பெண்மையை வதம்செய்யும் காவலனே
காவலனே – 3
எம்.டியின் அறைதனில் “ஓ…ஹ் ஷிட்” என நாசி வெடைக்க கத்திய விக்ரா லேப்டாப்பை தள்ளிவிட்டான். அந்த மடிக்கணினி என்ன பாவம் செய்ததோ? தொப்பென்று மேஜையில் விழுந்தாலும் சேதாராம் இல்லாமல் தப்பித்தது.
நான்கு புறங்களும் கண்ணாடி சுவர்கள் பள பளக்க ஆங்காங்கே படர்ந்திருந்த மலர்களின் கொடிகள் கண்களை இரசிக்க வைத்தன. மிகப்பெரிய விசாலமான அறை….! ஒருபக்கம் நான்கு ஐந்து பேர் மடிக்கணினியை நோண்டிக் கொண்டிருந்தார்கள். “க்ரீச் க்ரீச்” என றெக்கை அடித்து கூண்டிற்குள் உள்ளிருந்து சப்தமிட்டது அழகிய காதல்ஜோடி பறவைகள் இஇரண்டு
எரிச்சலுடன் “ஹே….இடியட்ஸ் ஷட் அப் யுவர் மௌத்” என்றதட்டினான். அவைகளும் கப்பு சிப்பென்று வாயை மூடிக்கொண்டு விழிக்க விழிக்க நோக்கின கூண்டு கிளிகள். எவரும் சரியாக வரவில்லை எதுவும் முறையாக அமையவில்லை என்னும் சிந்தனையுடன் ஓவர்கோட்டை கழட்டி சோஃபாவில் வீசி எறிந்தான். இறுகிய நெஞ்சமும், சிந்தனை செய்ய மறுத்த மூளையும் ஓய்வு கொடுக்க சொல்லி ஆணவனிடம் கெஞ்சிடவே.. கண்பார்வை புத்தகத்தின் மீது பதிந்தது. பல அடுக்குகளை கொண்ட படிக்கட்டுகளான கண்ணாடி வரிசையில் அறிவு புத்தகங்கள் நிரம்பி வழிந்தன. பல பலவகையான கலக்ஷன்கள் என்றிருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வீற்றிருந்தன அவ்வறையில். விக்ராவின் கூர்மையான பார்வை ஒவ்வொரு அடுக்குகளாக ஆராய….பாதியில் விட்ட புத்தகம் தென்பட்டது. முகம் இறுக்கம் தளர்ந்திடவே ஒருவிதமான பரவசத்துடன் கரங்களில்
“சார்லஸ் டுஹிக் என்பவரால் எழுதப்பட்ட “Smarter Faster Better: The Secrets of Being Productive in Life and Business” என்னும் புத்தகத்தை எடுத்தவன் நேராக வெளியேறி சுழல் நாற்காலியில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தான். இப்புத்தகம் உற்பத்தித்திறன் பற்றிய அறிவியலின் ஒரு அற்புதமான ஆய்வு ஆகும், மேலும் குறைவான மன அழுத்தம் மற்றும் போராட்டத்துடன் வெற்றிபெறவும், நாம் அதிகம் விரும்புவதைத் தியாகம் செய்யாமல் மேலும் பலவற்றைச் செய்யவும்-நம் செய்யும் எல்லாவற்றிலும் புத்திசாலியாகவும், வேகமாகவும், சிறப்பாகவும் மாற அனைவருக்குள்ளும் புதிய உத்வேகத்தை அளிக்கும் பொக்கிஷம் எனலாம் இப்புத்தகம்.
புனைவு அல்லாத கதைகளை மட்டுமே படிக்க ஆணவனுக்கு மிகவும் பிடித்த ஒருவிசயம். புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால் போதும் ஆழ்கடலுக்குள் மூழ்கிய உணர்வுடன் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவிற்கு புதைந்து விடுவான். அச்சமயம்….. “மே ஐ கம் இன் சார்” என்னும் ஒரு பெண்ணின் குரல் செவிகளில் விழுக.
பார்வையை நிமிர்த்தி உள்ளே வரும்படி கட்டளை இட்டான். அவளும் கதவை திறந்து எம்.டியின் அறைக்குள் நுழைந்தாள். புத்தகத்தில் கவனத்தை செலுத்தியவாறு “ஹம்…வாட்?” எனக் கேட்டான். “சார்..என்னோட வீடியோவ எங்கேயும் அனுப்பவேண்டாம்..பிராஜக்ட் விட்டு விலகிக்கிறேன் சார்” என்று சிறு பயத்துடன் எதை பேசவேண்டும் என நினைத்தாளோ அவ்விசயத்தை தைரியமாக கூறிவிட்டாள் “பிந்து”. இறுக்கமான சர்ட் உடுத்தியிருந்தவளின் முதல் இரண்டு பட்டன்கள் கழட்டிவிடப்பட்டிருக்க அது அவள் முன் அழகை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்து.
“ரீஸன்..” எனக் கேட்டவன் பார்வை அவள் முகத்தில் பதிய..ஆணவன் கரங்களில் கட்டிருந்த ஸ்மார்ட் ரக கடிகாரம் அவளுக்கு தெரியாமல் பெண்ணின் அழகை கனகச்சிதமாக கேப்சர் செய்தது. லேப்டாப்பை எடுத்து இப்பொழுது எடுத்த போட்டோவை அதனுள் பதிவேற்றம் செய்து வைத்தான்…..!
இது ஏதும் தெரியாதவள் சாதாரணமாக “சார்…எனக்கு கல்யாணம் ஆகப்போகுது! சோ ப்ளீஸ் சார்ர்! என்னோட வீடியோவுக்கு எவ்வளவு அமௌன்ட் வருமோ அதைவிட டென்பர்சென்ட் எக்ஸ்ட்ரா நான் கொடுக்குறேன்” என்றாள் தெளிவுடன். நெற்றியை உயர்த்தி எப்படி? என்னும் வகையில் பார்வையால் கேள்வி எழுப்பி “ஷிட் டவுன்” என்றான் .
இத்தனை நேரம் நிற்க வைத்து பேசியவன் பிஸ்னஸ் பேசவும் உட்கார சொல்கிறானே…என்றெண்ணியவாறு அமர்ந்தாள் பிந்து. பொன்னிற முகத்தில் சற்று கூர்மையான மூக்கு எடுப்பாக அமைந்திடவே.சிறு புன்னகை உதிர்த்து “எஸ் சார்…என்னால நிச்சயமா தரமுடியும்” மை பியான்ஷி(ஜோஹி) கொடுக்குறேன்னு சொன்னாங்க சார்..என்று உண்மையை கூறினாள்.
யாஹ் கங்ராட்ஸ் மிஸ்….என யோசித்து சிலநொடிகளுக்கு பிறகு “மிஸ்.பிந்து” என்று வாழ்த்து கூறினான். தாங்க்யூ சார்….என்றவளின் முகத்தில் மெல்லிய திரையாக வெட்கம் சூழ்ந்து கொண்டது. ஓக்கே..ஆனா ஒன் கன்டிஷன்.என்க அவளோ புரியாது என்ன சொல்ல போகிறான் என்பது போல் எதிர்நோக்கினாள்.
ஹம்ம்..”உன்னோட வீடியோ மாதிரி எனக்கு வேற ஒரு பொண்ணோடது வேணும். அதுவும் எக்ஸேக்டா உன்ன மாதிரி அழகா இல்ல உன்னை விட பெட்டரா இருக்கனும்”! ஒன்வீக் டைம் என்று சொல்லி முடியுமா? முடியாதா? என்கிற ரீதியில் ஒற்றை புருவம் உயர்த்தினான் விக்ரா. அதிர்ந்தவள் சார்…ஹவ் ஈஸ் இட் பாசிபில் என்க. ஏளனமான பார்வை வீசி “பிந்து….நல்லா யோசி. இல்லனா வீடியோ திரும்ப கிடைக்காது. போய் உன் பியான்ஷிக்கிட்ட சொல்லு! என்று அழுத்துமாக அதே சமயம் செய்தாக வேண்டும் என்னும் கட்டளையுடன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்னும் அழைப்பு கேட்கவே. கால்மேல் கால்போட்டு அமர்ந்து சிகரெட்டை புகைத்தவாறு யாரென நோக்கினான். எப்பொழுதும் சாப்பாடு கொண்டு வருபவன் தான் நின்றிருந்தான். மூன்று வேலையும் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்பது விக்ராவின் வழக்கம். இயந்திர வாழ்க்கையில் சமைப்பதற்கு எல்லாம் நேரம் கிடையாது… தனக்கென்று வேலையாட்களை வைத்துக்கொள்ள மாட்டான்..!
யாரென அறிந்ததும் உள்ளே வரச்சொல்லி கை உயர்த்தி ஆணையிட்டு பிந்துவின் பக்கம் பார்வையை செலுத்தினான். எம்.டி உணவு உண்ண போகும் சமயம் என்பதால் அறையில் இருந்த மற்ற எடிட்டர்ஸ் நான்கு ஐந்து பேர் உடனே வெளியேறிவிட்டார்கள். இதுவரை சிந்தனையில் மூழ்கியிருந்தவளுக்கு அனைவரும் வெளியே செல்லும் சப்தம் கேட்க.திடுக்கிட்டு எழுந்து நின்றுவிட்டவளின் முகத்தில் வியர்வை கொட்டியது. காரணம் இவ்வளவு நேரம் இங்கு இத்தனை பேர் இருந்தார்கள்..ஏதோ பயமின்றி பாதுக்காப்பாக உணர்ந்தாள்.
“எம்.டியிடம் தனியாக மாட்டிக்கொண்டால் அவ்வளவு தான்” என்னும் அதீத பயம் இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஏற்படும். ஏனென்று அவர்களுக்கே தெரியாது. தொண்டைக்குழியில் உருண்ட வியர்வை துளிகள் தேகத்தில் கீழ் இறங்க மனதின் ஓரத்தில் மின்னல் வெட்டியது போல் வான்மதியின் நினைவு உதிக்க “சார்ர் ...ஓக்கே! நான் கொண்டு வரேன்! என உறுதியாக வாக்களித்தவள் என்னோட வீடியோ கிளிப் கொடுத்துருங்க சார்” என்றாள் மேல் மூச்சு வாங்க. இந்த கம்பெனியில் மேக்கப் ஆர்டிஸ்டாக பணிப்புரிபவள். பண தேவைக்காக தன்னுடைய அந்தரங்க வீடியோவை கொடுத்திருந்தாள்…..சராசரி பெண்ணை போல் இல்லாதவள் அவளை பொருத்தவரை. பணம் சம்பாதிக்க எதையும் செய்திடுவாள் அவ்வகையில் தான் தன்னுடைய மானத்தை “Online advertising Add”காக பத்துலட்சத்திற்கு விற்றிருந்தாள் பிந்து.
வருங்கால கணவனிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டிருந்தாள். அவனோ நான் பணம் கொடுக்குறேன் வீடியோவை வாங்கிவந்து விடு என்றான். அவன் தான் ஜோஹி. மும்பையில் உள்ள பெரும்புள்ளிகளில் ஒருவரின் மகனாயிற்றே. “தட்ஸ் குட் பிந்து” வீடியோ கிளிப் அண்ட் அமௌன்ட் கொடுத்துட்டு உன்னோடது வாங்கிக்கோ….! என்று இறுக்கத்துடன் சொன்னவன் முகத்தில் ஒருவிதமான திமிர் ஆட்சி செய்ய மர்ம புன்னகை வெளிப்படுத்தி “நௌவ் யூ கேன் கோ” என்றவன் என்னென்ன உணவுகள் வந்திருக்கிறது என்பதை நோட்டம் இட்டான்.
சோ ஹாட்! என்ற விக்ராவின் வார்த்தைகளை செவிகளில் வாங்கியவள் தன்னை முழுதாக ஆராய்ந்த போது புரிந்துக் கொள்ள தேகம் தூக்கிப்போட்டுவிட்டது…சட்டென பின்னால் திரும்பி பார்த்தாள். அவனோ உணவை ஆராய்ந்து கொண்டிருந்தான்.…மேலும் அதீத சூடாகவும் இருக்கவே “சோ ஹாட்” என்றான். குழம்பிப்போனவள் அவன் உண்மையில் உணவை தான் சொன்னானா? இல்லை தன்னையா? என்னும் வகையில் சிந்தித்தப்படி அறையை விடுத்து வெளியேறினாள் பிந்து.
நேராக பல யோசனைகளுடன் நடந்து சென்றவள் நினைவு முழுவதும் வான்மதி மீது பதிந்திருந்தது. அவள் எப்படி ஒப்புக்கொள்வாள்? பேசாமல் அவளுக்கே தெரியாத படி வீடியோ எடுத்துவிடலாமா? என தனக்குள்ளே கேள்விக் கேட்டுக்கொண்டு நடந்தாள். “ஹே..பிந்து” ரெண்டு பேருக்கு மேக் அப் போடனும் சீக்கிரம் வாடீ…என்றழைத்தாள் ஒருவள்.
அரைமணி நேரமாக காத்திருந்த பிரதாபன் நிலானி அனுமதி கிடைத்தவுடன் எம்.டியின் அறைக்குள் நுழைந்தார். சார்….கல்சுரல் டூரிசம் (கலாச்சார சுற்றுலா) டீம் ரெடி சார். டென் மெம்பர்ஸ் தயாரா இருக்காங்க. நீங்க பர்மிஷன் கொடுத்தா அனுப்பிடலாம் சார். ஒரு மாசத்துல விளம்பரமும் ரெடியாகிடும்……..தட்ஸ் எனாப் சார்.என்றார் சிறு பயத்துடன்.
அவர் கூறிய அத்தனை பேரின் விவரத்தையும் மடிக்கணினியில் சரிப்பார்த்தப்படி
“ஓக்கே….ஐ நீட் பாஸ்ட் எவ்ரிதிங்க், ஸ்டார்ட் த ஒர்க் இமிடியட்லி” என்றுவிட்டு லேப்டாப்பை மூடிவைத்தவன் எதிரே நிற்பவரின் முகத்தை கூர்மையாக அளந்து “டூ யூ வான்ட் எ கேர்ள்”. எனக் கேட்க
மனிதருக்கு தூக்கிப்போட. நோ சார்!! என்றார் உடனடியாக. கர்வ புன்னகையுடன் கால்களை தூக்கி மேஜை மீது வைத்தவன் “இன்ட்ரஸ்ட் இல்லையா இல்ல யாரும் வரமாட்டாங்கன்னு பயமா?” என்று திமிராக ஆணவன் கேட்க. நோ சார் எனக்கு பயம் கிடையாது. எஸ்டர்டே நைட் ஒரு விசயத்தை தெளிவா புரிஞ்சிக்கிட்டேன் சார்…என்றவரின் மனதில் வான்மதி மகளாக பதிந்துவிட “சோ ஐ டோண்ட் வான்ட் நீட் கேர்ள்ஸ் சார்” என தெளிவாக வார்த்தைகளை வெளிப்படுத்தினார் நிலானி. அழுத்தப்பார்வை செலுத்தி அவரை வெளிய போகச்சொல்லிவிட்டு பிற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான் விக்ராட் அமரேந்தீரன்.
சிலுசிலுவென்று மெல்லிய தாளத்துடன் தென்றல் வீசியது . இரவின் குளிர் மதியின் தேகத்தில் அனுவெங்கும் ஊடுருவ… தாவணியை இறுக்கி துளி அளவுக்கூட அங்கங்கள் தெரியாதவன்னம் போர்த்திக்கொண்டு அறையின் வெளியே நின்று. தன்னுடைய தோழி பிந்துவின் வருகையை எதிர்நோக்கினாள். இரவு பத்து மணி நெருங்க உள்ள நிலையில் இன்னும் தோழி வராததால் பயம்கொண்டு முழித்து “பிந்து ஏன் இன்னும் வரல? எப்பவும் சீக்கிரம் வந்துடுவாளே! ரொம்ப வேலையா இருக்குமோ?” என பல கேள்விகளை தனக்குள்ளே எழுப்பினாள் வான்மதி.
சரியாக பிந்துவின் குரல் செவிகளில் விழுகவும் நிம்மதி பெருமூச்சு விட்டாள் மதி. நேராக வந்தவள் பெண்ணவளை கண்டுக்கொள்ளாது அறைக்குள் நுழைந்துவிட்டாள். பிந்து…பிந்து.. உனக்கு என்னாச்சு எதுவுமே என்கிட்ட பேசாம உள்ள வந்துட்ட! என்றாள் அப்பாவியாக.
நெற்றியை தேய்த்து ஓ…ஸாரி மதி வேற ஒரு டென்ஷன் அதான். நீ இன்னும் தூங்கலையா? சாப்பிட்டியா இல்லையா? என படபடவென பிந்து வினாக்களை எழுப்ப. சுவாசத்தை இழுத்துவிட்டு “ஹாங் நீ இல்லாம நான் எப்படி சாப்பிடுவேன்! ஆனா ரொம்ப பசிக்குது தெரியுமா” என்கிற கொஞ்சல் மொழியுடன் தன் வயிற்றில் கைவைத்து அழுத்தினாள் பேதைபெண்.
ஓ..காட்! ஏண்டீ இப்படி இருக்க. எப்பவும் அதே டைம்க்கு வரமுடியுமா? இட்ஸ் ஓக்கே….என பொய்யாக அதட்டியவளின் பார்வை மதியின் தேகத்தை முழுதாக அளந்தன.பார்க்க மிகவும் அழகாக இருக்கிறாள்…டெக்னாலஜி தெரியாதவள்.. பெயர் தெரியாத ஏதோ ஒரு குக் கிராமத்தில் வளர்ந்தவள்…. கல்யாணம் செய்துகொள்ள மும்பை வந்திருக்கிறாள்.என்றெண்ணியவளுக்கு விடை கிடைத்தது.
பிந்து…என்னடி யோசிச்சிட்டு இருக்க! எல்லாம் தயார் பண்ணி எடுத்து வச்சிட்டேன் “சாப்பிட்டு தூங்கலாம்” என்று தோழியை அழைத்துச் சென்றாள்.அவளுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து வைத்திருந்தாள்.மேஜை மீது இருந்த விஷிட்டிங் கார்ட் பிந்துவின் கண்களில் பட்டுவிடவே…யாருடையது என அதனை கையிலெடுத்து திருப்பி பார்க்க புரியாத பார்வையுடன் “ஹேய் மதி! இது எப்படி உனக்கு கிடைச்சிது யார் கொடுத்தா? என்க.
சாதத்தை பறிமாறியபடி தலையை நிமிர்த்தி எதை பற்றி பிந்து கேட்கிறாள் என்னும் ரீதியில் அவள் கரங்களை நோக்க..நேற்று இரவு நடந்தது நியாபகம் வரவும் நடந்தவற்றை தோழியிடம் விளக்கமாக எடுத்துக்கூறினாள் பாவை.”அவர் தான் பிந்து எனக்கு இதை கொடுத்தாரு” என்று முடித்தாள். ஓ..ஹ் நானும் அவர் சொன்ன கம்பெனில தான் ஒர்க் பண்றேன். இவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்! சொன்ன வேலையை சரியா முடிக்கலனா போதும் கழுவி கழுவி ஊத்துவாரு மனுசுன். அவரை விட ஒருத்தன் இருக்கான் அந்த கம்பெனியோட எம்.டி “ஹார்ட்லெஸ் ரோபோடிக் கிங்”. என்று எரிச்சலுடன் கத்தினாள். அவற்றை எல்லாம் கேட்ட மதிக்கு ஒன்றும் புரியாது போகவே “பிந்து..நீ சொல்றது எதுவுமே எனக்கு புரியவே இல்ல” என்றாள் வெகுளித்தனமாக.
ஹூப் என பார்வையை சுலற்றிவிட்டு “உனக்கு எதுவும் புரியவேண்டாம் மதி. அதுதான் நல்லது”. பார்க்கறதுக்கு எவ்வளவு அழகா இருப்பான் தெரியுமா மதி….என்றவளின் கண்முன் விக்ராவின் உருவம் வந்துப்போனது. எவரின் அழகையும் இரசிப்பது அவளுக்கு பிடித்த ஒன்று…அது பிந்துவின் பழக்கம். மதியை கண்டவுடன் சற்று பொறாமை ஒட்டிக்கொள்ள பெண்ணவள் எழிலை கூட ரசித்திருக்கிறாள் அதனை அவளிடமும் பகிர்ந்துக் கொள்வாள்.
மின்னலின் வெளிச்சத்தில் தெரியும் மழைத்துளிகளின் அழகையும் ரசித்திடுவாள்….சரி பிந்து பேசுனது போதும் வந்து சாப்பிடு நேரம் ஆகுது….என்றழைத்தாள் வான்மதி. ஷப்பா விடமாட்டியே இதோ வரேன் என பதிலளித்து லேப்டாப்போடு வந்து பெண்ணவள் அருகே அமர்ந்தாள் .
“ஓக்கே…உனக்கு எந்த மாதிரி ஹப்பி வேணும்”.ஐ மீன் உன்னோட மொழியில புருஷன்…! எனக் கேட்டு புன்னகைக்க. ஏனோ மதியின் முகத்தில் வெட்கம் சூழ இமைமூடி யாரையோ ரசிப்பது போல் கனவுலகில் சஞ்சரித்தவள் சட்டென நினைவுக்கு வந்து “எனக்கு என்னோட பாட்டி மாதிரி வேணும்”. பாட்டி என்னை எப்படி எல்லாம் பார்த்துப்பாங்க தெரியுமா பிந்து என்றவளின் மான்விழிகள் கலங்கிப்போனது.
ஹேய்…மதி டோண்ட் ஃபீல்; ஓக்கே சாப்பிடு அதுக்கு முன்னால நீ கட்டியிருக்க ஹாவ்-சேரியை கழட்டி தூக்கி எறிடீ..எப்போ பார்த்தாலும் இழுத்து இழுத்துப் போர்த்திக்கிட்டு……ஏன் உன்னோட அழகை உன் புருஷன் மட்டும் தான் பார்க்கனும் அப்படின்னு எதாவது சபதம் எடுத்துருக்கியா என்ன? என்று பிந்து நக்கல் அடிக்க. மயக்கும் புன்னகை வீசி “ஆமா…” என்னும் வகையில் தலையை மேலும் கீழும் அசைத்தவள் விழிகளில் மகிழ்ச்சியின் சாரலோடு வெட்கமும் ஒன்றினைந்து கொண்டது.பல பல கனவுகளை இதயத்திற்குள் பூட்டிவைத்திருக்கிறாள் வான்மதியழகி.
அச்சமயம்.. படார் படார் என கதவை யாரோ வெளிபுறம் தட்டினார்கள் பபலமாக இரண்டாம் மாடியில் வசிக்கும் குடிமகன்கள் தான் அன்வருக்காக ஒன்று திரண்டு வந்திருந்தார்கள். தன்னை செருப்பால் அடித்தவளை அதே செருப்பால் அடிக்கவேண்டும் என்கிற வேகத்துடன் கதவை உடைப்பதுப்போல் தட்டிக்கொண்டிருந்தான் அன்வர்.
வதம்செய்யும் காவலனே…
பிடித்திருந்தால் படித்துவிட்டு கமெண்ட் செய்ங்க டியர்ஸ்… லைக்ஸ் ❤️
