா… 
என் விருப்பத்துக்கு எதிரா அவங்க எதுவுமே செய்ய மாட்டாங்க… “
” மகேஷ் என்னை உங்க வீட்டுக்கு கூட்டி போறீங்களா??? “
” கண்டிப்பா மகா… “
” எப்போ மகேஷ்???”
“இன்னைக்கே… “
” இன்னைக்கேவா??? “
” ம்ம்ம்… ” என்பது போல் தலையாட்டிய மகேஷ் ‘வாடி அங்கதான் உன் கணக்கை நான் முடிக்க போறேன்…’ என்று மனதில் கூறியது மகாவிற்கு கேட்டிருந்தாள் மிகப் பெரிய விபரீதம் தடுக்கப் பட்டிருக்கும்! 
_(தொடரும்) 
_சத்யா ஸ்ரீராம்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *