பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

பச்சைக்கிளி முத்துச்சரம் நீயா

அத்தியாயம் 6

திருமணம் முடிந்ததும், மீனாட்சியின் சொல்படி ஆனி பூஜை அறையில் விளக்கேற்ற, முறைப்படி அழகு நாச்சியார் ஆலம் சுற்றி மணமக்களை வீட்டினுள் வரவேற்றாள். வீட்டினுள் வந்ததும் சரவணன், ஆளுயரத்தில் தேக்கு சட்டமிடப்பட்டிருந்த தன் தந்தை படத்தின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக வழுந்து வணங்கிய பின், படத்தின் அருகே நின்றிருந்த அன்னை மீனாட்சியின் காலடியிலும் தரையில் கிடைமட்டமாக விழுந்து வணங்க, ஆசிர்வாதம் வங்குவது என்றால் அது முழந்தாளிட்டு தான் என பயிற்று விக்கப்பட்டிருந்த ஆனிக்கு சரவணனின் இந்த செய்கை ஆச்சரியத்தைக் கொடுத்தது. 

அதிலும் யாருக்கும் அடங்காத திமிர் பிடித்தவன் என அவள் நினைத்திருந்த சரவணன் தன் கால் வலியைக் கூட பொருட்படுத்தாமல் பக்கவாட்டில் இருந்த சுவரை பற்றிக் கொண்டே கஷ்டப்பட்டு கீழே குனிந்தது எல்லாம் அவள் சரவணனிடம் கனவிலும் எதிர்பார்த்திராதது. அவளறிய யாருக்கும் பணிந்திராத கணவனது இந்த மரியாதை செய்கை அவளுக்கு திகைப்பூட்டியது. சரவணனை பின்பற்றி அவனது தந்தை சண்முகப் பாண்டியனின் புகைப்படத்தை கீழே விழந்து வணங்கிவிட எண்ணி குனிய முயன்றாள் ஆனி. 

ஆனிக்கு பட்டு புடவையினுள் அணிந்திருந்த உடலை உறுத்தாத தொளதொள பருத்தி உள்ளாடைகள் ஓரளவிற்கு புண்ணை உறுத்தாமல் நடமாட உதவிய போதும், சரவணனைப் போல இப்படி தரையில் குப்புற விழுந்து வணங்கினால் காலில் உள்ள தீக்காயங்கள் வலிக்கும் என்பதால் சிறு யோசனையுடன் முதலில் புகைப்படத்தின் முன்னால் விழுந்து வணங்க தயங்கி நின்றவள், ‘அப்படி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவில்லை எனில் மரியாதை இல்லையோ?’ என நினைத்து, பல்லை கடித்து வரப்போகும் வலியை எண்ணி பயந்தவாறே மீனாட்சியின் முன்னால் தரையில் விழுந்து வணங்க முயற்சிக்க, ஆனியின் உத்தேசம் அறிந்தவராய் ஆனியின் தோள்களை பிடித்து அவளை நேராக நிற்க வைத்த மீனாட்சி “ஆனி வேணாம்மா உனக்கு தீப்புண் வலிக்கும்.” என்றதோடு, அடுத்து சரவணனையும் தூக்கி நிறுத்திய மீனாட்சி “நீங்க இரண்டு பேரும் பதினாறு செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழணும். என்னோட ஆசி மட்டும் இல்ல, தெய்வமாயிட்ட என் கணவர் கோட்டை வீட்டு சண்முகப் பாண்டியனோட ஆசியும் உங்களுக்கு எப்போதும் துணை இருக்கும்.” என வாழ்த்தியவர் மகனுக்கும், மருமகளுக்கும் நெற்றியில் திரு மண் அணிவித்து மகிழ்ச்சியில் திளைத்தார்.

சரவணன் தனது பண்பாடான வளர்ப்பு முறையினால், பெற்றவளுக்கு அடுத்து ஆப்ரஹாமையும், ஜூலியையும் கூட முறைப்படி காலைத்தொட்டு வணங்குவதற்கு முயன்றான், அவர்கள் கால்களை தொட்ட சரவணனை வேகமாக தடுத்த அவர்களோ மகளையும், மருமகனையும் ஆரத்தழுவி விடுவித்து, இருவரது நெற்றியிலும் சிலுவை குறியிட்டு “காட் பிளஸ் யூ” சொல்லி கன்னங்களில் முத்தமிட்டனர். சரவணன் மீனாட்சியிடம் மட்டும்மல்லாது தனது பெற்றோரிடமும் அதே போலவே ஆசி வாங்க குனிந்து கால்களை தொட்டது ஆனிக்கு சரவணனின் மேல் லேசான மரியாதையை வர வைத்தது.

அழகு நாச்சியாரையும், விஸ்வநாதனையும் அருகருகே நிற்க வைத்து வணங்க முயன்ற சரவணனையும், ஆனியையும் அவர்களும் தடுத்து அணைத்துக் கொண்டவர்கள் இருவருக்கும் திருமண் இட்டு ஆசிர்வதித்தனர். இறுதியாக ரேச்சலும் பாபியும், வாழ்த்துச் சொல்லி மணமக்களை இறுக தழுவி விடுவித்தனர். 

திடீர் திருமணம் அனைவருக்குமே திகைப்பை தந்திருக்க, பரந்து விரிந்த வரவேற்பறை போன்ற பகுதியில் ஆங்காங்கே இருந்த சோபாக்களில் அனைவரும் கூடி அமர்ந்து இருந்தாலும் அமைதியாகவே இருக்க, வேலை ஆட்கள் மீனாட்சியின் கண்ணசைவில் தங்களது வேலைகளை பார்க்க அகன்றிருந்தனர். ஆனியையும், தன் தம்பி சரவணனையும் கரம் பிடித்து அழைத்து போய் ஒரே சோபாவில் அருகருகே அமர வைத்த அழகு நாச்சியார், தன் அன்னையை கூட்டிக் கொண்டு பால், பழம் எடுக்க சமயலறைப் பகுதி நோக்கி சென்றுவிட, ஆனிக்கு தொடர்ந்து காலை தொங்கவிட்டுக் கொண்டே இருப்பது சங்கடமாக இருக்கவே, லேசாக நெளிந்து கொண்டிருந்தாள். 

ஆனி லேசாக குதி காலைத் தூக்கி திரும்ப கீழே வைத்தவள், அந்த சிறு அசைவினால் சரவணனது அடிபட்ட கால் பாதம் மேல் தன் குதிகாலை வைத்து விட, “ஷ்!” என முனங்கிய சரவணன், ஆனியின் பக்கம் திரும்பியதும் அவள் மேலிருந்து வந்த பூ வாசனை நாசியினுள் நுழைந்து அவனை கிறங்கடிக்க ஆங்காரத்துடன் பேச எத்தனித்திருந்தவன், “யேய் அடிபட்ட காலை மிதிச்சிட்டிருக்க. கொஞ்சம் தள்ளி மிதிச்சிருந்தீன்னா, நேரா கட்டுப் போட்டுருக்குற இடத்துலயே மிதிச்சிருப்ப. ஏற்கனவே குனிஞ்சு எழுந்ததே வலிக்குதுடீ இதுல நீ வேற!” என அடங்கிப் போன குரலில் கிசுகிசுக்க, அவனது வழமையான கடுமை மட்டுப்பட்டு கெஞ்சல் போல ஒரு கொஞ்சல் தன்மை அவனறியாமல் மிகுத்து ஒலித்தது. 

சரவணனுடன் திருமணம் என்றதுமே மூளை, உடல், மனம் என மொத்தமும் ஸ்தம்பித்து விட, பொம்மைத் தனத்துடன் திருமணம் செய்து கொண்ட ஆனிக்கு சரவணனின் இந்த ‘வலிக்குதுடீ’ என்ற அதிக உரிமையுடனான அழைப்பு ஏனோ அதிகாரமான அதட்டலாக தோன்றவில்லை. காதருகில் கேட்ட கணவனின் ஆண்மை ததும்பும் ஆழ் குரல் செவிப்பறையை அதிர வைத்த பாங்கில் உணர் நரம்புகள் சுண்டி விடப்பட, அது சொல்லில் அடங்காத உணர்வு கிளர்வைத் தரவே, நிமிர்ந்து சரவணனின் கண்களைப் பார்க்க வெட்கம் தடை சொல்ல அவன் பேசும் போது ஏறி இறங்கிய குரல் வளையில் எடுப்பாக தெரிந்த ஆடம்ஸ் ஆப்பிளை பார்த்தபடியே “ஆங்! சோரி!” என்று விட்டு தன் காலை நகர்த்தியவளது கண்கள் ஏனோ நொடியில் மயங்கி சமநிலை அடைந்தது.

சரவணன், அலங்கார பதுமையென ஆடை, அணிகள் பூண்டிருந்த ஆனிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் புகைப்படத்தை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரச் சொல்லி, திருமணம் எப்போது நடந்தது என்ற விளக்கமோ தேதியோ குறிப்பிடாமல் விட்டுவிடுமாறு சொல்லி இருந்த சரவணன் அந்த பொறுப்பை தன் அக்கா கணவர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்து இருந்தான். விஸ்வநாதனோடு பாபியும் சேர்ந்து கொள்ள அவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் உரையாடியவாறே புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். ஆப்ரஹாம், ஜூலியிடமும், ரேச்சலிடமும் பேசிக் கொண்டிருந்தவர் ஆனிக்கு அவளது நகைகளை எப்போது எடுத்து வந்து தரலாம், ஆனிக்கு திருமண வரவேற்பு நடத்த வேண்டும் என தனது எதிர்கால திட்டங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். 

சரவணனுக்கு ஆனி அவனை ஒட்டி உரசிக் கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை எனினும், அவன் அருகில் ஒரு பெண் அதிலும் அவன் மனைவி அமர்ந்திருக்கிறாள் என்ற எண்ணமே அவனை நிதானம் தவற வைத்து விசித்திரமாக உணர வைத்தது. இந்த திருமணம் எதிர்பாரத தருணம் நடந்தேறி இருக்க, ‘ஆனியை எப்படி அணுகுவது? அவளோடு எப்படி பழகுவது? தனது வழமையான கடுகடு தன்மையோடு ஆனியிடம் பழகினால் அவள் ஏற்றுக் கொள்வாளா? திருமண வாழ்வை எப்படி நெறிபடுத்துவது?’ என சரவணனால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. சரவணனுக்கு தான் இந்த திருமணத்தை எப்படி அங்கிகரிக்க போகிறோம்? என தனிமையில் அமர்ந்து சிந்தித்து முடிவு செய்ய கால அவகாசமும், யாருமற்ற தனிமையும் தேவைப் பட்டது. 

ஆனிக்கு மீண்டும் கால் முணுமுணுவென வலிக்க துவங்க, தன் குதிகாலை தூக்கி மேலும் கீழுமாக அசைத்து வலியை குறைக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனியின் அசைவுகளை உணர்ந்து கொண்ட சரவணன் மீண்டும் அவள் புறம் திரும்பி “கொஞ்சம் பொறுத்துக்கோ பால், பழம் தந்த பிறகு நீ இப்படி உட்கார்ந்திருக்க தேவையில்ல.” என கனிவாக சொல்ல, அன்று நள்ளிரவில் நடந்த அந்த ஹாஸ்ட்டல் சம்பவத்திற்கு பின் சரவணன் பெயரைக் கேட்டாலே கிடுகிடுவென நடுங்கிப் போகும் ஆனிக்கு, சரவணன் தன்னிடம் இப்படி கோபம் அற்ற சாதாரண தொனியில் கிசுகிசுப்பது முதலில் மாரடப்பை வரவழைக்கும் போல இருந்தாலும், காதோடு சேர்த்து மொத்த உடலையும் புல்லரிக்கச் செய்ய, தனது படபடப்பை பயமென நினைத்து, ‘ஓ மை காட். லூசிபர் நோர்மலா பேசுனா இன்னும் அதிக பயமா இருக்கே?’ என தன் உள்ளுணர்வைத் தானே தவறாக புரிந்து கொண்ட ஆனி “ஷெரி!” என பதில் சொன்னாள்.   

சமயலறையில் தன் அன்னை மீனாட்சியுடன் பேசிக் கொண்டிருந்த அழகு நாச்சியார் “அம்மா காலையில நெட்ல மெசேஞ் பார்த்துட்டு என்ன ஆச்சுன்னு கேட்க போன் பண்ணா, சட்டுன்னு கல்யாணம்ன்னு சொல்லிட்டீங்களா எனக்கு ஒண்ணும் ஓடல. ஷிவா காலேஜ்ல லீவ் சொல்லிட்டு கிளம்புறேன்னு சொன்னான். சின்னவன் கார்த்திக் தான் போன் பேசிட்டு இருக்கும் போதே எங்க மாமாவுக்கு கல்யாணம்ன்னு ஒரே ஆர்ப்பாட்டம். அவனும் அவங்க ஹாஸ்டல்ல சொல்லிட்டு உடனேயே கிளம்பிட்டான். ஊட்டியில இருந்து வந்துட்டு இருக்கான். 

அத்தை மாமாகிட்ட சொன்ன உடனே, ‘ஏற்கனவே ஒரு தடவ சரவணனுக்கு நல்லது பண்றதா நினச்சு நாங்க பண்ணி வச்ச குழறுபடியே போதும், இப்போ நாங்களும் உங்க கூட ஒண்ணா வந்தா என்ன ஏதுன்னு கூட்டம் திரண்டு குளறுபடி ஆகிடும். அதனால கல்யாணம் முடிச்சு ஒரு நாள் விருந்துக்கு பொண்ணையும், மாப்பிள்ளையும் நம்ம வீட்டுக்கு விருந்துக்கு கூட்டி வாங்க. அப்போ நாங்க புதுப் பொண்ண பார்த்துக்கிறோம்!’ ன்னு அவங்களாவே வரலன்னு சொல்லிட்டாங்க. மத்தவங்களுக்குலாம் நீங்க சொன்ன மாதரி எதுவுமே சொல்லல.” என வளவளக்க, 

மீனாட்சியோ நடந்ததை சுருங்க விவரித்தவர், “நம்ம சரவணனுக்கு இப்படித்தான் கல்யாணம் நடக்கணும்னு விதிச்சிருக்கும் போல?!” என வருத்தப்பட, நாச்சியாரோ “அட விடுங்கமா. இத்தன காலம் கழிச்சு எப்படியோ இப்பவாவது அவனுக்கு ஒரு வழி பிறந்ததே!” என அன்னையை ஆற்றுப் படுத்தினாள்.

மீனாட்சி பாலை காய்ச்சிக் கொண்டிருக்க, அழகு நாச்சியாரோ “அம்மா சொல்ல மறந்துட்டேனே வர்ற வழியில தம்பிக்கு கல்யாணம் நடக்கும்னு சொன்னாரே அதே சோசியருக்கு கால் பண்ணி பேசினேன். இன்னைக்கு நல்ல முகூர்த்த நாளா இருக்கிறதால கல்யாணம் இன்னைக்கு வைக்கலாமாம் ஆனா சரவணன் ஜாதகப்படி சாந்தி முகூர்த்தம் மட்டும் நாளைக்கு நைட் வைக்கச் சொல்லி நேரம் குறிச்சு கொடுத்திருக்கார்.” என்றவள் சோதிடரிடம் நேரம் கேட்டு தான் எழுதி வைத்திருந்த காகிதத்தை கொடுக்க மீனா பெற்றுக் கொண்டார். 

“உங்க மருமகன் இருக்காறே! என்ன நாச்சியா ஒரு டாக்ட்டரே இப்படி சோசியத்துல நம்பிக்கை வச்சுட்டு எல்லாத்துக்கும் நேரம் பார்த்துட்டு திரியலாமான்னு என்னை அப்படி கேலி பண்றாரு.” என்க, “ம் மாப்பிள்ளை உன்ன சும்மா கேலி பண்ணி இருப்பாங்க. மாப்பிள்ளை தனியாவும், அவரோட பெத்தவங்க கூடயும் நம்ம சரவணன் ஜாதகத்தை தூக்கிட்டு ஏதாவது பரிகாரம் பண்ணா நல்லது நடக்குமான்னு கேட்டு எத்தனை சோசியர் வீட்டுக்கு ஏறி இறங்கி இருப்பார்? அதெல்லாம் மறக்க முடியுமா?! நாமளும் பார்க்காத சோசியரா? வேணாடாத தெய்வமா?! பண்ணாத தான தர்மமா? பத்து வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் உன் தம்பிக்கு தெய்வம் கண்ண திறந்திருக்கு. எத தின்னா பித்தம் தெளியும்னு இருந்தப்ப கடவுளா இந்த சோசியர அனுப்பி சரவணனுக்கு நிச்சயம் கல்யாணம் நடக்கும்னு சொல்லி அதே போல நடந்தும் முடிச்ச மாதிரி இருக்குது நாச்சியா.” என பேசியவாறே பால் பழத்தை எடுத்துக் கொண்டு மகளுடன் பேசியவாறே அனைவரும் இருக்கும் இடம் நோக்கி விரைந்தார். 

இரண்டு வெள்ளி தம்ளர்களில் ஊற்றி வைத்திருந்த வெதுவெதுப்பான பாலை, ஒன்றை விஸ்வா கையால் எடுத்து சரவணனிடம் கொடுக்க சொன்ன மீனாட்சி மற்றொன்றை அழகு நாச்சியாரிடம் கொடுத்து ஆனியிடம் தரச் சொன்னார். ஆனி தம்ப்ளரை கையில் வாங்கியதும் பால் வாசனை பிடிக்காமல் “ஐயே பாலோ?!” என முகம் சுளிக்க, ஓரக்கண்ணில் ஆனியை அளவிட்ட சரவணன் அவள் பேசியது காதில் விழாதவன் போல அதற்குள் தன் கையில் இருந்த பால் தம்ப்ளரில் ஒரு மிடறு விழுங்கி பிறகு, தனது பால் தம்ளரை ஆனியின் உதட்டருகே கொண்டு வர, “சரவணா சார் எனிக்கு பால் வேணா!” என ஆனி கிசுகிசுத்தாள். 

சரவணனோ தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியவன், “ஏய் குடி!” என மிரட்டலாக சொல்லி பால் தம்பளரின் விளிம்பினை இரு உதடுகளிக்கும் மத்தியில் வைத்து அழுத்தி அவள் இதழ்களைப் பிரிக்க, தாழ்ந்த குரலில் சரவணன் மிரட்டியது வேறு யாருடைய கவனத்தையும் கவரவில்லை என்றாலும் ஆனியை பணிய வைக்க அதுவே போதுமானதாக இருந்தது. வாயை திறந்தாலும் ஆனி பாலை உறிஞ்சாமல் குடித்தது போல உதடுகளை அசைத்து இறுக்கி ஏமாற்ற எத்தனிக்க, சரவணனா விடுவான். 

மற்றவர்களுக்கு தான் செய்வது தெரியாதவாறு தனது பரந்த முதுகினால் ஆனியை மறைத்துக் கொண்டு நன்றாக ஆனியின் புறம் திரும்பி அமர்ந்தவன் சட்டென ஆனியின் மூக்கை மூச்சு விட முடியாதபடிக்கு அழுத்தி மூட, மூச்செடுக்க வேண்டி வாயை திறந்தவளது வாயில் பாலை ஊற்றி அவள் கீழ் தாடையை மேலே தள்ளி மூடி, வாயினுள் இருந்த பாலை அவள் விழுங்கிய பிறகே மூக்கை விடுவித்தான். 

ஆனி பாலை குடித்த பிறகு, “உன் டம்ப்ளர்ல இருக்குற பால சிப் பண்ணிட்டு என்கிட்ட கொடு.” என சரவணன் மிரட்டலாக கேட்க, சரவணன் வலிய பாலை புகட்டியதால் அவன் மேல் வெஞ்சினத்தில் இருந்த ஆனி, “சாரே நீ ஓவரா மிரட்டுற முடியாது.” என மறுக்க, சரவணனோ “என்ன திரும்பவும் உன் மூக்கை பிடிக்கணுமா?!” என கேட்டது தான் தாமதம் “வேணா!” என முணுமுணுத்தவள் அவசரமாக ஒரு மடக்கு பருகி விட்டு சரவணனுக்கு தந்தாள். சரவணன் மீதி பாலை வாங்கி குடித்து விட, அடுத்து பழம் பரிமாறும் போது ஒழுங்காகவே ஒத்துழைத்தாள் ஆனி. 

மீனாட்சி ஆனியின் அன்னையிடமும், ரேச்சலிடமும் சொல்வது போல எல்லோருக்கும் கேட்கும் படி பொதுவாக “நாளைக்கு தான் சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறிச்சு குடுத்துருக்காங்க. அதனால நாளைக்கு ஏற்பாடு பண்ணலாமா?” என கேட்க, சரவணனோ “அம்மா இல்ல இன்னைக்கே ஏற்பாடு பண்ணுங்க.” என்க, “என்னது?!” “கடவுளே சரவணா என்ன சொல்ற!” “நோ?!” “வாட்?!” என அடுத்தடுத்து கேட்டன அங்கே கூடியிருந்தவர்களின் குரல்கள். 

விஸ்வநாதனும், பணியிடத்தில் தமிழ் நண்பர்களால் தமிழ் படித்திருந்த பாபியும் மட்டும் அடக்கமாட்டாமல் சிரிக்க, ரேச்சல் தன் கணவனை முறைத்தவள் “ஷட் அப் பாபி!” எனவும், தன் உள்ளங்கையால் வாயை மூடுவது போல சைகை செய்தவன் வெகு சுவாரசியமாக நடப்பதை வேடிக்கை பார்க்க துவங்கினான். 

அழகு நாச்சியாரோ “தம்பி என்னடா பேசுற நீ?! யோசிச்சு பேசு.” என சரவணனை கெஞ்ச, அவனோ “நாச்சியா வேணாம் நான் ஏதாவது சொல்லிடப் போறேன் அப்புறம் ஏன்டா இவன்கிட்ட வாய குடுத்தோம்னு பீல் பண்ணுவ.” என்றவன், மீனாட்சி “சரவணா விளையாடாதடா!” என்றதும், 

“மீனா என் முகத்தை நல்லா உத்துப் பாரு விளையாடுற மாதிரியா இருக்கு?! நான் சீரியசா தான் சொல்றேன். இன்னைக்கே சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க மத்ததை நான் பாத்துக்கிறேன்.” என அழுத்தமாக சொல்ல, மகனது குணம் புரிந்திருந்த மீனாட்சியும் ‘சரவணன் காரணமில்லாம எதையும் செய்ய மாட்டான். மத்ததை நான் பார்த்துக்கிறேன்னு சொல்றான்னா அப்போ இன்னைக்கு அவன் ஆனியோட ஏதோ பேசணும்னு தான் நினைக்கிறான் போல.’ என எண்ணியவர், “அப்போ சரிடா இந்தா இந்த பேப்பர பிடி. இதுல நல்ல நேரம் குறிச்சிருக்கு.” என்று முடித்து விட்டார். 

ஆப்ரஹாமோ “சாந்தி முகூர்த்தம்ன்னா என்ன?” என விஸ்வநாதனிடம் கேட்க, அவரைப் போலவே பொருள் விளங்காத ஆனியும், ரேச்சலும், ஜூலியும் கூட ‘ஆமா அது என்ன பங்க்‌ஷன்?’ என்ற கேள்வியோடு விஸ்வநாதனின் பதிலை ஆவலாக எதிர்பார்க்க, அவர் தன்னுடன் இணைந்து சிரித்த பாபியிடம் “இத எப்படி மலையாளத்துல சொல்வாங்க?” என கேட்க, பாபி “ஆத்யராத்திரி!” என பதிலளித்து விட்டு ரேச்சலின் காதில் “சரவணன் செம்ம ஸ்பீடு அல்லே?!” என கேட்க, அவளோ கணவனது தொடையை நறுக்கென்று கிள்ளி வைத்தாள். 

சரவணன் முதல் இராத்திரிக்கு பறக்கிறான் என்பது மாமியாராக ஜூலிக்கு வெட்கத்தை வரவழைக்க அவர் அமைதியாகி விட்டார். ஆனால் ஆனி “லூசிபருக்கு இன்னு தன்னே ஆத்யராத்திரி வேணும். என்டே கர்த்தாவே? ஞான் எந்து செய்யும்? என்னே ரக்‌ஷிக்கு!” என வாய்விட்டே புலம்ப, தன்னை முதலிரவுக்கு அலைபவன் என கேவலமாக நினைத்து வாய்விட்டு முனங்கிய ஆனியை சரவணன் முறைத்து பார்த்தவன் “நீ இங்க இருந்து கிளம்பு முதல்ல. போ போய் தூங்கி நல்லா ரெஸ்ட் எடு.” எனவும் வெளிப்படையாகவே நடுங்க தொடங்கி விட்டாள். 

ஆனிக்கு சற்று முன்னர் கால் வலிப்பதாக சரவணனிடம் சொன்னதும், அதற்கு அவன் பால் பழம் சாப்பிட்டதும் ஓய்வு எடுக்க போகலாம் என பதிலளித்திருந்ததும் தற்பொழுதைய கலவர மனதினால் மறந்து போயிருக்க, தன்னை முதலிரவில் விழித்திருந்து அவனுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக இப்பொழுது ஓய்வு எடுக்க சொல்கிறான் என தவறாக புரிந்து கொண்டவள் பேந்த விளித்தாள். ஆனி இடத்தை காலி செய்ய வில்லை என்றானதும் அவளது கையை பிடித்து இழுத்த சரவணன் அவளை விருந்தினர் அறை நோக்கி இழுத்துப் போக எத்தனிக்க, அதற்குள் சரவணனை நெருங்கிய அழகு நாச்சியார் “நீ போடா. உன் ரூம்ல ரெஸ்ட் எடு நான் ஆனிய கெஸ்ட் ரூம் கூட்டிட்டு போறேன்.” என முன் வர, “சரிக்கா.” என்றவன் ஆனியின் கையை விட்டுவிட்டு மாடிப் படியை நோக்கி விரைந்தான்.

மீனாட்சியிடமும், விஸ்வநாதனிடமும் பேசிக் கொண்டிருந்த ஆப்ரஹாமோ “ஏன் மருமகன் இன்னைக்கே சாந்தி முகூர்த்தம் வைக்க சொல்றாரு?” என மலையாளம் கலந்த தமிழில் கேட்க, மீனாட்சியோ “அவனுக்கு நேரம் பாக்குறது சோசியம் ஜாதகத்துலலாம் நம்பிக்கை இல்லை அதனால தான் அப்படி சொல்றான்.” என சமாளித்து பதில் சொல்ல, 

ஆப்ரஹாம் “உங்க பையனுக்கும் ஆனிக்கும் எட்டு வயசு வித்தியாசம், சரவணனுக்கு ஏற்கனவே கல்யாணம் நடந்து பொண்டாட்டி இறந்துட்டாங்கன்னு எனக்கு எல்லா விசயமும் ஆனி வழியா முன்னாலேயே தெரியும் மீனாம்மா. 

உங்களுக்கு தெரியாததா? ஆனி எங்கிட்ட எதுவுமே மறைக்க மாட்டா. சரவணன் மட்டுமில்ல காலேஜ்ல இருக்குற எல்லா ஸ்டாப்ஸ் பத்தியும் ஆனி சொல்லி இருக்கா அவளா சொல்லலைன்னாலும் நான் அவள நச்சரிச்சு தெரிஞ்சுப்பேன். ஏன்னா எனக்கு என் பொண்ண சுத்தி இருக்கிறவங்க யார் யாருன்னு தெரிஞ்சிக்காம எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லுங்க. 

அவ்ளோ பொசசிவ்வா இருக்குற நான் ஏன் இப்படி திடுதிப்புன்னு ஆனிய சரவணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மறுக்காம சம்மதிச்சேன்னா, அதுக்கு காரணம் நான் உங்க மேல வச்சிருக்குற நம்பிக்கை தான். ஆனி இங்கே எஸ்.பி காலேஜ்ல வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆகுது. இந்த ஆறு வருஷத்துல இது வரைக்கும் எத்தனையோ தடவ நாங்க இங்கே வந்து தங்கி இருக்கோம். ஆனா யாருமே உங்க கிட்ட சின்ன குறையோ, அசட்டையோ பார்த்தது இல்ல. உங்க பையன்ங்கிறதுக்காகவே அவருக்கு பொண்ணு குடுக்கலாம்னு நினச்சேன்.

அப்புறம் சரவணன், ஆனிய பயமுறுத்துனதுனால அவன பத்தி ரொம்ப உயர்வாலாம் நான் நினச்சது இல்ல. ஆனா நேத்து உங்க பையன முதல் தடவையா நேர்ல பார்த்த போது அவன் மேல எனக்கிருந்த கோபத்துக்கு அவன அடிச்சு துவம்சம் பண்ணி இருக்கணும், ஆனா அவனோட அசாத்திய நிமிர்வும், பயமறியாத கண்ணும், கடுமையான அவனோட முகத்துல தெரிஞ்ச ஒரு நேர்மை கலந்த கம்பீரமும் என்னை தடுத்திடுச்சு. இவன் தப்பு செய்ய மாட்டான்னு ஒரு உள்ளுணர்வு தோணுச்சு. அதனால தான் என் மகள கல்யாணம் பண்ணி கொடுக்க சரின்னு சொன்னேன். 

இப்போ சாந்தி முகூர்த்தம் கூட நீங்க நாளைக்குன்னு சொன்னதும் சரவணன் இல்ல இன்னக்கே நடந்தாகணும்னு பிடிவாதம் பிடிக்கிறதுக்கும் கூட நான் ஏன் மறுத்து பேசலன்னா அது நான் உங்க இரண்டு பேரு மேலயும் வச்சிருக்குற நம்பிக்கையால தான். என் பொண்ணு இங்கே நல்லபடியா வாழ்வான்னு நான் மனதார நம்புறேன் அந்த நம்பிக்கைய்ய நீங்க காப்பாத்துவீங்க தான், இருந்தாலும் ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோங்க  ஆனி அழற மாதிரி இங்கே ஏதாவது நடந்ததுன்னா இந்த ஆப்ரஹாம் கொச்சுமுட்டனோட இன்னோரு பக்கத்தை நான் காண்பிக்க வேண்டி வரும்.” என சொல்ல, மீனாட்சியோ கோட்டை வீட்டு சண்முகப்பாண்டியனை மணந்து சரவணப் பாண்டியனுக்கே அன்னை ஆனவர் ஆயிற்றே இந்த மிரட்டலுக்கா அயர்வார் மெல்ல சிரித்தபடி “சரிங்க சம்பந்தி.” என அமைதியாக பதில் சொன்னார்.  

அன்று இரவு எளிய தங்க கரை வைத்த சந்தன வர்ண கசவுத் துணியில் கேரள முண்டும் நேரியதும் என சொல்லப்படும் பாவடைக்கு பதில் வேஷ்டி அணியும் தாவணி வகை உடை கட்டி, தாவணியை மாராப்பாக அல்லாது தங்கள் கிறிஸ்தவ முறைப்படி மார்புக்கு குறுக்கே கொணர்ந்து முடிந்து வலது பக்கம் மார்பு திரட்சி மேல் விசிறி மடிப்பு லேசாக வெளியே தொங்குவது போல ஆனிக்கு உடுத்தி விட்டு இருந்தனர் அவளது அன்னையும், தங்கையும். ஆனி அணிந்திருந்த தாலிக்கொடி அவளது மட்டுமே கழுத்தணியாக இருக்க, காதுகளில் சிறிய வைரக்கல் தோடு மின்னல் வெட்டியது.

தலை நிறைய நெருங்க தொடுத்த மல்லிகை மலர் சூடி, தங்க வளையல்கள்

கிலுகிலுத்த கரங்களில் ஒரு வெள்ளி சொம்பு நிறைய பாலுடன், மீனாட்சி ஆனிக்கு கொடுத்து அணிவிக்க சொல்லி இருந்த தங்க கொலுசுகளின் குறு மணிகள் அவளது அசைவுக்கேற்ப அடக்கமாக சப்திக்க, தம்பி மனைவிக்கு துணைக்கு வந்த நாச்சியார் “இதுக்கு மேல நீயே போய்க்கோ ஆனி லெப்டல திரும்பி தேர்ட் டோர் தான் உங்க ரூம்.” என சொல்லி கடைசி படியில் ஆனியை விட்டுவிட்டு தான் மட்டும் திரும்பி கீழே இறங்க தொடங்கியவள் தன் அறைக்கு சென்று விட, ஆனி தயங்கி கொண்டே சரவணனது அறை நோக்கி சென்றாள். அவளது மனம் முழுவதும் பயம் ஒன்றே முழுமையாக வியாபித்து இருந்தது. சமய சந்தர்ப்பம் அறியாமல் மாலதி சரவணனைப் பற்றி சொன்னவை அனைத்தும் நினைவில் உலா வர, 

‘சரவணன் கட்டுன பொண்டாட்டியையே ரேப் பண்ணி கொலை பண்ணவன் தெரியுமா?’ எனும் வார்த்தைகள் செவியில் மீண்டும்மீண்டும் ஒலிக்க, காலையில் இன்றே முதலிரவை வைக்க வேண்டும் என சரவணன் அடம் பிடித்ததையும் நினைத்துக் கொண்டவள் அறை வாசலிலேயே உறைந்து போய் நின்றாள். 

சரவணனோ ஆனி வாசலிலேயே நிற்பதை கண்டதும், அவளை நெருங்கி வந்து, ஒரு கையால் ஆனியை அறையின் உள்ளே இழுத்து விட்டவன், மறு கையால் கதவை தாழ்ப்பாள் இட, பயந்து போன ஆனி பால் சொம்பை கை நழுவ விட்டு வீறிட, சரவணனது உரத்த உள்ளங்கை அவளது சப்தம் வெளியே கேட்காதவாறு வாயை அடைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *