கதை பாதியில் நிற்காது….
பெண்மையை வதம்செய்யும் காவலனே – 1
இரவின் மேகங்கள் அலை அலையாய் நகர மொட்டாய் மலர்ந்த நட்சத்திரக்கூட்டங்கள் ஜொலித்தன.அந்நேரத்தில், நெடுஞ்சாலையில் “தயவுசெஞ்சு யாராவது வாங்களேன்” என்னும் மென்மையான ஓர் மங்கையின் குரல் பயத்துடன் காற்றின் பக்கங்களில் எதிரொலித்தது. தவறான இடம் போல் காட்சியளித்த அந்த சாலையில் வித்யாசமான உடைகள் அணிந்த பெண்கள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சில சில சகிக்க முடியாத பேச்சுகள் செவிகளில் விழுக மனதில் பல தெய்வங்களை வேண்டியபடி “யாராவது வாங்க. அங்க ஒருத்தர் இருக்காரு” என்றழைத்தவள் முகத்தில் உயிர் பயம் தாண்டவமாடியது. பௌர்ணமி நிலவாய் பிரகாஷித்தவளின் விழிகளுக்குள் ஒரு தேடல்.
உயரமோ ஐந்தடி இருக்க சிகப்பு வண்ண தாவணி உடுத்தியிருந்தவள் தேகமெங்கும் வியர்வை சுரந்தது.படபடவென்கிற பட்டாம்பூச்சியாய் சிமிட்டும் விழிகளுக்குள் மின்னல் வெட்டாய் பாய்ந்தது “ஹே லட்கி..ஜல்தீ கரோ” என்னும் அவசரக்குரல். உடம்பெல்லாம் தூக்கி அடிக்க “சார் ஒரு நிமிசம், யாராவது வருவாங்க கொஞ்ச நேரம் அவகாசம் தாங்களேன்” என்று கையெடுத்து கும்பிட்டு தனக்கு எதிரே, இரவின் தாகத்துடன் நின்றிருந்த நடுத்தர வயது மனிதரிடம் கெஞ்சினாள் அவள்.
மொழியும் தெரியாது போகும் வழியும் அறியாது சிக்கித் தவித்த பெண்மானவள். ஒரு மாதத்திற்கு முன்பு தான் மும்பையில் காலடி எடுத்து வைத்தாள் இந்த கிராமத்து பைங்கிளி .யாருமின்றி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவளுக்கு உலகம் தெரியாது போக …“அடியே சிங்காரி சிறுக்கியே…உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிப்புட்டு தான் இந்த வயசான கட்டை சாகுமடி” என்று ஆசை பேத்தியிடம் எத்தனை முறை புலம்பினாரோ.! அதற்கு முன்பே விதி அவரின் உயிரை பறித்துக் கொண்டது.
பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்த புத்திசாலி தேவதையவள். ஒருசிலர் “பெரிய ஆளாக வேண்டுமென மும்பை வருவார்கள்! இன்னும் சிலர் சினிமாத்துறையில் சாதிக்கவும்! தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்கவும்! கோடி கோடியாக சம்பாதிக்க ஆசைப்பட்டும் இந்நகருக்கு வந்திருப்பார்கள்” ஆனால் பாவையோ “தனக்கான வாழ்க்கை துணையை தேடி மும்பை வந்திருக்கிறாள்… பாட்டியின் இறுதி ஆசையை நிறைவேற்றி அவரின் ஆன்மாவை திருப்தி படுத்த வேண்டும் என்னும் லட்சியத்தை உயிர்மூச்சாக கொண்டவள்.”
ஏய்…உன்ன கல்யாணம் கட்டிக்கப்போறவன் பாம்பே-ல தான் டீ இருக்கானாம்! போய் அவனை கண்டுப்பிடி என ஊர்க்காரர்கள் ஏத்திவிட்டார்கள் விவரம் அறியாத இருபது வயது பெண்ணிடம். யார் எது சொன்னாலும் நம்பிவிடும் அப்பாவி என்று சொல்லும் அளவிற்கு வெகுளி தனம் உடையவள். ஆகையாலே மாப்பிள்ளை தேடி அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
எப்பொழுதும் சென்று வரும் அதே சாலையில் தான் இன்றும் வந்தாள் ஆனால் விதியால் “பெண்ணவளை பார்த்ததும் அந்த நடுத்தர மனிதருக்கு பிடித்துப்போக! ஓர் இரவு மட்டும் அவளை கூப்பிட்டார்”.அவ்விடமென்பது சற்று அப்படி இப்படியான இடம் இரவு நேரங்களில் தங்கள் தொழிலை கவனிக்க ஆடவர்கள் பெரிய மனிதர்களை மயக்கி தங்களையே விருந்தளித்து சம்பாதிக்கும் கூண்டுக்கிளிகளின் நேரமது.
அவள் மீது ஆசைக்கொண்டு தன் விருப்பத்தை அவர் தெரிவிக்க…..மொத்தமாக அதிர்ந்துப்போய் ஜீவன் துடிக்க மையிட்ட விழிகள் கலக்கம் கொள்ள அவரிடம்
“கெஞ்சி கதறினாள்”.
அவளை பார்க்க பரிதாபமாக இருக்கவே தனக்கு எய்ட்ஸ் இருப்பதாகவும் யாரும் தன்னுடன் வரமாட்டிக்கிறார்கள்! நீ யாரையாவது கூட்டிவா; அப்போது உன்னையும் விடுகிறேன் பணத்தையும் திருப்பித்தருகிறேன் என்று வாய்ப்பு கொடுத்தார் அந்த மனிதர். அவள் கையிருப்பில் இருந்ததென்னவோ ஆயிரம் ரூபாய். அதனையும் பிடுங்கி வைத்துக்கொண்டு மிரட்டினார்.
வேறு வழியே இல்லாது பணமும் தன் மானமும் போகக்கூடாது என்கிற தெளிவுடன் ஒப்புக்கொண்டாள்… கொடுத்த அவகாசம் பத்து நிமிடங்கள் அது முடிந்தும் போக ஒரு பெண்களும் வரவில்லையே? என்னும் விரக்தியுடன் அவரின் முன்பாக வந்து நின்றாள் மதி (எ) வான்மதியழகி. பெயருக்கு ஏற்றார் போல் பேரழகிதான்…அவ்வழகை ஆராதிக்க பிறந்தவன் எவனோ?
டைமன்ட் வடிவிலான மிகப்பெரிய கண்ணாடி அறைதனில் உள்ள நீண்ட அகலமான திரையில் பார்க்க இயலமுடியாத காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது…! தொழில் வல்லுநர்கள் அறையின் ஒவ்வொரு பக்கமாக நின்றிருக்க திரையில் நகர்ந்த காட்சிகளை முகச்சுளிப்புடன் அனைத்தும் சரியாக உள்ளதா என ஆராய்ந்தார்கள். “Vikrat Advertising media pvt.ltd” என்னும் மிகப்பிரம்மாண்டமான முதன்மை அட்வடைஸ்மென்ட் ஏஜென்சி கம்பெனியின் கண்ணாடி கட்டிடங்கள் இருளிலும் ஜொலித்தன. உலகில் உள்ள டாப் நிறுவனங்களுடன் கைகோர்த்து முதன்மை இடத்தை தக்கவத்து பலபேரின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு கொடிக்கட்டி பறக்கும் பிரபலமான விளம்பர நிறுவனம் .
“விக்ராட் அட்வடைஸ்மென்ட் மீடியா” விளம்பரம் செய்தால் போதும் வியாபாரம் பிய்த்துக்கொண்டு போகும்…..இவர்களின் விளம்பரம் எத்தனையோ கணக்கில் அடங்கா தொழில் அதிபர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்பொழுது ஒட்டுமொத்த நாடுகளையும் தங்கள் விளம்பரங்களினால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஒருப்பொருளை விற்பனை செய்ய விளம்பரம் தேவைப்படும்…..அதனை கனக்கச்சிதமாக செய்துவருகிறது இந்த கம்பெனி.
மிகவும் வித்யாச வித்யாசமாக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு புதிய புதிய யோசனைகளில் விளம்பரங்கள் எடுக்கப்படும். ஒவ்வொரு நிறுவனங்களும் மில்லியன் கணக்கில் பணத்தை இவர்களின் கம்பெனிக்கு வாரி இறைப்பார்கள் ஒரு விளம்பரம் செய்து கொடுக்க சொல்லி தவம் கிடப்பார்கள்.
அப்படிப்பட்ட ஹை-டிமென்ட் உடைய கம்பெனி. இவர்களை நெருங்குவது எந்த ஒரு தொழில் நிறுவனங்களுக்கும் அத்தனை எளிதல்ல. வானுயரத்திற்கு உயர்ந்து நின்றது கம்பெனியின் வளர்ச்சியும் கட்டிடங்களும்.ஊழியர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது இரவு பகல் பாராது வேலை செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால் சம்பளமோ லட்ச லட்சமாக வாங்குவார்கள். CEO பிரதாபன் நிலானியின் மேற்பார்வையிலும் உலகை தன் மாய விளம்பரங்களால் ஆளும் ஒருவனின் தலைமையிலும் இயங்கிவருகிறது.
“நோ ரியாலிட்டி கேன்சல் இட்” என்னும் அதிகார குரல் ஒவ்வொருவரின் செவிகளிலும் விழுக அத்தனை பேருக்கும் முன்பாக சுற்றும் எந்திர நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தவன் தன்னுடைய கண்களில் போட்டுள்ள கூலர்சை திமிராக ஒற்றைவிரல் கொண்டு கழட்டி அருகே இருந்த கண்ணாடி மேஜையில் வைத்துவிட்டு இருகரங்களையும் கழுத்தின் பின்பக்கம் கொண்டு சென்று ஒன்றிணைத்து நெட்டிமுறித்தவன் பார்வையோ திரையை விட்டு அகலாமல் நிலைத்திருந்தது.
இந்த சாம்ராஜ்ஜியத்திற்கு சொந்தமானவன் பக்கா பிஸ்னஸ் மெட்டீரியல் மேன். அவன் உட்கார்ந்திருக்கும் தோரணையில் தெரியும் எத்தனை கர்வம் கொண்டவன் என்று. வெள்ளை நிற சர்ட் உடுத்தி கருப்பு வண்ண ஓவர் கோட் அணிந்திருந்தான். தன்பெயர் பொறித்த “ப்ளாக் சில்வர் பிரேஸ்லட்” ஒன்றை இடது கையில் கொண்டிருந்தவன் சடாரென எழுந்து நின்றான்…..மறுகணம் அமர்ந்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்து கொண்டார்கள்.
நெக் பட்டனை கழட்டிவிட்டு வெரப்புடன் நின்று “நோ ரியாலிட்டி கேன்சல் இட்” என கட்டளை இட்டான் இருபத்தொன்பது வயதுடைய இயந்திரமனம் படைத்த பிஸ்னஸ்மேன் “விக்ராட் அமரேந்தீரன்” உண்மையாக இருக்கவேண்டும்…..நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது…..கண்ணியமாக நடக்கவேண்டும்….யாருக்கும் கஷ்டம் தரக்கூடாது…அனைவரைக்கும் மரியாதை அளிக்கவேண்டும்…..நேர்மையாக வாழவேண்டும்…..என்பது ஒரு எம்.டியின் எண்ணங்களாக இருக்கும் ஆனால் இவனோ இவை அனைத்திற்கும் முரண்பாடானவன். நேர்மை என்றால் என்ன என்பவன்…? நம்பிக்கை துரோகம் ஆணவன் தேகத்தில் ஊறிப்போன ஒன்று. யாருக்கு எங்கே செய்வான் என்பது கனிக்கமுடியாது. தன்னை தவிற பிறரை ஒருப் பொருட்டாக கூட மதிக்காதவன்.
அந்த திரையில் இத்தனை நேரம் ஓடிக்கொண்டிருந்தது ஓர் ஆண் மற்றும் ஓர் பெண்ணிற்கு இடையே நடக்கும் தனிப்பட்ட அந்தரங்க கூடல். அதை தான் நேரலையாக இத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்…! அவர்களின் நெருக்கத்தில் தான் உண்மைத்தன்மை இல்லையென்று ரிஜக்ட் செய்ய சொன்னான்.அமெரிக்காவின் மிகப்பெரிய முன்னனி நிறுவனம் ஒன்று “விக்ராட் அட்வடைஸ்மென்ட் மீடியா”விடம் விளம்பர ஒப்பந்தம் செய்திருப்பதாக ஊழியர்களுக்கு கட்டளையிட்டிருந்தான். அந்நிறுவனத்திற்கான விளம்பரம் தான் தற்போது எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வருத்தகத்திற்காக எம்மாதிரியான விளம்பரங்களையும் எடுக்கவும் கொடுக்கவும் தயங்காதவன். இத்தனை பெரிய சாம்ராஜ்யம் உருவாக அவனின் “முதல் நம்பிக்கை துரோகம்” தான் காரணமாக இருந்தது. அதற்காக சரியென்று நான் கூறவில்லை நாயகனின் குணம் அப்படி. அவன் அவனையே நம்பமாட்டான் எந்நேரத்தில் எப்படி சிந்திப்பான் என்பது அவனுக்கே தெரியாது.
எவரையும் நெஞ்சிற்கு நேராக குத்தாது பின்முதுகில் குத்துபவன்…. ஆனால் ஒருநிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துவிட்டால் அந்த வேலையை உலகமே பாராட்டும் அளவிற்கு முடிக்காமல் விடமாட்டான். தாம் எப்படி அட்டைப்பூச்சியை அருவெருத்து பார்ப்போமோ அதைப்போல் தான் அவன் பெண்களையும் தனக்கு சமமற்ற மனிதர்களையும் பார்ப்பான். பத்து வயதிலே பிறந்தநாட்டை விடுத்து ஓடிவந்து விட்டான். இந்திய வம்சாவளியை சார்ந்து அமெரிக்காவில் அகதிகளாக வாழ்ந்து வந்த இளம்தம்பதிகளான “ரோஜா வர்ஷாலி மற்றும் விஷ்வநாத் ரகுவந்தன்” இவர்களுக்கு பிறந்தவன்.
வதம்செய்யும் காவலனே.
Likes…❤️.
