நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

நின் ஸ்பரிசம் தித்திக்குதே

நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

நின் ஸ்பரிசம் தித்திக்குதே…!!

தித்திக்குதே – 04 

 

தன்னுடைய உணவில் உப்பை அள்ளிக் கொட்டி வைத்ததன் கோபத்தில் மிளகாய்த் தூளை அவளுக்குக் கொடுத்தவன் அவள் இப்படித் துடிப்பாள் என சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை.

அவளுடைய உதடுகள் விழிகள் என அனைத்தும் சிவந்து அவள் எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாது கண்ணீர் வடிப்பதைக் கண்டு சற்றே பதறிப் போனான் அவன். 

தண்ணீர் குடித்தும் அந்த எரிச்சல் அடங்காது அவள் கதறித் துடிக்க ஐஸ்கட்டியை எடுத்து வந்து அவளுக்கு கொடுக்க முயன்றான் அவன்.

அவளோ அவன் மீண்டும் தன்னுடைய வாய்க்குள் மிளகாய்த் தூளைத்தான் கொட்டப் போகின்றானோ எனப் பயந்து விழிகளை இறுக மூடியவாறு அவனுடைய கரங்களைப் பிடித்துத் தடுக்க ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியாது அவளைத் தரையில் சரித்தான் அதியன்.

எப்படியாவது அவளுடைய அழுகையை நிறுத்தி விட வேண்டும் என்பதே அவனுடைய குறியாக இருந்தது.

அவளைத் தரையில் சரித்து ஐஸ் கட்டியை தன்னுடைய வாயில் வைத்தவன் அவளுடைய இரு கரங்களையும் தரையோடு அழுத்திப் பிடித்து தன்னுடைய இதழ்களில் இருந்த ஐஸ் கட்டியை அவளுடைய இதழ்களுக்கு கடத்தினான். 

அந்த ஐஸ் கட்டியின் ஜில்லிப்பு அவளுடைய இதழ்களின் எரிச்சலைக் கட்டுப்படுத்த அவளுடைய திமிறல் அடங்கியது.

ஆனால் அடுத்த நொடியே அதிர்ந்து தன் விழிகளைத் திறந்தாள் சிவன்யா.

மொத்தமாக தன் மீது படர்ந்திருந்த அதியனைக் கண்டு அவளுக்கோ உடல் தூக்கி வாரிப் போட்டது. 

இருவருடைய இதழ்களுக்கும் இடையே இருந்த ஐஸ்கட்டியோ இதழ்ச் சூட்டில் உருகிக் கரைந்து நீராக ஓடியே விட, இருவருடைய அதரங்களும் ஒன்றோடு ஒன்று அழுத்தமாக உரசிக் கொண்டன.

அந்த நொடி நேரத் தீண்டலில் உறைந்து போனான் அதியன். 

அவனுடைய விழிகள் தாமாக மூடிக் கொண்டன. அந்த மென்மையான உதடுகளின் தொடு உணர்ச்சியை உணர்ந்து சிலிர்த்து பின் பதறி விலகினான் அதியன்.

மிரண்டு விழித்தாள் சிவன்யா.

இதுவரை எந்த ஆணுடனும் அவள் இவ்வளவு நெருக்கத்தில் இருந்ததே இல்லை.

அதுவும் தன் மீது மொத்தமாக படர்ந்து தன் இதழோடு அவனுடைய இதழ்களை உரசியவாறு இருந்த அதியன் மீது அளவு கடந்த கோபம் தோன்றியது அவளுக்கு.

அவன் தன் மீதிருந்து பதறி விலகியதும் தானும் எழுந்து கொண்டவள் வேகமாக தன்னுடைய ஆடையை சரி செய்யத் தொடங்கினாள்.

“ஹேய் சா… சாரி ஐஸ் கட்டி வைக்கதான் ட்ரை பண்ணினேன்.. பட் ஐஸ் மெல்ட்டாகிருச்சு தெரியாம என்னோட லிப்ஸ்….” என அவன் தவிப்போடு கூறிக் கொண்டே செல்ல, அவனுடைய கன்னத்தில் பளார் என அறைந்தாள் சிவன்யா.

அதிர்ந்து நின்றான் அதியன்.

அவள் அறைந்ததில் அவனுடைய தேகமோ இறுகிப் போனது. உடல் விறைத்து அவளை அழுத்தமாகப் பார்த்தவன், “தப்பு பண்ணிட்டடி….” எனக் கர்ஜித்தான்.

“முதல்ல இங்க இருந்து வெளியே போ…‌” எனச் சீறினாள் அவள்.

அவளுக்கோ தேகம் படபடத்துக் கொண்டிருந்தது. இன்னும் தொண்டை எரிச்சல் அடங்காது போக அவனை எரிப்பது போல பார்த்தவள் வாயிலை நோக்கி கரத்தை நீட்ட அடுத்த நொடியே அங்கிருந்து வேகமாக வெளியேறினான் அதியன்.

அவன் சென்றதும் குளியலறைக்குள் ஓடிச் சென்றவள் முகம் வாய் என அனைத்தையும் கழுவி விட்டு தண்ணீரை எடுத்து மீண்டும் அருந்தினாள்.

மிளகாயின் எரிச்சலை விட அதியனின் உதடுகளின் உரசல்தான் அவளை அதிகம் தகிக்கச் செய்தது.

எவ்வளவோ தண்ணீர் அருந்தியும் எரிச்சல் தீராது போலத் தோன்ற தன் பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த பபிள்கம்மை எடுத்து மெல்லத் தொடங்கினாள் அவள்.

அதே கணம் தன்னுடைய அறைக்குள் நுழைந்த அதியனின் மனமோ தீயாய் கனன்று கொண்டிருந்தது. 

ஏதோ தான் வேண்டுமென்றே அவளை முத்தமிட்டது போல அல்லவா அடித்து விட்டாள். அவளுக்கு உதவத்தானே முயன்றேன் என எண்ணியவன் அவளை அடியோடு வெறுத்தான். 

இனி ஒருபோதும் அவளைச் சீண்டவும் கூடாது அவளை நெருங்கவும் கூடாது என்ற முடிவை எடுத்தவன் அவள் அறைந்த கன்னத்தை தடவிக் கொடுத்தான்.

எரிமலையாய் உள்ளுக்குள் வெடிக்கத் தொடங்கியது சீற்றம்.

‘எவ்வளவு தைரியம் இருந்தா என்னை அடிச்சிருப்பா…? நானும் திரும்ப அடிச்சுட்டு வந்திருக்கணும்…’ என எண்ணியவனுடைய பார்வையோ கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தில் நிலைத்தது. 

தன்னுடைய உதடுகளைப் பார்த்ததும் அவளுடைய இதழோடு உரசிய நொடி நினைவில் வந்து போக தேகம் சிலிர்த்தடங்கியது.

சட்டென தலையை உதறி அவளுடைய நினைவை தன்னில் இருந்தும் அழித்தவன் படுக்கையில் படுத்துக்கொண்டான்.

முதல்முறையாக ஒரு பெண்ணிடம் அடி வாங்கி இருக்கிறான். 

அந்த எண்ணமே அவனை ஏதோ செய்தது.

விழிகளை மூடி உறங்க முயன்றவனுக்கு உறக்கம் வரவே மாட்டேன் என அடம்பிடிக்க சட்டென அறையை விட்டு வெளியே வந்தவன் மொட்டை மாடி நோக்கிச் சென்றான்.

மாடிப்படிகளில் ஏறி மொட்டை மாடியை வந்தடைந்தவன் அங்கு சிவன்யாவின் குரல் கேட்டதும் சட்டென நின்றான்.

‘ஐயோ இங்கேயும் வந்துட்டாளா…? இவளால நமக்கு ஃப்ரீடம் இல்ல ச்சை….’ என எண்ணியவாறு மீண்டும் திரும்பி தன்னுடைய அறைக்கே செல்ல முயன்றவனின் கால்களை தடுத்து நிறுத்தியது சிவன்யாவின் அழுகைக் குரல்.

‘வாட் இந்த அடாங்காப்பிடாரி அழுறாளா…? அதுக்கெல்லாம் வாய்ப்பில்லையே…’ என எண்ணியவன் தன்னுடைய செவியை கூர் தீட்டினான்.

“ஏன் இப்படி பண்றீங்கப்பா…? என்னோட மனச புரிஞ்சுக்கவே மாட்டீங்களா..? ஒரு தடவையாவது என்கூட பேசணும்னு தோணலையா…? நான் கடல் கடந்து நம்ம நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு தனியா வந்திருக்கேன்… நான் நல்லா இருக்கேனா என்ன பண்றேன்னு கேட்கணும்னு கூடவா உங்களுக்குத் தோணல…? எப்போ பார்த்தாலும் பணம்தான் முக்கியமா..? நான் உங்களுக்கு முக்கியம் இல்லையாப்பா..?”

“……………..”

“ப்பா… ப்ளீஸ் இ.. இப்படிலாம் பேசாதீங்க… கஷ்டமா இருக்குப்பா….” என்றவள் விம்மி வெடித்து அழத் தொடங்கினாள். 

“………”

“ஐயோ…. ஏன் இப்படி இருக்கீங்க…? இத்தனை வருஷமா உங்ககிட்ட நான் ஏதாவது கேட்டிருப்பேனா..? அதை வாங்கிக் கொடுங்க… அதை பண்ணுங்க இதை பண்ணுங்கன்னு நான் எதுவுமே கேட்டதில்லையே…. உங்களோட அன்பை மட்டும்தானே கேட்கிறேன்…. அதைக் கூட எனக்கு கொடுக்க மாட்டீங்களா…?”  என அழுதவாறே பேசிக் கொண்டிருந்தாள் சிவன்யா.

அன்பிற்காக ஏங்கும் அவளுடைய வார்த்தைகளைக் கேட்டு ஒரு கணம் திகைத்து நின்றான் அதியன்.

மறுமுனையில் அவளுடைய தந்தை என்ன கூறினாரோ அவனுக்கு அது கேட்கவில்லை.  சற்றே எட்டிப் பார்த்தான் அவன். 

அவளோ தன்னுடைய ஒற்றைக் கரத்தால் வாயை மூடியவள் தேம்பிக் கொண்டிருந்தாள். 

அவளுடைய கரத்தில் இருந்த அலைபேசியோ மொட்டை மாடியின் தரையில் விழுந்தது.

அடக்க முடியாத வேதனையை கொட்டித் தீர்ப்பவள் போல அழுது கொண்டிருந்தவளை சில நொடிகள் இமைக்காது பார்த்திருந்தவனுக்கோ ஒரு மாதிரியாகிப் போனது. 

அவளுடைய அடாவடியான பேச்சை மட்டுமே இதுவரை கேட்டிருந்தவனுக்கு அவளுடைய அழுகுரல் நெஞ்சை பிசையச் செய்தது. 

பெண் என்றால் பேயும் இரங்குமாமே..!!

அதியன் இரங்க மாட்டானா என்ன..?

அடுத்த நொடியே மெல்ல அவளை நெருங்கிச் சென்றான் அவன்.

தனக்கு பின்னால் காலடி ஓசை கேற்பதை உணர்ந்து சட்டென தன்னுடைய கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டவள் வேகமாக பின்னால் தலையை திருப்பிப் பார்த்தாள்.

என்னதான் அவள் மீது மலையளவுக்கு சீற்றம் இருந்தாலும் கூட அந்த நொடி அவளை அப்படியே விட்டுச் செல்ல அவனுடைய மனம் இடம் கொடுக்கவில்லை. ஆதலால் அவளை நெருங்கிச் சென்றவன்,

“என்னாச்சு சிவன்யா..?” எனக் கேட்டான்.

“ந… நத்திங்.. நத்திங்… என்னோட போன் கீழ விழுந்திருச்சு அதைத்தான் எடுத்துக்கிட்டு இருக்கேன்…” என்றவள் தரையில் விழுந்த போனை குனிந்து எடுத்து விட்டு மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்.

