தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

தேனூறும் இதழே மடல் எழுது

8 தேனூறும் இதழே மடல் எழுது 
தன் தோள் மேல் விழுந்த கைகளை பார்த்து விஜய் திரும்பி பார்க்க தர்மனும் ஈஸும் நின்றார்கள்..
“ஹீக்கும் போயும் போயும் மாமூக்கிட்டையா மாட்டணும் அட்வைஸ் பண்ணியே காத செவிடாக்கி விட்டிருவானே”..
“என்ன மாமூ குடும்பமா சுத்திட்டு இருக்க?”.. 
“யாரு நான் குடும்பத்தோட சுத்துறேனா?”..
“சாரி மாமூ ஒரு சின்ன ஊருகூட சுத்திர..வண்டி இன்னும் சேதாரம் ஆகாம இருக்கு போல” என்று தர்மன் வண்டியை கிண்டல் பண்ண..
“வாய திறக்க விடாம நீயே பேசு..யாருடா அந்த பிள்ளை? புதுசா இருக்கு பைக்கில இறக்கி விடுற..நீ லிப்ட் கொடுத்தா கூட பெட்ரோலுக்கு காசு தான்னு கேட்டு வாங்குவியே”..
“நான் எப்போ மாமூ சொன்னேன்..  லிப்ட் கொடுத்தேன்னு அவ உன் மருமக மாமூ”..
தர்மன் அதிர்ந்து டேய் “என்னடா சொல்ற?.. நம்ம ஆளுங்க மாதிரி இல்லையேடா அவ.. உங்க அப்பனுக்கு தெரிஞ்சது உன்ன ஒன்னும் செய்ய மாட்டார் என் கழுத்த அறுத்து போட்டிருவாருடா”..
“மாமூ என் காதலுக்காக உன் குட்டியூண்டு  கழுத்த கொடுக்க மாட்டியா இவ்வளவுதானா நீ என் மேல வச்சிருக்க பாசம்”.. 
“ஏது கழுத்த கொடுக்கணுமா? ஏற்கனவே உங்கூட சுத்துறேன்னு உன் அண்ணன் ரகு பய உங்க அப்பாகிட்ட என்னத்தையோ சொல்லி வச்சிருக்கான்  ஊரு பக்கம் போனா கண்ணாலையே எரிச்சி தள்ளுறாரு”..
“ஹிஹி நான் அதான் அந்த ஊர் பக்கமே வர்றது இல்லை அவர் கண்ணு எரிஞ்சா பொங்கல் பானை வச்சி பொங்க சொல்லு.. அப்புறம் அந்த நாதாரிய அண்ணேன்னு சொன்ன உன் மண்டையை பிளந்து மெடிக்கல் காலேஜுக்கு ஆராய்ச்சிக்கு அனுப்பி விட்டிருவேன்”..
“ஆக மொத்தம் அப்பனும் மகனும் என் தலையை எடுக்காம விட மாட்டிங்க போல”..
“யா அப்கோர்ஸ்” என்று விஜய் தோளை குலுக்க..
“டேய் விஜய் சீரியசா பேசுறேன்.. அந்த பொண்ண லவ் பண்றியா? உனக்கு வீட்ல உங்க அப்பா பொண்ணு பார்த்திட்டு இருக்காரு..இதுக்கு சம்மதிக்க மாட்டாருடா”..
“பொண்ணு பார்த்தா, அவர கட்ட சொல்லு மாமூ.. நம்ம இனம் அவ இல்லை அது தெரியும்.. நான் ஆண் இனம் அவ பெண் இனம் அது போதும் காதலிக்க.. நான் காதலிக்கிற விஷயம் தெரிஞ்சா உடனே என் சந்தோஷத்தை கெடுக்கதான் பார்ப்பார் அந்த பெரிய மனுஷன்”..
“தெரியுது இல்லடா பிறகு எதுக்கு இந்த காதல் நீ பெரிய பதவியில இருந்தாலும் உங்க அப்பாவை மீறி ஒன்னும் செய்ய முடியாது விஜய்”..
“ஹாஹா அவர் என்ன செஞ்சாலும் பொறுத்து போக நான் ஒன்னும் விரல் சப்பிகிட்டு இருக்கிற குழந்தை இல்லை.. இவதான் என் காதலி இவதான் என் மனைவின்னு இதோ இங்க எழுதிட்டேன் அது நான் செத்தாகூட அழியாது”.. என்று தன் இதயத்தை தொட்டு காட்டினான்..
தர்மனுக்கு தெரியாதா அவன் விளையாட்டாக பேசவில்லை உண்மையைதான் பேசுகிறான் என்று..
“எனக்கு நீ சந்தோஷமா இருக்கணும் விஜய்.. ஆனா நீ  சிரிக்கவே கூடாதுன்னு அந்த ரகுவும் உன் அப்பாவும் நினைக்கிறாங்கடா”..
ஆம் வீரபாண்டியனுக்கு மகன்மீது இருந்த கோபம் வெறுப்பாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது விஜய் போஸ்ட்டிங் கிடைத்த பிறகு அந்த பக்கமே போகவில்லை.. ரகு அவர் மனதில் இருந்த கோவதீயை அவ்வப்போது அவன் செய்யூம் திலலுமுல்லு சஸ்பெண்ட் அனைத்தையும் உடனுக்குடன் அவருக்கு அப்டேட் செய்து விஜய் மீது தீராத பகையை ஏற்படுத்தி விட்டான்..
அங்கே விஜய் போனால் வந்தானாகூட இங்கே ஏன் வந்தான் என்பது போல பார்ப்பார்.. இருக்கும் இரண்டு நாளும் அவனால் எவ்வளவு முடியுமோ? அவ்வளவு வம்பு இழுப்பான் தன் தகப்பனையும் ரகுவையும்.. காலையில் வீரபாண்டியன் பேப்பர் வாசிக்க வந்தால் இவன் இரண்டு மணி நேரமாக வாசிக்கிறேன் என்று நடிகைகளின் படத்தைப் பார்த்து கொண்டிருப்பான்.. வேண்டுமென்றே அவர் முன்னால் சிகரெட் பிடிப்பது.. போகும் பெண்களை கூப்பிட்டு நக்கல் அடிப்பது என்றும் சொல்லி கொண்டே போகலாம்..
கடைசியில் மாட்டுவது தர்மன்தான் இவனை நன்றாக சட்டியில் போட்டு வதக்கி விட்டு போய்விடுவார்.. ரகு அவர் போகும் வரை அமைதியாக சுற்றுபவன்.. போனதும் விஜய்யை வம்பிழுக்க கடைசியில் அடிதடியில் வந்து நிற்கும்.. இதற்காகவே வந்தனா அவனை இங்கு வர விட மாட்டார்..
பதவிக்கு வந்ததும் மனதில் சொந்தங்களுக்கு இடைவெளி ஒன்று வந்து விட்டது தன் மாமனோடு ஒதுங்கி கொண்டான்.. ஆனால் இப்போதும் ரகு சென்னையில் இவனை பார்க்கும் இடங்களில் இவனை சீண்டுவான்.. விஜய் சும்மாவே ஆடுவான் இப்போது ஐபிஎஸ் வேறு வேண்டுமென்றே அவன் மருத்துமனை சென்று குட்டி ரவுசு பண்ணிவிட்டு வந்தால்தான் தூக்கம் வரும்..
அவனிடம் தானாக வம்பிற்கு போக மாட்டான்  வந்த சண்டையை விட மாட்டான்..
“அதையும் பார்த்திரலாம்  வள்ளிய கட்டிக்கிட்டு என் பிள்ளைங்க அவர் மேல சுச்சா அடிக்கல என் பேரு விஜய் இல்லை”..
“ஆக ஒரு முடிவோடுதான் இருக்கு”..
“இல்லை மாமூ முடிவு எடுத்த பிறகுதான் இதுல இறங்கவே செஞ்சேன்.. ஆர்வ கேளாறுல உன் அக்கா வந்தனாகிட்ட சொல்லி வச்சிறாத”..
“டேய் அம்மான்னு சொன்னா குறைஞ்சா போவ.. பாவம்டா அவ உங்க அப்பாவுக்கு பயந்து உன் மேல உள்ள பாசத்தை மறைச்சி வச்சிருக்கா”.. 
“பெரிய புடலங்கா பாசம் போ மாமூ நான் என் வள்ளிகூட போயிட்டு வந்ததுல ஹப்பியா இருக்கேன் மூட ஸ்பாயில் பண்ணாத”..
“சரிடா மருமகனே மருமக வீட்ல ஒத்துகிட்டாங்களாடா உன் காதலை”..
“எங்க இன்னும் அவளே ஒத்துக்கலையே பிறகுதான் மிலிட்டரிய சமாளிக்கணும்”..
“என்ன அந்த பொண்ணே ஒத்துக்கலையா? பிறகு எப்படி உன்கூட பைக்கில?” என்று சந்தேகமா கேட்க..
“ஹிஹி மிரட்டி தூக்கிட்டு போயிட்டேன் மாமூ மிரட்டினா பச்சைபுள்ள மாதிரி முழிப்பா பாரு அட அட பார்க்கவே கண்ணு பத்தாது மாமூ.. உனக்கு எப்படி அது தெரியும்? நீ இந்த அண்டாவ பார்க்கவே இரண்டு கண்ணு உனக்கு பத்தாது”..
“டேய் சும்மா இருடா ஏதோ நான் அவள காதலிச்சி கல்யாணம் பண்ண போறது போல பேசாதடா நல்ல பொண்ணு காதில கேட்டா கஷ்டப்படும்”..
“ஆஹான் எனுங்க ஈஸு எங்க மாமாவுக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்காம் நீங்க ஓகே சொன்னா நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு சொல்ல சொன்னார்..மாமூ நீ சொல்ல சொன்ன மாதிரி சொல்லிட்டேன் மாமூ பி ஹாப்பி” என்றுவிட்டு வண்டியில் பறந்து விட்டான்..
தர்மன் தலையில் கைவைத்து ஈஸு பக்கம் திரும்ப அவள் அங்கு இல்லை..
“அப்பா சாமி தப்பிச்சோம் என்னா பாடு படுத்தி எடுக்கிறான் நல்ல வேளை ஈஸு இல்லை கேட்டா நம்மள என்ன நினைக்கும்” என்று புலம்பியபடி ஈஸுவை நோக்கி செல்ல..
அவள் டீக்கடையில் டீ குடித்து கொண்டு இவனுக்கும் டீ வாங்கி கொடுக்க..
“தேங்க்ஸ் ஈஸு”.. 
“இருக்கட்டும் சார் நீங்க இரண்டு பேரும் ஏதோ பெர்சனல் பேசின மாதிரி இருந்தது அதான் இங்க வந்திட்டேன்”..
“ச் சே அதெல்லாம் இல்லை”.. என்று அவள் கையில் உள்ள சிப்ஸ் பாக்கெட்டை பார்த்தவன்..
“நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்காத..உன்ன சாப்பிடாதன்னு சொல்லல இந்த மாதிரி ஜங்க் புட் சாப்பிடாத அதனாலதான் உடம்பு போடுது.. டிரை பண்ணி பாரு” என்று அக்கறையோடு சொல்ல..
அவள் வீட்டில் தங்கைகளுக்கு தாயிக்கும் இவள் பணம் காய்க்கும் மரம் இப்படி அக்கறையான பேச்சுகள் இதுவரை குடும்பத்தில் வந்தது இல்லை.. தர்மன் முகத்தை பார்த்தாள்..
மூப்பத்தி நான்கு வயது ஆண்மகன் களையான முகம் எடுப்பான உடல் கட்டு.. எந்த பெண்ணும் வேண்டாம் என்று சொல்ல மாட்டாள்..அவன் குணம் தங்கம்.. பழகிய இரண்டு நாட்களில் கண்டு கொண்டாள்..
“சரி சார் அப்படி இருந்தா மட்டும் என்ன கட்டிக்க யாரும் வரவா போறாங்க?”..
“ஏன் வரமாட்டாங்க ரொம்ப வேண்டாம் ஈஸு ஒரு ஏழுபது கிலோ வந்தாளே போதும் மத்தபடி நீ அழகாதான இருக்க ஈசியா மடங்கிருவான்க” என்று டீயை குடிக்க..
“ஓகே சார் ஏழுபது கிலோ ஆகுறேன் நீங்க என்ன கட்டிக்கிறீங்களா?”.. என்க..
தர்மனுக்கு குடித்த டீ புரை ஏறி விட்டது..
ஈஸு..என்று அவன் வாயை திறக்க..
“எதுவும் சொல்லிறாதீங்க என் உடம்ப குறைக்கிறேன் ஏழுபது கிலோவரை கண்டிப்பா முடியும் அதுக்கு மேல சத்தியமா முடியாது.. என்ன கட்டிக்கிறிங்களா?”.. என்று அவன் கண் பார்த்து கேட்க..
“ஏய்! என்ன பேசுற எனக்கு உன் வெயிட் எல்லாம் பிரச்சனை இல்லை உன் நல்லதுக்காக சொன்னேன் மத்தபடி சாரி எதுவும் ஹட் பண்ணியிருந்தா”..
“நோ சார் நான் நிஜம்தான் கேட்டேன்”..
“யோசிச்சு சொல்லவா ஈஸு”..
ம்ம் என்று தலையாட்ட சரி வா போகலாம் என்று யோசனையோடு சென்றான்..
இப்படி கூறுவாள் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை அவள் பழக இனிமையானவள் கடவுள் என்ன நினைக்கிறாரோ அது நடக்கட்டும் என்று விதியின் ஓட்டத்தில் தன் வாழ்க்கையை விட்டுவிட்டான்..
அத்தோடு இருவரும் அதை விட்டுவிட்டனர்..  
வீட்டிற்கு வந்த மகிழா தன் முகம் தந்தை பார்த்துவிட கூடாது என்று படாத பாடு பட்டாள்.. கிறுக்குபயல் முத்தம் கொடுக்கிறேன் என்று விழுந்து கடித்து வைத்திருந்தான்.. ஏற்கனவே அவள் உதடு சிவப்பு அவன் சப்பி இழுத்ததில் இன்னும் ரத்தமாக இருந்தது முகம் வேறு அழுதழுது சிவந்து போய் இருந்தது.. வேலைகளை செய்து விட்டு ஓடி போய் படுத்து கொண்டாள்..
அழுகை மூட்டி கொண்டு வந்தது தந்தையிடம் சொல்ல பயம்.. விஜய்யிடம் எப்படியாவது இது ஒத்துவராது என்று தீர்க்கமாக சொல்லிவிட வேண்டும்.. இனி மெத்தனமாக அவர் எங்கே கூப்பிட்டாலும் செல்லக்கூடாது..நினைந்தவளுக்கு கண்கள் மூட முடியவில்லை அவன் முத்தம் கொடுத்தது அவள் கண்ணை பார்த்து பேசியது என்று படமாக ஓட படுக்கையில் எழும்பி உட்கார்ந்து கொண்டாள்..
“நம்மகிட்ட என்ன இருக்குன்னு லவ் பண்றேன்னு சொல்றாரு..பார்க்கவே அவவளவு அழகா கலரா இருக்காரு.. நம்ம கலருக்கும் அவர் கலருக்கும் ஏணி வச்சாலும் எட்டாதே இப்படி லவ் பண்றேன்னு சொல்லி உதட்டை கடிச்சி விட்டுட்டாரு.. பேசாம காய்ச்சலுன்னு காலேஜூக்கு ஒரு வாரம் போகாம இருந்திருவோம் அதுதான் வழி” என்று நினைத்தவள் தூங்க முயற்சி செய்தாள்… (நீ ஒரு வழி போட்டா போதுமா அவன் வழி தனி வழிமா )
இங்கு லவ்வர் பாய் விஜய் ல லலலா ஆ லலலா என்று ரஜினி ஸ்டைலில் ஒரே பாட்டுதான் கிறுக்கு முத்தி போய் திரிந்தான் மகிழவல்லி மீது..காலை எப்போது விடியும் எப்போது அவளை பார்க்கலாம்.. அவளை நாளை எங்கு கடத்தி கொண்டு போகலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.. (ஆக கடைசிவர நீ வேலை பார்க்க மாட்ட)
காலை மகிழவல்லி காலேஜ் கிளம்பாமல் இருக்க மேஜர் “இன்னும் காலேஜ் போகாம என்ன செய்யுற.. டைம் கரெக்டா மெயின்டெய்ன் பண்ண மாட்டியா”(அங்க போனா உன் மகளை விஜய் மெயின்டெய்ன் பண்ணுவான் பரவாயில்லையா)
“அப்பா அதுப்பா காய்ச்சல்… இல்..ல வயிற்ற வலி..பா..”என்று பொய் சொல்ல தெரியாமல் திணர..
“என்ன வயிற்று வலியா? போன வாரம்தான வயிற்றுவலி சொன்ன”..
“ஆமா பா .. இது மதியம் சாப்பிட்டது ஒத்துக்காம வாந்தி எடுத்தேனா அது வயிறு வலி வந்திடுச்சிப்பா.”.
“ஹாங் அது எப்படி வாந்தி எடுத்தா வயிற்றுவலி வரும் என்ன பிரச்சனை உண்மையை சொல்லு”..(பிரச்சனைதான அங்க போனா விஜய் வாந்தி எடுக்க வச்சிருவான்னு சொல்லு மிலிட்டரிக்கிட்ட)…
“நிஜமாதான்பா ரொம்ப வயிறு வலிக்குது” என்று இல்லாத வயிற்று வலிக்கு ஆட்டோ பிடித்து அப்பாவும் மகளும் ஆஸ்பத்திரி போய் ஊசியும் போட்டுவிட்டு வந்தனர்.. நடித்தால் சிறப்பாக நடிக்க வேண்டும் அல்லவா (நீ விஜய் கூட சேராத.. கெட்ட பிள்ளையா மாத்திருவான் அம்புட்டுதேன் சொல்லுவேன்)
ஒருவாரம் தன் தந்தை காலில் விழாத குறையாக விழுந்து சரி கட்டி காலேஜ் போகாமல் வீட்டிலேயே முடங்கி கொண்டாள்..
இதற்கெல்லாம் விட்டுவிடுவானா? கேடி விஜய் ஏழாவது நாள் இரவு அவள் வீட்டிற்குள் ஏறி குதித்தவன் தூங்கும் தன் கருப்பழகியை கன்னத்தில் கைவைத்து ரசித்து கொண்டிருந்தான் 
விஜய் லவ் மூட் ஸ்டார்ட் நவ்…  

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *