நர்மதா எனும் தேவதை 2
××××//×××××/////////×××××××××××
இங்க என் கூச்சத்த ஒதறிட்டு என்னப் பத்தி கொஞ்சமாவது பேசியாகணும்.. நீங்க அத்தன பேரும் எங் கிட்ட ஏக மனதா ஏத்துக்கிட்ட ஒரே விசயம் நா கூச்ச சுபாவிங்கறத மட்டும் தான்.. அத ..சரி சரி.. கத்தாதீங்க.. அப்ஜெக்சன ஏத்துக்கறேன்.. ஒண்ணு ரெண்டு பேரு மட்டும் ஏத்துக்கலை.. இதுக்கும் கத்துனா எப்படி..? என்னாது.. ஒருத்தருமே ஏத்துக்கலையா?ஏங்க.. ஏன்.. எதுக்காக இந்த அப்பாவி வெம்பளத்தான் மேல இத்தன கொல வெறி?சரி.. பெரும்பான்மை தீர்ப்புக்கு கட்டுப் பட்டு..
உலகமே மறுதளிப்பினும் (கோவம் வந்தா இலக்கிய நடை தான்!) நான் கூச்ச சுபாவியென்பதென்னவோ ஞாயிறையடுத்து திங்களென்பது போல் பச்சை உண்மை என்பதால்… இருங்க..தெரியாம ஆரம்பிச்சுட்டேன்..மூச்சு வாங்கிக்கிறேன்
புள்ளைங்களக் கண்டா கூச்சந் தாங்காம கதவுச் சந்துல ஒண்டிக்குவேன்னு சொன்னா அது உலக மகாப் புளுகு தான்..
ஆனா