அவள் அழுததை தன்னிடமிருந்து மறைக்கிறாள் என்பதை அக்கணம் உணர்ந்து கொண்டவன் எதுவும் தெரியாததைப் போலவே அவளை இன்னும்  நெருங்கிச் சென்றான்.

ஏனோ அக்கணம் அன்புக்காக ஏங்கும் சிறு குழந்தை போலத்தான் அவள் தெரிந்தாள். 

அவளுடைய குரல் உடைந்து ஒலித்ததிலேயே அவளுடைய மனநிலை புரிய அவளிடம் பேச்சுக் கொடுக்க முயன்றான் அதியன். 

ஆனால் அவளோ மெல்ல விலகி மாடியின் தொலைவுக்குப் போனவள் அங்கிருந்த கம்பியை இறுகப்பற்றிக் கொண்டாள்.

“என் பக்கத்துல வராத அதியன்..”

“ஏனாம்….?”

“வரக் கூடாது…” என்றவளின் குரல் மேலும் உடைந்தது. 

அவளைத் தொடர்ந்து பின்னால் சென்ற அதியனுடைய பார்வையோ கம்பியை இறுகப்பற்றியிருந்த அவளுடைய கரம் நடுங்குவதில் பதிந்தது. 

தன் புருவங்களைச் சுருக்கினான் அதியன். 

“உனக்கு சாக்லேட் பிடிக்குமா…?”

“ம்ம்…..” என்றாள் அவள்.

அவனோ தன்னுடைய  பாக்கெட்டினுள் கரத்தை நுழைத்து கனிக்காக வாங்கி வைத்திருந்த சாக்லேட் பாரை வெளியே எடுத்தவன் சாக்லேட் கவரை பிரித்து அதைக் கடித்தான்.

“செம டேஸ்டா இருக்கு..” எனக் கூறியவாறே அவன் சாக்லேட்டை உண்ணத் தொடங்க, சடாரென அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவளின் பார்வை அவனுடைய கரத்தில் இருந்த சாக்லேட்டில் நிலைத்து பின் மீண்டும் மறுபுறம் திரும்பிக் கொண்டது.

அவனோ மெல்ல அவளின் அருகே சென்று நின்று கொண்டவன் அவளை நோக்கி அந்த சாக்லேட்டை நீட்டியவாறு, “உனக்கு வேணுமா…?” என அவன் புருவம் உயர்த்திக் கேட்க, அவனை முறைத்துப் பார்த்தவள் “என்னைப் பாத்தா சாக்லேட்டுக்கு அலையுற மாதிரி தெரியுதா…? நான் உன்கிட்ட கேட்டேனா…?” என அவள் சற்றே காரசாரமாக கேட்டாலும் கூட அவளுடைய கரமோ சாக்லேட்டை நோக்கி நீண்டே விட்டது. 

சட்டென இதழ்களில் மலரத் துடித்த புன்னகையை பெரும்பாடு பட்டு அடக்கிக் கொண்டவன் “அப்போ வேணாமா…?” எனக் கேட்டான். 

“நீ இவ்வளவு ஃபோர்ஸ் பண்ணி கொடுக்கறதால வாங்கிக்கிறேன்…” என்றவள் அவன் கொடுத்த சாக்லேட் பாரை வாங்கி உண்ணத் தொடங்கினாள்.

அவளுடைய விழிகள் வெகுவாக சிவந்திருந்தன. கூந்தல் கலைந்திருந்தது.

“தேங்க்ஸ் அண்ட் சாரி….” என்றாள் அவள். 

“ஓஹ்…. பட் தேங்க்ஸ் எதுக்கு…? சாரி எதுக்கு…?” எனப் புரியாமல் கேட்டான் அதியன்.

“சாக்லேட் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்… ரூம்ல வச்சு உன்ன அடிச்சதுக்கு சாரி…” என்றாள் அவள். 

அவள் அடித்ததை நினைவுபடுத்தியதும் அவன் உடல் இறுகியது. 

“ஹேய் சாரி சாரி…” என்றாள் அவள்.

அவனோ பெருமூச்சோடு “நான் ஒன்னும் உன்னைக் கிஸ் பண்ண வரல… ஐஸ்கட்டியை கொடுக்கிறதுக்கு நீ என்னோட கையை விடவே இல்லை… அதனாலதான் அப்படிக் கொடுத்தேன்… மத்தபடி வேற எந்த தப்பான நோக்கமும் கிடையாது…” என தெளிவாக அவளுக்குப் புரிய வைத்தான் அதியன்.

“ம்ம்…. அப்போ புரியல… இப்போ புரியுது… சாரி அகைன்…” என்றாள் அவள். 

“நல்லா பேசுற….” என்ற அதியனின் இதழ்களோ புன்னகைத்துக் கொண்டன.

“நீ நல்லா சிரிக்கிற…” எனக் கூறினாள் அவள். 

அவளுடைய வார்த்தைகளில் அவனுடைய புன்னகையோ மேலும் விரிந்தது.

 

தித்திக்குதே – 05

 

இரவு நேரத்தில் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. தென்றலின் மென்மையான வருடலில் சிலிர்த்தவாறே தன்னுடைய கரங்களைத் தேய்த்துக் கொண்டவள் “கிளைமேட் நல்லா இருக்கு….” என்றாள்.

“அப்படியா என்ன….?” என அவளைப் பார்த்து புருவம் உயர்த்திக் கேட்டவன் தானும் தன்னுடைய விழிகளை மூடி தன் உடலில் மோதிய அந்த தென்றல் காற்றை ஆழ்ந்து உணர முயன்றான்.

“ஹேய் என்ன பண்ற நீ…?” எனப் புரியாமல் கேட்டாள் அவள்.

“நீ கிளைமேட் நல்லா இருக்குன்னு சொன்னேல்ல…. அதான் அதை ஃபீல் பண்ண ட்ரை பண்றேன்…” எனக் கூறியவனைப் பார்த்து பட்டென சிரித்தவள்,

“அதெல்லாம் தானா வரணும்…” என்றாள்.

“தானா வர்றதுக்கு அதென்ன வாந்தியா…?”

“உன்கிட்ட சொன்னேன்ல என்னை நானே திட்டிக்கணும்…”

“போடி…..”

“போடா….”

“ஏய் நீ போடி….”

“முடியாது நீ போடா…” என மறுபடியும் ஏட்டிக்குப் போட்டியாக பேசிக் கொண்டிருந்தவர்கள் சட்டென பேச்சை நிறுத்திவிட்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கினர்.

“ஹா…. ஹா….” 

“ஹா….ஹா…..”

“பழி வாங்க வந்ததெல்லாம் சரிதான்…. பட் நான் உன்னோட ப்ளேட்ல உப்பைத்தானே கொட்டினேன்…? அப்போ நீயும் என்னோட வாயில உப்பதானே போட்டிருக்கணும்…? எதுக்காக மிளகாய்த் தூளை போட்ட….? எவ்வளவு காரமா இருந்துச்சு தெரியுமா….? நாக்கு செத்துப் போச்சு…” எனக் குறைபட்டுக் கொண்டாள் அவள்.

“சாரிடி ரிவெஞ் எடுக்குற அவசரத்துல கையில கிடைச்சதை  எடுத்துட்டு வந்துட்டேன்டி…” என்றான் அவன்.

“உன் வேகம் எனக்கு சோகம்…” என விவேக்கின் குரலில் கூறினாள் அவள்.

“ஹா… ஹா.. ஹா… பல வித்தைகள கத்து வச்சிருக்க போல இருக்கே…. செம காமெடியா பேசுற…” என்றான் அவன். 

“இதெல்லாம் எனக்கு சப்ப மேட்டர் சால்ட்டு வாட்டர்…” என்றாள் அவள்.

“ஹா… ஹா… நல்ல சினிமா பார்ப்ப போல..?” எனக் கேட்டான் அவன்.

“பாக்குறதுக்காகத்தானே படம் எடுக்குறாங்க…. சோ பார்ப்பேன்…” என்றவளைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவன், “அம்மா தாயே என்னை விட்ரு…” என்றான் அவன். 

“நான்தான் உன்னை பிடிக்கவே இல்லையே…” என்றவளைப் பார்த்து மீண்டும் சிரித்தவன் “தூங்கலையா…?” எனக் கேட்டான். 

“தூங்கணும்…” என்றாள் அவள். 

“அப்போ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?” 

“அப்பா கால் பண்ணினார்…. அவர் கூட பேசலாம்னு வந்தேன்..” என்றவளின் குரல் சற்றே நலிந்து ஒலித்தது.

அவள் எப்படி பேசினாள் என்பதை அவன் தான் கேட்டானே.

“அம்மா கூட பேசலையா..? அப்பா கூட மட்டும்தான் பேசுவியோ..?” எனக் கேட்டவனை இமைக்காது பார்த்தவள்,

“அம்மா கூட பேசணும்னு ரொம்ப வருஷமா ஆசைப் படுறேன்… பட் அந்த ஆசை நிறைவேற வாய்ப்பே இல்லை.” என்றவள் விரக்தியாகச் சிரித்தாள். 

“ப்ச்… ஏன்…? ஆசைன்னா பேச வேண்டியதுதானே…?” எனக் கேட்டான் அவன்.

“அம்மா இறந்துட்டாங்க…. நானும் அப்பாவும் அக்காவும்தான்…. அக்கா மேரேஜ் பண்ணி நம்ம கனிய மாதிரியே ஒரு பேபி இருக்கு… நான் அக்கா வீட்லதான் இருக்கேன்…. அப்பா தனியா இருக்காரு…” என்றாள் அவள்.

“ஓஹ் சாரி….” என்றான் அவன்.

“இட்ஸ் ஓக்கே….” 

அவளுடைய குடும்பத்தைப் பற்றி பேசத் தொடங்கியதும் அவளுடைய முகம் முழுவதும் சோக மேகம் சூழ்ந்து கொள்ள சட்டென அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் அதியன்.

“ரொம்ப பசிக்குதுடி… பாவி உன்னால நான் சாப்பிடவே இல்லை…” என்றான் அவன்.

“ஹி… ஹி… உப்பில்லாப் பண்டம் குப்பைலன்னு சொல்லுவாங்கடா உனக்குத் தெரியாதா…?” எனக் கேட்டாள் அவள். 

“உப்பு கூடினாலும் குப்பைலதான்டி போடணும்…” என்றான் அவன்.

“ரொம்ப பசிக்குதா..?”

“வயிறு சத்தம் போட்டு கத்துது…” என்றான் அவன்.

“சாரி.. சாரி… நான் வேணும்னா கிச்சன்ல போய் ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா..?” எனக் கேட்டாள் அவள். 

“எதுக்கு இந்தவாட்டி மிளகாய்த் தூளைக் கொட்டுறதுக்கா…? நானே போய் பார்க்கிறேன்… நீ போய்த்  தூங்கு….” என்றான் அதியன். 

“தூக்கம் வரலை… நானும் உன் கூட வர்றேன்….” என்க, “சரி…” எனக் கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

நேரமோ இரவு பதினொன்றைத் தொட்டது. ஹால் முழுவதும் இருள் சூழ்ந்திருக்க தன்னுடைய போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்தவன் வழி தெரியாது தடுமாறிக் கொண்டிருந்தவளின் கரத்தை பற்றிக் கொண்டான்.

“ஏய் எங்கடி போற…? கிச்சன் இந்தப் பக்கம் இருக்கு..” எனக்  கிசுகிசுத்தான் அவன்.

“உங்க வீட்டுல கிச்சன் எங்க இருக்குன்னு எனக்கு எப்படிடா தெரியும்…? நீதானே கூட்டிட்டு போகணும்…” என சத்தமாகத் திட்டினாள் அவள்.

“அடியேய் சரவெடி… வாய மூடுடி… உன் சத்தம் கேட்டு அத்தானும் அக்காவும் எழுந்து வரப் போறாங்க…” என்றான் அவன். 

“சாப்பிடத் தானே போறோம்…. ஏதோ அடுத்தவங்க வீட்ல திருட போற மாதிரியே பிஹேவ் பண்ற… அடச்சீ கைய விடு…” என்றவளைப் பார்த்தவன்,  “அட ஆமால்ல….” எனச் சிரித்தான். 

“ஆமாவா…? இல்லையா….?” எனக் கேட்டாள் அவள். 

“அடப் போடி இம்சை…. அதுக்காக சத்தம் போட்டு அவங்களை எழுப்பிறாத… கனி எழும்பினா தூங்க மாட்டா….” என்றவன் அவளை சமையல் அறைக்குள் அழைத்துச் சென்றான். 

அங்கே அவனுடைய அக்காவோ இருந்த உணவு முழுவதையும் காலி செய்துவிட்டு பாத்திரத்தை கழுவி கவிழ்த்து வைத்திருப்பதைக் கண்டவனுக்கு “போச்சு இன்னைக்கு நைட் என் வயிறு கதறப் போகுது…..” என புலம்பினான் அதியன்.

“அச்சச்சோ… எதுவுமே இல்லை போலையே…. சோ சாட்…. பாப்பா நீ பசி தாங்குவியா…?” என அதியனைப் பார்த்து அவள் கேட்க அவளுடைய பேச்சில் அவனுக்கு சிரிப்பு பீறிட்டது.

“நான் உனக்கு பாப்பாவா…? மிட்நைட்ல காமெடி பண்ணாதடி.. சாப்பிடுறதுக்கு எதுவும் இல்ல… ஏதாவது ஸ்னாக்ஸ் இருக்கான்னு பாரு…” என்றவனைப் பார்த்து வேண்டாம் என தலையசைத்தவள் “நான் ஏதாவது பண்ணித் தரட்டுமா…?” எனக் கேட்டாள். 

அவளை மேலும் கீழும் பார்த்து வைத்தான் அவன்.

“இப்போ எதுக்குடா இப்படி பார்க்கிற…?” எனக் கேட்டாள் அவள். 

“இல்ல நீயும் நானும் இந்தியா பாகிஸ்தான் போர்ல வர்ற சோல்ஜர்ஸ் மாதிரி சண்டை போட்டுக்கிட்டோமே எப்போ நாம சேர்ந்தோம்…? எனக்காக சமையல் பண்ணி தரட்டுமான்னுலாம் கேட்கிறியே இதுல ஏதாச்சும் உள் குத்து இருக்கா….?” என சந்தேகமாகக் கேட்டான் அவன்.

“நீ எனக்கு சாக்லேட் கொடுத்தேல்ல… அதுக்கு பதிலா நான் உனக்கு சமைச்சுக் கொடுக்கிறேன்… ஆரம்பத்துல நான் உன்னை ரொம்ப திமிரு பிடிச்சவன்னு நினைச்சேன்… பட் பரவால்ல நீ கொஞ்சம் நல்லவன்தான்….” என்றாள் அவள்.

“நானும் உன்னை சரியான இம்சை பிடிச்சவன்னுதான் நினைச்சேன்… பட் கொஞ்சமே கொஞ்சம் நல்ல பொண்ணு மாதிரிதான் தெரியுற….” என்றான் அவன்.

“தேங்க்யூ…. தேங்க்யூ…” என தன் தலையைக் குனிந்து எழுந்தவள் ஏதோ பாராட்டு மழையில் நனைந்ததைப் போல பிகு செய்தாள்.

“ஆரம்பிச்சுட்டா இம்சை அரசி…” என்றான் அவன்.

“ஹி… ஹி… சரி உனக்கு ரொட்டி சுட்டு சம்பல் செஞ்சு தரட்டுமா…?” எனக் கேட்டாள் அவள்.

“ரொட்டியா…? அப்படின்னா சப்பாத்தியா..?” எனக் கேட்டான் அவன். 

“சப்பாத்தி மாதிரி ஊதி இருக்காது… இதுவும் மாவுல செய்யறதுதான் நாங்க கோதுமை மாவுல செய்வோம்….” என்றாள் அவள். 

“ஓஹ் ஸ்ரீலங்கன் ஸ்பெஷலா….?” எனக் கேட்க ஆம் என தலையசைத்தாள் அவள். 

“சரி பண்ணிக் கொடு….” என்க, அவளோ கோதுமை மாவை எடுத்து தண்ணீர் ஊற்றி பிசைந்து வட்ட வட்டமாகப் பிசைந்த மாவைத் தட்டியவள் தோசைக் கல்லில் ரொட்டி சுடத் தொடங்கினாள்.

“இந்த ரொட்டிக்கு தொட்டுக்க என்ன கிடைக்கும்…?” எனக் கேட்டான் அவன். 

“தேங்காய் சம்பல் பண்ணிக் கொடுக்கிறேன்….” என்றாள் அவள். 

“ஓகேடி…” என்றவன் அவனுடைய போனில் கேம் விளையாடத் தொடங்க, சட்டென அவனுடைய ஃபோனைப் பறித்து கீழே வைத்தவள்,

“இங்க நான் கஷ்டப்பட்டு வேலை பண்ணிக்கிட்டு இருக்கேன்…. உனக்கு கேம் கேக்குதா…? இந்த தேங்காயைத் துருவிக் கொடு…. வெட்டியாதானே இருக்க..?” என்றாள் அவள்.

“எதே தேங்காய் துருவனுமா..? அதெல்லாம் எனக்கு செஞ்சு பழக்கம் இல்லடி…” என மறுத்தான் அவன்.

“பரவால்ல இன்னைக்கு பழகிக்கோ…” என்றவள் தேங்காயை அவனிடம் திணித்துவிட்டு ரொட்டியை சுடத் தொடங்க, அவளைத் திட்டியவாறு தட்டுத் தடுமாறி அவள் கேட்டதை செய்து கொடுத்தான் அவன்.

“அந்த உப்பு டப்பாவை எடு….”

“இந்தா…”

“அந்த செத்தல் மிளகாயை எடு….”

“ஷப்பா முடில…”

“டேய் சீக்கிரமா எடுத்துக் கொடுடா…”

“இருடி தர்றேன்…”

“எலுமிச்சம்பழம் வேணும்டா…”

“பிரிட்ஜ்ல இருக்கு எடுத்துக்கோ….” என்றான் அவன்.

“டேய் நீயே எடுத்துத்தா….”

“ஏய் பசிக்குதுன்னு சொன்ன பாவத்துக்காக என்னை வெச்சு செய்றியாடி….?” என சலித்துக் கொண்டவன் அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தான். 

“டேய் வெங்காயம்…”

“யாரைப் பார்த்து வெங்காயம்னு சொல்ற…?” எகிறினான் அவன்.

“டேய் பன்னி அந்த வெங்காயத்தை எடுன்னு சொன்னேன்…” 

“ஓஹ்… சரி…”

“டன் இப்போ சம்பல் ரெடி பண்ணினா ஓகே…”

“மிக்ஸில அரைச்சிடலாம்…” என்றான் அவன்.

“நோ… நோ… டேஸ்ட் நல்லா இருக்காது.. உரல்ல இடிச்சா செமயா இருக்கும்… அந்த குட்டி உரல் உலக்கையை எடுடா…”

“அடியேய் இதுல இடிச்சா டொங்கு டொங்குன்னு சத்தம் கேட்கும்டி…”

“அதெல்லாம் கேட்காது…” என்றவள் உரலில் தேங்காய்ச் சம்பலை இடித்து முடித்து விட்டு நிமிர அதியனோ அசையாது சிலை போல நின்றான்.

“அதியா மிட் நைட் சமையல் ரெடி டொட்டொடொய்ங்….” என்றவாறு திரும்பியவள் சமையல் அறை வாயிலில் நின்ற ரதியையும் நிரஞ்சனையும் கண்டு அதிர்ந்து பின் நெளிந்து அத்தனை பற்களையும் காட்டி இளித்து வைத்தாள்.

“சோலி முடிஞ்ச்….” என முணுமுணுத்தன அதியனுடைய உதடுகள்.
💜💙💙💜

தித்திக்குதே – 06 
 
சமையலறையில் ஏதோ சத்தம் கேட்டு முதலில் விழித்துக் கொண்ட ரதியோ பயந்தே போனார். 
திருடன்தான் வந்து கதவை உடைக்கின்றானோ என எண்ணியவர் பதறியவாறு நிரஞ்சனைத் தட்டி எழுப்பினார்.
நிரஞ்சனோ தூக்க கலக்கத்தில் “டார்லுக்குட்டி என்னடா தங்கம்…” என்றவாறே ரதியை அணைத்து முத்தமிட முயல பட்டென நிரஞ்சனின் கரத்தில் கிள்ளி வைத்தார் ரதி.
அதில் சட்டென விழித்துக் கொண்டவர் அதன் பின்னரே ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து ரதியை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவர் சமையலறையின் மின் குமிழ் ஒளிர்வதைக் கண்டு புருவம்  சுருக்கினார்.
“நீ இங்கேயே இரு… நான் போய் பாத்துட்டு வர்றேன்…” எனக் கூறியவாறு முன்னே சென்று பார்த்த நிரஞ்சனுக்கோ விழிகள் விரிந்தன.
சத்தம் இன்றி திரும்பி ரதியை கையைசைத்து தன்னருகே அழைத்தார் அவர். 
ரதியோ புருவங்களைச் சுருக்கியவாறு வேகமாக நிரஞ்சனின் அருகே வந்து நின்றவர் உள்ளே எலுமிச்சம்பழத்துடன் நின்ற தன் தம்பியைக் கண்டு அதிர்ந்தார் எனின் அவனுக்கு அருகே தரையில் அமர்ந்து உரலில் இடித்துக் கொண்டிருந்த சிவன்யாவைக் கண்டு திகைத்தே நின்று விட்டார். 
அதே கணம் அவர்கள் இருவரையும் முதலில் கண்ட அதியனுக்கோ தூக்கி வாரிப் போட்டது. பனியில் உறைந்த சிலை போல அப்படியே அசையாமல் நின்றான் அவன்.
அதன் பின்னரே சிவன்யாவும் அவர்களைக் கண்டவள் அதிர்ந்தவாறு தட்டோடு எழுந்து நிற்க, முதலில் உள்ளே நுழைந்த ரதியோ “இந்த மிட் நைட்ல ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க….?” எனக் கேட்டார். 
சிவன்யாவோ பதில் கூற முயல சட்டென அவளைத் தடுத்த அதியனோ தான் பதில் கூறத் தொடங்கினான்.
“பசிக்குதேனு கிச்சன் வந்தேன்… எதுவுமே இல்லை திரும்பிப் போகலாம்னு பார்த்தா இவளுக்கும் பசின்னு இங்கே வந்தா…. நான் சாப்பாடு முடிஞ்சுன்னு சொன்னேன்… அவ ஸ்ரீலங்கன் ஸ்டைல்ல சாப்பாடு பண்ணித் தரேன்னு சொன்னா… நானும் அதுக்கு ஆசைப்பட்டு அப்படியே இருந்துட்டேன்…. இதுதான் அக்கா நடந்துச்சு…” என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினான் அதியன்.
‘ஓ மை காட் என்னமா உருட்டுறான்….’ என எண்ணினாள் சிவன்யா.
“சரி சரி பண்ணினதை எடுத்துட்டு வாங்க எனக்கும் பசிக்கிற மாதிரிதான் இருக்கு…” என்றான் நிரஞ்சன். 
“ஹாவ்….. சம்பல் வாசனை தூக்குதே… நானும் உங்க கூடவே சேர்ந்து சாப்பிடுறேன்…” என்றாள் ரதி. 
“சூப்பர் சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க அக்கா…” என்றாள் சிவன்யா.
அதியனுக்கோ திக் என்று இருந்தது. 
‘’ஐயோ எல்லாரும் சேர்ந்து என் ரொட்டியை சாப்பிட்டு முடிச்சிடுவாங்க போல இருக்கே… நாம முந்திக்குவோம்…’ என எண்ணியவன் அவள் சுட்டு வைத்த ரொட்டியில் இரண்டை தூக்கிக்கொண்டு சம்பல் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு தன் அறை நோக்கி ஓடத் தொடங்க, அவனை மடக்கிப் பிடித்து அனைத்தையும் பறித்து எடுத்த நிரஞ்சனோ டைனிங் டேபிளில் பரிமாற வசதியாக எடுத்து வைத்தார்.
“வாங்க எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம்…” எனக் கூறிய அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் நள்ளிரவு நேரத்தில் சிவன்யாவின் ரொட்டியையும் தேங்காய்ச் சம்பலையும் அனைவரும் பகிர்ந்து சுவைத்து உண்ணத் தொடங்கினர்.
அவள் செய்த உணவோ மிக சுவையாக இருக்க, அனைத்தையும் உண்டு முடித்துவிட்டு திருப்தியாக புன்னகைத்தார் நிரஞ்சன்.
அதியனுக்கு வயிறு நிறைந்த பின்பும் கூட இன்னும் ரொட்டி வேண்டும் போலிருக்க பாத்திரத்தை எட்டிப் பார்த்தான் அவன். 
“ரொட்டி சாப்பிட்டது போதும் போடா…” என்றார் ரதி. 
“நீங்க வரலைன்னா எஎல்லாத்தையும் நானே சாப்பிட்டுருப்பேன் மிஸ் ஆயிடுச்சு…” என்றான் அதியன்.
அதன் பின்னர் சற்று நேரம் அனைவரும் உரையாடிவிட்டு உறங்கச் சென்றுவிட, அதியனோ சிவன்யாவைப் பார்த்து “தேங்க்ஸ் டி…” என்றான்.
“தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேணாம்… நாளைக்கு வேற பிளேவர்ல சாக்லேட் வாங்கி கொடு..” என்றாள் அவள். 
“வாங்கிக் கொடுத்துட்டா போச்சு…” என  சிரித்தவன் அவளோடு பேசியவாறே மாடிப்படிகளில் ஏறினான். 
“உன்கூட இப்படி சிரிச்சுப் பேசுவேன்னு நினைக்கவே இல்லடா…” 
“நானும்தான்….” என்றான் அவன்.
“ம்ம்…”
“உன்னோட ஃபோனைக் கொடு…” எனக் கேட்டான் அதியன்.
அவளோ தன்னுடைய அறைக்குள் சென்று அவளுடைய அலைபேசியை எடுத்து வந்தவள் அவனிடம் கொடுக்க அதில் தன்னுடைய எண்ணை சேமித்து வைத்தவன் அவளுடைய அலைபேசி எண்ணையும் தன் ஃபோனில் சேமித்துக் கொண்டான்
“இதுல என்னோட நம்பர சேவ் பண்ணிருக்கேன்… ஏதாவது அவசரத்துக்கு யூஸ் ஆகும்…. ஓகே இப்போ போய்த் தூங்கு…. குட் நைட்….” எனக் கூறிவிட்டு அவன் செல்ல, 
“குட் நைட் அதியா…” எனப் புன்னகைத்தவள் கதவை பூட்டிவிட்டு படுக்கையில் சென்று அமர்ந்தாள்.
எப்படியோ ஆரம்பித்த அவர்களுடைய உறவு இப்போது சற்றே சுமூகமாக மாறியதை எண்ணி அவளுக்கோ வியப்பாக இருந்தது.
மூன்று மணி நேரத்துக்கு முன்பு அவன் மீது கொலை வெறியில் இருந்தவள் இப்போது அவனை எண்ணி சிறு புன்னகையை உதிர்த்து விட்டு உறங்குவதற்குத் தயாரானாள்.
அவள் படுக்கையில் படுத்து விழிகளை மூடிய ஐந்தாவது நிமிடம் அவளுடைய அலைபேசி ஒலித்தது.
இந்த நேரத்தில் தன்னை யார் அழைப்பது என எண்ணியவாறு அலைபேசியை எடுத்துப் பார்த்தவளுக்கு உடல் விதிர்விதிர்த்துப் போனது.
“அம்மா காலிங்..” என அழைப்பு வருவதைப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். 
தான் எந்த எண்ணையும் அம்மா என சேவ் பண்ணவில்லையே என எண்ணியவளுக்கு எதுவும் புரியவில்லை. 
சற்று நேரம் ஃபோனையே வெறித்துப் பார்த்தாள் அவள். 
அவளுடைய அலைபேசியோ விடாது அழைத்துக் கொண்டே இருக்க கரங்கள் நடுங்க அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள் சிவன்யா. 
“ஹலோ… யா… யாரு….?”
“ஹலோ….” என்றான் அதியன்.
“டேய் நீயா….?”
“எப்படி இருக்க சிவுக் குட்டி…?” என்ற அதியனின் குரலில் அவளுக்கோ அப்போதுதான் அனைத்தும் புரிந்தது.
அவனுடைய எண்ணை அம்மா என சேமித்து வைத்திருக்கிறான் என்பது புரிய ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவள்,
“டேய் இது உன்னோட வேலைதானா…? என்னடா பண்ணி வச்சிருக்க..? எதுக்காக   உன்னோட நம்பரை என் ஃபோன்ல அம்மான்னு சேவ் பண்ணி வச்சிருக்க இடியட்…” என அவள் கத்த,
“அடியேய் சரவெடி… நான் சொல்றத நல்லா கேளு… உங்க அம்மா கூட பேசணும்னு ஆசைப்பட்டேல்ல…. இப்போ பேசலாம்…” என்றான் அவன்.
“ப்ச் விளையாடாதடா….”
“விளையாடலடி…. சீரியஸ்ஸா சொல்றேன்… என்னை உன்னோட அம்மாவா இமாஜின் பண்ணிக்கோ ஓகேவா…? இப்போ  அதியனை மறந்துடு… உன்னோட அம்மாவ மட்டும் நெனச்சுக்கோ…”
“பட்….”
“ப்ச் நான் சொன்னதை பண்ணும்மா… முதல்ல கண்ணை மூடு…” என்றவன் மீண்டும் தன்னுடைய குரலை சற்றே மென்மையாக மாற்றி “எப்படி இருக்க குட்டிம்மா…?” எனக் கேட்க, அவளுக்கோ உள்ளுக்குள் அனைத்தும் உடைந்து நொறுங்குவதைப் போல இருந்தது. 
விழிகளை மூடிக்கொண்டவள் அவனுடைய குரலைத் தன் அன்னையாக உருவகப்படுத்திக் கொள்ள முயன்றாள் 
“குட்டிம்மா… எப்படி இருக்கம்மா..?”
“நா… நான் நல்லா இருக்கேன் மா… நீங்க எப்படி இருக்கீங்க..?” எனப் பேசத் தொடங்கினாள் அவள்.
“நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன்மா… ஏன் தெரியுமா…?”
“ஏ…. ஏன்….?” எனக் கேட்டவளுக்கு தொண்டை அடைத்தது.
“நான்தான் உன்னை அடிக்கடி மேலே இருந்து பாத்துகிட்டே இருக்கேனே… அதனால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…”
“ம்மா.. ம்மா….” வார்த்தை வராது தவித்தாள் அவள்.
“நீதான் சில நேரத்துல அழுகுற… நீ அழுறது எனக்குப் பிடிக்கல… இந்த அம்மாக்காக இனி நீ எப்பவுமே அழக்கூடாது…” என்றதும் அவளுக்கு சட்டென விழிகளில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
“உன்னை அழக் கூடாதுன்னு சொன்னேன்….” என அன்னையாக  அதட்டினான் அதியன்.
“ச…. சரிம்மா… சரிம்மா… உங்க சிவு அழலை…” என வேகமாகத் தன் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் அவள்.
“என் சிவு சமத்துப் பொண்ணு…” என்றதும் அக்கணம் அவளோ அனைத்தையும் மறந்தாள். 
தன்னுடன் பேசிக் கொண்டிருப்பது அதியன் என்பது மறந்து போக தன்னுடைய அன்னைதான் பேசுவதாக நம்பியவள் அந்தக் குரலுக்கு கட்டுப்பட்டு உரையாடலை அன்போடு விதைத்தாள்.
“மிஸ் யூ மா… உ… உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்… ஏன் என்னை விட்டுட்டுப் போனீங்க..? நீங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு உங்களுக்குத் தெரியுமா…?” என அழு குரலில் பேச மறுப்பக்கம் அலைபேசியை பிடித்திருந்த  அதியனுக்கு நெஞ்சம் பிசையத் தொடங்கியது. 
விளையாட்டாகத்தான் தொடங்கினான். ஆனால் அவள் உண்மையாகவே மனம் விட்டுப் பேசுவதை உணர்ந்து தன்னுடைய போனை இறுகப் பற்றிக் கொண்டவனுக்கு அவள் குழந்தை போலத்தான் தெரிந்தாள்.
“இனி நீ எப்பவுமே அழக்கூடாது சிவும்மா… நான் எப்பவுமே உனக்குத் துணையா இருப்பேன்…” என்றான் அதியன். 
“நி… நிஜமாவா…? எப்பவுமே என்கூட இருப்பீங்களா..?” எனக் கேட்டாள் அவள். 
“சத்தியமா உன் கூடவே இருப்பேன்..” என்றான் அவன். 
“ம்மா… எ… எனக்கு இங்கே தனியா வாழப் பிடிக்கலம்மா… நா… நானும் உன்கூடவே மேல வரட்டுமா…?” என உள்ளம் உருகும் குரலில் அவள் கேட்டதும் அதிர்ந்தான் அவன்.
“ஏய் இடியட் என்னடி பேசுற நீ….?” என தன் நிஜக் குரலில் அதட்டினான் அதியன்.
அதில் தன் சுயம் அடைந்தவள் அடுத்த கணம் சட்டென அழைப்பைத் துண்டித்தாள். 
ஏனோ உடல் நடுங்குவதைப் போல இருக்க அருகே இருந்த தலையணையை இறுகணைத்து அதில் முகம் புதைத்தவள் தன்னுடைய அன்னையை எண்ணி அழத் தொடங்க, அதியனோ தன்னுடைய அறையில் சிவன்யாவை எண்ணிக் கவலையோடு உறக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தான்.
அவள் பேசியது சில வார்த்தைகளாக இருந்தாலும் கூட அதில் வெளிப்பட்ட அவளுடைய வலிகள் ஏராளம் என்பதை அறிந்து கொண்டான் அவன்.
அவன் பார்த்த பெண்களில் அவள் வேறு விதம் என்பது புரிந்தது.
அவள் ஏங்கும் அன்பை தன்னால் முடிந்த அளவு அவளுக்குக் கொடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டவன் அப்படியே உறங்கிப் போனான்.
சிவன்யாவோ சற்று நேரத்தில் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு தெளிந்தவள் அதியனின் எண்ணுக்கு மெசேஜ் டைப் பண்ணத் தொடங்கினாள்.
“என்னோட பல வருஷ ஆசைய இன்னைக்கு நிறைவேற்றி வெச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அதி…. ரொம்ப தேங்க்ஸ்….” என டைப் செய்து அவனுக்கு அனுப்பி வைத்தாள்.
மனதில் சற்றே மகிழ்வு படர்ந்தது. 
ஏனோ அக்கணம் அதியனை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அவசரப்பட்டு அழைப்பைத் துண்டித்து விட்டோமே என எண்ணிக் கவலை கொண்டவள் விடிந்ததும் அவனுடன் பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தூங்கிப் போனாள்.
💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *