புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!

புயலோடு மோதும் தாழம்பூ..!!



புயல் – 11 

 
அழையாத விருந்தாளியாக இரவுப் பொழுதும் வந்துவிடத் தன்னை திடப்படுத்திக் கொண்டு அவனுக்காக காத்திருந்தாள் கீதா.

நேற்று தொட்டது இன்றும் தொடர்கதையாகத் தொடரப் போகிறது. 

இன்னும் 9 நாட்கள் இப்படித்தான் தன் வாழ்வில் கழியப் போகிறது என்பதை நன்றாக தன்னுடைய மனதிற்குள் ஏற்றிக்கொண்டவள் மிருதனை எதிர்க் கொள்ளத் தயாராகினாள்.

சற்று நேரத்தில் மிருதன் உள்ளே வந்தான். என்னதான் வெறுப்பில்லாமல், மன அழுத்தம் இல்லாமல் அமைதியான மனதுடன் இருக்க வேண்டும் என எண்ணியிருந்தாலும் கூட அவன் அறைக்குள் நுழைந்த கணமே அவளுக்கு உடல் இறுகியது.

சட்டென அருகே இருந்த தண்ணீரை எடுத்து மட மட‌ வென அருந்தியவள், அவனைப் பார்த்தாள்.

 அவனுடைய  ஆழ்ந்த பார்வையும் அவள் மீது தான் நிலைத்திருந்தது. 

மெல்லப்  படுக்கையை நெருங்கி, அதில் அமர்ந்து கொண்டவன், “சாப்பிட்டியா..” எனக் கேட்டான்.

 அவனுடைய கேள்வியில் அவளுடைய புருவங்களோ வெகுவாக உயர்ந்தன.

“ம்ம்…” என ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள் அவள். 

அவனோ தன் கரத்தில் கொண்டு வந்த சில மாத்திரைகளை அவளிடம் நீட்டினான்.

“இதை இதில் சொல்லி இருக்கிற டைமுக்கு டெய்லி போட்டுக்கோ..”

“என்ன டேப்லெட்..” இது எனக்கு கேட்டாள் அவள்.

“போலிக்ஆசிட் அப்புறம் விட்டமின்ஸ் டேப்லெட் தான்..‌” என்றான் அவன். 

மறுப்பு ஏதும் கூறாமல் அவன் கொடுத்த மாத்திரைகளை வாங்கி மேஜையின் மீது வைத்தவள், அமைதியாக படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

அவனும் சுற்றி வந்து அவளின் அருகே படுத்ததும், அவளின் இதயமோ மீண்டும் படபடக்கத் தொடங்கியது.

சில நொடிகளில் தன்னை நெருங்கப் போகிறான்.

தன் உடலில் எல்லை மீறி அவனுடைய கரங்கள் பயணிக்கப் போகிறது.

தான் செயலிழந்து அமைதியாக கிடக்க போகிறோம் என்றெல்லாம் உள்ளுக்குள் உணர்வுகளோடு போராடிக் கொண்டிருந்தவளோ தன் விழிகளை மூடிக்கொண்டு அப்படியே சிலைப் போல கிடந்தாள்.

ஆனால் நிமிடங்கள் சென்றதே தவிர அவன் அவளை தொடவோ, நெருங்கவோ இல்லை.

சற்றே அதிர்ந்து போனவள் மெல்லத் தன் விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தாள். 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த மிருதனும், அவள் விழி திறந்ததும் “குட் நைட்..” என்றான்.

அவளுக்கோ விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் அவள். 

“தூங்குடி..‌ டூவீக்ஸ் கழிச்சு செக் பண்ணிப் பாத்துரலாம். பேபி ஃபார்ம் ஆகலைன்னா அதுக்கப்புறம் மறுபடியும் ட்ரை பண்ணலாம் இப்போ தூங்கு..” என்றவன் விழிகளை மூடி படுத்து விட அவனுடைய வார்த்தைகளில் அவளுக்கு வியப்பு தான் மேலிட்டது. 

எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்.. எப்போது தன்னை அணைக்கலாம் எனக் காத்திருந்தவன் திடீரென இப்படிக் கூறவும் அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள் அவள். 

ஆனால் அவனோ சற்று நேரத்தில் உறங்கியும் போக அவளுக்கோ உறக்கம் தொலைந்துப்‌ போனது.

அக்கணமே மிருதனை புரிந்துக் கொள்ள முடியாது எனக்  குழம்பிப் போனாள் அவள்.‌

அதேநேரம் அவளுடைய மனமும் சற்றே நிம்மதி கொண்டது.

போர்வையை இழுத்துத் தன்னை போர்த்திக் கொண்டவள், அவனுக்கு எதிர்ப்புறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

******** 

அடுத்த நாள் காலையில் நேரத்திற்கு விழித்துக் கொண்டான் மிருதன். கண்விழித்தவனுக்கு தன்னருகே மிக நெருக்கமாக உறங்கிக் கொண்டிருந்த கீதாவின் பால் வண்ண முகமே முதலில் தென்பட்டது.‌

அவளுடைய இதழ்களோ சற்றே விரிந்து இருக்க, அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன், மெல்ல நகர்ந்து அவளுடைய தூக்கத்தைக் குழப்பாது படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான். 

இன்று ஆபிஸுக்குச் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தவன், தனக்கான ஆடையை எடுத்து வைத்து விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

குளித்து முடித்து ஆடை மாற்றி விட்டு வெளியே வரும்போது வெளியே அமர்ந்திருந்தாள் கீதா.

அவளை நெருங்கி வந்தவன், “இன்னைக்கு ஆபீஸ் போகலாம்னு இருக்கேன்..” எனக் கூற அவளுடைய தலையோ சரியென அசைந்தது.

“பிரேக் பாஸ்ட் ஏதாவது பண்ணித் தர முடியுமா..?  எனக் கேட்டான்.

“அவள் உப்புமா பண்றேன்..” என்றதும் அவனுக்கோ அது ‘ஆப்பு மா..’ போலவே தெரிந்தது.

ஆத்தீ மீண்டும் மீண்டுமா என்ற எண்ணம் மனதினுள் தோன்றியது.

“இட்ஸ் ஓகே நான் கடையிலேயே சாப்பிடுறேன்..” என்றவன் அவனுடைய பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல,  ‘இவனோட போக்கே இன்னைக்கு சரியில்லையே..’ என எண்ணிக் கொண்டாள் கீதா.

இப்படியாக ஐந்து நாட்கள் முழுதாக முடிந்திருந்தது.

அவன் காலையில் தினமும் அலுவலகம் சென்றால் மாலை தான் வீட்டிற்கு வருவான்.

வந்ததும் தொலைக்காட்சி வேலை என அவன் அதில் மூழ்கிப் போக கீதாவோ தன்னுடைய தனிமை உலகத்துக்குள் மீண்டும் புகுந்து கொண்டாள்.

இரவில் மாத்திரம் ஒன்றாக ஒரே படுக்கையில் இருவரும் உறங்குவார்கள். அவனோ அன்றைய தினத்தின் பின் அவளை வற்புறுத்தவோ அவளோடு உறவு கொள்ளவோ எந்தவிதமான முயற்சிகளையும் செய்யவில்லை.

இருவருக்குள்ளும் உரையாடல் சுருங்கிப் போனது.

அவள் சமைத்து வைக்கும் உணவுகளை எதுவும் கூறாது உண்பவன் சில நேரத்தில் கடையிலிருந்தும் உணவுகளை வாங்கி வந்த அவளுக்கும் கொடுப்பான்.

அன்றும் அப்படித்தான் அவன் அலுவலகத்திற்குச் சென்று மாலை நேரம் வீடு திரும்பும் போது எப்போதும் வெளியே அமர்ந்திருந்து கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருப்பவள்,  இன்று வெளியே இல்லாது போக அவளுடைய விழிகளோ அவனைத் தேடியது.

தன்னுடைய ஷர்ட் பட்டன்களை கழற்றியவாறே அறைக்குள் நுழைந்தவன் உள்ளே சோர்வாகப் படுத்திருந்தவளை கேள்வியாகப் பார்த்தான்.

இத்தனை நாட்களிலும் அவள் எந்த நேரத்தில் என்னென்ன செய்வாள் என்பது யாவும் அவனுக்கு அத்துப்படியாக தெரிந்திருந்தது.

 இந்த நேரத்தில் அவள் உறங்க மாட்டாளே என எண்ணியவன் அவளின் அருகே சென்று அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.

“இவளுக்கு என்ன ஆச்சு..? ஒருவேளை பீவரா இருக்குமோ..  என்னவா இருக்கும்..?’ என அவளுடைய நெற்றியில் தன்னுடைய கரத்தை வைத்துப் பார்க்க நெற்றியோ குளிர்ந்தது.

அவன் நெற்றியை தொட்டதும் சட்டென விழித்துக் கொண்டாள் கீதா.

“என்னாச்சு கீதா ஆர் யு ஓகே..?”

“ம்ம்…” என்றவள் மீண்டும் விழிகளை மூடிக்கொள்ள அவனுக்கோ புருவம் சுருங்கியது.

அவளைப் பற்றி சிந்தித்தவாறே பிரஷ் ஆகிவிட்டு மீண்டும் வந்தவன் படுக்கையின் முன்பு இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.

அவளோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் சுருண்டு கொள்ள சட்டென எழுந்து அவளை நெருங்கியவன், 

“ஹேய் என்னடி ஆச்சு என்ன பண்ணுதுன்னு சொன்னாதானே ஏதாவது பண்ண முடியும்.. எதுக்காக இப்படி படுத்திருக்க..?”

“ஸ்டொமக் பெயினா இருக்கு..”  என்றாள் அவள்.

அவளுடைய விழிகளோ கலங்கிப் போயிருந்தன. 

“ரொம்ப வலிக்குதா டாக்டரை வர சொல்லட்டுமா..?” என மென்மையாகக் கேட்டான் அவன்.

மறுப்பாக தலையசைத்தாள் அவள்.

ஆனால் விழிகளில் மாத்திரம் கண்ணீர் வழிவது நிற்கவே இல்லை. 

அவனுக்கோ தலை விறைக்கத் தொடங்கியது.

வலிக்கின்றதா எனக் கேட்டால் இல்லை என்கிறாள். ஆனால் வலி தாங்க மாட்டாதவள் போல கண்ணீரைச் சிந்திக் கொண்டே இருக்கிறாள் என எண்ணி குழம்பிப் போனவன் அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.

“சொல்லு கீதா…? ரொம்ப  பெயினா இருக்கா…? எதுக்காக அழுகுற..?”

“பீ… பீரியட்ஸ் ஆயிடுச்சு..” என குரல் உடையக் கூறினாள் அவள்.

அப்போதுதான் அவளுடைய அழுகையின் காரணம் புரிந்தது அவனுக்கு..‌ 

குழந்தை தங்கவில்லை என்பதால் அழுகிறாள் போலும் என எண்ணி கொண்டவன்,  “இட்ஸ் ஓகே.. நீ தூங்கு ஸ்ட்ரெஸ் ஆகாத..”  எனக் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி இருந்தான் அவன்.

அவள் குழந்தையை மிகவும் எதிர்பார்த்து இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெளிவாகவே புரிந்தது. 

அவனிடம் வார்த்தைகள் அற்ற மௌனம். அவளை என்ன சொல்லி தேற்றுவது எனத் தெரியவில்லை.

தன்னை பிடிக்கவில்லை என வெறுத்து ஒதுக்குபவளை மீண்டும் நெருங்கி உறவு கொள்ளவும் தயக்கமாக இருந்தது அவனுக்கு.

அவனுக்கு அவள் வேண்டும்தான்.. அவளை விட்டு விலகி இருப்பது மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது.

 ஆனால் அவளுடைய அழுகையும் விழிகளில் அவள் உமிழும், வெறுப்பும் அவனைத் தடுத்து நிறுத்தின.

அன்றைய நாள் இரவு வேலைக்கான உணவை ஹோட்டலில் ஆர்டர் செய்து எடுத்து வந்தவன், அவளுக்கும் கொடுத்தான்.

அவளும் மறக்காது அதை வாங்கி உண்டு விட்டுப் படுத்து விட, அவள் அருகே வந்து படுத்தவனுக்கோ தூக்கம் தொலைந்தது. 

அவன் என்னவோ கோபத்திலும், விளையாட்டாகவும் ஆரம்பித்து வைத்திருந்த செயல் சற்றே விபரீதமாகப் போவதை அக்கணமே உணர்ந்து கொண்டான் அவன்

“ஏன் பேபி ஃபார்ம் ஆகலை…?” எனக் கேட்டாள் அவள்.

“ஹேய் நான்தான் சொன்னேன்ல ஃபர்ஸ்ட் டைமே ஃபார்ம் ஆகும்னு ஷுர் பண்ணி சொல்ல முடியாதுடி” என்றான் அவன்.

“எனக்கு என்னவோ பயமா இருக்கு..” என நலிந்த குரலில் கூறினாள் அவள்.

“முட்டாள் மாதிரி பேசாத கீதா.. நான் தான் சொல்றேன்ல…‌ நமக்கு இன்னும் டைம் இருக்கு… பாத்துக்கலாம்.. இட்ஸ் ஓகே… நீ தூங்கு..” என்றான் அவன்.

அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு விழிகளை மூடிக்கொண்டவனுக்கோ கீதாவின் வார்த்தைகள் மனதில் நெருடத் தொடங்கின.

பெருமூச்சோடு விழிகளைத் திறந்தவன் மெல்ல அவளை நெருங்கி அணைத்துக் கொண்டான்.

அவளோ அதிர்ந்து அவனைப் பார்க்க “ஜஸ்ட் ஹக் மட்டும்தான்.. ப்ளீஸ்..”  என்றான் மிருதன்.

அவளோ அப்படியே விழிகளை மூடிக்கொள்ள அதனையே சம்மதமாக எடுத்துக் கொண்டவன் மேலும் அவளை தன்னோடு இறுக்கி அணைத்தவாறு விழி மூடி உறங்கத் தொடங்கினான்.

மௌனமாய் அங்கே உணர்வுகள் இருவருக்குமிடையே பரவத் தொடங்கின.

 
💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *