மலரினும் மெல்லிது
25 மலரினும் மெல்லிது
“ஏன் தருமு.. நான் உன்னை மாதிரி ஒருத்தன் கிட்டே வருவேன் ன்னு எப்படி பேச்சுக்கு கூட வச்சுப்ப.. ஹாங்…” நக்கலாய் கேள்வி கேட்ட செல்வியின் தோரணை உலகை ஆளும் மாட்சிமை தாங்க பேரரசியை ஒத்து இருந்தது…
பணம் உனக்கு பிடிக்கும் செல்வி…
ஆமாம்.. எனக்கு மட்டுமா பிடிக்கும்? .. சத்தமிட்டு சிரித்தவர்… ஏன் ஊர் விட்டு ஊர் வந்து பொழைக்கும் உனக்கு பிடிக்காதா?…. ஆசைகள் இருக்கும் எல்லாத்துக்கும் பிடிக்கும் தான்… எதுக்கு உலகத்துல 10 ரூபாய்க்கு அடிச்சுட்டு சாவுறான் .. அதை விடு… நான் எப்படி உன் பணத்துக்கு ஆசைப்படுவேன் நினைச்ச? சொல்லு .. தருமு..
என்கிட்டே நிக்கிற தொகை பெருசு.. உனக்கு அப்படியே புதையல் மாதிரி… செல்விம்மா… ஏதோ பதில் சொன்ன தருமு.. இப்பத்தான் செல்வி கேக்கும் அர்த்தம் புரிய.. சட்டுனு மாற்றி…
அதெல்லாம் நீ எந்த சட்டத்திட்டதுக்கும் அடங்க மாட்ட.. என் பணம் . .. அம்மனுக்கு காணிக்கை கூட எடுத்துக்கோ.. இல்லன்னா தட்டுல வைக்கிற மரியாதையா கூட வச்சுக்கோ.. என்று விளக்கமா விளக்கம் தள்ள…
உதட்டை கேவலமா சுளிச்ச செல்வி…
என் கையை தொடு.. தருமு.. தன் வலது கையை நீட்ட..
அவர் தயங்க…
பிடிச்சி பாரு அப்பத்தான் என் வலிமை தெரியும்.. காசு தேட நிறய வழி தேடினேன்.. வட்டிக்கு விடும் முன்.. வீணா காட்டில் கிடைக்கும் விறகெல்லாம் உடைச்சு எடுத்து வித்து.. உழைப்பு தான் அதிகம் வருமானம் கம்மி விட்டுட்டேன்.. ஆனா அதன் பலம் கையில் அப்டியே தங்கிருச்சு.. ஒரு கோழி கொடேன் என் கையில் 5 நிமிஷத்தில் அது குழம்பில் கொதிக்கும்.. பிச்சி முறிச்சி போட்ருவேன்… 10 நிமிசத்தில் தட்டில் ஊத்தி கரி
கறிச்சாறு விருந்துகாரங்களுக்கு தந்துருவேன்..
தான் ஒரு அறைவிட்டால் தாங்க மாட்டான் தருமன் என்பதை இப்படி பேசியே நேரம் கடத்த…
கள்ள முழி முழித்தார் தருமு.. காசு பேய் .. எல்லாம் எடுத்துக்கோ சொல்லி கொஞ்சம் தாஜா பண்ணி
அடைஞ்சுக்கலாம்… செல்வியையே மடிச்ச பெருமையில் சுத்தலாம் கணக்கு போட்டவருக்கு.. இனி பெண் சிங்கத்து கிட்டே இருந்து தப்பிப்பது எப்படி? மிரட்சி கொடுத்தது…
நீ வைரம் செல்வி… புகழ் எனும் கவசத்தை எடுத்துவிட்டார்..
நான் எதுவான்னாலும் இருந்துட்டு போறேன்… உன் பொண்டாட்டி கள்ளம் கபடு இல்லாத பொண்ணு… என் மாறி பொண்டாட்டி ன்னா இப்படி தனியா வீட்டில் ஒரு பெண்ணோடு விட்டுட்டு போவாளா? அவ உடம்பை நல்ல டாக்டர் வச்சு பாரு.. இதான் சாக்கு ன்னு நீ ஊர் மேயாதே தருமு… நோய் பிடிச்சா… கோடி கோடியா சேர்த்து வச்சுருக்கிற சொத்து இருக்கும் நீ இருக்க மாட்டே.. பத்திரம்… ஒரு கார் பிடி… என் மக கூப்பிடுறா போறேன்.. இனி இங்கிருப்பது சரி கிடையாது…
தன்னறைக்கு சென்ற மறு நொடி… தன் ரெண்டு பயணப்பையையும் தூக்கி வந்தவர்.. அப்படியே கிளம்ப…
யார் கிட்டேயும் சொல்லாதே செல்வி.. என்னை மன்னிச்சுரு.. உன் மேல ரொம்ப நாளா ஆசை..
மன்னிச்சேன் மறக்க வேணும் ன்னா உன் காசு இனி கேக்க கூடாது… விலை சரியா?.. நக்கலா சிரிச்சிட்டு… வீட்டை விட்டு வெளியில் நின்று கொண்டார்… உள்ள இருப்பதை விட இரவின் குளுமையில் இதயமும் உடலும் குளிர்ச்சி பெற… உக்கிரம் தணிந்து.. உம் மென்ற முகத்தோடு கார் வந்ததும்… இழவு வீடு வந்தவர் போல சொல்லாமல் கொள்ளாமல் போய்ட்டார்…
அட… என்னே ஓர் பெண் என்று வியக்க வைக்கிறார் செல்வி…
எல்லா பெண்களுக்கும் உள்ள பலகீன உடல் தான்… ஓர் கட்டு மஸ்தான ஆண் கைபிடிக்குள் தடுக்க முடியா உடல் தான்.. ஆனால் மனம்?
ஆயிரம் யானை பலம் கொண்டது … தானா தன் எண்ணங்களை வலிமையா பின்னி பின்னி அடர் வைரமா ஆக்கி கொண்ட பெண்மணி.. இவரிடம் நடக்குமா? ஹாஹா.. ஆனால் சுடர்மிகு அறிவு தரும் பலம் நம்மை காக்கும் ஆண்கள் தர இயலாது…
நம் பெண்கள் இனம் அத்தனை அறிவு திறமை தகிரியம் இருந்தும் எங்கே வீணா போகிறோம்?.. தெரில… ம்ம்ம்
ஹோட்டலில் இறங்கிக்கொண்டாலும் அழகு புக் பண்ணிய அறைக்கு செல்லவில்லை.. வரவேற்பில் விவரம் சொல்லி முன்னில் போடப்பட்டிருக்கும் சோபாவில் ஓர் மறைவு மூலையில் பைகளோடு அமர்ந்துவிட்டார் இன்னும் ஓர் 4 மணிநேரம்… அவ்ளோதானே… தன் ஹாண்ட் பாக் திறந்து நகை பத்திரங்கள் பில்ஸ் என்று ஒரு ரௌண்ட் செக் பண்ணிட்டு… கணக்கு நோட்டும் பேனாவும் எடுத்ததுதான்… ஓடியே போச்சு நேரம்.. மீனா போன் அடிக்க…
கீழே தான் இருக்கேன் இப்ப வரேண்டா… மாப்பிள்ளை கிளம்பிட்டாரா?
ஆமாம் மா.. அவங்க தான் என்னையே எழுப்பினாங்க…
சரி .. சரி… வரேன்…
இங்கு ஒருமாதிரி கிடந்த இளசுகள் .. செல்வி வந்துவிட்டது கண்டு அரக்க பறக்க உடைகள் போட்டு… சிதறி கிடந்ததை சரி செய்து…
மூவருக்கும் காலை காபிக்கு ஆர்டர் செஞ்சுட்டு…
அழகு மட்டும் புல் ட்ரெஸ்ஸில் ரெடி தன் ரூம்க்கு போக… கதவு எந்நேரமும் தட்ட படலாம் என்கிற நிலைமையில்…
தன்னவளுக்கு உச்சியில் முத்தமிட்டு … இங்கு நீ வந்தது எவ்ளோ பெரிய அதிசயம் தெரியுமா? எதிர்பார்க்கவே இல்லை… ரொம்ப மன உளைச்சலில் இருந்தேன் … நெஞ்செல்லாம் கனமா… இப்போ செம்ம பிரீ மைண்ட் டா… பத்திரமா ஊர் போய் சேரு… உங்கம்மாவை வீடு பார்க்க சொல்லு… அவங்க எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்.. ஓகே…
கண் பார்த்து சொல்ல… காதலன்றி வேறேதும் இல்லை வார்த்தைகள் சொன்னது…
மீனு உணர்ச்சி வசப்பட்ட ஈரகண்கள் கொண்டு .. தலையாட்ட… காவிய அழகு….
லேசான கதவு தட்டல்.. செல்வி தான்… அவ்ளோதான்.. காபி குடித்து .. செல்வி பாதுகாப்பில் மனைவியை விட்டுட்டு கிளம்பிட்டான் அழகு…
ஒருவர் பின் ஒருவர் மதுரை வந்து சேர… மாப்பிள்ளை விருந்து வச்சுட்டுத்தான் அவன் பிறந்த ஊருக்கு அனுப்பினார் செல்வி.. மீனா போகவில்லை… வா.. அழகுவும் கூப்பிடவில்லை..
அங்கிருந்து கொண்டுவந்ததை இங்கேயே வைத்துவிட்டு போடும் உடை மட்டுமே அளவா கொண்டு போனான் தாய் வீட்டுக்கு மகன்..
ஆசையா வெளிநாட்டு பொருள்கள் கொண்டுவருவான்.. பங்குபோடலாம் பதுக்கலாம் கனவு கண்ட நாகுக்கு ஷாக்… eee
மெய்.. எதுவும் வாங்கல.. அழகு…
அங்கே கடைசி நாட்களில் மீனாவோட சேர்ந்திருக்க நேரம் போதல.. eee
மகனுக்கு சாப்பாடு போடும் போது … இதை சிரிச்சிட்டே கேட்ட மாதிரி நாகு கேட்க…
“ஊரோடேவே வந்துட்டேன்… என்னத்த வாங்க? வேணும்ன்னா காசு தரேன் இங்கேயே உங்களுக்கு அப்பாக்கு பிடிச்ச மாதிரி வாங்கிக்கோங்க… ம்மா”
“இல்லடா சொந்தக்காரங்க எதிர்பார்ப்பார்கள்.. திருச்சியில் இருந்தா எடுத்துட்டு வா.. பிரிச்சி கொடுத்திடலாம்.. வீண் செலவு எதுக்கு? ” நயமா… எல்லாத்தையும் அவளுகளே அடக்கிக்கிட்டாளுக.. வயிற்ரெறிச்சலில்.. eee
அட ஏதும் வாங்கல சொல்றேன்ல.. அங்கேயே மூணு மாசம் சம்பளம் பைன் கட்டிட்டு இங்கு வந்துருக்கேன்… நீங்க வேற… கடை திறக்கும் போது ஸ்வீட் வாங்கி கவனிச்சுக்கலாம்… ஓங்கி சொல்லி தாயின் வாயை அடைத்தான்…
கடைவேலைகளை பார்க்க தொடங்கி… அலைய.. இவனின் இருத்தல் பெற்றோருக்கு எரிச்சல் தந்தது … விசித்திரம்..
வெளிநாட்டுக்கு போன பையனின் பணத்தை தின்றவர்கள்… வெறும் போனில் பாசரசத்தை பிழிந்தால் போதும் ஈஸி.. இப்ப சோறு நேரத்துக்கு நேரம் ஆக்கணும்… ருசியா தரணும்… துணி துவைக்கணும்.. துவச்சதை ஐயனுக்கு கொடுத்து வாங்கோனும் …. எல்லாத்துக்கும் செலவானது.. அவனிடம் கேட்க முடியாது…
பெருசுகள் ஒரு நேரம் ஆக்கும் ஆக்காது… ஒரு நாள் குழம்பு வச்சு நாலு நாள் திங்கும்… செலவே ஆகாது.. காசை முந்தியில் முடிஞ்சு வச்சு அழகு பார்த்த நாகுக்கு இப்ப செலவுக்கு பிரிச்சி எடுக்க எடுக்க… இதயத்தில் பள்ளம் விழுந்தது… eee
“அங்க எதுக்கு வீடு பார்த்துட்டு… நம்ம வீட்டிலேயே தனியா கூட கஞ்சி காய்ச்சுக்கோங்க ப்பா.. ” தியாகி மாதிரியே மகனிடம் பேசி… மருமகளிடம் அழகுவை தள்ளிவிட பார்க்க..
“இங்கேதான் வருவா மீனா… தனியா சோறு ஆக்குவது எல்லாம் என்ன பேச்சு ம்மா.. கோவித்து.. படிப்பு லாம் முடிச்சுட்டதும் கூட்டிட்டு வந்துருவேன்.. அதுவரை அங்கேயே இருக்கட்டும்…”
“அதுக்கு எதுக்கு தனி வீடு வாடகை எல்லாம்? செல்வி தான் கடல் போல வீடு வச்சுருக்கே..”
“பைபாஸ் கிட்டயே பார்க்க சொல்லியிருக்கேன்… ஊருக்குள்ளே போய்ட்டு அலைஞ்சுட்டு இருக்க முடியாதுன்னுதான் மா.. பார்த்தாச்சு.. நான் இந்த வாரம் போகும் போது பால் காய்ப்பங்க.. போல”
“ஓ.. நானும் கூட வரவா?.. ” அப்பாவியா நாகு மகன் அம்மாவின் பெருந்தன்மை பாரு ன்னு உருகுவானாம் eee
வாய்விட்டு சிரிச்ச அழகு..
“சொந்த வீடா கட்டி வச்சு உங்க கையால் காய்ச்சி தாங்க கேட்க… கொஞ்சநாள்க்கு தானே.. அதுவும் வாடகைக்கு .. எனக்கு நோ இன்டெர்ஸ்ட்..” அசால்டா சொல்லிட்டு அழகு சென்றுவிட..
இது சொந்தவீடு வைத்திருக்கும் பணக்காரனின் இயல்பு திமிர் பேச்சு..
நாகுக்கோ இது யாரோ சொல்லி கொடுத்து பேசிய மாதிரியே தான் இருந்தது…
மீனா கூட போனிலேயே தான் ஓடிய பேச்சுக்கள்…
ஊருக்கு வாங்க மாமா.. கெஞ்சிய கெஞ்சில்..
முதன் முதல் அலைச்சல் கிளம்பிட்டான் அழகு…
இவன் விரும்பிய மாதிரியே மெயின் ரோட்டில் புதுவீடு … ரெட்டை படுக்கையறை கொண்டு… வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் அளவாக வைக்கப்பட்டு நேர்த்தியா… செல்வி கைவண்ணம்..
இவன் அங்கேயே வந்துவிட .. மீனா கையால் பால் காய்ச்சப்பட்டு கணவனுக்கு ஆசையா கொடுக்கப்பட.. வீடை பார்த்து மனம் நிறைந்து போச்சு.. அழகுக்கு திருப்தி…
“ஏய் உங்க அம்மா அப்பாவை அண்ணனை கூப்பிட வேண்டியதுதானே மீனா.. இதே ஊர்தானே…”
“கூப்பிட்டாச்சு… இப்ப வருவாங்க இன்னைக்கு பூரா இங்குதான் இருப்பாங்க…அண்ணன் தான் முழு உதவி.. வீடு பார்த்தது செட் பண்ணது எல்லாம் அவன்தான்.. அடுத்த தெருவில் தான் இருக்கான்.. ” மீனா விபரம் சொல்ல..
பரவாயில்ல… அவங்கண்ணன் ஏரியா தானா? மீனா தனியா இருந்தாலும் பாதுகாப்பா இருப்பா .. இதுவும் திருப்தி..
ஹாலில் சோபாவில் அவன் மடியில் மீனா… படுத்துகிடந்தாள்… தனி வீடு.. தனிக்குடித்தனம்… மனசு பூரித்துக்கிடந்தது..
கடை பற்றி கேட்டுட்டு…. இப்படி மடியில் கிடக்கிறேன்.. என்ன ஒன்னுமே பண்ண மாட்டுறான்? … காண்டாகி.. கைகள் திருட்டுதனமாய் அவன பலகீன புள்ளியில் விளையாட.. ஏய்.. விடுடி யாராச்சும் வரப்போறாங்க..
வெளிகேட் லாக் ல தான் இருக்கு… மடியில் கவிழ்ந்துகிட்டே சொல்ல… விட்டு விட்டான் நெளிவதை.. இனி எதுக்கு தடுத்துட்டு.. முழுசா செய்டி… ஸ்ஸ்ஸ்.. ஹா.. முனகி… அவள் தந்த சுகத்தை வாங்கி…புதுவீட்டு பெட்ரூம் பயன்பாடு தொடங்கிவிட்டது… eee
அனைவரும் மதியம் சாப்பிட வருவதாய் கூறிவிட… இவர்கள் மட்டுமே டிபன் செய்து சாப்பிடும் போது அழகு…வீட்டு அட்வான்ஸ் வாடகை பற்றி மீனுவிடம் கேட்க…
அம்மா கொடுத்தாச்சு… 4லட்சம் ஒத்தி … நீங்க அட்வான்ஸ் தரவேணாமாம்.. 8000 வாடகை மட்டும் இப்போதிலிருந்து தருவீங்களாம்…
சூப்பர்… கொடுத்துட்டு போறேன்.. மீனு அம்மாட்ட கொடுத்துரு… எல்லாம் சரியா இருக்கு… நைட்டே ஊருக்கு போறேன்டா… காலையில் கடை திறக்குறேன்…
சரிங்க… தனியா இருப்பியா?
அம்மா வீட்டுக்கு ஓடிருவேன்.. நீங்க வரும் போது இங்கு வந்துருவேங்க..
சரி.. பண்ணு.. படி என்ன? தூங்கி வழியாதே…
சரிங்க… பூவாய் மனைவி சிரிக்க… தன் அலங்கார தேவதையை அரவணைத்து கொண்டான் அழகு..
இப்படியே இங்கும் அங்கும் அழகு அலைய… 8 மாசங்கள் ஓட.. மீனுக்கு குழந்தை நிக்கல.. படிப்பு நிலைக்கு வந்துட்டது… முடிச்ச மாதிரி தான்..
அழகுவுக்கு அவங்க இனத்தவங்களே உதவி என்பதால் பைனான்ஸ் நல்லாவே போச்சு.. சிட் கம்பெனி போட்டால் இன்னும் பணம் ரோல் ஆகும் என்று அடுத்த ஸ்டெப் எடுக்க…
செல்வி முகம் சுளித்தார்… ஹை ரிஸ்க்.. ஒருத்தன் தரலென்னலும் போச்சு.. என்று.. உள்ளதை உத்து பார்க்க சொல்லு மீனா.. மகளை கூப்பிட்டு வைத்து கண்டிக்க…
எல்லா கணவன் மனைவி போலதான் இவர்கள் வாழ்வும் இப்ப நேர்வழி பாதை போல ஓர் நீட்சியில் சென்று கொண்டிருந்தது… பிள்ளை ஏதாச்சும் இருந்திருந்தால் கூட உப்பு சப்பா ருசி இருந்திருக்கும் இந்த போரிங் லேட்டா தெரிஞ்சிருக்கும்… வந்தா சாப்பிட உள்ளது ரெண்டு வார்த்தை பேச.. படுக்க ஆசை இருந்தால் தீர்க்க… அவனே சுணங்கினாலும் இவளே சந்தோஷத்தை கொடுக்க… நதியின் பாதையா வாழ்க்கை தெளிவா போக…
பிள்ளைக்காக திரும்ப செக்கிங் வேறு ஹாஸ்பிட்டலில் முன்பு பார்த்ததை சரி பார்க்க செல்வி மீனுவை ஆட்படுத்த… வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி.. இயற்கையா உண்டாகுவது சிரமம் ன்னு.. முன்னாடி சொன்னதை விட பயமுறுத்த… தாயாய் முதல் முறை கவலை செல்வி… குழந்தை இல்லன்ன எப்படி? என்று…
மகளுக்கு ஏதும் சொல்லாமல்… அந்த சித்தர் ஒரு பிராடு போல… பிள்ளை அளவில்லாமல் தரேன் ன்னு சொன்னான்… ன்னு மகளிடம் காரில் வந்ததும் கோபப்பட…
அவர் தரேன் ன்னு சொன்னா முழுமனசா நம்பனும்… நான் சும்மா தானே இருந்தேன்… நீங்க தான் துரு துரு ன்னு ரெண்டு போதும் எதுக்கு நிறய ன்னு நெகட்டிவ் யா பேசிட்டிங்க அதான் சோதனை… நம்புறோமா? கொடுக்கமா இருக்காரு போல…
போடி.. போடி… அந்த மாத்திரையை விட்டுட்டு.. இவங்க கொடுக்கிறது போடு.. பார்ப்போம்… அவர் இங்கு வரும் போதெல்லாம் இரு.. சரியா?
வெட்கமா தலை ஆட்டினாள் மீனா… இவளும் திருமணம் ஆனவள் தான்.. அனுபவிக்கிறவள் தான் அந்த சுகங்களை.. ஆனாலும் யாராச்சும் அதை சொன்னால் வெட்கம் வந்து தொலைக்குது ஏன்? ஏன்?…
இந்த ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் ஒரு நர்ஸ் மூலமா.. நாகுக்கு செய்தி போக… முன் பார்த்த ஹாஸ்பிடல் ஆள் வச்சு விசாரிக்க… மீனாவின் குறை தெரிந்து விட… அப்ப நாடகம் ஆடி இருக்காளுக… திருட்டு நாய்க…
என் பையனை தெருநாயா அலைய விட்டு பைத்தியகாரனா ஆக்க முயற்சிக்கிறாளுக… கோபம் பெருக… இத்தனை நாள் கிடைக்காமல் இருந்த நேரமும் ஆதாரமும் இப்ப கிடைக்க…மலடி எதுக்கு என் பிள்ளைக்கு … அழகுவின் கவனத்துக்கு கொண்டு வராமலேயே தன் ஊரில் பஞ்சாயத்து கூட்டிட்டார்… வந்தே ஆவனும் மீனாக்கும் அவள் வீட்டினருக்கும் செய்தி வந்தது…
