தொடரும்

This entry is part 1 of 1 in the series தொடரும்

தொடரும்

தொடரும்

தொடரும்

தொடரும் (குறுங்கதை)


“என் மனைவியா ஒரு நைட் மட்டும் இருடி  உன்னிடம் அதை செஞ்சுட்டா போதும் நான் சரி ஆகிடுவேன்.. ம் மட்டும் சொல்லு… நீ வேணும்டி ரொம்பவேணும் ..” மோக பித்தில் பிழிந்து கொட்டிய வெற்றியின் வார்தைகள் புவனாவுக்கு சிலிர்ப்புக்களுக்கு பதில்  திகில் தான் கொடுத்தது..


சும்மா கிடந்த  கரண்ட் கம்பியை வலிய தொட்டுட்டோமோ? முகம் பயத்தில் வெளுத்தது

ஒரு மணி நேரத்துக்கு முன்…

புவனாவின்  மனது இன்று இயல்பு வாழ்க்கையிலிருந்து லேசா விலகியே இருந்தது.. கை தானா  பிள்ளைகளுக்கு தோசை சுட்டுட்டு இருந்தாலும் கவனம் இல்ல..


“அப்பா எப்போ திரும்பி வராங்க ம்மா ..” மூத்தவன்


“இன்றுதானே போயிருக்காங்க.. இன்னும் மூணு நாள் ஆகும் .. சனிக்கிழமை வந்துருவாங்கடா..”


“மங்களூர் இங்கிருந்து தூரமாம்மா?” சின்னவன்..


முறையே  9 6 வயதில் ரெண்டு முத்தான ஆண் பிள்ளைகள் அருகருகே ஒன்றாய் அமர்ந்து குருவி போல இராவுணவு சாப்பிட்டுக்கொண்டே தகப்பனை பற்றி ஆர்வமா விசாரிக்க.. தாயாய் மனம் நிறைந்தாள் புவி..



“தூங்க போவும் போது சொல்றேன்.. பேசாம சாப்பிடுங்க..”


“கதையும் சொல்லணும்மா.”


“சரிடா.. சரண்”


“எனக்கு தலையை கோதி விடணும்”


“பொடி நாய் நீ பொல்லாதவன்டா” கொஞ்சியவாறே தோசை கரண்டி வச்சு வலிக்காது செல்ல அடி ஒன்று..  தாயை தனக்கே தனக்கு கொண்ட சின்னவனுக்கு போட்டாள் அவனின் பிரியமான அம்மா.. சமயலடி ஒதுங்க வைத்துக்கொண்டிருந்தவளை .. தூங்கலாம் வாங்க அம்மா.. வாங்க.. பிள்ளைகள் இம்சையை கொடுக்க.. 


அப்படியப்படியே போட்டுட்டு..


இருவர் படுக்கும் இரும்பு கட்டிலில் பசங்களுக்கு நடுவில் படுத்து தலையை தடவி ஸ்கூலில் தன் பிள்ளைகளுக்கு சொல்லும் நன்னெறி கதையை ஒன்றை நீட்டி முழக்கி வர்ணித்து சொல்ல அவர்கள் வெகு சீக்கிரத்தில் உறங்கியும் விட.. 


இவள் மட்டும் முன்பொரு நிலாகாலங்களில் மூழ்கி கிடந்தாள்.. அதெல்லாம் பாலைவனச்சோலை கானல் நீர் இலவு காத்த கிளி என்பதாய் போனவை..



உடம்புக்கு மட்டுமே நரை திரை மூப்பு என்ற பரிணாம வளர்ச்சி உள்ளது.. மனதுக்கு? 


நினைவு தெரிந்த நாளிலிருந்து பெறும் அனுபவத்தை கிரகித்து கடந்த நிகழ் எதிர்காலத்துக்கும் அலைந்து திரிந்து எதுதான் வேணும் தெரியாது.. கனவுகளை உற்பத்தி பண்ணி கற்பனைகளில் மிதந்து பயந்து  குழந்தையாவே இருப்பது அதன் இயல்பு..


ஆயிரம் ஞானியர் “இப்படி இரு” அறிவு சொன்னாலும் ஒவ்வொருவரின் அடையாளமா இருப்பது மனமே.. குணம் என்ற சொல் அவர்களின் ஆன்மாவின் தரத்தையே சொல்லுது..



அன்புக்கு இதயம் எனும் சின்னம்  சாமானியன் உலகம்.. இதயம் உயிரை துடிக்கவைக்கும் உறுப்பு மட்டுமே அங்கு நினைவுகள் உற்பத்தி ஆகாது சொல்லும் மருத்துவ உலகம்..



அப்போ எதுதான் சிந்தனைகள் உற்பத்தி பண்ணும் கேந்திரம் கேட்டால் மூளை என்று வறட்சியான மெய் பதில் கிடைக்கும்



எண்ணஅலைகளை ஓயாது எழுப்பும் கடல்.. மூளையோ? இதயமோ?அதை கொண்டிருக்கும் உடல் பாவம் தான் !! தன் உடம்பிலேயே கலகம் பண்ணும் எதிரி இருக்க வாழும் காலம் வரை இதோடு அலைந்து திரிந்து சலிப்பதிலேயே முடிந்தும் விடுகிறது.. 


 கர்மா என்று ஒற்றை வார்த்தையில் மொத்தத்தையும் வேதம் இரக்கமே இல்லாது முடித்துவிடுவது துரோகமே..!!




மனங்கள் இல்லா மனிதராய் படைக்கப்பட்டிருந்தால் மாக்கள் போல கவலையற்று இருந்திருப்போமோ? வலிகள், கண்ணீர் இருந்திருக்காதோ? சிரிப்பு எனும் சலுகை தந்து தப்பித்துக் கொண்டதோ இறையும்.. தொடரும் கேள்விகள்.. விடைகள் இல்லாதவை

 யான் அறியேன் பராபரமே..!!!



 ஏன் விளக்கம்??? இதெல்லாம் தெரிந்தும் கடந்தும் தானே வாழ்கிறோம்.. அறிவின் சிகரங்களை மொத்தமாய தன்னகத்தே கொண்ட தமிழர் சமூகம் புருவம் உயர்த்துவதை காண்கிறேன்…


புவனாவின் சிக்கலுக்கு மனமே முகாந்திரம்..



தன் செல் போனை வைத்து .. புதிதாய் பதியப்பட்ட எண்ணை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் தூக்கமே வராத புவனா


பழைய காதல் மறக்குமா? கல்வெட்டு போன்று வெற்றியின் நினைவுகள் திரும்ப திரும்ப படிக்கப்பட்டு புதுசு புதுசாய் அர்த்தம் தோன்றி புது கண்ணீரை வரவழைத்து என்றும் புத்தம் புதிதாய் உள்ளுள்இருக்கத்தானே செய்யுது…  அப்பொழுதெல்லாம் தான் ஒரு துரதிஷ்டசாலி என்ற வார்த்தை தானா புவியின் வாய் முனங்கும்.. 



கல்யாணத்துக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்?? ஒரு விரக்தி தோன்ற ஆகா உணர்வில் உதடு சுழித்தாள்..



ஆணின் அன்பு எத்தகையதா இருக்கும் என்று வெற்றியால் ருசி பார்த்து விட்டதாலோ என்னவோ கணவனுடன் அவள் வாழ்க்கை நியமம் தான்..


எல்லாமே கடமை.. அவரிடம் எல்லாத்துக்கும் முள்ளு போட்டு வேலி.. எது செய்யணும்? என்பதை விட செய்யக்கூடாது லிஸ்ட் அதிகம்.. மாமியார் தங்கம் .. ஆனால் கணவன் விவரம் 


திருமணமான புதிதில் அவரோடு கருத்து மாறுபட்டு ரெண்டு மூணு முறை சண்டைகள் வந்து கெட்ட பெண் என்ற சாயல் விழத்துவங்க .. சுதாரிச்சு.. வாயே  திறவாது புவனா ..


10 வருட குடித்தனம்.. தன்னை வெறுத்து வாழ்வது எப்படி என்பதை மட்டும் தவமின்றி சொல்லி தந்து விட்டது.. நிதர்சனம்


வெற்றியை அழைப்பதா? வேண்டாமா? என்பதே  அவளின் மண்டை குடைச்சல்.. இன்று கணவர் இல்லாததே வசதி பேச.. இனியொரு வாய்ப்பு கிடைக்குமா? தெரில..



ஆனாலும் அவன் முரடன்.. பேசினால் எகிறி பாய்ந்து வேட்டை நாயாய் கடிப்பதுக்கும் வாய்ப்பு இருக்கு.. பாதிக்கப்பட்டவன் எது சொன்னாலும் வாங்கி கட்டிக்க வேண்டியதுதான்..


 திருமணத்தால் அவனும் சுகப்படல தானும் இல்ல.. ரெண்டு பேரும் உயிரும் உடலா லவ் பண்ணோமே ஒருவேளை சுபமாய்  இணைந்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ? 



வாய்ப்பே இல்லை நம் வீடும் சரியில்ல அவன் வீடு சுத்த மோசம்.. போயா போ.. என்ன வாழ்க்கை இது? கனவும் பிடிக்கல நிஜமும் ருசிக்கல.. அனைத்தும் வீணே.. கிடைத்ததும் கிடைக்காததும் வருத்தம் தான் தருது.. ஆனால் திருமண உறவால் ஒரே ஆதாயம் குட்டிகள் .. கடவுளின் தேவதைகள்..


அதுகளுக்காக எவ்ளோ போரிங் யையும் தாங்கிக்கலாம்.. இயல்பாக தாயாய் சமாதானம் பண்ணிக்கொண்டாள் மதி..


ஆமாம் வாழ்கையெனும் மொட்டை வழுக்கு பாறை ஏறலில் சின்ன சின்ன பள்ள நம்பிக்கையின் பிடிமானங்கள் பிள்ளைகள் மட்டுமே 



அந்த வீணா போனவ எதுக்கு அவன் நம்பர் தந்தா இப்போ அல்லாடுவது என் பொழைப்பா போச்சே… ம்ம்ம் 



திரும்ப பேசினால் வெற்றி சும்மா இருக்க மாட்டானே உறவை தொடர நினைத்தால்..  என்ன செய்ய?


30 வயது ஆகிருச்சி.. சின்ன பிள்ளை இல்ல ஓகே.. நமக்கு வில் பவர் இருக்கே சமாளிக்கலாம்.. 


பாவிப்பய !! குடிச்சே வீணா போறான் என்று கேள்வி பட்ட பிறகு பழகிய பாசம் மேவி நெஞ்சாங்கூடு தவித்தது.. காதலும் உயிர்பந்த வகையாய் சார்த்ததுதாம்..நினைவாலே சிலை செய்தாச்சு..  ஒரு காலத்தில் நேசத்தின் பிடியில் இருவரும் ஒன்றாய் இருந்ததுக்கு நன்றி கடன்..



பேசுவோம்.. பிள்ளைகள் படுக்கை  அறை கதவை சார்த்தி ஹால் இருட்டில் சோபாவில் அமர்ந்து..  போனை எடுத்து வெற்றி எண் போட.. 


முத ரிங் போனதில் இதயம் வாயில் துடித்தது போல ஒரு நடுக்கம் படபடப்பு தாங்காது சட்டுன்னு வச்சுட்டா..


முருகா முருகா முருகா முருகா.. பயத்தில் தானா சாமி பேரு ரிபீட் ஆனது.. முடியல்ல .. இது தப்பு தப்பு .. மூச்சு முட்டியது.. திடீர்னு குளிர் ஜுரம் கண்ட மாதிரி உடல் நலுங்கி வாடியது பூ பெண் அவள் அதான் முதல் தவறுக்கு பயப்பட்டு என்னென்னவோ ஆனாள்



நான் பக்குவமான ஆள் சமாளிப்பேன் என்றெல்லாம் வசனம் வேற பேசுற.. ம்ம் அவள் மனமே அவளை கண்டிக்க..


 வேணாம் விட்ருவோம்.. உதட்டுக்கு மேலே முத்தாய் வேர்த்ததை தன் வாயில் சேலை கொண்டு ஒத்தி எடுத்து படுப்போம். வீணா பாம்பு புத்தில் எதுக்கு கை விட்டுகிட்டு? பேசினால் உறவு தொடரும்.. தொடர்ந்தால்… நல்லது இல்ல.. சமாதானம் செய்து எந்திரிக்க.. அவனிடமிருந்து கால்..


அட கொடுமையே!!! எடுப்பதா? வேணாமா?  ஊசலாடியது மனசு.. நல்லதா? கெட்டதா? குழம்பம்


உள்ளுணர்வு சொன்னது கண்டிப்பா இது கெட்டது தான்.. வேண்டாத வேலை



2


போனை எடுக்காது  முழு சுற்று கத்த விட்டுட்டு சும்மா இருந்தாள் புவி.. 


பயத்தில் எண்ணங்கள் நின்றுவிட்டன மூளை யோசிக்கும் திறனை இழந்தது சொல்லலாம்..


வீணா வம்பில் சிக்கிட்டோமே… அவனுக்கும் கல்யாணமாகி ரெண்டு குட்டி பெண்பிள்ளைகள் இருக்கு.. பேசுவது கூட கிட்ட தட்ட துரோகம் தான்.. அறிவே இல்ல.. மட்டி மடச்சி .. திட்டிக்கொண்டாள்



அவன் கட் பண்ண பிறகே இவளுக்கு உணர் வர.. மிஸ்ட்காலையே உறுத்து பார்த்தாள்.. மாஜி நட்பு இன்று சாயங்காலம் எதார்த்தமாய கால் செய்ய.. பேச்சு எங்கோ போய் வெற்றியிடம் வந்து நின்று அவன் படும் பாட்டை பள்ளாய் அது விவரிக்க.. இளகிய மனம் கொண்ட  புவிக்கு மனம் உருகி போய்விட்டது.. நீ பேசு புவி அவன் திருந்திடுவான்.. அந்த மத யானைக்கு அங்குசம் நீதான் .. என்றெல்லாம் சொல்லி மேலதிகம் தூண்ட கலக்கம் தொடங்கியது அக்கணத்திலிருந்து…



அடிக்கடி தென்னிந்திய நகரங்களுக்கு அவன் கம்பெனிக்காய் சேல்ஸ்க்கு போகும் புருஷன் இன்று சென்றிருக்க


பேசுவோமே? என்று லேசு ஆசை கிளர்ந்தது


இன்னும் வெற்றிக்கு பழைய அன்பு இருக்குமா? எப்பவும் போல பேசுவானா? எதிர்பார்ப்பு வேற புவியை தூக்கியது..



திரும்ப வெற்றியே அழைக்க.. இந்த முறை தயங்கினாலும் எடுத்துட்டா புவி..


பேசவே முடில..மலையேறியது போன்று மூச்சு வாங்கியது அவளுக்கு.. சர்வநாடியும் பயத்தில் ஒடுங்கி வித்தியாசமான மனநிலை.. இதுவரை அனுபவித்திராரதது 


என்ன பேச?  உள்ள குரலும் உள்ளே போய்விட.. எச்சில் முழுங்கிகொண்டிருக்கும் போதே



” புவனா”


உயிரை அசைத்தான் ஒற்றை விளியில்.. கண்ணீர் விழியோரம் ஊற.. உதட்டை வாய்க்குள் அதக்கி தன் கொந்தளிக்கும் உணர்வுகளை அடக்க முயன்றாள் அந்த பேதை


“பேசுடா புவி”


எ.. ன்னை எப்படி கண்டு பிடிச்ச வெற்றி?? 


உன் பேர் எனக்கு வருதே அம்மு… 


ஓ.. 


“அம்மு” வார்த்தையால் பாலை மனத்தில் பூமழை தூவ முடியுமா? மாயம் செய்தானே..!!!  வார்த்தைகளுக்கு உயிர் இருக்கு..


புவி கண்ணில் மழையாய் காதல் துளிகள் ஊற்ற.. மூக்கை உறிஞ்சி தொண்டை கமறி..


“எருமை எப்படி இருக்க?”  பதில் கொடுக்க.. எதிர்பக்க எருமைக்கு முக்கிய நெட்டு நரம்பில் சிலிர்ப்பு ஓடியது.. 


“இத்தனை வருஷம் தேவை பட்டுச்சா நீ பேச புவனி?”


“……. ….. “


“ப்ச்.. எல்லாம் விதி.. ஜாதி விட்டு ஜாதி  சேரவே கூடாதுன்னு நம்மை மிரட்டி அருவா வச்சு சுத்தின நாயெல்லாம் இப்போ சொறி நாயா இருக்கு புவி இவனுகளுக்கு பயந்தா நான் உன்னை நழுவவிட்டேன்? அவமானமா இருக்குடி..”


ஏகாந்த இரவில் பிள்ளைகளுக்கு  சத்தம் கேட்குமோ? அஞ்சி.. ஹாலில் இருந்து 0 வாட்ஸ் லைட் எரிந்து கொண்டிருந்த சமயலறை பக்கமா போய்விட்டாள் வசதியா… நேரத்தை எட்டி பார்த்து.. அவர் போன் வந்தாலும் வரும்.. 10 மணிக்கு மேலே பிசின்னா சந்தேகப்படுவார்..


 இவனை கட் பண்ணிட்டு சாட் வர சொல்லணும் நினைத்து..


“வெற்றி.. வாட்சப் வாயேன்.. ப்ளீஸ் “


ஏதும் காதில் வாங்காது  “காட்டுக்கு போற வரை உன்னை மறக்கவே முடியாதுடி புவி” குழறினான்..


புரிஞ்சிட்டுது புவிக்கு அவன் குடிநிலை.


சனி இரவுகளை குடித்து குழாவி கொண்டாடும் புருஷனுடன் வாழ்ந்த அனுபவம்..


“பேசு அம்மு.. ப்ளீஸ்.. சென்னைக்கு அடிக்கடி வருவேன் ஒருநாள் மெனக்கேட்டு உன்னை பார்க்க ஆசை பட்டு இப்போ நீ வாங்கியிருக்கும் புது வீட்டு காலி கிரவுண்ட் பக்கம் புங்கை மரத்துகிட்டே நின்னுட்டே இருந்தேன்.. பார்த்தேன் புவனா பார்த்தேன் வறுமையின் சாயல் உன் உடம்பில் பார்த்தேன் அன்று இரவு அழுதேன்டி.. உன்னலாம் இராணி போல வைக்கணும்டி அந்த பக்கிப்பய  உன்னை கவனிக்கிறது இல்லையா? எங்கோ தொடங்கி எங்கெங்கோ அவன் முடிக்க..


 சங்கடப்பட்டாள்  புவி.. வறுமை வேர்ட்க்கு.. வீடு கட்டியதால் ஆதார செலவில் கைச்சுருக்கம் ..இவன் ஏன் இதெல்லாம் நோட்டமிடுறான்? பிடிக்கல.. எதுக்கு பார்க்கணும்?


“என்னை விடு.. எல்லாம் சரியா போயிரும்.. உன் பழக்க வழக்கம் சரியில்லையாமாம் அத முதலில் சொல்லு வெற்றி”


“யாரையும் பிடிக்கல மதிக்க தோணல.. அவ்ளோ பேரும் வேசம் விஷம்.. என் இஷ்டத்துக்கு இருக்கேன் நல்லாத்தான் இருக்கேன் புவி”


“நாமும் அப்படித்தானே விடு வெற்றி.. குடிக்காதே ப்ளீஸ்.. லிவர் கெட்டிரும்டா நடத்தையும் மாறிட்டியாமே?”


“நீ ஏன் அத கேக்கிற?” உர்ர்ர் ஓங்கிய குரலில் ஆணின் இயல்பு உறுமல்


“பழகியதால் வந்த பாசம்டா வெற்றி அதை முன் வச்சு கேட்கிறேன்” 


“நல்லாருக்கு அம்மு நீ டா போட்டா.. உன்னை தவிர யார் இதை சொல்ல முடியும்.. நாம ஒன்னு சேர்ந்துதிருக்கணும்டி.. ஒவ்வொரு நொடியும் தேன் சொட்டு போல சுவையா இருந்திருக்கும்..” குழைந்தான் வெற்றி



“பேச்சை மாற்றாதேடா.. எல்லாத்தையும் விட்ரு வெற்றி..”


“எங்கேயோ போய்ட்டேன் அம்மு திரும்ப முடியாது.. விடு”


” என் அன்பான மென்மையான பழைய வெற்றி வேணும்.. நான் சொன்னா கண்டிப்பா கேட்டுப்ப ன்னு தான் உன்னை நான் தேடியதே..”


“நம் காதல் ஏன் ஒன்னு சேரல புவனி”


எனக்கும் அப்போ வருத்தம் இருந்தது வெற்றி.. வேறு இனம் .. எல்லாத்துக்கும் மேலே நான் வசதி கம்மி .. எதுவும் ச பார்க்காது விழுந்தது தப்புதான் வலிகள் சொல்லி தந்த பாடம் இது வெற்றி விடு அதை கடந்துரு ப்ளீஸ்”


“ஏன் புவி நாம நகம் கூட படாமல் பழகி காதலுக்கு மரியாதை கொடுத்து என்ன கண்டோம் சொல்லேன்.”. _____ பீப் வெர்ட போட்டு திட்டிட்டு.. 


“இப்போ நீ வேணும் வேணும் கேட்கிற மனசை என்ன செய்ய? தனிமை கிடைத்த போது கூட தொடாத நான்லாம் என்ன ஒரு ஆண்?..” அவன் உளறத்துவங்க..



முகம் சுளித்த புவி..


 “வெற்றி லூசு பழசெல்லாம் மற . சொல்றதை கேளேன்”


பேசும் போதே டயம் பார்த்து புருஷன் இடையில் போன் பண்ணினால் மாட்டிப்போமே? எச்சரிக்கையாக சீக்கிரம் பேச்சை முடிக்க வேண்டும் என்று நினைத்து.. அறிவுரை துவங்க..


“பெண்களுக்கு காதல் என்பது மேலுக்கு போட்ட சட்டை மாதிரி வசதிக்கு வேற ஈஸியா மாத்திக்கிறீங்க.. ஆசை வச்சுட்ட ஆண்களுக்கு காதல் உடல் போல மாத்த முடிலியே புவி” வெற்றி  தத்வார்த்தமாய் புலம்ப 



“இதோ பாரு வெற்றி.. எங்க வீட்டு கட்டாயத்தால்  கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சே தவிர.. உன்னிடம் நிறை குறை பார்த்து பிரியல..  தாலி கட்ட வேண்டிய கடைசி நொடி வரை நீ வருவ.. என் கையை உரிமையா பிடிச்சிட்டு வாடி என்கூட ன்னு கூட்டிட்டு போவேன்னு கண்ணை விரிச்சி கோவில் வாசப்படியையே பைத்தியகாரியை போல பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா? போடா உனக்கென்ன? சந்தர்ப்பவதி நான் உன்கிட்டே நியூஸ் சொல்ல தேடினப்ப காணா போய்ட்டே.. இப்போ வந்துட்டு வாய் பேசாதே நீ.. போப் போ”



கோச்சிக்காதே புவிமா.. சாரி சாரிடா என் பட்டு.. என்னை எம் மாமன்  கொடைக்கானல் பக்கம் இழுத்துட்டு போய் உன்னை மறக்க வைக்க சூனியம் வச்சுட்டு இருந்தாங்கடி.. சோறு தண்ணி கொடுக்காம .. ஏதேதோ மூலிகை சாறா குடிக்கவச்சு கொடுமைடி.. எப்பவும் இல்லாத அளவு உன்னை அப்போ ரொம்ப நேசித்தேன்டி.. புவி புவி புவி உன் பேர் சொல்லி சொல்லி சாக ஆசைப்பட்டேன்டி .. பைத்தியக்காரனா இருந்தேன்.. நிஜம் கனவு இடைவெளி தெரியாது.. சொர்க்க நாட்கள் அது.. நீ கட்டிக்கிட்டு வெளியூர் போனதால் என்னை ஊருக்குள் விட்டுச்சுக..


 அப்புறம் என்ன செய்ய?.. ஏக்கம் ஆகிருச்சு.. என் இயாலாமையால் உன் மேலே கோபம் வந்துச்சு.. நம்மூர்ல இருக்க பிடிக்காது கோவை போய்ட்டு மெக்கானிக் செட் ஆரம்பிச்சு யார் உறவும் வச்சுக்காது திரிஞ்சேன்.. வண்டிகளை மாத்தி விட்டேன் பணம் புரண்டுச்சு..அத்த பொண்ணு மகேஸ்வரி விஷம் குடிச்சுருச்சு நீதான் வேணுமாம் னு ஒரு பாட்டம் கதை கட்டி கோர்த்து விட்டுருச்சுக.. அப்டியே போவுது லைப்”


கதையாம் கதை வெற்றி பேச.. இந்தப்பக்கம்  புவனாவுக்கு அவன் அறுவை தாங்க முடில… ஒன்னு பேசினா இவன் நூறு பேசுறானே.. குடிச்சுருக்கான் ம்ம்ம் அவர் போன் பண்ணுவார்.. அவனுக்குத்தான் அறிவில்லை.. நமக்கு இருக்கே.. 


“சரி நான் அப்புறம் பேசவா வெற்றி.. தூக்கம் வருது”


“எவ்ளோ வருஷம் கழிச்சு பேசுறோம்.. இப்படி வெட்டி பேசிற”


“ப்ச் அப்படி இல்ல வெற்றி அவர் எதுக்காச்சும் போன் பண்ணி பிசி வந்தால் சங்கடம்பா .. நாளை பேசுவோம்..”



“எவ்ளோ உணர்ச்சியா  பேசுறேன்.. கேட்கக்கூட மாட்டுற…. குறை பட்டவன்..


“சரி ஒன்னு சொல்லிட்டு போ புவி”


“கேளுடா ..” பேச்சை முடிக்க புவனி தவிக்க..


“உன்னவர்  முதன் முதலா தொடும்போது என்னை நினைச்சியா?”


“ஹாங்.. புரில வெற்றி..” நிஜமாவே சாராம்சம் புரியாது கேட்டாள் புவி


திரும்ப சொன்னான்.. அசூசையா உதட்டை சுழித்தவள்..


“அதெல்லாம் உனக்கு எதுக்கு?.. நான் அதை திருப்பி உன்கிட்டே கேட்டால் சொல்லுவியோ? போடா அப்புறம் பேசுறேன்.. பை..வைக்கிறேன்..”


“கண்டிப்பா சொல்லுவேன்.. உன்னை நினைச்சி தான் செய்வேன்..”


அட போடா.. நீயும் உன் லஜ்ஜையில்லாத பேச்சும் இந்த பக்கம் சங்கடப்பட்டாள் புவி..


மொத்தமா முடிச்சுடுவோம் பேச பேச உறவு தொடரும்  ..


“இதோ பாரு எனக்கு அப்டிலாம் கேட்க தெரியாது.. உன் கிட்டே பேச விரும்பியதே.. நான் ஒருகாலத்தில் உயிராய் பழகியவன் வீணா போவதை பார்த்து பொறுக்க முடியாது சொன்னால் கொஞ்சமாவது எடுப்பான் என்று நம்பி பேசுறேன்.. எந்த பரவசபேச்சுக்கும் இங்கு இடம் இல்ல வெற்றி ப்ளீஸ் ஒழுங்கா பேசு..”


“யார் வீணா போய்ட்டாங்க? அந்த ஒன்ரை கண்ணி உன்கிட்டே சொல்லியிருப்பா.. நல்லா சம்பாரிக்கிறேன் என் வீட்டு செலவுக்கு மட்டும் ரெண்டுலட்சம் பொண்டாட்டிக்கிட்டே கொடுக்கிறேன்.. மிச்சம் என் சந்தோஷத்துக்கு செலவு பண்ணிக்கிறேன்.. இவளுக்கு என்னவாம்?  வேற என்ன சொன்னா? அந்த கோள்சொல்லி..” எகிறினான்


“ரொம்ப குடிக்கிறியாம்..”


“கவர்ன்மெண்ட்டே வச்சி நடத்துது.. குடிச்சா தப்பா?”


“லிவர் போயிரும் அம்மு.. திரும்ப திரும்ப சொல்றேன்னு கோச்சிக்காதே வெற்றி”


அந்த பக்கம் மௌனம்


யாரும் என்கிட்டே அன்பா இல்ல  புவி.. ஏங்கறேன்டி.. இந்த ஒரு வார்த்தைக்கு ஏங்கியே குடிக்கிறேன் யாராச்சும் உச்சி தடவி செய்யாதப்பா சொல்ல மாட்டாங்களா? என்று” நெகிழ்ந்து


“யாரும் சொல்ல மாட்டாங்க அம்மு.. உன் உடம்பை பார்த்துக்கோ.. அப்புறம் நீ.. நீ..”


“ம்ம் சொல்லி முடி.. நான் வெஜ் நிறய சாப்பிடுறேன்னு சொல்ராங்களா?”வெடி சிரிப்பு சிரிக்க..


“அதில்ல பன்னி..வெளியில் .. எப்படி. ம்ம்.. கெட்ட பொம்பளைங்க சகவாசம் அதிகமாம் உன் பொண்டாட்டி தினமும் உன்கிட்டே சண்டை போடுதாம் .. பிளா பிளா..”


இப்பக்கம் தயங்கி மூச்சி வாங்கி தோள் குலுக்கி ஒருவழியா புவி முடிக்க ..அந்த பக்கம் முன்பை விட அதிக சப்தமாய் சிரித்தான் வெற்றி..


அச்சிரிப்பு கேலி போல உணர்ந்தவள்..


“ஏய் ப்ளீஸ் எல்லாம் விட்ருடா.. என் பழைய வெற்றி போல இரேன்.. சேர்ந்தோமோ பிரிஞ்சோமோ உன் நினைப்பு சாகும்வரை போவாது.. நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்க என்று எப்பவாவது கேள்விப்பட்டாலும் கூட நான் நல்லா இருப்பேன்.. ப்ளீஸ் .. எனக்காக.. மெல்ல மெல்ல விட்டுடேன் ..”



“எல்லாம் விட்டுர்றேன்.. உனக்காக .. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் செய் போதும்.. அது போதும் என் இந்த தாறுமாறான வாழ்க்கை சரியா போகும்…”



“என்னால் முடிஞ்சா கண்டிப்பா செய்றேன் சொல்லுடா வெற்றி..” முழு மகிழ்வோடு அப்பாவியா புவனி சொல்ல .. 



முதல் பத்தி வார்த்தைகள் சொன்னான்




” என் பட்டுவாகிய புவனா.. என் மனைவியா ஒரு நைட் மட்டும் இருடி உன்னிடம் அதை செஞ்சுட்டா போதும் இந்த ஜென்மத்துக்கு… நான் சரி ஆகிடுவேன்.. ம்ம் மட்டும் சொல்லு..முத்தத்தால் மூச்சடைக்க வைப்பேன்..உடம்பு பூரா நக்கியெடுப்பேன் இடுப்பொடிப்பேன்.. சாவடிப்பேன் வேணும்டி ரொம்பவேணும்” இன்னும் இன்னும் காமரசத்தை வார்த்தைகளில் பிழிந்துகொட்டிய வெற்றியின் வார்தைகள் புவனாவுக்கு சிலிர்ப்புக்களுக்கு பதில் திகில் கொடுத்தது..



இப்படியெல்லாம் பேசத் தெரியுமா? வியந்தாள்.. கோபம் வந்திருக்கணும்.. 10 வருட தாம்பத்தியம் பொறுமை கொடுத்தது..  ஆண் வேலையில் அவளுக்கு மயக்கங்கள் இல்ல.. அதுவும் கடமை அவ்ளோதான்….லூசு.. இத போய் பெருசா சொல்லுது.. நினைத்தாள்



“என்ன பேச்சு இது பைத்தியமாவே மாறிட்டியா?  குடி ஓவரோ? ” கீச்சு குரலில் புவி கடுப்பாகி திட்ட..



மாறிடுவேன் ஒரு நாளில் எனக்கு நீ வேணும்.. உன் கிட்டே அதை அனுபவிச்சுட்டா போதும் என் நிராசை  முடிஞ்சிரும்.. சாந்தமாகிருவேன்.. சின்ன வயசுல தான் கண்டவன் லாம் நம்மை துரத்தினான்கள்.. ஜாதி இனி என்ன பண்ணும்? நாம் சேர்ந்தால்.. இப்போ நம் இருவர் இஷ்டம் மட்டும் தான் .. ப்ளீஸ்டி.. வா ஒரு நாள் மட்…”


போனை கட் பண்ணிட்டாள் புவி.. ப்ளாக் லிஸ்டில் வைத்து விட்டு.. வீடு முழுக்க இருட்டாக்கி.. லேசா சப்தமிட்டு ஓடும் மின்விசிறியை வெறித்து மல்லார்ந்து கிடந்தாள்..


ச்சீ.. ச்சீ..எப்படிலாம் பேசுறான் இவன்..  புதுசா பேசுவதால் அதுக்குத்தான் பேசறதா நினைச்சுருப்பானோ?

கவலை கொண்டாள்



எதுக்கு லூசு போல தொடங்கினேன் விட்டு போன உறவை.. அவன் எப்படி இருந்தா என்ன? எல்லாரும் ஊஞ்சலா ஆடிட்டு இருக்கோம்? வெறும் மஞ்ச கயிறு கவரிங் வளையல் தான்.. போட்ட 11 பவுனையும் வீட்டுக்காய் வித்தாச்சு.. இனி வாங்க முடியுமா தெரில.. சொந்த கூரை பசி இல்லா உணவு இப்போதைக்கு நிச்சயம்.. இது வறுமையா? குழம்பினாள்


பிறந்தால் பரம ஏழையா பிறக்கணும் இல்லாட்டி பெருத்த பணக்கார வீட்டில் பிறக்கணும்.. இப்படி நடுத்தரத்தில் கீழேயும் இறங்க முடியாது மேலேயும் போவ முடியாது மானசிக்கல்களில்  சிக்கி உழன்று போராடும் போதே ஜீவித விளையாட்டு நிறைவு எய்திட எதுக்கு பிறந்தோம்? இப்படி கஷ்டப்பட்டோம்? இத்தனை நாட்கள் என்ன செஞ்சோம்? மரண படுக்கையில் சுய ஆயுவுகள் நடத்தி என்ன செய்ய? காலங்கள் வீணாய் போனது போனதுதான்..



சைலன்ட்ல கிடந்த செல் ஒளிர்வதிலிருந்து அதுக்கு கால் வருவதும் நிற்பதும் விடாமல் திரும்ப திரும்ப வருவதையும் பார்த்து .. சட்டுனு ஸ்ட்ரைக் ஆகி பார்க்க.. வேறு புது எண் 7 கணவன் ரெண்டு.. பதறி அவருக்கு போட..


“என்னடி போட்டா எங்கேஜ்டா இருக்கு.. இப்போ புல் ரிங் போவுது எடுக்க மாட்டுற..”


“அசந்துட்டேன்ங்க.. நான் யூஸ் பண்ணவே இல்லையே எப்படி பிசி வரும்?.. “


“ம்ம்ம்.. நான் இங்கு வந்துட்டேன்.. பிள்ளைக என்ன பண்றாங்க?”


“தூங்குதுக.. சீக்கிரம் படுத்துட்டோம் மாமா.. “


“பத்திரமா பூட்டிட்டு இரு.. ஜாக்கிரதை ..எதுனாலும் கால் பண்ணு.. அம்மாவை வர சொல்லவா?


“வேணாம்ங்க.. அத்தையால அலைய முடியாது.. நாளைக்கு நாங்க மூணு பேரும் ஸ்கூல் முடிஞ்சி அங்க போய்டுறோம்.. நீங்க நேரா அதத வீட்டுக்கு வந்துருங்க..”


“ம்ம் சரி.. வச்சுடுறேன் புவனா..”


“சரிங்க..” செக்கன்ட் கால் புது எண் கண்டிப்பா வெற்றி தான்.. 


எடுத்தாள்.. பேசல


“புவி எதுக்கு இப்போ பிளாக் பண்ண?.. ஒருவேளை கொடைக்கானலில் நான் செத்திருந்தா இப்படித்தான் கல் நெஞ்சுக்காரியா இருப்பியா புவி..”


“அதெல்லாம் முடிஞ்சு போச்சு வெற்றி கிளராதே.. இன்னும் கூட நாலு கெட்ட வார்த்தை போட்டு திட்டு வெற்றி வாங்கிக்கிறேன்.. வா ன்னு கூப்பிட்டு அவமானப்படுத்தாதே..


இப்போ இருக்க புவனா உனக்கும் காதலி இல்ல.. என் புருசனுக்கு பொண்டாட்டியும் இல்ல வெற்றி.. ரெண்டு குழந்தைகளோட அம்மா .. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.. என்னை விட்ரு.. உன் குழந்தைகளுக்கு நீ தகப்பன் கடமையை புரிஞ்சி திருந்திக்கோ.. கடந்த காலங்களை மற அம்மு.. உன்னை இன்றும் லவ் பண்றேன் ஒரே வித்தியாசம் தாயாய்  டா.. வச்சுடுறேன் வச்சுடுறேன்..” கண்ணில் ஏனோ தண்ணீர் கொட்டியது.. இவன் திருந்த மாட்டான் தோணி..


“புவி.. சாரி சாரி சாரி”


“விடு அம்மு நல்லா இரு.. பை”


“இனி நீ என்றாவது கேள்வி படுவ நான் நல்லா இருக்கிறேன் ன்னு .. நன்றி ம்மா.. “


“சந்தோசம் வெற்றி..” இதையும் பிளாக் செய்து ரெண்டு எண்ணையும் டெலிட் போட்டுட்டு மனசு கேட்காது சொல்லிட்டோம் .. இனி அவன் வாழ்க்கை அவன் கையில்..

அடுத்த பெண்ணின் புருஷனிடம் பேசுவது கூட பாவம்.. நீ யாரோ எவரோ வெற்றியின் மனைவி என்னை மன்னிச்சுடும்மா ..மனம்  தேறிக்கொண்டு..


 ரேஷன்ல பருப்பும் சீனியும் எப்ப போடுறாங்களா? தெரில மங்களா அக்காகிட்டே கேட்கணும்.. நாளைய கவலையை சுமந்து புவனி கண் மூடினாள்..


 கலவி வளவிகள் எல்லாம் பசி தாண்டி தான்.. அன்றாட ரொட்டி  கருப்பு வெள்ளை ரொட்டிகள் தாண்டி.. பொருளாதார செழிப்புக்கு வந்ததும்.. கலராக அனுபவிக்க  மல்லிகை தோட்டங்கள் தேடி ஓடும்.. மெய்



மங்களூரில்..


” என் பொண்டாட்டி இப்படிலாம் செய்ய மாட்டா..  யாரிடமோ சொல்லி வேலை வாங்கிக்கொண்டிருந்தான் புவியின் கணவன்.. 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *