மரகத வளரி

This entry is part 1 of 6 in the series மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மரகத வளரி

மதுரை -  திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில், கடமை தவறாத ஒரு ஓட்டுநர் மூலம், அந்த அரசு பேருந்து சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது. 


நடத்துனர் ,ஓட்டுனரை தவிர அனைவரும் அரைத்தூக்கத்தில்  இருந்தனர் .


“இலவந்திகைப்பள்ளி யாராச்சும் இறங்கணும.?”  என்று நடத்துனர் உரக்க கத்த, சபரிராஜன் அரக்கபரக்க பெட்டிகளை எடுத்துக் கொண்டு இறங்க எத்தனித்தான், மற்ற பயணிகள் நமக்கில்லை என்று மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.  பேருந்து ஒருநிமிடம் நிற்க, அவன் மாத்திரமே இளவந்திகைப் பள்ளியில்  இறங்கினான் .

இலவந்திகைப்பள்ளி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகை அவனை வரவேற்றது.

இலவந்திகைப் பள்ளி, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆளுகையின் கீழிருந்த, ஒரு ஜமீன் ஆகும். 


இருளும் அதிகாலை நேர குளிர்ந்த காற்றும், அவன் முகத்தில் அறைய
அந்த போர்டு காட்டிய திசையில் மெல்ல இருளில் நடக்கத் தொடங்கினான். சாலை குண்டும் குழியுமாக இருந்தது, அவன் நடக்க நடக்க சாலை முன்னோக்கி நீள அவனுடைய எண்ணங்கள், பின்னோக்கி நின்டது. அவன் தொல்லியல் துறையில் பட்டம் பெற்ற பட்டதாரி, நடுத்தர குடும்பம், அவன் வேலையில் சேர்ந்த சில மாதங்களிலேயே  அவனுடைய தந்தை சிவலோகப் பதவியை அடைய, குடும்பப் பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு வந்து சேர்ந்தது. குடும்ப நிலையை நினைத்தப்படி நடந்து கொண்டிருந்த அவன் காலை சாலையில் இருந்த பெரிய சைஸ் ஜல்லி பதம் பார்க்க, “ஐயோ” என்று காலை உதறினான்.சுற்றும் முற்று யாராவது இருக்கிறார்களா என்று தேடினான்.


“என்னடா ஊரு இது? யாரையும் காணோமே? “அவன் தனக்குத்தானே பேசியபடி, மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.  தெருவிளக்குகள் தலையெழுத்தே என்று எரிந்து கொண்டிருக்க, தூரத்தில் ஒரு உருவம் அசைவது, அவனுக்கு தென்பட்டது, அவனும் அந்த உருவமும் நேர்க்கோட்டில் 
நடக்க நடக்க, பெட்ரோல் விலை போல் அவன் மனம் எகிரி குதித்தது. இதமாக வீசிய குளிர்ந்த காற்றையும் தாண்டி அவனுக்கு வேர்வை அருவியாய் சுரக்க ,அந்த உருவம் அவன் அருகில் வந்து நின்று 

“ஊருக்கு புதுசா.?” என்றது . அவன் கண்களால் அந்த உருவத்திற்கு கால் இருக்கிறதா? என்று துலாவி விட்டு தலையசைத்தான். அந்த உருவம் உரக்க சிரித்தபடி 
“என்ன தம்பி என்ன பேயினு நினைச்சியா.?” என்று கேட்டது. அவன் இல்லை என்று மறுத்தான்.
“நானும் உன்ன மாதிரி மனுஷன் தான் ” என்று கூறிவிட்டு ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டு மெல்ல நகர்ந்தான்.
இயற்கை அழைப்பின் காரணமாய் சபரி, சுருட்டு பிடித்துக் கொண்டு நடந்து சென்றவனிடம்,
“அண்ணே இங்க பப்ளிக் டாய்லெட் ஏதாச்சும் இருக்கா.?” என்று சற்று உரக்க கேட்டான்.
சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தவன் தலையில் அடித்துக் கொண்டு,
“இப்டிக்கா நேரா போ ஒரு கம்மாக்கரை வரும் ” என்றான். சபரி 
இயற்கை அழைப்பின் அவசரம்,காரணமாய்  கொண்டு வந்த பெட்டியை அங்கேயே விட்டுவிட்டு, சுருட்டு பிடித்துக் கொண்டிருந்தவன் கைகாட்டிய திசையில் இறங்கி ஓடினான்.


பதினைந்து  நிமிடத்தில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு அவன்  மீண்டும் அதே இடத்துக்கு வந்தான். தான் கொண்டு வந்த பெட்டியை காணாது அதிர்ந்தான்.பெட்டியை தேடி பரிதவித்து அங்குமிங்கும் ஓடினான். அவன் வந்த அந்த சாலையில் இப்போது சில மனிதர்கள் நடந்தும் சைக்கிளிலும் சென்று கொண்டிந்தனர்.பொழுது புலர்ந்து கிழக்கில் சூரியன்  தலைகாட்டிய தைரியத்தில், பச்சி பறவைகள்,

“உலகம் பிறந்தது எனக்காக 
ஓடும் நதிகளும் எனக்காக ” என்று தங்கள் மொழியில் பாடி பரக்க ஆரம்பித்தன .

சபரி சாலையில் சீரான வேகத்தில் நடந்து கொண்டிருந்த  ஒருவரை மறித்து,
“சார், இங்கே ஒரு பெட்டி இருந்துச்சி பக்கத்தில ஒரு ஆளு இருந்தாரு ”  .என்று விசாரித்தான் .

“பேட்டியா..? ஆளா.? யாரை சொல்ற“. 
என்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் எதுவும் புரியாது கேட்க, 

“கொஞ்சம் ஒல்லியா தாடி மீசையோட சுருட்டு புடிச்சுக்கிட்டு, தலையோட வெள்ளைத் துணியைப் போர்த்திக்கிட்டு நின்றிருந்தாரு” என்று சபரி விளக்கினான் .

” நீ சொல்லத வச்சி பாத்த அது சுருட்ட இருக்கும் ,நெற போனேனா ஒரு டீக்கடை வரும் அங்கதா இருக்கான் போயி பாரு ” என்று சபரிக்கு அவர் பதில் அளித்து விட்டு தன் வழியில் நடந்தார். தன் பொட்டி பத்திரமாய் இருக்குமா என்ற கேள்வியோடு, சபரி அந்த நபர் காண்பித்த திசையில் டீக்கடையை நோக்கி ஓடினான். இரண்டு நிமிட,ஓட்டத்திற்கு  பிறகு டீக்கடை பெஞ்சில்  சுருட்டையும் அவனருகில்  பெட்டியையும் கண்டான்.

இவனைக் கண்டதும் சுருட்டு,
“என்ன தம்பி போட்டியோட, ஓடிப் போயிட்டான்னு  நினைச்சியா .?” என்று கேட்டுவிட்டு சிரித்தான்.
சபரி  சுவாசத்தை சீர் படுத்திக் கொண்டு 
“அப்படிலாம் இல்ல ” என்றான் .

“ம்ம…..உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது” என்று கூறிவிட்டு சுருட்டு டீ கடை காரனிடம் திரும்பி,
“கன்னி …..தம்பிக்கு ஒரு ஸ்ட்ராங் டீ ” என்றான்.


“தம்பி பேர் என்ன ….?” என்று சுருட்டு கேட்டான்.

“என் பேரு சபரி ” என்று சபரி சுருட்டுக்கு பதில் அளித்துவிட்டு,  இவனை நம்பலாமா? வேண்டாமா? என்ற யோசனையோடு அமர்ந்திருந்தான்.
“என்ன சோலியா இந்தப்பக்கம் வந்த?” என்று சுருட்டு மீண்டும் கேட்டான்.
டீ கடைக்காரன், டீயைச் சபரிடம் நீட்ட அவன் பெற்றுக் கொண்டபடியே,
“இங்க சின்ன மாரப்ப முதலி  ஜமீனுக்கு வேலைக்கு வந்து இருக்கேன். ” என்றான்.

“எந்த ஊரிலிருந்து வர….?” என்று சுருட்டு கேட்டன். 


“சென்னை ” என்று விட்டு சபரி டீ குடித்து முடிக்க, டீ கடைக்காரன் சபரிடம் ஐம்பது ரூபாய் கேட்டான் .
“என்ன ஒரு….ட்டி அம்பது ரூபாவா…?” என்று சபரி விலா எலும்பு தெரிய வாய்ப்பிளந்தான்.

“சார் ஒரு டீ அம்பது ரூபா இல்ல,சுருட்டு குடிச்ச டீ, அவன்வாங்கிட்டு போனா சுருட்டு எல்லாத்தையும் சேத்து சொல்றேன் ” என்று டீக்கடைக்காரர் சொன்னான் .
சபரி கோபத்தோடு, சுருட்டை பார்த்துவிட்டு டீ கடை காரனிடம் ஒரு அம்பது ரூபாய் தாளை எடுத்து கொடுத்தான்.
பிறகு சபரி தன் பெட்டியை தள்ளி கொண்டு அமைதியாக ஊரைப் பார்த்து நடக்க, சுருட்டும் அவன் பின்னால் வந்து,
“தம்பிக்கு என் மேல கோவமா.?” என்று கேட்டான். சபரி சற்றுநேரம் அமைதியா இருந்தான்.
“உங்களுக்கு ஜமீன் பங்களா எங்க இருக்குன்னு தெரியுமா ..?” என்றான். .
” ந்த ஊர்லயே பொறந்து வளந்தவனுக்கு ஜமீன் பங்களா தெரியாத,  வாங்க கூட்டு போற ” என்று சுருட்டு சொன்னான்.

“உங்க பேர் என்ன ரொம்ப வித்தியாசமா சுருட்டி வச்சிருக்காங்க.?” என்று சபரி கேட்டான் 
“அட நீங்க வேற தம்பி, இந்த ஊர்ல நான் ஒருத்தன்தான் சுருட்டு குடிப்பேன் டீக்கடைக்கார என் ஒருத்தருக்காக மட்டும்தான் சுருட்டு வாங்கிட்டு வந்து விப்பான், அதான் இந்த ஊர் பயலுக எல்லாம் அதே பேரு எனக்கு வச்சுட்டாங்க, என் நேச பேரு கனகரத்தினம் “சுருட்டு தன் பெயர் காரணத்தை விளக்கி முடித்தான். அவர்கள் பேசியபடியே மெல்ல ஜமீன் பங்களாவை நோக்கி முன்னேறினர்.
“ஜமீன் பங்களா ல உங்களுக்கு என்ன சோல்லி…?” என்று சுருட்டு கேட்டான். 
“ஜமீன் பங்களால்ல ஒரு மியூசியம் இருக்குல்ல அத பார்த்துக்கர வேலை “சபரி கூறினான். 
“பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்களா.?” என்று சுருட்டு கேட்க, சபரி ஆம் என்பது போல் தலையசைத்தான்.
“ஆமா நீங்க என்ன வேலை செய்றீங்க.?” என்று சபரி, சுருட்டிடம் கேட்டான்.

“ரெண்டு எருமமாடு, வீட்டை சுத்தி நெலம் இருக்கு, அப்படியே காய்கறி தோட்டம் எல்லாம் போட்டு ஒரு மாதிரி ஓடிட்டு இருக்கு. ” என்று கூறிய சுருட்டின் குரலில் எக்கச்சக்க வருத்தம். 
ஜமீன் பங்களா வரவே, சுருட்டு
எங்கிற கனகரத்தினம், “தம்பி இதுதான் ஜமீன் பங்களா, நீ  போய் பாரு, நா வூட்டுக்கு போறேன் .”கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்.

சபரியை ஜமீன் பங்களாவின் பிரம்மாண்டமான கேட் வரவேற்றது. கேட்டில்  கைவைத்து அவன் திறக்க முயல,
எங்கிருந்தோ வேகமாக ஒரு கருடன் வந்து அவன் தலைக்கு மேல் வட்டம் அடித்தது, அந்த கருடனின் வரவும் வேகமும் சபரிக்கு சற்று திகிலூட்டியது. அந்த ஜமீன் பங்களா அமைந்திருந்த, தெருவின் ஒரு மூலையில்  படுத்து உறங்கிக் கொண்டிருந்த, ஒரு பிச்சைக்கார கிழவன் அவனைப்பார்த்து,
“சாமி… வந்துட்டியா ராசா ….” என்று தலைக்குமேல் கைகுவித்து வணங்கியபடி அவனை நோக்கி ஓடிவந்தான்.
ஜமீனில் இருந்து அழகு தேவதை அவனை பார்த்து வர

 “வேலைக்கு வந்து இருக்கேன். ” என்றான் சபரி

” ஜமீன்ல  சொன்னாங்க…., உள்ள வாங்க” என்று அந்தப் பெண் கேட்டை திறந்து அவனை உள்ளே அழைத்துக் கொண்டு நடநதாள். சபரியை நேக்கிஓடிவந்த பிச்சைக்காரன், அவர்கள் ஜமீனுக்குள் நுழைவதை பார்த்து ,
“ஐயோ ராசா ,நான் இப்ப என்ன செய்வ!?” என்று அலறியபடியே, ஜமீனை சுற்றிக்கொண்டு எங்கோ ஓடினான்.

.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *