புயலோடு மோதும் தாழம்பூ..!! 8



புயல் – 08 

மங்கையவளோ பாவை போல மஞ்சத்தில் அவன் ஆளுகையின் கீழ் படுத்திருக்க, மன்னவனுக்கோ மனம் நெகிழ்ந்து போயிருந்தது.

அவளுக்கு இந்த உறவில் சிறு துளி அளவும் விருப்பமில்லை என்பதை நன்றாகவே தெரிந்தும் கூட அவளை விலக்கி வைப்பதில் அவனுக்கோ கிஞ்சித்தும் ஈடுபாடு இல்லை.

அவள் கூறியதைப் போல அவளை முத்தமிடாது அவள் உடலோடு உணர்வுகளைத் தூண்டும் வண்ணம் நெருங்காது அவனால் கலந்து விட முடியும்தான்.. ஆனால் அந்த உயிர்ப்பற்ற கலப்பை அவன் சற்றும் விரும்பினானில்லை.

அவளுடைய கண்ணீர்த் தடங்களில் தன் உதடுகளைக் கைகுட்டையாக்கி துடைத்து விட்டவன் அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.  

அவளுடைய குடை போன்ற இமைகளோ மூடியிருந்தும் கூட விழிகள் கசிவது மாத்திரம் நிற்கவே இல்லை. அவள் மிகுந்த பதற்றத்தில் இருப்பதை மூடிய இமைகளுக்குள் உருளும் அவளுடைய கருவிழிகள் உணர்த்த சிறு புன்னகையோடு அந்த கருவிழிகளின் மீது அழுத்தமாகப் இதழ் பதித்தான் மிருதன்.

கௌவ்வைப் பழம் போல அவளுடைய நுனி மூக்கு சிவந்திருக்க, அதிலும் சிறு முத்தத்தைப் பதித்தவன் மீண்டும் அவளுடைய சிவந்த அதிரங்களை ரசிக்கத் தொடங்கினான்.

அவனுடைய விரல்களோ அவளுடைய இதழ்களை சிறைப்பிடித்து அதில் உள்ள வரி வடிவங்களை ஆராய்ந்து ரசிக்கத் தொடங்க சடாரென தன் விழிகளைத் திறந்தவள் அவனைத் தீப் பார்வை பார்த்தாள்.

அதற்காகவே காத்திருந்தவன் போல அவளைப் பார்த்து வசீகரமாக புன்னகைத்தவன் அவள் விழிகளை திறந்து அடுத்த நொடியே அவளுடைய இதழ்களைக் கவ்வியிருந்தான்

அதிர்ச்சியில் அவளுக்கோ விழிகள் பெரிதாய் விரிந்தன. கோபத்தில் தன்னுடைய நகத்தால் அவனுடைய வெற்று முதுகில் வேண்டுமென்றே அவள் காயங்களை உண்டாக்க அவனுக்கோ அவளுடைய செயலில் உணர்வுகள் கொந்தளிக்கத் தொடங்கின.

அவனைக் காயப்படுத்த வேண்டும் என அவள் செய்த செயல் அவனுடைய உணர்ச்சிகளை இன்னும் அதிகரித்திருக்க அவளுடைய இதழ்களை  விட்டு விலகும் எண்ணத்தையே மறந்து போனான் மிருதன்.

கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை மறந்து விழிகளை மூடிக்கொண்டாள் கீதா.

அவளைப் படைத்த பிரம்மன் இதழ்களுக்குப் பதிலாக அங்கே அமிர்தம் வழியும் குடுவையை படைத்து விட்டானோ என எண்ணும் வகையில் அவளுடைய இதழ்களை ருசித்துக் கொண்டிருந்தான் மிருதகேஷன்.

அவளுடைய கன்னங்களைப் பற்றி இருந்த அவனுடைய வன் கரங்களோ மெல்ல கீழே இறங்கி அவளுடைய கழுத்தில் பயணித்து இருமலை முகடுகளுக்கு நடுவே இறங்கி மியாந்தர் வளைவைக் கொண்ட இடையில் தஞ்சம் புகுந்த விட சட்டென விழிகளைத் திறந்து அவனை அதிர்ந்து பார்த்தவள் அவனுடைய தலைமுடியைக் கொத்தாகப் பற்றி தன் முகத்திலிருந்து அவனுடைய முகத்தை விலக்கினாள்.

அவளுக்கோ மூச்சு வாங்கியது. அவஸ்தையாக இருந்தது.

அவனுக்கோ சட்டென சீற்றம் மிகுந்தது.

“ப்ச் என்னடி…?” என எரிச்சலாகக் கேட்டான் அவன். 

அழகாக அவர்களுக்கு இடையே முகிழும் மோகச் சங்கிலியை அவள் அடிக்கடி அறுத்தெறிவது அவனுக்கோ அத்தனை ஆத்திரத்தைக் கொடுத்தது.

“எ.. என்னால முடியல.. ப.. பயமா இருக்கு…” என்றாள் அவள்.

“இதுல என்ன பயம்..? நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்..” என அவளுடைய காதோடு கிசுகிசுத்தான் அவன்.

“நீங்க பார்க்கிறதாலதான் ரொம்ப பயமா இருக்கு…” எனக் கூறி தன் பேச்சினால் அவனுடைய மூக்கை உடைத்தவள்,

“எப்போ முடிப்பீங்க..?” எனக் கேட்டாள்.

“எதே.. முடிக்கிறதா..? ஏய்… இன்னும் ஆரம்பிக்கவே இல்லடி..” என்றான் அவன்.

“சீ.. சீக்கிரமா முடிங்க…” எனக் கூறி முடிப்பதற்குள் சிவந்து போனாள் அவள். அவளுடைய இதயமோ படபடத்துக் கொண்டே இருந்தது.

“சீக்கிரமா முடிக்கிறதுக்கு நான் என்ன நூடில்ஸ்ஸா பண்றேன்..? ஒரு உயிரையே படைக்கப் போறேன்டி…”

“ஐயோ போதும்…” எனத் தன் காதைப் பொத்திக் கொண்டாள் அவள்.

அவளுடைய இதழை வருடினான் அவன். வேகமாக அவனுடைய கரத்தை தட்டி விட்டவள்,

“இன்னும் அஞ்சு நிமிஷம்தான் உங்களுக்கு டைம்.. அதுக்குள்ள முடியலன்னா நான் எழுந்து போயிருவேன்..” எனக் கோபத்தோடு கூறியவள் மீண்டும் விழிகளையும் முடிவிட அவனோ ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டவன் தன் தலையை மறுப்பாக அசைத்துக் கொண்டான்.

‘எனக்கு அஞ்சு நிமிஷம் பத்தாதே..’ என தனக்குள்ளேயே கூறிக் கொண்டவன் அதற்கு மேலும் தாமதிக்காது அவள் உடலில் முன்னேறத் தொடங்கினான்.

அவனுடைய சிறு அசைவும் அவளை பெரிதாய் வதைத்தது. 

அவனுடைய கரங்களோ அவளுடைய மேலாடையை விலக்க முயல, நடுங்கிப் போனாள் அவள்.

“வே… வேணாமே…” வலியோடு மறுத்தாள் அவள்.

“எனக்கு வேணுமே…” என்றான் அவன்..

“பொறுக்கி ராஸ்கல்…” என தன் இயலாமையில் அவனைத் திட்டினாள் அவள்.

“பொறுக்கி இல்லைடி புருஷன்…” என்றவன் அவளுடைய ஆடையை கழற்றி விட,

அவளுடைய கரங்களோ படுக்கை விரிப்பை இறுகப் பற்றிக்கொண்டது. அவனோ அந்தக் கைகளைப் பற்றி தன் முதுகை அணைத்தாற் போல வைத்தவன் மீண்டும் அவளுடைய மீதி ஆடையை களைந்து விட்டு அவள் மீது அழுத்தமாகப் படர்ந்தான்.

ஆடையற்ற உடல்கள் ஒன்றோடு ஒன்று மோதி தனலை உண்டாக்கின. அவனுக்கோ விழிகள் சுகத்தில் சொருகியது.

அவளுக்கோ மேனி பலமாக நடுங்கியது.

அவளின் நடுக்கத்தை அவனுடைய உடலோ உணர்ந்து கொண்டது. 

ஒரு கட்டத்தில் அவளுடைய உடலோ தூக்கிப் போடத் தொடங்க, அதற்கு மேல் அவனால் அவளோடு ஒன்ற முடியாது போனது. 

அவளுடைய உடல்நிலை மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் சட்டென அவளை விட்டு விலகினான்.‌

“ஷிட்…‌” என முனுமுனுத்த வண்ணம் அவளுக்கு அருகே சரிந்து படுத்தவனோ அதற்கு மேல் அவள் உடலில் முன்னேறவில்லை. 

அவன் தன் மீதிருந்து எழுந்ததும் போர்வையை இழுத்து தன் மீது போர்த்திக் கொண்டவள் தன் அருகே படுத்திருந்தவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

“இன்னைக்கு வேணாம் தூங்கு..” என அடிக்குரலில் சீறியவன் மறுபுறம் திரும்பி படுத்துக்கொள்ள விட்டால் போதும் என்று எழ முயன்றாள் அவள்.

அவனோ “நாளைக்கு பாத்துக்கலாம்..” என்றதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது. 

மீண்டும் முதலில் இருந்தா எனப் பயந்தே போனவள் தொய்ந்து மீண்டும் படுக்கையில் சரிந்தாள்.  

தொண்டை வரண்டு நா உலர்ந்து போனது.

“இ… இல்ல இப்பவே முடிச்சிடுங்க… மறுபடியும் என்னால முடியாது..” எனத் தன்னை திடப்படுத்திக் கொண்டு கூறினாள் அவள். 

அவனோ திரும்பி அவளுடைய முகத்தை அழுத்தமாகப் பார்த்தவன் “அப்போ ப்ளீஸ் டோன்ட் க்ரை.. உன்னோட அழுகை என்ன டிஸ்டர்ப் பண்ணுது..” என்றான் அவன்.

‘எனக்கு அழக்கூட உரிமை இல்லையா..?’ என தனக்குள் எண்ணிக் கொண்டவள் அவனைப் பார்த்து சரியென தலையசைத்தாள்.

அதன் பின் மீண்டும் அவன் அவள் மீது படர்ந்து தன்னுடைய தேடலைத் தொடங்க இமை மூடிக் கொண்டாள் அவள்.

அவனோ ஆரத்தழுவி அவளுக்குள் தன்னை ஊடுருவியிருந்தான்.

அவனுடைய கரமோ அவளுடைய இடையில் மிகவும் அழுத்தத்துடன் பதிய, வலியை அடக்கிக் கொண்டவளை முழுதாக ஆண்டு முடித்துவிட்டு அவளுடைய கன்னத்தில் இதழ் பதித்தான் அவன்.

அவன் இதழ் பதித்த கணம் மீண்டும் சரேலென வழிந்தது கண்ணீர். 

“வலிக்குதாடி..?” என மென்மையாக அவளுடைய கூந்தலை ஒதுக்கிவிட்டவாறு கேட்டான் அவன்.

சட்டென அவனை தன்னில் இருந்தும் தள்ளி விட்டாள் கீதா. 

முடிந்தது.. எத்தனை வருடங்களாக அவள் கட்டிக் காத்து வந்த கற்பின் அத்தியாயம் இன்றோடு முடிந்தே போனது. தனக்குள் மருகத் தொடங்கினாள் அவள்.

அவனோ அவளுடைய முகத்தையே இமைக்காது பார்த்துக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் அவளுடைய அழுகையோ விம்மலாக மாறி கதறலில் சென்று முடிய உடல் விறைத்தான் அவன்.

“ப்ச்… ஸ்டாப் இட் கீதா…”

“……”

“ஏய்… எனக்கு முன்னாடி அழாதேன்னு சொல்லி இருக்கேன்ல.. முதல்ல உன்னோட அழுகையை ஸ்டாப் பண்ணு..” என அதட்டினான் அவன். 

அவளுக்கோ விம்மி வெடித்துக் கிளம்பியது அழுகை. 

முகத்தை மூடிக்கொண்டு தன்னை கட்டுப்படுத்த முடியாது அழுது கதறிக் கொண்டிருந்தவளை விட்டு விலகி எழுந்தான் மிருதகேஷன்.

நேரமோ நள்ளிரவு ஒன்று எனக் கடிகாரம் காட்ட, கீழே கிடந்த தன்னுடைய ஆடைகளை எடுத்து விரைந்து அணிந்து கொண்டவன் அங்கிருந்த தலையணையை எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றான்.

எதைப் பற்றியும் சிந்திக்காது விழிகளை மூடி உறங்க முயன்றவனுக்கு அவளுடைய அழுகுரல் தற்போதும் காதில் கேட்பதைப் போல இருக்க தலையைப் பற்றிக் கொண்டான் அவன். 

அவள் அழுதால் தனக்கென்ன என எண்ணியவன் மீண்டும் உறங்க முயல, அவனுக்குள் இருந்த மனசாட்சியோ அவனைக் கேள்வி கேட்டு குடையத் தொடங்கியது.

‘நான் அவளுக்கு நல்லதுதானே பண்ணி இருக்கேன்… இதுக்கு பிறகு அவ தனியா இருக்கணும்னு ஃபீல் பண்ண தேவையில்லை.. அவளுக்குன்னு குழந்தை வந்தா நல்லதுன்னு அவ தானே சொன்னா… அப்புறம் எனக்கு ஏன் இப்படி கில்டியா இருக்கு..? ஒரு வேளை அவ அழுகுறதாலதான் நமக்கு இப்படி பீல் ஆகுது போல..’ என தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டவன் மீண்டும் விழிகளை மூடிக்கொண்டான். 

உறங்குவதற்கான முயற்சியை தொடங்கியவனுக்கு உறக்கம் மட்டும் வந்த பாடே இல்லை.

சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் உறங்க முடியாது சிந்தனை வயப்பட்டிருந்தவனுக்கு கீதாவோடு இணைந்த இந்த நாள் வாழ்வில் மறக்கவே முடியாது எனத் தோன்றியது.

இன்னும் அறைக்குள் இருந்து அவள் அழுது கொண்டே தான் இருப்பாளோ என எண்ணியவன் அதற்கு மேல் அங்கே உறங்க முடியாது போக, அவள் படுத்திருந்த படுக்கை அறைக்குள் நுழைந்தான்.

அவளோ அழுதழுதே உறக்கத்தின் பிடியில் சிக்கி இருக்க, மீண்டும் சத்தமின்றி அவளின் அருகே சென்று படுத்தவன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். 

அவனுடைய மனமோ பேரழகிதான் என அவளைப் பார்த்து ஜொள்ளியது. 

பின்னே அவள் தன்னை ஆண்மையற்றவன் எனக் கூறிய கோபத்தில் இந்தியா வந்திருந்தவனுக்கு அவளைப் பார்த்ததும் மனம் மயங்கிப் போனது என்னவோ உண்மைதான்.

அதற்காக அவள் மீது காதல் என்றெல்லாம் அர்த்தமில்லை. அவளுடைய அழகை அனுபவிக்க விரும்பியவன் அவளுக்கு தேவையான குழந்தையை அவளுக்கு கொடுத்து அவளுடைய அழகை தான் அனுபவிக்க எண்ணினான். 

அவன் நினைத்ததை தற்போது நடத்தி முடித்த பின்னரும் கூட அவள் மீது இருந்து தன்னுடைய பார்வையை அவனால் விலக்கிக் கொள்ள முடியாது போனது.

அவளுடைய விழிகளில் நிறைந்து கன்னத்தில் காய்ந்து போயிருந்த கண்ணீர்க் கறையை துடைத்து விட்டவன் மெல்ல அவளை அணைத்து உறங்க முயன்றான். 

அவளின் அருகே வந்து படுத்ததும் இவ்வளவு நேரமும் வராது இருந்த உறக்கமோ சடுதியில் அவனை வந்து தழுவிக் கொண்டது.


💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *