பேபி கார்ன் சூப்

ஸ்வீட் கார்ன் வெஜிடேபிள் சூப்:

தேவையான பொருட்கள் :
இளம் ஸ்வீட கார்ன் – 500 கிராம்
முட்டைகோஸ் – 100 கிராம்
பச்சைப் பட்டாணி – 3/4 கப்
கேரட் – 1
பீன்ஸ் – 6
காலிபிளவர் நறுக்கியது – 3/4 கப்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
ஸ்ப்ரிங் ஆனியன் – 1
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு, மிளகு – தேவையான அளவு
பால் – 1 கப்
கார்ன்ஃப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

சோளக்கதிரிலிருந்து முத்துக்களை உதிர்த்து எடுத்த வேக வைத்துக் கொள்ளவும்.

 டின் கான் வாங்கி இருந்தால் அதனைப் பால் மற்றும் தண்ணீருடன் கலக்கவும். 

ஒரு கடாயில் வெண்ணெய்யைச் சூடாக்கி அதில் ஸ்பிரிங் ஆனியன் போட்டு வதக்கி பின் எல்லாக் காய்கறிகளையும் போட்டு வதக்கவும்.

அதனைக் கார்ன், பால் கலவையில் போட்டு நன்கு கொதிக்க விடவும். 

இரண்டு நிமிடம் கழித்து அடுப்பைக் குறைத்து உப்பு, தண்ணீரில் கரைத்த கார்ன்ஃப்ளாரைப் போட்டுத் தொடர்ந்து கிளறவும்.

 கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *