மழை
மழை-16
அழுது அழுது முகம் சிவந்து போய்,கண்கள் எங்கோ தொலைத் தூரத்தை வெறித்திருக்க,நெஞ்சம் முழுவதும் தோழிகளின் எண்ணமே..
அவர்களைக் கடத்திக் கொண்டு போய் முழுதாக பதினான்கு மணிநேரம் ஆகிவிட்டது.. இன்னும் தகவல் இல்லை..ஐ.ஏ.ஸ், ஐ.பி.ஸ் கூடவே இருந்து என்ன பண்ண..இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்ன அவர்களுடன் சண்டைப் போட்டது தான் மிச்சம் என தீபி யோசித்துக்கொண்டிருக்க ..
அருண்அவனது அறையில் உமா பற்றிய நினைவுகளில் முழ்கியிருந்தான்…
உமாவை பார்ப்போமோ இல்லையா, என்று தவிப்போ தவிப்பு ஆரம்ப காதல் பொறியை இப்பிரிவு காற்று விசிறி விசிறி
காட்டுத்தீயாய் உடல் மனம் எங்கும் எரியவிட்டிருந்தது
எங்கே கடத்தி வைத்துருப்பார்கள்? வண்டி எண் கிடைத்தும் ஒரு பலனும் இல்லையென்று புலம்பிக்கொண்டிருந்தான் ..பைத்தியகாரனை போல..அறிவு அன்பில் கரைந்து விட்டிருந்தது….
நிரஞ்சனும்,சத்யாவும் அருணின் வீட்டினுள் நுழையவும், தீபியின் செல்லுக்கு அழைப்பு..
எடுத்து யாரென்று பார்க்க, பார்த்தவள் முகம் நொடியில் மலர்ந்தது, உடனே அவள் அலைப்பேசியை இயக்கி காதில் வைக்க,மற்ற இருவரின் முகத்தில் இருந்த கேள்விக்கு பதிலாக அவள் பேசியை ஸ்பீக்கர் மோடில் போட..
“கவிதா போன் பண்றா, அவ கிட்ட எப்பவும் சின்ன போன் இருக்கும் அதை நான் மறந்துட்டேன் ” என்றுக் கூறியவள் அந்தப் பக்கம் சத்தம் வராமல் இருப்பது கண்டு பதட்டமாக ,
அதற்குள் கவியின் எண்ணை கண்ட்ரோல் ரூமிற்க்கு அனுப்பி லோக்கேஷன் கண்டுபிடிக்க சொல்லி,இவர்கள் தீபி மற்றும் சத்தம் கேட்டு வெளிய வந்தணை கூட்டிக்கொண்டு காரில் ஏறினர் ..
அந்தப்பக்கம் கவி போனில் தீபியை தொடர்புக்கொண்டவுடன் வெளியே சத்தம் கேட்கவே அலைப்பேசியை துண்டிக்காமல் பாக்கெட்க்குள் போட்டுவிட்டாள்..
உள்ளே வந்தவர்கள் நால்வரின் மயங்கி நிலைக்கண்டு ,
“ஒரே தடவை மருந்து அடிச்சதுக்கே இப்படியா,நோஞ்சான்கள், நமக்கு வேலை மிச்சம், மயக்கமா இருக்கறதுனால அப்படியே தூக்கிட்டு போய்,கன்டைனர்ல ஏத்திடலாம்,பிரச்சனை பண்ணாதுங்க ” என்றான் ..
இவர்கள் பேசுவதை அந்தப் பக்கம் கேட்ட நால்வருக்கும், பிரஷர் ஏறியது..
“அருண்,நிரு போன் சிக்னல் அம்பத்தூர் தாண்டி காமிக்குது,பக்கத்துல எங்க கண்டைனர் யார்ட் இருக்குனு செக் பண்ணுங்க , அங்க தான் பங்க் அவங்களுக்கு” என்று கூறிய சத்யாவின் கையில் பறந்தது..
இவர்கள் நால்வரும் கண்டைனர் யார்ட் போய் சேரவும், மறுபடியும் பெண்களுக்கு லேசாக மயக்க மருந்து ஸ்பிரே செய்திருந்தார்கள்..
பெண்களைக் கை,கால்களை கட்டி கன்டைனரில் ஏற்றவும் சரி ஆக இருந்தது..அவர்கள் இருந்த கோலம் கண்டு இவர்கள் நால்வரின் இதயமும் நொறுங்கி துடித்தது ..
என்ன செய்யலாம் என்று யோசித்த சத்யா சுத்தி பார்க்க, கண்டைனரில் ஏற்றிக் கொண்டிருந்த வேற யாரும் இல்லை..நேரம் நள்ளிரவை தாண்டிக்கொண்டியிருந்தது ..
சத்யா,அருண்,நிரு மூவரும் சத்தமில்லாமல் சென்று, அந்த பொறுக்கிகள் பின் இருந்து தாக்க, ஓரு நிமிடம் தடுமாறியவர திருப்பி தாக்க ஆரம்பிக்க,அடுத்த பத்து நிமிடங்கள் சண்டையில் கழிய,அங்கு வந்த காவல் படைவரையும் சுற்றி வளைத்தது.
இவர்கள் அனைவரும் வண்டியை தள்ளி நிறுத்தி நடந்து வந்ததால் , இவர்கள் சுற்றி வளைத்தது தெரியாமல் போக , இவர்களுக்கு தலைவனான லோக்கல் அரசியல்வாதி மேற்பார்வை பார்க்க வந்து தானாக சிக்கிகொண்டான்.
இவர்களது மிக பெரிய நெட்ஒர்க் பெண்களை கடத்தி பல்வேறு நாடுகளுக்கு அவர்களை அடிமைகளாக, அடை யாளமில்லாதவர்களாகவிற்பது தான் தொழில்..
பெண்கள் எல்லாத் துறையிலும் கால் பதித்து வெற்றியாளராக விளங்கினாலும்,இது மாறி கடத்தல்களும் வன் கொடுமைகளும் நடந்துக்கொண்டுதானிருக்கிறது,
இது எப்பொழுது மாறும் என்ற கேள்விக்கு காலம் தான் அரசாங்கம் தான் பொறுப்பாய் பதில் சொல்ல வேண்டும்..
நான்கு தோழிகளை மட்டும் அல்லது இன்னும் கன்டைனரில் பல பெண்கள்..எல்லாம்18-20 வயது உடையவர்கள் மொத்தம் முப்பது பெண்கள்..
அத்தனை பெண்களையும் கண்டு சத்யாவும் நிரஞ்சனும் ஆத்திரத்தில் அந்த அரசியல்வாதியை அடி பின்னி எடுத்துவிட்டனர்..
அவனை ிற காவலரிடம் ஒப்படைத்து விட்டு,அந்த பெண்களையும் ஹாஸ்பிடல் கொண்டு போக சொல்லி,கவிதா மற்றும் அனிதாவை தீபி மற்றும் நிருவை கவனிக்க சொல்லிவிட்டு வர்ஷியை கையில் தூக்கிய சத்யாவிற்கு,இனிமேல் வர்ஷியை விட்டு இருக்க முடியாதுயென்ற எண்ணம் தீவிரமாக,அதே எண்ணம் தான் உமாவை கையில் ஏந்திய அருணுக்கும்…
தூக்கிட்டான்ங்க.
ஹீரோஸ் வில்லன்கள் கிட்டேர்ந்து ….
கடத்திட்டாங்க தத்தம் வீட்டுக்கு…இதுல யாரு வில்லன்ஸ்??? Haha
ஹீரோயின்ஸ்க்கு பிடிச்ச
வில்லன்ஸ்..
அருண் வீட்டிலாவது சொந்தங்கள் உறுப்பினர்கள் ஜாஸ்தி..
கண்ணு முழிச்சதும் உமாவின் குடும்பமும் இருக்க…காதலாய் ஓர் ஓரவிழி வீச்சு மட்டும் அருணுக்கு போனசாய் கிடைக்க…
அங்கு பார் புகழும் சத்யாவுக்கோ பித்து பிடித்து கிடந்தது..
அபிராமி அபிராமி ன்னு கன்னத்தில் போட்டுக்காத குறைதான்..
தன் பெட்டில் படுக்க வைத்திருந்தவன் டாக்டர் தவிர யாரையும் அவளை பார்க்க விடவில்லை..
மயங்கி கிடக்கும் தன்னவளின் கழுத்தில்
பொன்தாலி வாங்கி கட்டிருவோமா? தின்கிங் இல் இருந்தான்…
அவன் தாத்தா முத கொண்டு ,”வரு” பேமிலி வரை காதில் புகையோடு வெளியில் காத்து கிடந்தார்கள்..
வர்ஷி முழிக்கும் போது…
சத்யா எப்படி இருப்பான்?
செஞ்சிருவானா?
