தேவ மல்லிகை பூவே
கணவன் தன் தலையில் பூ சூடி விடுவதைப் போல கனவு கண்டவள் திக்கென்று விழித்துப் பார்த்தாள்.. அவள் முன்னே கையில் மல்லிகைச் சரத்துடன் அவள் கண்களையே காதலாகவும் அல்லாமல், காமமாகவும் அல்லாமல் நீண்ட நாட்கள் கழித்துப் பார்த்திருந்தான்.. என்ன விதமான பார்வை என்றே அவளால் கணிக்க முடியவில்லை.. இந்த காந்தப் பார்வையில்தானே அவள் சொக்கிப்போய் ஈஸ்வரின் காதலில் விழுந்தாள்..
நேற்றிரவு நடந்த நிகழ்வுகளுக்கு தன்னை வசை பாடுவதற்கு கோவிலுக்கே வந்து விட்டானே எனப் பேந்த பேந்த விழித்து கணவனின் பார்வையில் சிக்குண்டு அவன் முகத்தை ஒருவித பயத்துடன் பார்த்திருந்தாள்.
ஈஸ்வரின் கண்கள் ஜெனியின் கழுத்து வளைவில் அவனின் பற்தடம் பட்டு சிவந்து பதித்திருந்ததை தான் பார்த்தது.
ஜெனியை நிகழ் காலத்துக்குக் கொண்டு வர அவள் முகத்துக்கு நேர சொடக்குப் போட்டு “என்ன வேண்டுதல் வைச்சு இந்த காலை வேளையில கோவிலுக்கு வந்திருக்க.. என்னை இன்னும் எப்படி சித்ரவதை பண்ணாலாம்னு கடவுள்கிட்ட கேட்க வந்தியா?” என அவளிடம் காய்ந்தான்.
“இல்ல! இல்ல!” என கண்ணை உருட்டி உருட்டி விழித்தாள்.
“இதப் போல கண்ணை உருட்டி உருட்டி முழிச்சு தான என்னை ஒரு காலத்துல மயக்கின.. நேத்து நைட் நமக்குள்ள என்ன நடந்துச்சு சொல்லுடி”
“அது அது வந்து” என சுற்றும் முற்றும் பார்த்தாள் யாராவது தங்களை வேடிக்கைப் பார்க்கிறார்களாவென்று.. அதிகாலை வேலை என்பதால் ஓரிரண்டு பேர் மட்டும் தான் கோவிலில் இருந்தனர்.
“என்ன சார் பக்கத்துல மனைவி இருக்காங்க.. நீங்க இன்னும் மல்லிகைப் பூவ கையில வச்சிருக்கீங்க.. உங்கப் பெண்டாட்டி தலையில வச்சிவிடுங்க.. அப்டியே உங்க கையால இந்த குங்குமத்தையும் வச்சிவிடுங்கோ.. எனக் கையில் வைத்திருந்த குங்குமத்தை நீட்டினார்.
ஐயர் நீட்டிய குங்குமச்சிமிழில் இருந்தக் குங்குமத்தை எடுத்து ஜெனியின் மூன்றாம் பிறை நெற்றியில் வைத்துவிட்டான்.. அவன் குங்குமம் வைத்த முடித்ததும் ஐயர் சென்றுவிட.. ஜெனியின் கண்களில் கடகடவென கண்ணீர் சொட்டுச் சொட்டாய் விழுந்தது.
“எதுக்குடி அழுகுற என்னை இங்க எல்லாரும் உன்னை கொடுமைப் படுத்துறேன்னு நினைக்கனுமா” எனப் பல்லைக்கடித்தான்.
“இல்ல ஈஸ்வர்..” என பேச வாயெடுக்கும் முன்…
“இங்க பாரு காலையில உன்கிட்ட வந்து பேசணும்னு நான் வரல.. நேத்து உன்கிட்ட ஏதாவது தப்பா நடந்திருந்தா சாரி” என நின்று பார்க்காமல் சென்றவன்.. ஐயர் கொடுத்த கையிலிருக்கும் பூவை பார்க்கத் திரும்பி வந்து இந்தா இந்தப் பூவை வச்சுக்கோ.. என அவள் கையில் கொடுத்தான்.
முதன் முறை பூ வாங்கிக் கொடுக்கும் கணவன்.. நடுங்கத்துடன் பூவை வாங்கி தலையில் வைத்துக்கொண்டாள்.. சில மாதங்களுக்கு முன்பு இதே பூவை வைக்க முடியாத நிலையில் இருந்தாள் அல்லவா ஜெனி.. இப்போதும் ஈஸ்வர் பூ கொடுத்ததும் அவள் மனது சந்தோஷப்பட்டது.
“என்னடி கனவு கண்டுட்டு உர்கார்ந்திருக்க.. உன்னை இங்கயே விட்டுப் போனா இந்தக் கோவில் ஐயர் என்னைக் கேள்வி மேல கேள்வி கேட்பார் போல.. சீக்கிரம் எழுந்து வா.. நான் ஆபிஸ் கிளம்பணும்” என்று எரிந்து விழுந்தான்.
“ம்ம்.. வரேன் என எழுந்திருக்க.. மெழுகு சிலை போல எழுந்து நின்றாள் ஜெனி.. முழு நிலவாக எழுந்து நிற்கும் மனைவியை சிரசிலிருந்து, பாதம் வரை முழுதாக அவளைப் பார்த்தான்.
அவனுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் டிசைனர் சாரி போட்டிருந்தாள்.. கைகளில் ஒரு செட்டு தங்க வளையலும், கூடவே சேர்ந்தாப்பல கல்யாண கண்ணாடி வளையல்களும் போட்டிருப்பதைக் கண்டு இந்தக் கண்ணாடி வளையல் தான் என் முதுகை பதம் பாத்திருக்கு.. இன்னும் கூட முதுகு வளையல் கீறின இடம் எரியுதுடி.. மௌனமாக அப்பட்டமாக சைட் அடித்தான்.
(“இன்னும் எத்தனை நாள் ஈஸ்வரை மகாவை நினைத்து அழுக வைக்க முடியும்.. மீ மைண்ட் வாய்ஸ்)
ஒரு கட்டத்தில் எல்லாத்தையும் கடந்து வரணும்னு.. நம்மள நம்பி ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்தப் பெண்ணும்.. அவள் விட்டு சென்ற காலத்தில் காதலித்தப் பெண்ணையே மறக்க வைக்கமுடியும் என்று ஒருத்தி தன் வாழ்வில் என்றும் மறக்க முடியாத பரிசைக் கொடுத்து சென்றிருக்கிறாள்.. அவள் தந்த பரிசை பொக்கிஷமாகப் பார்த்துக்க வந்த தன் மனதை படித்தவளையும் பாதுகாக்கணும்.. இதுதான் நிதர்சனம் என்று, இன்று காலையிலேயே முடிவு செய்து விட்டான்.. அதற்கான முதற்படிதான் இன்று தேவியின் தரிசனம் காண வந்து விட்டான்.. அதற்காக முழுதாக ஜெனியை மன்னித்துவிட்டான் என்று அர்த்தம் இல்லை.. மனைவியாக தண்டனை கொடுக்கப் போகிறான்.
“போலாமாங்க” என்று சேலை முந்தானையைத் திருகிக் கொண்டே ஈஸ்வரக் கேட்க.
“ம்ம்.. வாடி” என ஈஸ்வர் முன்னே செல்ல ஜெனி பின்னே அன்ன நடை நடந்து சென்றாள்.
கோவிலில் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் 60 ஆம் கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. அவர்களைச் சுற்றி பேத்தும், பிதிரும் சல சலத்துக் கொண்டு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டிருக்க.. அதில் ஒருவர் ஈஸ்வர்க்கு தெரிந்தவர்.. ஈஸ்வர் வேகமான நடையுடன் கோவிலின் வாசலுக்குச் செல்ல.. “ஈஸ்வர்” என்று அந்த நபர் கூப்பிட…
புருவம் சுருக்கி திரும்பி நின்ற ஈஸ்வர் முகத்தில் புன்னகை.. “சார் நல்லாயிருக்கீங்களா” என அவரின் கையைப் பிடித்தான்.
“நான் நல்லாயிருக்கேன்பா.. இன்னிக்கு என்ன உன் வெட்டிங்டேவா.. உன் பொண்டாட்டியோட எர்லியா கோவிலுக்கு வந்திருக்கே.”
“இல்ல சார்.. சும்மா வந்தோம்” என புன்சிரிப்புடன் அவருக்கு பதில்கொடுக்க..
“ஈஸ்வர் வாங்க எங்கப்பா அம்மாவுக்கு 60 ஆம் கல்யாணம் நடத்தினோம்.. நீங்களும் வந்து அவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க..” என்று ஈஸ்வரின் பக்கத்தில் பம்பிக்கொண்டு நின்ற ஜெனியைப் பார்த்து என்னம்மா உன் ஹஸ்பண்ட் சொன்னா தான் வருவியா.. என ஈஸ்வர் முகத்தைப் பார்க்க..
“வா போலாம்” என தலையசைக்க, பூம்பூம் மாடு போல தலையை ஆட்டி அவன் பின்னே சென்றாள்.. பின்னே கல்யாணம் முடிந்த நாளிலிருந்து அவளிடம் எள்ளும், கொள்ளும் வெடிப்பது போல முகத்தைக் காட்டி விட்டு இப்போது என்னமோ பாசமாய் முகத்தை வைத்து ஜெனிகிட்ட பேசினா அவள் என்ன செய்வா.. இன்னும் ஜெனிக்கு நாம கனவு காணுறோமா என்று கூடத் தோன்றியது.
“ஏய்! வா பராக்கு பார்த்துட்டு நிற்குற” என ஜெனியின் கைப்பிடித்தான்.. ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சி கொடுத்தா பெண்ணவள் எப்படித்தாங்குவாள்.. கீ கொடுத்த பொம்மைப் போல அவனுடன் சென்றாள்.
கோபியும், பத்மினியும் காரில் ஆபீஸ் கிளம்ப..
நந்தி போல முன்னே வந்து நின்ற வடிவு.. “அம்மாடி பத்மினி சாய்ந்தரம் எத்தனை மணிக்கு வருவ… ஒரு ஐந்து மணிக்கு வந்துருவியா..”
“ஆறு மணி ஆகிடும் அத்த.. அதுவும் இன்னிக்கு பர்ஸ்ட் நாள் வேலைக்கு போறேன் கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்” எனக் கோபியைப் பார்த்துக்கொண்டே கூற.
“இல்லம்மா நைட்டுக்கு நீ வந்து தான் டிபன் செய்யணும்.. ராஜிக்கு உடம்பு முடியலை.. பிரசவலி எப்பவேணாலும் வரலாம் அதான் அவள பக்கத்துல இருந்து பார்த்துக்கணும் அதான் கேட்டேன்” என வார்த்தைகளை மென்று விழுங்கினார்.
“வேலை முடிச்சதும் சீக்கிரம் வர பார்க்குறேன் அத்த”
“என் பையன்தான் உனக்கு ஹெட்டுல.. அவன் உன்னை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி வைப்பான் இல்ல கோபி..” எனப் பல்லைக்காட்டினார்.
“ஆமா நான் வேலைக்குப் போறது எங்க தாத்தா கம்பெனி.. நானும், என் பெண்டாட்டியும் ஆபீஸ் போனவுடன் நாங்க நினைச்ச டைம்முக்கு வேலை முடிச்சு வந்திடலாம் பாருங்க .. போங்கம்மா போய் ராஜிக்கு ஜுஸ் போட்டுக் கொடுங்க.. இன்னிக்கு சீக்கிரம் வந்துடுவோம்” என வடிவை மிரட்டி வீட்டுக்குள் அனுப்பினான்.
“நான் இப்ப பேசினா உனக்குக் கசப்பாதாண்டா இருக்கும்.. உன் பொண்டாட்டி தான் நைட் உனக்கு தலையணை மந்திரம் போடுறாளா.. எனப் புலம்பிக்கொண்டே சமையல் கட்டுக்கு ஜுஸ் போடச் சென்றார்.
“ஏன் கோபி அம்மாட்ட போர்சா பேசுற..”
“ஏய் அவங்ககிட்ட எப்படி பேசணும்னு எனக்குத்தெரியும் நீ போய் கார்ல ஏறு.. முதல் நாள் வேலைக்கு போகும் போது மாமியாரும், பெண்டாட்டியும் டென்சன் பண்ணுறீங்க..” எனக் காருக்குள் ஏறினான் கோபி.
“இப்ப எதுக்குடா என்கிட்ட சீறர..” எனக் கோபியை முறைக்க.
மௌனமாக இருந்து காரை ஓட்டினான்.. அச்சோ கல்யாணம் பண்ண ஆம்பிள்ளைங்க நிலைமை ரொம்ப குஷ்டம்டா சாமி எனத் தலையை குலுக்கிக்கொண்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
கோபி பேசாமல் கார் ஓட்டுவதைப் பார்த்த பத்மினி.. “டேய் மாரியம்மன் கோவிலுக்கு போய்ட்டு போலாமா..” என மெதுவாக கேட்டாள்.
“ம்ம்.. போலாம்” எனக் காரை ஈஸ்வர் சென்ற மாரியம்மன் கோவிலுக்கு விட்டான்.
மூத்த தம்பதியர்களிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கினர்.. “ரெண்டு பேரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்” என தலைதொட்டு ஆசிர்வாதம் செய்து இருவர் மேல பூ தூவினர்.. ஜெனியின் மனதோ வெகு மாதங்கள் கழிந்து இன்று நிம்மதி கொண்டது.
ஆசிர்வாதம் வாங்கி எழுந்து வெளியே வர.. கோபியும், பத்மினியும் உள்ளே வந்தனர்..
ஈஸ்வர், கோபியைப் பார்த்தவுடன் அவனை தனியே இழுத்து சென்று நேத்து நீ செய்த வேலைக்கு உன்னை கொல்லப்போறேன் பாரு என்று நாக்கை மடித்து மிரட்டினான்.
“டேய் என்னடா ஒரேயடியா மிரட்டுற.. எல்லாம் என் ப்ரண்ட் நல்லாயிருக்கணும் தான் செஞ்சேன்.. அது உனக்குத் தப்பா தெரிஞ்சா என்னை என்ன வேணா செய்துக்கடா.. அடிக்கிறயா அடி” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி பேசினான் கோபி.
ஈஸ்வரால், கோபி காட்டும் அன்புக்கு முன்னால் அவன் கோபம் எடுபடாமல் போனது.. கட்டிக்கொண்டான் நண்பனை
ஜெனியும், பத்மினியும் ரெண்டு பேரும் சண்டை போடுவாங்களோ என அச்சம் கொண்டு பார்க்க.. இருவரும் கட்டிப்பிடித்ததைப் பார்த்து “ரெண்டும் ப்ராடு பயலுங்க ஜெனி..” என அப்போதுதான் ஜெனியின் முகத்தைப் பார்த்தாள் பத்மினி.
ஜெனியின் முகத்தில் ஒரு புதுப்பொழிவு தெரிய.. “என்னடி என் ப்ரண்ட மறுபடியும் உன்கிட்ட விழ வச்சிட்டியா..” எனத் தோளில் இடித்துக் கண்ணடித்தாள்.
“ம்க்கும் அப்டியே உன் ப்ரண்ட் என்கிட்ட விழுந்துட்டாலும்..போடிங்க” என இரவு நடந்ததை மேலோட்டமாக மட்டும் கூறினாள்.
அதற்கு ஈஸ்வரும், கோபியும் இவர்கள் அருகே வந்து விட.. பேச்சை நிறுத்திக்கொண்டனர்.
மூத்த தம்பதிகள் வெளியே வர.. கோபியும், பத்மினியும் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
“கோபி நீங்க சாமி கும்பிட்டு ஆபிஸ் போறதுக்குள்ள.. நான் வீட்டுக்கு போய் ஜெனிய விட்டுட்டு ஆபிஸ் வந்துடறேன்..” எனக் கோபியிடம் கூற.
நண்பனின் மாற்றம் கண்டு வாய்பிளந்து பார்த்தான் கோபி.
“வாய மூடுடா ஈ புகுந்திடுப்போகுது” என அவன் வயிற்றில் கிள்ளிவிட்டு வெளியே சென்றான் ஈஸ்வர்.
“வரேண்டி, வரேண்ணா” என இருவரிடமும் சொல்லிவிட்டு கணவனின் பின்னே சென்றாள் ஜெனி.
ஜெனி காரின் பின் சீட்டில் ஏறப் போக.. “நான் என்ன உனக்கு டிரைவராடி முன்னாடி வந்து உட்காரு” எனக் கத்த.
“எதுக்கு இப்படி கத்துறான்.. ரோட்ல போறவங்க, வரவுங்க என்னையேப் பார்க்குறாங்க” என ஈஸ்வரை மனதுக்குள் வறுத்துக்கொண்டு முன் கதவைத் திறந்து ஏறி அமர்ந்தாள்.
“அது.. அந்தப் பயம் இருக்கட்டும்” எனக் காரை வீட்டுக்கு விட்டான்.
அங்கே விஜயாவிடம் குளிக்க மாட்டேன்.. என அடம் செய்துகொண்டிருந்தது அபிநயா.
அபிநயா இப்போது நடை பயில ஆரம்பித்திருந்தது.. இருவரும் வீட்டுக்குள் நுழைய பாதி தலை நனைந்து, பாதி உடம்பு தண்ணீரில் நனையாமல் உடம்பில் சோப்பு நிறந்து விஜயாவிற்கு போக்குக் காட்டி தத்தி தத்தி ஹாலுக்கு நடந்து வந்தது… ஜெனியைக் கண்டதும் “ம்மா” எனக் கைத் தூக்கி தூக்கச் சொல்லியது.
பின்னால் வந்த ஈஸ்வர், மகள் மகளின் உடல் ஈரமாக இருப்பதைப் பார்த்து “அபிக்குட்டி குளிச்சாச்சா.. அப்பாட்ட வாங்க” என ஜெனியிடமிருந்து தூக்க.
அபியின் உடம்பிலிருந்த சோப்பு கரை அவன் சட்டை முழுவதும் ஆக்கி அழுக்காக்கியது.
தந்தையின் சட்டையில் சோப்பு நுரையைக் கண்டு கைதட்டிச் சிரிக்க.. பக்கத்தில் நின்ற ஜெனியும், ஈஸ்வரின் சட்டையில் அழுக்கு ஒட்டிக்கொண்டதைப் பார்த்து கிளுக்கென்று நகைத்துவிட்டாள்.
அபியை தேடி வந்த விஜயாவும் மகன் இருக்கும் கோலம் கண்டு சிரிந்த விட.. “ஏய் பேபிஇஇ என்ன விளையாட்டு இது” எனக் குழந்தையை கன்னத்தில் செல்லம்மாய் கடித்து வைத்தான்..
“ஆஆ.. அப்பா கடிச்சு இங்க வலிக்கு” எனக் கன்னத்தைத் தேய்த்து கத்தியது அபிநயா.
“இப்படி அவள குடு.. குளிக்காம என்கிட்ட ஆட்டம் காட்டி வெளிய ஓடி வந்துட்டா” என அபியை வாங்கிக்கொண்டு குளியலறைச் சென்று விட்டார் விஜயா.
“சட்டையை மாத்திட்டு வாங்க ஈஸ்வர் சாப்பாடு எடுத்து வைக்குறேன்..” என டைனிங் டேபிளுக்குச் சென்ற ஜெனியின் கைபிடித்து பெட்ரூம்க்கு கூட்டிச் சென்றான் ஈஸ்வர்.
