நளிர் தென்றல் நீயடி

This entry is part 3 of 3 in the series நளிர் தென்றல் நீயடி

நளிர் தென்றல் நீயடி

நளிர் தென்றல் நீயடி

நளிர் தென்றல் நீயடி

நளிர் தென்றல் நீயடி

நளிர் தென்றல் நீயடி

நளிர் தென்றல் நீயடி

நளிர் தென்றல் நீயடி

நளிர்-35

ஒரு வாரம் கழித்து, 

அவள் இல்லாத உலகம்… நீரில்லாத உலகமாக வறண்டு போய் இருந்தது. 

அவள் இல்லாத இரவு… காற்றில்லாத இரவாக… மூச்சு முட்டித் தவிக்க வைத்தது. 

அவள் இல்லாத தனிமை… அது பெரும் கொடுமையாகவும் இருந்தது. 

அவள் முகத்தைப் பார்த்தால்.. தன்னை குற்றவுணர்வுத் தாக்கிக் கொன்று விடுமோ என்று அஞ்சி… அவளை துரத்தி விட்டவன்… இப்போது காலம் கடந்து மனம் வாடி நிற்கும் நிலையும் உண்டாயிற்று!! 

யாதவ் தனது படுக்கையறையின் பால்கனியில் நின்று.. அதன் திட்டில் கைவைத்த வண்ணம்…. தூரத்தே வானத்தின் அந்திமக் கோடியில் மறைந்து கொண்டிருக்கும்… சூரியனின்… அஸ்தமனத்தை… நேரேமே போவது அறியாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 

அவன் கண்களில் கருந்திரையில்… தகதகவென எரிந்து கொண்டிருந்த சூரியனின் வர்ணஜாலங்கள்  பிரதிபலித்துக் கொண்டிருந்தது. 

அக்கணம் அவன் சிந்தையைக் கலைக்கும் வண்ணம் புறமுதுகின் பக்கமிருந்தும் கேட்டது தாயின் குரல்!! 

“யாதவ்!!” என்று தாயழைத்த அழைப்பில்… நடப்புக்கு வந்தவன்… தாயை நோக்கி தன் மொத்த தேகத்தையும் திருப்பினான்.

 அவன் வதனம் கண்டு உள்ளுக்குள் பகீரென்ற ஒரு எண்ணம் தோன்ற பதறிப் போனார் அவன் தாயார்!! 

அவன் நின்றிருந்த தோற்றம் அப்படி!! 

முகத்தில் ஷேவ் செய்யப்படாத ஏழு நாள் தாடி!! 

அடர்ந்து காணப்பட… விழிகளில் பிரகாசம் என்பதே இன்றி… வெறிச்சோடிப் போன விழிகளுடன் காணப்பட்டான் அவன்!! 

அதிலும் அவன் நயனங்கள் சிவந்திருப்பதைக் கண்டு… அவன் திரும்பவும் ஏதேனும் போதைவஸ்துக்கள் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டானா?

தாய்க்குள் ஒரு கேள்வி வந்து போக… தனயனின் கோலம் பார்த்து.. நெஞ்சு அடித்துக் கொண்டது. 

விழிகள் விரிய திகைத்து நின்றிருந்தார் அவர்!! 

தனயனைப் பார்த்து திகைத்துப் போன குரலில், “என்னடா இது கோலம்?? கண்ணெல்லாம் செவந்து போச்சு…?? திரும்பவும்… டிரக்ஸ் ஏதும் யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீயாடா?” என்று கேட்டவர்.. அத்தோடு விட்டாரா அவனை!! 

அவன் அணிந்திருந்த ஜம்ப்ரின் பாக்கெட்டுக்குள் எல்லாம் கையிட்டுத் துலாவித் துலாவி.. அவனை முன்னும் திருப்பித் திருப்பி… எதையோ கையிட்டுத் தேடலானார் அவர்!! 

அவனோ தாய் திருப்பும் திசையில் எல்லாம் திரும்பிக் கொண்டே அவரை நோக்கி, 

“என்னம்மா பண்றீங்க…. சொல்லிட்டு பண்ணுங்க” என்று கேட்டு..ஏதும் புரியாமல் விழிகள் இடுங்க நின்றான்.

“ம்ம்??என்ன பண்றேனா?? எங்க டிரக்ஸ் ஒளிச்சு வச்சிருக்க… வெளியில் எடு… அம்மா சொல்றேன் வெளியில் எடு… எடுங்கறேன்ல??” என்று அவன் போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதாய் எண்ணிக் கூறினார் அவர்!! 

அவனோ.. முறைக்கும் தாயை நோக்கி சமாதானப்படுத்தும் நோக்கில்,

 “அம்மா நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்ல… நான் டிரக்ஸ் விட்டு பல வருஷமாச்சு… “என்றான் அவன். 

மனைவி இல்லாத தனிமைத் துயரில் தான் இப்படி இருக்கிறான் என்று எப்படி சொல்வான் தாயிடம்!! 

“அப்போ ஏன்டா கண்ணு இப்படி சிவந்திருக்கு??” என்று அவன் தாடியடர்ந்த கன்னத்தை அதிரடியாகப் பற்றி.. அப்புறமும், இப்புறமும் திருப்பி… அவனது சிவந்த கண்களை ஆய்ந்த வண்ணமே கேட்டார் அவர்!! 

“டிரக்ஸ் அடிச்சா மட்டுமா கண்ணு சிவக்கும்???” என்றவன்… சற்றே முணுமுணுக்கும் குரலில்,” பொண்டாட்டி பக்கத்துல இல்லேன்னாலும் தான் கண்ணு சிவக்கும்” என்று வாய்க்குள்ளேயே ஏதேதோ சொல்லி முடித்தான் அவன். 

அவன்.. நாடு முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் நிறுவனங்கள் பல வைத்திருந்தாலும்.. தாயிடம் தன் கெத்தைக் காட்ட முடியாமல் மழலையாய் தவிக்கிறான்!! 

அவன் முணுமுணுப்பின் ஒருபாதி தாயின் செவிகளுக்கும் விழுந்து விடவே… அப்போது தான் ஏழுநாட்களாக இல்லாத மருமகளின் விரகதாபம் முற்றிய மகனின் நிலையே இது என்று புரிந்தது. 

இருவருக்குள்ளும் இன்னும் ஏதோ பேசித் தீர்த்துக் கொள்ள முடியாத ஊடல் என்று அவருக்கு தெரிந்தது. 

 தனயனே மருமகளை வீட்டை விட்டு அனுப்பி வைத்த கதை அறியாமல்… திட்டிக் கொண்டே போனார் அவளுக்கு. 

“நீ இங்கேயிருக்க… உன்னை தனியா விட்டுட்டு… அங்கே அம்மா வீட்டுல என்னடா… அவளுக்கு வேல??.. நானும்… இப்ப வருவா வருவான்னு காத்திருந்தா… ஏழு நாளாச்சு… இன்னும் ஆள காணல.. அம்மா வீட்டுல டேரா போட்டுரலாம்னு ஐடியாவா உன் பொண்டாட்டிக்கு?? ஃபோன போடு… இதுக்கு தான் எம் பையன கட்டி வைச்சேனான்னு… நல்லா கேட்டுர்றேன்… எங்கே அந்த ஃபோனு..”என்று புத்திரனின் காதலில் தவித்துப் போகும் இதயம் பொறுக்க மாட்டாமல்.. படபடவென பட்டாசாகப் பொறிந்து தள்ளிக் கொண்டே போனார் அவர்.

போதாக்குறைக்கு…அவளுக்கு அழைப்பெடுத்து.. திட்ட வேறு அவர் திட்டம் வைத்தவாறே.. அவனின் அறைக்குள் நுழைந்து.. டிராயர் மீதிருந்த செல்லை எடுக்கவும் ஆயத்தமானார்!! 

இவனோ தாயின் அதிரடி தாங்க மாட்டாமல்… “அம்மா.. அம்மா…. ப்ளீஸ் மா… உன் பையன் சொல்றதையும் கேளு..அம்மா…”என்ற வண்ணம்… தாயின் பின்னாடியே…. குழந்தையாய் போனவன்… அவர் செல்லை எடுக்க விடாமல் கரம் பற்றி தடுத்து நிறுத்தியிருந்தான். 

“டேய் விட்றா…”என்று சினந்தவருக்கு.. அடுத்து பேசும் போது அவன் மேலுள்ள புத்திர பாசத்தினால்.. கண்கள் கலங்கி நாவு தழுதழுத்துப் போனது. 

“எ… எனக்கிருக்கறது ஒரே பையன்… உன்னை இப்படியான கோலத்தில் பார்க்கவா கல்யாணம் பண்ணி வைச்சேன்…நீ..சந்தோ.. ஷமா.. இருக்கணும்னு தானேப்பா… நீ ஆச.. ப்பட்ட பொண்ணயே கல்யாணம் பண்ணி வைச்சேன்??” என்று கேட்டார் அவர். 

தலையைத் தாழ்த்திக் கொண்டே குற்ற உணர்வு ததும்பிய குரலில் பதில் சொன்னான் அவன். 

” திட்டணும்னா என்னைத் திட்டும்மா… உன் மருமகள இங்கேயிருந்து அனுப்பி வைச்சது நான்..”என்று ஒருவாறு தன் குட்டு தன் வாயாலேயே வெளிப்படுத்தி நின்றான் அவன். 

ஆம், அவளை அவன் தாறுமாறாகத் திட்டியிருந்தாலும் கூட… தன் மனையாளைத் தன் தாய் திட்ட நாடுவதையும் பொறுக்க மாட்டாமல்.. உண்மையெல்லாம் அவரிடம் செப்பியிருந்தான் அவன். 

புதல்வனின் தீராத சோகம் சிந்தும் கண்கள்… மனையாள் வீட்டை விட்டு அனுப்பப்பட்டது அத்தனை பெரிய உவப்பாய் இல்லை என்று உணர்த்திக் கொண்டிருந்தது!! 

உணர்ச்சிவசத்தில்… அவளை இல்லம் விட்டும் அனுப்பி வைத்து விட்டு.. இப்போது அவளோடு இணையவும் முடியாமல், வெறுத்துத் தள்ளவும் முடியாமல்.. அவன் அவஸ்தைப்பட்டு நிற்பதுவும் புரிந்தது. 

“உங்க ரெண்டு பேருக்குள்ளும் ஏதோ நடந்திருக்கு… என்கிட்ட பொய் சொல்ல முயற்சி பண்ணாத… ஏன்டா அவள “என்” வீட்ட விட்டு அனுப்பிச்ச..? என் மருமகள… என் வீட்ட விட்டு அனுப்ப… உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?? ”என்று அவர் பேசிக் கொண்டே போக… அவரை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசவில்லையே அவன்!! 

அவரின் சுடுசொற்களையும், கோபத்தையும் பொறுமையாக வாங்கிக் கொண்டு நின்றான். 

அவள் இல்லா வலியை… உள்ளுக்குள் போட்டு மறைத்துக் கொண்டு.. உணர்ச்சி துடைத்த பாவனையுடன் நின்றிருந்தான். 

வாயை மூடி நிற்கும் மகனைக் கண்டதும்… மூன்று வயது குழந்தையில் தவறு செய்து அகப்பட்டு.. 

திட்டும் போதும்… இதே போல அப்பாவியாய் நின்றிருக்கும் குழந்தை யாதவன் ஞாபகம் தான் வந்தது. 

இவரோ… சீற்றம் தணிந்து.. அவன் தோளை வருடிக் கொடுத்தவராகவே தொடர்ந்தார். 

“எந்த உறவுல தான் பிரச்சினை இல்ல கண்ணா?? எல்லா உறவிலும் இருக்கு… அதுக்காக… அதை விட்டு ஓடிடணும்னு கிடையாதுடா.. உங்களுக்குள்ள ஏதோ நடந்திருக்கு… எனக்குப் புரியுது… நானும் அந்த வயச கடந்து வந்தவ தான்.. ஆனா பிரச்சினைய ஹேன்டில் பண்ற மெத்தட் இது இல்லடா…முதல்ல அவ பேசட்டும்.. அவளா வரட்டும்னு திமிரோட சுத்துறது… கூடாது.. திருமணம்ன்றது புனிதமான பந்தம். அதில் நாளுக்கு நாள் அன்பு தான் வளரணும்.. ஈகோ கிடயாது??”என்று தன் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைக் கூப்பிட்டு… அருகில் இருத்தி.. கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்லலானார்!! 

அவனிடமிருந்து எந்த பதிலும் வராது போகவே… தனயனின்.. திடகாத்திரமான தோள்புஜம் பற்றி மெல்ல உலுக்கினார். 

” டேய் சூர்யா… நான் சொல்றத கேட்டுட்டு இருக்கேல்ல??” என்று சந்தேகத்துடன் கேட்டார். 

“எஸ் மா.. ஐ ஆம் லிஸினிங்!! ” என்ற வார்த்தையோடு நிறுத்திக் கொண்டவன்.. தாய்க்கு அடங்கிப் போகும் பிள்ளையாய் அமைதியாய் நின்றான். 

அவனது தாயோ.. தீவிரமான வதனத்துடன், “இப்போ மணி ஆறு… அடுத்த சூரிய அஸ்தமனம் வர்றதுக்குள்ள… என் மருமக… என் வீட்டுல இருந்தாகணும்.. அதுக்காக நீ என்ன பண்ணுவீயோ… ஏது பண்ணுவீயோ எனக்கு தெரியாது.. அவள் கால்ல விழுந்தாலும்.. இட் டஸ் நாட் மேட்டர்.. ஐ டோன்ட் கேர்… அவ கூட வர்றதுன்னா… வீட்டுக்கு வா… இல்ல அம்மாவப் பார்க்க வராத..அப்டியே சந்நியாசியா போயிரு.. “என்று கட் அன்ட் ஸ்ட்ரைட்டாக கூறி முடித்தவர்… தன் மகனை நிமிர்ந்தும் பாராமல் ராஜமாதா சிவகாமி தேவி போன்ற தோரணையுடன் நின்றிருக்கலானார்!! 

நம் பாகுபலியும்.. போய் தன் தேவசேனாவை அழைத்து வருவானா?? 

தன்னை, ‘இனி ஒருபோதும் காண வராதே’ என்ற தாயின் சொற்கள் வலி தந்தாலும்.. மனையாளை வீட்டுக்கு அழைத்து வருவது பற்றி சங்கோஜம் அவனுள் மிகையாக எழுந்தது. 

எல்லாவற்றையும் விட… அவனுள் இருக்கும் காதல்க்காரன் தலைத்தூக்கிப் பார்த்தான்.

தன்னவளின் மதிவதனம் கண்டுவிடத் துடித்தது அவன் நாடி நரம்பு எல்லாம்!! 

“சரிம்மா… கூட்டி வர்றேன்… உனக்காக!! ” என்று தாயின் மனம் குளிர வைக்க அவன் சொன்னாலும் கூட… அதில் அவன் சுயநலம் பெரும்பாலும் ஒளிந்திருந்தது. 

அடுத்த நொடி… க்ஷண நேரத்தில் தயாராகி… கார் சாவியை எடுத்துக்கொண்டு… அவள் வீட்டை நோக்கிப் போன போது… அவளோ அவள் வீட்டினரோ இல்லை. 

” குடும்பத்தோடு மணாலியிலுள்ள ராதா-கிருஷ்ணன் கோயில்” சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது!! 

என்ன ‘மணாலியிலுள்ள ராதா-கிருஷ்ணன் கோயிலா?’ 

அவன் மீளவும் மணாலி செல்வானா?

 நளிர்-36

கல்லூரியில் மலையேற்றத்தின் போது.. அவன் காதல் பகிர்ந்து கொண்ட கோயில் அது! 

அப்போது உச்சி ஏறிப் போகக் கூட கடினமாயிருந்த கோயில்.. இந்த நான்கு வருடங்களில் எவ்வளவோ பெரிய மாற்றங்களைக் கண்டிருந்தது!! 

கற்பாறைகள் ஏறி வரவேண்டிய இடங்கள் எல்லாம் சீராக்கப்பட்டு.. தற்போது தார் சாலையும்… கோயிலின் படிகள் வரைப் போடப்பட்டிருந்தது.

 கீர்த்தனைகளும், தீபாராதனையும்.. இருபத்து நான்கு மணி நேரமும் கிருஷ்ணனுக்கும், ராதைக்கும் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. 

பக்தர் கூட்டமும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது ஒரு பக்கம். 

ஒருபக்கம் கோயில் பிரசாதத்திற்கான வரிசை சென்றிருந்தது இன்னொரு பக்கம். மறுபுறம், அன்ன தானத்திற்கான வரிசை சென்றிருந்தது!! 

நம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சாவூர் கோயில் உற்சவ நேரங்களைப் போல.. அத்தனை கோலாகலமாக மிளிர்ந்திருந்தது கோயில்!!! 

அங்கே தன் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரோடு வந்திருந்தாள் நேத்ரா.

 சோகமே உருவாய்.. அங்கிருந்த கோயில் மண்டபத் தூணில்… அமைதியான முகத்துடன் அமர்ந்திருக்கலானாள்.

என்ன தான் அவனை விட்டும் ஓடத் துடித்தாலும்.. இந்தப் பாழாய்ப்போன மனம்… அவன் நினைவுகளை…. ஓயாமல் இந்த ஏழு நாட்களும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. 

இதோ.. இது அவன் காதல் சொன்ன கோயில் அல்லவா?? 

உச்சிக்கு ஏகி நாகரத்தினம் வைத்து.. வானில் வர்ணஜாலம் காட்டி.. “ஐலவ் யூ” என்று ஊருக்கே அல்லவா தன் காதல் சொன்னான் அவன்?? 

இப்போது பிரபலமாகியிருந்த அக்கோயிலின் புற்றில் உள்ள நாகரத்தினை…. யாராலும் அவ்வளவு சுலபமாக எடுக்க முடியாது. 

கண்ணாடிப் பெட்டியில்… அடைத்து வைக்கப்பட்டு கோயில் தர்மகர்த்தாவால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

வருடத்துக்கு ஒரேயொரு பூரணையின் போது மாத்திரம்… உச்சிக் கோபுரத்தில் வைக்கப்பட்டு… முழு மணாலியுமே ஒட்டுமொத்த ஒளி வெள்ளத்தில்.. மூழ்கும் வண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டு… பிரதிஷ்டையும் செய்யப்படுகிறது!! 

அத்தனைப் புனிதமாக கருதும் அளவுக்கு… நாக இரத்தினத்தின் மதிப்பும்.. ஏறிப் போனது. 

அதனைப் பார்க்க உலகின் பல கோடியில் நின்றும் பக்தர்கள் அந்த ஒற்றைப் பூரணை நாளில் திரண்டு வரலாயினர்!! 

இந்தத் தகவல்கள் எல்லாம்… இப்போது தன் குடும்பத்தினர் சகிதம் வந்திருப்பவள்… அறிந்து கொண்ட புதுத்தகவல்கள்!! 

கோயில் மண்டபத்தூணில் அயர்வாக முதுகு சாய்த்து அமர்ந்திருந்த நேரம்… அவள் பக்கத்திலே தங்கை சசிரேகா வெண்பொங்கல் பொட்டலத்துடன் அமர்ந்த.. அரவம் கேட்டது. 

இருந்தாலும் அவள் தலைத் தூக்கிப் பார்க்கவேயில்லை தங்கையை!! 

அன்புத் தங்கையோ, “இதோ பாருக்கா… உனக்கு பிடிச்ச வெண்பொங்கல்…. ம்ம்… எப்படியிருக்குன்னு சாப்பிட்டுப் பாரு…”என்று கையில் பொட்டலத்தைப் பிரித்தபடி தமக்கையிடம் சொன்னாள் அவள். 

அவளோ வேண்டா வெறுப்பாக விட்டேற்றியான குரலில், “எனக்கு ஏதும் வேணாம்… நீ சாப்பிடு”என்று  இளைய சகோதரிக்கு பதிலளித்தாள். 

“அப்படிலாம் வேணாம் சொல்லக்கூடாதுக்கா…. காலையிலயும்… எதுவும்.. சாப்பிடல.., இப்போ இதையும் சாப்பிடல… என்னதான் உன் பிரச்சின..?? ”- தன் தமக்கை  மீதான அக்கறை சசிரேகாவின் குரலில் தெள்ளத் தெளிவாக ஒலித்தது. 

“ம்ப்ச்சு.. என்ன இது?? சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்கற… பசிக்கல… பிடிக்கல… இதுல என்ன பிரச்சின..??”- ஆர்வமில்லாமல் பதிலளித்தாள் நேத்ரா. 

தங்கை ரேகாவோ… சின்னப் புன்னகையுடன் விழிகள் பளிச்சிட வாய் திறந்தாள். 

“எனக்கு தெரியும்… என்ன பிரச்சினைன்னு, நீ மாமாவ மிஸ் பண்ணுற.. உன்னைப் பார்த்தால புரியுது… வீட்டுக்கு வந்த ஏழு நாள்லேயும்.. நீ நீயாவே இல்ல… அவ்ளோ அவர் மேல காதல்னா… மாமாவுக்கு கால் பண்ணி பேச வேண்டியது தானே.. யார் உன்ன வேண்டாம்னு சொல்லிடப் போறா??” என்று தமக்கையின் வாயில்… ஒரு கவளம் வெண்பொங்கலை அள்ளிப் போட்டு ஊட்டிக் கொண்டே சொன்னாள். 

இறுதியில் எப்படியோ.. தமக்கைக்கு ஒரு வாயாவது ஊட்டிவிட்ட பெருமிதத்தில்… பளிச்சிட்டு மலர்ந்திருந்தது ரேகாவின் முகம்!! 

தனக்கு ஊட்டி விட்டு மலரும் தன் தங்கையின் பரிவில்… மனம் தள்ளாடியது.

அவள் கண்ணீர் மல்கி நிற்கும் ஒரு வலி மிகுந்த புன்னகையுடன் அவளைப் பார்த்தாள்!! 

‘மாமாவுக்கு பேசு பேசு’ என்று நச்சரிப்பவள்… இந்த சோகத்தின் காரணகர்த்தாவே அவன் தான்.. என்னும் நிஜம்.. அவளுக்கு தெரிந்தால்?? 

தங்கை முகத்தில் இன்பம் முளைக்குமா?’ என்று அவள் மனதுக்குள் நினைத்தாள்.

அழைத்தால் பேசுவானா?? ‘போ’ என்றவன்.. இரு கரம் நீட்டி அவளை அணைத்துக் கொள்ளவும் கூடுமா?? 

“அப்பா உன்னை கூப்பிடுறாரு போல… போ.. போய் என்னான்னு கேளு” என்று.. அழையாத அப்பாவைக் காட்டி.. தங்கையை.. தந்தையின் புறமாக அனுப்பி வைத்தாள் அவள். 

கோயில் மண்டபத்தில் நின்றும் சற்றே தலை நீட்டி எட்டி.. கர்ப்பக் கிரகத்தில் நின்றிருக்கும்… பகவானையும், தூய காதலியையும் பார்த்தாள் அவள். 

ஏனோ அவள் கண்களில் கண்ணீர் பெருகி நின்றது!!! 

ராதையும்… கோகுலத்தின் கண்ணனோடு இணைந்தும்.. இணைய முடியாமல் நின்றாள்.!! அது போலத் தான் அவள் நிலையும். 

‘இந்த கோயில் வந்து.. நாகரத்தினம் எடுத்து உச்சியில் வைத்தால்.. தடைகள் தாண்டி காதல் கைகூடும் என்பது ஐதீகம்!! 

அந்த ஐதீகம் பொய்த்துப் போனதா மதுசூதனா??

“என் காதல் அவனுக்குப் புரியவேயில்லையா?? “என்று பகவானைப் பார்த்து மானசீகமாகக் கேட்டுக் கொண்டவளின் இமையோரம் நின்றும் நீர் வழிந்தது. 

மறுகணம்.. கர்ப்பகிரகத்தின் முன்னிருந்த இராட்சத இரும்பு மணி.. எதிர்பாராமல்.. சுழன்றடித்த காற்றில்…” டான் டான் !!”என்று  ஒலித்தது!! 

அவள் மனம் உருகி செய்த பிரார்த்தனையும் … இறைவனால் ஏற்கப்பட்டதுவோ?? 

அங்கே துகள் துகளாக பனித் தூறிக் கொண்டிருக்க… ஆயிரம்படிகள் கொண்ட கோயிலின் படிக்கட்டுகளை எல்லாம் தடதடவென அசுர வேகத்தோடு கடந்து ஏறி வந்து கொண்டிருந்தான் அவன்!! 

அவளின் ஆசை நாயகன் சூர்யக்குமார் யாதவ்!! 


இங்கே.. அவனில் நின்றும்..  சில மீட்டர் தொலைவில் அவள்!

அன்றும்.. அவள் தன் காதலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காக.. கொட்டும் பனியில்… குத்தும் இராத்திரியில்… இதே கோயிலேறி போனான்!! 

அலுப்போ.. களைப்போ… எந்தவிதமான உடல் நோவினையும் அவனுக்குத் தெரியவில்லை. 

அதே போல இன்றும்… ஆயிரம் படிகளாக இருந்த போதும்… அவளைக் கண்டு விட வேண்டும் என்ற அசுர வேகத்தில்… தடதடவென மாடிப்படியேறி போனான். 

அப்போதும்… அவனுக்கு எந்தவிதமான உபாதைகளும் தோன்றவேயில்லை. 

அவளைக் கண்டாக வேண்டும் என்ற காதல் தந்த வெறி…அவனுள் பத்துத் தலை இராக்ஷசனான ராவணனின் பலத்தையும் கொடுத்தது போலும்!!! 

ஒவ்வொருபடிகள் தாவித் தாவி.. அவன் தன்  தொடைத் தசை நார்கள் தளர்ந்து இறுக.. ஏறிக் கொண்டே போனான் நில்லாது!!! 

அவன் நெற்றியில் வியர்வை எட்டிப் பார்த்தாலும் கூட… அதையெல்லாம் உதாசீனம் செய்தவனாக… கடகடவென ஏறிக் கொண்டே போனான் அவன்!!! 

சென்னையிலிருந்து மணாலிக்கு.. தன் சொந்த விமானம் மூலம் இரண்டு மணித்தியாலங்களில் எல்லாம் வந்து சேர்ந்திருந்தான் யாதவ். 

தன் செல்வ வளமையை உபயோகித்து.. குறுகிய காலத்தில்… மணாலி இறையில்லம் வரை வந்து சேர்ந்து விட்டிருந்தான் அவன்!! 

அவளிடம் போய் பேச அவனுக்கு தைரியம் வரவில்லை தான். 

இருப்பினும் அவனால் உடைத்து நொறுக்கப்பட்ட அவள் இதயத்துக்கு மருந்தும் அவன் அல்லவா?? 

அவன் பிரிவினால் வலித்துக் கொண்டிருக்கும் அவள் இதயத்தினை.. குணப்படுத்த அவன் வேண்டும்!! 

அவளைக் காணத் தடையாக இருந்த அத்தனை தளைகளையும் தகர்த்து எறிந்து… அவள் கன்னம் தாங்கி… மிருதுவான பிறை நுதலில்… எச்சில் தோய முத்தாடவும் வேண்டும்!! 

அவள் அருகே முழுவதும் சரணடைந்து மன்னிப்பு யாசகமும் கேட்க வேண்டும்!! 

நெஞ்செல்லாம் எழுந்த காதலில்… மனம் தள்ளாடிப் போக… கண்கள் கலங்க… மாடிப்படியேறலானான் அவன்!! 

கனத்த இதயத்துடன்… காதல் தந்த அசுர வேகத்தில்… கோயிலின் தளத்தினை அடைந்திருந்தான். 

கூட்டத்திற்குள் நுழைந்து.. அங்கிருந்த அத்தனை இளம்பெண்களிலும், ‘தன் மனையாள் எங்கே?’ என்று விழிகள் தழுவித் தழுவித் தேடினான் அவன்!! 

அக்கணம்.. அவனது புறமுதுக்குப் பின்னர் இருந்து… ஒரு குரல் அவன் பெயரை… குழப்பத்துடன் அழைப்பது புரிந்தது. 

அது, அவனது அத்தை… அவளின் தாயார் பரிமளா தேவி!! 

“சூர்யா… நீ  இங்கே என்னப்பா பண்ற??” என்று சற்றும் முன்னறிவிப்பு இல்லாமல் தன் மருமகனைப் பார்த்துக் கேட்டார். 

அவர்கள் தல தரிசிப்பிற்காக வந்த புண்ணிய இடத்தில் இருப்பதைப் பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனார் தாயார்.

அவனுக்கோ தன் அத்தையைக் கண்டதும் சின்ன மகிழ்வு தோன்றி மறைந்தது. 

அவரோடு மணாலி வந்திருக்கும் தன் மனையாள்… அவர் பக்கத்தில் தானே நின்றிருக்கக் கூடும்?? 

சின்ன நப்பாசை இதயமெல்லாம் ஊடுறுவியது.

 தன் மாமியாரைப் பாராமல்… அவரைச் சுற்றி இருக்கும் புறத்தில் எல்லாம்… தன் விழிகளை அங்குமிங்கும் ஓடவிட்டு…. தன்னவளை  காதல் மீதூறத் தேடினான் அவன்!! 

தன் கேள்விக்கு எந்த பதிலும் வராமல் போனதையும், அவன் அங்குமிங்கும் விழிகளை உருட்டி.. யாரோ தேடுவதையும்… அலைக்கழிப்புடன் நிற்பதையும் பார்த்திருந்தார் அத்தை. 

அத்தைக்கு… தன் வீட்டு மாப்பிள்ளை யாரைத் தேடுகின்றான் என்று புரியாமலா போகும்?? 

அவன்.. தன் மகளை எப்படியெல்லாம் நடத்தினான் என்று பரிமளா தேவி தெரிந்து கொள்ளும் பட்சத்தில்… அவனைப் பற்றி என்னவெல்லாம் இழிவாக எண்ணக்கூடும்?? 

ஆனால், நேத்ரா யாரிடமும் இதுபற்றி வாய் திறவாதலால்… அவனைப் பற்றி எந்த தப்பெண்ணங்களையும்  அவனின் அத்தை கொண்டிருக்கவில்லை என்பது உண்மை!! 

அத்தையோ அவன் கோயில் அளவும்… வந்திருப்பதன் நோக்கம் புரிந்து கொண்டவராக… உள்ளூற ஒரு புஞ்சிரிப்புடனேயே தன் மருமகனுக்கு பதிலிறுக்கலானார் அவர். 

“ஓ….நீ… நேத்ரா தேடி வந்திருக்க… ஆம் ஐ கரெக்ட்…. அவ கோயில் மண்டபத்துல இருக்கா…. வாப்பா…”என்று அவனை அழைத்தவராக.. கோயில் மண்டபம் நோக்கி நகர முற்பட்டார் அவர். 

அவனுக்கு புறமுதுகிட்டு.. ஒரு அடி எடுத்து வைத்த தாயின் நடையை நிறுத்தும் வண்ணம் கேட்டது.. யாதவ்வின்.. குற்றவுணர்வு ஊசலாடும் குரல்!! 

“அத்த… நான்.. உ.. உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்” என்று அவன் இறுக்கமான தொனியில் கூற… அவரும் மெல்லமாகத் திரும்பி… நிதானமாக அவனின் விழிகளை ஏறிடலானார். 

என்றுமே இல்லாமல் .. இறுகிக் கறுத்துப் போன முக தோரணையில்.. கண்கள் சிவக்க நின்றிருக்கும் மருமகனின் கோலம்… எதுவோ ஒன்று சரியில்லை என்பதை உணர்த்தியது. 

இருந்தாலும் அதை ஒரு சிறிதும் வெளிக்குக் காட்டாமல், 

“ம்ம்… என்னப்பா சொல்லணும்??” என்று தன் சொந்த புத்திரனைப் பார்ப்பது போல மிருதுவான விழிகளுடன் கேட்டார் அத்தை. 

ஏதோ.. உணர்ச்சித் ததும்பிய வேகத்தில்… ‘பேசவேண்டும்’ என்று சொன்னவனுக்கு… அவர் காது தாழ்த்திக் கேட்க தயாராக இருப்பதைக் காணவும்… ஏனோ வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்குண்டு போனது. 

பொங்கி எழும் ஆதங்க உணர்வுகளை  அமைதிப்படுத்த ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவனாக.. தன் மனத்தில் இருப்பதை… சட்டென போட்டு உடைத்தான் யாதவன்!! 

“அத்த… நேத்ரா குழந்தையோட அப்பா ..வேற யாருமில்ல.. அது நான் தான்… அது.. என்.. குழந்த அத்த…”என்று உணர்ச்சி வசத்தில் சொன்னவன்… அதற்குப் பின் வரப்போகும் எந்த பின்விளைவாக இருந்தாலும் சரி.. அதை ஏற்க அவன் சித்தமாக இருந்தான்!! 

அவர் அதிர்ந்து நிற்கக் கூடும்!!

 ‘மகள் வாழ்க்கையை அழித்து விட்டாயே பாவி’ என்று கத்தக் கூடும்!! 

கோயிலென்று பாராமல்… காலர்ப் பிடித்து அடிக்கக் கூடும்!! 

என்னென்னவோ எதிர்பார்த்து நின்றான் அவன்!! 

ஆனால் அவரோ… அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவராக.. சிறு புன்னகையுடன், சொன்னார். 

“எனக்குத் தெரியும்ப்பா… “என்ற வார்த்தைகளை உதிர்த்து.. அவனைத்  திகைப்படைய வைத்து நின்றார்!! 

அவன் தனது முதுகுத்தண்டில் ஜிலீரென்ற ஓர் உணர்வு பாய்ந்து பரவுவதை.. தன்னுள்ளே உணர்ந்தவனாக… அத்தையை வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தான்.  

ஒரு தாய் தன் மகனைப் பார்த்து அன்புடன் சிரிப்பது போல… தன் மருமகனைப் பார்த்து அத்தனைக் கனிவன்புடன் சிரித்தார் பரிமளா தேவி!! 

“உ.. உங்களுக்கு எப்படி தெரியும்மா??” என்று தன் தொண்டையில் இருந்து வந்த  வார்த்தைகளைக் கோர்க்கக் கடினப்பட்டுக் கொண்டே கேட்டான் அவன். 

தன் புதல்வி வாழ்க்கையை திருமணத்துக்கு முன் சீரழித்த கொடூரன் தன் முன்னே இருக்க.. இத்தனைப் பெரிய… ஆசுவாசத்தை அவருள் தந்தது எது?? 

மணாலி கோயிலின் தெய்வீகமான சூழலா??

 இறைவனிடத்தில் தன்னைக் கொடுத்து வழிப்பட்ட பக்குவமா?? 

அவரோ வலி மீதூறும் புஞ்சிரிப்புடன்.. “நேத்ரா என்க்கிட்ட  எதுவும் சொல்லல… நானும் அவள… கட்டாயப்படுத்தல… எனக்கு இப்போவும் கூட நம்பிக்கையிருக்கு.. அவ மேல அசைக்க முடியாத நம்பிக்க… என் மக எந்தவிதமான தவறான வழிக்கும் போயிருக்க மாட்டாள்னு.. ஆனா இளமையில்… சின்ன தவறு நடக்கலாம்… அதுவும் சகஜம் தான்… எல்லா இடத்திலும் நடக்கறது தான்… இயல்பு!! இயற்க… “என்று… ஞானம் கண்ட ஞானியைப் போல பேச.. அவரின் தெளிந்த அறிவில்.. மயிர்க்கால்கள் எல்லாம் கூச்செறிய நின்றான் அவன்!! 

யாதவ் தன் அத்தையின் சொற்களை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

 அப்போது தான் அவர் இரகசியம் அறிந்த வழிமுறையைச் சொன்னார்!!


“எல்லா வரன்களையும் வேணா வேணாம்னு தட்டிக்கழிச்ச என் பொண்ணு.. உன்ன கட்டிக்க மட்டும் சந்தோஷமா தலையாட்டும் போது லைட்டா டவுட் இருந்தது… ஆனா… அவ டைரிய ஒரு நாள் எதேர்ச்சையா பார்த்தேன்.. அதுக்காக.. என் பொண்ணு டைரிய நான் வாசிச்சேன்னு சொல்லல… டைரி கவர் பின்னாடி… உன்னோட அழகான ஸ்கெட்ச் இருந்தது… அதைப் பார்த்த அன்னிக்கே… நீ தான் குழந்தையோட அப்பான்னு ஊர்ஜிதமா தெரிஞ்சிக்கிட்டேன்ப்பா..” என்று தன் பேச்சை  முடித்துவிட்டு அங்கே பேசாமல் கண்கள் கலங்கிப் போனவனாக நின்றிருந்தவனைப் பார்த்தார். 

ஒரு குடும்பத்தின் உண்மையான கௌரவமே…அவ் இல்லத்தின் பெண்பிள்ளை தான்!! 

அதனை குலைத்த குற்றவுணர்வு அவனுள் எழுந்து.. அலைக்கழித்தது.

அவரின் பாதங்களைத் தொட்டு, “என்னை மன்னிச்சிருங்கமா” என்று சொல்ல… அவரோ தடுமாறிப் போனார். 

“ஐயோ என்னப்பா நீ??? என்கால பிடிச்சிக்கிட்டு” என்றவர் அல்லாடி நிற்க.. தன் முழு உயரத்துக்குமாக நிமிர்ந்து நின்று… தன் அத்தையைப் பார்த்தான் அவன். 

அவரோ.. அன்பொழுகப் பார்த்தவராக, “என் மகளோட விதி இப்படித்தான்னு எழுதப்பட்டிருந்தா… யாரால மாற்ற முடியும்… உங்க ரெண்டு பேருக்கும் இடையில என்ன நடந்துச்சு….எதனால பிரிஞ்சீங்கன்னு தெரியல… ஆனா என் பொண்ணு… ஒரு நல்ல மனுஷன தன் லைப் பார்ட்னரா சூஸ் பண்ணியிருக்கான்னு மட்டும் தெரியுது… அதுலயும் உங்க அம்மா ஜெயாவைப் பார்த்தப்றம்… என் பொண்ணு.. குடுத்தவ வைச்சவன்னும் தோணுது…”என்று  அவன் தோளை… வாஞ்சையுடன் வருடியவராகச் சொன்னார். 

தன் தாய் போன்ற பெண்மணியின் கரங்களைப் பற்றியவன்… தழுதழுத்த குரலில், 

“உங்க பொண்ணோட.. வாழ்க்கையில் ஒவ்வொரு அணுவிலேயும்… இன்ப துன்பத்திலேயும்…அ..வ பக்கத்துல நான் இருப்பேன்னு… கடவுள் சந்திதானத்துல ப்ராமிஸ் பண்றேன் அத்த…. சத். சத்தியம் பண்றேன்” என்று அவன் சொல்ல… இன்பமாய் மலர்ந்தது அவர் முகம்!! 

“எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு.. என் மகள… எங்களை விட நீ நல்லா பார்த்துப்பேன்னு… “என்றவர்… ஆதுரமாக…  அவனது கைகளில் தன் விரல்களை அழுத்தி… இலேசாகத் தட்டிக் கொடுத்தவரின் செயல்களில் மிளிர்ந்திருந்தது தாய்மை!! 

விழியோரம் பூத்த கண்ணீரை.. தன் புறங்கையால் துடைத்து விட்டவராக.. அத்தையோ…

 “இப்போ நீ …என்னை சமாதானப்படுத்த வந்தீயா… இல்ல அவள சமாதானப்படுத்த வந்தீயா…?? போ… போய்… அவள… சமாதானப்படுத்து…!” என்று தன் மகளும், மருமகனும் ஊடல் கொண்டு பிரிந்திருப்பதையும் கூட அனுமானித்தவராகச் சொன்னார்.

ஆனந்தக் கண்ணீர் மல்கி நிற்க, “தே… தேங்க்ஸ்” என்றவன்… அவளை நாடி விரைந்தான் கோயில் மண்டபத்திற்கு!! 


நளிர்-37

அக்கணம்… ஏதோ வித்தியாசமாக… அக்கோயில் மண்டபம் எங்கனும்.. இதமான நளிர் தென்றல் ஊடுறுவி… அங்கிருந்த அவளின் மேனியைத் தழுவிச் செல்லலாயிற்று!! 

அங்கே தொங்கிக் கொண்டிருந்த இலட்சோப இலட்ச கோயில் மணிகள் எல்லாம் அடித்த சூறைக்காற்றுக்கு… ‘கணீர்… கணீர்’ என்ற ஒலியுடன் எழுந்து ஆட ஆரம்பிக்கலானது. 

 எங்கனும் நிறைந்து பரவிற்று மணிகளின் நாதம்!!! 

அத்தனை மணிகளும் ஒரு சேர ஆடத் தொடங்கியதும்… இவளும் தன் இருப்பிடத்தில் நின்றும் எழுந்து நின்ற போது… அவளின் கார்க்குழல் கற்றைகள் எல்லாம் எழுந்து ஆடிக் கொண்டிருந்தது காற்றுக்கு!! 

அவள் அணிந்திருந்த சேலையும் கூட… அவள் உடலோடு ஒட்டி நின்று.. முந்தானை காற்றுக்கு பறக்கத் தொடங்கிற்று. 

அக்கணம் கோயில் கர்ப்பக் கிரகத்தில் நின்றும்… சங்கினை… இழுத்து… தெய்வீக நாதமாக ஊதும் சப்தமும் … நின்றிருந்த அனைத்து மாந்தர்களின் காதுகளிலும் கேட்டது. 

அவளை நோக்கி…. நடந்து வந்தது ஷூப் பாதங்கள்.. இரண்டு!!.

கர்ப்பக்கிரகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த விதம் விதமான தட்டுக்களில்… இருந்த குங்குமத்தை உள்ளங்கையில் ஏந்திக் கொள்ளவும் செய்தது. 

சங்கு சப்தம்!! 
கோயில் மணி நாதம்!!
தீபாராதனைகளின் ஒலி!! 

அனைத்தும் கலந்து அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டுக்கும்… ஒரு ராஜகம்பீரத்தைச் சேர்ப்பது போலிருந்தது. 

அவளோ… முகம் மறைத்து வீழ்ந்த கூந்தலை எல்லாம் காதுக்குப் பின் சொருகிய வண்ணம்… என்ன நடக்கிறது என்று அனுமானிக்க முடியாமல் நின்றிருந்த பொழுது அது!! 

அவளது முன்னே வெண்ணிற சட்டை கொண்ட பரந்த மார்பொன்று வந்து நிற்க… அவள் உச்சி வகிட்டில்.. அழுத்தி இடப்பட்டது குங்குமம்!! 

குங்குமத்துகள்கள் எல்லாம்… அவளது நாசி மீது 
 கொஞ்சம் சிந்தியது.

 அதிர்ந்து போய்… அவள் நிமிர்ந்து பார்த்த போது… அங்கே நின்றிருந்தான் அவன்!! 

அவளின் கேள்வன்!! 

அவளோ கண்கள் கலங்க… கருமணிகள் இரண்டும் அவன் விழிகளை அலைபாய்ந்து பாய்ந்து தேட நின்றாள். 

தழுதழுத்த குரலில்.. தன்னைத் தானே நம்ப மாட்டாதவளாக, “யாஆ… த.. வ்??” என்றாள். 

அவன் தனக்காக சென்னையில் நின்றும் வந்திருக்கிறான் என்றானதும்.. அட் அ டைமில் அதிர்ச்சியையும், ஆனந்தத்தையும் ஒருங்கே சுகித்துக் கொண்டிருந்தாள் அவள்!! 

அவனை காதலுடன்.. இரு கைகள் நீட்டி… தாவி அணைத்துக் கொள்ளத்தான்… பரபரத்து எழுந்தது அவள் கைகள்!!

 மகிழ்ச்சியில்… பேரழகாய் வளைந்தன அவளது ஈர இதழ்கள்!! 

ஏழு நாட்கள்!!

 முழமையாக ஏழு நாட்கள் கழித்து தன் மன்னவனைப் பார்க்கிறாள் அவள்!!! 

ஏழு நாட்கள்… ஏழு யுகங்களாகத் தெரிய… உடைப்பெடுத்த கண்ணீரில் அவள் கண்களும் கலங்கித் தெரிந்தது. 

அனிச்சையாய் எழுந்த அவள் கைகளும் பாதியில் ஸ்தம்பித்து நிற்கும் வண்ணம்… அவள் சிந்தையில் வந்து போனது அவன் உகுத்து நின்ற சொற்கள் யாவும். 

‘இங்கேயிருந்து போயிடு’ என்று அவன் சொன்ன வார்த்தைகள் மறுஒலிபரப்பு போல.. காதுக்குள் கேட்க… அவள் கைகளை அடக்கிக் கொண்டவள்.. கைமுஷ்டி மடக்கி கண்ணீருடன் நின்றாள்!! 

“இங்கே என்ன பண்ற யாதவ்??”என்று ஏதோ மூன்றாமவனை கோயிலில் சந்தித்தது போலத் தான்…. விரக்தியான குரலில் கேட்டாள் அவள்!! 

அவளின் அந்நிய பாவம் வலி தந்தாலும்.. அதனை சட்டை செய்யாமல்… அவளை நோக்கி… இதயம் கனிந்த குரலில் சொன்னான், 

“உன்னை என் கூட… அழைச்சுட்டுப் போகணும்ன்றதுக்காக வந்தேன்…” என்று!! 

அவளோ வலியோடு இணைந்த ஏளனம் தொனிக்கும் குரலில், உடைந்தவளாகப் பேசினாள். 

“நீ விரும்பினா உன்கூட வரணும்… நீ விரட்டினா… அம்மா வீட்டுக்கு வந்துரணும்… ந.. நல்லா இருக்கு… உன் விளையாட்டு… இதோ இங்கே கர்ப்பக்கிரகத்தில இருக்கற… இந்த கிருஷ்ணன் கூட விளையாடாத.. பு.. புதுமையான விளையாட்டு..!!” என்று நமுட்டுப் புன்னகைச் சிந்தினாள். 

“என்னை மன்னிச்சிருடீ… நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது தான்… ” என்று உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னவன்.. அவளின் கன்னத்தைத் தாங்கும் எண்ணத்துடன்… அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்திருப்பான். 

அவனால் நிரம்பவும் மனக்காயங்களுக்கு உட்பட்டு இருப்பவளுக்கு ஏனோ.. அவனின் சிறு தீண்டலையும்  தாங்க முடியாமல் போனது. 

அவள் ஒரு அடி பின்னோக்கி வைத்தவள் அடிக்குரலில் நின்றும் சீறினாள். 

“உன் மன்னிப்பு எனக்கு வேண்டாஆஆஆம்ம்!! நான் லவ் பண்ணி கல்லாயணம் பண்ண… என் யாதவ்  என்னோட.. வலிகளை.. ஃபீலிங்க்ஸை… புரிஞ்சுக்கல… என்ன நேசிக்கலன்னு உணர்ந்த நொ… நொடியில்.. நான்… செ.. செத்துட்டேன்.. ” என்று அவள் கண்களில் கண்ணீர் தானாய் வழிந்தோடச் சொன்னாள். 

அவளை சமாதாப்படுத்தும் வழி தெரியாமல்.. சிகையை அழுந்தக் கோதிக் கொண்டு திணறி நின்றான் அவன்!! 

“உன்னை இப்படி உணர வைச்சது… எல்லாம் என் தப்பு தான்…ஸாரிடீஈஈ..”

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள தன் ஆடையை இறுக்கிப் பிடித்தவளாக வாய் திறந்தவளோ.. ஒரு வெறிகொண்ட பிச்சியைப் போலக் கத்தினாள். 

“ஆமாஆஆ!! , இது எல்லாம் உன் தப்பு தாஆஆன்… இனிமேலும் இப்படி நடந்தால் அதை தாங்கிக்கற சக்தி எனக்கு இல்ல யா.. தவ்??”என்று சொன்ன… அவள் வார்த்தைகள் அவன் இதயத்தில் முட்களாய் குத்தியது!! 

அதற்கு மேலும் தாங்க மாட்டாதவனாக நின்றவனோ… அவளை தன்னோடு இறுக்கிக் கட்டிக் கொண்டான் நெஞ்சோடு!! 

அவன் இன்னும் இன்னும் அவளை ஆழத் தன்னுள் புதைத்துக்கொண்டே..உள்ளத்தில் இருப்பதை எல்லாம்… வார்த்தைகளாய் பொழிந்தான். 

“என்னை மன்னிச்சிருடீஈ.. நான் அனுபவிச்ச வலிய விட… நீ.. நீ.. அனுபவிச்ச வலி அதிகம் தான்… எ.. எனக்கு… உன்னைப் பிரிஞ்ச வலி மட்டும் தான்… ஆ.. ஆனா… உனக்கு… ஒரு குழந்தையப் பிரிஞ்ச வலி..உடல் பலவீனப்பட்ட வலி… ஆக்ஸிடென்ட்னால ஏற்பட்ட வலி… நான் பக்கத்துல இல்லாத வலி…. எவ்ளவு வலிகள நீ தாங்கிக்கணும்… எனக்கு இது புரிய நேரமாச்சு… ஸாரிடீஈ…. ஸாரி கண்மனீ..”என்று தழுதழுத்த குரலில் சொன்னவனின் கண்ணீர்த்துளி… அவள் தோளில் விழுந்ததை உணர்ந்தாள் அவள்.

நேத்ரா.. தன் கைகளால் தன் உடம்பில் இருந்த …அவனது பிடியை அகற்ற முயன்றாள் !!

ஆனால் அவன் அவளை விடுவிக்கும் மனநிலையில் இல்லை. 

இன்னும் இன்னும் இறுக்கிக் கொண்டே போனான் அவன்!! 

அவளோ, ஆற்றாமையில் கண்ணீருடன், “நீ தொடர்ந்து என்னை அவமானப்படுத்திக்கிட்டே இருந்த… பொறுத்திக்கிட்டேன்… கேலி பண்ண பொறுத்திக்கிட்டேன்… என்னை ஒரு நாள் வர்றீயான்னு கேட்ட… பொறுத்துக்கிட்டேன்… ஆனா… என்னை போன்னு சொல்லிட்டேல்ல….அ.. அத மட்டும் பொறுத்துக்க முடியல… வ.. வலிக்குது யாதவ்” என்று சிறுகுழந்தை போல அவன் மார்பில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள் அவள்!!

அவள் அழுகைத் தாளாமல்… அவள் முகத்தைத் தன்னில் நின்றும் பிரித்தான். 

இடம்பொருள் ஏவல் பாராமல்… அவளது நெற்றி கண்கள், மூக்கு, கன்னங்கள், இதழ்கள் என ஓரிடம் விடாமல்… முத்தமிட்டுக் கொண்டே போனான் அவன் !! 

“நான் உன்னை வெறுத்ததாலோ.. இல்ல… இனி உன்னை எனக்கு வேண்டாம்ன்றதாலோ.. அங்கிருந்து போகச் சொல்லல.. . என் மேல் எனக்கு இருந்த கோபத்தால தான்டா போன்னு சொன்னேன்… எனக்கு என்ன வேணும், என்ன செய்யணும்…அப்போ புரியல…எவ்ளோ பணம் இருந்தும்… உன்னைப் பத்தி ஒழுங்கா தேடாம விட்டுட்டேனேன்ற கோபம்!! நீ கஷ்டப்பட்ட நேரம்… என்னால ஹெல்ப் பண்ண முடியலையேன்ற கோபம்!!.. உன்னைப் பார்க்க பார்க்க…என்னை நானே ஏதாவது செஞ்சுக்குவேன்னு கோபம்.. அதனால தான்… நான் உன்னை போன்னு சொன்னேன்.. “என்றவன்… அவள் கண்களோடு தன் கண்கள் கலந்த வண்ணம் சொன்னான்!! 

“ஆனால் இந்த ஒரு வாரம்.. நீ என் பக்கத்துல இல்லாத ஒருவாரம் நான் உணர்ந்தேன்…. என்னால நீ இல்லாம வாழ முடியாதுடீ…. எனக்கு எப்போவும் நீ வேணும்… . நான் பல முறை தப்பா நடந்திருக்கலாம்… நாம  சண்டை போட்டுக்கலாம்…. ஆனாம் ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர்.. ஆஆ.. ழமா நேசிக்… கிறோம்… இத மட்டும் மாத்த முடியாது… ” என்று பேசிக் கொண்டே போன கணவனின் இனிமையான வார்த்தைகளால் உருகாமல் இருக்க… நேத்ரா கடுமையாக முயன்று கொண்டிருந்தாள். 

“என்னால் மீண்டும் அ.. அதே வலிய… அனுபவிக்க முடியாது யா.. தவ்..” என்றவளின் கண்களில் நின்றும்  கண்ணீர் விழ ஆரம்பித்தது. 

அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டவன்… அவளைத் தன்னோடு தக்க வைத்துக் கொள்ள.. இறுதி அஸ்திரமாக குழந்தையை உபயோகிக்கலானான். 

“உ.. உ.. உன்… டைரியில நீ… எழுதியிருந்தேல்ல… ஞாபகம் இருக்கா… எங்க மகனைப் பற்றி நீ கண்ட கனவு!! அ.. அது ஞாபகமிருக்கா… அவன் திரும்ப எங்க கிட்ட வர்றேன்னு…. சத்தியம் பண்ணியிருக்கான்… உங்கிட்ட சத்தியம் பண்ணியி.. ருக்.. கான்… எ.. எனக்காக.. வேணாம்… அவனுக்காக.. அவன் எங்கக்கிட்ட வரணும்ன்றதுக்காக… நாம ப்ரெஷ்ஷா ஸ்டார்ட் பண்ணக் கூடாதா??”என்றவன்… அவளின் கையை.. தன்னிரு கைகளாலும் அழுத்திக் கொண்டு… அவளின் சாதகமான பதிலுக்காக அவளைப் பார்த்தான்.


“ஐ ஹேட் யூஊஊ!! ” என்றவள்… அவனுக்காக அவனின் காதலுக்காக உள்ளே துடித்துக் கொண்டிருந்த இதயத்தோடு சொன்னாள்.

அவளுக்கு தெரிந்து போனது.. இன்னும் ஒரு சில கணங்கள் அவன் பிடியில் நின்றிருந்தாலும்.. இதயம் அவன் பால் சரிந்து விடும் என்று தெரிந்து போனது!! 

ஆகையால்.. தன் கைகளை அவனிடமிருந்து உருவி எடுத்துக் கொண்டு… அவனில் நின்றும் விலகிச் செல்ல முனைந்தாள். 

ஆனால் அவன் அவளைப் போலவே பிடிவாதமாக இருந்தான். 

அவன்.. தன்னில் நின்றும் விலகிச் சென்றவளைத் தடுக்கும் முகமாக.. அவளின்  அவள் மணிக்கட்டைப் பிடித்துக் கொண்டான். 

அவள் அவனுடைய இறுக்கமான பிடியில் நெளிந்து கொண்டிருந்தாள்.

அவளை இழுத்து தன்னோடு அணைத்தவன், “பட் ஐ லவ் யூ நேத்ரா…  நீயும் என்னை காதலிக்கறேன்னு எனக்குத் தெரியும்” என்றவன்… அவளது நெற்றியில்… மிருதுவாக முத்தமிட்டான்!! 

அவனது வார்த்தைகளில்… பிடிவாதத்தில்… அவளது கற்பாறை இதயமும் உடைந்து போனது. 

முகத்தைக் கல்லாக்கிக் கொண்டு… அவன் அணைப்பில் நின்றும் வெளிவந்தவள்.. தன்னை அவன் போகச் சொன்ன ஆற்றாமை தாங்கொணாது.. அவனது முரட்டுக் கன்னத்துக்கு சப் என்று ஓர் அறை அறைந்தாள்!! 

அவன்… அவள் கொன்றாலும் சம்மதமே என்பது போல…தோள்புஜங்கள் ஏறியிறங்க மூச்சு வாங்கிக் கொண்டே… அவளையே காதல் மல்கப் பார்த்திருந்தான். 

அவளோ.. “இனி… எந்த சண்ட வந்தாலும்… என்னை வீட்டை விட்டு போகச் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணு… இனிமேலும் நான் உன்னை விட்டுப் போகமாட்டேன்னு சத்தியம் பண்ணு..அப்போ தான் உன்கூட வருவேன்!! .”என்று சீற்றம் மிளிர.. தன் உள்ளங்கை நீட்டி சத்தியம் கேட்டாள்!! 

அவனை விட்டும் மீண்டும் ஒரு பிரிவைப் பற்றி எண்ணவே.. அவளது இதயம் மிகவும் வலித்தது. 

அந்த உணர்வை அவளால் புறக்கணிக்க முடியவில்லை.

அவள் வாழ்க்கையில் இதுவரை… கண்ணீரும், சோகங்களும், துன்பங்களுமே இருந்தது. 

ஆனால் இப்போது அவள்.. அவனுடனான இன்பமான வாழ்க்கை தனக்கு கிட்டாதா என்று மனதளவில் பெரிதும் ஏங்கிப் போயிருந்தாள்!! 

அந்த இன்பத்தை… தர யாதவனால் மட்டுமே முடியும்!! 

கோபத்திலும் கூட… அவனிடம் காதல் மட்டுமே யாசித்து நிற்பவளும் என்னே மாதிரியான பெண் இவள்?? என்னே மாதிரியான காதல் கொண்டவள் இவள்!! 

அத்தனை சோகத்தின் மத்தியிலும்.. இருவர் இதழ்களில் அட் அ டைமில்.. ஒரு காதலோடு இணைந்த புஞ்சிரிப்பு மலர்ந்தது. 

“அப்படீன்னா நீயும் சத்தியம் பண்ணு… இனிமேல் என்கிட்டேயிருந்து.. நீ… எதையும் மறைக்க மாட்டேன்னு.. சத்தியம் பண்ணு… சந்தோஷமோ துக்கமோ எல்லாத்தையும்… பகிர்ந்துக்குவோம்னு சத்தியம் பண்ணு.. “என்று அவன் அவளது புறங்கையினை மிருதுவாகப் பற்றி முத்தமிட்டுக் கூறினான். 

அவள் தலையும்,” ம்ம்” என்று கண்ணீரோடு ஆட… அடுத்த கணம்… யாதவன்  நேரத்தை வீணாக்காமல் உணர்ச்சி மிகுதியில்… அவளை காதலோடு ஆரத் தழுவிக் கொண்டான். 

“கண்மனீ… என் கண்மணீஈ..”என்று அணைப்பினூடே அவன் பிதற்றியது கூட… அத்தனைக் காதலாய் ஒலிக்க…. ஏனோ அவனை ஒட்டி நிற்கவே ஆசை கொண்டது.. சொற்ப நேரத்திற்கு முன் ஊடல் கொண்ட காதல் மனது!! 



கோயில் நற்பிரசங்க உரையைக் கேட்டு முடித்து விட்டு… கோயில் மண்டபம் நாடி வந்த ‘கிருஷ்ணமூர்த்தி’ குடும்பத்தினர் அனைவரும் நாயகனையும், நாயகியையும் பார்த்து மனம் நெகிழ நின்று போயினர். 

ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு… ஒருவர் நெற்றி… இன்னொருவர் நெற்றி மீது பதிய… அவர்கள் கண்கள் மூடி நின்ற காட்சி.. அத்தனை இதம் தந்தது அவர்களின் மனத்துக்கு!! 

“எவ்ளவு..அழகான லவ் ஜோடி??” என்று தங்கை ரேகா.. 

கண்களில் கனவு மிளிர ஏங்கிப் போய் பெருமூச்சு விட்டவளாக… பக்கத்திலிருந்த அர்ச்சனா அண்ணியில் தோளில் தலைவைத்துக் கொண்டாள். 

அந்தத் தோற்றத்தில் உள்ளே நெக்குருகி நின்ற அவளது தாயார் பரிமளா தேவியோ,

 ‘என் மக வாழ்க்கையில நடந்த ஒரே நல்ல விஷயம்… யாதவ் மாப்பிள்ளையா வந்தது..கடவுளே இவங்க என்னிக்கும் இப்படியே சந்தோஷமா இருக்கணும்… ‘ என்று முணுமுணுக்கும் குரலில் சொல்லிக் கொண்டார்.

உள்ளே இருந்த… குழல் இசைக்கும் கண்ணனும், அவன் தோளில் சாய்ந்த ராதையும்.. ஒன்றாக இணைந்து நின்று… இன்முகமாகப் பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது இவர்களின் காதல்க் காட்சியை!!

அத்தனைத் தடைகள் வந்தாலும்.. தளைகள் களைந்து.. இணைந்தது அவன் அவள் மீது கொண்ட எஞ்ஞான்றும் மாறா காதலும், இவள் அவன் மீது கொண்ட தாய்ப்பாலைப் போலத் தூயக்காதலும்!!! 

அவர்கள் காதல் எவ்விடத்தை மையமாக வைத்து ஆரம்பித்ததுவோ… அதே இடத்தில்… மீண்டும்…. தொடங்குகின்றது!!


(வாவ் வாவ் 102 ❤️❤️… அப்டியே ஹாப்பியா இருக்கு… நன்றி நன்றி 😘😘😘உங்க அன்புக்கு.. இதோ கிறிஸ்துமஸ் தினத்தன்று யூடி 😘😘😘😘😘😘😘 இத்தோடு கதை என்டிங்க் முடிஞ்சு… எபிலாக் நாளை குளுகுளு ரொம் முடன் வரும்…. இன்னைக்கும் உங்க தங்கச்சிக்கு ❤️ தந்து… ரைட்டிங் சர்ஜரிக்கு உதவுங்கள் ப்ளீஸ்🎄🎅 Merry Xmas to you and your family 🌲❤️💐🌹♥️🎀🎊🦌🤶🎅) 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *