நீ வந்ததும் நிலா வந்தது

நீ வந்ததும் நிலா வந்தது

நீ வந்ததும் நிலா வந்தது

நீ வந்ததும் நிலா வந்தது

நீ வந்ததும் நிலா வந்தது

நீ வந்ததும் நிலா வந்தது

நிலா – 12
அது இத்தாலியில் அமைந்திருக்கும்… சுற்றுலாப்பயணிகளை மிகவும் ஈர்க்கும்.. பிரபலமான கதீட்ரல் அமைந்திருக்கும் “மிலான்” பெருநகரம் அது!! 
அந்நகரிலே… கிறிஸ்தவ தேவாலய பாங்குடைய ஊசிமுனைக் கோபுரங்கள் நிறைந்த அரண்மனை போல பிரம்மாண்டமான கலசங்கள் கொண்ட … ஆழி சமுத்திரம் போன்ற நீண்ட பெரு மண்டபம் தான் அது. 
அம்மண்டபத்தின் உச்சியிலே சரவிளக்குகள் பொன்னிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்க.. அந்நடுக்கூடத்தின் தரையோ.. அது பளிங்கினால் அமைக்கப்பட்டிருந்ததுவோ?? 
உத்திரத்தின் சரவிளக்கின் விம்பம்.. தெளிந்த நீரில் விழும் விம்பம் போல பிரதிபலித்துக் கொண்டிருக்க… கூடத்தின் இருமருங்கிலும்.. கிரேக்க மறுமலர்ச்சிக் காலத்தின் சிற்பங்கள் சீரான இடைவெளியில் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததுவும் கூட செம்மையான அழகே!! 
அங்கே ஓர் சுவர் முழுவதும்.. கண்களையும், கருத்தையும் ஸ்தம்பித்து நிற்கச் செய்யும் வகையில்… விதம் விதமான துப்பாக்கிகள்.. சுவற்றில் கொழுவப்பட்டிருக்க…அங்கே இடம்பெற்றுக் கொண்டிருந்தது மிகப்பிரம்மாண்டமான விருந்து!! 
நிழலுக தாதாக்களான சர்வதேச மாபியாக்களுக்காகவென்றே நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அவ்விருந்தில் தான் நின்றிருக்கலாயினர் தலைவனும், தலைவியும். 
அன்று அவளோ… இளநீல நிறத்தில்… கையற்ற.. மார்புப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகும் கரண்டை தாண்டி தொங்கும் நீண்ட கவுன் அணிந்திருக்க… அவளது கழுத்தில்.. வெள்ளை வைரமணிகள் பளிச்சிட பளிச்சிட… மிளிர்ந்து கொண்டிருந்தது வைர ஆரமொன்று. 
காதிலும் அதே வைரமணிகளின் வடிவத்தில்.. இரு தோடுகள் தொங்கிக் கொண்டிருக்க.. தன் கூந்தலையெல்லாம் உச்சந்தலையில் அடைத்து.. அதன் உச்சியில் நீல அல்லி மலர் சொருகி நின்றவளோ… 
பார்ப்பதற்கு.. கைகால்கள் முளைத்த.. ஐந்தரையடி உயர நீலநிற அல்லி மலர் போலவே.. சொக்க வைக்கும் சௌந்தர்யத்துடன் தான் விருந்தில் வளைய வந்து கொண்டிருந்தாள் மங்கை. 
ஜேகேவிடம் புழங்கும் பணம்.. சும்மாவே அழகியை.. இப்போது பேரழகியாக மாற்றியிருக்க… என்ன தான் அவள் பேரழகான போதும்.. இந்த மாபியா உலகின் முடிசூடா அரசனின்.. பட்டத்து ராணியாக ஆனாலும்…
மனம் ஏனோ அந்த பாதாள உலகத்துடனும், அவனுடனும் ஒன்ற மறுத்து முரண்டிக் கொண்டேயிருக்கலானது அவளுக்கு.
ஜேகேவுக்கு சொந்தமான வைரநகையைத் திருடியதாகவும், அதற்குப் பதிலாக..அவனோடு இருப்பதாகவும்.. பொய்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு.. அவனுடன் பிணைக்கப்பட்ட அந்த வாழ்க்கையை வெறுத்தாள் நேத்ரா. 
அன்றைய பார்ட்டிக்கு தன்னவளோடு வருகை தந்திருக்கும் ஜேகே… முழுதும் கறுப்பு நிறத்தினாலான.. நீண்ட அங்கி போன்ற கோர்ட்டும், பேன்ட்டும் அணிந்து.. கைகளில் கறுப்பு கையுறை அணிந்து.. நின்றிருந்தவனின் கண்கள்… 
தன் நேத்திரப்பெண்ணை விட்டும் இம்மியளவும் அங்கிட்டும் இங்கிட்டும் அசையவேயில்லை. 
இரு நெற்றியோரத்திலும்.. சுருள் அளகக்கூந்தல்.. சுருண்டு தொங்க.. அணிந்த வைர ஆரத்துக்கு அழகளிக்கும் வகையில்.. 
கன்னக்கதுப்புக்கள் எல்லாம்.. இத்தாலியில் நிலவும் குளிர்காலநிலை காரணமாக.. ரூஜ் தடவமாலேயே சிவந்திருப்பதைத் தான் இரசித்துப் பார்த்திருக்கலானான் அவன். 
கூடவே செந்நிற பட்டின் பளபளப்பைத் தன்னில் தேக்கியிருக்கும் அந்த அழகு மங்கையின் இதழ்களைக் காணக் காண.. அதில் கள்ளுண்ட மந்தி போலத் தான் கிறங்கிப் போனான் அவன். 
அவன் கண்கள் அவளது சங்குக்கழுத்தில் இறுகி நின்றிருக்கும் வைர ஆரத்திற்கும் கீழான பெண்மைச் சிகரங்களில் பதிய.. அதில் தினந்தோறும் இரவில்.. திராட்சைப்பழத்தை தன் வாய்க்குள் அதக்கி.. பழரசம் அருந்தும்…. காதல் நினைவுகள் எழுந்தோட… 
இப்போதும் அதில் பழரசம் அருந்தத் தான் ஆசை கொண்டது ஆணின் மனது!! 
இப்போதே தன் மேனகையை.. தன் இந்திரலோகம் அழைத்துச் சென்று.. தான் அவள் மீது பூண்டிருக்கும் ஒட்டுமொத்த காதலையும் அவளுக்கு உணர்த்திட ஆசை பிறந்தது இன்டர்நேஷனல் தாதாவுக்கு!! 
இருப்பினும் இடம், பொருள், ஏவல் கருதி.. தன் ஆர்வத்தை அடக்கிக் கொண்டவன்.. அவள் இடையூடு கையிட்டு அணைத்துக் கொண்டவனாகத் தான்… 
அவள் பக்கவாட்டு தனங்கள்.. அவன் மாரோடு உரச உரச.. வீறு கொண்ட சிங்கம்.. காதலில் மதர்த்துப் போன சிவந்த பார்வையுடன் தான்.. தன் பெண் அரிமாவுடன் நடந்தான் அவன். 
இத்தாலிய மாபியா உலகத்தில்.. பழம் தின்று கொட்டை போட்டது போல.. ரொம்பவும் நிபுணத்துவம் பெற்றிருக்கும் அவர்களின் தலைவன் போல..
அக்கூடத்தில் நடுநாயகமாக அமர்ந்திருந்த இத்தாலிய மக்களின் முகவாகு கொண்ட வெள்ளைக்கார  பெரியவரிடம்.. போய் அவன் ஜோடியாக நிற்க.. அப்பெரியவரோ.. ஜேகேவுடன் தான் வந்த அப்பெண்ணை மேலிருந்து கீழ்வரை ஒரு பார்வை தான் பார்க்கலானார்.
அவளின் திவ்யமான அழகும், ஜேகேவிடம் இதுகாறும் இல்லாத கம்பீரமும், பொழிவும், தேஜஸூம் தோன்றுவதைக் கண்ட அப்பெரியவர்… தன் தாடையை நீவி விட்டுக் கொண்டே அவளையே தான்.. விழியெடுக்காமல் தான் பார்த்திருந்தார் அவர்.
ஜேகேவின் காலமான காதலி.. நிரஞ்சனாவையே குளோனிங்கில் வார்த்தது போல.. அச்சு அசலாக அவளைப் போலவே இருக்கும் ஒரு பெண்!! 
அவர் விழிகளில் ஆச்சரியத்தில் விரிந்தாலும்… சுருக்கம் விழுந்த கண்ணோரத்தசைகள் இன்னும் அழகாக சுருங்க.. அவரிடமிருந்து வெளிப்பட்டது ஒரு புன்சிரிப்பு. 
எதற்காக தன்னைக் கண்டு புன்னகை சிந்துகின்றார் என்பது புரியாமல்.. அவரது வயதுக்கு மரியாதை கொடுத்து இவளும் சிரித்து வைக்க.. அவரோ மாபியா உலகில் கடந்த ஐம்பது வருடங்களாக இருக்கும் இத்தாலிய மாபியாக்களின் குருவாயிற்றே?? 
இது நிரஞ்சனா இல்லை.. புதுப்பெண் நேத்ரா என்றறிந்து வைத்திருந்தவரோ.. தன் சிஷ்யனான ஜேகேவை நோக்கி… கரகரத்த குரலில் வாய் திறந்து, 
“சூப்பர் செலெக்ஷன் தான்..” என்று தமிழிலேயே சொல்ல… இத்தாலி பெரியவரின் சரளமான தமிழ்… நேத்ராவின் நேத்திரங்களை இன்னும் அகல விரியத்தான் வைத்தது. 
‘இவருக்கு எப்படி தமிழ் தெரியும்?’ என்பது போல இவள் வியந்து பார்த்திருக்க.. அவளின் விழிகளால் உள்ளம் படித்த ஆண்மகனோ, 
“இது என் குரு.. அலக்ஸான்ட்ரியோ டி மேடா.. இவருக்கு தமிழ் மட்டுமல்ல.. இத்தாலி, இங்கிலிஷ், ஹிந்தி.. மேன்டரின்னு ஐந்து மொழியும் தெரியும்” என்று குறிப்பிட, 
மெல்ல “ஓ”வென்று இதழ் குவித்தவளோ… அவரின் எண்பது எண்பத்தைந்து மதிக்கத்தக்க வயதின் காரணமாக, “வணக்கம்.. நான் நேத்ரா” என்று நம்மூர் பாணியில் அழகாக கைகூப்பி வணக்கம் வைத்தது கூட… அவனின் குருவுக்குப் பிடித்துத் தான் போனது. 
மெல்ல தன் தடியை ஊன்றியவராக.. எழுந்து கொள்ளப் போனவருக்கு.. உவந்து முன்வந்து ஜேகே உதவ.. அவரது தோளோடு கைகொடுத்து தூக்கி விட, 
அவன் தோள் தட்டி.. அவன் செய்த உதவிக்காக, “தேங்க் யூ மைசன்” என்று நன்றி நவின்றவர், 
இயலாத ஈனக்குரலில், இவளைப் பார்த்து.. “அவன் உன்னை நல்லா கவனிச்சிக்கிறானாமா?? இல்லை ரொம்ப பாடுபடுத்துறானா..??” என்று கேட்க… அடுத்த கணம் நேத்ராவின் விழியோடு சட்டென எட்டிப் பார்த்தது.. அந்த இராவணனின் சிறையின் வசம் ஆட்பட்ட  சீதையின் சோகம். 
அவளோ பதில் சொல்லாமல்.. வாடிய முகத்தை வெளிக்காட்டாது.. மெல்ல தலை குனிந்து.. முயன்று வரவழைத்த புன்சிரிப்புடன் நின்றிருந்தாலும்.. மனம் முழுவதும் ஆறாத வடுவே நிறைந்து  நின்றிருந்தது.
ரொம்பவும் மனித மனங்களைப் படித்து பழக்கமிருப்பவருக்கோ.. அவளின் தலைகுனித்த புன்னகை முகம் ஆயிரமும் அவரிடம் சொல்லும் போல இருக்க.. அந்த நேத்திரப் பெண்ணுடன் தான் தனிமையில் பேச எண்ணம் கொண்டார் அவர். 
தன் இடப்புறமாக நின்றிருந்த ஜேகேவின் காதுக்குள் ஏதோ இரகசியமாக கிசுகிசுக்க.. அவனும்.. தன் குரு தன் மனம் கொண்டாடும் பெண்ணோடு தனிமையில் பேச நாடுவது அறிந்து.. 
அவளிடம் அழகாக தன் முத்துமூரல்கள் தெரிய கண்சிமிட்டிச் சிரித்தவனாக.. இவன் காதோரம் தன் நுனிமூக்கு நுழைத்து.. அவளது சுகந்தம் நுகர்ந்து.. கிறங்கிப் போனவனாக, 
“பயப்படாதே.. ஃபீல் ப்ரீ வித் ஹிம்..” என்றவன்.. அவள் மீதுள்ள காதல்ப்பெருக்கு தாளாது.. அவளது சிவந்த கன்னத்தில்.. “ம்ப்ச்சு” என்ற ஒலியுடன்.. முத்தமொன்றை பரிசளிக்க… 
பொது அவையிலும் தன்னை முத்தமிட்ட அவன் செய்கையில்.. அந்த இத்தாலியப் பெரியவரை.. முகங்கொண்டு பார்க்க முடியாமல்.. கூனிக் குறுகிப் போய் தான் நின்றிருந்தாள் அவள். 
இத்தாலியில் காதலர்களும் சரி.. தம்பதியர்களும் சரி.. பொதுவெளியில் இதழோடு இதழ் பொருத்தி முத்தாடும் முத்தமும் கூட.. அத்தனைப் பெரிதாக கணக்கில் கொள்ளப்படாதிருக்க… 
இந்தச்சிறிய கன்னத்து முத்தமெல்லாம் எம்மாத்திரமென்றெல்லாம் அறியாதவன்.. குழம்பித் தான் போயிருந்தாள் அவள். 
மாபியா உலக அரசனைத் தேடி.. பெரும் வர்த்தகர்களும், செல்வந்தர்களும்.. அவனைத் தேடித் தேடி வந்து இன்முகத்துடன் குசலம் விசாரித்துக் கொண்டேயிருக்க.. 
தானும் அவர்களோடு ஐக்கியமாகிப் போனாலும் கூட.. 
விருந்தில் எங்கு நின்றிருந்த போதும் ஜேகேவின் கண்கள் அவளையே துலாவிய வண்ணமே இருக்க.. நொடிக்கொருதரம் தன்னவளின் நலன் பற்றிய சிந்தித்துக் கொண்டிருக்கலாயிற்று அவன் உள்ளம்.
அவளை தனியே அழைத்துச் சென்று.. அந்தக் கூடத்தின் இராட்சத சாளரம் வழியாகத் தெரியும்.. குளிர்பனியில் உறைந்திருக்கும் மிலான் நகரத்தின் அழகினை.. 
பணியாளர்கள் தந்தவிட்டுப் போன..  வைன் கிளாஸினை கையில் ஏந்திய வண்ணம்… அந்தப் பெரியவரோடு தான்.. தானும் அமைதியாக இயற்கையை… மிருதுவான கண்களுடன் பார்வையிட்டுக் கொண்டிருக்கலானாள் நேத்ரா. 
மிலானின் குளிருக்கு மதுபானம் தான் ஏற்புடையதாக இருந்தாலும் கூட… அவையெல்லாம் ஏற்காது.. வெறும் குளிர்பானத்துடன் நின்றிருந்த மங்கைக்கு… 
அங்கு தெரிந்த இலையுதிர்ந்த பட்டுப் போன மரத்தில்.. படர்ந்திருக்கும் பனி.. மனதுக்கு இரம்மியத்தைத் தர.. அமைதியாகக் கழிந்தது தருணங்கள். 
அந்த அமைதியைக் கலைக்கும் வகையில்.. ஒரு சிப் வைன் அருந்தியவராக, “.. யூ நோ.. ஜேகே அப்பா ஒரு இத்தாலியன்.. அம்மா தமிழ்ப்பொண்ணு…” என்று ஜேகே பற்றிய குடும்ப இரகசியத்தை வெளியிட…
முதன்முதலாக ஜேகே பற்றி அறிந்தவள் வியந்து தான் நின்றாள். 
என்ன அவன் தந்தை ஒரு இத்தாலியனா?? அதனால் தான் ஆசிய-ஐரோப்பிய கலவையில் உருவான.. அவன் தேகம்.. அந்தக் கிரேக்க சிற்பத்தை நிகர்த்துக் காணப்படுவதும்?? 
இவளோ அந்த குருவின் பக்கவாட்டு வதனத்தையே பார்த்திருக்க… அவரோ அவள் பார்ப்பது உணர்ந்தும்.. உணராதவர் போல..
ஜன்னலின் வழியாக.. வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டே மீண்டும் தொடர்ந்தார் அவர். 
“அவனோட அப்பா..மாபியா கேப்பிட்டலையே தான் கைக்குள்ள வைச்சிருந்த பெரிய டான்.. அவர் பேரு “மேஸிமா கிரிமினாட்டி”.. அவர் பேர சொன்னா ஒட்டுமொத்த ரோம் மெட்ரோ பாலிட்டனும் அதிர்ந்து நிற்கும்… இத்தாலியில் மாபியா தலைமை பொறுப்பு… வம்சாவளியா தான் கடத்தப்படும் தெரியுமா?? அவங்க அப்பா இறப்புக்கு அப்புறம்…. மிகப்பெரிய மாபியா உலகத்துக்கு முடிசூடா மன்னன் ஆனான் ஜேகே…இது அவன் தானா தேர்ந்தெடுத்த வாழ்க்கை இல்லை… அந்த பாதாள நிழலுகம் தான் அவனை தேர்ந்தெடுத்திருக்கு..” என்று சொல்ல… 
அவளுக்கும் கூட.. யாரோ தன் வெண்ணிற வெற்றுமுதுகையே.. மிக நீண்ட நேரம் குறுகுறுவெனப் பார்த்திருப்பது போல ஓர் எண்ணம்.
 
நேத்ராவும்.. கையில் ஏந்தியிருந்த குளிர்பான குவளையுடன் சட்டென.. பார்வையின் வீச்சு வந்த திசையைப் பார்த்த போது.. தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் இரு கைகளிட்ட வண்ணம்.. 
அவளையே தான் விழுங்கி விடுவது போல கண்களில் காதல் மேவ மேவப்பார்த்திருந்தான் ஜேகே. 
மாபியா குடும்பத்தில் பிறந்ததால்… டானான தன்னவனைக் கண்டதும்.. மனதுக்குள் அவன்புறமாக கழிவிரக்கம் பிறந்தது அவளுக்குள். 
மாபியா குடும்பத்தில் அல்லாது.. அவளது பெற்றோர்களைப் போல நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தால்.. இவனும் நன்மாந்தனாக இருந்திருப்பானோ?? 
ஏனோ அன்று.. அவன் தடம் மாறிப் போன சின்ன குழந்தை போலத் தோன்ற… அவனையே தான் வார்த்தைகளில் வடிக்க முடியாதளவுக்கு… கருணையுடன் பார்த்திருக்கலானது அவள் விழிகள். 
தன்னவள் தன்னைப் பார்க்கும் அந்தக் காருண்யப்பார்வையை காதல் பார்வையாக தவறாக எண்ணிக் கொண்டவனோ.. கண்கள் பளிச்சிட அவளைத் தான் இதழ்களில் உறைந்த புன்னகையுடன் பார்த்திருக்கலானான் ஜேகே. 
அவனது குரு அலக்ஸாண்ட்ரியோவோ, ஜேகே நிரஞ்சனா மீது வைத்திருந்த அழியாக்காதலை நன்கறிந்திருந்தவராயிற்றே?? 
அதனால்… “இதுநாள் வரை ஒருநாளும் பொம்பளை விஷயத்துல வீக்கானவனா நான் பார்த்தது இல்லை நேத்ரா..” என்றவராக அவளைப் பார்த்துத் திரும்ப, 
அந்த நேத்ரா என்ற பெயரழைப்பில் அவனில் நின்றும் சிந்தனை களைந்தவளாக.. குருவைத் தான் நோட்டமிடலானாள் அவள். 
“நிரஞ்சனா மாதிரியே ஒரு பொண்ணு… அச்சு அசல் நிரஞ்சனாவை க்ளோனிங் வார்த்த மாதிரியே ஒரு பொண்ணு.. நிரஞ்சனா இழப்பால்.. ரொம்பவே வாடியிருக்க ஜேகே.. எந்த சந்தரப்பத்திலும்..யாருக்காவும்..உன்னை விட்டுக் கொடுக்க மாட்டான்…. …”என்று சொன்ன கணம்.. 
மனதிற்குள் திடீரென்று புள்ளீங்கோ கார்த்திக் அவளிடம் பலாத்காரமாக நடந்து கொள்ள முற்பட்ட போது.. அவனிடமிருந்து அவளை முன்வந்து காப்பாற்றியது ஞாபகம் வரலாயிற்று அவளுக்கு. 
அந்தக் கூட்டத்தில் இருக்கும் அத்தனை மாந்தர்களுக்கும் தலைவன் போன்றவனான அவன்!! 
அங்கிருக்கும் அத்தனைக் கண்களும்.. அவனுடன் இருநிமிடத்துளிகளாவது பேசக்கிடைக்காதா.. அவன் பார்வை தங்கள் மேல் படாதா என்று ஏங்கிப் போயிருக்க… அவளையே ஏக்கத்துடன் பார்த்திருக்கும் அவன்!! 
அவள் தன்னைத் தான் பார்க்கிறாளா?? என்ற சந்தேகம் தோன்றியதோ அவனுக்கும்?? 
அவன் பேசிக் கொண்டிருந்த மனிதர்களை விட்டும் மெல்ல விட்டகன்று.. நெடுதூரம் நடந்து இன்னொரு மாந்தரை அவன் அடைய.. அதுவரையான அந்த நடைபயிலும் இடைவெளியில்… 
அவனை நோக்கிய வண்ணமே உருண்ட அவள் நேத்திரங்கள்!! 
அந்நேத்திரங்கள் தன்னைத் தான் பார்க்கின்றன என்றதும்.. அவனில் வெகுநாள் கழித்து மலர்ந்தது ஒரு மந்தகாசப்புன்னகை.
அவனது காதல்சேட்டையைக் கண்டும் காணாதது போல அவனது குருவோ… மெல்லிய குரலில்,
நேத்ராவின் மனச்சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் எண்ணத்துடன், “நிரஞ்சனா மாதிரியே இருக்க  ஒரு காரணத்துக்காக அவன் உன்னை ஏத்துட்டிருக்கலாம்.. ஆனா.. உன் குணவியல்புகள் வேற… நிரஞ்சனா   குணவியல்புகள் வேறன்னு அவனுக்கு புரிய ஆரம்பிச்சிருக்கும்.. உருவ ஒத்துமை இருந்தாலும்.. குணத்தில ஒத்துமையில்லையேன்ற ஏமாற்றத்தையும்  தாண்டி… அவன் காதல் இன்னும் நீர்த்துப் போகலைன்னா… அவன் உன்னை உனக்காக காதலிக்கிறான்னு அர்த்தம்…” என்று பெரும் இரகசியத்தை.. அவர் பட்டென்று போட்டுடைக்க.. 
இதுகாறும் தன்னை மஞ்சத்தில் வெல்லும் ஆண்மகனில் நின்றும் விழியெடுத்து.. குருவைத் தான் திகைத்து நோக்கலானாள் நேத்ரா.
 
தன் குவளையிலிருந்த கடைசிச் சொட்டு திராட்சை இரசத்தையும் அருந்தி முடித்தவர், “ஜேகே மனசறிஞ்சு நடந்துப்பேன்னு நெனக்கிறேன்” என்று புன்னகையுடன் சொல்ல… அதையே பார்த்திருந்த ஜேகேவுக்கும் கூட.. தன் குரு உரையாற்றி முடித்து விட்டார் என்று புரிந்து போனது. 
அலெக்ஸாண்டிரியோ.. அப்படி தன்னை நாடி வரும் அனைவருடனும் பேசும் இரகம் அல்ல!! 
அவராகவே தேர்ந்தெடுத்து பேசுபவர்.. கையில் திராட்சை இரசம் நிறைந்த குவளையுடன் பேச்சைத் தொடங்குபவர்.. சரியாக அது முடியும் தருவாயில் பேச்சுக்கு முற்றுப்புள்ளியும் வைத்திருப்பார் என்று ஜேகேவும் அறிந்து தான் வைத்திருந்தான். 
ஆகையால்.. குவளை காலியானதும்… அவர்களை நாடி.. காதலில் கிறங்கிப் போன விழிகளுடன் வந்தவன்.., மணிக்கட்டிலிருக்கும் பாரம்பரிய கடிகாரம் நோக்கி, “இப்போ டைமாச்சு.. பேஸிலிக்கா கிளம்பியாகணும்.. உங்க அழைப்புக்கு நன்றி.. நானும், நேத்ராவும்.. சீக்கிரமே நல்ல செய்தியுடன் உங்களை பார்க்க வர்றோம்” என்றபடி அங்கிருந்து.. இவன் கட்டுப்பாட்டில் இருக்கும்.. இன்னோர் மாபியா நகரான “பேஸிலிக்கா” செல்லத் தான் தயாரானான் அதுவும் அவளோடு. 
அவனை மேற்கொண்டு இழுத்துப் பிடிக்க  நாடாத குருவும்… “கண்டிப்பா யங்மேன்.. பட்.. சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க ஜேகே.. நேத்ரா மாதிரி நல்ல பொண்ணை மிஸ் பண்ணிடாதே…” என்று சொல்ல… அவரது சொற்களை அரும்புப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவன்… 
தன்னவளின் இடையூடு கையிட்டவண்ணமே தான்.. அந்த ஆழியளவு நடுக்கூடத்தின் வழியே அவளை அழைத்துச் செல்லலானான் அவன். 
அங்கே நின்றிருந்த ஃபெராரி காரினருகே தன்னவளை அழைத்து வந்தவன்.. அவளுக்காக மகாராணிக்கு ஒரு சேவகன் போல உருமாறிப் போனவன்.. கார்க்கதவுகளைத் திறந்து விட.. 
அமைதியாக காரிலேறி அமர்ந்து கொண்டவளின் அகமெல்லாம் நிறைந்திருந்தது தீராத ரணங்கள்!! 
அவளின் பின் தானும் காரில் ஏறிக் கொண்டவன்.. அத்தனை அவசரகதியிலெல்லாம் அந்தக்காரினை எடுக்கவேயில்லை. ஏதோ அத்தனை குளிர்காலநிலையிலும் கூட… அவளருகாமையில் புழுக்கமாக இருக்க… அவனுக்கு இலேசாக வியர்க்கவாரம்பிப்பதைக் கண்டு கொண்டன அவள் விழிகள்!! 
இந்தப் புழுக்கத்துக்கு காரணம்.. மன்மதனும் மனம் மயங்கி நிற்கும் ரதியை அருகில் வைத்துக் கொண்டு.. அவளது அண்மையில்.. அவனது ஆண்மை காணும் ஆட்டம் தான் என்பதை பூவையாள் அவளும் அப்போது அறிந்திராமல் தான் போனான். 
அவனது வதனம்.. அவள் மேலுள்ள காதலுணர்வுகள் தாளாமல்.. கொஞ்சம் கொஞ்சமாக சிவந்தும் போக.. ஏதும் சுகயீனங்களோ என்றும் கூட பதறித்தான் போனாள் நேத்ரா. 
அவளையும் அறியாமல்.. சட்டென அவன் கன்னம் பற்றியவள், பதற்றத்துடன், “எ.. என்னாச்சு?? ஃபீவரிஷ்ஷா இருக்கா… ஆர் யூ ஆல்ரைட்??” என்று கேட்க… அவளது அன்பு மிகுந்த சொற்களும் தான் அவனின் அகம் தீண்டலானது சடுதியாக. 
சும்மாவே அவள் அண்மை வேண்டும் வேண்டுமென்று ஆண்மை அடம்பிடித்து அழும் போலிருக்க.. இதில் அவனது கன்னம் தீண்டிய.. அவளது ஒற்றைத் தீண்டலில் கரைந்தது மெழுகுவர்த்தி!! 
அவளின் கையை தன் கைகளால் இறுகப்பற்றிக் கொண்டவன்.. அதில் கண்கள் மூடி தன் கன்னம் உரசியவனாக… அவளுக்கு அதரங்களின் எச்சில் தோயத் தோய முத்தங்கள் வைக்கலானான் அவன்.
அந்த எச்சில் ஸ்பரிசம் பிடிக்காது.. அவள்.. தன் கையை அவனிடமிருந்து.. சின்ன ஐய்யரவு முனகலுடன் எடுத்துக் கொள்ள அதற்கு விடாமல்.. அவளது உள்ளங்கை தந்த காதல் கதகதப்பில்… கண்கள் மூடி முற்றிலும் தொலைந்து கிறங்கித் தான் போனான் அவன். 
இவளோ அவனில் நின்றும் கைகளை உருவ முயற்சித்தவளாக,”வ்விடு…விடு ஜேகே” என்று கண்ணீரோடு சிணுங்க.. 
அவனின் இதழ்களோ தற்போது முன்னங்கை.. அவளது முழங்கை.. கைச்சந்து என மெல்ல மெல்ல மேலேறி.. அவளது கழுத்து வளைவை அடைந்து.. 
எச்சில் குறுகுறுப்பை மூட்ட… இவளோ ஆற்றாமையுடன் தான் தன் மறுப்பை வெளியிட்டு சிணுங்கினாள் பெண்!! 
அந்த சிணுங்கல் கூட மோகனராகமாகப் போக.. “இன்னைக்கு இந்த டிரெஸ்ல பார்த்துல இருந்து.. ஐ கான்ட் கன்ட்ரோல் மைசெல்ப்… ஐ நீட் யூ ரைட் நவ்” என்றவன்.. அதற்கு மேலும் ஒலியெழுப்பும் அவளது அதரங்களை.. சட்டெனக் கௌவி உறிஞ்சலானான் தாபம் தலைக்கேறிய பித்தனாக. 
இதழ்கள் நான்கும்.. “ம்ப்ச்சு.. ம்ப்ச்சு” என்று மோக கீதம் வாசிக்க… எப்போதும் போல இன்றும் ஜேகேவின் அதிரடியே வெல்ல.. அவனோடு ஒன்றியும் ஒன்ற முடியாத நிலையிலும்.. தவித்து நின்றிருந்தாள் பெண். 
இதழ் தான் மதிமயங்கிப் போய் கள்ளருந்திக் கொண்டிருந்தாலும் கூட… அவனது கைகளோ.. அந்தக் கவுனுக்கும் மேலாக.. அவளது பெண்மைப்பந்துகளைச் இருகைகளாலும் பற்றி சேர்த்து வைத்து.. வட்ட வடிவில் உருட்டி உருட்டி… தடவ.. அந்தப் புதுசுகம் வேறு ஜேகேவுக்குள்ளிருக்கும் உன்மத்தக் கிறுக்கை இன்னும் அதிகமாக்கவே செய்தது. 
அவனோ இதழ்களை விடுத்தும் உள் நுழைந்து அவள் நாவினைக் கட்டித் தழுவ முற்பட்ட வேளை.. அவன் தீண்டல் பிடிக்காமல்.. சட்டென.. அவன் மார்பில் கைவைத்து தன்னிலிருந்தும் தள்ளி விட்டு.. விலகி நின்றவளின் நேத்திரங்களில் தத்தளித்துக் கொண்டிருந்தது அவஸ்தையான கண்ணீர். 
அவளின் எதிர்ப்பில் கோபமும், விரக்தியும் ஒருங்கே இழையோட, “ஏன்.. இவ்ளோ பெரிய மாபியா ராஜ்ஜியத்தோட ராஜா நான்.. உனக்குப் பிடிக்கலையா??”என்று ஏக்கத்துடன் கேட்க, ஏதும் பேசாமல்.. தலைகுனித்துக் கொண்டே, “எ.. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை!!” என்று சொல்லிவிட்டு.. அமைதிப்பாவை போல சமைந்த பெண்ணின் மௌனமே நிறைந்தது எங்கும். 
அவளுரைத்த “பிடிக்கவில்லை” என்ற சொல்லில் காயம்பட்டுத் தான் போனது அவன் மனம்!! 
பெருமூச்செறிந்து தன்னைத் தானே சமப்படுத்திக் கொண்டவன்.. அலைஅலையாக சிகை கோதிக் கொண்டே… வண்டியை அசுர வேகத்துடன் தான் எடுக்கலானான் அவன். 
அவளின் மனம் மாற்ற.. அந்த வெற்று இதயத்தின் சொந்தக்காரனாகத் தான் நுழைய எத்தனையோ வழிவகைகள் தான் செய்து பார்த்தும் கூட.. அவளின் இதயவாசலை நெருங்க விடாமல்.. இரும்புப் பூட்டுப் போட்டுக் கொள்ளும் அவளை என்ன செய்தால் தான் தகும்?? 
மீண்டும்… அவர்கள் கிளம்பிப் போகும் போது… வெகுதூரம் வரை..அவர்கள் காரில் அமைதி நிலவ..வண்டியின் ரியர்வீவ் வழியாக… தன்னவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு.. அவ்வமைதி இதயம் கொன்றது. 
காதலில் இளகிப் போன குரலில், அவளது மறுப்பினையெல்லாம் அடியோடு மறந்தவனாக… “என்னாச்சு என்னோட ஏஞ்சலுக்கு??.. ஏன் அமைதியா வர்ற…??என்று தான் கேட்டாள் அவள்.
இப்போது அவன் வண்டியோ.. மிலான் நகரத்தின் பெரும் பெரும் கட்டிடங்கள் இருமருங்கிலும் முளைத்திருக்கும் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது. 
அப்போதும்  அவள் அமைதியாக வரவே.. இடுங்கிய புருவங்களுடன் தன்னவள் பால் திரும்பியவன்.. சாலையில் கவனமென்பது கிஞ்சித்தும் இல்லாமல், 
“எனிவன் செய்ட் எனிதிங்… யாராவது ஏதாவது சொன்னாங்களா…?சொல்லு என் பேபியை சொன்னவங்க தலையை கொய்திட்றேன்…” என்று ஆவேசத்துடன் கேட்க.. .. அப்போதும் அமைதியாக வந்தவளுக்கோ, 
‘எனக்கு.. வேணும்ன்றது.. உன் தலை தான்.. கிடைக்குமா?’என்று பட்டென்று கேட்டுவிடத்தான் பரபரத்தது உள்ளம்!! 
ஏன்.. ஏன்.. எனக்கு அப்படியான ஒரு துரோகத்தை செய்தாய்??
 உனக்கு நெருங்கிய பெண்ணின் தோற்றத்தில் இருப்பதினால் என்னைக் காதலித்த நீ… நிரஞ்சனா போல நான் இல்லாதிருந்தால் காதலித்திருப்பாயா? என்று கேள்விக் கேட்டது மானசீகமாக. 
தன் உயிரினும் மேலான பெண்ணின் அமைதி.. அவனது உள்ளத்தை வாட்ட, 
“ஏன் அமைதியா வர?? டோன்ட் கில் மீ வித் யோர் சைலன்ட்” என்றவாறு அவன்.. அவள் புறமாகத் திரும்பியது மட்டும் தான் தாமதம்… 
அவன் காரினுள் சாரதி ஜன்னல் கண்ணாடியில்.. “டுப்” பென்ற ஒலியுடன்… எங்கிருந்தோ வந்து துளைத்தது துப்பாக்கிக் குண்டு.
அதில் அவனது கண்ணாடி வெடித்து.. சிலந்தி வலை போல வெடிப்புச் சிதறல்கள் உருவாக..ஒருகணம் வலுவிழந்து தடுமாறி நேரானது ஜேகேவின் கைவன்மையில் ஓடிக் கொண்டிருந்த காரு வண்டி. 
கண்களில் தேடலுடன்.. குண்டு துளைத்த திசையை அவன் பார்த்த போது… நான்கைந்து வாகனங்களில் நின்றும் முகமூடி அணிந்தவர்களாக… 
இவன் காரினை விரட்டிப் பிடித்து விடும் எண்ணத்துடன்… கார்க்கண்ணாடி வழியாக வெளிப்போந்து முகமூடி மாந்தர்கள் இவர்களை நோக்கி சுட்டுக் கொண்டே வரத் தொடங்குவதைக் கண்டான் ஜேகே. 
மெல்லிழையாள் நேத்ராவோ.. அந்த கண்ணாடியில் துளைத்த குண்டுக்கே.. சிலையென அச்சத்தில் உறைந்து போய் நின்றிருக்க.. அவசரமான நிலையில் செயற்படவிருந்த ஜேகே தான், 
.“ஓ.. ஷிட்….அவங்க அப்போஸ் மாபியா… ய்யார்ட்ட மோதணும்னு தெரியாம மோதுறாங்க.. ந்நேத்ரா… சீட் பெல்ட்டை டைட்டா.. போட்டுக்க..” என்று அந்நொடியிலும் தன் காதல்ப்பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்தவன், 
அவளும் சீட் பெல்ட்டை வேகவேகமாக அணிந்ததன் பின்னரேயே..ஒருவித ஆசுவாசத்துடன், “சீக்கிரமா இங்கேயிருந்து போயாகணும்..” என்றவன் எஸ்லேட்டரை அழுத்தமாக மிதித்து.. அசுர வேகத்தில் வண்டியை விட்டான் அவன்.
ஆங்கிலத் திரைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கும்.. கார் சேஸிங்குடனான.. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்.. அவள் கண்னெதிரே.. நேருக்கு நேர் நடந்து கொண்டிருக்க… இவளுக்கோ இதயம் திடுக்கிட்டுத் தூக்கிவாரிப் போடலானது. 
“டப்டப்”பென்று ஓயாமல் கேட்டுக் கொண்டேயிருந்த குண்டுமழைச் சப்தத்தில்… இவளோ அச்சத்தில் முகம் மூடிக் கொண்டு.. அக்காட்சியைக் காணப் பிடிக்காமல் வர… 
அச்சமயத்திலும் அவள் அச்சம்.. இவன் உள்ளத்தை ஏதோ செய்ய, அவளது கூந்தல் வருடி விட்டவனாக, “ஹேய்..நேத்ரா….பயப்படாதே…போயிரலாம்..எப்படியாவது போயிரலாம்” என்ற அவன் குரல் தந்த தைரியத்தில்.. அவள் தலைதூக்கிய போது தான்.. அந்த அகோர சம்பவமும் நடந்தேறலானது. 
அவன் காரோடு சரிக்கு சமமான வேகத்தில் வந்த.. எதிரிகளின் காரோ.. மீண்டும் அவனது ஜன்னல் கண்ணாடியைச் சுட.. .பாதி நொறுங்கிப் போயிருந்த அவன் பக்க ஜன்னல் கண்ணாடி முழுதும் சில்லு சில்லாக உடைந்து தான் போனது. 
அந்தக் கண்ணாடிச் சில்லிலொன்று பறந்து வந்து.. அவனது நெற்றியைக் கிழித்து.. அவன் இரத்தம் சுமந்ததாக தரையில் விழ.. அவன் நெற்றியோரம் வழியலாயிற்று செங்குருதி!! 
அந்நொடியிலும்.. கோழி.. தன் குஞ்சியை அணைப்பது போல.. அவளைத் தன் கையோடு அணைத்து.. கீழே தாழ்த்திப் படுக்க வைத்துக் கொண்ட கணம். ஒரு குண்டு வந்து… துளைத்தது அவன் கையில்!! 
உடை தாண்டி தெறித்தது இரத்தம்!! 
மிகவும் நெருங்கிய விருந்தென்றெண்ணி.. அவனது மெய்க்காப்பாளர்களையும் விட்டு வந்தது தான் எத்துணைப் பெரிய தவறு?? என்று காலம் கடந்து வருந்தலானான் ஜேகே. 
அவன் கையின் உதிரம் கண்டு.. இவளோ.. மனம் தாளாது.. வாய் பொத்தி… “ஆஆஆ.. என்று  கத்த.. காயம் பொறுத்தவனுக்கு.. காரிகையின் காயம் பொறுக்க மாட்டாமல் போக, அவள் கூந்தலை வருடி விட்டவனாக, “.. ஓகே.. ஓகே இதெல்லாம் சாதாரணம் தான்.. விடு விடு…” என்றவன்.. காரை இன்னும் கொஞ்சம் வேகத்துடன் செலுத்த…. அவர்களோ விரட்டிப் பிடிக்கத் துணிந்தனர் விடாது. 
காரை ஓட்டிக் கொண்டே தன்னவளை நோக்கி, “உனக்கு கார் ஓட்டத் தெரியுமா…??”என்று கேட்டவன்… அவளும் தட்டுத் தடுமாற்றத்துடன்.. 
“ம்.. ஆமா..” என்றவளாகத் தலையாட்ட.. “அப்படீன்னா.. வா.. பயப்படாதே.. தைரியமா காரோட்டு…இது ஒன்வே தான்.. அதனால் எதிரே எந்த வாகனமும் வராது… நீ எதைப்பத்தியும் யோசிக்காமல்.. காரை ஓட்டிட்டே இரு..” என்று உத்வேக மொழிகள் கூறி… 
ஸ்டியரிங்கில் இருந்தும் கையெடுக்காது.. அவள் சாரதி ஆசனத்துக்கு மாறும் வரை ஓட்டியவன்.. அவள் வந்ததும்.. பின்னாசனத்துக்கு தாவினான் இத்தாலிய மாபியா தாதா. 
அவளே வந்து தைரியமா காரோட்டும் போது… எஸ்லேட்டரை அதீத அழுத்ததுடன் மிதிக்க.. அவள் கைவன்மையில் இன்னும் கொஞ்சம் வேகமெடுத்தது குண்டு துளைத்து சேதாரமாகிப் போயிருந்த அவ்வண்டி. 
அவளின் அருகே மீண்டும் ஒரு எதிராளிக் கார்.. துப்பாக்கியோடு வர.. இவளோ நடுக்கத்துடன் நிற்க.. பின்னேயிருந்து கேட்டது அவனது தைரியமூட்டும் கணீர்க்குரல்!! 
“எதுக்கும் பயப்படாத.. ம்ம்.. ரோட்ல மட்டும் உன் ஃபோகஸ வை.. வேறெதையும் பார்க்காத…” என்ற அவனது கட்டளையை ஏற்று.. வண்டியில் மட்டும் கவனம் வைத்து ஓட்டலானாள் அவள்
 
பின்சீட்டிலிருந்து.. தூரம் பார்த்து சுடும்.. ஸ்னைப்பர் ரக துப்பாக்கி எடுத்தவன்… தன் பெராரி காரின் திறக்கப்பட்ட உத்திரம் வழியாக வெளிப்போந்து.. 
தங்கள் காரை சற்று தொலைவில் துரத்தி வரும்.. எதிராளியின் காரின்.. பெற்றோல் டான்க்கினைக் குறி வைத்து சுட்டது மட்டும் தான் தாமதம்…
சட்டெனத் தீப்பிடித்து… வளியில் பன்னிரண்டடி உயரத்தில் எழுந்த அந்தக்கார்.. மேலே புகையெழுந்து பரவுமளவுக்கு பெரிதாய் வெடித்துச் சிதறி.. தரை வரும் போது.. உதிர்ந்த இயந்திரப் பூப் போல உதிரிப் பாகங்களோடு தான் வந்தது அது.
இதுகாறும் கட்டிடங்களாக மாத்திரம் இருந்த அந்த நெடுஞ்சாலை.. தூரம் தூரம் செல்லச் செல்ல.. இருமருங்கிலும்.. 
இருமருங்கிலும் பனிமழை குவியல் குவியலாக தலையில் குவிந்து… இருக்க.. பனியடர்ந்த காட்டுப்புறச் சாலையாக மாறிப்போனது அது. 
இன்னும் காரின் உத்திரத்திலேயே இருந்தவனோ.. இம்முறை.. பாதையின் மேலாக நீட்டி வளர்ந்திருக்கும்… பைன் மரத்தின் கிளை பார்த்துச் சுட.. அது உடைந்து வந்து.. தடாரென்று  ஒரு காரின் மேலேயே விழுந்து… கண்ணாடி உடைந்து நகரமுடியாமல் தான் நின்றது. 
தங்களைத் துரத்தி வந்த இரண்டாவது வாகனத்தையும்.. குறிபார்த்துச் சுடும் திறமையால் சாமர்த்தியமாக சமாளித்தவன்.. மூன்றாம் வாகனத்தில் டயரைக் குறிபார்த்துச் சுட.. அதுவும் பாதியிலேயே நகரமுடியாமல் நின்று விட… 
இப்போது ஒரே ஒரு வாகனம் மாத்திரமே.. இருவரையும் பின்தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கலானது. 
காரின் பின் கண்ணாடியில்… தடதடவென குண்டுகள் துளைத்துக் கொண்டேயிருக்க.. மீண்டும் அவளை நாடி வந்தவன்…. “ஓகே.. நீ தள்ளி உட்காரு.. நான் பார்த்துக்கறேன்…” என்றுரைத்தவனாக.. மீண்டும் அவளை இடம்மாற்றி விட்டு… 
அந்த வளைவு சுளிவான பாதையோடு.. இலாவகமாக வண்டியைச் செலுத்தியவன்.. ஒரு கோட்டை போன்ற இல்லம் வரவே… அதன் ஷெட் போன்ற அமைப்பில் நேரே விட்டான் வண்டியை. 
கார் புகுந்ததும்… ஷெட்டின் கதவுகளும் தானாக மூடிக் கொள்ள.. அங்கே அந்த எதிராளிகளால் அவர்களை அடைய முடியாமல் தோல்வியைத் தான் தழுவிக் கொள்ளலாயினர். 
மெல்ல ஒருவழியாகத் தப்பித்த ஆசுவாசத்துடன்.. அவளைத் திரும்பிப் பார்த்த போது.. இரு கைகளாலும் தன்னுடலை அணைத்துப் பிடித்த வண்ணம்.. தான் கண்ட கோரக்காட்சிகள் தாளாது.. உடல் இன்னும் இன்னும் நடுங்கிக் கொண்டேயிருந்தவளைக் கண்டதும்… 
உள்ளூற தாய்மையெண்ணம் பிறக்க, அவளை தன் நெஞ்சாங்கூட்டுக்குள் அடைக்கலமாக்கும் வண்ணம் தாவி அணைத்தவன், “ஹேய்.. இ.. இனி இப்படியேதும் ஆகாது… உனக்கு ஏதும் ஆக விட மாட்டேன்..”என்றுரைத்தவனின் கைகள்… 
அவளது கைகளை மெல்லத் தழுவ… அதில் ஏதோ ஓர் திரவம் தன் கையில் ஒட்டி பிசுபிசுப்பது புரிய.. உள்ளங்கை விரித்துப் பார்த்த போது அதிலிருந்தது இரத்தம்!! 
“ப்ளீடிங்..” என்றவனாக அப்போது தான் அவள் உடலை ஆராய்ந்த போது.. குண்டடி பட்டக் கண்ணாடி அவள் கைச்சந்தைக் கிழித்து.. அதில் நின்றும் ஓயாமல் இரத்தம் வெளிவந்து கொண்டிருப்பதை கவனித்தனர் இருவருமே. 
அதிகளவு இரத்தப்போக்கு காரணமாக.. தலை சுற்றி.. அவள் சரியப்போக.. உடலெல்லாம் கடும் பதற்றம் ஓட.. அவளை அப்படியே  அவளை கைகளில் ஏந்தியவன்..
வீட்டின் பின்படிகளினூடாகத் தான்.. தடதடவென ஏறி.. தன் இராட்சத அறையை நாடிப் போனான் அவன். 
அவளுக்கோ அதுவொரு பிடிமானமற்ற சின்ன மயக்கம்!! கண்ணாடி கிழித்து வந்த சாதாரண இரத்தம்!! 
உண்மையில் கையில் குண்டடி பட்டு…உண்மையான சிகிச்சை தேவைப்படுவதோ அவனுக்கு!! 
ஆயினும் தன்னைப்பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாது.. தனக்குத் தானே சமாதானம் செய்வது போல அவளை நோக்கி, “இல்லை.. உனக்கு ஒண்ணும் இல்லைடா.. உனக்கு.. ஒ.. ஒண்ணும் ஆக விட மாட்டேன்” என்று திரும்பத் திரும்ப அதையே  உச்சரித்தவனாக அறைக்குள் நுழைந்து அவளைப் படுக்க வைக்க, 
அறை வாசலில் திரண்டனர் அவனது ஊழியர்கள்!! 
தன்னருகே வந்து நின்ற தலைமை ஊழியனை நோக்கி.. அவசரமான குரலில்.. இரைந்து கத்தியவனாக.. “கமான் ஐ நீட் அ டாக்டர்…” என்று அவன் கத்திய கத்தலில்.. மருத்துவரை அழைத்து வர விரைந்தேகினர் அவன்ஆட்கள். 
அவள் பக்கத்திலேயே.. அமர்ந்திருந்து.. அவள் தலையை தன் நெஞ்சாங்கூட்டில் தாங்கியவனாக… கண்களில் கண்ணீருடன்.. களேபரம் சிந்தும் முகத்துடன் அமர்ந்திருக்கும் ஜேகே அவளுக்குப் புதிது.
டாக்டர் வரும் வரை ஊழியர்கள் கொண்டு வந்த சுத்தமான நீரில்… அவள் காயத்தை நனைத்து.. செந்நீரை சுத்தப்படுத்த.. தண்ணீர் தந்த எரிவில்.. இவள் அதரங்கள் கடித்து.. “ஸ்ஸ்” என்ற வண்ணம் வலியில் விழி சுருக்க… 
அதை தன் வலி போல பிரதிபலித்துக் காட்டியவன்.. அவளுக்கு சமாதானம் சொல்லும் நோக்கில், “பைன் ஒண்ணும் ஆகாது.. இ.. இது சரியாயிடும்” என்று சொல்லிக் கொண்டிருந்த கணம்.. அடுத்த பத்துப் பதினைந்து நிமிடங்களில் எல்லாம்.. அண்மையில் வசிக்கும் இவனது மாபியா எல்லைக்குக் கீழ்ப்பட்ட வைத்தியரொருவர் வந்து சேரலானார். 
அவன் முன்னிலையிலேயே.. அவளது கைச்சந்துப் பகுதி மட்டும்.. ஊசி போட்டு.. மறக்கடிக்கப்பட்டு… 
அங்கயே.. அந்த தசைப்பிளவுக்கான..சின்ன ஆபரேஷனும் நடத்தப்பட்டது.
வலி மரத்துப் போகும் ஊசி போட்டதாலேயே என்னவோ… தன் தோலினைக்கிழித்துக் கொண்டு உள்நுழைந்து வெளிவரும் ஊசியின் வலியினை அவளால் உணரமுடியாமல் போக.. 
அவன் நெற்றியில் வழிந்து கொண்டிருக்கும் இரத்தம் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாது.. அவள் பக்கத்திலேயே அமர்ந்திருந்த அவன் முகமோ.. அதை தாங்கவியலாத வலியைக் காட்ட, 
டாக்டரை நோக்கி, “டாக்டர்.. மெதுவா… வலிக்கும்..” என்றவனையே..வலி மரத்துப்போக ஊசி போட்டால் எங்கணம் வலிக்கும்?? என்பது போலத் தான் பார்த்திருக்கலானார் அவர். 
ஆனால்.. அவனுக்கோ… அவள் உடலில் ஊசி தைப்பது கூட பொறுக்க முடியாமல் போக… அவள் கூந்தலை வருடிக் கொண்டே.. அதைப் பார்க்க முடியாது.. வேறெங்கேயோ பார்த்த வண்ணம் இருக்கும்.. அவனின் காதல் சுமந்த முகத்தைத் தான் பார்த்த வண்ணம் இருந்தாள் மாது. 
இந்த மாபியா உலக அரசனுக்கு.. இவள் மேல் இத்தனைக் காதலா?? 
சதாவும் போலீஸே தன் உயிர் மூச்சென இருக்கும் தமையன்.. வாங்கிய கடனுக்காக விற்க நினைக்கும் இவள் மாமா.. நம்பி வந்தவளை கற்பழிக்கப் பார்த்த புள்ளீங்கோ கார்த்திக் போன்ற சுயநலமிக்க உறவுகளையே பார்த்திருந்தவளுக்கு.. தனக்காக துடிக்கும் ஓர் ஜீவனைக் கண்டதும்.. அவனை அந்நொடி தன்னுள் தோன்றும் வித்தியாசமான உணர்வுகளுடன் தான் பார்த்திருக்கலானது அவள் கண்கள்!! 
ஆனால்.. அவளைக்காட்டிலும் உண்மையான சிகிச்சை தேவையாக இருந்தது அவனுக்குத் தான் என்பதை அறிந்திருந்த மங்கையோ ஒரு வார்த்தை தானும் அதுபற்றி சொல்லாமலேயே இருக்க.. 
டாக்டர் தையல் போட்டுக் கட்டிட்டு முடித்ததும்.. அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன்.. பரிதவிக்கும் தழுதழுத்த குரலில், 
“எனக்கு நீவேணும். பேப்.. ஒரு தடவை உன்னை இழந்து நான் பட்டதெல்லாம் போதும்.. இன்னொருதடவை இழந்தா.. செத்துருவேன்டா” என்று கண்ணீர்மல்கக் கூறியதைக் கேட்டு.. அவன் சொல்லி.. அணைப்பில்.. கற்பாறை இதயமும் கூட இறுகும் போலத் தான் அவளுள் கரைபுரண்டது உணர்ச்சிகள். 
மனமிளகிப் போன டாக்டர் தான் கண்டு கொண்டார்.. அவனின் கருங்கோர்ட்டில் நின்றும் குண்டு துளைத்த கைவழியாக இரத்தம் வழிவதை. 
“சார்.. ப்ளீடீங்.. யூ டூ நீட் ட்ரீட்மெண்ட்” என்று சொன்ன போது தான்.. தன் காயம்தனை உணர்ந்தவன்.. அமைதியாக சிகிச்சைக்கு ஒத்துழைக்க… அவனது காயத்தின் தடம் கண்டு அவள் பதறிப்போய் நின்றிருந்ததெல்லாம் ஓரிரு கணங்களுக்குத் தான். 
அந்த முகம்.. உணர்ச்சி துடைத்த முகமாக மாறி… ரௌத்திர முகமாக மாற.. அவனையே இமைக்காமல் பார்த்தவள், மானசீகமாக மனதுக்குள், 
‘ஏன்.. ஏன்.. எனக்கு.. அத்தனை பெரிய தண்டனை தந்தாய்?’ என்று கேள்வி கேட்டு.. அவனை நிந்தித்தை அவன் அறியாமல் தான் போனான். 
நிலா வரும். 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *