புயலோடு மோதும் தாழம்பூ..!! 7



புயல் – 07

 

மிருதனுடைய வெளிப்படையான பேச்சு அவளை மிகவும் தடுமாறச் செய்தது. 

‘சே விவஸ்தை கெட்டவன்..’ என தனக்குள் திட்டியவாறு அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் கீதா. 

“சாப்பாடு வாங்கி வச்சிருக்கேன்.. வந்து சாப்பிடு..” என்றான் அவன். 

“நான் உங்ககிட்ட பசிக்குதுன்னு சொன்னேனா..? எனக்கு தேவைன்னா நானே சமைச்சு சாப்பிட்டுப்பேன்.. ஓவரா அட்வான்டேஜ் எடுக்காதீங்க..” என முகத்தில் அடித்தாற் போல பதில் கூறியவள் மீண்டும் படுக்கையில் படுத்துக் கொள்ள அவனுக்கோ உடல் இறுகிப் போனது. 

“இதுக்காக நீ ரொம்ப வருத்தப்படப் போற..” என்றவன் விறுட்டென அந்த அறையை விட்டு வெளியேறினான். 

வாங்கி வைத்த உணவை தான் வயிறு நிறைய உண்டு விட்டு அவளுக்காக வாங்கிய உணவை தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டான்.

நேரம் செல்லச் செல்ல கீதாவின் மனோதிடமோ குறைந்து கொண்டே சென்றது. 

இன்று இரவு எப்படி அவனை எதிர் கொள்ளப் போகிறோம் என்ற பதற்றம் அவளை இயல்பாய் இருக்க விடாது தடுக்க, நிலை இன்றி தவித்தாள் அவள்.

நேரமோ இரவு எட்டைத் தாண்டி விட எப்போது வேண்டுமென்றாலும் அவன் அறைக்குள் வந்து விடுவான் என்பதை உணர்ந்தவளுக்கு இதயம் மிக வேகமாக துடிக்கத் தொடங்கியது. 

சட்டென படுக்கையில் இருந்து எழுந்து கொண்டவள் அறையை விட்டு எதற்கோ பயந்து ஓடுபவள் போல வெளியே விரைந்து செல்லத் தொடங்கினாள். 

அவள் அறையை விட்டு வெளியே செல்வதைக் கண்ட மிருதனின் இதழ்களோ கேலியாய் வளைந்தன. 

அவளோ அவனை நிமிர்ந்தும் பாராமல் நேரே தோட்டத்திற்குச் சென்றவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

ஓடி வந்த வேகத்தில் மூச்சு வாங்கத் தொடங்கியது. 

விடியும் வரை இங்கேயே இருந்தால்தான் என்ன என்ற எண்ணம் கூட அவளுக்குள் அக்கணம் தோன்றி மறைந்தது.

இயல்பாகத் திருமணம் செய்து ஒன்றித்த தம்பதிகளாய் இருந்திருந்தால் தாம்பத்தியம் அவர்களுக்கு பெரிய விடயமாக இருந்திருக்காது. இயல்பாகவே அவர்கள் இருவரும் கூடியிருக்கவும் கூடும்.. ஆனால் கீதாவின் கதை தான் முற்றிலும் வேறாகிற்றே..

அவனுக்கு அவள் மீதும் அவளுக்கு அவன் மீதும் அளவற்ற வெறுப்பல்லவா விஞ்சியிருந்தது.

கட்டாயப்படுத்தி தன்னை கார்னர் செய்து ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி வைத்த மிருதன் மீது அளவு கடந்த சீற்றம், அவளுக்குள் பொங்கியது.

‘ப்ளீஸ் கடவுளே ஏதாவது அதிசயம் நிகழ்த்தி என்னை அவன்கிட்ட இருந்து எப்படியாவது காப்பாத்திரு.. நான் வேற ஏதாவது ஊருக்கு போய் அங்கே ஐவிஎஃப் முறைல குழந்தை பெத்துக்கிறேன்..’ என விழிகளை மூடி இறைவனை அவசர அவசரமாக பிரார்த்தித்தாள் கீதா.

அதே நேரம் அவள் தோட்டத்திற்கு வந்து ஒரு மணி நேரம் கடந்தும் கூட வீட்டுக்குள் செல்லும் எண்ணமே இன்றி அங்கேயே இருந்து விட, அவளைத் தேடி தோட்டத்திற்கு வந்தான் மிருதன்.

நிதானமான காலடி ஓசையில் தன்னை நெருங்கி வருவது யார் எனத் தெளிவாகப் புரிந்து கொண்டவள் மெல்ல நிமிர்ந்து அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.

“ஹாய் பொண்டாட்டி…”

“டோன்ட் கால் மீ லைக் தட்…” எனச் சீறினாள் அவள்.

“பொண்டாட்டியை பொண்டாட்டின்னு கூப்பிடுறதுல என்ன தப்பு ம்ம்..?”

“ஓஹ்.. தாலி கட்டிட்டு ரெண்டு நாள்லையே விட்டுட்டுப்போன நீங்க எல்லாம் பொண்டாட்டின்னு சொல்லவே கூடாது..” என அழுத்திக் கூறினாள் அவள்.

“கூல்… உள்ளே வா…” என்றான் அவன்.

“இப்போவா..?” எனப் பதறினாள் அவள்.

“எஸ்…”

“உ.. உள்ள காத்தே வரல… கொ.. கொஞ்ச நேரத்துல வர்றேன்..” எனச் சமாளித்தாள் அவள்.

“நீ இங்கே இருந்தா எப்படி நம்ம ட்ரீட்மெண்டை ஆரம்பிக்கிறது..? எப்படி குழந்தை பெத்துக்கிறது..?” எனச் சிறிதும் லட்ஜை இன்றிக் கேட்டான் அவன்.

அவளிடம் இருந்து உஷ்ணப் பெருமூச்சு வெளியேறியது. 

நான்கு கெட்ட வார்த்தைகளை கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வைத்து அவனுக்கு திட்டி தீர்த்து விடலாமா என எண்ணியவள் அவனுடைய பார்வை தன்னில் அழுத்தமாகப் படிவதை உணர்ந்ததும் தன் சிந்தனையை நிறுத்திவிட்டு அவனைக் கெஞ்சும் பார்வை பார்த்தாள்.

“இன்னும் அஞ்சு நிமிஷம்தான் உனக்கு டைம்..  அதுக்குள்ள நீ உள்ளே வந்திருக்கணும்.. இல்லன்னா நான் இப்பவே பிளைட்டை புக் பண்ணிட்டு கிளம்பி போயிட்டே இருப்பேன்..” எனக் கூறிவிட்டு அவன் சென்று விட, கொதித்துப் போனாள் அவள் 

“ராஸ்கல் இவ்வளவு நாளும் என்னைப் பத்தி எந்த கவலையும் இல்லாம கனடால சொகுசா இருந்துட்டு இப்போ வந்து என்னோட உசுர வாங்குறானே பாவி.. அஞ்சு நிமிஷத்துக்குள்ள வான்னு கூப்பிட்ட உடனே போறதுக்கு இதென்ன ஸ்டேஜ் ப்ரோக்ராமா..? நினைச்சாலே நெஞ்செல்லாம் பதறுது… ஏன் இந்த ஆம்பளைங்க மட்டும் இப்படி இருக்காங்க… சே..!!” என மீண்டும் அவனைத் திட்டியவள் நேரம் செல்வதை உணர்ந்து கலங்கிப் போனாள்.

மனமோ அளவற்ற வேதனையைச் சுமக்கத் தயாரானதைப் போல இறுகிப் போனது.

மெல்ல அங்கிருந்த கல் பெஞ்சிலிருந்து எழுந்து கொண்டவள் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். 

ஏதோ அவளுடைய இரண்டு கால்களிலும் பெரிய இரும்புக் குண்டை கட்டி வைத்ததைப் போல நடக்கவே சிரமமாக இருந்தது அவளுக்கு.

நடக்க மறுத்த கால்களை சிரமப்பட்டு இழுத்து முன்னே வைத்து நடந்து சென்றவள் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள். 

அங்கே படுக்கையில் அமர்ந்திருந்த வண்ணம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த மிருதனைப் பார்த்து அவளுக்கோ உள்ளம் மருகியது.

“டோரை லாக் பண்ணிட்டு வா..” என்றான் மிருதன்..

கரங்கள் நடுங்க கதவைப் பூட்டித் தாழிட்டவள் கதவின் மீது சாய்ந்து நின்று கொண்டாள்.

மிருதனோ அதற்கு மேலும் பொறுமையை இழந்தவன் போல படுக்கையில் இருந்து எழுந்து அவள் அருகே வந்தவன் அவளின் இரு பக்கமும் தன்னுடைய கரங்களை கதவின் மேலே பதித்துக் கொண்டான்.

அவனுடைய கரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டவளுடைய பார்வை அவனுடைய மார்பில் பதிந்தது. 

தன் பார்வையை உயர்த்தி அவனுடைய விழிகளைச் சந்திக்க விருப்பமின்றி அங்குமிங்கமாக தன் விழிகளை அலைய விட்டாள் அவள்.

அவளுடைய கரங்களோ அவள் அணிந்திருந்த டாப்பின் நுனியை சுழற்றியவாறு இருக்க, அவளுடைய கால் பெருவிரலோ நிலத்தோடு அழுந்திய வண்ணம் இருந்தன. 

அவளின் ஒவ்வொரு சிறு சிறு அசைவுகளும் அவள் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறாள் என்பதை அப்பட்டமாக அவனுக்குப் புரிய வைக்க அவனுடைய இதழ்களோ மெலிதாய் விரிந்து கொண்டன.

“ஓகேவா கீதா..? 

“ம்ம்….” என முணுமுணுமுணுத்தன அவளுடைய செவ்விதழ்கள்.

அந்த நேரத்தில் அவளால் வாய் திறந்து பேச முடியும் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை.

நிச்சயம் அவனுடைய தொடுகை தன்னை சிதைக்கப் போகிறது என எண்ணியவள் தன் இதழ்களை அழுந்தக் கடித்து விழிகளை மூடிக்கொண்டு இறுகிப்போய் நின்றாள்.

மிருதனின் கை விரல்களோ அவளுடைய கன்னத்தில் வருட சட்டென அவனுடைய கரத்தை தட்டி விட்டாள் கீதா. 

அடுத்த கணமே அவளுடைய கன்னத்தை மீண்டும் அழுத்தமாகப் பற்றியவன் வேண்டும் என்றே தன்னுடைய விரலால் அவளுடைய கன்னம் முழுவதும் பற்றி வருட துடித்துப் போனாள் பெண்ணவள்.

அவளுடைய இதழ்கள் அழுகையில் துடிப்பதைக் கண்டு சட்டென தன்னுடைய கரத்தை விலக்கிக் கொண்டான் மிருதன்.

“ஹேய்…” என அவளை அழைத்தான் மிருதன்.

அவனுடைய அழைப்பில் விழிகளை திறந்து அவனைப் பார்த்தாள் அவள்.

“நீதானே பேபி கேட்ட..?”

“ம்ம்…”

“அப்போ எதுக்காக இப்படி இறுகிப்போய் நிக்கிற..? இப்படி நீ அழுதுகிட்டே இருந்தா என்னால எப்படி ஆரம்பிக்க முடியும்..?”  என அதட்டாமல் மென்மையாகக் கேட்டான் அவன். 

அவளுக்கோ தன்னுடைய உணர்வுகளை சற்றும் மதிக்காது பேசுபவனின் மீது ஆத்திரம் பெருகியது.

தன் விழிகளைத் துடைத்துக் கொண்டவள் அவனைத் தள்ளி நிறுத்திவிட்டு அங்கிருந்த படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள். 

அவள் தயாராகி விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவன் அவளை நெருங்கி அவள் மீது படர, அவள் உடலோ மேலும் மேலும் இறுகிக் கொண்டே போனது.

மிருதன் அவளை ஒரு கணம் ரசித்துப் பார்த்தவன் அவளுடைய கூந்தல் காட்டில் தன்னுடைய கரத்தை நுழைத்துக் கொண்டான். 

அடுத்த கணமே அவளுடைய சிவந்த துடிக்கும் இதழ்களை நோக்கி முத்தமிடக் குனிய, அவனுடைய இதழ்களுக்கும் தன்னுடைய இதழ்களுக்கும் இடையே தன்னுடைய கரத்தைப் பதித்து அவனுடைய முத்தத்திற்கு தடா போட்டாள் அவள். 

முதல் முத்தம் தவறிப்போன எரிச்சலில் அவளைக் கேள்வியாகப் பார்த்தான் மிருதன். 

“குழந்தை பெத்துக்கறதுக்கு இதெல்லாம் அவசியமில்லையே.. நீங்க எனக்கு கிஸ் பண்ணக் கூடாது… தேவையில்லாம தொடக்கூடாது.. பண்ண வேண்டியதை மட்டும் பண்ணி முடிச்சிட்டு.. என்ன விட்ருங்க..” என்றவளை முறைத்துப் பார்த்தான் அவன்.

“நான் ஒன்னும் உன்ன மாதிரி ஜடம் கிடையாது.. எதையும் பீல் பண்ணி பண்ணா தான் ரிசல்ட் நல்லா கிடைக்கும்..” என்றவன் அவளுடைய கழுத்து வளைவில் இதழ் பதிக்க அவளுடைய விழிகளோ இறுக மூடிக்கொண்டன. 

விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

அவளிடம் இருந்து பிரிந்தவன் தன்னுடைய டீஷர்ட்டை கழற்றி விட்டு வெற்றுத் தேகத்தோடு மீண்டும் அவள் மீது படர,  அவன் மீதிருந்த வெறுப்பிலும் கூச்சத்திலும் அவளுடைய கரங்களோ அவளை மீறியே அவனைத் தடுக்க முயன்றன.

அவனோ தன்னுடைய இரண்டு கரங்களாலும் அவளுடைய கரத்தை பற்றி படுக்கையின் மீது தூக்கி வைத்து சிறை போல பிடித்துக் கொண்டவன் அவளுடைய மார்பிலும் தன்னுடைய முகத்தை புதைத்துக் கொண்டான்.

அவனுடைய ஆக்கிரமிப்பை தடுக்கவும் முடியாது ஏற்கவும் முடியாது திண்டாடிப் பயந்து போனாள் பெண்ணவள்.

அவள் மனமோ இது எல்லாம் குழந்தைக்காக மாத்திரமே என உருப்போடத் தொடங்கியது.

மிருதனோ மங்கையவளை இசைக்கருவி போல மீட்டத் தொடங்க, எவ்வளவோ முயன்றும் அவளால் தன்னுடைய உணர்வுகளை அடக்க சிரமமாகவே இருந்தது.

அவளுடைய விழிகளில் கசிந்து வழிந்தது உவர்நீர்.‌ 

அவனுடைய இதழ்களோ அவளுடைய உவர்நீரையும் ருசி பார்க்க இந்தக் கூடலோ தேவையின் நிமித்தமாக இருவருக்குமிடையே ஆரம்பித்திருந்தது.

 💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *