தீராதே காதல் மயக்கம் 3/4

This entry is part 20 of 20 in the series தீராதே காதல் மயக்கம் 3/

தீராதே காதல் மயக்கம் 3/

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 3/4

தீராதே காதல் மயக்கம் 32

அவளது உரிமை உணர்வினை வைத்து விளையாட நினைத்தவன்.. அந்த பெண்ணிடம் துவாரகா நெருங்கும் முன் “என்னோட பொண்டாட்டிங்க அவ.. கொஞ்சம் கோபமா இருக்கா.. அதான்.. ப்ளீஸ் கொஞ்சம் நடிங்க” என்று சின்ன குரலில் சொல்லிவிட்டு துவாரகா வரும் முன் அந்த பெண்ணிடம் காதல் சொல்லுவதை போல் நடிக்க..

வேகமாக இவர்களை நோக்கி வந்தவள் கிட்டே நெருங்கியதும் தேவாவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க.. அப்பொழுதும் துவாரகாவை என்ன சொல்லி செய்து.. சமாதானம் செய்வது என தெரியாமல்.. நடப்பது நடக்கட்டும் என்றே நின்றான்.

அதற்குள் இருவரின் கிட்டே நெருங்கியவள்.. சாவதானமாக அந்த பெண்ணிடம் “ஹேய் இவனுக்கு எல்லாம் ஓகே சொல்லாத மா.. காதலிக்க கூட ஒரு தகுதி வேணும்.. அதெல்லம் இவனுக்கு கிடையாது..

நீ இவன்கூட வாழ போனா.. என்ன செய்வான் தெரியுமா.. நீ நடிக்கிறன்னு சொல்லுவான்.. பொய் சொல்றேன்னு சொல்லுவான்.. அப்பறம் போலீஸ்ல பிடிச்சு கொடுப்பான்.. 
எல்லாத்தையும் விட.. நீ எப்படி போய் தொலைஞ்சாலும்.. எங்கேயோ போகட்டும்ன்னு விட்டுட்டு.. ரெண்டு மாசம் மூணு மாசம் தேட கூட மாட்டான்… நீ செத்து போனாலும் கவலை பட மாட்டான்.. ” என்று திடமாக பேசிக்கொண்டிருந்தாலும் அவளது கண்களில் இருந்து சில கண்ணீர் துளிகள் விழுந்து ஓட..

அவள் சொல்ல சொல்ல தேவா குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்தான்.. சற்று நேரமே..! ஆனால் இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தான் தான்.. ஏன் இதை விட.. அவள் அடிப்பாள் கோபம் கொள்ளுவாள் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்தே அவளை தேடி வந்தான்.

எல்லாம் சிறிது நேரமே.. எப்படியும் அவளிடம் சண்டை போட்டாவது சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டவன்.. தன்னுடைய குறும்புத்தனத்தை அவிழ்த்து விட்டு.. அந்த பெண்ணை பார்த்து மேலும் மயக்கும் மோகன புன்னகை புரிந்து.. 

“ஹேய் பேப் இவங்க யாரோ தெரில.. நான் ஒரு எலிஜிபில் பாச்சலர் மா.. யாரோ சொல்லுவதை எல்லாம் நம்பிட கூடாது..” என்றதும் இருவரது பேச்சையும் சுவாரசியமான சண்டையும்.. துவா பேசியதை எதுவோ பதக்கம் வாங்கியதை போல் கேட்டுக்கொண்டு நின்ற தேவாவையும் பார்த்த அந்த பெண்ணுக்கு சிரிப்பு வர.. சிரிப்பை அடக்க போராடி கொண்டு இருந்தாள்.

அதற்குள் அந்த பெண்ணின் கணவன் அருகில் வந்துவிட.. அங்கு தேவா அமர்ந்திருந்த தோற்றம் அதிர்ச்சியை கிளப்ப.. வேகமாய் தன் மனைவியின் அருகில் வந்தவன்.. தேவாவை முறைத்து கொண்டு ” யாருடா நீ? என் மனைவிக்கு ப்ரபோஸ் பண்ணிட்டு இருக்க.. ” என்றவாறு கைகளை மடக்கி சன்டைக்கு தயாராக..

அதற்குள் தேவா மறுத்து பேச ஆரம்பிக்கும் முன்னாள்.. துவாரகா “அதுவா உங்க மனைவியை இவர் காதலிக்கிறாராம் சார்.. சேர்த்து வைங்க.. ” என்று நக்களோடு சொல்ல.. 

தேவா.. “அய்யோ சார் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. இதோ நிக்கிறாளே இந்த ராட்சசி இவ தான் என் பொண்டாட்டி.. எங்க குள்ள ஒரு சின்ன பெட் அதுக்காக தான் இந்தமாதிரி..ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க சார்..” சமாதானம் செய்யவும்.. அவர் இவனை முறைத்துக்கொண்டே தன் மனைவியை இழுத்து கொண்டு செல்ல.. “ஒரு நிமிசத்தில எவனோ ஒருத்தன் கையால என்னைய சாகடிச்சுருப்பா.. எப்படியோ எஸ்கேப்.. டா தேவா..” என்றவன் போகும் அவர்களை பார்த்து திரும்பினாள் பக்கத்தில் நின்றவளை காணவில்லை.. 

சுற்றும் முற்றும் பார்த்தவன்.. வேகமாக நடந்து செல்லும் துவாரகாவின் பின்னாலே ஓட.. அவள் நடையின் வேகத்தை குறைக்கவே இல்லை.. பின்னால் இருந்து கத்தி பார்த்தவன்.. வேகமாக அவள் அருகில் சென்று கையை பிடித்து தடுக்க.. “விடு டா.. யார் நீ? இப்போ எதுக்கு என் கைய பிடிக்கிற.. போ அவளோட போ.. முன்னாடி தேன்மொழி இப்போ இவ பேர் என்ன கனிமொழியா? 

அவ பின்னால போடா.. உனக்கு நானெல்லாம் செட் ஆக மாட்டேன் நான் குடிகாரி.. கொள்ளைக்காரி.. கொலை செய்றவ.. ம்ம் .. கெட் லாஸ்ட் ” என்றவளுக்கு கோபமும் கண்ணீரும் முட்டியது.. இங்கு அவனை பிரிந்து வந்த இரண்டு மாதங்களில் அவன் மீது கோபம் கோபமாக வந்தது.. பின்னர் இப்படி செய்துவிட்டான் என்கிற ஆத்திரம் வர.. குழந்தை உண்டாகி இருப்பது தெரிந்ததும்.. அவனை நாடி ஓடும் மனதை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் தன்னை தேடி வருவானா? வரமாட்டானா?

என்றெல்லாம் எண்ணி.. சதா அவன் நினைவிலே கழிந்தது.. எங்கும் எங்கெங்கிலும் அவனது பிம்பம்.. அவன் தான் வந்துவிட்டான் என்று நினைத்து மாய பிம்பங்கள் கண்டு அடிக்கடி ஏமார்ந்து போவதும்.. மனதை பழைய படி திடப்படுத்த நினைத்து தோற்று போவதும் அவளுக்கு வழக்கமாகி இருக்க..

இன்று அவனே நேரில் வந்து நின்றும்.. அவனை கடந்து சென்றாள் அவள்.. ஆனால் அவனோ.. இவளை பார்த்ததும் பேசாமல் இன்னொருத்திக்கு காதல் சொல்லி மேலும் காயப்படுத்தும் வேலையை பார்க்கிறான்.. என்று கோபம் வர.. அவனை எடுத்தெறிந்து பேசிவிட்டு போய்விட்டாள்.

என்னதான் திடமான பெண்ணாக இருந்தாலும் அவளும் மனதளவில் பாசத்துக்கு ஏங்கி தவிக்கும் ஒரு பெண் தானே.. தனிமை ஒன்றே வாழ்வில் நிரந்தரமாக கிடைக்கும் என்று நினைத்தவள்.. தேவா வாழ்வில் வந்ததற்கு பிறகு சண்டை சச்சரவு என்றாலும் அவன் அருகிலே இருக்க மட்டுமே விரும்பினாள். 

இப்பொழுது தேவாவிடம் தான் ஒரு குடிகாரி.. கொலைக்காரி என்றெல்லாம் சொல்ல.. அவனோ சிரித்துக்கொண்டே.. “இந்த குடிகாரி தான் எனக்கு வேணும்.. இவளை மட்டும் தான் இப்போ எனக்கு ரொம்ப பிடிக்குது.. ” என்று சொல்லி தன் முதுகில் இருந்த பையை திறந்து.. ஒரு பொருளை எடுத்து அவள் முன்னால் நீட்ட..

அதனை பார்த்தவள் மேலும் பத்ரகாளியாக முறைத்தாள்.. “ஓ நீ இப்போ என்னை மறுபடி குடிக்க வெச்சு.. கொல்லனும் அதுக்கு தானே வந்துருக்க.. போடா.. எனக்கு இதெல்லாம் வேண்டாம்.. சரக்கு பாட்டில்லை கொடுத்து என்னை ஏமாற்ற முடியாது ” என்க..

“ஹேய் துவா.. ப்ளீஸ்.. இது ஐந்நூறு ரூபா பேபி.. இதை வாங்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..” என்றவன் கைகளில் அவளுக்கு பிடித்த ஒரு சரக்கு பாட்டிலே..

அப்படியே நின்றிருந்தவனின் கைகளில் இருந்த பாட்டிலை வாங்கியவள் தூக்கி கடலில் விட்டெறிய.. அதிர்ந்து போனவன் போல் நடித்தவன்.. “அய்யோ அடிப்பாவி.. போச்சே போச்சே.. இதை வெச்சு என்னவெல்லாமோ பிளான் பண்ணி இருந்தேனே..” என்று உடைந்து போன அதை பார்த்து போலியாக ஒப்பாரி வைக்க..

“போதும் நிறுத்து டா.. வா உனக்கு சரக்கு தானே வேணும்..” என்றவள் அவனை இழுத்துக்கொண்டு மரவீடு இருக்கும் திசை நோக்கி நடக்க.. குடிக்காத இவனுக்கு இன்னும் இவ குடிச்சுட்டு தான் இருக்காளோ? என்று சந்தேகம் வர.. அவள் இழுத்த இழுப்புக்கு சென்றவன்.. அந்த இடத்தின் அழகை பார்த்து மெய்மறந்தான்..

அவன் கடலை பார்த்து நின்ற நேரம் துவா.. அங்கு சிறிய போட்டில் கொண்டு வந்து கொடுக்கப்படும் உணவக எண்ணை அழைத்து.. ஆர்டர் செய்ய.. சற்று நேரத்திற்கு எல்லாம் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தது.

அவனை அழைத்து அந்த மரவீட்டின் கூட அமைக்கப்பட்டு இருந்த நீண்ட நடைபாதை போன்ற இடத்தில் அமர வைத்தவள்.. மெதுவாக இரண்டு குவளைகளில் அதை ஊற்றி ஒன்றை அவனுக்கு நீட்ட..

அவனுக்கு தான் குடிக்கும் பழக்கம் இல்லையே.. மெதுவாக குடிக்கலாமா வேண்டாமா என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்க.. துவாவோ ஒன்றை முடித்து மற்றொன்றை குடித்து கொண்டு இருந்தாள்.. அவன் சற்று தயங்கி பின் அவளிடம் எப்படியாவது உண்மையை சொல்லிவிட்டு மன்னிப்பை கேட்க வேண்டும்.. குடித்தால் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் போல என்று நினைத்து.. முதன் முதலாக தனக்கு பிடிக்காத ஒன்றை செய்தான்.

ஒரு முறை குடித்ததும்.. அவனுக்கு போதை போல ஒன்றுமே தோன்றாமல் போக.. இன்னொன்று அடுத்தது.. அடுத்தது என்று குடித்துக்கொண்டே இருக்க.. துவா மெதுவாக என்ன தான் செய்கிறான் என்று பார்த்துக்கொண்டே இருந்தாள்.

கடைசி க்ளாஸை குடித்தவன் மெதுவாக தள்ளாடி எழுந்து.. துவாவிடம் தெளிவில்லாத குரலில் “சாரி துவாரகா.. என்.. என்ன மன்னிச்சுக்கோ ப்ளீஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்.. உனக்கு ..ம்ம்.. நீ பாவம்.. நான் தான் தப்பு.. நீ ரொம்ப சரி.. நான் மட்டும் தான் தப்பு.. என்ன எப்டியாச்சும் மன்னிச்சுடு துவாரகா..

நான் இனிமே நல்லா பார்த்துப்பேன்..இப்போ உனக்காக குடிக்கிறேன் இனிமே நீ சொல்றதை எல்லாம் கேக்கிறேன்.. பாசமா .. பாசமா பார்த்துகிறேன்.. இனிமே சேர்ந்து இருக்கலாமா.. ப்ளீஸ் துவாரகா என்னால நீ இல்லைனா இருக்க முடியாது.. ம்ம்.. 

நீ பெரிய.. ம்ம் இல்ல கியூட் ஆன பொன்னும் நான் தான் பாக்கல.. நானும் லவ் யூ துவா.. நம்புரியா? துவா..” என்றவன் கீழே விழ போக..

வேகமாக எழுந்தவள் அவனை பிடித்து இழுத்து வீட்டிற்குள் கொண்டு செல்ல.. அவள் தோளில் கைவைத்து தாங்கியபடி சென்றவன்.. அவளது கைகளுடன் தன் கையை ஒப்பிட்டு பார்த்து.. நான் கொஞ்சம் கலர் கம்மி தான் இல்ல.. நீ பளபளன்னு பாலிஷ் பண்ணுன பப்பாளி மாதிரி இருக்கே..

என்னை எதுக்கு கல்யாணம் பண்ணுன? நான் உனக்கு சரி கிடையாது..” என்று தான் மனதில் வைத்திருந்த எண்ணங்களை எல்லாம் வெளியில் கொட்டிக்கொண்டு இருந்தான்.

அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவள் அங்கிருந்த ஒற்றை படுக்கையில் அவனை படுக்க வைத்து.. அவனது காலனியை கழட்ட…வேகமாக எழுந்தவன்.. அவள் சந்தேகமாக பார்க்கவும்.. சற்று தெளிவில்லாத முறையில் எழுந்து “என் காலெல்லாம் நீ தொடாத பேபி.. நீ தேவதை.. நீ போய்.. ” என்றவன் மெதுவாய் தானே கழட்டி கொண்டான்..

பிறகும் போதையில் இருக்கிறானா இல்லையா என்று சந்தேகத்தோடு பார்த்து வைத்தாள் அவள்.. அவள் நகர்ந்து செல்ல துவங்கவும்.. அவளை பிடித்து இழுத்தவன் தன் மேல் விழுந்தவளை.. இத்தனை நாள் பிரிவின் துயர் போகும் வரை இறுக்கமாக அணைத்து பிடித்துக்கொண்டான்.

அவளோ அவன் பிடியில் இருந்து விலகி கொள்ள.. “போய்டாத துவா ப்ளீஸ்.. நீ இல்லன்னா நான் இனி இல்லை..ப்ளீஸ் போகாத..” என்றவன் அவளை விடவே இல்லை..

துவா இன்னும் சமாதானம் ஆகவில்லை.. அவளுக்கு அவனை நம்ப முடியவில்லை.. மறுமுறை அவனை நம்பி இனிமேலும் அவன் ஏதாவது சொல்லி பிரிந்துபோய்விட்டால் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.. மறுமுறை அவனிடம் ஒன்ற மனம் இடம் தரவில்லை..

அவனிடம் கடுமையாக நடந்துகொள்ளவும் இடம் கொடுக்கவில்லை… இருபக்கமும் அல்லாடும் பெண்டுலமாக மாறி மனம் குழப்பத்தில் இருக்க.. அவளும் அப்படியே யோசனைக்குள் தாவ.. 

இவளை அணைத்து பிடித்து இருந்தவன்.. முத்தங்களுக்கு தாவி இருந்தான்.. முதலில் நெற்றியில் கொடுத்தவன்.. மெதுவாக அவளது கண்கள் கன்னங்கள்.. என்று இடம் பெயர்ந்தவன்.. கிட்டும் தூரமெல்லாம் முத்தத்தால் பயணித்தான்.

இதழில் வந்து இளைப்பாற.. இவளும் நெடுநாளைய பிரிவின் ஏக்கங்கள் மேலிட.. அவனுக்கு ஈடு கொடுக்க துவங்கிய நேரமது.. ஒருவர் எண்ணங்களில் தொடங்கிய கூடல் இருவருக்குமான தீயை பற்றவைக்க..

முத்த பஞ்சம் வருமளவு முத்தங்கள் பரிமாறப்பட்டு.. எச்சில் மட்டுமே தாகம் தீர்க்க.. உடல்களை உடல் உண்ணும் போராட்டம் அரங்கேற.. பிரித்தறிய முடியாத உணர்வொன்று இருவருக்குள்ளும் தோன்றி பேயாட்டம் போட்டது.

இருவரும் துவங்கிய காதல் களியாட்டத்தில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்று முடிவறியா சூழலில் இருவரும் என்னுடைய பிரிவு தான் பெரியது.. என்னுடைய பிரிவு தான் பெரியது என்று நிரூபிக்க.. ஒருவரை ஒருவர் தங்களுக்குள் நிரப்பி கொள்ள பார்க்க.. 

என்றன்றும் முடியா தேடல்கள் தன் இணை மீதான காதலும் காமமும் மட்டுமேயாக.. இருவரும் ஒன்றாக கடல் அலைகள் தாலாட்ட.. காதல் பாடம் கற்று கரைசேரும் நேரம் கடலன்னை மடியில் துயில் கொண்டு இருந்த இருவரின் மீதும்.. காலை கதிரவன் தன் பொன்மஞ்சள் கிரணங்களை சாளரம் வழியாக இருவர் மீதும் வீசி.. தான் கண்ட காட்சியால்.. மஞ்சள் முகத்தில் வெக்கம் பூத்து ஜிவ்வென்று சிவக்கும் பெண்களின் முகம் போல.. மஞ்சள் முகத்தில்.. சிகப்பு கலந்து.. ஆரஞ்சு வண்ணமாக ஆகி போனான்.

விடியலில் கடலின் தலாட்டில் இவளை தேடி பயணித்த களைப்பும் சேர்ந்து.. இத்தனை நாளில் இல்லாத தூக்கமாக தேவா தூங்கி கொண்டிருக்க.. முதலில் எழுந்த துவாரகா.. அவனை உற்று பார்த்து கொண்டே அங்கேயே அமர்ந்து இருந்தாள்..

தேவா கண்விழித்ததும் அவளை பார்த்து அசடு வழிந்தவன் “சாரி.. போதையில..” என்று சொல்லி பல்லை காட்டவும்..  அவ்ளோ காட்டமாக “ஓ போதையில மன்னிப்பு கேட்டுட்டேன்.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை…ன்னு சொல்ல வரியா?” என்று கேட்க..

தேவா “இல்ல.. இல்ல.. மன்னிப்பு கேட்டது எல்லாம் உண்மையா தான் கேட்டேன்.. மத்தது தான்.. ஹீ ஹீ தெரியாம.. சாரி” என்கவும்.. “ஓ அப்போ தெரிஞ்சு என்கூட இருக்க மாட்ட.. தெரியாம எப்பவாவது மேட்டர் பண்ணுனா தான் உண்டு.. இல்லையா..” என்று அவனை மடக்க..

தேவாவோ மாட்டிக்கொண்ட உணர்வில் திருத்திருத்த விழிகளோடு “அதெல்லம் இல்லை துவா.. “அவளது முறைப்பு பார்வைக்கு பின் முழுப்பெயரையும்..” துவாரகா.. நான் தெரியாம போதையில் செஞ்சுருக்கலாம்.. ஆனால் தப்பு இல்லை தானே.. நாம தான் புரூஸ்…ன்..ம்ம்” அவளது முறைப்பு இன்னும் அதிகமாக.. “தலை வலிக்குது துவாரகா.. கொஞ்சம்.. காபி கிடைக்குமா? பழக்கம் இல்லாம குடிச்சுட்டேனா.. அதனால் தான்.. ” என்று குனிந்து கொள்ள..

வேகமாக அங்கிருந்த சின்ன சமையல் அறைக்கு சென்றவள் நேற்று குடித்து வைத்திருக்கும் பாட்டிலை எடுத்து வந்து.. அவனை நோக்கி ஒங்க.. அவன் அலறியே விட்டான்.. “துவா பேபி எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் டா.. தீத்துட்டு பேச முடியாது.. ப்ளீஸ்” என்று அவள் கால்களில் விழுந்துவிட..  (சை.. படுத்தே விட்டானையா! இந்த புருஷ கேசி..! ஹா ஹா)..

வேகமாக பாட்டிலை ஓங்கியவள் அவனிடம் முதுகில் அதை வைத்தே மெதுவாக தட்டி.. ” மிஸ்டர்.. இந்தாங்க.. இதை பாருங்க” என்று கையில் கொடுக்க.. அதனை வாங்கி பாவமாக அவளை பார்த்தவன்.. “மறுபடியும் குடிக்கணுமா..?” என்று கேட்க..

“குடிக்க வேண்டாம் படி.. அதுல என்ன எழுதி இருக்குன்னு” சொல்லிவிட்டு.. அவன் அதனை படிக்க துவங்கும் முன்.. தானே..” பெவர்லி.. கிரேப் ஜூஸ்…” என்றாள்..

“என்னது ஜூஸ் யா? எனக்கு போதை ஏறிச்சே…” என்று சொல்லி அவன் அதிர்வு காட்ட.. கைகளை கட்டியபடி அவனை முறைத்து கொண்டு இருந்தாள் துவா..

அவன் மீண்டும் திருதிரு விழிகளோடு ” இல்ல துவாரகா போதை ஏறிச்சு நிஜமா தான்..” என்றவனை வேகமாக பாய்ந்து வந்து அடிக்க துவங்கினாள்.. அடியின் வேகம் அதிகமாக அதிகமாக.. அவளை தடுத்து பிடித்தவனை விட்டு விலக நினைத்தவளை விடாமல் பிடித்துக்கொள்ள..

உடைந்து அழ ஆரம்பித்தாள்.. அவன் என்னவென்று கேட்கும் முன்னாள்.. ” ஏன் தேவா.. நீ போதையில இருந்தா மட்டும் தான் உன்னால என்கூட.. அப்படி எல்லாம் இருக்க முடியும் இல்ல? உண்மையா காதல் இருந்தா இதெல்லாம் நினைக்காமலே நடக்கும்..

நீ மறுபடியும் எதுக்கு என்கிட்ட நடிக்கணும்? கஷ்டப்பட்டு எல்லாம் என்கூட இருக்கணும்னு அவசியம் இல்லை.. இந்த தடவை உனக்கு என்ன தேவை? சொல்லு நான் இப்போவே கொடுத்துட்டு போய்டறேன்.. மறுபடியும் என்னால ஏமாற்றத்தை தாங்கி கொண்டு இருக்க முடியாது.. ” என்றவள் அவனை விட்டு விலகி போய் நின்றுகொள்ள..

அவள் பின்னொடு போய் நின்றவள் அவள் இடையோடு கையிட்டு அணைத்து நின்று “என்ன வேணும் கேட்ட இல்ல.. இது” என்றவன் அவளை திருப்பி நீ என்று அவளிடம் சொல்லி அவள் உதடுகளை கவ்வி கொண்டான்..

முத்தத்தின் முடிவில் அவன் சிரிப்போடு விலக.. அவளோ “இப்போவும் நடிக்கிற.. கஷ்டப்பட்டு என்னை லவ் பண்ணனும் அவசியம் இல்லை.. உனக்கு நான் செட் ஆக மாட்டேன்..” என்று சொல்ல..

“எனக்கு உன்ன விட்டா வேற யாரும் தாண்டி செட் ஆக மாட்டாங்க.. என் திமிர்காரி.. ஒழுங்கா நா சொல்றதை கேளு.. இல்லைனா..” என்றவனுக்கு என்ன சொல்லி மிரட்ட என்று தெரியாமல் நிறுத்த.. அவள் “இல்லைனா என்ன டா பண்ணுவ? என்ன பண்ணுவ? ” என்று அவனை சரமாரியாக அடிக்க..

இருவரும் அங்கிருந்த பலகையில் சுற்றி சுற்றி ஓடினர்.. ஆனால் தேவா மன்னிப்பு கேட்டு காதலை சொல்லியும் துவாரகாவின் மனதில் அது பதிந்ததா என்றால் இல்லை.. அவளுக்கு அவன் முன்னதாக விட்டு சென்றது போல் மறுபடியும் சென்றுவிட்டால்… என்ற பயம் ஆழ்மனதில் முள் போல இருந்துக்கொண்டே இருந்தது..

இருவரும் ஓடி அலுத்து துவா அங்கிருந்த இடத்தில் உட்கார.. பேசாமல் ஒரு மௌனம் அரங்கேற.. சிறிது நேரம் அப்படியே செல்ல.. தேவா தான் ஆரம்பித்தான்..” நீ எதுக்கு ஜூஸ் வாங்கின? இப்போலாம் குடிக்கிறது இல்லையா?” என்று கேட்க..

அவளோ தான் கர்ப்பமாக இருப்பதை சொல்ல வந்தவள்.. பின் அவனை நம்ப முடியாமல் .. இவன் ஒருவேளை இந்த குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து சென்றுவிட்டால் என்ன செய்வது என்று பயம் வர..

அவனிடம் மலுப்பலான பதிலை சொல்லிவிட்டு நகர்ந்து செல்ல.. அவள் பழைய நேரங்களில் எப்படி அவன் பின்னால் அலைந்து கொண்டு இருப்பாளோ அதே போல தேவா அவளை துரத்தி கொண்டே இருந்தான்.

அவனாகவே அவளுக்கு உதவுவது.. பாடல் பாடுவது.. என்று கூடுமானவரை அவளை தனிமையை உணராமல் இருக்க வைக்க நினைக்க.. அவளுக்கோ.. திடீரென கிடைத்த இவன் அருகாமையில் ரசிக்கவும் முடியாமல் ருசிக்கவும் முடியாமல் அல்லாடுவது அவளின் முறையானது!

ஆனால் அவளின் தயக்கங்கள் எல்லாம் தேவா கண்டுகொண்டதாக தெரியவில்லை.. அவளுக்கு எல்லாமே அவனாக முயன்று கொண்டே இருந்தான். எப்படியாவது தன்னுடைய செயலகளின் மூலம் அவளுக்கு காதலை உணர்த்த பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான்.

நாட்கள் வாரங்களாக மாதங்கள் ஆக.. தேவா வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது.. துவாரகாவின் மேடிட்ட நான்கு மாத வயிறு பார்த்து.. நீ குண்டு போட்டுட்ட டி.. ஐயா சமையல் சாப்பிட்டு.. என்று அவளது பிள்ளை வயிற்றை வைத்து அவன் கேலி செய்யும்போது எல்லாம்..அவளுக்கு பயமாக இருக்கும்.. எங்கே குழந்தையை அவனுடன் கொண்டு சென்று விடுவானோ என்று…

பிறகு சொல்லலாமா வேண்டாமா என்று அவளுக்குள் பல குழப்பங்கள் ஒருபுறம் இருக்க.. துவா அவனுடன் சற்று இனக்கமாக துவங்கிய நேரம் தேவாவின் கையில் கிடைத்தது அந்த இரண்டு கோடுகள் உள்ள கருத்தரிப்பு சோதனை கருவி!

மயக்கங்கள் யாருக்கு ?யாரோடு?

உங்கள் அன்பு நதி💗💗💗

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *