பூ 5 / 6 /7

பூ-5

நாகராஜன் போனதும்!! சூரியன் மறைந்ததும் திடீரென சூழும் இருள்போர்வை போல!! மூளை யோசனைக்கு தாவ!! இனி என்ன??

“எதுவா இருந்தாலும் நம்ம இதை சமாளிச்சு தான் ஆகனும்.. இப்போ பின்வாங்கினால் பாவம் ராஜன் சாரையும் ஏமாத்தின மாதிரி ஆகிடும்..!”

“அப்பறம் சீனியை யார் பார்த்துப்பாங்க..?? அவுங்க பாரெண்ட்ஸ் கூட இல்லை, புது கேர் டேக்கர் கிடைக்க எவ்வளவு நாள் ஆகும்?”

” சரி நாமளே பாத்துப்போம்.. ஒரு… ஒரு மாசத்துக்கு!!”

“அப்பறம் முடியலை பிரச்சனையா இருக்குன்னா.. ராஜன் அண்ணகிட்ட ரெக்குவஸ்டா சொல்லி… வேறு ஆள் பாத்து குடுத்துட்டு போயிடலாம்…”

வரிசையா இப்படி செய்யலாம் அப்படி செய்யலாம்…ன்னு ஆரா திட்டங்கள் வகுக்க!!

இனிமேல் உன்னால ஒன்னும் செய்ய முடியாது டி ஆரா மாப்பி….!

உனக்கு வேறு முரட்டு சரக்கு வெச்சுருக்கேன்…

சரக்கு வெச்சிருக்கேன்!!!
இறக்கி வெச்சிருக்கேன்!!!

வறுத்த கோழி போல உன்ன
இனி பொறிச்சு தின்னுறுவேன்!!!

பாட்டு பாடிக்கிட்டு இருந்தது!!!
ஆராவின் விதி!!!!

(பாட்டு ஒரிஜினல் இப்படி வராது!!! ஒரு விளம்பரம்!! ஹீ ஹீ)

நேரம் இரவு 9 மணி..! வீட்டில் மாட்டி இருந்த கடிகாரம் இன்னிசை வாசிக்க.. ஆரா இப்போ தன் நிலைமை பத்தின யோசனைக்கு ஒரு தொடரும் போட்டு… எந்திரிச்சு..!

சீனி இருந்த ரூம் போய் எட்டி பார்க்க சீனி இன்னும் அந்த பழைய குற்றஉணர்ச்சி போஸில்..! கிட்டே போய் அவன் தோல் தொட்டு ஆரா “சீனி சீனி..”

“…..”

“சீனி…”

“சாரி குல்பி…”

“எதுக்கு இப்போ சாரி சொல்லறீங்க.. சீனி கண்ணா”

“நான் முத்தா குடுத்தேன்.. நீ அழுத… அதான் சாரி”

“ஆராவுக்கு உருகிடுச்சு… இவ்ளோ விஷயம் தெரியுது??.. மனவளர்ச்சி இல்லாதவங்களுக்கு இப்படி உணர்வுகளை புரிஞ்சிக்க முடியுமா??? இவன் நம்ம அன்பாலயத்தில இருப்பவங்களை விட கொஞ்சம் பெட்டர் தான்!!!

இவங்களுக்கு எப்படி இதெல்லாம் சொல்லி கொடுத்தாங்கன்னு ராஜ் அண்ணகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கணும்.. அங்கு சென்னைக்கு அன்பாலயம் போறப்போ.. அங்கு இருக்கும் குழந்தைகளை மேம்படுத்த நமக்கு பயன்படும்…. ”

இந்த யோசனையோடு எப்போ ஆராவின் கை சீனியின் தலை கோத ஆரமிச்சதுன்னும்.. சீனி எப்போ அவ இடுப்பை கட்டி பிடிச்சான்… ரெண்டும் அவளுக்கே தெரியல!!!

( எனக்கும் தெரியல? நான் ஒன்னு சொன்னா இந்த ஆரா வேற ஒன்னு செய்யிறா பா….!)

இப்போவும் அவளே முன்ன தெளிஞ்சி!!! நேரம் ஆனதை உணர்ந்து..

“சீனி கண்ணா என்ன சாப்பாடு வேணும் உங்களுக்கு”

“எனக்கு..ம்ம்ம்..எனக்கு… டோச..” ( டோச யாம்!!! குடுக்கிற காசுக்கு மேல கூவுறான் டா கொய்யா!!! \ud83d\ude22\ud83d\ude22)

“சரி என்னோட வரிங்களா? கிச்சன் போலாம்?”

“வரேன் வரேன்” சப்பாணி ஸ்டைல் நடை சீனி

அடுபங்கரையில் கொஞ்சம் காலிஃபிளவர், குடை மிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு, சாஸ் வகையில் சிலது இருக்க!! காலிஃப்ளவர் மசாலா தோசை செய்யலாம்ன்னு ஆரமிச்சுட்டா ஆரா!!

அவள் லாவகமா!! மசாலா தயார் பண்ணிக்கிட்டு இருக்கும்போதே.. இந்தா இதை சாப்பிட்டுக்கிட்டு இரு நான் முடிக்குற வரைக்கும் ன்னு சீனிக்கு கையில் கொஞ்சமா கிச்சனில் இருந்த முந்திரி பருப்பை குட்டி கிண்ணத்தில் போட்டு… கையில் குடுத்துட்டா!!

சின்ன பிள்ளைகளுக்கு அம்மா செய்ற மாதிரி!!

சீனி வசதியான வீட்டு பையன் அம்மா சாரதா, அப்பா திருவேங்கடம் .!!! பெரிய கம்பெனியின் ஓனர். படங்களில் வரது மாதிரி அவன் அம்மா… சாரதா அம்மாவும் லேடீஸ் கிளப்.. போலோ… டென்னிஸ்ன்னு பல விதமான ஒன்னுத்துக்கும் உதவாத பல கிளப்களில் மெம்பர்…

அன்பானவங்க தான்!!! எந்த அம்மாவும் பிள்ளைகள் மேல அன்பில்லாம இருக்கமுடியாது!!

பேய் கூட பிள்ளை வளர்க்கும்!! (குருஜீ சொன்னது!!)

கடவுள் பூமியில் எல்லா உயிர்களையும் தன்னால் ஒருத்தராக பாத்துக்க முடியாது… என்று தான் அம்மக்களை படைத்தார்!! சாரதா அம்மாவும் அப்படி தான் இருந்தாங்க!!

அவர்கள் செல்வ நிலைக்கும் பழகும் பகட்டு நட்பூக்கள் எல்லாத்துக்கும் இந்த பகட்டு வேஷம் தேவை!! அதனால் அரிதாரம் பூசியாச்சு!!

ஒரு நாள் நடிக்கலாம் ரெண்டு நாள் நடிக்கலாம்!!!
அதுக்கு அப்பறம் துக்கப்பட்டு துயரப்பட்டு!!! காஞ்சி பாட்டு!! ஆரணி பட்டு!! சாமுத்ரிகா பட்டு!!! ன்னு தன் மனசு மாறி… ராயல்யாவே மாறிடுவாங்க… அதுவே சாரதா அம்மாவின் நிலையும்!!

அந்த அமெரிக்கை வாழ்வு ஒரு புதை குழி போல!! இவங்க ரொம்ப ராயல் பா!! அப்படி ரீச் லுக்கில் இருப்பாங்க!!! அழகு மெய்ன்டய்ன் பண்றங்க!!! அப்படி இப்படின்னு பிறர் பேச பேச அதுவாவே மாறிடுவாங்க!!

(கங்கா சந்திரமுகியா… நின்னா … நடந்தா… இப்போ சந்த்ரமுக்கியாவே மாறிட்டா!!!) இதுதான் நிதர்சனம்!!

சாரதா அம்மா சாம் ஆக மாற மாற நம்ம சீனிக்கு கிடைச்சதெல்லாம்.. சமையல் கார அம்மா போடும் சாப்பாடு தான்!! அவர் இவன் சாப்பிட்டானா? பாத்துட்டு அவர் வேலைக்கு தாவி போய்டுவார்!!

அவர்களை எந்த குறையும் சொல்ல முடியாது வேலைக்கு வரும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் கிட்ட ஓரளவுக்கு மேல் நெருங்கவும் முடியாது!!

டைனிங் டேபிளில் அடுக்கி இருக்கும்!! எது வேணும்னாலும் சாப்பிடலாம் ஆனால் தனியா!!!
இதுவே சின்ன சீனியின் சிறு வயசு!!

அதுவும் இவன் ஒத்தை பிள்ளை….. தன்கூட விளையாட கூட ஆள் இல்லாமல் வளர்ந்தவன்!! ஒத்தை பிள்ளையோட நிறுத்தும் பாஷன் வந்ததுக்கு அப்பறம் தான் பகிர்வு!! என்ற குணம் காணாமல் போனது!!!

பத்து வயதில் இந்த ஜெனெரேஷன் குழந்தைகளுக்கு டிப்ரெஸன்… இதர நோய்கள்!!! இதெல்லாம் வருவதற்கு தனிமையும் ஒரு காரணம்!!

எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா? ஒரு அண்ணன் இருந்திருந்தா? இந்த கேள்விகளை எத்தனை பேர் சொல்லி ஏங்கி கேட்டிருப்போம்? வாழ்வியல் மாற்றம் தான் மனசு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணம்!

ஆரா செஞ்ச எதையும் அவங்க அம்மா அவனுக்கு செஞ்சதில்லை!!! அவன் தூங்கும்போது வந்து பாத்துட்டு தலை கோதிவிட்டு செல்லும் அந்த ஒரு சில நாட்கள் மட்டுமே அவனுக்கு கிடைச்சது!!

அவன் வீட்டுக்குள் வந்ததும் ஆரா அவன் வாய் எச்சிலை அருவருப்பு இல்லாம துடைச்சப்பவே!! பையன் பிளாட்!!!

இப்போ அவள் செய்யும் சின்ன சின்ன அன்பான செயல்களில் மொத்தமா தன்னை தொலைச்சுக்கிட்டு… அவளிடம் தன் சுயம் தொலைப்பது பிடிக்காமல்…

தன் அம்மா ஏன் இப்படி எல்லாம் அன்பா இல்லை…??? தன் சின்ன வயசு தனிமையில் தான் அன்பவித்த சில வழிகள் ஏக்கங்கள் எல்லாம் மனசுக்குள் பூதாகரமாக வெடித்து ரணத்தை கிளப்பி விட!!

சுயபட்ச்சாதாபம் தோன… இதை இப்படியேய் வளர விடக்கூடாதுன்னு. விறு விறுன்னு எழுந்து பால்கனி ஊஞ்சலுக்கு போய் உக்காந்துட்டான்..

ஆரா தோசை எல்லாம் சுட்டு ஹாட்பாக்சில் வெச்சுட்டு, தோசை ஒரு தட்டில் எடுத்துக்கிட்டு.. ஒரு கிளாஸ் தண்ணீரோடு அவன் பக்கத்தில் ஊஞ்சலில் அமர..

அவன் இவள் இருக்கும் பக்கம் கூட திரும்பாம தூரத்து இருளை வெறிச்சு பாத்தபடி உக்காந்து இருக்க!!!

” சீனி சீனி..”

“ம்ம்ம்??”

“சாப்பிடலாமா?”

“…..”

தானாகவே அவன் கையை எடுத்து விரிச்சு ஒரு குட்டி துண்டு தோசையை விண்டு வைக்க… ஏதோ ஒரு விஷேச பொருளை பார்ப்பதை போல சீனி…. தன் கையில் இருந்த தோசையை பார்த்தே… நேரம் கடத்த…

ஆரா இது வேலைக்கு ஆகாது ன்னு தன் கையில் எடுத்து சீனிக்கு ஊட்ட ஆரமிக்க!!! சீனி வாய் திறந்து வாங்காமல் இறுக்கமா உக்காந்துருக்க!!

ஆரா “சீனி உங்களுக்கு நான் ஒரு கதை சொல்வேனாம் நீங்க நல்ல பிள்ளையா சாப்பிடுவீங்களாம்!!! சரியா!!”

“என்ன கதை ? என்ன கதை? நிஜ ஆர்வத்தோடே சீனி கேட்க”

அது அள்ளிராஜன் ஆனந்தவள்ளி கதை…!!

ஒரு ஊர்ல அல்லிராஜன் ன்னு ஒரு பெரிய தனக்காரர் இருந்தாராம்…அவருக்கு ஆனந்தவள்ளி ன்னு ஒரு மனைவியும் அமுதன் அன்பன் ன்னு ரெண்டு குழந்தையாம்!!! ரொம்ப சந்தோஷமா வாழ்த்தாங்க!!!

இப்போ தோசை வாய்க்குள் ஊட்ட ஆரமிச்சுட்டா… கதை கேட்கும் ஆர்வத்துல சீனி வாய்க்குள் வாங்கிக்கிட்டு ம்ம் போட..!!!

அப்போ ஒரு நாள் அந்த ஊரில பயங்கரமான மலையும் காத்தும் சேந்து அடிச்சிதாம்!! அப்போ ஊர் மக்கள் எல்லாரும் தங்கறதுக்கு இடம் இல்லாம தவிச்சாங்களாம்..

அப்போ அல்லி ராஜன் எல்லாரையும் தன் வீட்டுல தங்கிக்கும்படி கூப்பிட்டாராம்!!!

மக்கள் எல்லாராலும் அங்க தங்க முடியாது ன்னு பெண்கள் குழந்தைகள் மட்டும் அவர் வீட்டில் தங்கினாங்களாம்…

அள்ளிராஜனும் ஊர் ஆண்களோட சேர்ந்து மண்டபத்தில் தங்கிக்கிட்டாராம்!!! அப்போ இன்னும் நிக்காம மழையும் காத்தும் அடிக்க!!!

ஆனந்தவள்ளி ரொம்ப பயத்துட்டங்களாம்!! அமுதன் அன்பன் ரெண்டு பேரையும் தன் கைக்குள்ளே பொத்தி வெச்சுக்கிட்டு வீட்டில் ஒரு இடத்தில் உக்காந்துருதங்கலாம்!!!

அப்போ அங்க அந்த ஊர் ஆற்றின் கண்மாய் ஓடஞ்சி ஊருக்குள் தண்ணீர் வந்துடுச்சாம்!!

“ம்ம்ம் அச்சச்சோ!!! பாவம்!!” இது சீனி

அந்த தண்ணி எல்லாம் வீட்டையும் அடிச்சுக்கிட்டு போய்டுச்சாம்!! ஆனந்தவள்ளி இருந்த வீட்டுக்கு மட்டும் தான் தண்ணி வரலை!!!

அப்போ அந்த வீட்டுக்குள் தண்ணீர்ல அடிச்சுக்கிட்டு ஒரு மிக பெரிய முதலை வந்துடுச்சாம்!!! எல்லாம் பெண்களும் பயந்து அலற… முதலை பேசிச்சாம்!!

ஹா ஹா ஹா!!! எனக்கு இன்னிக்கு நல்ல இறை!!! உங்க எல்லாரையும் சாப்பிட போறேன்னு சத்தமா சொல்ல!! எல்லாரும் பயந்து நடுங்கிட்டாங்க!!

அப்போ ஆனந்தவள்ளி!! முதலையாரே!! எங்களை எல்லாம் ஒன்னும் செஞ்சிடாதீங்க!! ன்னு கெஞ்ச!!

அந்த முதலையோ!!! எனக்கு மிகுந்த பசி… உங்க ஊரில் இருக்கும் ரெண்டு கன்றுக்குட்டியையாவது சாப்பிட்டு போகலாம் தான் வந்தேன்!!

என்னால் மீண்டும் பசியோடு போக முடியாது ன்னு சொல்ல!!! ஆனந்தவள்ளி என்ன செய்றதுன்னு கவலையா ஆகிட்டாங்க!!!

அப்போ அந்த முதலை அங்கே இருந்தவர்களை பிடிக்க முயற்சி பண்ண!!

தன் வீட்டிற்கு தங்களை நம்பி வந்தவர்களை காப்பாற்றனும் ன்னு ஆனந்தவல்லியின் கணவர் சொல்லிவிட்டு போயிருந்தது அந்த வேளையில் நினைவுக்கு வர!!! என்ன செய்ய கடவுளே!! கடவுளே!! னு கதற!!!

அவங்க பக்கத்தில் இருந்த அவங்க குழந்தைகளும் கதற!!! ஒரு முடிவோடு உனக்கு எவளோ சாப்பாடு வேண்டும் ன்னு முதலைய பாத்து கேட்டாங்க!!

அந்த முதலையோ இரண்டு கன்றுகள் ஒரு பசு ன்னு கணக்கு சொல்லி!!! அங்காரமா சிரிச்சது!!

முதலை சொல்லி முடிக்கவும் அதை குடுத்துட்டா இங்கு இருப்பவங்களை ஒன்னும் செய்யமாட்டேன் ன்னு வாக்கு குடு ன்னு முதலை கிட்ட சத்தியம் வாங்கிக் கிட்டங்களாம்!!

அப்பறம் அடுத்த நிமிஷம் ஓம் நமசிவாய சொல்லி தானும் தன் ரெண்டு பிள்ளைகளையும் சேர்த்துகிட்டு முதலைகிட்ட உணவா விழுந்துட்டாங்களாம்!!

மழை ஓஞ்சு அல்லிராஜன் வீட்டுக்கு வந்ததும்!!! ஊர் மக்கள் சொன்னதை கேட்டு மனசோடிஞ்சு போய்ட்டாராம்!! அப்போ திடீர் ன்னு அந்த முதலை எல்லார் முன்னாள் தோன்றி!!! சிவ பெருமான் ஆஹ் மாறி அந்த ஆனந்தவள்ளி அமுதன் அன்பன் மூணு பேரும் உயிரோடு மீண்டு வந்தாங்கலாம்!!!

உன் கணவருக்கு கொடுத்த வாக்கிற்காக உன் உயிரையும் விட துணிந்த உன் பதிபக்தி கண்டு யாம் மெச்சினோம்!!

இனி நீ நீடுழி வாழ்வாய்!! உன் குடும்பத்துக்கு அனைத்து செல்வங்களும் சேரும்!!! எல்லார்க்கும் இல்லாதோற்கும் அறம் செய்ய வேண்டும்!! ன்னு வாழ்த்தி மறைய!!

அந்த செல்வந்தர் வீட்டில் உள்ள எல்லாம் பொருளும் தங்கமா மாறிடுச்சாம்!!!

அதுக்கப்புறம் அவங்க எல்லாருக்கும் உதவி செஞ்சி!! நீங்காத செல்வததோடு சந்தோசமா வாழ்ந்தங்களாம்!!

அதுனால எல்லாருக்கும் உதவனும்!!!
கொடுத்த ப்ராமிஸ் ய காப்பாத்தனும்!!
சரியா சீனி!!! ஆரா கதை சொல்லி முடிக்க!!!

சீனியின் மனத்திலோ!!! பல வேறு எண்ணங்களின் வர்ணஜாலம்!!!!

எனக்கு தான் இப்படி ஒரு அம்மா கிடைக்கல.. என் பிள்ளைக்கு இவள் தான் அம்மாவா வேணும்!!

இவளோட மொத்த பாசமும் எனக்கே.. என்
குழத்தளிர்களுக்கு மட்டுமே கிடைக்கும்… அது இவள் எனக்கு வேணும்!!! எனக்கு மட்டுமே வேணும்!!!
எண்ணம் ஆழமா ஏறங்கிடுச்சு மனசுல!!!

இப்போ நிஜமாவே சீனியின் இதயத்தில் காதல் அம்பை சொருகி விட்டுட்டா!!! இந்த ஆரா!!!

காதல் சில படங்கள்ல காட்டுவதை போல… ஒரு விரல் தீண்டலில் தோன்றுமா? ஒரேயொரு பார்வையில் தோன்றுமா? உண்மையா? பொய்யா ? தெரியாது!!!

ஆனா ஒரு ஆண் மனசில் இவ என் அம்மா போலவே இருக்கா!! அவுங்களை மாதிரி அன்பா இருக்கான்னு!! தோணும்.. அந்த நிமிஷமே அவனுக்குள் அந்த அன்பான பெண் மேல் காதல் பிறந்துடுச்சுன்னு அர்த்தம்!!!

அவ அழகா .. கலரா… உயரமா.. கட்டையா… இது எதுவும் அந்த காதலை பாதிக்காது!!

இதே தான் பெண்ணுக்கும் எந்த ஆணிடம் தன் தந்தையை உணராலோ.. அவனே!! அவளவன்!!

இந்த மாய நொடிகள் தான் அந்த 17 ஆவது மாடி வீட்டின் பால்கனியில் நடந்தது!!!

அபிஷியலி…. சீனி இஸ் இன் லவ்……!!!!!

(காதலின் தீபம் ஒன்று!! ஏற்றினாளே என் நெஞ்சில்!!)

ஆம் குண்டு குல்பி ஆரா தான்…. அவனவள்!!!

சீனி முடிவுக்கு வந்து ஐந்து நிமிஷம் ஆகிப்போச்சு!!!

அவள் ஊட்டிக்கொண்டே இருக்க… இவன் சாப்பிடுகிட்டே இருக்க!! ஆறு தோசை காலி!!!! வீட்டுக்கதவு திறக்கும் சத்தம் கேட்டதும்!! யார் ன்னு ஆரா எட்டி பார்க்க…வந்தது நாக்ஸ்…

ஆரா”அண்ணா உங்களுக்கும் ஹாட்பாக்சில் தோசை வெச்சிருக்கேன் பிரேஷ் அப் செஞ்சிட்டு வந்து சாப்பிடுங்க”
நாக்ஸ்…”சரிம்மா தங்கச்சி”

( சொல்லிய நாக்ஸ் மனசுக்குள்…

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே!!! பாசமலர் தங்கச்சி சென்டிமென்ட் பாடல்…!!!)

நாகராஜன் சென்டிமென்டில் விழுதிட்டார்!!! இந்த இரண்டு விக்கெட்டை வீழ்த்தியது கூட தெரியாத ஆரா ஊஞ்சலில் சீனிக்கு மெதுவா அமெரிக்கையா கொஞ்சமா தண்ணி தொட்டு இரண்டு விரல்கொண்டு வாயில் ஒட்டி இருந்த மசாலாவை துடைக்க!!!

சீனி அவள் கையை அப்படியே… தன் முகத்தோடு சேர்த்து பொத்தி வெச்சி!!! உக்காந்து இருக்க!! அதை விலக்க தோனாமல் அப்படியே ஆராவும் உக்காந்திருக்க!!!

கொஞ்ச நேரம் கழிச்சு ஆரா தன்னையே அறியாமல் கண்ணயர்ந்து விட…!!! ஒரு ஜில்மென்காற்று மேல பட விழித்து பார்த்தபோது சீனி அவளின் பஞ்சனைய மடியில் தலை வைத்து ஊஞ்சலில் அப்படி ஒரு தூக்கம்!!!

இவர்கள் இருவரின் தூக்கம் களைக்க முயன்ற மென்காற்று!!! இப்போ மறுபடியும் வீச!!!ஆராவும் அப்படியே கண்ணயர்ந்து தூங்கி போயாச்சு!!!!

நமக்கு எல்லாம் சோபாவில் உக்காந்து இருக்கும்போது சொலட்டிக்கிட்டு வரும் தூக்கம் எழுந்து போய் பெட்டில் படுத்தா!!! ஜீ பூம் பா போட்டது மாதிரி காணாம போய்டும்!!!
அதான் அழுப்பில் ஆராவும்!! எதுக்கு எழுந்துகிட்டு ன்னு இன்னைக்கு இங்கயே!! தூக்கத்தை போட்டுட்டா!!!!

காலையில் எழுந்ததும்… கிச்சன் க்கு போனா நாகராஜன் மூவருக்கும் டீயை போட்டுக் கொண்டிருக்க!!

“என்னன்னா நீங்க என்னைய கூப்ட்ருக்கலாம்ல.. நான் போற்றுப்பனே!!”

“இல்லம்மா….. புது இடம் நீ சரியா தூங்கினியோ இல்லையோ? அதான் எழுப்பல!! சீனி…”

” அசந்து தூங்கிட்டு இருக்காரு.. அதான் எழுப்பல.. போய் எழுப்பிட்டு வரவா??”

நாக்ஸ் “இல்லாமா வேணாம்… சீனி இவ்வளோ நேரம் தூங்கி நான் பாத்ததில்லை… அதான் கேட்டேன்!!”

“நீயும் பிரஷ் பண்ணிட்டு வந்து டீ எடுத்துக்கோ மா!!”

“தான்க்ஸ் அண்ணா இதோ எடுத்துகிறேன்”

ஆரா அந்த பக்கம் நகர்ந்ததும்… நாக்ஸ் சீனியை பார்க்க போய்ட்டான்… சீனி அங்கு ஊஞ்சலில் உக்காந்து விசில் அடிச்சுக்கிட்டு…. பாட்டு வேறு!!!

தேவதை அவளொரு தேவதை!!
அழகிய பூமுகம் காணவே!!
பூக்களும் பூக்குமோ?!!

நாக்ஸ் ” என்னடா நடக்குது இங்க?? நானும் ஒருத்தன் இருக்கேன் டா”

சீனி “மச்சி!!!!! மச்சி!!! நாக்ஸ்சின் தோளில் சாஞ்சிக்கிட்டு… மச்சி ஐ அம் இன் லவ் டா!!! மச்சி!!!” பயங்கரமான வெட்கத்தோடு!!

அப்பப்பா!!!! வாவ்!! ஆண்களின் வெக்கம் இவ்ளோ அழகா?? சொன்னா நம்புங்க…..\ud83d\ude09\ud83d\ude09 சீனி ரொம்ப அழகா இருந்தான் பா!!!

“டேய் நியூம் என்னென்னவோ பழி வாங்குறேன் அது இதுன்னு சொன்ன .. நான் பணத்தை பறி கொடுத்தவன் கோவம் இருக்க தான் செய்யும்ன்னு சும்மா இருந்தேன்!!”

“ஆனா இப்போ இந்த பொண்ணு நடந்துகிறது எல்லாம் பாத்தா அவளை நாமதான் தப்பா பிடிச்சிட்டு வந்துட்டோம் ன்னு தோணுது..!!”

“நல்ல பொண்ணா தெரியுறா டா மாப்ள”

“எதுக்கும் இன்னொரு தடவை… அந்த பேங்க் ஆள் சிக்குனானே அவன்கிட்ட விசாரிச்சு பாரு டா!!!”

“இந்த பெண்ணை பாத்தா அப்படி பட்ட பொண்ணா தெரியல!!! இதற்கு சீனி ஒரு அர்த்தம் விலங்காத பார்வையை நக்ஸ்ஸை நோக்கி வீச!!!

இல்ல மாப்ள….. சொல்லணும்…. தோணிச்சு!!!

“சொல்லிட்டு நாக்ஸ் வேகமா வெளிய போக போனவன் பால்கனி வாசல் பக்கம் நின்னு!!! மச்சி நீ உண்மையா தான லவ் பண்றேன்னு சொல்ற??” ன்னு கேட்க

சீனி “என்ன பத்தி உனக்கு இவ்ளோதான் நம்பிக்கையாடா??” கண்ணு சிவக்க நண்பன் தன்னை புரிந்துகொள்ளவில்லை எங்கிற ஆதங்கத்தில் கேட்க!!!

நாக்ஸ்” வேகமா அவன் பக்கத்தில் வந்து இல்லடா!! இல்லடா மச்சி சாரி டா!!! நா அந்த அர்த்தத்தில் கேட்கலை டா!! மனிச்சிக்கோ டா!!”

“ஆராவ பழி வாங்கணும்… அது இதுன்னு சொல்லிட்டு இருந்தியா… அதான் டா எதுவும் பழி வாங்க பொய் சொல்லி…..” வார்த்தையை முழுதாக சொல்லாமல் நாக்ஸ் இழுக்க…!!

சீனி ஒரு கையை நாக்ஸ் மூஞ்சி முன்னாடி காட்டி நிப்பாட்டு!! டா என்பது போல!!! காமிச்சிட்டு!!!

” நேத்து வரைக்கும் எப்படியோ!!! ஆனா நேத்து ராத்திரியில் அவ எனக்கு சாப்பிட சாப்பாடு ஊட்டினத்துக்கு அப்பறம் அவளை என் அம்மாவை போல நெனைக்கிறேன் டா மச்சி” “அவ்ளோ பாசமான பொண்ணா இருக்காடா… நான் பொய் சொல்லி நடிக்கிறது கூட அவளுக்கு தெரியல டா… அப்பாவி யா இருக்கா”

“அவள் என்ன தப்பு வேணும்னாலும் செஞ்சிருக்கட்டும்!! ஆனா இனி அவளோட நல்லது கெட்டது எல்லாம் என்னோட தான்”… அவளோட எல்லாமே இனி என்னை சார்ந்தது…..” சீனி

பேசிக்கிட்டு இருக்கும்போதே!! காலடி சத்தம் கேட்க!!! “அவ வந்துட்டா டா ” நாக்ஸ் அபாய அறிவிப்பு குடுக்க!!!

தன்னுடைய பழைய நடிப்பை சீனி தொடர…
“சீனு டீ குடிக்கலாமா?? கேட்டு கப்பில் ஊட்ட…அதுவும் அவனுக்கு ரொம்ப பிடிச்சி தொலைத்தது!!!!

(சொல்லாமலே படத்தில் லிவிங்ஸ்டன் கவுசல்யாவிடம் ஊமையா நடிப்பார்!!!!

கடைசியில் அவள் காதலுக்காக உண்மையாகவே ஊமையா தன்னை மாத்திக்குவார்…

அதே போல மாறி இவள் இப்படியே இருந்துட்டா கூட தேவலை என்று பல எண்ணங்கள் அலைமோதிச்சு!!!)

அவள் எல்லாம் முடிச்சிட்டு!!! எழுந்துக்க!!! போக!! டக்குனு அவள் கை பிடிச்சு.. அவளை போகாமல் பிடிச்சு நிக்க வெச்சி!!! கண்ணோடு கண் பார்த்து!!! அவளிடம் சிறு கீற்று புன்னகையோடு !!!!

சீனி ” ஐ லவ் யூ குல்பி”

சிறு அதிர்ச்சிக்கு பின்… ஆராவும் “மீ டூ சீனி கண்ணா”
சொல்லிட்டு நாக்ஸ்சிடம் “அண்ணா காலை டிபன் செஞ்சிடறேன் சாப்பிட்டு தான் ஆஃபீஸ் போகணும்!! இது என் ஆர்டர்!!!” அன்பு கட்டளை போட்டு போக!!!

நாக்ஸ் சீனியை ஒரு அர்த்தபார்வை பார்த்து!!! ” உனக்கு சொல்ல வேண்டியதில்ல… பாத்துக்கோ டா” சொல்லிட்டு உள்ளே போய்விட!!!

மறுபடியும் ஆரம்ப புள்ளிக்கே வந்து நின்றது சீனியின் ஆரா பத்தின இன்வெஸ்டிகேசன்!! இவ நல்லவளா?? கெட்டவளா????

உன்னைப் பற்றி என் கணிப்பு
ஒவ்வொரு நாளும் புதிதாய்!!
ஒவ்வொரு முறையும் வேறாய்!!
உன் ஆதி அந்தம்… அறிய
ஆண்டுகள்ஆயிரம் போதாதடி!!!

இப்போ ஆரா வீட்டில் இருந்தா சீனி எதுவும் பண்ணமுடியாது…. அவளை என்ன செய்யலாம் இப்போ???? யோசனையோ யோசனை?????

வேலைக்கு லீவ் ரெண்டு நாளுக்கு மட்டுமே சொல்லிருந்தான்…

அந்த திருட்டு பெரிச்சாலியை பிடிச்சு!!
மட்டைபண்ணி போலீஸில் பிடிச்சு குடுக்க ரெண்டு நாள் போதும்னு கணக்கு போட்டு வெச்சுருந்தான்!!! ஆனால் விதி இவனுக்கு வேற கணக்கு போட்டு வெச்சுடிச்சு!!

( சீனியோட சேர்ந்து நானும் தான் யோசிக்கிறேன்!!!)

தேள்பத்ரிசிங்!!! ஹா ஹா இருக்கவே இருக்கான் நம்ம ஜீனிபூதம் நாகராஜன்…!!!

மெதுவா பூனை நடைப்போட்டு அக்கம் பக்கம் பார்த்து ஆரா எங்கே??? தேடிக்கிட்டே!!! நாக்ஸ்ய கை பிடிச்சு இழுத்துகிட்டு பாத்ரூம் நோக்கி ஓட்டம்!!!

இப்போதக்கி ஆராதனாவுக்கு தெரியாமல் ரகசியமா பேச இவங்களுக்கு கிடைச்ச ஒரே இடம்!!!

பைப்பை திறந்து விட்டுட்டு!!! ஹே!! ஹே!!! தாரா!! ரா !!! ரா!! ஹே ஹே!!!!

(என்னதிது)????

அதாங்க…. இந்த சீரியல் வில்லன் வில்லிகள்.. அவங்களோட பிளான் சொல்லும்போது ஒரு பயங்கரமான மியூசிக் போட்டு!!!!

அவங்க பண்ணும் அதரப்பழைய பிளான் ய நமக்கு தெரியாம மறைப்பதற்கு போடும் மியூசிக்!!!

அவ்ளோ ஓர்த் இல்லை ன்னு நீங்க திட்டறது புரியது!!! ஹீ ஹீ…. இதுதான் நமக்கு நாமே!! பில்ட் அப் திட்டம்!!!

சீனி நாக்ஸ்சிடம்… ” டேய் இப்போ என்ன பண்ற!! அவகிட்ட போய் நேத்து காய்கறி கேட்டியே மா!!! எனக்கு அதெல்லாம் வாங்கி பழக்கம் இல்லை இங்க மார்க்கெட் பக்கத்தில தான் இருக்கு நீயும் வந்தினா என்னென்ன தேவையோ வாங்கிட்டு வந்துடலாம்!!ன்னு சொல்லி அழைச்சிட்டு போ…

நல்ல தூரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு… அங்கு போய்ட்டு காய்கறி, சிக்கன் ,மட்டன் ன்னு ஏதாவது வாங்கி சுத்திக்கிடேய் இரு… நீங்க வரங்காட்டியும் நான் ஆரா தான் அந்த ஹேக்கர் ஆஹ் இல்லையா ன்னு அவளை பத்தின எல்லா தகவலையும் செக் பண்ணி கணபார்ம் பணிக்கிறேன்!!!

அப்பறம் நான் கால் பன்ணினதும் அவளை திரும்ப அழைச்சிட்டு வா!! சரியா!! இதான் அந்த மிகப்பெரிய திட்டம்!!! (மொக்க திட்டம் தான் ஆனால் நமக்கு இப்போதைக்கு இது போதும்!!!)

இந்த திட்டம் சரியா செய்யப்பட்டு கொண்டிருக்கும்போதே ஆரா குருக்கில் பூந்து!!! இவரை தனியா விட்டுட்டு எப்பிடி அண்ணா போறது?? தனியா இருக்க விட்டிட்டு போறது சரியா வராது!! ன்னு அக்கறை எடுத்து சொல்ல!!

இல்லம்மா அவன் வெளி இடங்களுக்கு வந்தால் கொஞ்சம் சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிப்பான்!! அப்பறம் அவனை கண்ட்ரோல் பண்ணுறது ரொம்ப கஷ்டம்!!!

அவனை தூங்க வெச்சிட்டு நாம போய்ட்டு
வந்துடலாம் ன்னு அவளை வித விதமாக சமாதானம் செஞ்சி கூப்பிட்டு கிளம்பி வெளியே போன அடுத்த நொடி!!

சீனி தன் லேப்!! செல் ரெண்டோடு!! தன் டிடெக்ட்டிவ் வேலையை ஆரமிச்சாச்சு!!!

அவளா இருக்க கூடாது!!!
அவளா இருந்துட்டா????
பழி வாங்குவேனா? இல்லை பாசம் காட்டுவேனா?
ஆகப்பெரிய குழப்பதோடு!!!!

வருவாள் பூவழகி!!!!

பூ- 6

ஆராவும் நாகராஜனும் கிளம்பி வெளியே போனதுக்கு அப்பறம்.. சீனி அந்த பழைய பெருச்சாளி பேங்க் காரனிடம் கால் பண்ண!!! அவன் எடுக்கவே இல்லை!!

அப்பறம் இவர் போன தடவை செஞ்ச வேலைக்கே அவர் மனைவிக்கிட்ட மாட்டாமல் தப்பிச்சது!!! தம்பிரான் புண்ணியம்!!!

இப்போ மறுபடி இவன் கால் பண்ணினா அட்டெண்ட் பண்றதுக்கு… அவருக்கு என்ன பைத்தியமா??? அஸ்கு புஸ்கு!!

ஏற்கனவே அவசரத்தில் வேலை பாத்துட்டு இருந்த சீனி!!! இப்போ இன்னும் கடுப்பாகி!!! அந்தாள் மனைவி நம்பர் தன் டிடெக்ட்டிவ் பைல்ளில் இருந்து தேடி எடுத்து அந்தம்மாவுக்கு கூப்பிட!!!! அவர் மனைவி போனில்!!!

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்!!!
எனது கனவு….. கனவை!! எடுத்து செல்ல வந்தேன்….!!!

பஞ்சதந்திரம் கமல் பாட்டு ரிங்க்டோன்!!!

அப்போதான் சாப்பிட்டுட்டு இருந்த அவருக்கு புரையேறி… வாயில் இருந்து சாப்பாடு இப்போ ஏர் ல பாஸ் ஆகி!!!! அங்கு நின்னுட்டு இருந்த மனைவியின் முகத்தில்!!!!

ஆஹ்ஹ்ஹ!!!!! இந்த அலறல் அவர் வாயில் இருந்து!!! இப்போ என்ன நடந்துருக்கும் ன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்!!!

ஒழுங்கா சாப்பிட கூட தெரியாதா!!!??? அதற்குள் போன் கட் ஆகி!!! மறுமுறை அடிச்சத்தும் அதை அட்டென் பண்ணினாங்க!!

அது என்ன மந்திரமோ?? மாயமோ?? பெண்களுக்கு முக்கியமான போன் வரும்போது தான் இந்த புரூஸ் எல்லாத்துக்கும் ஏதாவது காணாம தேட சொல்லும்!!

புள்ளைங்களுக்கு கக்கா!! சுச்சா!! எல்லாம் வரும் கழுவி விடு மா!!! தேடி குடு டி!!! இப்படி பல்வேறு தொல்லைகள்!!

சீனி பொறுமை அற்ற குரலில் “மேடம் நான் சார் வேலை செய்யும் பாங்கில் இருந்து பேசுறோம்!!”

“சார்க்கு பாங்கில் ஒரு அப்பரைசல் கிப்ட் வந்துருக்கு!! மனைவி குழந்தைகள் கூட பத்து நாள்!! டூர்!! அதை பத்தின விவரம் சொல்ல கூப்பிட்டோம் அவர் போன் அட்டெண்ட் பண்ண மாட்டேங்கிறார்…!! கொஞ்சம் அவர்கிட்ட குடுக்க முடியுமா?”

போன் ரிசீவர் ல கையை வெச்சு மரச்சிக்கிட்டு!!!
இவர்தான் எங்கேயும் கூப்பிட்டு போறது இல்லை… வந்த கிப்ட்யும் வாங்க மாட்டேன்குது… இதை!!!!

அதற்குள் சீனி “ஹலோ…”

“இதோ சர் குடுக்கிறேன்”

“என்னங்க!!!! என்னங்க!!!”

” ஹலோ சார் யார் பேசறீங்க!! அந்தாள்

“கிறிஸ்டோபர் பேசறேன் !!!! கிப்ட் பாக்ஸ் ஞாபகம் இருக்கா???”

மனைவி அந்த பக்கம் போயாச்சு பாத்து உறுதி பண்ணிக்கொண்டு!!! “சார் அதான் நீங்க கேட்ட விவரம் எல்லாம் சொல்லிட்டனே?? மறுபடியும் ஏன் சார் என்னை தொல்லை பண்றீங்க?? ஆதங்கப்பட!!!

“யோவ் நீ சொன்ன தகவல் பொய் தானே!! அந்த மெயில் எல்லாம் அனுப்பியது யார் ன்னு ஒழுங்கா சொல்லிடு!! இல்ல நடக்கிறதே வேற!!!

நான் குடுத்த தகவல் எல்லாமே ஒரிஜினல் தான் சார் !! நிஜமாகவே அதுதான் அந்த ஹேக்கர் மெயில் ஐடி அவங்க வாரம் ஒரு மெயில் பண்ணுவாங்க!! அந்த மாசத்தில் அவங்க அனுப்பின எல்லா மெயில்யும் உங்களுக்கு குடுத்துட்டேன்!!

இனி எங்கிட்ட எந்த தகவலும் இல்லை” என்னை விட்ருய்யா!!! நான் பாவம்!! என்கிற ரேஞ்சுக்கு கீழ் இறங்கி வந்து பேச!!

இப்போ சீனி அவன் படிச்ச என்ஜினீயரிங் மூளை வெச்சி!! அவனும் எதிக்கள் (ethical) ஹேக்கிங் பண்ணலாம் அப்படின்னு அந்த ஆள் குடுத்த மெயில் ஐடி மூலமா சர்வர் டீடெயில்ஸ் கிடைக்குமா??? என்று பார்க்க!!!!

அது எப்படி ஹேக்கிங் செய்வது என்பது பத்தி கொஞ்சம் தெரிஞ்சிப்போமா??

ஹேக்கிங் செய்வது எப்படி என்று பிராக்டிக்கள் யா
இந்த நடைமுறை சூழ்நிலையில், ஒரு சர்வேர் அட்டாக்கிங் வழிமுறை பற்றி நாம் பார்க்கப்போகிறோம்.

நாம் www.ravenda.org ஐ டார்கெட் யா குறிவைக்கிறோம் என்று கருதுவோம்.

இது சட்டவிரோதமானது என்பதால் நான் அதை உண்மையில் ஹேக் செய்யப் போவதில்லை. கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே இந்த களத்தைப் பயன்படுத்துவோம்.

நீங்க முயற்சி பண்ணாதீங்க பாஸ்!!! டூ நாட் ட்ரை அட் ஹோம்!!!! வில் லேண்ட் யூ இன் ஜெயில்!!! பெயில் க்கு நான் வரமாட்டேன்!!! ஹீ ஹீ

நமக்கு என்ன தேவை

ஒரு இலக்கு www.ravenda.org
பிங் தேடுபொறி (Bing search engine)
SQL ஊசி கருவிகள் (injections tools)
PHP ஷெல் (shell)

நாங்கள் dk ஷெல் http://sourceforge.net/projects/icfdkshell/ ஐப் பயன்படுத்துவோம்.

தகவல் சேகரிப்பு:

இங்கு தான் உங்கள் சர்வர் தகவல்கள் ஆட்கள் மூலம் அல்லது கார்டு!! பின்!! மூலம் திருடுவார்கள்!! அதை வைத்து உங்கள் ip address கண்டு பிடிப்பார்கள்

எங்கள் டார்கெட்டின் ஐபி முகவரியைப் பெற வேண்டும் மற்றும் அதே ஐபி முகவரியைப் பகிரும் பிற வலைத்தளங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இலக்கின் ravenda வின் ஐபி முகவரி (ip address)மற்றும் ஐபி முகவரியைப் யூஸ் செய்யும் மற்ற வெப்சைட் அட்ட்ரஸ் கண்டறிய ஆன்லைன் டூல்ஸ் யை பயன்படுத்த வேண்டும்!!

உங்கள் search engines இல்

http://www.yougetsignal.com/tools/web-sites-on-web-server/ என்ற URL ஐ உள்ளிட்டு!!

Www.ravenda.org ஐ இலக்காக உள்ளிடவும்

செக் பட்டனைக் கிளிக் செய்க!!

பின்வரும் ரீசல்ட் ஐ பெறுவீர்கள்!! ( picture 1 below)

மேலே உள்ள முடிவுகளின் அடிப்படையில், இலக்கின் ஐபி முகவரி 69.195.124.112 கிடைக்கும்!!

ஒரே சர்வேர் இல் 403 வெப்சைட்கள் இருகிறது!!

அடுத்த ஸ்டெப் SQL இன்ஜெக்ஷன் பாதிப்புகளுக்கு மற்ற வலைத்தளங்களை ஸ்கேன் செய்வது.

குறிப்பு: டார்கெட்டின் ஒரு SQL ஈஸியாக பாதிக்கப்படக்கூடியதைக் கண்டுபிடிக்க முடிந்தால், பிற வலைத்தளங்களைக் கருத்தில் கொள்ளாமல் அதை நேரடியாக சுரண்டலாம்!!

உங்கள் வெப் சேர்ச்சில்” www.bing.com URL ” ஐ உள்ளிடவும்.

இது பிங்குடன்(bing) மட்டுமே செயல்படும், எனவே கூகிள் அல்லது யாகூ போன்ற பிற தேடுபொறிகளைப் பயன்படுத்த வேண்டாம்

பின்வரும் சேர்ச் பாக்ஸில
ip: 69.195.124.112 .php? id =

என்று டைப் செய்யவும்!!!

இங்கே,

“ஐபி: 69.195.124.112” ஐபி முகவரி 69.195.124.112 உடன் வலை சேவையகத்தில் ஹோஸ்ட் செய்யப்பட்ட அனைத்து வலைத்தளங்களுக்கும் தேடலை கட்டுப்படுத்துகிறது.

“.Php? Id =” URL க்கான தேடல் GET மாறிகள் SQL அறிக்கைகளுக்கு ஒரு அளவுருக்களைப் பயன்படுத்தின.

அதன்பிறகு, பின்வரும் முடிவுகள் கிடைக்கும்!!!

(picture 2 below)

மேலே உள்ள முடிவுகளிலிருந்து நீங்கள் பார்க்க முடிந்தபடி, SQL injection அளவுருக்களாக GET மாறிகளைப் பயன்படுத்தும் அனைத்து வலைத்தளங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அடுத்ததி sql இன்ஜெக்ஷன் பாதித்த வெபிஸிட்ஸ் எல்லாவற்றையும் ஸ்கேன் செய்ய வேண்டும்!! அதற்கு சில tools இருக்கின்றன!!

PHP ஷெல் ஆனது ஸ்கேன் result கொடுத்து விடும்!!
இது சட்டவிரோதமானது என்பதால் பட்டியலிடப்பட்ட எந்த வலைத்தளங்களையும் நான் ஸ்கேன் செய்யவில்லை!!

அவற்றில் ஒரு லினக்ஸ் இல் உள்நுழைய முடிந்தது என்று வைத்துக் கொள்வோம்.

அதாவது!! http://sourceforge.net/projects/icfdkshell/ இலிருந்து டவுன்லோடு செய்த PHP ஷெல்லை பதிவேற்ற (அப்லோட்) வேண்டும்.

நீங்கள் dk.php பைலை பதிவேற்றிய URL ஐத் திறக்கவும்.

பின்வரும் சாளரத்தைப் (window) பெறுவீர்கள்!!! (picture3)

இதில் வரும் URL ஐக் கிளிக் செய்தால் சர்வேர் டார்கெட்டின் உள்ள கோப்புகளுக்கான entrance allow கிடைக்கும்.

உள்ளே சென்று உங்களுக்கு என்னென்ன பைல்ஸ் போல்டர்ஸ் வேண்டுமோ அதாவது ஈமெயில்!! பாசுவர்ட போன்ற எல்லாமே லட்டு போல் கையில் வந்து கிடைத்து விடும்!!

அவ்ளோதான் ஹாக்கிங்!! இதில் எதிக்கள் ஹாக்கிங் என்பது வரைமுறைகளுக்கு உட்பட்டு அதாவது முறையான அரசு அல்லது தனியார் அனுமதியோடு செய்யப்படும்!!

இவ்வகை செயல்கள் website அல்லது சர்வர்களின் நம்பகத்தன்மை அறிவதற்கு சோதனை முயற்சியாக செய்யப்படும்!!!

சீனி இதுபோல் ஒரு முறையில் செக் செய்ய!! ஆரா உபயோகித்து வரும் சிஸ்டம் சர்வர்குள் பூந்து அவள் பத்தின அனைத்து தகவல்களையும்.. சீனியின்
லேப்டாப்குள் கிள்ளி கொட்டாமல் அள்ளி வந்து கொட்டி சென்றது!!

இப்போ ஆரா சிஸ்டமில் உள்ள அவள் மெயில் முதல் அவள் அத்தனையும் டவுன்லோடு பன்னி…. கல்ப்ரிட் நம்பர் 1 அப்டின்னு போல்டர் போட்டு முடிச்சுட்டு மணி பார்க்க இவன் ஆரமிச்சு இரண்டு மணி நேரம் ஆகிருச்சு!!!

சரி நாக்ஸ் மொபைல் நம்பர் எடுத்து ஒரு செய்தி!!! “ஒர்க் முடிந்தது… அவளை கூப்பிட்டு வந்துடு” சீனி செம கோவமான அழுத்த குரலில்!! சொல்லிட்டு வைத்துவிட!!

அங்கு ஆரா எல்லா பொருளும் வாங்கி முடிச்சி துணி கடை பக்கமா கிராஸ் பண்ணும்போது ஒரு பொம்மைக்கு போட்டிருந்த சட்டை அவள் கருத்தை கவர!!

அங்கு நின்னு அதையே பார்த்துக்கொண்டிருக்க!!

கொஞ்சம் கொஞ்சமா அந்த பொம்மையின் முகம் மரஞ்சி… அங்கு சீனியின் முகமா மாறி தெரிய!!

சீனி செம ஸ்மார்ட் ஆஹ் ஹாட் யா அந்த இங்க் ப்ளூ களர் ஜீன்ஸ் பாண்ட் அதே கலர் ஒவர்கோட்யோடு உள்ளே ஒரு வெள்ளை நிற பனியன் போட்டுக்கிட்டு!!!

அந்த கண்ணாடி ஷோவ்கேஸ் இல் இருந்து மெதுவா இறங்கி வந்து!!!! ஆராவின் கை பிடிச்சு வேகமா ஒரு சுண்டு … சுழற்றி விட்ட பம்பரம் போல ரோலிங்கீல் ஆரா அவன் நெஞ்சில் மோத!!

இவள் அவன் மீதிலிருந்து நகர முயல!! தன் ஒரு கையால் அவள் பின்னத்தலை அழுந்த பிடிச்சு!!! இன்னோரு கை பிடிக்க வாகான இடம் தேடி உடலின் மேலே அங்கங்கு அலைய!!!

அலைந்த கைகளுக்கு இவள் அணை போட!!!

போடி!! நீ எனக்கே எனக்கென கொடுக்கப்பட்ட ஜோடி பெண்!! இந்தாடா இவளை வெச்சுக்கோ ன்னு கடவுள் இந்த ஆதாம்காக படைத்த ஏவாள் டி நீ!!

உன் உடம்பில் ஒரு தூசு தும்பு கூட எனக்கு தெரியாமல் இருக்க கூடாதுன்னு!! நான் உன்னை தொட உன்கிட்ட கூட கேக்கணும் ன்னு அவசியம் இல்லை என்பது போல!!

தன் விலா எலும்பை கொண்டு படைக்கப்பட்ட தன்னுடைய மும்தாஜ் ய ஷாஜஹானா மாறி!!! அவள் விலா எலும்புக்கு கீழ … அவள் இடுப்பை அழுத்தமாக பற்ற!!!!

அப்பப்பா!!! ஆஹ்ங்!!! ஒரு வேக இழுவை!!! பூமியில் உள்ள மொத்த காற்றும் அவள் நுரைஈரல் நிரப்பும் அளவு ஓர் இழுவை!!!

அதோடு விட்டானா அந்த வில்லன் பிடித்த பிடியோடு நில்லாமல்!!! அவளை சடக்கென தன் சிக்ஸ் பேக் மார்போடு சாரி சிங்கிள் பேக் மார்போடு வலிக்க அழுத்தி!!

அவள் பஞ்சுமிட்டாய் உதடுகளை கவ்விட்டார்!!! சீனி

இப்போது இவள் தன் முழு பலம் கூட்டி துள்ளி குதிக்க!! பக்கத்தில் போன் பேசிட்டு வந்த நாக்ஸ்!! இவளை ஒரு விதமான பார்வையில் “ஆரா என்னம்மா ஆச்சு?? என்னாச்சு?? ஏதும் பூச்சி கடிச்சிடுச்சா??” பதட்டமான கேள்வி கேட்க!!

ஆரா பக்கம் ஒரு பதிலற்ற மௌனம்!!!!

மறுபடியும் நாக்ஸ் சொல்லுமா தங்கச்சி என்னாச்சு?? யாரும் வம்பு பன்ணினங்களா? நானும் இங்க தான இருந்தேன் அப்படியும் ஒன்னும் நடந்த மாதிரி தெரியல??

என்னாச்சு மறுபடியும் கேட்டுக்கொண்டே இருக்க!!

ஆரா கண்ணு கலங்கி கண்ணில் இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் கன்னங்களில் உருள!!!

நாக்ஸ் பதட்டத்தோடு!! அம்மா தங்கச்சி அழுகாத மா!! வழி நெடுகிலும் சமாதானம் பண்ணிக்கொண்டு வர!!

அவள் அழும் காரணம்!!! அவள் மட்டுமே அறிந்தது!!

முல்லை அவளை ஒழுக்கமான பொண்ணா தான் வளர்த்து இருக்காங்க!! இது வரைக்கும் இது போல எங்கும் தன் எண்ணங்கள் கூட நெறி தவறி நடந்தது கிடையாது!!

ஆனா ஒரு சின்ன குழந்தை அளவு உள்ள ஒருத்தனை போய் என் மனசு இப்படி தப்பா பாகுத்துனா!! எங்கோ ஏதோ என்னிடம் தப்பு இருக்கு!!

நான் சரி இல்லை!! சரி இல்லை ன்னு மண்டைக்குள்ள குழப்பி குழப்பி!! தனக்குள் மறுகிக்கிட்டு வந்துட்டு இருக்க!!

இங்கு வீட்டுல சீனியோ!! தனக்கு அவள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் மறுபடியும் பொய்த்து போக!!
ஏற்கனவே ஒரு முறை தீக்காயம் பட்ட இடத்தில் மறுபடி ஒரு சூடு விழுந்தால் எப்படி வலிக்குமோ!! அப்படி ஒரு வலி விட்டு விட்டு!!!

அவனும் அங்கும் இங்கும் கூண்டுபுலி போல் ரூமின் நீல அகலத்தை அலந்துகிட்டு நடந்துட்டு இருந்தான்!!!

ஒருத்தி தன் மனம் போகும் போக்கை
எண்ணி கலங்கி இருக்க!!

அவள் மனம்கவர் மன்னவனோ!!

தன்னவளின் பொய்மை போக்கை
எண்ணி கலங்கி தவிக்க!!!

யார் கணக்கு நிலைக்குமோ??
யார் கணக்கு போய்க்குமா??

யார் அறிவார்???

(சிறு பொழுது பிரிந்ததற்கே பெரும்பொழுது கதறிவிட்டாய்!!!

ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ!!!

வலி என்றால் காதலின் வலி தான் வழிகளில் பெரிது)!!

( எம்மா பல்லு வலி வந்துருக்கா?? உனக்கு??)

வருவாள் பூவழகி

(பாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும்!! பாட்டு வரிகள் இடையில் வந்தால் அந்த சிடிவேஷன் புரிந்துகொள்ள சுலபமா இருக்கும் ன்னு தான் போடுவது!! ஒரு ரீடர் கேட்டது!!! உங்களுக்கும் சொல்லி விடுகிறேன் காரணத்தை)

உங்கள் நதி @ நந்திதா ராம்

பூ – 7

சீனி கூண்டு புலி போல!! அங்கும் இங்கும் தன் அறையின் நீல அகலத்தை அளந்து கொண்டு இருக்க… கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் சிந்தனை மீட்டர்!!! யோசனை!!

அதுவும் அவள் பத்தின தகவலில் இன்று அதிகாலை தன் சீனியர் க்கு அடுத்த வேலை எப்போ சொல்வீங்க?? இங்கு புதுசா ஒரு வேலை கிடைச்சுருக்கு… அமௌண்ட் நிறையவே வரும் பார்ட்டி பணக்காரன்!! ன்னு கடைசியா அனுப்பி இருந்த் செய்தி பார்த்ததும்….

யோசனையில் இருந்து… கோவம் கோவம் ன்னு சீனியின் மூளை அதிவேகமாக அடுத்த மீட்டர் க்கு மாற… முகம் எல்லாம் தீ கோவம் பூசி!!

கண்ணெல்லாம் சிவந்து.. அந்த ருத்ர ஈஸ்வரனை ஒத்து இருந்தது முகம்!!

அவள் இவ்ளோ நல்லவளா வேஷம் தான் போட்றா… இங்கு எதுக்கு வந்துருப்பா…????

என் அப்பா அம்மா ஊருக்கு போறதாக சொல்லி தானே வர சொன்னோம்!! அதனால என்னை ஏமாத்தி பாசம் காட்டுவதாக நடித்து… அம்மா அப்பா வரும் முன்னாடி எல்லா வகையிலும் என் பணம் சொத்துக்களை திருடி எடுத்துக்கொண்டு போகலாம் ன்னு தான் வந்துருப்பா!!

அவளைப்போய்…. ச்சை… அவளைப்போய்… காதலித்து இப்போ மறுபடி நல்லவளா இருப்பான்னு நம்பி… இந்த பாழாய்ப்போன மனசு தான் காரணம்… எல்லாம் வேஷம் வேஷம் போற்றுக்கா!!!

அவள் ஒரு திருடின்னு தெரிஞ்சும் அவளை மறுபடியும் நம்புரியே டா!!! மனசாட்சி குற்றம் சுமத்த!!!

இப்போ அவன் தன் மீதே குற்றம் சுமத்திகொண்டு…. தன் காயத்தை தானாகவே…. மேலும் கீறி கீறி ரணப்படுத்திக்கொள்ள…..

100 இல் இருந்த கோவம் 200 க்கு தாவ…!!!

அங்கு இருந்த அழகான பெல்ஜியம் கண்ணாடி டேபிளை கையால் குத்தி.. அது உடைந்து…. கையில் குத்தி கிழித்து…. அறை எங்கும் கண்ணாடி சிதறி கிடக்க… கையில் வலியும் ரத்தம் கூட துடைக்க தோன்றாமல்.. வழிஞ்சு என்கெங்கும் அவன் ரத்தம் சொட்டு சொட்டாக….

எல்லா பொருள்களையும் அங்கும் இங்கும் வீசி எறிந்து நிஜமாய் இவனுக்கு மூளை கலங்கி விட்டதோ எனும்படி அந்த அறை முழுவதையும் களைத்து போட்டு!!! புரட்டி எடுத்துவிட்டான் சீனி….

(திமு திமு தீம் தீம் திமு தல்லாடும் மனம்
நெஞ்சில் காதல் மணம்!
ஓ அன்பே நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும்..)

சீனியின் கெட்ட பழக்கம் என்ன என்பது இப்போது கொஞ்சம் புரிந்திருக்கும்….

சீனி பாசம் வைத்துவிட்டால் அவர்களை நூறு சதம் அவர்களை நம்புவான்!!! அன்பும் 100 சதமே….!!
ஆனால் அவர்களின் ஒரு சிறு தவறோ?? துரோகமோ??

அவனால் தாங்கிக்கொள்ள முடியாது…. அவனையும் காயப்படுத்தி அவர்களையும் காய படுத்தி விடுவான்!!! அந்த காயத்தில் இருந்து மீள்வது அவ்வளவு கடினமாக இருக்கும்!!!

அதையும் செய்துவிட்டு … தானும் நிம்மதி இல்லாமல் அவர்களையும் காயம் செய்து.. ஒரு வழி செய்து விடும் குணம்!! கோவம் ஏகத்துக்கும் வரும்!!!

அவ்வளவு கோவத்தை இது வரை அவன் பெற்றோர் கூட பார்த்ததில்லை… தன் மனம் விருப்பும் தன் காதல் தேவதை… இப்படி பொய்த்து போனதை எண்ணி அவன் அவன்வசம் இல்லை!!!

சீனியின் இந்த ஏமாற்றத்துக்கு ஆரா நேரடி காரணமாக இல்லாவிட்டாலும் அவளது ஏமாற்றும் குணம் ஒன்று தான் அவனை குத்தி கிழித்து கொண்டு இருக்கிறது!!!

இப்போ மட்டும் ஆரா அங்கிருந்தால் அவ்வளவு தான்!!! சூழலில் சிக்கி உடையும் படகை போல… சூறாவழியில் சிக்கும் சிறு கீற்று வீடு போல…. சொல்ல இயலாத துன்பம் கொடுத்திருப்பான்.!!!! இருவரும் காயப்பட்டு இருக்க கூடும்!!!

அவளை முதல் முதல் பார்த்த போதே காதல் கொண்டவனால்… அவளின் இந்த தவறை பொறுத்து கொள்ள முடியவில்லை!!!

முதல் முறை அவள் திருடி என்று அறிந்தபோது அவள் யாரோ?? ஆனால் அவளுடன் பழகிய பிறகு!!! எது அவள் உண்மை முகம் ன்னு தெரியாமல்!! குழம்பும் நிலை ரொம்ப மோசம்!!!

இப்போ ஆரா பாசம் கட்டுவது தான் நடிப்பு என்கின்ற மனநிலைக்கு வந்துட்டான் சீனி!!

ஒரு ராட்சசன் போல் சீனி அங்கு அறையின் உள் நிற்க!!! அப்போதுதான் வீட்டின் உள் நுழைய போன நாகராஜனின் போன் அடித்து …. ஆராவுக்கு அபாய மணி அடித்தது!!!

நாகராஜன் எடுத்து பேச… ஆரா என்னவென்று பார்க்க!!! “அம்மா ஆரா ஆஃபீஸ்ல இருந்து தான் போன்!!! கொஞ்சம் முக்கியமான வேலை வந்துடுச்சு… நான் போய்ட்டு வந்துடவா???”

“சரின்னா.. அதான் வீட்டுக்கு வந்துட்டோம்ல!! பரவாயில்லை நீங்க போய்ட்டு வாங்க!! உள்ள சீனி இருப்பாரு என்ன பண்ராறு னு பாக்கிறேன்!! பை னா!!!”

உள்ளே காத்திருக்கும் பூகம்பம் தெரிந்திருந்தால் நாகராஜனை கெஞ்சியாவது உள்ளே கூப்பிட்டுப்பாளோ???

விதி யாரை விட்டது???

கதவை திறந்து உள் நுழைந்து…வாங்கி வந்த சாமான்களை எல்லாம் கிச்சனில் கொண்டு வைத்துவிட்டு…!!!

தனது அறைக்கு போய் தன் பை பார்ஸல் எல்லாவற்றையும் கப்போர்டுக்குள் வைத்து…பூட்டிவிட்டு தன்னை சுத்தப்படுத்தி கொண்டு.. வெளி வந்ததும் தான் ஒன்று உறைத்தது…!!!

வீட்டின் மயான அமைதி!!!

என்னாச்சு!! சீனியை காணும்?? ஒரு வேலை பால்கனில இருப்பாரா?? எங்க?? ஒரு வேலை கீழ எங்கயாவது போய்ட்டாரா???

பதட்டம் கூட..!! இருந்த அனைத்து அறையிலும் தேடி கடைசியாக சீனி இருந்த அறை வாயிலுக்கு வந்தவளுக்கு பேரதிர்ச்சி!!!

அறை முழுவதும் அலங்கோலமாக!!! சீனி கையில் ரத்தம் வலிய நிற்க??

சில்லீரென்று ஒரு சத்தம்!!!

நடந்தது இதுவே!!! ஆரா அறைவாயில் வந்து நிற்க… சீனி தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு ஏமாளி டா நீ!! ஏமாளி!! ன்னு வெறி பிடிச்ச மாதிரி கத்திக்கொண்டு அவனோட முகத்தை அவனே அறைந்து தள்ளி கொண்டிருந்தான்!!!

அப்போ மிகச்சரியாக ஆராவின் முகம் அந்த முழு கண்ணாடியிழும் தெரிய!!!

சீனி தன் மனதில் இருந்து அவளை நீக்க பெரும் போர்களமா தன் அறையை மாற்றி வைத்திருக்க!! அப்படியும் அவள் உருவம் மறைய மாட்டேங்குதே… ன்னு ஆத்திரம் மிகுதியில் அந்த கண்ணாடியை தன் கையால் பலம் கொண்ட மட்டும் குத்த!!!

கண்ணாடி சுக்கல் சுக்கலாகி!! அறை எங்கும் நீக்கமற நிறைந்தது…!!! அதிலும் எல்லா துண்டுகளிலும் அவள் முகமே!!!

அது இன்னும் ஆத்திரத்தை கிளப்ப!! தரையில் முட்டி போட்டு அமர்ந்து…!! தன் கையால் அந்த துண்டுகளை அங்கும் இங்கும் நகர்த்திவிட….!!

மீண்டும் மீண்டும் அவள் முகம்… அவள் தந்த ஏமாற்றம்..!! இவை எல்லாம் சீனியின் மனதை பதம் பார்த்ததை போல அந்த கண்ணாடி துண்டுகள் மீண்டும் மீண்டும் அவன் கைகளை பதம் பார்த்தன…!!

அதிர்ச்சியில் இருந்து மீண்ட ஆரா!!! சீனி…..!!!! ன்னு கத்தி அவனிடம் ஓடி… அவனை கட்டுப்படுத்த பார்க்க!!!

சீனிக்கு இருந்த கோபத்தில்.. அவள் அங்கு நிஜமாய் நிற்பதை கூட அறியாமல்…… அவளை பிடித்து வேகமாய் தள்ளிவிட…. ஏற்க்கனவே உடைந்து இருந்த கண்ணாடி டேபிள் சட்டத்தில் போய் விழுந்தாள் ஆரா!!!

அதில் மோதி நெற்றியில் சிறு கீரலாகி ரத்தம் சொட்டு சொட்டாக இறங்க தொடங்க!!! சீனி தனியாக விட்டு போனதால் இப்படி வயலேண்டாக மாறி விட்டதாக நினைத்து..!!

எழ முடியாத அரை மயக்கத்தோடே அவனை தடுக்க முயற்சி செய்ய..!!

மீண்டும் அவனை நெருங்கி வர…. போடி!!! திருட்டு***** இவளே ன்னு அச்சில் ஏறாத வார்த்தை சொல்லி திட்டி மீண்டும் கிட்ட கிட்ட வந்தவளை தன் பலம் கொண்ட மட்டும் ஒரு அறை..!!!!!

மயக்கத்தின் பிடியில் வந்தவளுக்கு அவன் திட்டியது முழுதாய் கேட்கவில்லை!!! ஆனால் அவன் அறைந்த அறையில் அவன் கையில் குத்தி இருந்த கண்ணாடி துண்டுகள் அவளிடம் அவனுக்கு பிடித்த அவளது குண்டு கன்னத்தை பதம் பார்த்தது!!!

கண்ணுக்கு சரியாக கீழே ஒரு பெரிய துண்டு கீறி ஒரு பக்கமுகம் எங்கும் ரத்தம்!!

ஆதிரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நிரூபிக்கும் வகையில் மீண்டும் அவள் கழுத்தை நெறிக்க… அவள் மூச்சுக்கு திணறி இருமிய பின்பே!!! அவள் நிஜம் என்று தெரிய!!!

அப்போதான் அவன் முழு உணர்வுக்கு வந்தான்!!
அப்படியும் அவன் கோவம் குறைய மறுக்க…!!

” ஹேய் ஆராதனா… உன்ன முதன் முதல் எங்க பாத்தேன் தெரியுமா டி… நீ பெங்களூரு வந்தப்போ ரோடில் ஒரு பிச்சைக்கார அம்மாவுக்கு கொஞ்சம் கூட அசிங்கம் பாக்காம நீ உதவி செஞ்சி சாப்பாடு ஊட்டின அப்போ பாத்தேன் டி….

பாத்ததும் அப்போவே விரும்ப ஆரமிச்சேன்!!! அதுக்கு அப்புறம் தான் நீ இப்படி பட்டவள் ன்னு தெரிஞ்சிது… ஆனாலும் உன் குணம் பார்த்து அப்படி செஞ்சிருக்க மாட்டேன்னு நம்புனேன்!!!

எங்க மறுபடியும் செக் பண்ணும்போது நீ தப்பு செஞ்சிருக்க மாட்டேன்னு நம்பினேன்!! ஆனால் அதுவும் பொய்யா போச்சு!!! அந்த கடைசி செய்தியில் பணக்காரன்….! வேலை??? இதெல்லாம் என்னை ஏமாத்த தானே!!!

உன்னை இதோட விடமாட்டேன் டி!!! என்னை ஏமாத்தினதுக்கு நீ காலம் பூரா அழனும்!!! விட மாட்டேன்!!

ஆரா முழு மயகத்துக்கு போய்ட்டா!! அது கூட தெரியாமல் சீனி மேலும் பேச!!!

“உன்ன உண்மையா லவ் பண்றேன் டி!!! என்ன போய் இப்படி மாத்திட்டியே!!! தன் கண்களை சின்ன பிள்ளை போல தான் பின்னகையால் துடைத்து கொண்டே!!! உன்ன திருத்துவேன்… நீ மறுபடி இந்த வழிக்கு வராத மாதிரி நல்லவளா மாத்தி ராணி மாதிரி வெச்சுப்பேன்!!!

நீ திருந்திடுவ தானே அம்மு!! அப்படின்னு அவளை தன் மேலேயே சாய்த்துக்கொண்டு உக்காந்துருக்க!!

ரெண்டு பேருக்கும் அதிக ரத்தப்போக்கு..!! அதிர்ச்சி!! கோவம் காரணமா மயக்கம் வர!!! ஆரா அவன் அவளை விட மாட்டேன் ன்னு சொல்லும் வரை மட்டுமே கொஞ்சம் சுயநினைவு இருந்து அது மட்டுமே அவள் மூலையில் பதிந்தது!!!

இருவரில் யார் பெற்ற வரமோ??? சாபமோ???

மறுபடியும் அவ்வீட்டில் மயான அமைதி!!!

அவர்கள் இருவரும் மயங்கி இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்க!!!

நாகராஜ் அப்போ தான் தன்னுடைய ஆஃபீஸ் வேலை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்ப ரொம்ப சோர்வா இருக்க,

“ஆரா?? … தங்கச்சி???… ரெண்டு மூன்று முறை கூப்பிட்டு பார்க்க அறை எங்கும் இவன் குரலே எதிரொலிக்க!! எங்க போயிருப்பாங்க?? காணும் ன்னு அந்த மூன்று ரூம் அப்பார்ட்மெண்டில் ஒவ்வொரு அறையும் பால்கனியும் அலச… கடைசியில் சீனி ரூம்க்கு வந்து பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி!!!!

அய்யோ!!! ன்னு அவனே அலறும் அளவுக்கு ரூமின் கோலம் இருக்க!!!!

ஆராவும் சீனியும் ரத்த வெள்ளத்தின் நடுவில்!! நாக்ஸ் கொஞ்சம் கூட தாமதிக்காமல் மருத்துவமனைக்கு தகவல் கொடுக்க!!!

வந்த மறுத்துவரோ?? இது ஏதோ போலீஸ் கேஸ் மாதிரி இருக்கு!! ஒரு கேஸ் குடுத்துட்டு வாங்கன்னு அதே வழக்கமான டயலொக் எடுத்து விட!!

நாக்ஸ் சில பல நோட்டு கட்டுகளை குடுத்து டாக்டரை சரி செஞ்சு… இருவரையும் வேறு அறைக்கு மாற்றி ட்ரீட்மெண்ட் பார்க்க ஒரு நர்ஸ் வைத்து ஆராவுக்கு ட்ரீட்மெண்ட் போய்க்கொண்டு இருந்தது!!!

நாக்ஸ் கிட்ட வந்த டாக்டர்…. அந்த பையனுக்கு கையிலும் கால் முட்டியிலும் தான் அடி பற்றுக்கு…. இந்த பொண்ணுக்கு தலை எதுலயோ பலம்மா மோதி இருக்கு…

கால் முழுசும் கிளாஸ் குத்தி இருக்கு உள்ள இருக்கும் கிளாஸ் எல்லாம் சின்ன ஒப்பேரஷன் செஞ்சு தான் எடுத்துருக்கோம்!! நல்ல ரெஸ்ட் தேவை!!

அவர் இப்போ எழுந்துடுவார்!! அவுங்களுக்கு கொஞ்சம் மயக்கம டோஸ் அதிகமா குடுத்தேன் சோ எழுந்தரிக்க நேரம் ஆகலாம்..!!!

டேப்லெட் எல்லாம் இதுல இருக்கு ன்னு சொல்லிட்டு அந்த பொண்ணுக்கு மட்டும் ஸ்கேன் எடுக்கணும் தலையில்!! சொல்லிவிட்டு கிளம்பிவிட!!

நாக்ஸ் கந்தகோலமாய் கிடந்த ரூமை கிளீன் பண்ணி… எல்லாம் எடுத்து … புது ஜாமங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு… அப்பபாடி… ன்னு சோபாவில் அமர்ந்து விட…..

நேரம் யாருக்கும் காத்திருக்காமல் அழகாய் நகர்ந்தது!!

நாக்ஸ் க்கு குழப்பம்!! என்ன ஆகிருக்கும்??
யார் இப்படி ரெண்டு பேரையும் காயப்படுத்தி இருப்பானு!!
உன் பிரென்ட் தான் டா என் போட்டேய்ட்டோ.!!!!

காதல்!! காதல்!! காதல் அது இனித்திடும் சொர்க்கமா??

காதல் காதல் காதல் அது வலித்திடும் நரகமா??

கண்களில் பொங்கும் நீரில் காட்சியும் மறைந்து போகும்!!

காதலின் மடியில் தானே இறுதியாய் இதயம் தூங்கும்

பூவை காட்டி கடைசியில் முள்ளை விற்றாய் காதலே!! (ஜெயம்)

மீண்டும் வருவாள் பூவழகி

நந்திதா ராம் @ நதி

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *