நாலு வருசத்துக்கு முந்தி ஜூன் மாசத்துல ஒரு நாளின் சாயந்திர வேளை.. ஈரோடு கலக்டர் ஆபீஸ் கிட்ட சம்பத் நகர் வழியாப் போற பஸ்சுக்காக நின்னுக்கிட்டிருந்தேன்
அங்க ஏம் போனேன்னா.. அப்ப Thangavel Karuppusamyங்கற முகவரில மூஞ்சிப் புத்தகத்துல இருந்தேன். (இது வரைக்கும் அஞ்சு பேருல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டேனாக்கும் .. பேங்க்ல தான் அக்கவுண்ட் இல்ல.. இதுலயாவது ஏகத்துக்கும் இருக்கட்டுமே? அதுவுமில்லாம இதுக்காகவாவது கலை (மா)மாமணி பட்டம் வாங்காம ஓய மாட்டேன்).. அந்த அக்கவுண்ட்ல ஒரு ஈரோட்டுப் பெண் தோழி என்னப் பாத்துப் பேசணும்னு ஆசப் பட்டாங்க..
உங்க எல்லாருக்குமே தெரியும் நான் ரொம்பவே கூச்ச சுபாவிங்கறது.. (யாருங்க அது பின்னால நக்கலா சிரிக்கறது?).. பல நாள் யோசிச்சு சரி.. எங்க மீட் பண்றது?ன்னு தைரியமா கேட்டே போட்டேன்.. சம்பத் நகர்ல இருக்கற டிஜிட்டல் லைப்ரரிக்கு நாளைக்கு அஞ்சு மணிக்கு வாங்கன்னு பதில் வர.. ஸோ
