From ஆரோக்கியம் & நல்வாழ்வு
அல்டிரா ரெகவரி என ஒரு புத்தகம் படித்தேன்
16 வயது முதல் குடி, கொக்கெய்ன் என போதையால் மிதக்கும் ஒருவர் அதில் இருந்து மரணத்தின் விளிம்புக்கி சென்று ஒரே நாளில் மீண்டு அல்ட்ரா மரதான் வீரர் ஆகி மீண்டும் அதில் மரணத்தின் விளிம்புக்கு செல்வது தான் கதை
நிஜ சம்பவம்..எழுதியவர் டேவிட் கிளார்க்
குடி என்றால் சாதாரண குடி இல்லை
பாருக்கு போய் முச்சு முட்ட குடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு போய் இரவு முழுக்க குடிப்பார். காலையில் எழுந்து ஆபிஸ் போய்விடுவார்
எத்தனை குடித்தாலும் காரை அனாயசமாக ஓட்டுவார்.
அத்துடன் கொக்கெய்ன். அதன்பின் முழுக்க குப்பை உணவுகள்
இப்படி 160 கிலோ வரை எடை ஏறியது. ஈரல் கிட்டதட்ட செயழிலக்கும் நிலைக்கு சென்றது
அப்போதும் குடி நிற்கவில்லை
மனுசன் ஒரு நாள் மாலை பாருக்கு செல்கையில் குடியை விட்டால் என்ன என யோசிக்கிறார்
ஆனால் கார் பாரை நோக்கி செல்கிறது
மனதில் ஏதோ ஒன்று “இன்று ஒரே நாள் மட்டும் நீ குடிக்காமல் இருந்தால் நீ குடியை வென்றுவிடுவாய்” என சொல்கிறது
காரை மிக சிரமபட்டு வீட்டுக்கு விடுகிறார்
குடிக்காமல் தெளிவாக வரும் தந்தையை கண்டு விடே ஆனந்த கண்ணீர் விடுகிறது
மறுநாளும் குடிக்கவில்லை, ஜஸ்ட் லைக் தட் அதன்பின் குடியை அபப்டியே தலைமுழுகுவது மட்டுமின்றி “நான் மரதான் ஓடபோகிறேன்” என பகிரங்க அறிவிப்பு செய்கிறார்
காரணம் அவரது 10 வயதில் ஏதோ ஒரு முறை மரதான் வீரர் ஆகலாமா என சின்ன யோசனை இருந்தது தான் காரணம்
எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். காரணம் அவர் எடை 160 கிலோ. நடக்கவே சிரமம். இவர் எப்படி மரதான் வீரர் ஆவார்?
ஆனால் மராதான் உடைகளை வாங்கி அணிந்து, ஷுக்களை அணிந்து தினமும் எல்லா இடத்துக்கும் அப்படியே போக ஆரம்பிக்கீரார். தட்டுதடுமாறி நடக்கிறார். பின் வேக நடை. பின் மெல்லோட்டம். பின் மரதான். அதன்பின் அல்றா மாரதான் (100 கிமி ஓட்டம்)
என்ன வெறியுடன் குடித்தாரோ அதே வெறியுடன் ஓடுகிறார்
குடியால் தன்னை கொன்று கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு ஓட்டத்தால் தன்னை கொல்ல துவங்குகிறார்
கால், முதுகு டிஸ்குகள் பலவீனம் ஆகின்றன. சர்ஜரி செய்து விட்டு ஓடுகிறார்
இப்போது மிக ஆரோக்கியமாக, 75 கிலோ எடையில் உள்ளார்
நிறுத்த முடியாத அடிக்சனை நிறுத்த நல்ல வழி இப்படி இன்னொரு ஆரோக்கியமான அடிக்சனை உருவாக்கிகொள்வதுதான்
மனம் எதை விரும்பி செய்கிறதோ அதை அதனால் அடைய முடியும்
குடிகாரர் ஒவ்வொருவராலும் இப்படி
மிகசிறந்த மராதான் வீரர் அல்லது டென்னிஸ், கால்பந்து விரர் என தன் துறையில் மிளிர முடியும்
அடிக்சனில் சிக்கி அவதிப்பட்டால் விளையயட்டு ஒன்றை வெறித்தனத்துடன் கைக்கொள்ளுங்கள்
2020ல் அதில் இருந்து மீண்டு விடுவீர்கள்
— reading Out There: A Story of Ultra Recovery.
