பொன் அந்தி சாயல் நீ 1

This entry is part 4 of 22 in the series பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ 1

பொன் அந்தி சாயல் நீ-1

பொன் அந்தி சாயல் நீ-1

3 & 4 பொன் அந்தி சாயல் நீ

3 & 4 பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ 6 &7

பொன் அந்தி சாயல் நீ 6 &7

10 & 11 பொன் அந்தி சாயல் நீ

10 & 11 பொன் அந்தி சாயல் நீ

12 / 13 பொன் அந்தி சாயல் நீ

12 / 13 பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ

பொன் அந்தி சாயல் நீ 1

சாயல் 1.

அழகான இளம் மாலை பொழுது…..!

அந்தி வான கதிரவன் தன் கதிர்களை பொன் நிறத்தில் ஊரெங்கும் பாய்ச்ச…. வாயல்களில் அசைந்தாடும் நெல்மணிகளும் அந்த தங்க நிறம் பூசி இங்குமங்கும் அசைந்து முன்னும் பின்னும் பூமிக்கு முத்தமிட்டு திரும்ப….

கண்மாய் தண்ணீர் சல சல சத்தத்தோடு பாய்ந்து ஓட… இறை தேடும் சிறுகுருவிகள்… குயில்களின் கானம் இசைக்க….

மன்வாச காற்று வீசும்… வயல்களில் மாடுகள் உழுது களைத்து கரையேறும் நேரம்….

தாவணி பெண்கள் கூட்டம் ஒன்று சலசலத்தபடி வயல் வரப்புகளில் கை கோர்த்து கேலி பேசியபடி கால்கொழுசு ஒலி சரசரக்க வந்து கொண்டிருக்க..

.கண்மாய் மதகு கட்டைகளில் உட்கார்ந்தபடி வயல்களில் அழகையும் அங்கு நடமாடும் இளம் பெண்களின் அழகையும் சேர்த்து ரசித்தபடி தங்களுக்குள் சலசலத்தது ஒரு கட்டிலங்காலையர் கூட்டம்…!

வரப்பில் வலம் வந்த பெண்கள் கூட்டத்தில் வந்த பெண்களில் பதினெட்டை ஒத்த வயதுடைய தோழியர் நிரம்பி இருக்க… அதில் ஒருத்தி

“அடியே பொன்னு.. உனக்குத்தான் இன்னும் பதினஞ்சு நாளில் கல்யாணமாச்சே.. நீ என்ன டி எங்க கூட காடு கழனின்னு சுத்திக்கிட்டு இருக்கவ…. ”

“கல்யாண பொண்ணு உன்னைய காத்து கருப்பு எதுவும் அண்டிருமில்லை … ஐத்தைக்கு தான் கூறில்ல… அந்த தண்டட்டி போட்ட வம்புனி கெளவி…. உன் அப்பாயி கூடவா சொல்லலை??”

“உன்ற அம்மை உன்னை இப்போ எப்படி வெளில விட்டாவ??”

அந்த பொன்னு ஆனவளோ… தோழி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்.. கேள்வி கேட்டவளை முறைத்து பார்த்து கொண்டிருக்க.. இந்த முறைப்புகளுக்கு அஞ்சாத அந்த வாயாடி தோழி பெண்ணோ…

“உன்ற அம்மை கிட்ட சொல்லிட்டு வந்தியா இல்லை.. உன்ற மாமன் ஆறுகம்மாய் பக்கம் வாரேன்… நீயும் வாரும்னு சொன்னதுக்காக பின்கட்டு பக்கமா மரஞ்சி வந்துடியா டி??”

வம்பலந்து கொண்டே போக…பொன்னு இன்னும் பத்ரகாளி அவதாரம் எடுத்து…தன் இடுப்பில் கை கொடுத்து முறைத்து… மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி தீவிரமாக தோழியை பொசுக்கி கொண்டிருந்தாள்..

அதற்கும் அஞ்சாமல்.. “பொன்னு… எப்புள்ள.. உன்னைய இம்புட்டு கேள்வி கேக்கனே… எதுனா பதில் பேசுறாளா பாருங்கடி… மாமனை நெனச்சு நெனச்சு மனசு பொரண்டு கேடாகுரவ டி இவ… ”

தோழியர் கூட்டம் அவள் கோபத்தை தூசு போல தட்டி.. கலகலப்பாக சிரித்து… வயல் வரப்புகளில் சூதானமாக நடந்து சென்று கொண்டிருக்க…

பொன்னு தன் கோபத்தை கைவிடாமல்.. “என்னைய பொன்னு பொன்னு ன்னு கூப்பிடாதீயன்னு எம்புட்டு தரவு சொல்லிட்டு இருக்குதேன்… எனக்கு எம்புட்டு அழகா மதுர யாழினி ன்னு பேர் வெச்சுருக்காவ…. அப்படி அழகா கூப்புடாம… ஏண்டி என்னைய ஆத்திரப்படுத்துரிய…

எனக்கு பொன்னுன்னு பேர் சொல்லி கூப்பிட்டா கோவம் பலியா வருமின்னு தெரியுமில்லே… பொறவு என்கிட்ட நித்தமும் வம்பலக்குறீய…”

தன் கொஞ்சும் குரலும் கோபமும் சேர்ந்து அந்த கல்யாண பெண் தன் தோழிகளை கடிய…

இவ்வளவு நடந்து கொண்டிருக்கிற வேலை…
கூட்டத்தில் பின்தங்கி மெல்ல தன் வேகத்தை குறைத்தாள் பதினாறு வயதை ஒத்த குழந்தை குண குமரி ஒருத்தி…

காலில் முள் குத்தியது போல கீழே குத்துக்காலிட்டு அமர்ந்து காலை பிடித்த வண்ணம் அந்த வரப்பில் அமர்ந்தாள் அவள்…

முள் இல்லா காலை ஆராய்ந்து கொண்டிருந்தவளின் கோலிக்குண்டு கண்கள் திரு திரு பார்வையோடு… கண்மாய் கட்டையில் ஆறடி உயரத்தில் கருப்பு நிறத்தில் அம்சமாய் கிராமத்து காவல் தெய்வம் கருப்பு வீரன் சிலை போல…

தன் வெள்ளை முத்து பற்கள் தெரிய.. கலகல பேச்சோடு நண்பர்கள் சூழ அமர்ந்திருந்த அவனின் மீது…. அந்த அவன் செழியன்.

வெள்ளை வேஷ்டியும் கத்தரிப்பூ வண்ண மேல்சட்டையோடு கம்பீர களையோடு கிராமத்து மண்வாசம் வீசும் மரத்தமிழனாய் இருந்த அவனை இந்த இழங்குமரியின் கண்கள் வட்டமிட்டு கொண்டிருக்க…

இவளின் பார்வை.. அவனுக்கு உள்ளுணர்வு மூலம் குறுகுறுப்பு மூட்ட… நண்பர்களுடன் இருந்தவன் அவர்களின் கருத்தை கவராமல் கள்ள பார்வையாக அவளை பார்க்க..

இந்த பார்வைக்காகவே காத்திருந்தவள் போல.. அவளது ப்ரத்யோக தெத்து பல் சிரிப்பை உதிக்க…. இவன் தன் நண்பர்களிடம் “மாப்ள கொஞ்சம் பம்ப் செட் வரைக்கும் போய்ட்டு வாரன் டா… வானம் கம்மலா இருக்கறது உடம்பெல்லாம் பசபசன்னு இருக்குது..

இன்னைக்கு ராவைக்கு அப்பாரு மாந்தோப்புக்கு காவலுக்கு போகணும் சொல்லி இருகாவ டா… எல்லாரும் போய் கஞ்சி கூல் சாப்பிட்டுட்டு ஆனக்காரன் தோட்டத்துக்கு வந்துடுங்க டா.. தனியா இருந்தா நேரம் அசையாது..ராவுக்கு சேர்ந்து படுப்போம்”

சொல்லிக்கொண்டே தன் பாட்டிற்கு சோப்பு டப்பா சகிதம் கிளம்ப எத்தனித்த வேலை…

அங்கு குழுமியிருந்த நண்பர்களில் ஒருவன் “டேய் மச்சான் நீ பம்ப் செட்க்கு போற சிதம்பர ரகசியம் என்னன்னு மொதோ கண்டுபிக்கனும்லே….

தெனமும் இநேரத்துக்கு காம்மாய்ல வந்து உக்காந்துரவ… பொறவு நேரம் செண்டு குளிக்க போறவன்… ன்னு கதை அளந்துட்டு பேய் பிசாசு தொரத்திராப்போல ஒடுறவ…

என்ன மச்சான் ஏதாவது மோகினி பிடிச்சிகிடுச்சோ… பார்த்துவே… இலங்காளை பயலாட்டம் இருக்க… மோகினி அடிக்காம…குடும்பம் பண்ண பிடிச்சிட்டு போயிற போவுது…” கிண்டலில் இறங்க….

செழியனோ இவனை தோளில் வலிக்கும்போல் தனது துண்டால் சுள்ளென்று ஒரு அடி அடித்துவிட்டு… “எல்லேய் எந்த மோகினியும் இந்த செழியனை பிடிச்சிக்கிட்டு போக முடியாதுலே…

கையோடு பிடிச்சிக்கிட்டு போவ நான் என்ன பூனை குட்டியா?? புலிக்குட்டில… பன்ச் பேச.. (இந்த புலிக்குட்டியை தன் பின்னே சுற்றும் பூனையாக மாற்றி ஒருத்தி அலைய விட போவதை தெரியாமல் உதார் விட்டுவிட்டான்!)

தன் கையோடு கொண்டு வந்த சோப்பு பெட்டியை தூக்கிக்கொண்டு பம்பு செட்டுக்கு செல்லும் வரப்பில் நடக்க துவங்கிவிட்டான்…

இவன் நகரவும்… அங்கிருந்த நண்பர் கூட்டம் தங்கள் இல்லம் தேடி பிரிந்து அந்த மண்சாலையின் வழியே சென்றுவிட… அவர்கள் செல்லும் வரை பொறுத்து மெதுவாக நடந்தவன்..

அவர்களின் தலை மறைந்ததும் விரைவாக சென்று அந்த தாவணி பெண் அமர்ந்திருந்த வரப்பில் தானும் செல்ல… அவளது தெத்துப்பல் சிரிப்பு இவன் அருகில் செல்ல செல்ல பெரிதாய் விரிந்தது…

இவன் அவளின் அருகில் சென்று “டீ அமுலு எதுக்கு டி இங்கன நிக்கிறவ .. உனக்கு கொடுக்க வேண்டிய கோட்டா தான் நெதமும் பம்ப்செட்டில் வந்து குடுத்துப்புட்டு போறேன்னு ஒப்பு கொடுத்துருக்கேன்ல.. பொறவு ஏன் டி இங்கன என் கூட்டுகாரவக கூட இருக்கும்போது வார…

அவனுவோ ஏதாவது மோப்பம் பிடிச்சு… என்ற ஊட்டுக்கு தகவல் தெரிஞ்சுது.. அம்புட்டுத்தேன்.. என்ற அப்பாரு ஜோட்டா நார் விடற வரைக்கும் அடிச்சு… வரிக்குதிரை மாதிரி ஆக்கி புடுவாறு டி..”

“செத்த நேரம் அங்கன காத்துகிட்டு இருந்தா அம்மணிக்கு ஆவாதோ… இங்கன பாரு புள்ள… இனி கொஞ்ச நாளுக்கு தான் நாமா பழக முடியும்… அப்புறம் அய்யாவுக்கு கல்யாணம் ஆச்சுனா அவளுக்கு தான் இந்த கோட்ட எல்லாத்தையும் கொடுப்பேன்..”

தன் சட்டையின் காலரை இழுத்து விட்டு ஸ்டைலாக போஸ் கொடுத்து சொல்ல…இந்த தாவணி பெண்ணோ..
” ஹ்ம்ம் நீ எவளையாவது கட்டிக்க என்ன வேணுன்னா பண்ணிக்க… எனக்கு வார கோட்டா வரலைன்னா… அம்புட்டுத்தேன்…

உன்னிய கட்டிகிட வருவாளே ஒரு கிறுக்கி அவள்ட நீ என்னிய கட்டிக்கிடுத்தோம்னு ஒன்னுமன்னா பழகிப்புட்டு அவியல கட்டிக்கிடுத்தேன்னு சொல்லிபுடுவேன்…

பொறவு அவிய கோவிச்சுக்கிட்டு பொறந்தகம் போயிருவாவ.. நீ எனக்கு கோட்டா நெதமும் குடுத்து தான் ஆவனும்… எப்புடி” தன் காலர் இல்லாத ஜாக்கெட்டை தூக்கி விட்டு மிரட்டல் விட…

அதிர்ச்சியில் தன் நெஞ்சை பிடித்தபடி..” அடியேய் என் சீமை சித்ராங்கி… காலணா காசு மாதிரி காப்படி ஒசரம் இருந்துகிட்டு.. என் குடும்பத்தை பிரிப்பியோ?? ஒன்னிய என்ன பன்ணுதேன்னு பாரு… ” அவளது நீண்ட ஜடையை பிடித்து இழுக்க..

அவள் மெலிதான தேகம் இவன் வலுவுக்கு தாங்காமல்.. பிடிமானம் இல்லாமல் அவன் மீது வந்து விழ.. இருவரும் சேர்ந்து வயலில் உழுது வைத்திருந்த சேற்றில் சேர்ந்து விழுந்தனர்…!

விழுந்த வேகத்தில் இருவரது மீதும் முழுதாக சேரும் சகதியும் படிந்து விட… அவன் தன் முகத்தில் இருந்த சேற்றை கையால் வழித்துக்கொண்டுவிட…

அவள் முகம் கூட துடைக்காமல் தன் புத்தம் புது தாவணி பாவாடையில் ஒட்டி இருந்த சேற்றுக்காக ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள்.

அவளது இந்த செய்கையை பார்த்து வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு அவளுக்கு உதவும் எண்ணத்தில் அவளது அருகில் போய்…

“அம்லு இங்க பாரு டி.. ஏற்கனவே நீ ரொம்ப சுமார் அழுவுமூஞ்சியா இருந்தா பாக்க சகிகல.. அழுவாத டி…” என்று சமாதானம் செய்து அவளது முகத்தில் இருந்த சகதியை தன் கையால் துடைக்க…

முகத்தில் சேறும் சகதியுமாய் இருந்தாலும் இவன் முரட்டு கைகளில் அவளது மிருதுவான கன்னங்களில் பட்டதும் செழியனுக்குள் சில பல ரசாயன மாற்றங்கள்…

அவளது கன்னங்களில் மென்மையை உணரவே நிதானமாக முழுதும் நீங்கிய இல்லாத சேற்றை துடைக்க துவங்க… இவ்வளவு நேரம் என்ன செய்கிறான் என்று பார்க்கவேண்டி அவள் தன் குண்டு கண்களை விரித்து அவனை பார்க்க….

அந்த மையிட்ட கண்கள் தன் சுழலுக்குள் அவனை இழுத்து சுழற்றி சென்றது… அவளது கண்களுக்குள் இவன் தன்னை தேடிக்கொண்டிருக்க… அவளது வயதுக்கு… ஒன்றும் விளங்கா புதிர் பார்வையாக செழியனை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்..

இவ்வளவு நடக்கும் வரையிலும் இவளை தேடாமல் தங்கள் உலகில் கதை பேசி.. கலகலத்து இருந்த தோழியர் கூட்டம்… இவளை காணாது … அந்த கல்யாணப்பெண்ணை உசுப்பி…

“பொன்னு எங்கடி உன்ற ஓடம்பொறைந்தாளை காணும்?? நம்ம கூட தானே வந்தா.. இவ எங்கன போயிருப்பா? செட்டியண்ணன் வயல் வரையிலும் கூட வந்தா… இங்கன காணும்?

தங்களுக்குள் இந்த தாவணி பெண்ணை காணவில்லை என்று எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் வேலை.. பொன்னு கலவரக்குரலில்..

“டி வாங்க சுருக்குன்னு போய் அவளை தேடுவோம்.. அவ சின்ன புள்ள டி எங்கனையாவது காத்து கருப்பு அடிச்சி பிடிச்சினா…

எம்மட ஆப்பாயி என்னை ஆஞ்சி புடும் ஆஞ்சி… நான் கிளம்பும் போதே … என்ன எங்கணயவது போய் தொலை.. அமுலு வ பத்திரமா கொண்டு வந்துரோணும்னு சொல்லி தான் அனுப்பிச்சு…

எனக்கு கிலி பிடிக்கிது டி… இந்த சின்னக்குட்டி வேற எங்கன போனான்னு தெரியலையேய்… அய்யயோ… என் கருப்பு அவளை என் கண்ணில் காமிச்சு குடு” என்று பதட்டத்தில் புலம்பியபடியே…

அவளை வயல் வரப்புகளில்.. அங்கிருந்த பம்பு செட்டுகளில் கூட்டமாக சேர்ந்து தேட துவங்க… அதற்குள் அமுலு… செழியனிடம் இருந்து விலகி அங்கிருந்த வாய்க்காலில் தன் உடலை கழுவி கொண்டு இருக்க…

தண்ணீரில் அவள் மேனி கழுவ. கழுவ.. மாலை கதிரின் மஞ்சள் ஒளி அவள் பால்வண்ண மேனியில்… இருந்த நீர்த்துளிகளின் மீது பட்டு.. அவள் வதனம் முழுதும் தங்கமாக ஜொலிக்க…

அந்த பால்வண்ண இடைபிரதேசம் வேறு தனது நிறத்தை பொன் நிரமாய் மாற்றி… அவனை வாவென்று அழைக்க பேச்சிலந்து மூச்சிலந்து நின்றான் செழியன்…

பதினாறு வயது சிறு பெண்ணை… தன்னிடம் நட்பு பாராட்டும் அவளை.. இப்படி பார்ப்பது தவறு என்று அவனது மூளை எடுத்துரைத்த நேரம்.. அவன் அவ்விடம் இருந்து விலகி நடக்க துவங்க…

அவனை மேலும் சோதிக்கும் வண்ணம் மாமா.. மாமா என்று குரல் கொடுத்தவாறு வரப்பில் வழுக்கும் தரையை சமாளிக்கும் வண்ணம் தன் பாவாடையை கெண்டைக்கால் வரை தூக்கி பிடித்துக்கொண்டு மேல் ஏறி அவனை நோக்கி வரப்பில் ஓடி வந்தாள் அமுலு….

அவள் வெள்ளை தந்தக்கால்களும் அதன் சலங்கை கொழுசும் சேர்ந்து… இவனை கூறு போட… மிக கவனமாய் அவற்றை பார்க்காமல் தலை குனிந்து நகர பார்த்தான்…

பின்னால் ஓடி வந்து தன் இடையில் தாவணி விலகியது கூட தெரியாமல் .. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வந்து நின்றவள்.. அவன் இடை பக்கமாக முன்பக்கம் கையிட்டு…

தன் கையை விரித்து “கோட்டா… குடுக்காம போற…. மாமா…” மூச்சுவாங்கி சொல்ல…

செழியன் வேகவேகமாக அவளை பார்க்காமல் தன் சட்டை பையில் கவர் போட்டு வைத்திருந்தை எடுத்து அவள் கைகளில் வைத்து விட்டு .. ஏதோ பேய் விரட்டுவது போல வரப்பில் ஓடி மறைந்தான்…

தன்மீது ஒட்டி இருந்த எஞ்சிய சேற்றை கூட துடைக்காமல் வரப்பில் சென்று மறையும் அவனது முதுகை வெறித்தபடி நின்றாள் அமுலு..!

இதற்குள் பொன்னு மற்றும் மற்றைய தோழியர் கூட்டம் இவளை ஒருவாறாக கண்டு பிடித்திருக்க…. அன்று முழுதும் ஆற்றங்கரையில் குளியல் முழுவதும் அமுலு சேற்றில் விழுந்த கதை அலசி ஆராயப்பட்டது…

அமுலுவும் பொன்னுவும் இருட்ட துவங்கிய வேலை தங்கள் வீட்டிற்கு செல்ல… இயல்பில் அமைதியான பொன்னு பதுவிசாக வீட்டுக்குள் நுழைய….

அமுலு ஆரவாரத்தோடு… நுழைந்தாள்…! இவள் கொலுசொலியை வைத்து இவர்களின் வருகையை அறிந்த… அந்த வீட்டு எஜமானி பொன்னம்மாள்… தன் ஆஸ்தான நாற்காலியில் வந்து அமர…

பொன்னுவுக்கு கிலி பிடித்தது… ஆற்றில் குளித்து வந்த முகம் முழுவதும் வியர்வை பூக்க… தான் அப்பாயியை பயத்தோடு பார்த்தாள் பொன்னு….

அதற்குள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கூடத்தில் கூடி இன்றைக்கு என்ன பஞ்சாயத்து கூடுமோ என்று பீதியில் உறைந்து அவரவர் இடங்களில் அணிவகுத்தனர்…!

அந்தி புலரும்….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *