நீரும் செம்புலச்சேறும் _ 10

நீரும் செம்புலச்சேறும்

ரொம்ப மோசம் யுகி இவங்க … ச்சே ச்சே .. பிசாசு அவன்..குட்டி சாத்தான் நான் அவங்கள கூப்பிடப்போய் எனக்கு ரொம்ப ஷேம் ஆகிருச்சு

தனியா தன்னவனை தள்ளிட்டு போய்ட்டு ஒற்றே புலம்பல் வினோ…

நிலா அறைக்கு போய் புதுமணத் தம்பதியருக்குள் தான் சிக்கியதை எண்ணி எண்ணி… கடல் அளவு பீலிங்ஸ் ..அந்தம்மாக்கு முடில…eee

இந்த கரிமேடு கருவாயன் பொல்லாதவன் யுகி ன்னு தனியா கார்த்திக்கு பாட்டு வேறு வைத்தாள் …

அவளின் இந்த சிறுப்பிள்ளைத்தனத்துக்கு ஒன்றும் பதில் கொடுக்காது …

முன் முன் வந்து விழுந்த… அதன் சொந்தகாரியை போலவே அடங்காத சேமியா முடியை திரும்ப திரும்ப எடுத்து சொருகி விளையாடிக்கொண்டிருந்தான் யுகி…

மனமோ அவள் பிராதில் இலயிக்கவில்லை…
நாளை திட்டப்படி இருவரும் பயணத்துக்கு தயாராகனும்…. ராமர் இனி வினோ பற்றி தன்னிடம் பேச வரக்கூடும்…
அவரின் விருப்பம் என்ன? தெரியணும்..

அங்கு மகிய பார்க்கணும் ஊரில் இருக்கும் பெற்றோரை ஏதாவது சொல்லி மனம் கோணாமல் சமாதானம் பண்ணனும்…

ஒரு பொண்ணு வாழ்க்கைக்குள் வந்தால் எவ்ளோ பொறுப்புக்கள் அடுக்கடுக்காக…அம்மம்மா.. மலைத்தான்…

அதெல்லாம் தான் ஆணுக்கு பெருமையோ? கிரீடமோ? ம்ம்ம்

யுகி முகத்துக்கு முன் தன் நீண்ட விரல்கள் விசிறி…

ஹலோ யுகி சார்..ஏதாச்சும் கேட்டுச்சா?

ம்ம்ம்..நல்லா கேட்டுச்சு.. முத சொல்லு… நீ ஏன் கதவு தட்டிட்டு போகல… மினிமம் நாகரீகம் வேணும்ல… வினு

யோவ்.. நீ வேற வேணும்ன்னே போன மாதிரியே சொல்ற… அப்பத்தான்யா உள்ளே போனாங்க…

கொச்சையா யுகிய திட்டிட்டு..

அவன் கண்ணை குத்துவது போலவே … eee

சுட்டு விரலையும் நடு விரலையும் முகத்துக்கு முன்னுக்கு நீட்டி நீட்டி…eee

ஒரு ரெண்டு நிமிஷம் முழுசா கூட ஆகியிருக்காது யுகி புரிஞ்சிக்கோங்க… அதுக்குள்ளே அந்த கிறுக்கன் இவ்ளோ தீயா வேலை பார்ப்பான்னு எனக்கு என்ன தெரியும்?.. ஐய..அவன் வெறியன்… உங்களுக்கு தெரில… போங்க..போங்க…

அவள் ஓவரா சலம்பி எடுத்து துள்ள…

பயங்கரமா சிரிச்சுட்டான் யுகி…
அடக்கவே முடில…

ம்ம்..போங்க..அசிங்கப்பட்டது நான்தானே… நீங்க லா பேசுறீங்க… ம்ம்ம் ன்னு முகம் வாட்டமா வச்சுக்கிட்டு ரொம்ப பண்ண…

சும்மா பேசினாலே வினோவிடம் சிக்கி சீரழிவான்… இப்படி அபிநயித்து சொன்னதில் ரசனைகள் கூட சிரிப்பு முடிக்கமுடில…

யுகிக்கு…

வினு பண்ணிய கூத்தில் கார்த்தி மீது பரிதாபமே வந்துடுச்சு…

அவன் ஒரு தடவை தான் பொண்டாட்டிய தொட்டான்..

வினு 10 முறை பழி சொல்லி சொல்லி அவனைத்தான் டேமேஜ் பண்றா..0… haha

அக்கம் பக்கம் பார்த்து கிட்ட கிட்ட வாயேன்… கூப்பிட…

இந்த செய்கை வினுவுக்கு மூளையின் மூலையில் சிவப்பு விளக்கு ஒன்றை பட்டென்று போட்டு விட…

ஹாங் இதோடா இதோடா.. வரமாட்டேன் ..ஏதாச்சும் இடுப்ப தடவுவீங்க ..

அவள் இன்னும் தள்ளி போக…

ஜெம்ஸ் மிட்டாயா உடம்பு பூரா கலர் கலராய் இனிக்கும் வினு எனும் கிறுக்கு கோழியை இழுத்து பிடிச்சு தன் இதமான சூட்டில் இருக்கும் நெஞ்சோடு அணைத்து வைத்துக்கொண்டான்..

வீட்டின் பின் பக்கம் இடை வெளியில் இவர்கள் சந்திப்பு…

முந்தா நேத்து நாம் எப்படி இருந்தோம் ன்னு நினை வினு.. அந்த சூழ்நிலையை நிலா எவ்ளோ புத்திசாலியா கையாண்டா ன்னு யோசிச்சு பாரேன்…
இவங்கலாம் எவ்ளோவோ பரவாயில்ல… யுகியின் சுடு மூச்சு வினோவின் கழுத்தடியில் பட… நானா இருந்தா லைசென்ஸ் கிடைச்ச மறுநொடி … ஆளில்லாத தீவுக்கு உன்ன தூக்கிட்டு போய் எச்சி வச்சி பிச்சி பிச்சி ஊற வச்சி தின்பேன்… முழுக்க தன்னோடு பதிந்து கொண்டான்… அவள் எலும்புகள் இவன் சதையோடு அழுத்த… நாக்கால் அவள் கன்னத்தில் ஈரம் பண்ணி என்னென்னவோ செய்ய ஆண்மை தூண்டப்பட…

வினோ… விடுங்க… மறுவீடு போகணும் … உங்க கிட்ட சொல்ல வந்ததுக்கு அவன மாறியே பண்றீங்க… உங்க ஆட்டத்துக்கு நான் வரலப்பா…

வினு சாந்தமாகவே சொல்லி தள்ளி போக…

அவனுக்கு அவள் அருகாமை ஆபத்து தான்… ஆனால் அவளே காதலை தொடங்கினால் இன்பம்…
ஆசை தான்…

ஓய் லண்டன் காரா… வினோ தமிழ் பொண்ணுடா… தானா வரமாட்டா… ஆச தான்…உனக்கு….eee

நாமே என்றால் ராட்சசி ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டாள் … நேரே அவங்க அப்பாட்ட போட்டு கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை… அடக்கினான் ஆசைய…

இவளே காதல் செய்வாளா? நாம் தான் கத்து தரணுமா? பெரிய டவுட் வேறு எழுந்து ஆசை மனம்அவனை குழப்பியது…

அடுத்த நொடி… அவள் ஏதும் தரலேன்னாலும் வினோ எனும் குழந்தை மட்டும் எனக்கு போதும் அன்பு மனம் கனிந்து விட…

சரி போய்ட்டு வா…
ஆனா ஒரு முக்கிய எச்சரிக்கை… இது மாறி xxx கதையெல்லாம் என்கிட்ட சொல்லி மூட் ஏத்தக்கூடாது வினோ.. அப்புறம் முன்னே பின்னே ஏதாச்சும் ஆனா நான் பொறுப்பில்லை…

அடல்டா அவளிடம் பச்சை பேசி கண்ணடிக்க…

இல்லாட்டி நீ ரொம்ப நல்லவன் தான்… தனியா கிடைச்சா தடவுற…. பொறுக்கி எருமை வெள்ள பன்னி… போடா.. போடா.. வாயில் வந்ததையெல்லாம் திட்டி எடுத்து ஒரு கொணட்டு கொண்ட்டிட்டு போனாள் வினோ…

சும்மாவே நாலு ஆட்டம் போடுவாள்… இவனே வேப்பிலை கொத்து எடுத்து கொடுத்தா… விடுவாளா? eee

பாராட்டு மழையில் நனைந்தவனாய் உச்சி குளிர்ந்தான் அவளின் மானம் ஆப் இல்லாத காதலன்… யுகி.

நிலாவின் திருமணத்துக்கு பிந்திய சடங்குகள் சில பல கலாட்டாக்களோடு நிறைவேறி முத நாள் கார்த்தியின் சித்தி வீட்டில் இராத் தங்க ஏற்பாடு…

அவளை அங்கு விட்டு வந்த தகப்பனுக்கும் மகளுக்கும் அழுகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *