நான் உனை நீங்க மாட்டேன்

நான் உனை நீங்க மாட்டேன்

நான் உனை நீங்க மாட்டேன்

நான் உனை நீங்க மாட்டேன்

நான் உனை நீங்க மாட்டேன்

நான் உனை நீங்க மாட்டேன்

“அய்யோ எப்படியோ

நடந்து வந்தாச்சு டி”

 என்று இருவரும் கோரஸாக சொல்வதன் மூலமே பாதையின் நீளத்தினை அறியலாம்.

காலை வெயில் தமது அறையின் வழியாக முகத்தில் மோதும் போதே இருவரும் ஆரப்பறக்க எழும்பி லெக்சர்ஸ்கு சென்றனர் .

தமது இருக்கையில் அமர்ந்து ஹியுமோன் ரிஸோர்ஸ் மெனேஜ்மென்ட் பாடத்தை அவதானித்தனர் இருவரும் .

அந்த வேளையில் நம்ம ஹீரோ கௌதமன் தன் நண்பர்களுடன் இணைந்து வந்து, லெக்ஷரிடம் தமது யூனியன் எலக்க்ஷனுக்கு பிரச்சாரம் செய்வதற்கான அனுமதியினை தருமாறு கேட்டதன் பின்பு . அவனின் பண்பிலும், நன்நடத்தையிலும் கவரப்பட்டதால், 

லெக்சரரும் அனுமதி வழங்கினர் .


நம்ம லாவண்யாவோ, 

இவனுக்கு இப்படி சிரிக்கவெல்லாம் தெரியுமா என்று . தன் கடந்த கால எண்ணங்களுடன் போரிட்டு, 

நான் ஏன் அவனை பற்றி நினைக்க வேண்டும் .என்று மனதிற்கு முற்றுப்புள்ளி இட்டாள். 

“ஹெலோ !!!!!   ; 

ஜூனியர்ஸ்

நான் உங்க சீனியர் கௌதமன். 
உங்களுடைய பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்ண விரும்பல்ல” , 

“நேரடியாவே விடயத்திற்கு வந்துடுறேன். 
அடுத்த மாதம் நம்ம யுனிவசிடியின் எலக்ஷன் நடக்க போகுது
அதுல நானும் ஒரு வேட்பாளரா இருக்குறேன்” . 

“அதனால எனக்கு உங்க ஆதரவு கட்டாயம் தேவை நண்பாக்களே . நான் எப்பவும் உங்கள் குரல்களின் எதிரொலியாய் இருப்பேன்” .

என்று நம்ம ஹீரோ சொன்னதுமே …. கை தட்டும் ஓசை இரண்டு காதையும் பிய்த்துக் கொண்டு எல்லா இடத்திலும் கேட்டன .

நம்ம ஜூனியர்ஸ்ல ஒருவர் எழும்பி சீனியர் அண்ணா எங்க ஆதரவு எப்பவும் உங்களுக்கு தான் என்றான் ..

நீங்க தான் எங்களை செகன்ட் இயரிடம் இருந்து ரெகிங்ல மாட்டிக்காம காப்பாத்தனீங்க .

அதனால நாங்க நேற்றே மீடிங் போட்டு உங்கள தான் பிரசிடன்ட் ஆக்கனும் என்று முடிவெடுத்தோம் அண்ணா ….

என்றவுடன் மீண்டும் பலத்த கை தட்டல் கிடைத்த போது நம் நாயகியின் காதில் மீனா, 

“அடி லாவண்யா யாருடி இந்த ஹீரோ செம்ம ஹேன்சம்” , 

“என்னம்மா உயரம் ஒரு ஆறடி உயரம் இருக்கும் தானே”? 

“செம்ம ஆளுடி”… .. 

“லவ் பண்ணுற என்றா இவன மாதிரி ஒருத்தன தான் காதலிக்கனும்”. 

அதே நேரம் நம்ம லாவண்யாவும் நம்ம ஹீரோவ தான் சைட் அடிச்சு கொண்டு இருந்தாள் . 

பாவம் நம்ம மீனாக்கும் , யாழினிக்கும் தான்  ஒன்றுமே தெரியாதே!!!!!!?? 

” சரி” !!!!!?! 

” சரி” !!!!!!!!! வாடி போகலாம்”. 
“இப்பதான் ஒரு பிரேக்கே கிடச்சதே அந்த கெப்பில் வா நாம கெண்டீனுக்கு போகலாம் “.

என்றாள்

பொறாமையின் உச்ச கட்டத்தில்  லாவண்யாவும்,

யாழினியும் , மீனாவும் மட்டும் தான் கௌதமனின் புராணத்தை படிப்பாங்கன்டு நினைச்சா . 

இங்க முழு பெகல்டியுமே கௌதம் கௌதம் என்று கதக்கிறாங்களே என்று – லாவண்யா அலுத்து கொண்டாள்…………… …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *