மனதில் பட்டது – 2
நேற்று vijay super சேனல் கைங்கர்யத்தில் மந்திரப் புன்னகை திரைப்படம் பாதியில் இருந்து பார்த்தேன்.
மன சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவனின் கதை. மிக நேர்த்தியான திரைக்கதை அருமையான ஒளிப்பதிவு. கூர்மையான வசனங்கள்.
நாயகன் ஐந்து வயதில் இருக்கும் பொழுது அவனுடைய தாயார் அவனுடைய தகப்பனார்க்கு துரோகம் செய்து விட்டு வேறு ஒருவருடன் உறவு கொள்கிறாள். அவனுடைய தகப்பனார் இதனை அறிந்து மனமுடைந்து
