மனதை கொய்யாதே கிள்ளையே
12
மனம் கொய்யாதே கிள்ளையே!!
மூன்று ஜாதகங்களையும் கண்ணாடியை மூக்கின் மீது சொருகி வைத்துக் கொண்டு.. ஜோசியர் வெகுநேரமாக உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.. அந்த நைந்து பிய்ந்துபோன ஜாதகத்தாள்கள் அவர் கையில் கசங்கப்பட்டதே ஓழிய, விடைதான் சொல்ல தெரியாமல் ..ஐய்யாதுரையை பார்த்து கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தார்..
“சாமி இதுக்கு மேல அந்த மூன்று வானர கூட்டங்களையும் சமாளிக்க என்னால முடியாது. ஒரு நல்ல பையனையோ, பொண்ணையோ பார்த்து மூணுக்கும் கால்கட்டு போட்டுவிட்டாதான்.. மூச்சுவிட முடியும் போலிருக்கு.. எவ்வளவுதான் நானும் சமாளிக்க.. காலையில் எழுந்ததிலிருந்து ராத்திர அடையிற வரைக்கும்.. ஒன்று மாற்றி ஒன்று பஞ்சாயத்தை இழுத்துட்டு வந்துடுது.. நான் பெத்த ஆம்பள பையன்கதான் இப்படி இருக்கான்னு பார்த்தா .. பொண்ணு அதுக்குமேல இருக்கா.. அவளுக்கு பயந்து எங்க தெருப்பக்கம் ஒரு பய வருவது கிடையாது .. இவ்வளவு ஏன்? ஒரு தண்ணி பாட்டில் போடுறதுக்கு கூட தண்ணீ போடற பையன் வர மாட்டேங்குறான் .. பயந்து போய் அண்ணே உங்க பொண்ணு இருக்கும் நான் உங்க கடையில வந்து தண்ணி பாட்டிலை வச்சிடுறேன்.. நீங்க வீட்டுக்கு போகும்போது கொண்டு போங்கன்னு.. என் தலையில் சுமத்திவிட்டுடுறான்.. அந்த அளவுக்கு ராங்கித்தனம் பண்றா .. இதையெல்லாம் முடிவு கட்டணம்னா.. மூணு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் .. எப்போ இவங்க மூணு பேருக்கும் கல்யாணம் யோகம் வரும் என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு.. உங்க கிட்ட கொடுத்தா.. 3 மணி நேரமாக முக்கி முக்கி பார்க்கிறீங்களே தவிர , ஒரு முடிவும் சொன்ன மாதிரி இல்ல”..
“அது எப்படி சொல்லன்னு தெரியலை துரை அதான் யோசிக்கிறேன்..”
“என்ன சாமி பிரச்சனை ஏதாவது ஜாதகத்தில தோஷமா.. எதுவும் இருந்தா சொல்லுங்க, அதுக்கு தோஷ நிவர்த்தி செஞ்சிடலாம்”.. என்று அய்யாதுரை வாழ்க்கையிலேயே இன்றுதான் நீளமாக பேசியிருப்பார்.. எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தால் இவ்வளவு பேசியிருப்பார் மனுஷன்…
“மனச திடப்படுதிக்கோங்க துரை…”
“சாமி எதுவும் தவறா சொல்லிறாதீங்க ..எனக்கு என் புள்ளைக தான் உசுரு ,,அதான் ஊரு ஊருப்படாத பிள்ளைகளை பெத்து வச்சிருக்கன்னு சொன்னாலும் ..அவன்கள திட்டுவேனே தவிர அவன்க முகம் தொங்கி போனாகூட என்னால தாங்க முடியாது.. அவன்களுக்கு நான் எப்படியோ…எனக்கு அதுக மூணும் தான் உசுரு சாமி” என்று கலங்கி போனார்… தெய்வங்கள் எல்லாம் தோத்துதான் போகும் சில நேரம் தந்தை அன்பு முன்பு எவ்வளவு ஆழமான பாடல் வரிகள்…
“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் நடந்ததிடலை துரை .. நான் நல்லா இந்த மூணு ஜாதகங்களையும் அலசி ஆராய்ந்து பார்த்துட்டேன்.. அது என்ன சொல்லுதுன்னா”
“என்ன சொல்லுது சாமி ??”
“பெருமூச்சு விட்ட ஜோசியர் இந்த மூன்று ஜாதக காரர்களுக்கும், ஏற்கனவே தாலிபாக்கியம் முடிஞ்சு போச்சுன்னு சொல்லுது..”
” சாமி நீங்க சொல்றது புரியலையே “என்று அய்யாதுரை குழப்பமாக அவரை பார்க்க..
“இதுல குழம்புறதுக்கு ஒன்னும் இல்ல துரை.. உங்க மூன்று பிள்ளைகளுக்கும் ஏற்கனவே திருமண முடிந்தது..உங்களுக்கு தாத்தா பாக்கியம் தான் இனிமே இருக்குது.. “
“தாத்தாவா??”..பேரதிர்ச்சி
“ஆம், ஜாதகம் அப்படித்தான் சொல்லுது.. இதுவரைக்கும் என்னுடைய ஜாதகத்தில் எந்த தவறும் வந்தது கிடையாது.. அது உங்களுக்கே நல்லா தெரியும்.. நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் தனிப்பட்ட எண்ணம் பிடிங்கோ ஜாதகத்தை என்று அய்யாதுரை கையில் ஜாதகத்தை கொடுக்க.. மந்திரிச்சு விட்ட கோழி போல் எழும்பி தன் வீட்டிற்கு வந்தார்..தன் பாட்டி தாத்தா காலத்திலிருந்து வழிவழியாக வரும் ஜோதிடர் அவர்.. இதுவரை அவர் சொல்லியதற்கு மாற்றுக்கருத்தே இருந்தது கிடையாது .. எதுவும் மாறி நடந்தது கிடையாது முதல் முறை இப்படி திருமணம் ஆகாமல் இருக்கும் தன் மூன்று பிள்ளைகளுக்கும்.. திருமணம் ஆகிவிட்டது என்று சொல்வதை நம்பவா வேண்டாமா என்று குழம்பிப்போய் ஐய்யாதுரை வீட்டுக்குள் வந்தார்….
அகிலா ஐயா துரையை கண்டவுடன் ..கையில் நீர் சுண்போர்டு வந்து அவர் கையில் கொடுக்க அவர் சோர்வாக மர நாற்காலியில் அமர்ந்து அந்த நீரைக் குடித்தார் என்னங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க
“அது ஒன்னும் இல்ல அகிலா.. மூணு பேருக்கும் காலாகாலத்துல கால்கட்டு போடலாம்னு நினைச்சேன்..”
” கால்கட்டு தானே மாமா.,,ஷேமமா போட்டிருங்க..அப்பதான் வீட்டுக்குள்ள கிடக்கும் மூணும்.. இருங்க ஓடிப் போய் நல்லா கயிறா எடுத்துட்டு வரேன்…”
அ..கி..ல்…லா……
“இப்ப என்னத்துக்கு இப்படி பாசமா கொஞ்சிருங்க அத்தான்.. நீங்கதானே சொன்னீங்க கால கட்ட போறேன்னு, அதனாலதான் நல்ல கயிறா கொண்டு வரேன்னு சொன்னேன்.. நல்லது சொன்னாலும் திட்டத்தான் செய்றீங்க.. சரி சரி டென்ஷனா இருந்தீங்க அதான் விளையாண்டேன் என்ன விஷயம் அத்தான் ..”
“என்னத்த சொல்ல சொல்ற ஜோசியர் கிட்ட போயி இந்த மூணு மூதேவிகள் ஜாதகத்தையும் கொடுத்தா” .. என்று விஷயத்தை மூச்சு விடாது சொன்னார்..
“ஆஆஆ அப்ப சாமி சொன்னது போல கல்யாணம் பண்ணி இருப்பான்களா அத்தான்..”
“அந்த களவாணிப் பயலுக மட்டும் ஏதாவது ஒரு கள்ளத்தனம் பண்ணி இருக்காங்கன்னு தெரியட்டும்.. இந்த வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டேன் சொல்லிட்டேன்.. என்னைக்காவது கையும் காலுமா மாட்டுவான்க, அப்போ இருக்கு..ஆமா, உன் பொண்ணு உனக்கு போன் போட்டாளா,”
“ஆமா போய் சேர்ந்துட்டேன்னு அப்பவே போன் போட்டு சொல்லிட்டா. அதெல்லாம் என் வளர்ப்பு சரியா இருக்கும் மனசை போட்டு சங்கடப்படுத்திக்காம.. வேலைய போய் பாருங்க.. “
“அம்மா எங்க அகி?”.. பெயர் சுருக்கம் அவர் கண்ணின் தேடல், வெகு நாள் கழித்து கண்டு கொண்டவர் வெட்க புன்னைகையோடு..
“அத்த பக்கத்து வீட்டு பரிமளா கூட கதையளக்கிறாங்க அத்தான், ஏன் அத்தான்..”
“ஏன்னு உனக்கு தெரியாதா அகி??”…
“பசங்க வீட்டுல இல்லைன்னு தெரிஞ்சி போச்சி போல..”
“ஆமா வரும் போதே வீட்டுல அவன்க பைக் இல்லையே” என்று அகிலா முந்தானை சேலை பிடித்து தன் வியர்த்த முகம் துடைக்க அவரே அதனை வாங்கி அக்கறையாக துடைத்து விட ஆரம்பித்தார்..
வயதுகள் கடந்தாலும் கட்டுடல் குறையாது குமரியாக சுத்தும் அகிலா மீது ஐய்யாதுரைக்கு எப்போதும் ஈடுபாடு அதிகம்தான் … வளர்ந்த பிள்ளைகள் என மிகவும் கஷ்டப்பட்டுதான் தள்ளி கொள்வார்கள்.. எத்தனை வயது ஆனாலும் மனைவி மீது அதே காதலும் ,மோகமும் வரதான் செய்கிறது.. இன்று பிள்ளைகள் இல்லாத மதியவேளை.. வெகுநாள் கழித்து பண்டிகை போல் தெரிய.. தன் போனில் கம்பெனிக்கு போட்டு அவர்கள் வேலையை பிரித்து கொடுத்தவர் .. மாலை ஓய்வு எடுத்து விட்டு வருவதாக சொல்ல அகிலா முகம் செவ்வானம் பூசி கொண்டது… அறைக்குள் சென்று ஐய்யாதுரை காத்திருக்க அகிலா பின்புறம் சென்று வேகவேகமாக .. ஒரு குட்டி குளியல் போட்டு .. அவருக்கு பிடித்த சேலையை கட்டி கொண்டு.. தோட்டத்தில் பூத்திருந்த மல்லிகையை கொத்தாக பறித்து தன் தலையில் சூடி கொண்டார்..சுஜா பாட்டி மருமகள் முகம் கண்டு சிரித்து கொண்டவர்… கோவிலுக்கு போயிட்டு வந்த அல்லியை பிடித்து அவர்களுக்கு தொல்லை இல்லாமல் பக்கத்தில் பிடித்து வைத்து கொண்டார்…
உள்ளே போன அகிலாவை ஆசை தீர உணவாக்கி கொண்டு.. தன் கைகளில் அவர் தலைவை வைத்து படுத்து கண் அசந்தார்..
***************
சுஜா பாட்டி வாசலில் அல்லியை வெற்றிலை வாங்க கடைக்கு அனுப்பி விட்டு அமர்ந்திருக்க .. காவிசட்டை நெஞ்சு வரை தாடியும்.. மீசையுமாக ஒரு சாமியார் வந்து நின்றார்…
“என்ன சாமி பார்க்க புதுசா இருக்கீங்க எங்க இருந்து வந்திருக்கீங்க..”
“கைலாசா.!!.”
‘எங்கேயோ கேட்ட குரல் போல இருக்கே, அதுசரி.. என் டார்லிங் நித்யானந்தா நல்லா இருக்காரா.. அவர் கூட இருக்கிற பக்தைகள் எல்லாம் நல்லா இருக்காங்களா??” என்று கேட்க..
“நீ எப்படி இருக்க சுஜா டார்லிங்”..என்றதும் பாட்டி மயங்கி திண்ணையிலேயே விழுந்துவிட்டார்.. யாராக இருக்கும், வேற யாரு? ஓடிப்போன தாத்தாதான் .. இவர் தொல்லையில் ஓடிப்போன தாத்தா ஊரெல்லாம் சாமியாக சுற்றி.. இப்போதுதான் வீடு வந்து சேர்ந்திருக்கிறார் .. பல நாட்களுக்குப் பிறகு வீடு வந்திருக்கும் தாத்தாவை கண்டு, பாட்டி மயங்கி விழவில்லை.. ஐயோ மறுபடியும் சமையல் செய்யணுமோ என்று பயந்து விழுந்துவிட்டார் ..கண்டிப்பாக எலி மருந்துக்கு வேலை இருக்கிறது
ராணா மீனுவை கூட்டிக்கொண்டு தன் தோட்டத்தில் வீட்டிற்கு சென்றான்.. தோட்டத்து வீடு என்றதும் கேரளத்துப் பைங்கிளி, பலவிதமாக யோசித்து விட்டாள்.. ஆனால் அங்கு இருந்ததோ ஒரே ஒரு அறை அதுவும் கரும்பு தோட்டத்திற்கு உள்ளே.. ஒரு சிறியபுற்று போல் இருந்தது.. அதாவது நீட்டாக இருந்ததா.. அதுவும் இல்லை.. உள்ளே கரும்பு கட்டுகட்டாக அடுக்கி வைத்திருந்தனர்.. ஒரு சின்ன கயிற்றுக் கட்டில் ..விறகு அடுப்பு .. இவ்வளவுதான் இதைத்தான் அவன் பத்மநாதபுரம் அரண்மனை போல் பேசி விட்டான்.. அதையும் நம்பி இந்த சண்டாள சிறுக்கி கிளம்பி வந்துவிட்டாள்.. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அந்த வீட்டை பார்த்துக் கொண்டே நின்றாள்.. அவளுடைய பார்வையின் அர்த்தம் புரிந்தவன்.. மீனுவை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டவன்..
“இப்போதைக்கு இந்த வீட்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் .. என் நண்பன் கிட்ட வேற வீடு பார்க்க சொல்லி இருக்கேன்.. நல்ல வீடு கிடைச்சதும் நாம அங்க போகலாம் .. அது வரைக்கும் உன்ன பிரிஞ்சி இருக்க முடியாம தான் இந்த வீட்டை ரெடி பண்ணுனேன்.. எங்க ஆலைக்கு போகக்கூடிய கரும்பு வைக்கிற தோட்டத்து வீடு யாரும் வர மாட்டாங்க .. அப்படியே வருவதாக இருந்தாலும் என்கிட்ட சொல்லாம கொள்ளாம இங்க இதுவரைக்கும் யாரும் வந்தது இல்லை .. உனக்கும் பாதுகாப்பு .. என்மேல ஏதாவது வருத்தமா மீனு??” என்றதும்
“சேச்சே அப்படியெல்லாம் இல்ல மாமா.. நீங்க இருக்கிற இடம் குடுசையா இருந்தால்கூட .. அது எனக்கு கோபுரமாதான் தெரியும்.. இவ்வளவு அழகா இருக்கே.. எப்படி சுத்தம் செய்யப் போறேன்னு மலைப்பா இருந்தது.. வேறு எதுவும் இல்லை..அதோட எனக்கு உங்களட இருக்கிறதே பார்க்கிலும் என்ன சந்தோஷம் கிட்ட போகுது”..என்று கள்ளமில்லா சிரிப்பை உதிர்த்தாள்..
மீனு இடுப்பில் சேலையை சொருகி கொண்டு வீட்டை சுத்தம் செய்ய குனிய.. குலுங்கிய தென்னம் குரும்பல்கள் ராணாவின் கண்களுக்கு புது புத்துணர்வை மூட்ட..
ஏற்கனவே சிங்கிள் பொண்ணுக்கு வழியில்லாமல் அலைந்தவன்.. கைநிறைய திரண்டு உருண்ட வெண்ணை சிலையை கொடுத்து குடும்பம் நடத்த சொன்னால் சுத்தம் செய்யவா மனம் வரும் அவளை சத்தமாக சுத்தம் செய்ய நினைத்து அவளருகில் அடி எடுத்து அவள் பக்கத்தில் வந்தவன்.. குனிந்து பெருக்க தயாரான மீனுவை.. தன்முன் முன்பகுதி படரும் மாதிரி முதுகில் இறுக்கி அணைத்து தூக்கி கொள்ள.. சிணுங்கி மீனு அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள அவளை தூக்கிக் கொண்டு.. கயிற்று கட்டிலை நோக்கி சென்றான்.. கட்டிலில் அவளை போட்டுவிட்டு அவள் அருகில் ஒருக்களித்து படுத்தவன்…
அவள் தலையில் கைகொடுத்து தன்னை உதட்டை நோக்கி இழுத்து கருத்த உதட்டில் அவள் இலந்தை உதட்டை சப்பி இழுத்து சுவைக்க ஆரம்பிக்க.. அறையில் வெட்கை, உடலில் வேட்கை இரண்டும் சேர்ந்து புழுங்கி வடிந்தனர்.. ஆனால் விலக மனம் வரவில்லை போலும்.. அவள் சந்தன நிற சேலையில் அரக்கு நிற சட்டை எடுப்பாக.. அவள் கனியமுதை காட்டி கொடுக்க.. சேலையை ஓரம் தள்ளி சோளியின் கொக்கி கழட்டி முயல் குட்டிகள் இரண்டையும் ஓடவிட்டு ரசித்தவன்.. கண்மூடி அவன் தொடுகையை ரசித்து கிடந்த இல்லாள் மீது இதுவரை இல்லாத ஆசைகள் ஆடை கிழித்து கொண்டு வர… குதித்து ஓடிய முயல் குட்டிகளில் ஒற்றை வாயில் தள்ளி.. அதன் கருமிளகை வாயில் வைத்து சப்பி சப்பி சுவைக்க ஆரம்பித்தவன்.. வாகாக அவள் மீது தன் கால்களை போட்டு கொண்டு இன்னொரு முயல்குட்டியின் கண்களை விரல் இடுக்கில் வைத்து கீறி ,மேலே எழும்பி விட.அவனுக்கு கீழே ஒன்று எழும்பி நின்று கதக் ஆடியது.. வியர்வை புழுக்கம் ஒருபுறம் தூசி ஒருபுறம் என அவஸ்தையில் மீனு கசகசப்பாக இருப்பதை உணர்ந்து நல்லெண்ணம் மட்டும்தான்.. அவளை லேகுவாக்க அத்தனை ஆடையையும் கழட்டி தூசி ..குவிந்து கிடந்த இடத்தில் போட்டவன்.. எழும்பி நின்று அவசரமாக .. தன் ஆடையை அவுக்க ஆரம்பித்தான் .. கண்கள் கட்டிலில் சுருங்கி உடல் முழுவதும் ஆடவன் முன் கைமட்டும் மறைக்க அதுவும் மொத்தத்தையும் அவனுக்கு காட்சி பொருளாக்க ..ஓரக்கண்ணால் மீனு ராணாவை பார்த்தாள்.. கருத்த தன் உடலை காட்டியபடி அதில் தங்க செயின் என்று கண்கொள்ளா அழகில் ,அவள் புருஷன் அவளுக்கு தெரிந்தான்.. ஆயிரம் சொன்னாலும் அவன் அழகு கிரேக்க சிற்பம்தான் என்று மெச்சி கொண்டவள்.. அவனுக்கு முன்னால் அவளை வேட்டையாட ஆட வந்த ஈட்டி கண்டு கண்களை இறுக பொத்தி கொண்டாள்..
ராணாவின் வெற்று உடல் தன் மேல் படர்வதை உணர்ந்து தானாக கைகொண்டு அவனை அணைத்து கொள்ள .. பெருவெளி வெள்ளம் இருவருக்கும்.. வெள்ளை புஷ்பம் என அவள் அவள் மீது இவன் … லாவண்டர் நிறத்தில் அவள் ஒற்றை ரூபாய் நாணயத்தை சுற்றி வட்டமிட்டு கோலம் வரைந்தவன்.. அவள் கொலுசுகள் சிணுங்க.. துடித்து அடங்குவதில்..அடங்காத வேல் அவள் தொடையில் இடித்து.. குழி உண்டாக்க..தன் தேடல் எதுவென அறிந்து ,அவள் கால் பக்கம் சென்று குனிந்து தன்னை வரவேற்க தயாராக .. பூத்து கிடக்கும் ரசமேடையில் இச்இச் முத்தம் மீசை உரச வைத்து எழும்பியவன்.. தன் எழுதும் கருப்பு கரிக்கோலை, திறக்கப்படாத பூட்டில் சாவியை போட்டு வன்மையும் ,மென்மையும் கலந்து திறக்க ஆர்ம்பித்தான் ..
மனைவி வலியில் முகம் சுளிக்க மேலே வந்து உதட்டோடு உதடு கவ்வி கொண்டு.. கீழே நிலத்தில் உழ ஆரம்பித்து விட்டான்..அவள் கண்கள் கிறங்கி கணவன் ஒவ்வொரு அசைவுக்கும்.. விதவிதமாக ஒலி எழுப்ப.. அது அனைத்தும் பாராட்டு பத்திரமாக அவனுக்கு தெரிய.. இன்னும் வேகம் கூட்டிட ..பழைய கறையான் ஏறிய கட்டில் படீரென முறிந்து விழுந்தது..
வேலை பாதியில் நிற்க.. எழும்பும் மனமின்றி அவளை தரையில் புழுதி காட்டில் தூக்கி போட்டு.. சின்ன சிரிப்போடு மீண்டும் அவளுள் சேர்ந்து அசைந்து..தன் தீராத ஆசையை அவளிடம் தீர்த்து அண்ணாந்து படுத்தான் .. அவள் விலகி போகாமல் தன் மீது போட்டு கொண்டவன்.. அமைதியாக அவள் உடலை வருடி விட்டான்.. ஆண்களில் நன்றியுணர்வு பல சமயம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஊமையாகதான் இருக்கும்.. புரிந்தவள் அவனை ஆள்வாள் புரியாதவள் புலம்பி வழிவாள்….
மோகன், தன் மகளுக்கு கோடிஸ்வர மாப்பிள்ளையாக பார்த்து பெண் பார்க்க அவர்கள் குடும்பத்தையும் அழைத்து கொண்டு கோட்டை பாளையம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்..
அவர் பெண்ணுக்கு மாப்பிளை பார்க்கலாம் … ஆதி மனைவிக்கு பார்க்க முடியுமா?
