தேடல் முடியுமா?
அப்போ நீ என்னை ஏமாற்றி தப்பிக்க நினைத்தாயா ? எல்லாம் பொய்யா?
என்ற அருணின் கேள்வியில் ஜீவாகூட ஒரு நிமிடம் சிலையாகி போனாள்.
அவள் சிலையான அடுத்த நொடி அவள் கையில் இருந்த பத்திரத்தை தனது கோட்டினுள் இருந்த பொக்கற்றினுள் வைத்து திரும்பி சென்று கதவை திறக்கும் சத்ததில் சுயனிலைக்கு மீண்டாள் ஜீவா.
இப்பொ என்ன செய்வது சரி இன்னும் நேரம் இருக்கிறது ஜோசிக்கலாம். பெரியம்மாவிடம் சொல்லலாமா என்று ஜொசித்து கொண்டு பெரியம்மாவின் அறைவரை சென்றுவிட்டாள்.
அப்போது அவளால் அவள் காதுகளை நம்ப முடியவில்லை அருண் தான் அங்கே நின்று பெசிகொண்டு இருந்தான்.
காயத்திரிக்கு மேக்கப் போட வந்தவர்கள் வரும் வழியில் அவர்களுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு விட்டதால் அவர்களால் வர முடியவில்லை அதனால் காயத்திரியை ஜீவாவுடன் அருகில் உள்ள ஒரு பியூட்டி பாளரில் போய் தயாராகி வர அனுப்பி விட்டதாக கூறிக்கொண்டு இருந்தான்.(அப்பொது ஒரு தொலைபேசி ஒலித்தது )
கலோ!
சொல்லுங்க மாப்பிள்ளை,
ஓம் மாப்பிள்ளை இதில் என்ன இருக்கிறது உங்கள் மனைவி நீங்கள் சொன்னதும் போய் விட்டாள்.
சரி நான் இப்போது குடுத்து விடுகிறேன்.
அருண் தம்பி ஜீவா எங்கே?
அவள் காயத்தியின் அறையில் விட்டுச்சென்ற நகை மற்றும் வேறு சில பொருட்களையும் எடுத்துகொண்டு இருக்கிறாள். (ஜீவா,காயத்திரியின் அறை நோக்கி புறப்பட்டாள்)
சரி தம்பி பொக முதல் அவளை என்னிடம் வந்துவிட்டு போக சொல்லுங்கள்.
ஜீவா அட ராமா இவன் என்னமா பொய் சொல்லுறான்.இப்போ அக்காவ இவன் கடத்தினத சொன்னா யாரும் நம்ப மாட்டினம் . மாமாவும் அக்கா மேக்கப்போட பொனதா சொல்லிட்டேர் போல இருக்கே இப்பொ என்ன பன்னுறது. “ராமா” இதில் இருந்து நான் எப்புடி தப்பிப்பேன்.{ஆமாங்க நம்ம மெடம் அதிகமா ரென்சன் ஆனா ராமன்(கடவுள்) கூப்பிடுவாங்க.}
மீண்டும் ஜீவாவிடம் வந்த அருண்.
என்ன ஜீவா அனைத்தும் நன்றாக கெட்தா இல்லை நான் மறுபடியும் உனக்கு சொல்ல வேண்டுமா?
(ஜீவா முளித்தாள்)
ஓஓ…. நல்ல நடிப்பு தான், நீ மறைந்து நின்று கேட்டதை நான் கண்டுவிட்டேன்.
(ஜீவா மனதினுள் இவன இப்போ எதிர்க்க வேணாம். ஆனா உனக்கு இருக்குடா.)முகத்தில் பாவமாய் இப்போ என்ன நான் சைன் பண்ணுறன் அந்த பேப்பரை தாங்க என்றாள்.
அருண் எடுத்து குடுக்கும் போதே பெச ஆரப்பித்தான். இதில் சைன் வைத்துவிட்டு வேகமாக காயத்திரிக்கு தேவையானவற்றை எடுத்துவா என்று கூறும் போதே “தியாவின் குரல் கேட்டது அக்கா அக்கா பெரியம்மா உன்ன கூப்பிடுராங்க”.
ஜீவா தியாவின் குரலில் வேகமாக சைன் வைக்க ஆரம்பித்தாள். அதனால் சில பத்திரங்கள் மாற்றப்படதை கவனிக்க தவறினாள்.
அக்கா அக்கா என்ன செய்கிறாய் கதவை திற என்று கத்திக்கொண்டு நின்றாள் தியா.
ஜீவாவோ வாறன் நில்லுடி என்று கூறிக்கொண்டே சைன் வைத்து முடித்து இருந்தாள்.
அருண் சிறிதும் தாமதமின்றி அப்பத்திரங்களை எடுத்துக்கொண்டான். ஜீவா கதவை திறக்க தியாவும் ஜீவாவை இழுத்துச்சென்றுவிட்டதால் அருணை கவனிக்கவில்லை.
பெரியம்மாவிடம் வந்த ஜீவாவிற்கோ உள்ளே உதறல் எடுத்தாலும் வெளியே அமைதியாக இருந்தாள்.
ஜீவா காயூட திங்ஸ் எல்லாம் எடுத்திட்டியா? என்ற பெரியம்மாவிடம்
ஓம் எல்லாம் எடுத்திட்டன் இப்போ போகணும் என்றவளிடம் சரிமா நீயும் உன்னோட உடுப்பையும் கொண்டுபோய் அங்கையே வெளிக்கிட்டு வாம்மா நீ தான் துனைப்பொண்ணாய் நிக்கணுமாம்.
மாப்பிள்ளை ஆசைப்படுறார்.
ஜீவாவிற்கு ஒன்றும் புரியவில்லை நான் எப்புடி நிக்க முடியும்?அதற்குள் பெரியம்மாவே தொடர்ந்தார் அதுவந்துமா மாப்பிள்ளைட தங்கைக்கு இப்போ 8வது மாசமாம் அதனால அவங்க கல்யாணத்தில கலந்துகொண்டாலே போதுமாம்.
அவங்களுக்கு பதிலா உன்ன கெட்டாங்க நானும் சரி சொல்லிட்டன்மா .
இதற்கு பிறகு என்ன சொல்ல முடியும் என்று அவளும் அனைது பொருட்களையும் எடுத்துக்கொண்டு மனப்பெண்ணின் அறைக்கு போனாள் அங்கே அவனை காணவில்லை. தேடிக்கொண்டு இருக்கும் போதே அருண் அங்கு வந்து போகலாமா ஜீவா என்றான். சரி என்று அவளும் கிளம்பினாள் அடுத்த 20நிமிடத்தில் ஒரு வீட்டு வாயிலில் நின்றது கார்.
அருணை குழப்பத்துடன் பார்த்த ஜீவாவிற்கு இது என்னோட நண்பி ஒருவருடையா வீட்டுடன் கூடிய பியூட்டி பாளர் என்றான். ஜீவா இன்னும் ஒன்னு சொல்ல மறந்திட்டன் உன்னோட அக்காவ பொறுத்தவரை அவள் நேற்று இரவே மேக்கப் போடுவதற்காக இங்கு வந்து உள்ளார். நீ இப்போ வருவாய் என தெரியும் அவ்ளவுதான் சரி நீ இப்போ உள்ளே போய் தயாராகு என்றான்.
அவள் தயங்கி நிற்கவும் அவன் அவளின் கையை பிடித்து இழுத்து செல்லவும் அவளும் ஒரே இழுவையில் கையை அவனிடமிருந்து மீட்டெடுத்தாள். இதற்குள் இவர்கள் அந்த வீட்டின் ஹாலை அடைந்து இருந்தனர்.
அங்கே ஒரு பெண் இவர்களை நோக்கி வந்தாள். வந்தவளிடம் ஜீவாவை மாணப்பெண்ணிடம் அழைத்து செல்ல சொல்லி அனுப்பிவைத்தான். ஜீவாவும் இவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என சென்றுவிட்டாள்.
Next: ஜீவாவின் குழப்பம்
அருணின் இரகசிய திட்டம்.
