புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள்

புயலை மையம் கொள்ளும் பூவையவள் 17

ரிஷியின் கார் கருநிற கம்பளம் நீளமாக விரிக்கப்பட்டிருந்தது போல நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த தார்ச்சாலையில் சீறிப்பறந்தது.. அவன் வேகமே கோபத்தின் அளவை படம்பிடித்துக் காட்ட கனரக வாகனங்கள் நடுவே மயிரிழையில் நழுவி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தான் ரிஷி.. அவ்வளவு கோபம்.. காரணம் கொஞ்சம் வலுவானதுதான்..

சிருஷ்டி ஆபிஸ் வாட்சப் குரூப்பில் ரிஷியின் மனைவி பிரக்கனென்ட்.. ஆனால் அது ரிஷிக்கே தெரியாது என மீம் போட்டு கலாய்த்து விட்டிருக்க அவன் உயரதிகாரியாக இருக்கும் காரணத்தினால் சிலர் அடக்கி வாசித்தார்கள்.. சிலர் மறைமுகமாக கலாய்த்தனர்.. சிலர் நிறைவாக வாழ்த்துக் கூறினர்.. சிலர் கண்ணீர் வருமளவு சிரிப்பது போல ஸ்மைலி மட்டும் போட்டுவிட்டனர்.. இது போதாதா.. அவன் அடக்கி வைத்திருக்கும் கனலை லாவா போல வெடிக்கச்செய்ய.. சிருஷ்டியின் மேல் பொங்கிய கோபம் 50 சதம்தான்.. காரணகர்த்தா மல்லியின் மீதுதான் மொத்த கோபமும்.. தன்னை விட்டுக் கொடுத்து விட்டாளே.. அவமானப்படுத்தி விட்டாளே என்ற ஆற்றாமை அனலாக தகித்து அவளையே எரித்துவிடும் நிலை.. எவ்வளவு ஆசையாக வந்தான்.. பிரக்னென்சி கிட் கொடுத்து செக் செய்து கர்ப்பம் உறுதி செய்யப்படும் வேளையிலே அவள் வெட்கத்தை சொட்டு விடாது பருகி.. தூக்கி சுற்றி நெஞ்சில் சாய்த்துக் கொண்டு மூச்சுமுட்ட முத்தம் வைத்து  வாங்கிய இனிப்புகளை அவளுக்கு ஊட்டிவிட்டு ஒரு சிறுகூடல் நிகழ்த்தி கைப்பிடித்து எதிர்காலம் பேசி.. கர்வத்துடன் ஃபோனில் அனைவருக்கும் அழைத்து சொல்ல நினைத்திருந்தான்.. அவள் விருப்பப் பட்டியலில் எந்த இடத்திலும் தான் இல்லையா.. ரொம்பவும் வலித்தது.. கட்டுக்கடங்கா கோபம் வேறு இடம் இல்லாமல் உச்சி முதல் உடல் முழுக்க ஆக்ரமித்திருக்க தவளை போல தலைகீழாக கார் கவிழ்ந்து விழும் அளவு வேகமாக போய்க் கொண்டிருந்தான்..

கார் சிருஷ்டி வீட்டு வாசலில் அதிவேகத்தில் வந்து கீரீச்சென பிரேக் போட்டு நிற்க இறங்கி சீறும் காற்றைவிட வேகமாக நடந்தவன்  காலிங்பெல்லை விடாது அழுத்திக் கொண்டே இருந்தான்.. அப்பாவி காலிங்பெல் ஸ்விட்ச் கழண்டு விழுந்து விட்டது.. உள்ளிருந்து வரேன்.. என்ற குரலுடன் வந்து கதவைத் திறந்தாள் சிருஷ்டி.. 

எதிரே தீம்பிழம்பாய் நின்றிருந்த ரிஷியின் முகம் உள்ளுக்குள் பயம் கொடுத்தாலும் சமாளித்து நின்றவள் “என்ன ரிஷ்”.. என முடிக்கவில்லை.. எப்போதோ சுவற்றுடன் பல்லி போல கிடந்தாள்.. அவன்தான் தள்ளி விட்டிருந்தான்.. அடுத்த நொடி ஹாலில் நின்று மல்லி என இடமுழக்கக் குரலில் கத்த பதறிக் கொண்டு ஓடி வந்தாள் பெண்ணவள்.. ரிஷியை பார்த்ததும் முகம் ரத்தப்பசையின்றி வெளிறிப்போக அவன் கோபத்தில் சிவந்த விழிகளும் இறுகிய தாடையும் உடல் வெடவெடக்க ஆரம்பித்து விட்டது..

என்னதான் இருந்தாலும் தன்மனைவி இவள்.. இன்னொரு பெண் முன்னிலையில் கோபத்தைக் காட்டக்கூடாது என முயன்று கோபத்தைக் கட்டுப்படுத்தியவன் “வா போகலாம்.. எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம்”.. கடப்பாரையை முழுங்கியவன் போல் முகத்தை வைத்து மெதுவாக அழைத்து அவள் கைப்பிடித்து வன்மையாக இழுக்க.. பலத்தைக் கூட்டி நிலத்தில் காலை ஊன்றி நின்றாள்.. தன் இழுவிசைக்கு அவள் கட்டுபடாமல் நிற்பது உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.. உதட்டை கடித்தபடி தலைகுனிந்து நின்றவளை வினோதமாக பார்த்தான்.. என் மல்லியா இவள்.. சந்தேகம் கொண்ட மனம் அவளை வலியுடன் பார்க்க.. “நான் வரல”.. என்றாள் தலைநிமிராமல்..

உள்ளிருந்த அக்னி கொட்டித் தீர்க்க தயாராகி விட்டது.. “நான் உன்கிட்டே அனுமதி கேக்கல.. வான்னு சொன்னேன்”.. என்று இழுக்க கீழே விழப்போனவளை இடையில் கைகொண்டு பிடித்து தோளில் போட்டுக் கொண்டான்.. சிருஷ்டி ஓடி வந்தாள்.. “ரிஷி நீ பண்றது எதுவும் சரியில்ல.. அவளை இறக்கிவிடு.. அவதான் உன்னைப் பிடிக்கலன்னு சொல்றாளே.. இந்த மாதிரி அவளை கொடுமைப் படுத்தினே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்”.. அவள் மூச்சுவிடாமல் பேச நீயெல்லாம் ஒரு ஆளா.. என்பது போல் துச்சமெனப் பார்த்தவன் “அடச்சீ.. தள்ளிப்போ”.. என ஒற்றைக் கையால் அவளை தள்ளிவிட சோபாவில் போய் மோதி விழுந்தாள்.. மல்லி கால்களை அசைத்து கைகளை பிராண்டி எதிர்ப்புகளை வேறெந்த வகையில் காட்டலாம் எனத் தெரியாமல் “என்னை இறக்கிவிடுங்க.. மாமா.. நான்  வரல.. ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க”.. என திமிறியவளை கண்டு கொள்ளாது காரில் கொண்டு வந்துப் போட்டான்..

சிருஷ்டி கொலைவெறியுடன் வாசலில் வந்து நிற்க அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன் காரை எடுத்து கிளம்பி சென்றுவிட்டான்..  தன்வீட்டு வாசலில் இறங்கி அவள் கரம் பிடித்து தரதரவென இழுத்துச் செல்வதை மாமி  அவர் வீட்டு மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.. மல்லி தான் கர்ப்பமாய் இருக்கும் விஷயத்தை உடனே தன் கணவனிடம் சொல்லியிருப்பாள் என்று நினைத்துதான் அவர் ரிஷியிடம் வாய்விட்டதே.. ஆனால் இப்போது வரை அவள் கணவனிடம் வாய்திறந்து சொல்லவில்லை என்ற விஷயமே மாமிக்கு தெரியாதே.. மனைவியை கண்மூடித்தனமாக இழுத்துச் செல்லும் ரிஷி மிருகமாக தெரிந்தான் அவர் கண்களுக்கு.. அய்யோ கடவுளே.. என நெஞ்சில் கைவைத்து பார்த்தாலும் தான் யார் கணவன் மனைவி விவகாரத்தில் தலையிட..  என்ற தயக்கத்துடன் மனம் கனத்துப் போய் வீட்டுக்குள் சென்றுவிட்டார்..

வீட்டுக்குள் இழுத்து கொண்டு வந்ததும் ஓடிப்போய் சுவற்றின் ஓரம் ஒடுங்கி நின்றாள் மல்லி.. ரிஷி இடுப்பில் கைவைத்து அவளை வெறிகொண்டு முறைக்க நெஞ்சம் நடுங்க மூச்சு பலமாக இழுத்தது அவளுக்கு..

“நீ கர்ப்பமா இருக்கிற விஷயம் பக்கத்து வீட்டு மாமிக்கு தெரிஞ்சிருக்கு.. என் அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு.. சிருஷ்டிக்கு தெரிஞ்சிருக்கு”.. என அவளை நெருங்கி நின்றவன் “தாலி கட்டின புருஷனுக்கு சொல்லனும்னு உனக்கு தோணலைல.. இல்ல தெரியாமதான் கேக்கிறேன்.. உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பன் நான்தானே”.. கண்மண் தெரியாத கோபத்தில் குதர்க்கமாக கேட்க.. துடித்துவிட்டாள் மல்லி.. “அசிங்கமா பேசாதிங்க மாமா.. இதோ இப்படி பேசற உங்க கேவலமான புத்தியாலதான் சொல்லாம மறைச்சேன்”.. என்று முடிக்கும்முன் சப்பென ஒரு அறை விழுந்தது அவள் கன்னத்தில்.. 

“கேவலமானவனா.. என்னடி நாக்கு ரொம்ப நீளுது.. ஓ.. அவ சொல்லிக் கொடுத்து அனுப்பினாளா.. என்னை விட மத்தவங்க எல்லாம் ரொம்ப முக்கியமா போய்ட்டாங்களோ.. நேத்துவரைக்கும் கேக்க ஆளில்லாத அன்னக்காவடி நாய்.. ரிஷியை கல்யாணம் பண்ணதும் வெளிய போய் வாழற அளவு திமிர் வந்துருச்சோ.. ஓடுகாலி கழுதை”.. அவனும் அநியாயமாய் கோபத்தில் வார்த்தைகளை விட “இதோ இப்படி தேள்கொடுக்கு மாதிரி கொட்றிங்களே.. இதுக்காகதான் போனேன்.. நானும் எவ்ளோதான் தாங்கறது”.. என  கண்ணீருடன் அவள் எகிற.. “ஓஹ்.. பார்றா.. என்னமோ உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ண மாதிரி பேசற.. நானாடி உன்னை அடம்பிடிச்சு கட்டிகிட்டேன்.. ஒத்தைக்கால்ல நின்னு ரிஷிதான் வேணும்னு கட்டிக்கிட்டது நீ.. இப்போ சலிச்சு போய்ட்டேனோ.. ஏன் என்னைவிட பெட்டரா வேற எவனையாவது பிடிக்க எண்ணமோ”.. காயப்படுத்த நினைத்து ஒரே குறிக்கோளில் கேட்ட கேள்விகள்.. எனக்கும் இப்படிதான்டி வலிக்குது.. என திருப்பி அடிக்கும் எண்ணம்..

“வாய்க்கு வந்தபடி பேசாதீங்க.. நான் ஒன்னும் நீங்கதான் வேணும்னு அடம்பிடிச்சு கட்டிக்கல.. உங்கம்மா நன்றிகடன்கிற பேர்ல என்னை கட்டிபோட்டுட்டாங்க.. என் வாழ்க்கையை உங்ககிட்டே அடகு வச்சிட்டாங்க.. சாதாரண வேலைக்காரியை ஏன் கட்டிவைக்கிறாங்கன்னு அப்போ புரியல.. இப்போதானே தெரியுது.. கர்ப்பமாய் இருக்கிறதை என் புள்ளகிட்டே சொல்லாதேன்னு உங்கம்மாவே எச்சரிக்கை பண்ற அளவு கேவலமான ஜென்மம் நீங்க”.. என்று ஆக்ரோஷமாய் சீற.. “என்னடி சொன்னே”.. என்று உச்சகட்ட கோபத்தில் இன்னொரு அறை சப்பென்று வைத்தான்..

“அ.. அடிக்காதிங்க மாமா.. வலிக்குது”.. கரத்தை தன் முகத்திற்கு நேரே வைத்து குரல் நடுங்க அவள் தேம்பி தேம்பி அழவும் கொஞ்சம் இளகினான் ரிஷி.. அவள் வயிற்றில் ஒருநொடி விழிகள் பதிந்து மீள .. இந்நேரம் அடித்துவிட்டோமே.. எல்லாம் கோபம்.. கோபம்.. ச்சை.. என குற்ற உணர்ச்சியில் தன்னையே சாடிக் கொண்டு தவித்தவனுக்கு “கொஞ்சம் கூட என்மேல இவளுக்கு என்மேல அன்பில்லையா.. என் காதல் இவளுக்கு புரியவே இல்லையா.. எல்லோரையும் போல இவள் கண்ணுக்கும் நான் அரக்கனாதான் தெரியறேனா.. எவ்ளோ ஆசையா வந்தேன்டி.. என்னை ஏமாத்திட்டியே”.. என வலியிலும் வேதனையிலும் தன் மீதே கழிவிரக்கம் பிறந்தாலும் அவள் உதிர்த்த வார்த்தைகளில் தன் வேதனையை வெளியே காட்டாது ஒட்டுமொத்த கோபத்தின் மறு உருவாய் நின்றிருந்தவன் “இவ்ளோ தெளிவா பேசற நீ முதல் நாளே உங்களை எனக்கு பிடிக்கல என்னை பாதுகாப்பா ஒரு இடத்துல விட்ருங்கன்னு சொல்லியிருந்தா சந்தோஷமா தலை முழுகி தொலைச்சிட்டு நிம்மதியா இருந்திருப்பேனே.. எதுக்குடி என்கூட இருந்தே.. மேல ஏறி விழும்போது அமைதியா இருந்தே.. நீயாதானே என்கிட்டே வந்தே.. மனசில இவ்ளோ வெறுப்பை வச்சிகிட்டுதான் என்கூட படுத்தியா.. அப்போ என்னை பிடிக்கலைன்னா என்கூட இருக்கும்போது எவனை நினைச்சுகிட்டு படுக்கைல கிடந்த”.. என்று நெருப்புதுண்டாய் வார்த்தைகளை துப்ப.. “ஐயோ கடவுளே” என காதைப் பொத்தி கொண்டாள் மல்லி.. “என்ன வார்த்தை சொல்லிவிட்டான்.. எவ்வளவு அவமானப் படுத்தியிருப்பான்.. எவ்வளவு சித்ரவதை.. என்ன பாடுபட்டும் மானங்கெட்ட பாழும் மனம் இவனையே அல்லவா சுற்றி சுற்றி வருகிறது.. எப்போது காதலிக்க ஆரம்பித்தேன் என தெரியாமல் ஓருயிராய் கணவனாய் காதலனாய் இவனையே மனதில் நினைத்து தன்னை மொத்தமாய் அவனிடம் ஒப்படைத்ததை எவ்வளவு கேவலமாக கூறிவிவிட்டான்.. என் காதலை உணரவே இல்லையா.. நான் கொடுத்த முத்தங்களை மறந்து விட்டானா.. கூடலில் மாமா.. மாமா.. என மூச்சுக்கு முன்னூறு தரம் தன்னை மறந்து உச்சரித்தது தெரியாதா இவனுக்கு.. எவனை நினைத்து என்னுடன் சேர்ந்தாய் என அவ்வளவு அபத்தமாக கேட்டுவிட்டான்.. என்னைவிட யாரால் இவனை அன்பு செலுத்தி அக்கறையாய் பார்த்துக் கொள்ள முடியும்..  என்று ஆயிரம் எண்ணங்களுடன் வெறித்த பார்வையுடன் விரக்தியாய் நோக்கியவள் ஓடிச்சென்று அறைக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டாள்.. பேசிக்கிட்டே இருக்கேன்.. அலட்சியப்படுத்திட்டு போக என்ன திண்ணக்கம் இருக்கனும்.. என பல்லைக்கடித்தவன் வேகமாக சென்று கதவை உடையும்படி தட்டினான்.. 

“ஹே கதவை திறடி.. இன்னும் பேசி முடிக்கல.. வெளியே வா” என்று வேகமாக தட்ட அங்கே உள்ளிருந்து பதிலில்லை.. “இப்போ நீ திறக்கிறியா.. நானே உடைச்சிகிட்டு உள்ளே வரட்டுமா.. திறடி”.. அவன் குரலும் கதவை உடைக்கும் விதமும் அவளுக்கு இன்னும் பயத்தை உண்டு பண்ணியது.. ஒரு ஓரத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு காதையும் கைகளால் இருக்க மூடிக் கொண்டாள்.. இந்நேரத்தில் குணங்கெட்ட ராட்சசனாக மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தான்.. “இப்போ உள்ளே வந்தேன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. தப்புக்கு மேல தப்பு பண்ணாதே மல்லி.. என்னை வெறியேத்தாதே..  கதவைத்திற”.. அவன் வலுத்த கரம் பட்டு கதவு வீரல் விட்டது..

மல்லி தெறித்த பார்வையுடன் கதவை நோக்கினாள்.. இனி அவன் பேசுவதை தாங்கி கொள்ள நெஞ்சில் திடம் இல்லை.. இவனிடம் வாழவும் எண்ணம் இல்லை.. எப்போது இன்னொருவனை நினைத்து என்னுடன் படுக்கையில் கிடந்தாய் என்று கூறிவிட்டானோ அப்போதே பாதி மரித்துப் போனாள்.. மீதி உயிரை இப்போது வந்து இவன் உருவி எடுத்துவிடுவான்.. கர்ப்பவதி என்று கொஞ்சமும் இரக்கமில்லை.. இவனுடன் மிச்ச காலங்களை எப்படி வாழ்வது என்று நினைத்தாளோ என்னவோ.. குழந்தை வயிற்றில் வந்த மகிழ்ச்சியை கொண்டாட நினைத்த இருவருமே முற்றிலுமாக வேறு மனநிலைக்கு மாறியிருக்க வீடே களேபரமாய் போனது.. நான்கு தெருவுக்கு கேட்கும்படி கத்தியபடி கதவை உடைத்துக் கொண்டிருந்தான் ரிஷி..

கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவள் ட்ராவைத் திறந்து உள்ளிருந்த தூக்கமாத்திரை பாட்டிலை கையில் எடுத்தாள்.. இப்படி ஒரு வாழ்க்கை வாழறதைவிட சாவதே மேல் என்று நினைத்தவள் மொத்த மாத்திரைகளை வாயில் கொட்டி விழுங்கி ஒரு ஓரமாக அமர்ந்து விட்டாள்.. 

கோபம் மனிதனை மிருகமாக்கும்.. இங்கே பொறுமையாக அமர்ந்து பேசி முடிவெடுக்க யாருக்குமே நேரமில்லை.. துணையின் மனதினை அறிந்துகொள்ளும் நவீன கருவியும் இன்னும் கண்டறிய படவில்லை.. உனக்காகத்தான் வாழ்கிறேன்.. புரிந்துகொள்ளாவிடில் பிரிந்து போ.. விளக்க நேரமில்லை.. என்ற அலட்சியம்தான் இன்றைய தம்பதிகளிடையே.. ஆத்திரத்தில் இருவருமே அறிவிழந்தனர்.. இருவரின் எதிர்பார்ப்பும் பூர்த்தியாகாத தருணத்தில் எதிர்காலம் எப்படி இருக்கும்.. மல்லியின் நிலை என்ன.. 

தொடரும்..

அடுத்த எபி.. இன்னிக்கே.. நம்புங்க லைக்ஸ் போட்டு வைங்க வந்துடுவேன்..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *