மகரந்தகாட்டின் தேன்துளி-22

தேன்துளி-22

உண்மையில் இளமை வேகத்தில் கோபத்தில்தான் அனலரசு அப்படி செய்தான்.யாரிடமும் இதுவரைக்கும் யார் முன்பும் எதற்கும் தலைகுனியாதவன் முதன்முறையாக பஞ்சாயத்தில் வைத்து எல்லார்முன்பும் நிற்பது கேவலமாக இருந்தது.அதுதான் எனக்கு அவளைப் பிடித்திருக்கின்றது  அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கின்றது.அவளைப் பார்க்க வந்தேன் இதிலென்ன தப்பு என்று கோபம் வந்தது.

அதனால்தான் அவள் மீது உள்ள தன் நேசத்தை வேகமாக அவளது பிஞ்சு உதட்டில் காண்பித்துக்கொண்டிருந்தான்.

அவ்வளவுதான் ஜெகநாதான் ஓடிச்சென்று அவனைப் பிடித்து இழுத்தார்.முடியவில்லை அதற்குள் ராமலிங்கம் ஓடிவந்து தனது மகளை பிடித்து இழுத்து வேகமாக அனலரசுவின் கன்னத்தில் ஒன்றுவிட்டார்.

அதை எதிர்பார்க்காதவன் தனது கன்னத்தில் கைவைத்தவாறே நான் உன் மகளைத்தான் விரும்புகிறேன்.அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று வீராப்பாக நின்றான்.உண்மையில் எந்த இளவட்டமும் இப்படி தெனாவெட்டாக நின்றதில்லை என்பதால் அங்கிருந்தவர்கள் கொஞ்சம் அசந்துதான் போனார்கள்.

முதன்முதலாக குமுதா பயந்து நடுங்கியவாறு அவங்கப்பாவின் கைப்பிடியில் நின்றிருந்தாள்.அவன் இழுத்து வைத்து முத்தம் கொடுப்பான் என்று கனவில்கூட நினைக்கவில்லை.அதுவும் தன்னைத் தேடி இப்படி வீட்டு ஓட்டினைப் பிரித்து வந்ததே ஆச்சர்யமும் அதிர்ச்சியும் என்றால் இப்படி முத்தம் கொடுத்ததும் பயந்து பதறியவள் அதன்பின் அவனது முகத்தைப் பார்க்கவே பயந்தாள்.

உடனே பஞ்சாயத்து தலைவர் என்னப்பா இப்படி நடந்துக்குற.பொம்பளபுள்ள விவகாரம்.உன் இஷ்டத்துக்கு இப்படி வீடு ஏறிகுதித்திருக்க.நாலுபேரு முன்பு முத்தம் கொடுக்குற,ஏய் என்னப்பா நினைச்சிட்டிருக்க.”

அதற்கு அவனோ ஒன்னும் நினைக்கவில்லை.அவளைத்தான் என் வாழ்க்கைத் துணையாக நினைத்திருக்கேன்.எத்தனை வருடமானாலும் அவளைதான் கல்யாணம் செய்வேன்”

இதென்னெப்பா பேசுற பார்த்தால் பதிணெட்டு வயசுதான் இருக்கும்போல,அந்தபிள்ளைக்குவேற வயசு குறைவு.இந்த வயசுல வர்றக்கோளாறு.சின்னபுள்ளைங்களாக இருக்கப்போய் உங்களை பஞ்சாயத்துல வைத்து வேறெதுவும் விசாரிக்காமல் இரண்டுபேரும் இந்த ஊருக்குள்ள வர்றதுக்கு தடைபோடுறோம்.ஒதுக்கி வைக்கிறோம்”

“ஹலோ பெர்சு உங்களுக்கெல்லாம் எத்தனை வயசுல கல்யாணம் ஆச்சுது?

“இதென்னப்பா கேள்வி எங்களுக்கெல்லாம் பதினாறோ பதினேழுலயோ நடந்துச்சு.ரொம்பனா இருபது வயசுல செய்துகொண்டோம்”

“பதினாறு வயசுல கல்யாணம் பண்ணினா உங்க பொண்டாட்டிக்கு எத்தனை வயசிருக்கும்”

ஆஹா பயபுள்ளை நமக்கே தண்ணிக்காட்டுற மாதிரி கேள்விகேட்குறானே!என்று யோசித்தவர்கள் அதெப்படிப்பா நாங்கெல்லாம் வீட்டுப்பொரியவங்க கட்டிவச்சாங்கன்னு தலையாட்டினோம்பா.ஆனால் நீ செய்தது வேண்டாதவேலையப்பா!!அதுக்காகவெல்லம் நீ செய்தது சரியென்றாகது.”

அதெல்லாம் முடியாது அவளுக்கு என்மேல் விருப்பமிருந்தால் எனக்கு இருபத்தெயோரு வயசும் அவளுக்கு பதிணெட்டு வயசும் வந்தால் கட்டி வைப்பீங்களா?”

அதைக்கேட்டு ராமலிங்கம் “அதெல்லாம் கட்டிக்கொடுக்கமாட்டோம்.சின்னபுள்ளைங்க அவ.நல்ல வசதியான வீட்டுப்பிள்ளையா பார்த்து இப்படி ஏதாவது சொல்லி மயக்கிறது.அப்புறம் பணம்பறிக்க கல்யாணம் நாடகம் ஏதாவது போட்டு பணம் பறிக்குறது.இவனுங்க வேலையே இதுதான் போல.அடிச்சு விரட்டுங்க,இவனுங்களையெல்லாம் சும்மாவிடக்கூடாது”என்று திட்டிக்கொண்டிருந்தார்.

அதேநேரம் சரஸ்வதியும் லெட்சுமியும் கூடவே அன்பும் விசயம் தெரிந்து ஓடிவந்து பஞ்சாயத்து நடுவில் நின்றிருந்த அனலரசுவிடம் ஓடிப்போய் ” எதுக்குய்யா என் பிள்ளையை இப்படி நிற்க வச்சிருக்கீங்க?”

அவ்வளவுதான் ஏற்கனவே கோபத்தில் இருந்த லிங்கம் பிரதர்ஸ் மொத்தமாக சரஸ்வதி மற்றும் ஜெகநாதனின் அருகில் வந்து பொறுக்கித்தனம் செய்கின்ற பிள்ளையை பெத்து வச்சி ஊர் மேயவிட்டுட்டு இப்போ வந்து ஒன்னுந்தெரியாதபோல வந்து கேட்கிறதை பாரு”

அதைக்கேட்ட சரஸ்வதியும் லெட்சுமியும் யாரைப்பார்த்து என்ன சொல்ற?எங்க பையன் பொறுக்கியா?அப்படி சொல்ற நாக்கை இழுத்து வச்சு அறுத்திடூவோம்.என் பையன் சொக்கதங்கம்யா”

ஆமா ஆமா அந்த சொக்கத்தங்கம்தான் இப்போ எங்க வீட்டு ஓட்டைப்பிரித்து என் மகள் ரூமுக்குள்ள இறங்கி தப்பா நடக்க முயற்சித்தான்.

“என்னது என் பிள்ளையா?அவன் அப்படியெல்லாம் பண்ற ஆளில்லை”

“அதை உன் மகனிடமே கேளு அப்போது தெரியும்”

சரஸ்வதி அவனை கூர்மையாகப் பார்க்க ம்மா  குமுதாவும் நானும் ஆறுமாசமாக ஒன்னா பழகுறோம்.அவள் சின்ன பொண்ணுதான் ஆனால் நாங்க வளர்ந்த மிறகு நல்ல படிச்சு ஒரு நிலைக்கு வந்தபிறகு கல்யாணம் பண்ணிப்போம்”

“ஆமா இவரு பெரிய இவரு என் பொண்ணையெல்லாம் உன்னை மாதிரி ஆளுக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேன்.அதேமாதிரி என் மகளும் உன்னை கட்டிக்கமாட்டாள்”

அதற்குள்ளாகவே குமுதாவை அவங்கம்மா கன்னம் கன்னமாக அறைந்திருந்தார்.இப்பவே உடம்பு சுகம் கேட்குதோ அவனை வீட்டுக்கெல்லாம் கூப்பிடுறளவுக்கு உடம்பு இந்த வயசுலயே தெனவெடுத்து அலையுது என்று இன்னும் நிறைய கேட்டார்.அதிவ் கூசிக்குறுகியவளுக்கு யாரையும் பார்க்கும் எண்ணம் வரவில்லை.எல்லோரும் அவளையே பார்த்து சிரிப்பதுபோன்று இருந்தது.

இப்போது இரு குடும்பத்தாரும் சண்டையிட்டுக்கொள்ள பஞ்சாயத்தார் விலக்கிவிட அதற்குள் குமுதா ஓடிப்போய் பஞ்சாயத்து கிணற்றில் போய் விழுந்துவிட்டாள்.

அவ்வளவுதான் அவள் பின்னாகவே ஓடிப்போய் கிணற்றில் அனலரசுவும் விழுந்து அவளது முடியை பிடித்துக்கொண்டான்.

ஒருவழியாக இருவரையும் தூக்கி மீட்டு மீண்டும் பஞ்சாயத்தில் நிறுத்த யாரும் பேசுவதற்கு முன்பாகவே குமுதாவே இவனை எனக்கு பிடிக்காது.இவன் யாரென்றே  எனக்குத் தெரியாது.என் வாழ்க்கையில் இப்படி ஒருத்தன் இல்லவே இல்லை.இப்போது மட்டுமில்லை என் எதிர்காலத்திலும் இவன் என் வாழ்க்கையில் வரமாட்டான் வரவும் முடியாது.இது என்மேல் சத்தியம்”என்றவள் வீடுநோக்கி யாரையும்  பார்க்காது வந்துவிட்டாள்.

அவ்வளவுதான் உடனே பஞ்சாத்தார் பத்துவருஷம் அந்த ஊரருக்குள் வருவதற்கு தடையும்.குமுதாவிற்கு ஐந்து வருடங்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர்.

அன்றிலிருந்து கிட்டதட்ட டிகிரி முடிக்கும் வரைக்கும் குமுதா தேனியில் உள்ள அவளது தாய்மாமா வீட்டில் நின்றுதான் படித்தாள்.

எப்போதும் எங்கே சென்றாலும் அவளை பற்றிய பேச்சுக்கள் இதுவாகத்தான் இருக்கும்.

அதைக்கேட்டுக் கேட்டு ஆள்மனதில் அனலரசுவை வெறுப்பாள்.ஆனால் அவனைக்கண்டாள் தானாக நேசிப்பாள்.

இருவரும் ஒரே ஊரில் படித்ததால் அடிக்கடி பார்த்தாலும் பார்வை பரிமாற்றத்தோடு நின்றுவிடும்.அதற்குபின்னான நாட்களில் குமுதாவின் பெற்றோர்கள் அவளிடம் சத்தியமே வாங்கிருந்தனர் அனலரசுவினை மறந்துவிடவேண்டும் அவன் இனி உன் வாழ்க்கையில் வரவேக்கூடாது அப்பா பார்க்கின்ற பையனைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

ஒவ்வொருநாளும் அவனை எவ்வளவுக்கெவ்வளவு வெறுத்தாளோ அவ்வளவுக்கவ்வளவு விரும்பினாள்.அதுதான் குமுதாவின் குணம்.

ஒருநாள் இப்படித்தான் வெகு நாட்களுக்குப் பின் அவன் தன் படிப்பை முடித்து வேலைக்குச் சேர்ந்ததற்கும் தனது பிறந்தநாளுக்காகவும் பிரண்ட்ஸுக்கு ட்ரீட் வைக்க ஹோட்டல் வந்தவன் அங்கிருந்து குமுதாவினை பார்த்துவிட்டு அருகில் செல்ல அவனைப் பார்த்து முறைத்தவள்.

அவன் வேண்டுமென்றே அவளருகில் வந்து பெர்த்டே விஷ் பண்ணுடா கும்ஸ் என்னயிருந்தாலும் நீதான் என் வருங்காலம் சோ ஒரு முத்தம் கொடுத்து விஷ் பண்ணுடி”என்று தனது கன்னத்தை காட்டினான்.

அவளோ அவனது கன்னத்தை பதம்பார்த்தாள் உதட்டால் இல்லை கையால்.அந்தக்கையைப் பிடித்து உள்ளங்கையில் முத்தம் வைத்தவன் தேங்கஸ்டி ராசாக்கிளி என்று தன்னிடத்தில் போய் அமர்ந்தான்.

அதில் கோபம் கொப்பளிக்க அவனருகில் சென்றவள் அவன் முன்பிருந்த கேக்கினை எடுத்து அவன் முகத்திலே பூசினாள்.அவ்வளவுதான் எழுந்தவன் அவளை இழுத்து வைத்து தன் முகத்தை அவளது முகத்தோடு தேய்த்தான்.அவளது முகம் முழுவதும் இப்போது கேக் ஒட்டிக்கொண்டது.

அதைப் பார்த்திருந்தவன் அவளது கன்னத்தில் ஒட்டியிருந்த கேக்கினை சட்டென்று தனது வாயைத் திறந்து கடித்து சுவைத்தான்.அதை எதிர்பார்க்காதவளோ அவனைத் தள்ளிவிட்டு இந்த உலகத்திலே உன்னைத்தான் அதிகாமாக வெறுக்கிறேன்.உன்னைத்தவிர எங்கப்பா யாரை கைகாட்டினாலும் கட்டிக்கொள்வேன்.உன் வாழ்க்கையில் நான் வராவேமாட்டேன்”என்றுவிட்டு சென்றுவிட வெளியே அவளை பார்க்க வந்த ராமலிங்கம் அதைக்கேட்டு சந்தோஷமடைந்தார்.

இத்தனை வருடம் யாருமே அவளை நம்பாது இருக்கு,இந்த வார்த்தையைக்கேட்டுத்தான் மகளே நம்பினார்.ஆனால் வீடு சென்ற குமுதாவால் அனலரசுவினை மறக்கவியலாது தடுமாறினாள்,எப்போதும் அவன் ஞாபகம் வந்துகொண்டே இருக்கும்.

ஒரு நாள் அவளது நம்பரை கண்டுபிடித்து அதற்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்ப அதைகண்டுகொண்டவள் வேறு நம்பரை மாற்றிக்கொண்டாள்,ஆனால் சரியாக அடுத்தவருடம் அவனது போனிற்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினாள்.

அனலரசுவிற்கு அவளை இப்போது புரிய ஆரம்பித்தது,வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் என் காதல் அவளிடம் ஊசலாடுகிறது என்று  தெரிந்து புரிந்து அவளை இன்னும் நேசிக்க ஆரம்பித்தான்.

இந்த பத்தாண்டுகளில் இதேதான் நடக்கின்றது எத்தனை வருடமானாலும் அவள் அவனுக்கு வாழ்த்து சொல்லுவதை மறக்கவேயில்லை.இன்றும் சொல்லிவிட்டு அழுதுகொண்டிருக்கிறாள்.

அதுகேட்டுக்கொண்டிருந்தவளுக்கு குமுதாவை சப்பு சப்பென்று அறையணும் போல இருந்தது.ஆனால் முடியாது தனது தலையில் அடித்துக்கொண்டவள்”அந்த மனுஷன் உன்னை அப்பவே உயிருக்கு உயிராக காதலித்து அவரே ஸ்டெப் எடுத்து உன் வீட்டுக்குள்ள புகுந்து கல்யாணம் பண்ணி செம்மையா வாழ்றதுக்கு பார்த்தால் நீ ஓடிவந்திருக்க.அவருனாலதான் உன்னை இப்படி வச்சிட்டிருக்காரு நானா இருந்தா தூக்கிட்டுபோய் கன்னத்துல நாலு அறைவிட்டு டெய்லி ரொமான்ஸ் பண்ணி வாழ்ந்த்திட்டிருப்பேன்”

“என்னடி இப்படி பேசுற.நான் எவ்வளவு பீல் பண்ணிட்டிருக்கேன் நீ என்னடான்னா அந்த கருவாயனுக்கே சப்போர்ட் பண்ற”

“பின்ன உன்னைக் கொஞ்சுவாங்களாக்கும் லுசி”

“நான் லூசியா”

“ஆமா நீ லூசிதான்.அண்ணன் உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க.உன்னை அவர் எல்லாயிடத்திலும் கவனிச்சிருக்காரு நீதான் அவரை கவனிக்கலை”

“இல்லை நானும் கவனிச்சிருக்கேன்.ஆனால் அவனிடம் காண்பிச்சதில்லை”

“அதுக்குப்பிறகு அவரிடம் நீ பேசவேயில்லையா?”

“பேசிருக்கேன் வசுந்தராவே அன்பு அத்தான் காதலிக்கும் போது ஒருநாள் அவங்க மீட் பண்ணினதை பார்த்து அவனிடம் போய் சண்டைபோட்டேன்”

“ஓஹோ அப்பவும்சண்டைதான் போட்டிருக்க”

“இல்லை”

“அவன் ரோமான்ஸ்பண்ணினான்”என்று வெட்கப்பட்டவளைப் பார்த்து,இதுக்கொன்னும் பிரச்சனையில்லை மேலசொல்லுமா தாயே!

ஒருநாள் அன்பவும் வசுந்தராவும் தனியாக மீட் பண்ணப்போயிட்டாங்காளா,இவன் தனியா வந்தான் வழி மறைச்சு கேட்டேன்.

“ம்ம்ம் அப்புறம்” 

அது….அது நீதான் காதல் வேண்டம்னு சொல்லிட்ட அவங்களாவது காதலித்து நல்லாயிருக்கட்டும்னு சொன்னானா??

“ம்ம் அதுக்கு”

“நீ என்ன மாமாவேலையா பாண்றன்னு கோபத்தில் பேசிட்டனா! அவன் என்னைஅறைஞ்சிட்டான்”

“ஐயோ அப்புறம் என்னாச்சு” 

“அப்புறம் என்னாச்சு”

அவன் மேலயே வலிதாங்காது விழுந்தனா அப்புறம் கன்னத்தை தடவிட்டு கண்கலங்கிட்டான்.அவனை பார்க்க பாவமா இருந்துச்சா கண்ணை துடைச்சு விட்டனா அதுக்கும் செமையா உதட்டுல கிஸ் பண்ணிட்டான்…

அடேய்களா கிடைக்குற கேப்ல எல்லாம் கிடா வெட்டிட்டு காதல் இல்லைன்னு நடிக்கறீங்க பாருங்க…,ஐயா சாமிங்களா என்னை விட்றுங்க என்று வள்ளி அலறி ஓட்டம் எடுக்காத குறையாக உட்கார்ந்திருந்தாள்.

இப்போது உண்மையாகவே ஏங்கி ஏங்கி அழுது அனலரசுவின் மேலுள்ள ஏக்கத்தை வெளிப்படுத்தினாள்.அடுத்த ஐந்தாவது நிமிடமே வள்ளியின் போனிற்கு அனலரசு அழைத்தான்.

வள்ளி எடுத்து காதில் வைக்கவும்”அந்த குந்தானியை பேக் எடுத்துட்டு வெளிய வரச்சொல்லு நான் வெளியேதான் நிக்குறேன்”என்றான்.

அதைக்கேட்ட வள்ளி இதுகதான் லூசுங்கன்னா நம்மளையும் லுசுன்னு நினைச்சுட்டுதுங்க போல என்ற புலம்பியவள்”எம்மா குந்தானி உன் கருவாயன் வெளிய நிக்குறாராம் பேக் எடுத்துட்டு போவியாம்”

“ம்ம்ஹூம் போகமாட்டேன்”

அடுத்த அழைப்பு வரவும் எடுத்து ஸ்பீக்கர்ல போட்டாள்”நீயா வர்றியா குந்தானி இல்லை நான் வந்து துக்கிட்டு வரவா?”

“வரமுடியாது போடா டேய்”என்று சொல்லி முடிக்கும்போது அவள் முன்பு பிரசன்னமானவன் அப்படியே அவளை தூக்கிகொண்டு வெளியே சென்றவனிடம்”ஏன் என்னை பார்க்க வர்றதுக்கு உனக்கு இரண்டுமாசமாச்சுதா.ஏன் அங்க வேற எவளையாவது ரூட் போட்டுட்டியா”

ஆமா தெற்குத்தெரு இருளாயி பேத்தி மலரு இருக்காளா அவளைத்தான் ரூட் விடுறேன் அடுத்து ஓடு பிரிச்சு உள்ள போகவண்டியதுதான் பாக்கி”

அவ்வளவுதான் அவன் மண்டையில் நறுக்கென்று கொட்டியவளின் கன்னத்தை பன்னு என்று நினைத்து கடித்து சுவைத்தவாறே அவளை தனது வண்டியில் அமரவைத்தான்.இருவரும் கிளம்பி சென்றபின்னர் வள்ளிதான் ஆமா இவ எதுக்கு இங்க வந்தாள்இப்போது எதுக்கு போகிறாள் அட கிறுக்குங்களா!காதல் முத்திப்போனா இப்படியெல்லாமா பண்ணுவாங்க”

ஐயோ இதுகளை பெத்தவிங்க மட்டும் என் கையில கிடச்சாங்க நல்ல நாலுவார்த்தை கேட்கணும் என்று உள்ளே சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *