மயக்கும் மாய மான்


சாலையோரம் வண்டியலே
சந்தைக் கடை வைத்திருந்தேன்
வாழும் வழி அடைக்க
வந்தது இந்த ஷாப்பிங் மால்!
தரமான பொருளை வச்சி
தகுதியான விலைய வச்சி
அன்றாடம் நானும் வித்து
அருமையாக வாழ்ந்து வந்தேன்!
நல்ல பொருள் வச்சிருந்தேன் 
நாயமாத்தான் விலையும் சொன்னேன்
நாடிவந்த சனங்கள் எல்லாம்
நழுவி தான் போனாங்க!
பேரம்  பேசி கேட்டாலும்
பிரியமாத்தான் வித்து வந்தேன்
வந்த சனம் அத்தனையும்
வழி மறந்து போனாங்க!
பளபளக்கும்  கட்டிடத்தில்
பல பொருளும் கிடைப்பதுபோல்
பணக்கார வியாபாரிகள் மக்கள்
பார்வையை கவர்ந்து இழுக்காங்க!
ஒத்தருவா பொருளுக்கு அங்கே
பத்து ரூபா  விலை இருந்தும்
பேரம் எதுவும் பேசாமல் 
பெருமையாக   வாங்குறாங்க!
வாரம் எல்லாம் உடல் வருத்தி
வாங்கிவந்த சம்பளத்தை
அலங்கார பேச்சை நம்பி
அழிக்கிறாங்க காசைல்லாம்!
ஆட்டு மந்தை கூட்டம் போல மக்கள்
அலை அலையாய் போறாங்க
தரமில்லாத பொருளை கூட 
தாராளமா வாங்கி போறாங்க!
ஏதாவது பொருளை வித்து 
எம்பொழப்ப பார்த்து வந்தேன்
அரைவயிறு கஞ்சி குடித்து
அன்றாடம் கழித்து வந்தேன்!
எங்கள் அருமை புரியாமல்
ஏளனமாய் விலகி போனவங்க
ஊரடங்கு  வந்ததால மக்கள்
உணருறாங்க  எங்களையும்!
மரண நோயின் பயத்தால் 
மால் எல்லாம் அடைத்ததாலே
கட்டவண்டி வியாபாரியையும்
கடவுளா தான்  பாக்குறாங்க!
வரவு செலவு தான் அறிந்து
வாங்குறாங்க பொருளெல்லாம்
இவ்வளவு விலை குறைவா என்று
ஏக்கத்துடன் கேட்கிறாங்க!
ஷாப்பிங் மால் கடைகளோட
ஜாலத்தில் தான் மயங்கி
காசெல்லாம் விட்டுவிட்டோம் என கலக்குறாங்க இப்போது!
பணக்கார கடைகளோட 
பகட்டான பேச்செல்லாம் 
பகலெல்லாம் பெய்த மழையில் 
நனஞ்ச பழைய துணிபோல ஆச்சுங்க!
ஞாயமான விலை கொடுத்து
நல்ல பொருள் வாங்கிடுங்க
மாயமான் போல் மயக்கும் மாலுக்கு
மறந்தும் நீங்க போகாதீங்க!
நல்லதையே எண்ணுங்க
நல்ல பொருளை  வாங்குங்க
நாயமான விலை கொடுங்க
நலமோடென்றும்வாழ்ந்திடுங்க
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌹 என்றென்றும் அன்புடன் 😍🌹
உங்கள் சீதாம்மா 🤗🤗

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *