நேசம் மறப்பதில்லை நெஞ்சம்
1
நேசம் மறப்பதில்லை நெஞ்சம்
தன் தற்போதைய ஆராய்ச்சியின் நிலவரம் குறித்து அனிவர்த்தின் ஸ்பான்சர் மெயில் மேல் மெயில் அனுப்பியிருக்க… இதென்ன கடைப்பொருளா? கைப்பொருளா? இந்தா வச்சுக்கோ என்று கொடுக்க? ஒரு நூலை பிடித்துக்கொண்டு எங்கெங்கோ போய் தேடணும், அலையணும், அனுமானம் கூடாது கற்பனைகளில் பூ சுற்றக்கூடாது. புள்ளி பிழை இல்லாது சூத்திர கணக்கு சொல்லி நிரூபிக்கணும்.. பணம் தரான்னு இந்த அரைவேக்காடுக கிட்டே நான் மாட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே.. வடிவேலு வகையறா போன்று எரிச்சலானான் மரியாதைக்குரிய டாக்டர் அனிவர்த் ஜெயன்..
கேரள தாய்க்கும் வடநாட்டு ஐயர் அப்பாக்கும் பிறந்த அழகிய மகன். அறிவு தேடல் கொண்டதாலோ என்னவோ நார்மல் குடும்பம் குட்டி யோசனைகள் கடந்து தன் 37வது வயதிலேயே உலகளவில் மருத்துவ துறையில் பிரத்யோகமாக கவனிக்கப்படும் அத்தனை ஜர்னலுக்கும் சொந்தக்காரன்..
இன்னும் இன்னும் அந்த துறையில் ஆழமாய் உள்ளே போய்க்கொண்டு இருப்பவன்.. ரத்தம், சதை நரம்புகள் தாண்டி மூளை, உணர்வுகள் என்று அறிவு போய்விட்டதாலோ என்னமோ சுத்தமாய் இவன் மனதும் மென்டல் மரக்கட்டையானது தான் இவன் ஆராய்ச்சியின் உச்ச எச்சம்.
மனோவியலில் ரெட்டை டாக்டர் பட்டம்.. இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களின் இவன் சொற்பொழிவிற்கு டேட் வாங்கி காத்திருக்கும் ஹை ப்ரோபைல் பேராசிரியன்.
வெளிநாட்டு RND கொண்ட பல்கலைக்கழகங்கள் பண்ட் இருக்கு வாங்க சேர்ந்து செய்யலாம்.. துரும்பும் நகர்த்த வேணாம் நீங்க வந்தா மட்டும் போதும் என்று சிவப்பு கம்பளம் விரித்து கூப்பிட்டாலும் நோ பதிலில் கம்பமாய் நிற்பவன்.
மில்லியனர் பெற்றோர் இவனுக்கான சொத்துக்களை முன்னமே பிரித்து தந்து சுதந்திரம் தந்திருக்க..தான்தோன்றியா தனக்கு பிடித்ததை தேடி அலைவதில் ஆர்வமிக்கவன்.. யாருக்கும் எதுக்கும் அடங்காத முரட்டு நாடோடி டாக்டர்.
கடின உடற்பயிற்சி, தாயின் பொன் மஞ்சள் நிறம் தந்தையின் முகவசீகரம், அறிவு சுடர்விடும் தீட்சண்ய கண்கள் கூர் மூக்கு, மொழு மொழு பச்சை மோவாய், இயல்பிலேயே செல்வ செழிப்பு அனைத்தையும் விஞ்சும் படிப்பு. ஆணுக்கு ஆணே பொறாமை கொள்ளும் அழகன் அனிவர்த்.
அடேய்! நான் லீட் இருந்தா தருவேன்டா!எருமை! அதுவரை பொத்திட்டு இரு என்பதை நாகரீகமா ஒரு பத்துவரி அட்மாஸ் பார்மாக்கு போடுவோம் என்று மடிப்பிள்ளையை எடுத்து அமர்ந்தவனுக்கு நெட் போட்டதும் திரையின் ஓரத்தில் ஒரு நோட் கண்ணில் பட்டது.
இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் காதல் லீலைகள் அதும் மூன்று பேரோடு ஜல்சா .. ஸ்பைசி ஒரிஜினல் லிங்க் ஹியர்! என்று டேக் இருந்தாலும்.. வீடியோ தம்நெயிலில் இருந்த பெண்ணின் முகம் அனிகனை ஈர்த்தது.
அவ்ளோதான்! அந்த செய்தியின் ஆதி முதல் அந்தம் வரை தேடவாரம்பித்தான்
அனிகனின் உதவியாளர் அன்றைய அட்டவணையை மென்மையாய் அறிவுறுத்த..
“அத்தனையும் போஸ்ட்போண்ட் பண்ணிடுங்க தயா.. இனி புது அப்பாய்ன்மெண்ட் கொடுக்காதீங்க.. ஒரு பொண்ணு போட்டோ உங்க வாட்சப் பண்ணியிருக்கேன் கான்டாக்ட் டிடெயில் உடனே வேணும்.. நான் உடனே பேசணும்”
“ஓகே ஓகே சார்.. “
“நெக்ஸ்ட் நம்ம வக்கீல் சார் கிட்டே பேசுங்க.. பிரீன்னா வீட்டுக்கு வர சொல்லுங்க.. ஆஃபீஸ்ல பார்க்கணும்னா அப்பாயின்மெண்ட் வாங்குங்க.. பி குவிக்..”
நெடுநாள் அனிகனோடு பயணிக்கும் உதவியாளர் தயாபரன் தன் செல்லை பார்த்து..
“சார் இந்த பொண்ண பத்தியா?.. ஒழுக்கம் இல்லாத.. “
“எஸ் உங்க தாட் புரிது.. எந்த கேள்வியும் கேட்காது டீடெயில்ஸ் தாங்க.. ப்ளீஸ்”
அவர் இருக்காரா போனாரா கண்டுக்காது
அடுத்த நொடி தன் வேலையில் மூழ்கினான் அனிவர்த்.
ஐஏஎஸ் பொண்ணு வீடியோ என்று
யுடியூப்ல சென்சார் செய்யப்பட்டு விதவிதமாய் வெவ்வேறு ரூபத்தில் வேறு வார்த்தைகளில் அலைந்து கொண்டிருந்தது. இவனுக்கு
அது உதவவில்லை… பின் கூகுள் பண்ண
ரா வீடியோ பலான வெப்சைட்டில் ஏற்றப்பட்டிருந்தது கண்டுபிடித்துவிட்டான்..
சுமார் இருபத்து ஏழு நிமிஷங்களுக்கு அது இருந்தது. அப் லோட் செய்யப்பட்ட அரை நாளில் பத்து மில்லியனுக்கு மேலே வியூஸ் பெற்றிருந்தது. அதன் கீழே கமெண்ட்ஸ் அவ்ளோ வக்கிரம்..
இதையெல்லாம் ஓர் ஆராய்ச்சியாளனாய்
ஆப்பிள் மேக்புக் வித் 16″ லிக்விட் ரெடீனா XDR டிஸ்பிளேயில் கொஞ்சம் கூட உணர்ச்சியேயில்லாது திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தான் அனிவர்த்…
“””””””’
அதே நேரம் அந்த வைரல் வீடியோவின் நாயகியும் பொம்மையாய் அந்த காணொளியை பார்த்துக்கொண்டிருந்தாள்.சில நிமிடங்களுக்கு கொஞ்சம் கூட சகித்து தொடரமுடியாது செல்லையே ஆப் செய்து விட்டாள் கண்மணி. அவளின் பால்முகம் உலகின் மொத்த கவலையையும் சூடிக்கொண்டது. இமைக்க மறந்த நீலவிழிகள் ஜன்னல் வழி தெரிந்த பரந்த வானத்தை இலக்கில்லாது வெறித்தது.
“ஊழ் வினை உருத்து வந்தூட்டும்” சிலப்பதிகார வரிகள் தானாய் அவள் வாய் உச்சரித்தது.
காலையிலிருந்து தனக்கு வந்த உறவினர்களின் போன்கால்கள் ஒரு உயிர் மடிய எத்தனை முறை குத்தி கொல்ல வேண்டுமோ அதுக்கு மேலேயே வார்த்தைகளால் கிழித்தாகி விட்டது.
இதற்கு என்ன பதில் தான் கொடுப்பது?
எந்த பதிலும் சமாளிப்பு தான்.. வீடியோ தான் உண்மை .. என்பதாய் முடிவு பண்ணி உறவினர்கள் இவளை காயப்படுத்துவது எவ்வித உரிமை? இவளுக்கு புரியவில்லை.
அவர்களுக்கு தன் படிப்பு உயரம் போன்றவை மீதிருந்த பொறாமையை இந்த கரும் புள்ளி தீர்த்தது. அது ஒவ்வொருவர் வார்த்தைகளிலும் பிரதிபலித்தது.
அவர்கள் என்னை தூரமிருந்து பார்த்தவர்கள் ஏதோ தெரியாம பேசுகிறார்கள் விட்டு விடலாம்..
தன் பெற்றோர் சகோதரிகளும் திடீர்னு வேற்றாளாய் மாறி யூ டூ கண்மணி? என்ற போது இதயத்தில் குருதி கொட்டியது..
என் குடும்பம் தானே எல்லாம்.. நான் குற்றமே செய்திருந்தாலும் கூட நிக்கணும்ல..
அணைத்து வைத்திருந்த செல்லை அர்த்தமாய் பார்த்துக்கொண்டிருந்தாள் கண்மணி.
மேம் சாப் கால் பார் யூ..
ம்ம்ம்..
அலோ?!
நானும் அப்பாவும் இப்போவே அங்கு வரோம்.. வீடியோ பத்தி பேசணும் உண்மை ன்னு மட்டும் தெரிஞ்சுது சனியனே உன்னை அப்படியே தலை முழுகிடுறோம்.. அக்காங்க வீட்டில் ஒரே பிரச்சனை.. ஏன்டி இப்படி? படிக்க போறேன்னு அலைஞ்சியே இதுக்குத் தானா? நீ என் வைத்திலேயா பிறந்த? அருவெருப்பா இருக்குடி..
ம்ம்ம்ம்.. அதான் போனிலேயே முடிச்சுடீங்களே திரும்ப எதுக்கு நேரில்.. யாரும் வர வேணாம்.. என் பிரச்சனை நான் பார்த்துகிறேன்.. உங்க கவுரவம் கெடாது.. பை மா..
செல்லை அவளின் கார்டிடம் கொடுக்க.. அவன் கண்களும் தன் உடலில் தவறாய் மேய்வது கண்டு.. பட்டென்று கதவடைத்தாள் கண்மணி.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன செய்யலாம்? வரிசை கிரமம் ஒரு நோட் புக்கில் குறிக்க ஆரம்பித்தாள். ஒன்னு எல்லாத்தையும் மேவி அடித்து வாழணும் அல்லது தூக்கு போட்டு சாவணும்..
கண்ணில் நீர் கசிந்தது அதன் வெம்மை கன்னத்தை சுட்டது. ஈவு இரக்கமில்லா உலகில் பெண்ணாய் பிறப்பது மா தவமோ? மா பாவமோ?
தன்னந்தனியே பாலைவனத்தில் தத்தி நடந்தது அந்த பால்வண்ணப்பறவை நீதியை தேடி.. அது இல்லா உலகில் கிடைக்குமா?
