பேசறதுக்கா ஃபர்ஸ்ட் நைட்..??!!

இங்க நைட் ஷிப்ட் பாக்கற எடத்துல மெயிண்டனன்ஸ் சூப்பர்வைஸ் தம்பியொண்ணு பத்து டூ ஆறு கடைசி ஷிப்டுக்கு வருது..வலசல் தான்.. டைம் ஆபிசுக்குள்ள வரும் போதே காதுல இயர்போன மாட்டிக்கிட்டு யாரு கூடவோ” பிகி பிகி “தான்.. நம்ம சொல்றது எதுவுமே காதுல ஏறாது..

நேத்துப் பாருங்க.. பத்து மணிக்கு வெளிய நின்னு பீடி இழுத்துக்கிட்டிருந்தேன்.. வழக்கம் போல அஞ்சு நிமிசம் லேட்டா வந்த தம்பி அவசரமா பஞ்சிங் கார்ட திணிச்சு உருவிட்டு வருகைப் பதிவேட்டுலயும் கைநாட்டத் தீட்டிட்டுப் போயிடுச்சு..

பீடி முடிஞ்சு எங் கைநாட்டத் தீட்ட பதிவேட்டத் தெறந்தா.. பக்கித் தம்பி எம் பேரு நேருக்கே கைநாட்டத் தீட்டிட்டுப் போயிருக்கு..அதும் ரெட் லெட்டுல..இன் டைம் 10pm ?!.. cctv கேமரா.. பஞ்சிங் கார்ட் 10.05 காட்ட.. அதை எல்லாம் தாண்டி வந்து 10 மணிக்கு எங்கிட்ட இருக்கற பதிவேட்டுல கைநாட்டுப் பதிஞ்சிருக்கு தம்பி .. இன்டர்காம்ல கூப்பிட்டா நோ ரெஸ்பான்ஸ்..செல்லுக்குக் கூப்பிட்டா பிசியோ பிசி.. (அந்த பிகி பிகி கூடத் தான்!) இன்னொரு செக்யூரிட்டிய விட்டு இழுத்துட்டு வந்தேன்.. தண்ணி தொட்டி மூலைல உக்காந்து பிகி பிகியாம்!

“ஸாரி சார்”னு இளிச்சுகிட்டே வந்தவர் கிட்டச் சொன்னேன்..

“மொதல்ல காதுல இருக்கறதக் கழட்டுங்க”

கறாரா வந்த எங் கொரலுக்கும் பார்வைக்கும் கட்டுப் பட்டு உடனே கழட்டிட்டு பதிவேட்டில் திருத்திக் கையெழுத்துப் போட்ட பின்னால அமைதியா அந்தத் தம்பி தோள்ல கையப் போட்டு

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *