நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

                1 : நெஞ்சினிலே 
                   நெஞ்சினிலே 
                    ஊஞ்சலே
ஹீரோ       : சந்திரமௌளீஸ்வரன்
ஹீரோயின்  :  சிவன்யா
ஊழிக்காலத்தின்  பெரும் இருட்டு போல் இருள் கவ்விய அந்த நடுநிசி இரவுப்பொழுது புயல் காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது பெருமழை  சத்தமிட்டு தன் ஆசைகளை எல்லாம் நீர்த்திவலைகளாக பூமியில் கொட்டிக் கொண்டிருந்தது
பெரிய பெரிய மரங்கள் எல்லாம் காற்றில் ஒன்றோடு ஒன்று உரசி  உஸ் உஸ்… என பயங்கர சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தன
இடியும் மின்னலும் யுத்த சண்டையிட்டுக் கொண்டதுபோல் ஒன்றையொன்று தாக்கி பேர திர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்க 
வருஷம்  2000 கார்த்திகை மாதம் தன் காலில்  அணியப்பட்டிருந்த பட்டை கொலுசுடன்  ஜல் ஜல்   என்று ஒருத்தி அந்த பேய் மழையில் தீட்சண்யமான பார்வை பார்த்தபடி கத்தரிப்பு பூப்போட்ட பாவாடை ரவிக்கையும் லைட் ரோஸ் தாவணியும்  அணிந்தபடி அந்தப் பேய் மழையில் சொட்ட சொட்ட  நனைந்து கொண்டு  அந்த நடுநிசியில் ஆவேசமாய் வந்து கொண்டிருந்தாள்
தன்  மென் பாத கொலுசு ஒலியின்  சத்தம் அடை மழையின் சத்தத்திலும் தனித்து கேட்டது
மழை கொட்டி கொண்டு இருந்த போதிலும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது
தன் கைகளை படகின் துடுப்பு போல் முன்னும் பின்னும் நீட்டியபடி ஆவேசம் வந்தவள்  போல் வந்து கொண்டிருந்தாள்
பளிச் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்த மின்னல் ஒளி  அந்த மஞ்சள் அழகியின் தேகம் மினுமினுப்பு என்று சொல்லாமல் சொல்லியது
அவளுக்கோ வட்டமான முகம் மீன் போன்ற  அழகான கண்கள் கூர் நாசி கொஞ்சம் புசுபுசுவென்று பூசினார் போன்ற கன்னம் கொடி போன்ற உடல்வாகு
ஆறடிக்கும் சற்றே உயரமானவள் அவள்  உடலோ  ஆர்ப்பரிக்கும் அந்த மழையிலும்  உஷ்ணமாகத்தான் இருந்தது
உதடு துடித்து எதையோ முணுமுணுத்தபடி வந்து கொண்டிருந்தாள் 20 வயதே நிரம்பிய அந்த கன்னிப்பெண் 
புல் வெளியான வரப்பு மேட்டை கடந்து அந்த  பெரிய மாளிகையின் பெரிய இரும்பு கேட்டை திறந்து கொண்டு  வயல் சூழ்ந்த இடத்தில் பதுங்கி பதுங்கி தன் காலை வைத்தபடி ஒரு இடத்திற்கு வந்தாள்
அதுவோ  பாசிபடர்ந்த பாழும் கிணறு தன் கன்னத்தில் வழிகின்ற கண்ணீரை கைகளால் துடைத்தபடி ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தால் 
அவள் கண்ணீர் கோடுகள் போல் வானம் அழுது கொண்டிருந்தது மழைத் துளிகளாய்
விடாது கருப்பு போல் பேய் மழை கொட்டித்தீர்த்து  கொண்டிருக்க தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டவளின்  மூச்சு வேக வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
கனவே கனவே கலையாதே கனவே கனவே கலையாதே…. !!
நீ என்னை வந்து சேரும் நாள் எதுவோ…?? 
கனவே கனவே கலையாதே கனவே கனவே கலையாதே… !!
என்று ஒரு முறை உள்ளம் உருகிசொல்லியபடி  தொப்பென்று அந்தக் பாழும்  கிணற்றில் குதித்தால்  
இடம் கனவுலக சிட்டி அமெரிக்கா இரவு நேரம் வண்ண வண்ண விளக்குகளால் அந்த வெள்ளை மாளிகை ஜொலித்துக் கொண்டு இருந்தது.அதனுடைய மேல்தளத்தில் ஒரு பார்ட்டி நடந்து கொண்டிருந்தது
ஆங்கில பாப் மியூசிக் போய்க்கொண்டிருக்க அதற்கு ஏற்ப ஜோடி ஜோடியாய் ஆணும் பெண்ணும் கையில் மது கோப்பையை  ஏந்திய வண்ணம் ஒயிலாக நடனமாடிக் கொண்டிருந்தனர்
ச்.. சந்திரா….. ச்.. சந்திரா….. என நண்பர்கள் பட்டாளம் ஆர்ப்பரிக்க….?? 
மதுக்கோப்பையை தனக்கே உரிய லாவகமாய் கையில் ஏந்தியிருந்த அந்த ஆறு அடிக்கும் சற்றே  உயரமான அந்த இளைஞன்
ஒரு கையில் மதுக் கோப்பையும் இன்னொரு கையில் மாதுவையும் அணைத்தபடி படு ஸ்டைலிஷாக ஆடிக்கொண்டிருந்தான்
மினுமினுக்கும் அவனுடைய பழுப்பு நிற கண்கள் ஆட்டத்தின்  ஜாலத்திற்கேற்ப  அழகாய் மின்னிக்கொண்டிருந்தன
சுருள் சுருளான அவனின் கேசம் அவன் முகத்திற்கு தனி அழகை கொடுத்தது திடகாத்திரமான ஜிம் பாடி அவன் என்று அவனை  பார்த்த மாத்திரத்திலேயே தெரியும்
பால்வண்ண சர்மம்
பரந்த நெற்றி எதையும் ஒற்றைப் பார்வையிலேயே உள்வாங்கிக் கொள்ளும் தீட்சண்யமான கண்கள், குழி விழும் கன்னம்  மீசை அற்று முகம் டாலடிக்க அது இன்னும்  அவனுக்கு அழகு சேர்த்தது 
  அவனின்  வசீகரத் தோற்றத்தில் 
மயங்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம்
“ஹேய் சந்திரா…!  யூ கிள்ளிங் மேன்…. !! என அவன்  உபயோத்திருந்த பிரத்தேகமான பர்ஃப்யூம் வாசனையை அவன் தோள் மேல் கையை இட்டபடி முகர்ந்தவளாய்
அவனின் அந்த வசீகரிக்கும் முகத்தில் கவரப்பட்டு இன்னும் வாகாக அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு  தன் அழகால் அவனைக் கட்டிப் போட்டு விடும் எண்ணத்தில் வளைந்து வளைந்து ஆடினால் அந்த அழகி
பார்ட்டியில் ஒரு கண்ணும் சந்தோஷத்தில் ஒரு கண்ணுமாய்  மது கோப்பையை கையில் ஏந்தி தன் தொண்டையில் சரித்தப்படி சந்தோஷ மிகுதியில் ஆடிக் கொண்டிருந்தான்
அவன் சந்திரமௌளீஸ்வரன் வயது 27…. M Tech (textile ) முடித்திருந்தான்
அமெரிக்காவில் மிகப்பெரிய SM கார்மெண்ட்ஸ்  வைத்திருந்தான்
அமெரிக்காவிலேயே அவனுக்கு மூன்று  பிரான்ச் இருக்கிறது
எவ்வளவுக்கெவ்வளவு விளையாட்டும் சுட்டித்தனமும்  நிறைந்தவனோ  அதற்கு நேரமாறாக தொழிலில் அதி  திறமை வாய்ந்தவன். எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் துடிப்பு, எது  என்றாலும் ஒரு கை பார்க்க வேண்டும் என்ற பேராவல் 
பார்ட்டி போய்க்கொண்டிருக்க அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் அலறிக் கொண்டிருந்தது
அந்த ரிங்டோனை கொண்டு அது  யாரென்று அடையாளம் கண்டதும்  இவனோ கண்டுகொள்ளாமல் இருக்க
மீண்டும் மீண்டும் அது தன் 
இருப்பை காட்டியபடி அடித்துக்கொண்டிருந்தது
ஒரு கட்டத்தில் எரிச்சலுடன் தன்  பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து ஆன் செய்து காதில் வைத்தான்
“ஹலோ சந்திரா….ஆர்  யூ  இன்  தே  லைன்….?  நாளைக்கு இந்தியாவிற்கு வர எல்லாம்  பேக்கப் பண்ணிட்டியா….?? 
எதிர்முனையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் அமுதவள்ளி  
அமுதவள்ளி கோபிநாத்தின் ஒரே ஏக புதல்வன் சந்திரமௌளீஸ்வரன்
தன் தந்தை சென்னையில் ஜவுளி மாளிகை  பார்த்து கொண்டிருக்கிறார். சந்திரமௌளீஸ்வரன் பள்ளி படிப்பு வரை சென்னையில் தான்முடித்தான், UG,  PG   இரண்டுமே அமெரிக்காவில்  முடித்திருந்தான்
தன் கனவு வாழ்க்கை எல்லாம் அமெரிக்காவில் தான்
அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல் தான்….தன் அம்மா அமுதா அவசரஅவசரமாக ஏதோ ஒரு பெண்ணைப் பார்த்து அவனுக்கு பேசி வைத்திருப்பது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை
அவர்களின் கவலை எங்கேயாவது இவன் ஒரு வெள்ளைக்காரியை அழைத்துக்கொண்டு வந்து விடுவானோ என்ற பயம் 
ஒரு வருடமாக திருமணத்திற்கு சம்மதம் கேட்டு போக்குக் காட்டிக் கொண்டிருந்தவனை எப்படியோ சம்மதிக்க வைத்து இந்தியாவிற்கு வர சம்மதம் வாங்கி விட்டார்கள்
பாவம் அவர்களுக்கு தெரியாது இந்த  சந்திரமௌளீஸ்வரன் ஒரு திட்டத்தோடு தான் இந்தியாவிற்கு வருகிறான் என்று
“ஏலே  கும்பகர்ணி  எழுந்துருடி மணி என்ன ஆச்சு…?? 
சத்தம் வந்த பக்கம் தலையை திருப்பாமல் தன் காதை இன்னும் அழுத்திபொத்தி  கொண்டவளாய் தன் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு மீண்டும் தூக்கத்தைதொடரும்….ஊர்மீயின் போர்வையை சட்டென்று உருவினாள் சிவன்யா
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்  கிரேண்டி என்று  தன் தோழி சொல்ல
உன்ன நம்பி உன்னோடு கூட்டு சேர்ந்து தொழில் நடத்தறேன் பாரு என்னை சொல்லணும் என்று தன் தலையில் அடித்துக் கொண்டவளாய் சிவன்யா 
இப்போ எந்திரிச்சு வரியா இல்லையா..? இல்ல ஒரு பக்கெட் தண்ணீரை கொண்டு  வந்து  உன் தலையில் கொட்ட வா..?? 
அடிப்பாவி நீ செஞ்சாலும் செய்வ என்று தன் போர்வையை உதறிவிட்டு துள்ளிக் கொண்டு எழுந்தால் ஊர்மிளா
ஊர்மிளாவும்  சிவன்யாவும் பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு சொந்தமாக  ட்ரெண்டி பேஷன்  ஷாப்பை ரன் பண்ணி கொண்டு இருந்தார்கள் தஞ்சாவூரில்
சிவன்யா  ஒயிட் டாப்ஸும் ப்ளூ ஜீன்சும் அணிந்து இருந்தாள்
நெடுநெடு என்று உயரம்  நவீன யுக வார்பு மினுமினுக்கும் வெள்ளை  சருமம் அழகிய கண்கள் வில் போன்ற புருவம் அடர்த்தியான நீண்ட நெடிய கூந்தல்… மொத்தத்தில் அழகி. 
தோழியின் அவசரத்தால் மின்னலென குளித்துவிட்டு வந்தால் ஊர்மீ 
எனக்கு வாச்ச மாமியாரே  நீ தாண்டி…?? பிசாசு மாதிரி எப்படித் தான் காலையில் எழுந்து வறீயோ…? 
நாம ஒன்னு  நினைச்சா அதை   அடையனும்  அந்த வெறி இருக்கணும்
ம்ம்க்கும்… என அலுத்துக் கொண்டவள்  அவன்  நாளைக்கா  வரானாம்டி 
எவன்…?? 
போதும் போதும் அதற்காக இப்படி நெளியதே…?? 
பேர் என்ன சொன்னே…?? 
சந்திரமௌளீஸ்வரன்…?
அது  என்னடி  சந்திரமௌளீஸ்வரன்….ன்… இம்புட்டு  நீளமா இருக்கு ..? 
சிவபெருமானுடைய பெயராம்  அம்மா சொன்னாங்க… சிவா அவன் உன்  இனம்டி …!!
போதும்  நிறுத்திக்கோ….என ஒற்றை  விரலால்  தன் வாயில் கை வைத்து புருவம்  நெறித்து தோழியை கடிந்து கொண்டவள்” மீ  தனி பிறவி டோன்ட்  காம்பேர்  (compare) எனிபடி…? 
அதான் எனக்கு தெரியுமே சரி அது போகட்டும் இதெல்லாம் சரியா வருமாடி….? 
எதுக்கு இப்படி தொடை நடுங்கி மாதிரி பயப்படுற….?  நீ அவனு டைய ஃபுல் டீடைல்ஸ் கொடு மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன்
அம்மாவுக்கு தெரிஞ்சா…?? 
எந்த காலத்தில் இருக்கேடி  நாம இப்போ 2021 இருக்கோம்
அவன்  பார்க்க அழகா தான்டி இருக்கான்
அழகு ரொம்ப ஆபத்து ஊர்மி…..?  
அதான் உன்னுடைய அந்த சந்திரன் இப்போ அமெரிக்காவில் இருக்கான்… அவன்  தப்பு செய்ய வேண்டாம் நினைச்சா கூட தப்பு செய்ய தூண்டும் சூழல்
பெரியவங்களுக்கு பிடிச்சிருக்கு இந்த புடலங்காய்க்கு பிடிச்சிருக்கு அதெல்லாம் விட்டிடு… தம்மு குடி அப்படி இப்படி இருந்தால் கூட பரவாயில்லை ஆனா பொண்ணு விஷயத்தில் ஆள் எப்படி நமக்கு தெரியனும் …?? 
பார்க்க மட்டும் தான் ஆள் அழகா இருக்கானா…? இல்ல அவன் கேரக்டரிலும் அழகனா….?  என்ன ஏதுனு ஃபுல் டீடைல்ஸ் நாம கலெக்ட் பண்றோம்
தோழிடி…eeee  என்று தன் தோழியை இறுக கட்டிக் கொண்டாள் ஊர்மீ
சரி சரி இந்த டச்சிங் டச்சிங் எல்லாம் உன் சந்திரன்கிட்ட வச்சுக்கோ….? 
இப்போ அவனுடைய ஃபுல் டீடைல்ஸ் கொடு
அது என்னுடைய லேப்டாப்பில் தான் இருக்கு போய் பாரு பாஸ்வேர்ட் தான் உனக்கு தெரியுமே
சிவன்யா லேப்டாப்பை ஆன் செய்து சந்திரமௌலிஸ்வரன்  பற்றிய  முழு  டீடெயில்சை  பார்த்துக்கொண்டிருந்தாள்
நாட் பேட் என்று அவனை பற்றிய தகவல்களை வாசித்தபடி உதட்டை பிதுக்கி பார்த்துக்கொண்டே வந்தவள்
அவன் போட்டோ எங்கடி….??  அது என் மொபைலில் கேலரியில் இருக்கு போய் பாரு
சிவன்யா  மொபைலை எடுத்து பார்ப்பதற்குள் கீழே இருந்து ஊர் மீயின் அம்மா இருவரையும் சாப்பிட அழைத்தார்கள் 
சரி சாப்பிட்டுவிட்டு பார்த்துக்கலாம் என்று தன் தோழியை  அழைத்துக் கொண்டு ஊர்மீ  கீழே வர
சுடச்சுட அவர்களுக்கு பொங்கலும் சாம்பார்  வடையும்  காத்திருந்தது
என்னதான் சொல்லுங்க அம்மா உங்க கைப்பக்குவமே தனி  என்று அதை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் சிவன்யா 
ஊர்மீயை  பொண்ணு பார்க்க வர அன்னைக்கு ஏதாவது சாக்கு சொல்லி வராமல் இருந்திடாதே சிவன்யா  நீ கண்டிப்பா வரணும்…?? 
அன்னைக்கே அப்படியே கை தாம்பூலம் போட்டு நிச்சயம் மாதிரி பண்ணிக்கலாம்னு இருக்கோம்  என்று பர்வதம் சொல்ல
சாப்பிட்டுக் கொண்டிருந்த பொங்கல் அப்படியே தொண்டைக்குள் அடைத்தது ஊர்மீக்கு
தன் கண்ணை மேலும் அகல விரித்து அவள் தன் தோழியை பார்க்க…
நான் இருக்கேன் என்பது போல் அவள் கையை பற்றிக்கொண்டு சமாதானம் சொன்னாள் சிவன்யா
டிராபிக்கை கடந்து இருவரும் தங்களுடைய  பேஷன் ஷாப்புக்கு வந்தார்கள்
இதோ பார் சிவா அம்மா ஃபுல் ஸ்பீடில் இருக்காங்க…. அவன்  வந்ததும் என்னை அப்படியே பேக்கப் பண்ணி அமெரிக்காவுக்கு அனுப்பிச்சிடு வாங்க
ரொம்ப கவலைப்படாத பையன் நல்லா இருந்தா கட்டிக்கோ  
என்னடி இப்படி திடுதிப்பென சொல்ற
சரி சரி பையன் போட்டோவை காமி பார்ப்போம் என்று அவளின்  மொபைலை ஆன் செய்ய…!
அப்போது தங்கள் கடைக்கு வந்திருந்த ஒரு கஸ்டமரின் மகள் குறுக்கே வந்து விட ஊர்மீயின்  செல்போன் கை தவறி கீழே விழுந்தது
செல்போனோ மீண்டும் ஆன்ஆக  மறுத்தது
என்னடி உன் ஹீரோ ரொம்பதான் டிமிக்கி கொடுக்கிறான்
உன்  ஆளு செமையா இருக்கான்  ஆண்ட்டி சொன்னாங்க…?  கல்யாணம்  முடிஞ்சு என்னை விட்டுட்டு நீ  அமெரிக்காவுக்கு போறத நினைச்சா தான் கொஞ்சம் தித்திக்  இருக்கு என்று தன்  தோழியை பிரியும் கவலையில் சிவன்யா சொல்ல
உன்ன மாதிரி எல்லாம் எனக்கு கனவு கிடையாதே  சிவன்யா…??  அம்மா அப்பா  பார்க்கிற பையனை  கட்டிக்க வேண்டியதுதான் 
நமக்கு என்ன இப்ப  தான் 22 
வயசு ஆகுது … அதுக்குள்ள எதுக்கு  கல்யாணம் கமிட்மென்ட்  சிக்கிக்கணும் 
எனக்கே எனக்காக ஒருத்தன் வருவான்டி  உருகி உருகி என்னை காதலிப்பான்….!! என்டோட ட்ரீம் பாய் வருவான்  டி …?? 
என்ன கான்செப்ட்டி   இது……? 
இந்த  ஹிஸ்டாரிகல் நாவல் எல்லாம்  படிச்சிட்டு அப்படி   ஒருத்தன் வருவான் காத்துகிட்டு இருக்கே
எஸ்ஸ்ஸ்…. எஸ்ஸ்ஸ்ஸ் நம்முடைய 100%  வாழ்க்கையில் 80%  அவனோடு தான் செலவிட போறோம் 
அப்படி இருக்க அவனைப்பற்றிய கனவு இருக்கிறது தப்பில்லையே…..!!  நம்ம கனவு ஒருநாள் நிஜத்தில் வரும்
அப்ப குதிரையில் வந்து உன்னை தூக்கிட்டு போவானு  சொல்லவறீ யா…?? 
இல்ல இல்ல…  காரில் வந்தாலும் நடந்தே வந்தாலும்   பூங்கொத்து கொடுத்து 
“யூ  ஆர்  மை  கேர்ள்….  மை ட்ரீம் கேர்ள்  சொல்லுவான்…!!
என்னமோ சொல்லற எனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது
அதுக்கு நமக்கெல்லாம் கொஞ்சம்  மூளை இருக்கணும் 
அடியேய்…உன்னை …. !!
என் ஹீரோ  என்ட்ரி  ஆகறதுக்கு  இன்னும் நிறைய டைம் இருக்கு 
இப்போ உன்  ஹீரோ மிஸ்டர் சந்திரமௌலி ஈஸ்வரனை பற்றி  விசாரிப்போம் 
அமெரிக்காவின் பன்னாட்டு விமான நிலையத்தில் தன் நண்பன் இந்தியாவிற்கு செல்ல மனமின்றி நிற்க
“டேய் சந்திரா….. எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற..? 
உங்க அம்மா பார்த்த பொண்ணு உனக்கு  பிடித்திருந்தா கல்யாணம் பண்ணிக் கோயேன்டா 
இந்த சிறுத்தை ஒன்னும் அங்க போய் சிக்காது….? 
அப்படினா..? 
Mr.சந்திரமௌளீஸ்வரனா……ஆஆஆஆ  எனக்கு வேண்டவே வேண்டாம் அவள்  வாயாலேயே சொல்ல வைப்பேன்… தட்ஸ்  சந்திரா…. !!
கனவே கனவே கலையாதே…!! கனவே கனவே கலையாதே…!!
நீ என்னை வந்து சேரும் நாள் எதுவோ…!!
கனவே கனவே கலையாதே…!! கனவே கனவே கலையாதே….!!
நெஞ்சம் யார் வரவையோ  எதிர்பார்த்து காத்திருந்தது
என்றும் அன்புடன் உங்கள் 
ஸ்ரீலதா
****************************************************
 இது என்னுடைய மற்றுமொரு முயற்சி…. சஸ்பென்ஸ் நிறைந்த அழுத்தமான காதல் கதை… உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன் ஃபிரண்ட்ஸ்😍😍

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *