தீயினுள் தெ(ன்)றல் நீ
அத்தியாயம் – 13
தன் மார்பு முழுவதையும் மறைத்திருந்த துப்பட்டாவின் நுனிமுனையை.. தன் வலது கை சுட்டு விரலில், சுற்றிக் கழற்றி.. சுற்றிக் கழறியவளாய்.. விழிகள் மருண்டவளாய்.. அவன் வீட்டு வாசற்படியில் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருந்த தைர்யாவை பார்த்தவன், அவள் வதனம் எனும் குளத்திலே பூத்திருந்த தயக்கத் தாமரையையும் கண்டு கொண்டான்.
அவள் தயக்கத்தைப் பார்த்து, மெல்ல முறுவலித்து,உரிமை மேலோங்கும் குரலில், “உள்ளே வா தைர்யா.. இது தான் என் வீடு”என்று காற்றில் அகல கை நீட்டி.. தன் வீட்டு ஹாலைக் காட்ட.. அந்த பேசும் பொற்சித்திரத்தின் விழிகள்.. தயங்கிய பார்வையுடன்.. அவன் வீட்டு ஹாலை ஆராய்ந்தது. அவளது பழைய வீட்டை விடவும்.. ரொம்பவும் சிறிய வீடாக இருப்பினும், அவள் தற்போது இருக்கும் ஆயா வீட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிய வீடு தான் அவனுடையது.
ஹாலிலே.. கொஞ்சம் பழைய டிஸைன் கொண்ட ஓர் சோபா செட்டு. பக்கத்திலேயே டீவி ஸ்டேன்ட் மற்றும் ப்ளேயர் தொகுதிகள். கொஞ்சம் தள்ளி ஓர் சாய்நாற்காலி.. புத்தக அலுமாரி என.. இருந்த பொருட்களில் ஹால் குட்டியாகவே தோன்றினாலும்.. ரொம்பவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது வீடு.
கூடவே மூன்று அறைகள்.. ஹாலை அடுத்தாற் போன்று கிச்சன் என்ட் பாத்ரூம்.
இவ்வளவு தான் வீரின் வீடு என தன் கண்களால் அளவு எடுத்துக் கொண்டவளின்.. முகமோ.. எவ்வித துர்ச்சலனத்தையும் காட்டாது.. புன்னகைத்துக் கொண்டே தானிருந்தது. வீடு சின்னதாய் இருந்தால் என்ன? வீரின் மனம் அந்த ஆழ்கடலை விடவும் பெரிது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் தைர்யா. தன் வீட்டுக்கு முதன் முதலாக வந்திருக்கும் அவளை ஒரு பக்கம் சந்தோஷம் மேலிட.. மறுபக்கம் உற்சாகம் மேலோங்க பார்த்துக் கொண்டே.. சற்றே குரலை உயர்த்தியவன்.. அந்த படபடப்பு மாறாமலேயே உள்ளே குரல் கொடுத்தான்.
“மதூஊ.. மதூஊ.. யார் வந்திருக்காங்கன்னு பாரு..” என்று தைர்யாவுக்கு உள்ளே வர வழிகாட்டியவனாய்.. தன் முறைப்பெண் மதுவை அழைத்த தினுசில், சமையல் கட்டிலிருந்து, இடுப்பில் சொருகிய கொசுவத்துடனும், சேலைத் தலைப்புடனும் அரக்கப் பறக்க ஓடி வந்தாள் மதுமிதா.
கிச்சனுக்கு வெளியே இருந்த தூணை ஒற்றைக் கையால் கட்டியணைத்த வண்ணம், “அப்படி யார் வந்திருக்காங்க”என்று தனக்குத் தானே முணுமுணுத்தவளாக.. ஹாலை படபடப்புடன் பார்த்தவளின் விழிகள்.. அங்கே வெண்ணெய்யில் செய்து வைத்த ஓர் சிற்பம் தான் பிரக்ஞை பெற்று வந்து விட்டதோ? என்று ஐயுறத்தக்களவுக்கு… பேரெழிலுடன்.. நின்றிருந்த ஓர் பெண்ணை கண்டு கொண்டதும் ஃப்ரீஸாகி நின்று விட்டது.
புதிதாக வந்திருப்பவளின் அழகும், கூடவே பக்கத்திலேயே பெருமிதம் தோய்ந்த முகத்துடன் நின்றிருக்கும் வீரின் முகத்தையும் கண்டதும்.. வந்திருப்பது யாரென புரிந்தது மதுமிதாவுக்கு. பெரும்பாலும் பெண்களுக்கு.. தம்மை விட அழகான பெண்களை கண்டால் மனதுக்குள் ஈகோ எழுவது இயல்பு.
ஆனால் மதுவுக்கோ.. அன்றொருநாள்.. இரவுக்குறியை அடிப்படையாகக் கொண்டு.. கள்ளத்தனமாக தன்னை சந்திக்க வந்த தன் தலைவன், கூறி விட்டுச் சென்ற “வீரின் இரகசிய காதல்” மனதினுள் சட்டென்று வந்து போக.. வந்திருப்பது தன் ரகு மாமாவின் வருங்கால மனைவியாக தோன்ற.. அந்த ஈகோவை காட்டிலும்.. அவளுள் ஓர் இனம்புரியாத நட்புறவே மேலோங்கியது.
தன் நெற்றியில் இருந்த வியர்வை முத்துக்களை புறங்கையால் துடைத்து விட்டு, சேலை கொசுவத்தை இறக்கி விட்ட வண்ணமே தைர்யாவை நாடிச் சென்றவள்,
வந்திருப்பவளின் முன்னங்கையை உரிமையோடு பற்றி, “அட.. உள்ளே வாங்க… நீங்க ரகுமாமா கூட ஃபோன்ல பேசும் தைர்யா தானே..? நான் எதிர்பார்த்ததை விட… ரொம்ப அழகா இருக்கீங்க?”என்று ரொம்ப நாள் பழகியவள் போல பேசிக் கொண்டே போனாள் மது. மதுவின் அணுகுமுறை இவளுக்கும் பிடித்து விடவே.. கருக் கொண்ட மேகம் போல.. தயக்கத்தால் சுருங்கியிருந்த அவள் முகம் மெல்ல மெல்ல விகசிக்கத் தொடங்கியது.
மதுவின் சந்தன நிற மேனி. அதற்கும் மேலாக பார்ப்பாரை மயக்கும் அந்த நீண்ட கரு நயனங்களும், குவிழ்ந்த குட்டி அதரங்களும்… தைர்யாவை ஈர்க்க, “நீங்க தான் வீரோட கஸின் சிஸ்டர் மதுவா?உங்களைப் பத்தி வீர் நிறைய சொல்லியிருக்கான்.. நீங்களும் ரொம்ப அழகா தான் இருக்கீங்க?”என்று மனம் திறந்து பாராட்டினாள் ரகுவின் ஒருதலைக் காதலி. இரு பெண்களுக்குமே.. ஒருவருக்கு ஒருவரை ரொம்பவும் பிடித்துப் போனது சந்தித்த மறுநொடியே.
தைர்யா தன் வீட்டு பெண்ணுடன் சகஜமாக பேசுவதை.. அருகில் நின்று கை கட்டி.. சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்த வீர்,
தன் முறைப்பெண்ணை நோக்கி, “ஹேய்.. லூசு.. முதன் முறையா தைர்யா .. நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க.. நிற்க வைச்சு பேசிட்டிருக்க? போ.. போய் ஏதாவது சாப்பிட கொண்டா?”என்று உரைக்க, அப்போது தான் விருந்தோம்பல் சம்பிரதாயம் மறந்து.. வந்தவளுடன் ஐக்கியமாகிப் போனதை எண்ணி.. தன் தலையில் தானே குட்டிக் கொண்டு.. நாக்கு கடித்த மது, ஒற்றைக் கண் மட்டும் மூடி தைர்யாவைப் பார்த்து, “ஸ்…. ஸாரி.. மன்னிச்சுக்குங்க.. பேசிட்டிருந்ததுல மறந்துட்டேன்.. மோர் சாப்பிடுறீங்களா?” என்று தயவாய் கேட்க, அதற்கு தைர்யாவும் புன்னகைத்துக் கொண்டே, அமைதியாக தலையாட்ட, “இதோ வந்துடுறேன்.. அதுவரைக்கும் உட்கார்ந்திருங்க”என்று மகிழ்ச்சி களிப்புடன் மொழிந்தவள்.. மான்குட்டி போல துள்ளி ஓடிப் போனாள் சமையலறைக்கு.
போகும் அவளையே முறுவலுடன் பார்த்து தலை சிலுப்பிக் கொண்ட வெண்ணெய் சிலையையே… மையல் ததும்பிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்த வீர், அவள் அமர ஓர் இருக்கையை எடுத்துப் போட்டான்.
இருக்கையில் அமர விருப்பம் கொள்ளாதவளின் கண்கள், எதேச்சையாக ஹால் சுவரில் மாட்டியிருந்த சித்திரங்களை கண்டு கொண்டது.
சாவி போட்ட பொம்மை போல.. கால்கள் நேராக அந்த ஓவியங்களை நோக்கி நடக்க, அவனும் முறுவலித்த வண்ணம் பின்னாலேயே சென்றான். ஃப்ரேமிடப்பட்டிருந்த வெள்ளை காகிதத்தில், நடுவே மேடு பள்ளங்களாலான ஓர் பிரிக்கும் கோடு.
இடது பக்க பிரிவை உற்றுப் பார்த்தால் அது உறங்கிக் கொண்டிருக்கும் ஓர் மழலையின் முகம். வலது பக்கமாய் உற்றுப் பார்த்தால் மழலையை தாய்மையுடன் பார்க்கும் ஓர் அழகிய தாயின் பாதி முகம். வெறுமனே பார்த்தால் அது ஓர் மேடுபள்ளமான கோடு.
அதை நுண்ணியமாக வரைந்திருக்கும் வீர் மேல் இன்றும் மரியாதை ஊற்றெடுக்க.. ஓவியத்தையே காதலுடன் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள் தைர்யா. அக்கணம் அவள் காதோரம் கிசுகிசுப்பாய்.. அந்த ஓவியத்திற்கு சொந்தக்காரனின் குரல்.
“ரொம்ப பிடிச்சிருக்கா?” என்று கேட்டவனின் விழிகள்.. அந்த கண்ணாடி சட்டத்தில் விழுந்த அவள் விம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.
அவளுக்கு பேச கூட முடியவில்லை. அவளும் தாய்மையின் அரவணைப்பும், சுகமும் பத்து வயதிற்கு பிறகு அறியாதவள் தான்.. ஆகவே அந்தத் தாய் – சேயிலேயே பேச்சு மூச்சற்று நயனங்கள் பதித்திருந்தாள் அவள்.
அவள் மௌனமே அவனுக்கு பதிலுரைக்க, அவன் தொடர்ந்தான். “இது நான் வரைஞ்ச முதல் ஓவியம்.. பதினைஞ்சு வயசுல வரைஞ்ச ஓவியம்.. தாய்க்கு தன் முதல் குழந்தை எப்போவுமே பெஸ்ட்டில்லையா? அது மாதிரி தான் இது எனக்கும்..
அம்மா ரொம்ப அப்பிராணி.. அப்பாவோ ரொம்ப சந்தேகப் பிராணி… வீட்டு வாசலுக்கு தபால்காரன் வந்தால் கூட.. சேர்த்து வைச்சு அசிங்கமா பேசுவாரு அப்பா..
ஒரு நாள் என் அப்பா கொடுத்த தொல்லை தாங்க முடியாமல்..”என்று கண்ணாடிச் சட்டத்தை பார்த்தவாறே உணர்ச்சி வசப்பட்ட குரலில் சொல்லிக் கொண்டே வந்தவன், தன் மூளையை சுட்டிக் காட்டி, “இங்க ப்ரஷர் அதிகமாகி.. சூஸையிட் பண்ணிக்கிட்டாங்க.. அப்போ எனக்கு பதின்மூனு வயசு..
அரைநேர குடிகாரனா இருந்த என் அப்பா.. அதற்கு அப்புறம் முழுநேர குடிகாரனா போயிட்டாரு.. நான் வேறு என்னுடைய அம்மா சாயலா? … அம்மா ஞாபகம் வரும் நேரமெல்லாம்.. என்னை போட்டு அடிப்பாரு..ஒரு நாள் அவரும் தவறிட்டாரு.. அதுக்கப்புறம் தாத்தா தான் என்னை கவனிச்சிக்கிட்டாரு.. அப்பாவா, அம்மாவா.. எல்லாமுமா இருந்தாரு..
‘எனக்கு அப்பா இல்லையே’ன்னு கவலைப்பட்டு அழுகுற பசங்களுக்கு மத்தியில், “எனக்கு அப்பா இல்லையே!!’ ன்னு சந்தோஷப்பட்ட ஒரே பையன் நானா தான் இருக்கும்..” என்று ஒரு அசட்டு சிரிப்புடன் மொழிந்தவன், “ அதுக்கப்புறம் அடிக்கடி அம்மா ஞாபகம் வரும்.. அப்போ ஒரு வெள்ளைக் காகிதத்துல நான் சும்மா தீட்டிய முதல் ஓவியம் தான் இது… ‘அடடே.. ரகு ட்ராயிங் ரொம்ப நல்லாருக்கே’ன்னு தாத்தா தான்… இதை ஃப்ரேம் பண்ணி.. இங்கே மாட்டினாரு.. அப்போலயிருந்து.. இந்த ஓவியம் இங்கே தான் இருக்கு.. இது என் அம்மாவை நினைச்சு நான் வரைஞ்ச ஓவியம்.. எனக்கு எப்போவுமே ஸ்பெஷல் தான்!”என்று அவன் பேசிக் கொண்டே போக.. அதைக் கேட்டுக் கொண்டிருந்த தைர்யாவின் கண்களில் நீர் துளிர்க்கவாரம்பித்தது. அவளுக்காவது, தாய்மையை காட்ட “சித்தி” என்றொரு ஜீவன் இருந்தது.
ஆனால் வீருக்கு? அவன் நிலையை எண்ணும் போது.. பதின்மூன்று வயதில்.. கட்டிளமைப்பருவத்தில்.. நிதம் நிதம் எத்தனை மன அழுத்தங்களுக்கு அவன் உள்ளாகியிருக்கக் கூடும்? என்று தோன்ற தோன்ற.. நெஞ்சைப் பிசைந்தது அவளுக்கு.
அதேசமயம் பதினைந்து வயது விடலைப் பையன் வரைந்த ஓவியமா இது? என்று வியப்பாகவும் இருந்தது. காதலுக்கு மட்டுமா வயதில்லை. திறமைக்கும் தான் வயதில்லை!
மெல்ல திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள் ஷேத்ரா. சற்று நேரத்திற்கு முன்பிருந்த புன்னகை எங்கே போனது என்றே தெரியாதளவுக்கு.. இறுகிப் போயிருந்தது அவன் முகம்.
ஏனென்றே தெரியாமல்.. தடுத்தாலும் முடியாமல்.. அவன் தலையை தன் மாரோடு அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டுமென பேரவா எழுந்தது ஷேத்ராவுக்கு.
தன்னைத் தானே முயன்று அடக்கிக் கொண்டவள், வேறு பேச்சுக்கு தாவ முயன்று, சற்றே சுருங்கிய விழிகளுடன்.. அறைகளுக்குள் விழிகள் இட்டு துலாவியவளாய், “ஆ.. ஆமா.. தாத்தா எங்கே வீர்? ”என்று கேட்க, சட்டென இயல்பு நிலைக்கு மாற முயற்சித்தவனாய் “இன்னைக்கு சன்டே இல்ல? அதனால மார்க்கெட் போயிருக்காரு.. சத்த நேரத்துல வந்துடுவாரு” என்று உரைத்துக் கொண்டே,“நீ இருந்து மதியம் சாப்பிட்டு தான் போகணும்.. ஓகே.. நீ இரு.. நான் கொஞ்சம் வெளியே போய் வந்துட்றேன்” என்றவன், அவள் பதிலுக்கு காத்திராமல் வெளியேறினான்.
இப்போது ‘எனக்கு மதிய உணவு அழைப்பை விடுத்து விட்டு.. இவன் எங்கே சொல்லாமல், கொள்ளலாமல் செல்கிறான்?’என்று தோன்ற, இலேசாக தோளை குலுக்கிக் கொண்டவள், அவன் சென்றதன் பின்பு.. ஹாலில் இருக்க மனமில்லாதவளாய்.. சமையலறையில் இருக்கும் மோர் கொண்டு வரப்போன மதுவை நாடிப் போனாள்.
தன் மாமனும், அவன் ஒருதலை காதலியும் சிறிது நேரம் தனியாக பேசிக் கொள்ளட்டும் என்றே மெதுமெதுவாக மோரை டம்ளரில் ஊற்றிக் கொண்டே திரும்பியவளின் எதிரே.. இடுப்பில் கை வைத்து நின்று.. ஒற்றை புருவம் உயர்த்தியவளாய், புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் தைர்யா.
டம்ளருடன் சற்றே பின்வாங்கிய மதுவும், கொஞ்சம் சுதாரித்த பின்னர், அந்த டம்ளரை வந்தவள் முன் நீட்ட.. அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் சரிக்கலானாள் ஷேத்ரா.
மதுவோ, “ரகுமாமாவுக்கு நெருக்கமானவங்க.. முதன் முறையாக எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க.. மதியம் சாப்பிட்டுட்டுத் தான் போகணும்.. மறுக்க கூடாது”என்று அவன் போலவே அன்புக்கட்டளை போட.. தவிர்க்க முடியாமல்.. அசடுவழிய புன்னகைத்துக் கொண்டே தலையாட்டிய தைர்யா, “ஓஓ.. கே.. நான் சாப்பிடுறேன்.. பட் அன்டர் வன் கன்டிஷன்.. இந்த “வாங்க போங்க” வை விட்டுடணும்.. என்ன ஓகேயா மது?”என்று கேட்க, “சரி.. அதே கன்டிஷன் உனக்கும்.. நீயும் என்னை வா, போன்னே கூப்பிடலாம்”என்றாள் மற்றவளும் சற்றே ஒருமைக்குத் தாவி. அதன் பிறகு இரு பெண்களுமே.. சமையலறையை விட்டு வெளிவருவதாகவும் இல்லை. திறந்த தங்கள் வாய்களை மூடிக் கொள்வதாகவுமில்லை. ரொம்பவும் கலகலவென நீண்டு கொண்டே போனது பேச்சு.
மணிமணியான அரிசியை கழுவி உலையில் போட்டுக் கொண்டே, “அம்மா, அப்பா ரெண்டு பேரும் நான் சின்ன வயசா இருக்கும் போது.. நடந்த ஒரு பூமி அதிர்ச்சியில் தவறிட்டாங்க.. அன்னையிலேயிருந்து.. இன்னைக்கு வரைக்கும்.. எனக்கு எல்லாமே பார்த்து பார்த்து செஞ்சது என் தாத்தா தான்.. படிச்சது பம்பலப்பிட்டி ஹிந்து லேடீஸ் காலேஜ்…
ஆனால் எனக்கு படிப்பை விடவும்.. குழம்பு வைக்குறது.. கூட்டு வைக்குறது.. இது தான் கை வந்த கலையா வந்ததா.. இந்த வீட்டோட உள்நாட்டு அமைச்சரா.. படிப்பு முடிஞ்சதும் நானே பதவி ஏத்துக்கிட்டேன்..” என்று முறுவலுடனேயே தன் கதையை மற்றவளிடம் சொல்லிக் கொண்டே வந்து விட்டு, “இப்போ உன்னை பத்தி சொல்லு” என்று வெடுக்கென கேட்டாள் மது.
மதுவின் அலுப்பு தட்டாத பேச்சில்.. இன்முகமாகவே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள், இறுதியில் அவள் கேட்ட கேள்வியில், நடந்தது அனைத்தும் நினைவு வர முகம் வாடி நின்றாள்.
கண்கள் இரண்டும் வலதும், இடதுமாக நிலத்தில் அலைபாய, சோகம் இழையோடிய முகத்துடன், “என்னைப் பத்தியும் பெருசா சொல்றதுக்கு இல்லை மது.. உன்னை மாதிரி தான் நானும்.. பட் என் அம்மா, அப்பா இறந்தது ஆக்ஸிடெண்ட்ல.. ஆனால் என்ன உனக்கு பார்த்து பார்த்து செய்ய தாத்தா, ரகுமாமான்னு இருக்காங்க.. ஆனால் எனக்குன்னு அப்படி யாருமில்லை.. ஒருகாலத்தில் இருந்தாங்க.. ஆனால் இப்போ இல்லை.. தூரத்து உறவுல.. இருக்கும் ஒரு ஆயா தான் என்னை பார்த்துக்குறாங்க ..அவங்க கூட தான் நான் இருக்கேன்”என்று முன்பொரு நாள் ரகு கேட்ட போது சொன்னதையே பதிலாக கொடுத்தாள் தைர்யா.
அந்த சமயம்.. இரு பெண்களின் பேச்சையும் தடை செய்யும் வண்ணம்.. வெளியே ஹாலில் இருந்து கேட்டது வயது முதிர்ந்த ஓர் குரல்.
“ரகு.. யேப்பா ரகு.. எங்கே போனான் இந்த பையன்?”என்று சத்தமாகவே தொணதொணத்துக் கொண்டே வந்தவர், நேரே நுழைந்தது சமையலறைக்குத் தான்.
பை நிறைய காய்கறிகளுடன் வந்தவர், அவைகளையே பார்த்தவண்ணம், “யம்மா மதூ.. இதுல தேவையான திங்க்ஸ் எல்லாம் இருக்..”என்று சொல்லிக் கொண்டே..நிமிர.. அப்போது தான்.. புதிதாக சமையலறைக்குள் நின்று கொண்டிருந்த ஷேத்ராவைக் கண்டார் அவர்.
புருவங்களும், நெற்றியும் ஒருங்கே சுருங்க.. அப்படியே அமைதியாக நின்றவரின் கைகளில் இருந்த பைகளை வாங்கி.. சமையல் மேடையில் வைத்து விட்டு, தைர்யாவைப் பார்த்து திரும்பியவள், “இது தான் எங்க தாத்தா..” என்று மது அறிமுகப்படுத்தி வைக்க.. ஆயத்தமான சமயம், இடையிட்ட ரகுவின் ஒருதலை காதலி, சாதாரணமான குரலில், முத்துப் பற்களை காட்டியவளாய், “ரிட்டயர்ட் ப்ரோபஸர்..” என்று மது அறிமுகம் செய்து வைக்க தேவையேயில்லாமல் உரைத்தாள் .
தாத்தாவோ மூக்கிலிருந்து நழுவாத கண்ணாடியை.. நழுவுவதாய் எண்ணி.. சரிசெய்தவராய்.. ‘இந்த பெண்ணுக்கு எப்படி என்னை தெரியும்.. ஒருவேளை என் மாணவியோ? ’ என்பது போல..புரியாமல் நோக்க, தைர்யாவோ“தெரியும்.. வீர் சொல்லியிருக்கான்” என்றவள்..அழகாய் இருகரங்கள் கூப்பி.. முகம் மலர, “வணக்கம் தாத்தா..”என்று சொல்லவும் செய்தாள். அவளது வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. தன்னெதிரே நின்று கொண்டிருக்கும் இந்த இளம்பெண் யார் என்பதிலயே அவருடைய மூளை இயங்கி நிற்க, அவளை நோக்கி கை காட்டி.. “நீ…?” என்று புரியாமல் இழுத்தார் தாத்தா.
மது தன்னை அறிமுகம் செய்து வைக்க தேவையேயில்லாமல், தானாகவே வாய் திறந்தவள், நெஞ்சு மத்தியில் கை வைத்து, “நான் வீரோட ஃப்ரண்ட் தைர்யலக்ஷ்மி …”என்று செப்பவும் தான்.. வந்திருக்கும் பெண் யாரென்று அடையாளம் தெரிந்தது அவருக்கு.
பேரன்.. செல்லில் உரையாடுவது இந்த பெண் தான் என்பது புலப்பட்டுவிட.. கண்ணாடியை மீண்டும் ஒரு முறை சரிசெய்த வண்ணம்.. அவளை மேலிருந்து கீழ்வரை ஒரு பார்வை பார்த்தவர், சுருங்கியிருந்த கன்னங்கள் விரிய புன்னகைத்த வண்ணம், “அந்த மஹாலக்ஷ்மியே வந்த மாதிரியே இருக்கேம்மா.. நீ இருந்து சாப்பிட்டுட்டுத் தான் போகணும்….”என்று சொல்லி விட்டு, அவளின் சந்தோஷ தலையசைப்பையும் ஏற்றுக் கொண்டு.. அங்கிருந்து நகர்ந்தார்.
தாத்தா சென்றதன் பின்பு.. அவர் கொண்டு வந்த காய்கறிகளை எடுத்த மது கழுவி.. அவற்றை வெட்ட முயல.. அவளை வெட்ட விடாமல் இடையே புகுந்து.. கத்தியை பறித்த மற்றவள், “தள்ளு.. நான் கட் பண்றேன்.. நீ மத்த வேலைகளை கவனி.. ஈஸியா சமையலை முடிச்சிடலாம்..” என்று விடாப்பிடியாக உரைத்தவளை, அங்கிருந்து நகர்த்த மனமற்று.. சிரிப்புடனேயே ஒரு சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தாள் மது.
ரகுமாமாவையும், இலங்கை அழகி தைர்யாவையும்.. மாலையும், கழுத்துமாக ஜோடியாக நிற்பது போல கற்பனை செய்து பார்த்தவளுக்கு, ஜோடிப் பொருத்தம் ரொம்ப பிரமாதம் என்றே தோன்றிற்று.
தைர்யாவின் வெண்மையான கையையும், அவள் மிருதுவான சருமத்தையும், தன் புறங்கையால் இலேசாகத் தொட்டுப் பார்த்து மெய்சிலிருந்துப் போனவள், ஏக்கம் நிறைந்த விழிகளுடன், “நானும் ஏதேதோ பண்ணி பார்க்குறேன்.. இந்த கலரு மட்டும் வரவே மாட்டேங்குது..”என்க..வெட்டிக் கொண்டிருந்த காய்கறிகளை அப்படியே நிறுத்தி விட்டு.. வாய்பொத்தி க்ளுக்கிச் சிரித்தாள் தைர்யா.
“இது நேட்ச்சுரல் மது.. என் அம்மா தந்த அழகு.. இந்த அழகு ஒண்ணும் நிலையானது இல்லை.. வயசானதும் எல்லாம் போயிடும்.. ஆனால் மனசு அழகா இருக்கணும்.. அது தான் உண்மையான அழகு..”என்று அவள் அன்று பெரிய மகான் போல உரைத்த வார்த்தைகளைக் கேட்டு.. பெண்ணாகப் பிறந்தும் அவளிடம் ஒருதலைக் காதல் பூக்க.. அவளை இரசித்துப் பார்த்துக் கொண்டே, “என் கண்ணுக்கு நீ இப்போ இன்னும் அழகா தெரியுற?” என்றாள் வீரின் முறைப்பெண்.
எந்த வார்த்தைகள்.. அவள் மீது மையல் வர வைத்தனவோ.. அதே வார்த்தைகளை எண்ணி எண்ணி.. பிற்காலத்தில் மது, “எல்லாம் வேஷம்.. சரியான நாடகக்காரி! ” என்று தூற்றி தன் மேல் வெறுப்பை வளர்த்துக் கொள்ளக் கூடும் என்று அவள் கனவில் கூட எதிர்பார்த்திருக்கவேயில்லை. பெண்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டே, ரொம்ப ரொம்ப சுவையாக சமைத்து முடித்து விட்டு, சாப்பிட தயாராகிய நேரம் சரியாக வாழை இலைகளுடன் உள்ளே வந்தான் வீர். ஆம் வாழை இலைகளை வாங்கி வரத் தான் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே சென்றான் ரகுவீர்.
பின் தாத்தா, ரகுவீர் மற்றும் தைர்யா எல்லோரும் தரையில் அமர்ந்து.. வாழை இலையில் உண்ண.. அவர்களோடு சேர்ந்துண்ண மறுத்த மது.. குறிப்பறிந்து இன்முகமாக பரிமாறலானாள்.
ரகுவீரோ.. முறைப்பெண் தனக்கு வைக்கும் ஐட்டத்தையெல்லாம்.. பக்கத்தில் சம்மணம் கொட்டி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் , தைர்யாவின் இலையில் வைத்துக் கொண்டே, “இதை சாப்பிட்டுப்பாரு.. ரொம்ப சூப்பரா இருக்கும்.. வைட்டமினும் கூட.. இதை டேஸ்ட் பண்ணிப் பாரு.. உப்பு, புளி எல்லாம் கரெக்ட் சும்மா இழுக்கும்.. ” என்றுரைத்தவாறிருக்க.. இன்னொரு பக்கத்தில் மது வேறு, “இது வாழைக்காய் தோள் சம்பள்.. எங்க வீட்டு ஸ்பெஷல்.. சாப்பிட்டுப் பாரு தைர்யா”என்று வைக்க..
அவள்,“போதும் போதும்.. இருக்குறதையே என்னால சாப்பிட முடியலை.. ப்ளீஸ்” என்று கெஞ்சியதைக் கூட யாரும் பொருட்படுத்தவேயில்லை அங்கே. ஒரே ஒரு ஜீவனைத் தவிர. ஏதும் பேசாமல்.. சாப்பாட்டிலேயே கவனம் இருப்பதைப் போல காட்டிக் கொண்ட தாத்தாவுக்கு மட்டும்.. தன் பேரன் , வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியான அவளை அதிகப்படியாக கவனிப்பது பிடிக்கவேயில்லை.
உள்ளுக்குள் ஏதோ பொறிதட்ட.. அமைதியாக உணவருந்துபவர் போல காட்டிக் கொள்ளலானார் தாத்தா.அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னர், இறுதியாக உணவருந்த மது சென்று விட.. வீரோ அவளை தன்னறைக்கு அழைத்துச் சென்றான்.
அவன் அறை.. கொஞ்சம் குட்டி அறை தான்.. இருப்பினும் ஜன்னல் வழியாக.. உள்ளே வந்து விழுந்த சூரிய வெளிச்சமும்,சதாவும் வீசிக் கொண்டிருந்த காற்றும்.. அந்த அறையை ஜிலுஜிலுவென்று வைத்திருந்தது.
உள்ளே வந்தவளின் கண்கள்.. அவ்வறையை மெல்ல நோட்டம் விடலாயிற்று. ஜன்னலுடன் ஒட்டினாற் போன்று.. இருவர் உறங்கத்தக்களவு அகல, நீளமுள்ள ஓர் கட்டில்.. கட்டிலுக்கு பக்கத்தில் நைட் லேம்ப்புடன் ஓர் குட்டி ட்ராயர்..
கொஞ்சம் தள்ளி.. கட்டிலுக்கு நேரெதிரே.. பாரிய மேசை மற்றும் கதிரை. மேசையின் மேல் காகிதங்களும், பேனைகளும், பென்சில்களும், ப்ரஷ்களும், பல வகை வர்ணங்களும் என அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு சற்று தள்ளி ஒரு அலுமாரி.
கட்டில் தலைமாட்டோடு இருந்த சுவரில் ஓர் புத்தகராக்கை. பலதரப்பட்ட ஓவியங்களைப் பற்றியும், ஓவியர்களையும் பற்றியும் பல அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள். இவ்வளவு தான் அவன் அறை.
அவன் அறை மனசுக்கு ரொம்ப நெருக்கமாக இருப்பது போல தோன்ற, தன்னுடலினை தானே அணைத்துப் பிடித்த வண்ணம், “உன் ரூம் ரொம்ப நீட்டா இருக்கு”என்றாள் சிலாகிக்கும் வண்ணம்.
பேன்ட் பாக்கெட்டினுள் ஓர் கையை விட்டுக் கொண்டே.. அதைக்கேட்டு நகைத்தவன், “ஐய்யைய்யே.. நமக்கும், இந்த நீட்டுக்கும் ஒத்துவராது.. ஆல் க்ரெடிட் கோஸ் டூ மை “உடன்பிறவ்வா” சிஸ்டர் மது.. அவள் தான் , “இன்னும் என்ன சின்னப்பிள்ளையா மாமா நீங்க?.. ரூமை ஒழுங்கா வைச்சிக்கத் தெரியாதா மாமா”ன்னு கத்தி கத்தியே ரூமை க்ளீன் பண்ணுவா..”என்று கூற, அவன் கூறிய “உடன்பிறவ்வா சிஸ்டரில்” இருந்த அழுத்தம் மட்டும் தனியாக அவள் நெஞ்சில் பதிந்து.. முகத்தில் மெல்லிய புன்னகைக்கீற்றை உற்பத்தி செய்தது.
உண்ட களைப்பில் அசதியாக இருக்க.. அவன் கட்டிலில்.. இரு கை ஊன்றி.. அயர்வாக அமர்ந்தாள் தைர்யா.
ரொம்பவும் சாப்பிட்டதாலோ என்னவோ.. வயிறு மட்டும் அவள் அணிந்திருந்த சல்வாரைத் தாண்டி புடைத்து வெளித் தெரிய.. அதைக் கண்டு இதழ் மடித்து சிரித்துக் கொண்ட வீருக்கு.. ஊன்றியிருந்த அவளின் முழங்கைகளும் கண்ணில் படலாயிற்று.
அவள் கைகளின்.. பின்பகுதி முழுவதிலும்.. திட்டுத் திட்டாய் சிவந்து வீங்கியிருக்க,.. பதறிப் போனவனாய் அவளை நெருங்கியவன், ஒரு காலை மட்டும் தரையில் பதித்து, மறுகாலை மடக்கி மெத்தையில் வைத்து அமர்ந்து.. அவள் கைகளைப் பற்றி.. சுற்று முற்றும் ஆராய்ந்து பார்த்து, “இது என்ன கையில? .. திட்டு திட்டா செவந்து வீங்கியிருக்கு?” என்றான் பதற்றத்துடன்.
அவன் பதறிய பதறல்.. அவள் இமைகளை பல தடவைகள் படபடவென அடிக்கச் செய்தது. இதயத்தின் துடிப்போ சடசடவென அதிகமாவது போல ஓர் தோற்ற மயக்கம் எழுந்து மறைந்தது.
தன் கை முட்டியை.. சோகம் தளும்ப பார்க்கும் அவன் முகத்தையே உணர்ச்சிகள் துடிக்க பார்த்தவள், மிக மிக நிதானமாக, “அது ஒண்ணுமில்லை.. நேத்து ராத்திரி கரண்ட் கட்டா.. ஃபேனும் ஓடாமல் ஸ்ட்ரைக் பண்ணதுல.. மிஸ்டர் என்ட் மிஸஸ் கொசுவுக்கு எல்லாம் அதிர்ஷ்டமா போயிருச்சி.. ரொம்ப எரிவா இருந்தது.. இப்போ கொஞ்சம் பரவாயில்லை”என்றாள்.
அந்த நேரம் ரகுவீருக்குள் வந்ததே கோபம்!!. தன்னவளை வருந்தச் செய்த.. இலங்கை மின்வாரியத்தையே புல்டோசர் வைத்து தகர்க்க வேண்டும் போல கோபம் எழுந்தது.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அங்கிருந்தே ட்ராயரைத் திறந்து, ஆரஞ்ச் மனம் கமழும் ஒருவகை க்ரீமை எடுத்தவன், “இந்த ஓயின்மன்ட் போட்டா சரியாயிடும்..” அவள் கை முட்டிகளுக்கு மெல்ல தடவி விடலானான்.
அறையே ஆரஞ்ச்சின் வாசனையில் குளிக்க.. அவள் கையில் இருந்த சிவப்பு நிற திட்டுக்கள் கூட.. மருதாணி வைத்தது போல ரொம்ப அழகாக இருந்தது அவளுக்கு.
தடவிக் கொண்டே ஆதங்கம் பொங்கும் குரலில், “நைட்.. கோய்ல் (coil) பத்த வைச்சிருக்கலாமில்லையா?” என்று கேட்க, “என் துரதிர்ஷ்டம்.. ஆயா வாங்க மறந்திருச்சு.. ஆனால் என்னை விட ஆயா தான் பாவம்.. “நீ தூங்குமா.. நான் உனக்கு விசிறி விடுறேன்னு ராத்திரி பூரா.. எனக்கு விசிறி விட்டுக்கிட்டே.. முழிச்சிருந்தாங்க.. பாவம்..” என்றுரைக்க, அந்நொடி தன் ஏழ்மையை எண்ணி.. மனதுக்குள் வருந்தினான் ரகுவீர்.
அவளை ராணி மாதிரி வாழ வைக்க.. தனக்கு வசதி வாய்ப்புக்கள் அவசியம் என ஒரு ஆண்மகனாய் எண்ணத் தொடங்கியதும் அப்போது தான். அவள் மதி முகத்தையும், கைகளையும் மாறி மாறி அவன் பார்த்துக் கொண்டிருந்த கணம், ஹாலில் இருந்து கேட்டது தாத்தாவின் குரல்.
பேரனும், வந்த புதுப்பெண்ணும் அறையில் தனியாக இருக்கிறார்கள் என்பதே அவரது மூளையை குடைய வைத்துக் கொண்டிருக்க.. அவர்களாகவே வெளியே வரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு காற்றில் கரைய, பேரனை அழைத்தார் தாத்தா. “ரகுஊ..ரகு.. யேப்பா ரகுஊ” என்ற பெரியவரின் அழைப்பிற்கு.. அறையில் இருந்து, “இதோ வர்றேன் தாத்தாஆ! ”என்று இரைந்து பதிலிறுத்த வண்ணமே, தைர்யாவிடம் திரும்பி, “நீ இரு வந்துடுறேன்”என்றவனாய்.. ஹாலை நோக்கி விரைந்தான் வீர்.
ஹாலில்..தரையிலே ..வெறும் லுங்கியுடன்.. அயர்வாய் கால் நீட்டி அமர்ந்திருந்தார் தாத்தா.
தாத்தாவை நாடிப் போய் முழங்காலில் அமர்ந்து, “என்ன தாத்தா..?”என்று பணிவாக கேட்ட பேரனைக் கண்டு, போலியாக மூசு மூசு என்று பெரும் பெரும் மூச்சுக்களை விட்டுக் கொண்டே, களைத்துப் போன இயலாமை மிகுந்த குரலில், “தாத்தா காலு.. கொஞ்சம் வலிக்குது..பிடிச்சு விட்றியாப்பா?..”என்று கேட்க, “இதை நீங்க கேட்கணுமா தாத்தா.. பிடிச்சு விடுன்னா பிடிச்சு விடப்போறேன்”என்றவன், தரையில் தானும் அமர்ந்து.. அவர் காலை மடியில் ஏந்தி.. இதமாக பிடித்து விடலானான்.
அங்கே அவன் அறையில் அமர்ந்திருந்த தைர்யாவுக்கோ..வெகு நாள் கழித்து.. அளவுக்கு மீறி உண்ட மயக்கத்திலும், ஜன்னலைத் தாண்டி வந்த தென்றல் காற்றிலும்.. தூக்கம் கண்களை சுழற்ற..அவன் கட்டிலிலேயே கை கால்களை குறுக்கிக் கொண்டு, கருவறை குழந்தையைப் போல வலப்பக்கம் திரும்பி அயர்ந்து உறங்கலானாள். வழமை போல.. இடது காதில் தென்றல் புகாமல் இருக்க..கையால் காதை மடித்துக் கொண்டே.. உறங்கிப் போனாள் அவள்.
ஒரு மணித்தியாலம் கழித்து மீண்டும் அவன் திரும்பி வந்த போது.. அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஷேத்ராவின் வெள்ளந்தியான முகத்தைத் தான் அவனால் கண்டு இரசிக்க முடிந்தது. அவனறையில் அவள். அவன் மனம் மட்டும் அறிந்த.. ஊரறியாத..அவன் ஒருதலைகாதலி..அவன் மஞ்சத்தில் துயிலுகிறாள்.
அறைக்குள் வராமல் கதவு நிலையில் சாய்ந்து.. மார்புக்கு குறுக்காக கை கட்டி நின்றவன், செப்பிதழ்கள் திறந்து.. மார்பு ஏற இறங்க மூச்சு வாங்கிய வண்ணமே தூங்கும் அவள் அழகை மௌனமாய் ஆராதித்துக் கொண்டிருந்தான்.
இனிமேல்.. அவள் உறங்கிய அந்த பெட்ஷீட்டை அவன் துவைப்பானா என்பதே சந்தேகம் தான்!! அதே சமயம் அதே பெட்ஷீட்டில் படுத்துறங்கப் போகும் அவனுக்கு இன்றிரவு தூக்கம் வருமோ என்னவோ?
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆண்மகனுக்கு இதழ்கள் குறுக்குறுத்தது.
அவள் கன்னங்கள் உலோகம் என்றால்.. இவன் இதழ்கள் உலோகத்தை ஈர்க்கும் காந்தம். இந்த காந்தமும் அந்த பொன் உலோகத்தை நோக்கி.. பயணப்பட்டது.
திருட்டுப் பூனை போல தன் சொந்த அறைக்குள் நுழைந்தவன், மெல்ல குனிந்து அரவமே எழுப்பாமல் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
அப்போது அவன் கழுத்தில் பட்டு உரசிய அவள் மூச்சிக் காற்றில்.. இதயம் எகிறி குதித்து வந்து குத்தாட்டம் போட.. தன் மனதை தானே கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக வெளியேறினான் வீர்.
ஆரம்பத்திலிருந்து நடந்ததை எல்லாம் வாசலோரம் ஒளிந்து நின்று.. யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த வயோதிபரோ.. பேரன் வெளியேறுவதைக் கண்டதும், சட்டுப்புட்டென்று.. சுவரோடு சுவர் சாய்ந்து பல்லி போல ஒட்டி நின்று மறைந்து கொண்டார்.
அந்த பெண் வந்ததில் இருந்து.. வீரின் நடவடிக்கையில் ஏற்பட்டிருந்த மாற்றங்களும், கூடவே இந்த முத்த சம்பவமும்.. அவர் சந்தேகத்தை ஊர்ஜிதமாக்கவே…
அவர் முகமோ.. கறுத்து இறுகி வாடிப் போயிற்று. வீட்டின் உத்திரத்தை வெறித்துப் பார்த்தவராய்.. உதடுகள் அவை பாட்டுக்கு முணுமுணுக்க.. ஏதேதோ மனதுக்குள் உருப்போடலானார் தாத்தா.
விழிகளை சுருக்கித் திறந்து.. கைகாலினை நீட்டி.. நெட்டி முறித்தவளாய்.. அவள் விழித்த போது.. சூரியனின் பொற்கிரணங்கள் முழுவதுமாக மறைந்து.. மாலை படர ஆயத்தமாகியிருந்தது.
சடாரென அலறி அடித்துக் கொண்டு.. இத்தனை நேரமா நாம் உறங்கினோம் என்று பதறியவளாய், அவள் எழுந்த போது, அவள் விழிப்பதற்காகவே காத்திருந்தாற் போன்று உள்ளே நுழைந்தாள் மது.
“என்ன மேடம்.. பள்ளியெழுந்தருளியாச்சா?”என்று கேலியாக ஓர் கேள்வியை உதிர்த்த வண்ணமே, காபியை தைர்யாவிடம் நீட்ட, “ஸாரி மது.. நேத்து ராத்திரி கரண்ட் கட்டானதுல.. தூக்கம் இல்லையா? அதான் அசந்து தூங்கிட்டேன்..”என்றாள் காபியை பருகிய வண்ணம். அந்த பகல் நேர குட்டித் தூக்கத்தின் அலும்பையெல்லாம்.. மதுவின் சூடான காபி விரட்டுவது போல உற்சாகமாக இருந்தது மற்றவளுக்கு.
ஒரு மிடர் காபியை இரசித்துப் பருகிய வண்ணம், “ரொம்ப நாளைக்கு அப்புறம்.. சூப்பர் சாப்பாடு.. என்ட் காபி சாப்பிடுறேன்.. அதுவும் உன் கைப்பக்குவத்துல.. உன்னை கட்டிக்கப் போறவன்.. ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும்”என்று உரைத்தது மட்டும் தான் தாமதம்.. அபியின் நினைவுகளில் மனம் திளைக்க.. முகம் விகசித்தது மதுவுக்கு. அதைக் கண்டு தானும் முறுவலித்தவள், அறை வாசலைத் தாண்டி.. பார்வை செல்ல “ஆமா வீர் எங்கே?” என்று மெல்ல கேட்டாள் தைர்யா.
“ரகுமாமா.. அவர் ஃப்ரண்ட் அபி கூப்பிட்டாருன்னு.. அவசரமா வெளியே போயிருக்காரு.. இப்போ வந்துடுவாரு.. நீங்க காபி குடிங்க.. நான் போய் தாத்தாவுக்கு ஏதாவது ஒத்தாசை வேணுமான்னு கேட்டுட்டு வந்துட்றேன்”என்றவள், தைர்யாவின் தலையசைப்பை பதிலாக பெற்றுக் கொண்டு அங்கிருந்து ஓடி மறைந்தாள்.
எந்தவிதத்தில் பார்த்தாலும்.. அவளை விடவும் வீர் தான் அதிர்ஷ்டம் நிறைந்தவனாக தோன்றியது அவளுக்கு.
அவனுக்காக எதையும் செய்யும் தாத்தா, அவன் நலனில்.. அவன் சந்தோஷத்தில் மாத்திரமே அக்கறை கொள்ளும் முறைப்பெண் மதுமிதா. எப்போதும் எதையாவது பேசி அவனை ஜாலியாக வைத்துக் கொள்ளும் அவன் நண்பன் அபி..என்று அழகான உறவுகள் அவனுக்கு. காபியை பருகிக் கொண்டே மெல்ல எழுந்தவள், அவனது வரைதற் கருவிகள் எல்லாம் வைக்கப்பட்டிருக்கும் மேசையை நாடிப் போனாள். அவள் விரல்கள் மெல்ல அவற்றைத் தடவிப் பார்த்து மகிழ்ந்தன.
பிறந்தோம், இறந்தோம் என்று வாழும் மனிதர்களுக்கு மத்தியில்.. தனக்கென ஓர் லட்சியம் வைத்து வாழும் ரகுவீர்.. உள்ளம் சிலிர்த்தது அவளுக்கு. அந்த கணம் தான் அவள் கண்களுக்கு எதேச்சையாக தட்டுப்பட்டது.. அந்த மேசையின் விரிப்பின் கீழிருந்த ஓர் வெள்ளைக் காகிதத்தின் நுனித்துண்டு.
இந்த காகிதம் மட்டும் ஏன் மேசை விரிப்புக்கு அடியில்? என்று தோன்ற மெல்ல இழுத்துப் பார்த்தாள் தைர்யா. கையோடு வந்ததோ அவள் எதிர்பார்த்தது போல பெரிய காகிதம் அல்ல.
மாறாக நான்காய் மடித்து வைக்கப்பட்டிருந்த ஓர் ஏஃபோ ஷீட் அளவான காகிதம். அதில் என்ன இருக்கிறது என்று காண ஆர்வம் சுண்டியெழ, காபி கப்பை மேசையில் வைத்தவள், நிதானமாக அதைப் பிரித்துப் பார்த்து, அதில் அவன் வரைந்த பென்சில் ஸ்கெட்ச் ஓவியத்தில் உரோமக்கால்கள் எல்லாம் விறைத்தெழ கற்சிலையாய் உறைந்து நின்றாள். அதைப் பார்த்ததும் அவளுக்கு நெற்றியெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. கைகளோ தானாக ஆடத் தொடங்கியது.
அந்த காகிதத்தில் அப்படி என்ன தான் இருந்தது?
அதிலிருந்த ஆணாய் அவனும், பெண்ணாய் அவளும்.. தன்னிலை மறந்த.. கிறங்கிய ஓர் மோனநிலையில்.. இதழோடு இதழ் இணைக்கும் காட்சியை அவன் வரைந்து வைத்திருக்க.. அதைப் பார்த்து அவள் மூர்ச்சையாகி நிற்காதது தான் பெரும் அதிசயம்!
அந்நேரம் ஹால் பக்கம் இருந்து, “தைர்யா.. தைர்யா.. தைர்யா”என்ற வண்ணம்.. அறையை நோக்கி வரும் வீரின் குரல் கேட்க.. அவசர அவசரமாக.. காகிகத்தை மடித்து .. மேசை விரிப்பின் அடியில் வைத்து விட்டு.. அவள் நிமிர்ந்த போது அறைக்குள் வந்திருந்தான் வீர்.
சிரித்த முகமாக அவளை நாடி வந்தவன் “என்ன மேடம்.. நல்லா தூங்கியெழுந்திருச்சீங்களா?”என்று இயல்பாக கேட்க.. இவளுக்குத் தான் பதிலிறுக்க சங்கோஜமாக இருந்தது.
இயன்றவரை.. சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொள்ள முனைந்தவள்,அவன் கேள்விக்கு பதிலிறுக்காமல், “எ.. எனக்.. கு.. லே.. லேட்டாகிருச்சி ர்.. ரகு.. வீட்டுக்கு போகணும்.. ஆயா தேடுவாங்க”என்று படபடப்பாக மொழிய.. அவளை புருவங்கள் இடுங்க ஒரு பார்வை பார்த்தான் வீர்.
பிறகு… இயல்பு நிலைக்கு பார்வை திரும்ப.. பொழுது சாய்ந்ததால்.. வீட்டுக்கு செல்ல அச்சப்படுகிறாள் போலும் என்று எண்ணிக் கொண்டவன், “ஓகே ரிலாக்ஸ்.. வா நானே உன்னை கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு வர்றேன்” என்றுரைக்க, “இ.. இல்லை.. நான் நானாவே போய்க்குறேன்.. ரொ.. ரொம்ப பக்கம் தான் இல்லையா?”என்று அதே படபடப்பு தாளாமல் உரைத்தவள், மதுவிடமும், தாத்தாவிடம் சொல்லிக் கொண்டு காலில் சுடுதண்ணீரை ஊற்றியது போல அங்கிருந்து விரைந்தாள்.
அவள் தன் வீட்டுக்கு வந்ததை எண்ணி மனம் முழுவதும் சந்தோஷமாக இருந்தவன், தற்போது ஏதோ பேயைப் பார்த்ததைப் போல ஓடுபவளின் புறமுதுகை.. நாடியை நீவி விட்டவனாய்.. காரணம் புரியாது பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அத்தியாயம் – 14
அவன் வீட்டிலிருந்து.. அந்த ட்ராயிங்கைக் கண்டு பதற்றத்துடன் வெளியேறியதன் பின்பு.. மூன்றாம் நாள்..
அன்று சென்றவளிடமிருந்து.. இன்று வரை எந்த தகவலும் சரிவர இல்லாததால்.. அகமும், முகமும் ஒருங்கே வாட… தன் அன்றாட செயல்களிலும், லெக்ச்சர்களிலும் கவனம் செலுத்த முடியாமல் மன அமைதியின்றி உழன்று கொண்டிருந்தான் வீர்.
அவன் வழமைப் போல.. அவள் செல்லுக்கு அழைப்பெடுத்த கணமெல்லாம், “யூஸர் இஸ் பிஸி” என்றே திரும்பத் திரும்ப அந்த கணனிப் பெண் குரல் கேட்டுக் கொண்டேயிருக்க, நாளாக நாளாக , “அவளுக்கு என்னானதோ? ஏதானதோ?” என்ற பயம் மட்டும் தணியவேயாமல் அதிகரித்துக் கொண்டே போனது.
மனதுக்குள் ஏதோ தோன்ற.. இந்த முறை தன் செல்லில் அல்லாது.. தாத்தாவின் செல்லை எடுத்து அவள் இலக்கங்களுக்கு ட்ரை செய்தான் அவன். மறுமுனையில் ரிங்க் போய்க் கொண்டேயிருக்க.. இவனுக்குத் தான் இங்கே இதயத் துடிப்பு வீதம்.. எகிறிக் கொண்டிருந்தது. சட்டென ரிங்க் நின்று, ஆசுவாசமாக பூந்தென்றலுக்கு கூட கிளர்ச்சி மூட்டும் வண்ணம் அழகாய் அவள் குரல்.
“ஹலோ” என்று அவள் காற்றோடு காற்றாய் சொன்ன குரல்.. அவன் காதின் சிற்றென்பு வழியாக உள் நுழைந்து.. மூளையை அடைய.. உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள் படபடக்க.. பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தான் வீர்.
அவள் குரலே சொன்னது அவள் நலமாகத் தான் இருக்கிறாள் என்று. அதில் நிதானம் அடைந்த ரகுவீரின் மூளைக்கு இன்னொரு விஷயமும் தட்டுப்பட்டது.
இந்த மூன்று நாட்களாக.. அவன் நம்பரிலிருந்து அழைக்காத போது வராத ரெஸ்பான்ஸ் இப்போது மட்டும் எப்படி? தாத்தாவின் நம்பரில் இருந்து அழைத்ததும் வந்தது?
புருவங்களை சுருக்கி.. நாடியை வலது பெருவிரலால் நீவி விட்ட வண்ணம், அவன் சிந்தனை வயப்பட்டிருந்த போது மீண்டும் ஒலித்தது அவள் குரல். இம்முறை முன்பிருந்த நிதானம் தவறி ஒலித்தது.
“ஹலோஓ!” என்று உச்சஸ்தாயியில் அவள் இழுத்துக் கேட்க, சட்டென நனவுலகத்துக்கு வந்தவன், தன் கூந்தலை கோதியவனாய், பெருமூச்சு விட்டுக் கொண்டே, “ஹலோஹ் தைர்யாஹ்..!”என்றான் அவசரமாக.
அந்த குரலிலேயே அழைப்பெடுத்திருப்பது யாரென்று புரிய, அலைபேசியினூடாக வெடுக்கென்று வந்தது அவளுதிர்த்த அலைமணிகள். “இப்..இப்போ எதுக்கு நீ கோல் பண்ண?” – இப்படியான ஓர் பதிலை சற்றும் எதிர்பார்த்திராதவனுக்கோ.. ஒரு கணம் ஜர்க்கானது.
சொன்ன அவளுமே தான்.. உணர்ச்சிகளை அப்படியே காட்டி விட்டோமே என, நாக்கை கடித்து, கையை உதறிக் கொண்டு நின்றிருந்தாள். அவளுக்கு ஏதாகிலுமோ என்று பதற்றத்துடன் அவன் எடுத்தால், இவளோ “எதுக்கு அழைப்பெடுத்தாய்?” என்கிறாள் அசிரத்தையாக.
தான், ஏதோ தவறி செய்து விட்டது போலவும், அதற்கு அவள் தன் மீது கோபம் கொண்டிருப்பது போலவும் அவள் பேச்சு அமைந்திருக்க, ஏனென்று புரியாமல் குழம்பிப் போனவன், கம்மிப் போன குரலில், “இல்லை.. சும்மா தான்.. இப்போ நீ ஃப்ரீயா? பேசலாமா?”என்று நிதானமாகவே கேட்டான்.
அவன் கம்மிப் போன குரலே, அவன் மனதை தாம் நோகடித்து விட்டோம் என்று சொல்லாமல் சொல்ல, இந்த முறை இயன்றவரை தன் குரலை தணித்துப் பேசலானாள் தைர்யா.
“இல்லை வீர்? இப்போ…கொஞ்சம் வர்க் பிஸியில இருக்கேன்.. அ.. ம்.. அதான்..நீ கோல் பண்ணதும் ஹார்ஷா பேசிட்டேன்.. நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதே… ம்ம்..ஃப்ரீயானதும் நானே உனக்கு கோல் பண்றேன்.. நான்.. அப்புறம் பேசட்டா?”என்று முணுமுணு என்று வாயசைத்து சாமிக்கும்பிடும் அழகு பெண்கள் போல மெல்ல பேசினாள் தைர்யா.
அவன் அதனை மறுத்துப் பேசவேயில்லை.
அவள் டிசம்பர் சீசன் என்பதால் வேலை டென்ஷனில் ஓடிக் கொண்டிருக்க.. நாம் தான் அவளுக்கு அழைப்பெடுத்து இடையூறு விளைவித்து விட்டோமோ என்று தோன்ற, “ம் சரி”என்று மட்டும் மொழிந்தவன் அழைப்பை துண்டித்து விட்டான்.
‘ஃப்ரீயானதும் நானே உனக்கு கோல் பண்றேன்’ என்ற அவளுடைய மென்மையான மொழிகளே மீண்டும் மீண்டும் அவன் காதுக்குள் ஒலிக்க.. அன்று முழுவதும் அவள் ஃப்ரீயானதும் தனக்கு அழைப்பெடுக்க கூடும் என்று தன் செல்லிலேயே கண்கள் பதித்து காத்திருந்தான் வீர்.
சிம் கம்பெனி காரனிடமிருந்து மெஸேஜ் வந்து செல் ஒளிர்ந்தால் கூட.. சட்டென எடுத்து, ‘தைர்யா’வா என ஆர்வத்துடன் பார்க்கலானான் அவன். ஆனால் தன் நிலையோ “இலவு காத்த கிளி போல”த் தான் என்று அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.இரவாகியும் தூக்கம் வராமல் செல்லையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
தன்னறையில் மஞ்சத்தில் மல்லாக்காக படுத்து, காலுக்கு மேல் கால் போட்ட வண்ணம் உத்திரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டே தனக்குத் தானே உரையாடிக் கொண்டிருந்தவன்…நாடியில் விரல்களால் மெல்ல மெல்ல தட்டியவனாய், “ஒருவேளை அன்னைக்கு போல இன்னைக்கும் ஓவர் டைம் வர்க்கோ.. அதான் டயர்டா வீடு வந்து விட்டு.. எந்த நினைப்பும் இல்லாமல் தூங்குறாளோ..? இருக்கும்… இருக்கும்”என்று யோசித்துக் கொண்டே ஒருக்களித்துப் படுத்தவன், தன் செல்லை எடுத்து, “குட் நைட்.. ஸ்லீப் டைட்..” என்று மெஸேஜை சிரிக்கும் ஸ்மைலியுடன் தட்டி விட்டு விட்டு, தூங்க ஆயத்தமான கணம், அவன் விழிகள் அகல விரிந்தது.
அவன் செல்லிலிருந்து மூன்று நாட்களாக அழைப்பெடுத்த போது ஏற்காதவள், அவன் தாத்தா செல்லிலிருந்து அழைப்பெடுத்த போது எப்படி ஏற்றாள்? ஒருவேளை தன் நம்பரை ப்ளேக்லிஸ்ட்டில் போட்டுவிட்டாளா என்ன? என பலவிதமான கேள்விகள் தோன்றிக் கொண்டே சென்றன.
இந்த கேள்விகளின் முடிவில் எல்லாம்.. அவனுக்கு உதித்தது ஓர் மிகப் பெரும் கேள்வியே.
“வை இஸ் ஷி அவொய்டிங்க் மீ?” – இதயம் இலேசாக வலிக்க.. பதில் அறியாது.. உறக்கம் தொலைத்தான் அந்த வாலிபன்.
ஏழாம் நாள்..
‘ஃப்ரீயானதும் அழைப்பெடுக்கிறேன்’ என்று சொல்லி விட்டு.. அழைப்பை துண்டித்தவளிடமிருந்து.. அதற்குப் பிறகு எந்த பதிலும் வரவேயில்லை. இன்றோடு அவளுடன் பேசி.. நான்கு நாட்களாகி விட்டது. இதற்குப் பிறகுமா அவள் அழைப்பெடுப்பாள்?என்று டைனிங் டேபிளில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு,
சரியாக சாப்பிடக் கூட முடியாமல் போக பேசாமல் எழுந்து உள்ளே வந்து விட்டான் அவன். மதுவும், தாத்தாவும் இன்னும் ஏன் நண்பன் அபியும் கூட.. இந்த ஒரு கிழமையாக மாற்றமுற்றிருக்கும் வீரின் நடவடிக்கைகளைக் கண்டு.. இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? என்று புரியாமல் குழம்பிப் போய் நின்றிருந்தனர்.
தன்னறைக்கு வந்து.. ஜன்னலின் பக்கம் நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டே சிந்தனை வயப்பட்டிருந்தவனின் உள்ளே ஆயிரம் கேள்விகள் வந்து சென்று கொண்டிருந்தன.
ஒருவேளை அன்று பேசியதன் பின்பு.. உடம்புக்கு முடியாததால்.. ஏதேனும் அவதிப்படுகிறாளா? அதை சொல்ல முடியாமல் தவிக்கிறாளாமா?அதனால் தான் அவனுக்கு அழைப்பெடுக்கவில்லையா?
அவள் உடல்நிலை பற்றி எண்ணங்கள் எழுந்ததுமே.. ரொம்பவும் கலவரத்திற்குள்ளாகிப் போனான் அவன்.
தன் இரவு வானில் அந்த வான்மதியைக் காணாது.. பகலில் ரொம்பவும் தகித்தது ஓர் சூரியன்.
ஜூரம் பற்றிய எண்ணங்கள் வந்ததுமே கையும், காலும் ஒரு இடத்தில் நில்லாமல் பரபரக்க… பாதணிகளை அணிந்து கொண்டு.. அவளது நிலவரம் அறிய நாடி அவள் வீட்டுக்கே சென்றான் அவன்.
அவள் வீட்டு வாசற்படியில் நின்றவனுக்கோ.. உள்ளே ஓடிச் சென்று.. அவள் மதிவதனத்தைக் காண தடுக்கும்.. அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு.. சூரியகாந்தியை ஒத்த அழகிய அவளது முகம் கண்டு.. அவளை அள்ளி நெஞ்சோடு அணைக்கத் தான் இந்த ஆதவனுக்கும் ஆசை.
இருப்பினும் இரு பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டில் அப்படி அடாவடித்தனமாக உள்நுழைவது உசிதமல்ல என்று தோன்ற.. அவள் முகத்தைக் காணத் துடிக்கும்.. தன் வேகத்தைக் கட்டுப்படுத்த கை முஷ்டிகளை இறுக்கிக் கொண்டு.. கையில் நரம்போட ஒரு சில கணங்கள் அமைதியாக நின்றான்.
பின்பே நிதானத்துக்கு வந்தவன், தன் குரலை செருகிக் கொண்டு திறந்திருந்த கதவின் வழியே உள்ளே எட்டிப்பார்த்து.. உள்ளே குரல் கொடுக்கலானான்.
“தைர்யா.. தைர்யா..!” – அவனது கம்பீரமான குரல் அழைப்பில் அவன் இதயத்துக்குச் சொந்தகாரியான இளமங்கை வரவில்லை. மாறாக ஓர் வயதுமுதிர்ந்த பெண் தான் வெளியே வந்தாள்.
வந்த பெண்.. தன் கழுத்தை உயர்த்தி.. நெடியவனான வீரினை ‘யார் வந்திருப்பது?’ என.. விழிகளைச் சுருக்கிப் பார்க்க.. அவனுக்கோ.. உள்ளேயிருந்து வெளியே வந்தது அவளது தூரத்து உறவான “ஆயா” என்பது நொடியில் புலப்பட்டது. அவர் விழிகளை.. அடக்கப்பட்ட பதற்றத்துடன் நோக்கியவன், சன்னமான குரலில், “ஆயா தைர்யா இருக்காங்களா..?”என்று கேட்டான்.
ஆயா, “பாப்பா” என்று அழைக்கும் ஷேத்ராவை “தைர்யா”என்று அழைக்கும் ஒரே ஜீவன் அவளது சித்தி மாத்திரம் தான். அவள் சித்தியைத் தவிர.. புதிதாக இன்னொரு பையன் வந்து பாப்பாவை ‘தைர்யா’ என்றழைக்க ரொம்பவும் குழம்பிப் போனவர்,
புருவங்களையும், நயனங்களையும் ஒருங்கே சுருக்கி, “நீங்க யாரு தம்பி?”என்று கேட்க, “நான் அவள் ஃப்ரண்ட் ரகுவீர்.. வீர்னு சொன்னா அவளுக்கு தெரியும்!” என்று தன்னை ஆயாவுக்கு நாகரிகமாக அறிமுகம் செய்து கொண்டான் அவன். வந்தவன் யாரென்று தெரியவில்லை. இதற்கு முன்னும் கூட தைர்யா அவனை வீட்டுக்கு அழைத்து வந்ததாக ஞாபகமும் இல்லை.
அதனால் ‘யாரிவன்? கள்வனோ?’ என்றொரு ஐயமும் பிறக்க, அவனை ஏற இறங்க பார்த்த ஆயா, “ உள்ளே தான் இருக்கா.. நீங்க வெளியே இருங்க தம்பி.. பாப்பாவை கூப்பிடுறேன்””.. என்றவள்.. அவனை உள்ளே அழைக்காமலேயே உள்ளே செல்ல.. வெளியே அமைதியாக காத்திருக்கலானான் அவன்.
அவள் வருகைக்காக காத்திருக்கும் அந்நொடி ரொம்பவும் அவஸ்தைக்குள்ளானான் வீர். ‘அவளை வெளியே வரச் சொல்கிறேன்’ என்றால் என்ன அர்த்தம்? அந்த மல்லிகைப் பூவுக்கு.. ஓடியாடி, அசைந்தாடி.. நகர்ந்து வர தென்பு இருக்கிறது என்பது தானே?
பூமியைத் தழுவ ஓடோடி வரும் மழை அவளென்றால்..அந்த மழையின் வருகைக்கு முன்னரே தோகை விரிக்கும் ஆண்மயிலாய் அவன். ஆனால் இந்த ஆண்மயிலுக்கோ… தன் ஆசை எனும் தோகையை கொஞ்சம் சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை.
மேகங்களுக்கிடையில் சிக்குண்ட மதி.. மெல்ல மெல்ல வெளியே வருவது போல.. உள்ளேயிருந்து வெளியே வந்தாள் இவனின் வான்மதி.
அவள் வந்ததும், அவன் கண்களும், இதழ்களும் துடிதுடிக்க.. அவளை உச்சாதிபாதம் ஸ்கேன் கண்களால் நோட்டம் விட்டான் அவன். அதே பழைய தைர்யா. அவன் வீட்டில் ஓர் பொழுதை சுமூகமாக களித்து விட்டு சென்ற அதே தைர்யா.. எந்தவித மாற்றமும் இல்லாத அவன் தைர்யா.
அவளை பதறியடித்து ஆராய்ந்த பின் தான்.. மெல்ல ஆசுவாசமடைந்தான் அவன். அவள் முகத்தில் அதே மாறாத ஒளிவட்டம். என்ன தான் இருப்பினும் சற்றே மெலிந்திருப்பது போல ஓர் தோற்றமயக்கம். அவன் கண்களுக்கு மாத்திரமா?
அவளோ.. அவனை நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டே வெளியே வந்தவள், உடம்பில் ஓர் நடுக்கம் ஓட.. உள்ளே எட்டி எட்டிப் பார்த்த வண்ணம் பதற்றத்துடன் அவன் முன்னங்கையைப் பற்றி.. வீட்டுத் தெருமுனை ஓரமாக அழைத்து வந்து,பற்களைக் கடித்துக் கொண்டு.. அவசர அவசரமான குரலில், “ நீ எதுக்கு இங்கே வந்த?”என்று கேட்டாள்.
அவளது பதற்றத்தில், வேகத்தில், இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவள் கேட்ட கேள்வியில்.. ஒரு கணம முகம் இறுக நின்றவன், “இல்லை கொஞ்சநாளா ஆளை காணோமேன்னு.. உடம்புக்கு ஏதுமான்னு.. பார்த்துட்டு போலாம்னு வந்தேன்..”என்றான் உடைந்து போன குரலில்.
முன்பிருந்த அதே பதற்றம் மாறாமல், கிசுகிசுக்கும் மெல்லிய குரலில் “அதான் பார்த்துட்டேல்ல..”என்று முகத்துக்கு நேராக ஓர் கும்பிடு போட்டவள், “அய்யா சாமி… இப்போ கிளம்புஊ?”என அவனைப் பிடித்து விரட்டாத குறையாக கெஞ்சினாள் அவள்.
வள் போட்ட கும்பிடுதலில்.. இதயம் வலித்தாலும், அதனை காட்டிக் கொள்ளாமல், “ஏன் என்னாச்சு?” என்று இமைகள் இடுங்க கேட்டான்.
அவன் கேட்ட கேள்விக்காகவே இன்ஸ்டன்ட்டாய் ஓர் பதிலை ரெடியாக்கி வைத்திருந்தவள், “இல்லை ஆயா கொஞ்சம் அந்த காலத்து ஆளு.. பொட்டை புள்ளைய தேடி.. ஆம்பளைப் பய வந்துட்டு போறான்.. பார்க்குறவங்க தப்பா நினைச்சிக்க மாட்டாங்களான்னு என்னை வைவாங்க..அதான்.. ப்ளீஸ்”என்று இறுதியில் கெஞ்ச.. அப்போதும் அங்கிருந்து நகரவில்லை அவன்.
பேன்ட் பாக்கெட்டினுள் வலது கையை விட்டுக் கொண்டே,அவளை பார்த்தானே ஓர் பார்வை. அவள் கருவிழிகளுக்குள் ஊடுருவி பார்க்கும் ஓர் லேஸர் பார்வை. அவள் நலம் பற்றி தான் கொண்டிருக்கும் அக்கறையை உணர்த்தும் காந்தப் பார்வை.
வடமுனை காந்தக் கண்களால் ஈர்க்கப்பட்ட.. இவளுடைய தென்முனை காந்த நயனங்களும்.. கவரப்பட்டு அப்படியே நின்றிருக்க, வாய் திறந்தவன்.. அழகாய் தன் உணர்ச்சியை வெளிப்படுத்தி சொன்னான், “ஓ ஸாரி.. உனக்கு ஏதும் இல்லைல? .. நீ நல்லா தானே இருக்க? .. உன்னை பார்க்காமல் ஒரு மாதிரி இருக்கு.. தெட்ஸ் வை ஐ கேம் டு ஸீ யூ..”என்று.
அந்த பார்வை எனும் மகுடியில் கட்டுண்டு நின்றிருந்தவள், அவனது ஏகாந்தமான குரலில் மனம் தொலைத்து.. அடுத்த நொடி அந்த மாய வலையில் இருந்து வெளியே வந்தாள்.
அவன் கண்களையே சொற்ப கணம் பார்த்துக் கொண்டிருந்ததால்.. இவள் கண்கள் செம்மையாகி.. உள்ளே புதுமையான எண்ணங்கள் தோன்ற..சட்டென தன் விழிகளை தாழ்த்திக் கொண்டவளின் உடலில்.. தற்போது ஓர் நடுக்கம் பரவவாரம்பித்தது.
“எ.. என..எனக்கு ஒண்ணுமில்லையே.. ஐம்.. கக்.. கம்ப்ளீட்லி… ஃபைன்.. ந் நீ கிளம்பு..” என்று அவனை அனுப்புவதிலேயே குறியாக நிற்க.. அதற்கு மேலும் அங்கு நிற்கவில்லை அவன்.
பேன்ட் பாக்கெட்டினுள் இருந்த கையை வெளியே எடுத்து ஆட்டியவனாய், “ஓகே பாய்.. டேக் கேர்”என்று விட்டு.. அழுந்த இதழ்களை மூடிக் கொண்டவன், அவள் பதிலையோ, முறுவலையோ கூட எதிர்பாராமல்.. சாலையில் இறங்கி நடக்கவாரம்பித்தான்.
நேற்று இரவு பெய்த மழையில் சாலையின் பள்ளங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றிருக்க.. தாவி தாவி நடந்து கொண்டே சென்றவனின் முகம் யோசனையில் சுருங்கியிருந்தது.
இப்படி பழைமை வாதியாக நடந்து கொள்ளும் அதே ஆயா.. இவன் வீட்டுக்கு அவளை தைரியமாக அனுப்பியிருக்க கூடுமா? ஒருவேளை இவள் அவருக்கு தெரியாமல் வந்திருக்கக் கூடுமோ? ஆயாவை பார்த்தால்.. அப்படியொரு பழைமை விரும்பியாகவும் தோன்றவில்லையே? பிறகு ஏன் இப்படி?
என்று பற்பல கேள்விகளின் முடிவில் உதயமான ஓர் கேள்வி, “வை இஸ் ஷீ அவொய்டிங்க் மீ?”.
பதினைந்தாம் நாள்..
.
“ஹாய் தைர்யா..!” என்று உற்சாகமாக கேட்ட அவன் குரலில், தூக்கிவாரிப்போட தன் செல்லில் இருந்து தலையை எடுத்தவள் திரும்பிப் பார்த்த போது அங்கே ட்ராலி நிறைய பொருட்களுடன் நின்றிருந்தான் வீர்.. ரகுவீர்!
அவள் வேலை பார்க்கும் பல்லங்காடியில்.. தான் பர்சேஸ் செய்த பொருட்களை ட்ராலி நிறைய போட்டுக் கொண்டு..தைர்யா பில் போடும் கவுன்டரை நோக்கி உற்சாகமாக நடந்து வந்து கொண்டிருந்தவனை.. உள்ளே நடுக்கம் மீதூறப் பார்த்தாள் தைர்யா.
அவன் கேசத்தில் இருந்து தாருமாறாக ஹேர் க்ரீம் வாசனை வீசிக் கொண்டிருக்க.. மேனியிலோ.. வழமையாக வீசும் பாடி டியோட்ரன்ட்டின் சுகந்தம். புத்தம் புதிய கபில நிற(Brown) டீஷேர்ட் மற்றும் இளநீல நிற டெனிமில் பார்ப்பதற்கு.. ரொம்பவும் ஃப்ரஷ்ஷாக தெரிந்தான் அவன்.
புன்னகைத்துக் கொண்டே அவன் இவளை நெருங்கி வர.. நடுங்கும் இடது கையால் இறுக்கமாக செல்லைப் பற்றிக் கொண்டு, வலது கை விரல் நகங்களை கடித்துக் கொண்டு, “இங்கே என்ன பண்ணுற..?”என்று பதற்றமாக கேட்டாள் அவள்.
அவனோ போன முறை போல இல்லாமல் ரொம்பவும் கூலாக சிரித்துக் கொண்டே, “இங்கே எதுக்கு வருவாங்க.. பர்சேஸ் பண்ணத்தான்.. பட் அதுக்கு மட்டும்னு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்.. அப்படியே உன்னை பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்..”என்று தெளிவாக பேசினான் அவன்.
தன் செல்லை எடுத்து யுனிஃபோர்ம் பேன்ட் பாக்கெட்டினுள் இட்டவள், கையை அவன் பக்கம் நீட்டி, “சரி சீக்கிரம் கொடு… பில்லை போட்டுத் தரேன்…”என்றாள் வேகவேகமாக.
அவனோ இங்கிருந்து தன்னை அவசரமாக விரட்ட முனையும் அவளை, இதழ்கள் மடித்து அடக்க முயன்ற குறுநகையுடன் ஒரு சில விநாடிகள் பார்த்தான்.
பிறகு தலையைத் திருப்பி சுற்றுமுற்றும் பார்த்தவன், “இன்னைக்கு என்னைத் தவிர யாரும் கஸ்டமர்ஸ் இல்லை.. அதனால பதட்டப்படாமலேயே பில் போடலாம்..”என்றான் சாவதானமாக.
அவள் எதுவும் பேசவில்லை. அவன் ட்ராலியில் இருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து டேபிள் மீது வைக்க.. இவளோ அவனை நிமிர்ந்தும் பாராமல், பொருட்கள் மீதே பார்வையை பதித்தவளாய் தன் வேலையை செவ்வனே செய்பவள் போல காட்டிக் கொண்டாள்.
அவனோ, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியதனால், இறுகிப் போய் வெளித் தெரிந்த கைச்சந்துடன்.. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்ப்பது தாழ்த்திய கண்கள் வழியாகவும் விளங்க.. அவள் கைகள் அவளையும் மீறி மெல்ல படபடக்கத் தொடங்கியது. அவன் அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான், “நீ முன்ன மாதிரி இல்லை தைர்யா.. என்னை கண்டா ஏன் நடுங்குற?.. பயப்படுற..?” என்று.
சட்டு சட்டென்று பொருட்களை சிவப்பு இயந்திரத்தில் காட்டி பில் போட்டுக் கொண்டிருந்தவளின் கைகள் அப்படியே ஒரு கணம் தடைப்பட்டு நின்றது. தலை மெல்ல மேலுயர்ந்தது.
அங்கே அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்த.. ஆளை அசரடிக்கும் பார்வையில் மீண்டும் கைகள் நடுங்க.. பார்வையை குனித்து பில் போட்டுக் கொண்டே, “அப்.. அப்படியெல்லாம் ஏதுமில்லையே..”என்றாள் மெல்ல. அதன் பிறகு அவனிடமிருந்து ஏதாவது கேள்விகள் வரும் வரும் என்று உள்ளுக்குள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனாள் அவள்.
அவள் பொருட்களுக்கு பில் போட்டு, எல்லாவற்றையும் ஷாப்பிங் பேக்கில் போட்டு அவள் கையளித்த நேரம்,இளநகையுடன் வாய் திறந்தவன், “சரி.. அப்போ… டூமோரோவ்.. ஒரு லீவை போட்டுட்டு.. வன் ஓ க்ளாக் கார்கில்ஸ் ரெஸ்டாரென்ட்டுக்கு.. வந்துடு..”என்றான்.
அது அவன் விடுக்கும் அழைப்பு வழக்கமானது தான். எத்தனையோ முறை அவனும், அவளும் அங்கே அமர்ந்து இருவரும் சாவகாசமாக பேசிக் கொண்டே உணவருந்தியும் இருக்கின்றனர்.
ஆனால் இது தான் முதல் முறை அவன், அவளை அழைப்பது போல பிகு பண்ணிக் கொண்டவள், “நான் எதுக்கு அங்கேயெல்லாம் வரணும்..? அப்படியெல்லாம் ஒரு மணிக்கு வர முடியாது..”என்றாள் நடுக்கத்துடன்.
அவள் படபடப்பைக் கண்டு.. இம்முறை முத்து மூரல்கள் வெளித் தெரிய நகைத்தவன், “பார்த்தேல்ல பார்த்தேல்ல.. நீ முன்னே மாதிரி இல்லை.. அது நாம வழக்கமா மீட் பண்ணிக்கிற ரெஸ்டாரென்ட் தானே.. ஏன்.. என்னை பார்த்து பயப்பட்ற..?”என்று மறுபடியும் அவளை சீண்டினான் அவன்.
அந்த மெட்டல் டேபிளில் இரு கை ஊன்றி முன்னே சாய்ந்து, பற்களைக் கடித்து, அவன் முகத்தை சற்று அண்ணாந்து பார்த்தவள், “க்ர்ர்… பயமா? எனக்கா? நீ என்ன பேயா? பிசாசா?உன்னைப் பார்த்து பயப்படுறதுக்கு.. பட் நான் வர முடியாது.. எ.. எனக்கு வே.. வேலை இருக்கு.” என்றாள் தீர்க்கமாக. அருகில் வந்த அவள் முகத்தில் இருந்த உதடுகளை அவன் கண்கள் ஒரு செக்கன் ஆசையுடன் தழுவிச் செல்ல, “அதே தான் நானும் கேட்குறேன்.. நான் என்ன பேயா? பிசாசா?ஒரு நாள் வேலை பார்க்கலைன்னா எதுவும் ஆகப்போறதில்லை.. லீவ் போடு தைர்யா” என்றவன், வசீகரமான குரலில், “நாளைக்கு ஒரு மணிக்கு… கார்கில்ஸ் ரெஸ்டாரென்ட்…ரூம் நம்பர் வன் செவன் டூ” என்றவன்.. தன் டீஷேர்ட் காலரில் மாட்டி வைத்திருந்த.. கண்ணாடியை ஸ்டைலாக எடுத்து மாட்டிக் கொண்டு அங்கிருந்து நகரும் அவனையே.. இயலாமையுடன் பார்த்திருந்தாள் அவள்.
அடுத்த நாள் மதியம்..
கார்கில்ஸ் ரெஸ்டாரன்ட்… வெள்ளை ஷேட்டின் மீது கறுப்பு நிற வெஸ்ட்கோட் அணிந்தவர்களாக.. அந்த ரெஸ்டாரன்ட்டின் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர் வெய்ட்டர்கள்.
அந்த விடுதியின் நடுவில்.. இலங்கையின் சிங்கள பாணியில், ரவிக்கையும், பாவாடையுமாக ‘ரெத்த எட்ட’ என்னும் உடை அணிந்து.. கையில் குடம் தாங்கியிருந்த ஓர் சிலையிலிருந்து.. தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் அழகிய செயற்கை நீரூற்று ஒன்று.
அந்த நீரூற்றில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில்.. பற்பலவிதமான வர்ணங்களில் மீன்கள் நீந்திக் கொண்டிருக்க.. தரையில் டைல்ஸ் பளபளக்க, பின்னணியிலே.. ஓர் ஹாலிவுட் பாடலொன்று இசைக்கவிடப்பட்டிருந்தது. அந்த ரெஸ்டாரென்ட்டில் கீழ்த்தளம் முழுவதும் உணவுக்கானது என்றால் மேல் தளம் முழுவதும் அறைகளைக் கொண்டு தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
மேல்தளம் செல்லும் லிஃப்ட் கூட கண்ணாடியில்.. ரொம்ப ரொம்ப அழகாய் இருக்க.. அதன் படிக்கட்டுக்களோ.. ஓர் பெண் படர விட்ட சேலைத் தலைப்பைப் போல.. பள்ளத்தில் விரிந்து.. மேட்டில் சுருங்கி சௌந்தர்யத்திலும் சௌந்தர்யம். அங்கே இருந்த நாற்சதுர டேபிள்களில்.. ஓர் கோடியில் இருந்த டேபிளில் தான் அமர்ந்திருந்தனர் மதுவும்.. அவள் ஆசைக் காதலன் அபியும்.
பெரும்பாலும் அவள் வீட்டு கிச்சனிலேயே அரங்கேறிக் கொண்டிருந்த அவர்களது காதல் நாடகம்.. அபியிற்கு சலிப்பைத் தவிர, கெஞ்சிக் கூத்தாடி உருட்டி மிரட்டி, இறுதியில் தன் பிராணன் போகாத குறையாக அலறித் தேறி.. ஒரு வழியாக அவளை இந்த ரெஸ்டாரென்ட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அவன்.
தாத்தா வேறு பால்ய நண்பர் ஒருவரை பார்த்து விட்டு மாலை தான் வருவேன் என கூறி விட்டு வெளியே சென்றிருக்க.. அவளது ரகுமாமாவும் பெயின்டிங், காலேஜ் என்று அலைந்து கொண்டிருக்க.. யாருக்கும் சொல்லாமல் வெளியே வந்திருந்தவளின் உள்ளே அபாய மணி அடித்துக் கொண்டேயிருந்தது.
காதலியுடன் முதன் முதலாக வெளியே வந்திருக்கும் தருணம். எந்த காதலனுக்கும் ரொம்ப இனிக்கும் தருணம். அந்த அழகிய தருணத்தை இரசிக்கவே விடாமல் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது அவளுடைய படபடப்பு.
தன் ஷல்வாரின் மேலாக அணிந்திருந்த.. துப்பட்டாவை எடுத்து கழுத்தோடு முகத்தை சுற்றி தரித்திருந்தவளின் கண்களோ.. அச்சத்துடன் போகும் வரும் ஆட்களை எல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்தது.
கூடவே அவளது உதடுகள்.. அபிஷேக் மட்டும் கேட்கக் கூடிய இரகசியமான குரலில், “ஐய்யோ.. யாரைப் பார்த்தாலும் தெரிஞ்சவங்களோன்னு ரொம்ப பயமா இருக்கு.. வாடா போயிரலாம்..” என்று அவனையும் அழைத்தாள் அவள்.
அக்கணம் அவர்கள் முன்னால்.. ஆர்டர் செய்த உணவு வைக்கப்பட.. விழிகள் மருள நின்று கொண்டிருந்தவளை நோக்கி, “என்ன வாய் பார்த்துட்டிருக்க? அப்படி யாரும் தெரிஞ்சவங்க வர மாட்டாங்க.. அப்படியே வந்தாலும் என்னை யாருன்னு கேட்டா.. கட்டிக்கப் போறவன்னு சொல்லு… இப்போ.. சாப்பிடு..”என்று காட்டமாக உரைக்கவும் தான் கொஞ்சம் சாந்தமானாள் மது.
அவர்கள் முன்னே வைக்கபட்டிருந்த உணவை.. அபி கமுக்கமாக அருந்திக் கொண்டிருக்க.. இவளுக்குத் தான் அந்த உணவு தொண்டையைத் தாண்டி இறங்கவே மாட்டேன் என்றது.
தன் பாதி கன்னத்தை.. துப்பட்டாவால் இழுத்து இழுத்து.. மறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தவளின் கையினை.. சாப்பிட்டுக் கொண்டே மெல்ல காதலுடன் பற்றினான் அபி.
பிறகு அவள் புறங்கையை.. தன் உள்ளங்கையால் தடவி விட்டுக் கொண்டே, அவள் கண்களை நிமிர்ந்து நோக்கியவன், “ரிலாக்ஸ் மது.. நான் தான் இருக்கேல்ல.. என்ன ஆனாலும் நான் பார்த்துப்பேன்.. இப்போ அமைதியா சாப்பிடு” என்று ஈர்க்கும் மையல் குரலில் கூற.. அந்த குரலுக்கு மகுடிக்கு கட்டுண்ட பாம்பைப் போல கட்டுண்டுப் போனாள் அவள். அவள் தலை.. தானாக “சரி” என்பது போல ஆட..அவள் புறங்கையோ.. அவன் தொடுகையை உள்ளூற அனுபவித்துக் கொண்டிருந்தது.
கன்னங்கள் கொஞ்சம் செம்மையுற.. ஏதும் பேசாமல் உணவை மெல்ல ஒருவாறு அவனுடன் இணைந்து சாப்பிட்டு முடித்தாள் அவள். சாப்பிட்டு முடித்து.. பில் செலுத்தி விட்டு.. அவள் கையை விடாமல் பற்றி அழைத்துக் கொண்டு.. அங்கிருந்த ஃபயர் எக்ஸிட் பக்கம் சென்றான் அவளது காதலன்.
அவன் எங்கு தன்னை அழைத்துச் செல்கிறான் என்று புரியா விட்டாலும்.. அவன் கைச் சிறையில் தானிருப்பது ரொம்பவும் பிடித்திருந்தது அவளுக்கு.
மெல்ல அவளை அழைத்துச்சென்றவன், அங்கிருந்த மறைவான சுவரோரம் தன் மாதுவை சாய்த்து..தன் கைகளைக் கொண்டு அணையேற்படுத்தி நின்று, .
அவள் விழிகளோடு தன் விழிகளை உறவாட விட்டவனாய்.. ஒரு சில நிமிடங்களுக்கும் மேலாக அவளையே பார்த்திருந்தான் அவன்.
நதியும், கடலும் இணைந்தது போல.. இருவர் கண்களும் வெகுநேரம் சங்கமித்துக் கொண்டேயிருந்தது. அவன் அண்மையில்.. படபடவென இமைகள் இரண்டும் அடித்துக் கொள்ள, தன் மார்புப் பந்துகள் இரண்டும் ஏற, இறங்க மூச்சு வாங்க அவஸ்தையுடன் நெளிந்தாள் அவள்.
அவள் நெளியும் அவஸ்தை கூட அவனுக்குள் கிளர்ச்சி மூட்ட, மெல்ல அவள் பட்டுக் கன்னத்தோடு.. தன் முடி குத்தும் கன்னத்தை உரசி.. அவள் காதோரம் சென்றவன், ஹஸ்கி குரலில், “எதுக்கு இப்போ இப்படி நர்வஸா இருக்க? .. ரிலாக்ஸ் குட்டிமா..” என்றுரைத்த வண்ணமே.. அவளை இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போனான் அவன்.
அந்த நெருக்கம்.. வல்லினத்துக்கும் மெல்லினத்துக்குமான ஓர் காதல் கிறக்கம். அவன் கேடயம் போன்ற வலிய மார்பில்.. அவளுடைய பெண்மைகள் இன்ப அவஸ்தைப் பட.. கொஞ்சம் கொஞ்சமாக அவன் நெருங்க… அந்த பூங்கொடியோ கொஞ்சம் கொஞ்சமாக நொருங்கிப் போனது. அந்த நொருங்கல் கூட ஓர் அழகு. அது காதல் வயப்பட்ட தலைவியர் மட்டும் அறிந்து கொள்ளும் அழகு.
அவள் முதுகோடு கையிட்டு.. சுற்றி வளைத்து.. அவளை இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போனவன், தான் எப்போதும் அவளிடம் கண்டு மயங்கும் அந்த கள்ளூறும் அதரங்களையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்னும் சற்று நேரத்தில் நடக்கப் போகும் மாறன் கூத்து புரிய.. நாணத்துடன் மெல்ல கண்மூடிக் கொண்டாள் அவன் அந்தரங்க இளவரசி. அவனோ தான் தீண்டு முன்பு.. தன் மூச்சுக்காற்றால் அவள் இதழ்களை தீண்டிய வண்ணம் அமைதியாக இருந்தான் ஓரிரு கணங்கள்.
என்னடா இன்னும் இதழ்கள் தன் இணையுடன் சங்கமிக்கவில்லை என்று தோன்ற.. கொஞ்சம் குழப்பத்துடன் சுருங்கி.. மெல்ல திறந்தது அவளது நயனங்கள். அந்த நயனங்களின் திறப்பு விழாவிற்காகவே காத்திருந்தாற் போன்று.. அவளது தேனூறும் அதரங்களை மெல்ல கவ்விக் கொண்டான் அவன்.
அவள் கண்கள்.. அந்த அதிரடியில் அகல விரிய..அவள் கைகள் அவன் சட்டைக்காலரை தன்னோடு இறுகப் பற்றிக் கொண்டது. இதுவரை அவளிடமிருந்த தயக்கம், அச்சம், பிடிபட்டு விடுவோமோ என்ற படபடப்பு எல்லாம் மெல்ல மெல்ல அவளை விட்டு அகல.. அவன் தந்த முத்தத்தோடு கரைந்து போனாள் மது.
தன் மாதுவான “மது”வின் இதழ்கள் தந்த “மதுவில்” சுவர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடையில் பயணப்பட்டு வந்தான் அபிஷேக். அந்த சமயம்.. அவள் முத்தத்தோடு திளைக்க விடாமல், அவள் கண்கள்.. தூரத்தில் தெரிந்த மேல் தளத்தின் வழியாக சென்று கொண்டிருந்த ரகுமாமாவை கண்டு கொள்ள.. அவள் காதல் வலை சட்டென அறுபடத் தொடங்கியது. தன்னிலிருந்தும் அவனை சட்டென தள்ளி விட்டவள், தூரத்தில் ரகுவீரை கண்டதற்கே பயந்து போனாள்.
இவளுக்கு என்னவாயிற்று? ஏன் விலகினாள்? ஒருவேளை கொஞ்சம் வன்மையை பிரயோகித்து விட்டோமோ? வலித்து விட்டதோ என்று தோன்ற, அவள் முகத்தில் வலிக்கான தடம் தெரிகிறதா? என்று காதலுடன் ஆராயலானான் அவன்.
அவள் முகத்தில் வலிக்கான அறிகுறிகள் இல்லை.மாறாக பதற்றத்திற்கான அறிகுறியே தென்பட.. அவள் பார்வை நிலைத்திருந்த திசையை தானும் திரும்பிப் பார்த்தான் அவன். அவனும் தான் பார்க்கும் திசையை பார்ப்பதை உணர்ந்து.. “ஐய்யோ ரகுமாமா..?” என்றாள் அவள் கைகளை உதறிய வண்ணம்.
“எங்களை இந்த கோலத்துல பார்த்தால்… என்னை என்ன நினைப்பாரு.. இதுக்கு தான் நான் வரமாட்டேன்னேன் ?”என்று ஏறக்குறைய முணங்கும் குரலில் அவனிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள் அவனின் செல்ல மது.
அவள் பதற்றத்தைக் கண்டு.. குபீர் சிரிப்பு தோன்றியது அவனுக்கு. எங்கேயோ தூரத்தில் சென்று கொண்டிருக்கும் வீர்.. இங்கே வந்து இந்த கோலத்தில் அவளை பார்க்கக் கூடுமா?
சரியான பட்டிக்காட்டு புத்தி என்று மனதுக்குள் செல்லமாக திட்டியவன், “இரு.. கூல்..உன் ரகுமாமா அங்கே தானே போய்..ட்டி…ருக்கான்..”என்று தேய்ந்த ரெக்கார்ட்டர் போல சொல்லிக் கொண்டிருந்த கணம், நுழைவாயில் பக்கமாக.. காவலாளிகள் கதவைத் திறக்க.. தன் ஹேன்ட் பேக்கினை அணிந்து கொண்டு தைர்யா உள்ளே வந்ததை அவதானித்து விட்டான் அபி.
மதுவுக்கு கண்களாலேயே வாசல்பக்கம் கை காட்டியவன், “ஐஞ்சுக்கு அப்புறம் ஆறு.. உன் ரகுமாமா பின்னாடி போறது யாரு? அக்கடச் சூடு…”என்று ரைமிங்காக பேசிய வண்ணம் கூற, அப்போது தான் தைர்யா வருவதை கண்டு கொண்டவள், சற்றே திகைப்புக்குள்ளாகி, “ஆ!!தைர்யா!!..இவள் எப்படி இங்கே?..” என்று கேட்டாள் அவள்.
காற்றில் கைகளை உயர்த்தி, விரல்களை கோர்த்து, நெட்டி முறித்த வண்ணம், தன்னவளை பாராது விட்டத்தை பார்த்த வண்ணம், “குட்டிம்மா.. செம்ம லவ் சீன் மாட்டியிருக்கு.. தெறி.. க்க விட..லாமா?”என்று அஜித் ஸ்டைலில் கேட்டவனை.. புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மது.
பின்பு தைர்யாவுக்கு தெரியாமல்.. தைர்யாவை நோட்டம் விட்டுக் கொண்டே.. தன் நண்பனுக்கு அழைப்பெடுத்து ஸ்பீக்கர் ஃபோனில் போட்டான் அபி. சில நிமிட ரிங்குகளுக்குப் பிறகு, மறுமுனையில் ஒலித்தது ரகுவீரின் குரல்,
“சொல்லு மச்சி”
தன் குரலை சாதாரணமாக்கிக் கொண்டு, “மச்சி நீ எங்கேயிருக்க?” என்று கேட்டான் அபி. “நா.. நான் வந்து.. கொட்டஹேன ஃபிஷ் மார்க்கெட்ல இருக்கேன்டா”என்று தட்டுத் தடுமாறி பதிலுரைத்தான் ரகுவீர்.
அவன் கூறிய பொய்யை கேட்டுக் கொண்டிருந்த மதுவும் கூட.. தன் அகலத் திறந்த வாயை.. கைளால் பொத்திக் கொள்ள, “என்னமா புழுகுறான் பாரு.. புழுகுணிப் பையன்”என்று தன் காதலியிடம் முணுமுணுத்து விட்டு, “சரி மச்சி..ஃப்ரீயா இருந்தால் பாஸ்போர்ட் ஆஃபிஸ் வரைக்கும் போய் வரலாம்னு பார்த்தேன்.. யூ கேரி ஓன்”என்றவன்.. செல்லை கட் செய்து விட்டு.. பேன்ட் பாக்கெட்டினுள் போட்ட வண்ணமே நிமிர்ந்தான்.
“உன் மாமன் ஏதோ நமக்கு தெரியாமல் பண்ணுறான்? கண்டுபிடிக்குறோம்”என்றவன், அவள் கைப்பற்றி அழைத்துக் கொண்டு.. அந்த ரெஸ்டாரென்ட்டின் நடுநடுவே அமைக்கப்பட்டிருந்த தூண்களுக்கிடையில் மறைந்து.. மறைந்து.. தன் கண்களை விட்டும் மறைந்த வீரை விட்டு விட்டு.. கண்ணெதிரே இருக்கும் தைர்யாவை பின்தொடரலாயினர் இருவரும்.
அவளோ அந்த வெல்வட் கம்பளம் விரிக்கப்பட்டிருந்த அந்த அழகிய படிக்கட்டுக்களைக் கடந்து.. மெல்ல மேல்தளத்திற்கு சென்றாள். “அது தான் அறைகள் இருக்கும் இடமாயிற்றே.. அப்படின்னா இவங்க கீழ் ஃப்ளோருக்கு சாப்பிட வரலை… மேல் ஃப்ளோர்ல ரூம் போட…”என்னும் போதே மேற்கொண்டு முடிக்க விடாமல்,
அவன் தோள் பற்றி தடுத்து முறைத்துப் பார்த்த மது, “என் மாமாவைப் பத்தி தப்பா பேசாதீங்க.. அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்”என்றுரைக்கவும் தான் அமைதியானான் அவன். .
தைர்யா மேலே பல அறைகள் இருக்கும் கோரிடோர் வழியாக நடந்து சென்று, ஓர் அறைக்குள் நுழைவதை கண்டவர்கள் இன்னும் கொஞ்சம் ஸ்தம்பித்துப் போய் நிற்க, அபியோ அலறும் குரலில், “உன் மாமா கிழம் இல்லைமா..? நான் அன்னைக்கு சொன்னதை இன்னைக்கு வாபஸ் வாங்கிக்குறேன்.. சீக்கிரம் வா.. ஏதாவது ஏடாகூடமா நடக்க முதல் நாம தடுத்தாகணும்”என்று உரைத்தவன், அந்த கோரிடோரில் தானும் கை வைக்க போன போது, கோரிடோர் ஆரம்பத்தில் நின்றிருந்த ஜிம் பாய்ஸ் இருவர்.. ஆளுக்கு ஒரு கரம் நீட்டி, அபியைத் தடுத்து நிறுத்தலாயினர்.
அவன் என்னடாவென்று தலையுயர்த்தி.. மலைமாடு மாதிரி நிற்கும் அந்த ராட்சத பர்வதங்களை பார்க்க, அந்த ஜிம் பாய்களுள் ஒருவன், “ஸாரி சர்.. தே ஆர் ரிசர்வ்ட் ரூம்ஸ்.. நாட் அல்லோவ்ட்”என்று கூற.. கையைப் பிசைந்து கொண்டு இருவரும் பதற்றத்துடன் வெளியே நின்றிருந்தனர். மீண்டும் மீண்டும் ரகுவீருக்கு அழைப்பெடுக்க, வீர் ஃபோனோ ஸ்விச்ட் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
அவள், அந்த அறைக்கு நுழைந்ததும், இன்முகமாக காற்றில் கைகளை அகல நீட்டி, “வெல்கம் தைர்யா” என்றான் வீர் ஸ்மார்ட்டாக.
அவனது வெல்கம் தோரணையே பிடிக்காதவள், அமைதியாக உள்ளே வந்து, “இப்போ புரிஞ்சுக்கிட்டீயா? உன் மேலே எனக்கு பயமோ.. நடுக்கமோ இல்லை.. போதுமா.. நான் கிளம்புறேன்”என்று படபட பட்டாசாக அனைத்தையும் ஒரே மூச்சாக சொல்லித் தீர்த்தவள், மீண்டும் செல்ல ஆயத்தமான கணம்.. ஓரடி எடுத்து வைத்து அவளை அடைந்தவன்,.. அவள் ஷோல்டரை இரு கைகளாலும் பற்றிக் கொண்டான்.
இதே அவள் அந்த ஓவியத்தை பார்க்காத நேரமாக இருந்திருந்தால்.. அவன் தொடுகையை ஃப்ரண்ட்லியாக எடுத்திருக்க முடியும்? ஆனால் இவள் தான் அன்று அந்த முத்த ஓவியத்தை பார்த்து விட்டாளே?
இதில் யாருமில்லாத தனி அறை. அவன் நெருக்கம்.. அவன் தொடுகை எல்லாம் மீண்டும் நடுக்கத்தைக் கிளப்ப, அவள் உடல் மெல்ல நடுங்கவாரம்பித்தது.
அவள் நடுக்கத்தைக் கண்டு உள்ளே சற்று பதறியவன், அவள் விழிகளை காதல் தப்பாமல் பார்த்துக் கொண்டே,
“கொஞ்சம் இரு தைர்யா .. பயப்படாதே.. ஐ வில் நெவர் ஹார்ம் யூ… ஐ வோன்ட் டு ஷேர் சம்திங் வித் யூ.. அவ்வளவு தான்..ஓகே..ப்ளீஸ் பி கொய்ட்”என்று மெல்ல உரைக்க.. அவள் படபடப்பு கொஞ்சம் அடங்கிப் போனது.
அவள் அவனையே பார்த்திருக்க, அவன் ஓடோடிச் சென்று சற்று நேரத்திற்கு முன் தான் அறையில் வைத்த.. தன் ஷோல்டர் பேக்கை நாடிப் போனான்.
அதிலிருந்து ஏதேதோ நவீனரக தொழில்நுட்ப கருவிகளை அவன் எடுக்க.. இருந்த இடத்திலேயே ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தாள் தைர்யா.
அவன் மீண்டும் அவளை நோக்கி.. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு வர, அவள் கேட்ட முதல் கேள்வி, “இது எல்லாம் வாங்க ஏது உனக்கு பணம்? உண்மையை சொல்லு.. எங்கேயாவது சுட்டுட்டியா என்ன?”என்று பதற்றம் மேலோங்கிய குரலில் கேட்டாள் அவள்.
அவள் தன்னை திருடன் போல பார்ப்பது பிடிக்காமல், பெருமூச்சு விட்டு.. தன்னைத் தானே சமன்படுத்தியவாறு, அடக்கப்பட்ட கோபத்துடன், அவள் விழிகளை நோக்கி, “நான் ஒண்ணும் அந்த மாதிரி குடும்பத்துல இருந்து வந்த ஆள் இல்லை.. எப்போவும் நேர் வழி தான்.. குறுக்கு வழி என்னைக்குமே கிடையாது..
இது நான் உழைச்சு சம்பாதிச்ச காசுல வாங்கினது.. டு யூ ரிமெம்பர்? .. அன்னைக்கு ஆர்ட் கேலரியில வைச்சு.. ஒரு பெயிண்டிங் வரைஞ்சேனே?ரோஜாப் பூவுல உன் ஃபேஸை…அந்த ட்ராயிங்.. ஸோல்ட் ஃபோர் ஃபைவ் லேக்.. எஸ். என். ஸியோட கர்ரெஸ்பான்டன்ட் மிஸ்டர். குருலிங்கம் தான் வாங்கியிருக்காரு.. ஸோ ஐ போட் தீஸ் ஐட்டம்ஸ்”என்று கூற.. அவன் சொல் தாங்கி வந்த செய்தியில் இன்னும் கொஞ்சம் உறைந்து போய் நின்றிருந்தாள் அவள்.
என்ன அன்று அவன் கலாபவனத்தில் வைத்து வரைந்த அந்த ஓவியத்தை.. அவள் சித்தப்பா ஐந்து இலட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறாராமா? அவள் அதைக் கேட்டு விழிகள் அகல விரித்து நின்று, “வாட்?” என்று கேட்டாள் அதிர்ச்சியுடனே.
ஆனால் அவனோ அந்த ஓவியம் ஐந்து இலட்சத்துக்கு விற்பனையானதை நம்ப மறுக்கிறாள் போலும் என்று எண்ணிக் கொண்டவனாய், “நீ நம்பினாலும், நம்ப மறுத்தாலும் அது தான் உண்மை.. மை பெயிண்டிங் வொஸ் ஸோல்ட் ஃபோர் ஃபைவ் லேக்”என்றான்.
பிறகு அவளை நாடி வந்தவன், அவள் அனுமதியில்லாமலேயே அவள் கண்களுக்கு, “வர்ச்சுவல் ரியேலிட்டி ஹெட்ஸெட் Virtual Reality headset”ஐ மாட்டி விட.. பயந்து பின்வாங்கப் போனாள் தைர்யா.
தன் பிடரியில் ஹெட்ஸெட்டை மாட்டிவிடும்..அவன் கையினைப் பற்றித் தடுத்தவள், “வீர்.. என்ன பண்ற? என் கூட விளையாடுறியா..?”என்று கடிந்து கொள்ள அதை எல்லாம் அவன் பொருட்படுத்தவேயில்லை.
அதை அணிந்து.. அதன் வழியாக அவள் அறையை பார்க்க முனைந்த அந்த கணம்.. அவளுடைய கத்தல், கூச்சல் எல்லாம் அப்படியே அடங்கிப் போயிற்று. முழு அறையும் அந்த கண்ணாடி வழியாக இருட்டாக தெரிய.. காற்றில் கைகளை நீட்டி.. கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சிறு குழந்தை போல அறையிலிருந்த பொருட்களை தேடினாள் அவள்.
அவள் செய்கையைப் பார்த்து, தலை சிலுப்பிக் கொண்டு நகைத்தவன், தானும் ஹெட்ஸெட்டை அணிந்த வண்ணம் , கையில் “ஒக்யூலஸ் டச் கன்ட்ரோல்லர்” நுண்ணறிவு தொடுகை சாதனத்தை கையில் எடுத்ததும்.. அவளுக்கு ஓர் புது மாதிரியான ஓர் உலகத்தை காட்டாவாரம்பித்தான் அவன்.
படைப்பவன் பிரம்மன் என்றால். இவனும் அங்கணம் ஓர் பிரம்மனானான். அது தான் நவீன முப்பரிமாண வரைதல் நுட்பம். “டில்ட் ப்ரஷ் பெயிண்டிங்”என்று அழைக்கப்படும் இருபத்தோராம் நூற்றாண்டின் அட்வான்ஸ்ட் வரைதல் கலை தான் இது.
உலகின் மிகப்பெரும் மென்பொருள் நிறுவனமான “கூகுளினால்” கண்டுபிடிக்கப்பட்டு.. உலகெங்கும் நாளுக்கு நாள் வேள்வி அதிகரித்து வரும் கலையே இது.
அந்த த்ரீ டீ ஹெட்ஸெட் வழியாக அதை பார்க்கும் போது தான்.. அந்த வரைதல் பார்ப்பவர்களுக்கு புரியும். இன்றேல் சும்மா யாரோ காற்றில் கையசைத்துக் கொண்டிருப்பதாகத் தான் தோன்றும்.
அந்த கன்ட்ரோலரில் இருந்த ஜோய் ஸ்டிக்கை மெல்ல ஆட்டினான் வீர். அவன் கையசைத்த திசையில் எல்லாம்.. கோடுகளும் வட்டங்களும், நிறங்களும் அந்தரத்தில் உருவாகிக் கொண்டே போனது.
அடுத்த நிமிடம் அவன் அவ்வறையின் ஓரிடத்தில் மட்டுமே நின்றிருக்கவேயில்லை. முதலில் அந்தரத்தில் கையசைத்து.. அழகான சூரியகாந்திப் பூக்களை தத்ரூபமாக.. முப்பரிமாண முறையில் நிரல் நிரலாக வரைந்தவன், அந்த சூரியகாந்திகளின் நீண்ட தண்டுகளை.. பச்சைப் பசேலென்ற இலைகளுடன் வரைந்தான்.
பின்பு அடியில் குனிந்து.. த்ரீ டீ முறையில் பச்சை நிறத்தில் புற்களை வரைய.. தைர்யாவோ அவளைச் சூழ என்ன நடக்கிறது என்பது புரியாமல்.. தான் கனவிலுமு எதிர்பார்க்காத மாய உலகில் நின்று கொண்டிருந்தான்.
அந்த புற்களின் முடிவில்..ஓர் சின்ன நீரோடை.. இள நீல நிறமும், கடும் நீல நிறமும், காற்றில் பீய்ச்சி அடிக்கப்பட… அந்த நீரோடையின் நதியோட்டம் கூட.. பளபளவென தங்க ஓடை போல மின்னலாயிற்று. தைர்யாவோ.. தான் எங்கோ அனிமேஷன் படத்தை த்ரீ டியில்.. அதுவும் நேருக்கு நேராக பார்ப்பது போல உணர்ந்தாள்.
அவள் அந்த விடுதியின் அறையில் நின்று கொண்டிருப்பதை மறந்து.. தானும் ஓர் சூரியகாந்திப் பூக்கள் நிறைந்த ஓர் காட்டுக்குள் இருப்பதாய் எண்ணிக் கொண்டாள்.
அந்த நீரோடையை தாண்டி.. மீண்டும் நீண்ட புல்வெளி .அந்த புல் நுனியில் அவன் தீட்டிய சிறு துளி தண்ணீர் கூட.. ஓர் மனோரம்மியத்தை அவளுக்குள் உருவாக்கியது. அந்த புல்வெளியின் எல்லையாக கடும்பச்சை நிறத்தில் பரந்து திரிகின்றது ஓர் காடு.
அவனோ தான் செய்து கொண்டிருக்கும் மேஜிக் தெரியாமல்.. அந்த அறையிலேயே.. அங்குமிங்கும் நடமாடி நடமாடி.. ஓர் அழகிய இயற்கைக் காட்சியை அவள் முன் ஸ்தாபித்துக் கொண்டிருந்தான்.
தன் இந்திராணிக்காகவென்று..நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி… புது உலகம் படைத்துக் கொண்டிருந்தான் இந்திரன். பாண்டவர்களின் இந்திர பிரஸ்தத்தை விடவும் அழகான பிரஸ்தாபிப்பு அது.
காட்டை அந்தரத்தில் வரைந்து முடித்து விட்டு மீண்டும் புல்வெளிக்கு வந்தவன்.. ரொம்பவும் ஸ்மார்ட்டான.. திடகாத்திரமான ஆறடி உயர ஓர் வாலிபனை.. அவனது உதடுகள், கண்கள், தசைகள், மடிப்புக்கள் என எல்லாமும் அச்சு அசல் போல முழுவதுமாக முப்பரிமாண முறையில் வரைந்தான்.
அந்த பையனின் கைகள் அந்தரத்தில்.. அவன் முகத்துக்கு எதிராக நீண்டு கொண்டிருக்க.. நீண்ட அந்த கைகளுக்கிடையில்.. அவள் எதிர்பார்த்திராத நேரம் ஓரு பெண்ணின் கண்கள் மூடிய கிறங்கிய.. சற்றே முகத்தை வரையலானான் நவீன ரவிவர்மன்.
நவீன கருவிகளைக் கையாண்டு.. ஓவியம் படைக்கும் அவன் நவீன ரவிவர்மனே தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த தைர்யாவின் முத்து மூரல்கள் வெளியே தெரிந்தன.
கைகள் நீண்டு.. சூரியகாந்திப் பூ இதழ்களை மெல்ல தொட்டுப் பார்க்க விளைந்து தோற்றது.
அந்த ஓவிய பையனில் இருந்த காதல் ஏந்திய முகம்… அவளையும் தொற்றிக் கொள்ள.. சினிமாவில் ஹீரோவும், ஹீரோயினும் சேரும் போது.. உண்டாகும் ஆனந்த படபடப்புடன்.. கைககள் இரண்டையும் கோர்த்து, மார்பு நடுவில் வைத்தவாறு சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அந்த பெண்ணின் கற்றைக் கூந்தல் காற்றில் அலைபாய.. அந்த பையனோடு மிக மிக நெருக்கமாக.. அவளது அங்கங்கள் உரசிக் கொண்டிருக்குமாக.. அந்தரத்தில் உருவானது அந்த பையனின் காதலியின் உருவம்.
அந்த காதல் ஜோடி ஓவிய சித்தரிப்பின் முடிவில்.. அந்த ஆடவன், அந்த இளமங்கையின் அதரங்களை தாபத்துடன் சிறைப்படுத்தியிருந்தான்.
அவன் வரைந்து வைத்திருந்த சூரிய காந்திக் காட்டுப் பக்கம் நின்றிருந்த தைர்யாவுக்கோ.. நிஜமாகவே இரு யுவதிகள் காதல் செய்யும் போது.. புதர் நடுவில் மறைந்திருந்து பார்ப்பது போலவே இருந்தது.
அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே இதழ்கள் மலர.. தன் முன்னே இருப்பதை எல்லாம் தொட்டுப் பார்க்க முயன்று தோற்றுப் போனவளாய் அவள் நின்றிருக்க, அவனோ இறுதியாக அந்தரத்தில் ஆங்கில கேப்பிட்டல் “ஐ” யையும், அதன் பக்கத்தில் “ஹார்ட்” ஒன்றையும் வரைந்து, ஆங்கில கேப்பிட்டல் “யூ”வைப் போட கையை அசைக்க.. இதயம் தாருமாறாக அடித்துக் கொள்ள கற்சிலையானாள் தைர்யா.
அப்போது தான் ஏதோ ஒன்று மண்டைக்கு உரைக்க.. சட்டென திரும்பி உன்னிப்பாக.. அந்த பையனையும், அந்த பெண்ணையும் நோக்கலானாள் அவள். அவள் அதிலிருந்த த்ரீ டீ உருவங்களின் உண்மை உருவங்களை கண்டு கொள்ள.. அவள் கால்கள் தானாகவே ஓரெட்டு பின்னே நகர்ந்தது.
ஆம் அந்த பையன் ரகுவீரே தான்.. அப்படியானால் அந்த பெண். சந்தேகமேயில்லை ஷேத்ராவே தான். அன்று அவள் பார்த்த மேசை விரிப்புக்கு அடியில் இருந்த ஓவியம்.. இன்று அவள் எதிரே தத்ரூபமாக.. அதுவும் த்ரீடி வடிவில்..!
திறந்த அதரங்களை மறைக்க.. அவள் கை இடம்பெயர.. அவன் “ஐ லவ் யூ”வில் முற்றாக எழுதி முடித்த அடுத்த செக்கென்.. சட்டென தன் ஹெட்ஸெட்டை களைந்து.. அந்த மாய முப்பரிமாண உலகில் இருந்து வெளியே வந்தாள் ஷேத்ரா.
அவள் கண்களில் தோன்றிய தோற்ற மயக்கம் எல்லாம் சட்டென மறைந்து போனது. அந்த அறையில் சூரியகாந்திப் பூக்களோ, நீரோடையோ.. புற்தரையோ.. காடோ இல்லை.. வெறும் வளிமண்டலம் தான் இருந்தது. சகலமும் நிமிடத்தில் மாயமாக.. சுற்றி வர கண்களை சுழற்றி ஓவியங்களை தேடியவளின் விழிகள் ரொம்பவும் சிவந்து கலங்கிப் போயிருந்தது.
கையில் ஹெட்ஸெட்டுடன்.. தரை பார்த்து குனிந்தவாறே.. ஆத்திரத்தில் இருந்தவளை நோக்கி, சட்டென தன் கவசத்தையும் கழற்றியவனாய் அவளை நாடி வந்தான் வீர்.
அவள் முகம் கவலையுற்று சோர்ந்திருப்பதே, அவளது மறுப்பைக் காட்ட.. உள்ளுக்குள் ரொம்பவும் மனம் நொந்து போனவனாய்.. அவள் ஷோல்டரை பற்றினான் வீர்.
அவன் தொடுகை இம்முறை அவளுள் பயத்தைக் கிளறி விட, அவன் கையை உதறி விட்ட வண்ணம் ஓரெட்டு பின்னே நகர்ந்தவள், “ப்ளீஸ் என்னை தொடாதே ரகுவீர்.. என்னால முடியாது.. நீ கேட்குறதை எக்ஸெப்ட் பண்ணிக்க என்னால முடியவே முடியாது”என்று கண்கள் கலங்க உரைத்தாள் அவள்.
அவள் மறுக்க மறுக்க அவள் தோள்களைப் பற்றியவன், அவள் மறுத்து விட்டாள் என்பதில் ஓர் இன்ஸ்டன்ட் கோபம் முளைக்க, அந்த அறையே அதிரும் வண்ணம் “ஏன் முடியாது?” என்று கத்தினான் அவன்.
அவள் பதிலேதும் பேசவேயில்லை. அமைதியாக அவன் விழிகளை பார்க்க மறுத்து அமைதியாக நின்றிருக்க, அவன் தொடர்ந்தான்.
“நீ ஏன் என்னை அவொய்ட் பண்றேன்னு எனக்கு தெரியும்? என் வீட்டுக்கு வந்தப்போ.. என் டேபிள் க்லோத்க்கு கீழே இருந்த.. அந்த ட்ராயிங்கைப் பார்த்து தான் என்னை இத்தனை நாளாய் அவொய்ட் பண்ணேன்னும் எனக்கு தெரியும்..”என்று நிதானமான குரலில் சொன்னவன்,
தன் விழிகளில் மையல் எனும் அம்பேந்தி.. அவள் விழிகளை குறி வைத்தவனாய், பார்த்தவன், “இந்த ஃபிப்டீன் டேய்ஸா.. நான் நானாக இல்லை தெரியுமா.. உன்னை பார்க்காமல், உன் குரல் கேட்காமல்.. ஒரு பைத்தியக்காரன் மாதிரி இருந்தேன் தெரியுமா”என்றான்.
“இதுக்கு அப்புறமும் உன் கிட்ட இருந்து என் காதலை மறைக்க நான் தயாரில்லை..
அப்படி மறைத்தால் அது நான் உன் நட்புக்கு செய்யும் துரோகம்.. யெஸ்.. என் காதல் உனக்கு தெரிய வராதப்போ அதை நான் மறைத்தால் அது தப்பில்லை தைர்யா.. அதுவே நான் உன்னை லவ் பண்றேன்னு உனக்கு தெரிய வந்த அப்புறமும் நான் அதை மறைச்சேன்னா.. கண்டிப்பா அது துரோகம் தான்..”என்று உணர்ச்சி வசப்பட்ட குரலில் பேசியவன்,
அவள் கைகளை தன்னிரு கைகளாலும் அவள் எதிர்பார்த்திராத நேரம் பற்றிக் கொண்டான்.
அவள் கண்களை காதலோடு பார்த்தவன், “ஐ லவ் யூ தைர்யா.. ஐ ரியலி லவ் யூ.. நீ என் கூட இருந்தால் இந்த உலகத்தையே என்னால ஜெயிக்க முடியும்.. நான் உன்னை ராணி மாதிரி வைச்சு பார்த்துப்பேன்..” என்று தன் காதலை இயம்ப.. அவளோ அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.
அவன் கைச்சிறையில் இருக்கும் தன் கைகளை கடினப்பட்டு உருவி எடுத்துக் கொண்டே, “இல்லை.. இல்லை வீர்.. நீ எ.. என்னை தத்.. தப்பா புரிஞ்சுக்கிட்ட..எனக்கு உன்னைப் பத்தி எந்த எண்ணமோ.. அபிப்பிராயமோ வரலை.. ப்ளீஸ் என்னை நம்பு”என்று ஈனஸ்வரத்தில் மொழிந்தாள் அவள்.
அவனோ அதை ஏற்பவனாய் இல்லை. அதற்கு அவன் முன் வைத்த காரணங்கள் கூட ஞாயமானது தான்.
அவள் தோள்களைப் பற்றியிருந்த அவன் கையின் வன்மை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க.. அவளை உலுக்கியவனாய்,
கண்களில் காதல் அனல் தெறிக்க “எந்த எண்ணமும் இல்லாமல் தான்.. நான் அன்னைக்கு மழையில நனைஞ்சப்போ.. என் தலையை .. உன் துப்பட்டாவால் துவட்டி விட்டியா.?. என் மேலே எந்த அபிப்பிராயமும் இல்லாமல் தான்.. ஆயிரம் பேர் சூழ்ந்து நிற்குற அந்த கல்யாண மண்டபத்துல.. என்னை உன் போய் ஃப்ரண்டா அந்த விக்கி முன்னாடி இன்ட்ரோ கொடுத்தியா? …இவ்வளவு ஏன்?? அன்னைக்கு என் கூட நய்ட் தனியா நடந்து வந்தப்போ.. நான் உன் கன்னத்தைப் பிடிச்சு.. ட்ராயிங் வரையும் போது.. எந்த எண்ணமும் இல்லாமலா அமைதியாக இருந்தியா? இதுக்கு பேர் காதல் இல்லாமல் என்ன? நீயும் என்னை காதலிக்குற.. ஆனால் உன் கண் முன்னாடி ஓர் திரை இருக்கு.. அந்த திரையை விலக்கிட்டுப் பாரு.. உனக்கு என் காதல் புரியும்”என்று எதையெதையோ உணர்ச்சி மேலீட்டினால் சொல்லிக் கொண்டே போக.. அவன் குரலின் வீரியம் தாள முடியாமல், விழிகளில் நின்றும் நீர் வடிய அவள் நிற்க, அவள் கண்ணீரைக் கண்டு அந்த ஆண்மகனின் சீற்றம் ஓர் கட்டுக்குள் வர.. அவளை மெல்ல விட்டான் அவன்.
பிறகு இடுப்பில் ஓர் கை வைத்து நின்று, பின்னந்தலைக்கு கோதி விட்டுக் கொண்டே.. உதடு குவித்து, ‘உஃப்’என்று மூச்சு விட்டவாறேவிட்டவாறே நின்றான் அவன்.
அவளோ, திக்கித் திணறி போனவளாய், ஈனஸ்வரத்தில் “அ.. அது எல்லாம் நீ என் ஃப்ரண்டுன்ற.. உரிமையிலே தான் பண்ணேன்..மத்தபடி எனக்கு… உன்னைப் போல எந்தவிதமான சலனமும் ஏற்படலை”என்றாள்.
அவள் கண்கள் பக்கமாய் சற்று குனிந்து நெருங்கி வந்தவன், “இப்படி என் மனசை அலைபாய்வதற்கு உன் ஒவ்வொரு செயலும் காரணமா இருக்குறப்போ.. தப்பை உன் மேலே வைச்சுக்கிட்டு.. யூ கான்ட் ப்ளேம் மீ.. என் காதலை ஏத்துக்காமல்.. நீ இப்படி பண்ணலாமா?..”என்று கேட்க,
கண்களில் அவை பாட்டுக்கு நீர் வழிய, புறங்கையால் துடைத்துக் கொண்டே “நீ தப்பா புரிஞ்சுக்கிட்டதுக்கு.. நான் என்ன பண்ண முடியும்? வாட் கேன் ஐ டூ? எனக்கு உன் மேலே காதல் வரலை.. நான் உன்னை ஜஸ்ட்டு ஃப்ரண்டா தான் பார்த்தேன்.. லீவ் மி அலோன்! ”என்று நா தழுதழுக்க கூறியவள், அவன் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல், படாரென அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள் ஷேத்ரா.
வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே போகும் ஷேத்ராவைக் கண்டு அபியும், மதுவும் உறைந்து போய் நின்றிருக்க..பின்னாலேயே, “ஹேய் தைர்யா நில்லு!” என்ற வண்ணம் கோரிடோர் வழியாக ஓடி வந்த வீர், அழுது கொண்டே படியிறங்கி செல்லும் தைர்யாவை வலி நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சுவருக்கு காலால் குத்து விட்டுக் கொண்டே, ஆத்திரத்தில் பின்னங்கழுத்தை தடவியவாறு நின்றிருந்தவன், எதேச்சையாக இடதுபக்கம் திரும்பிய போது.. அக்கணம் தான் அங்கு நின்று கொண்டிருந்த மதுவையும், அபியையும் கண்டு கொண்டான்.
இவர்கள் எங்கே இங்கே என்பது அவன் பார்க்க, முதலில் வாய் திறந்த அபியோ, “டேய் மச்சி.. உண்மைய சொல்லு.. ஏன்டா அந்த பொண்ணு அப்படி அழுதுட்டு போகுது?.. ரூம்ல வைச்சு அந்த பொண்ணை என்னடா பண்ண?”என்று மெய்யாலுமே பதறிப் போய் கேட்டான் அபிஷேக். நண்பன் கூற்றில் இன்னும் கொஞ்சம் கடுப்பான ரகுவீர் “டேய் உள்ளே என்ன நடந்ததுன்னு தெரியாமல்.. உளறாதே மச்சி.. நீ நினைக்குற மாதிரி எதுவும் நடக்கலை…”என்று ஆரம்பித்தவன், தன் முறைப்பெண்ணுக்கும், நண்பனுக்கும் பொதுவாக நடந்ததை எல்லாம் சொல்லவாரம்பித்தான். சம்பந்தப்பட்டவனை விடவும், ரொம்பவும் அப்ஸெட்டாகிப் போனார்கள் மற்ற இருவரும்.
அத்தியாயம் – 15
“எந்த எண்ணமும் இல்லாமல் தான்.. அன்னைய்க்கு.. நான் மழையில்..நனைஞ்சப்போ.. உன் துப்பட்டாவால என் தலையை துவட்டி விட்டியா?” – அவன் அன்று காதல் இயம்பிய கணம் உரைத்த வார்த்தைகளே.. அவள் செவிகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
தன் வலது கை, ஹேன்ட் பேக்கின் வார்ப்பட்டியை பிடித்திருக்க.. அந்த பாவையின் அழகிய நீள்விழிகளோ.. பொற் கழஞ்சுப் பாதங்களையே பார்த்த வண்ணமிருக்க.. சந்திரனை நிகர்த்த அவள் வதனமோ.. மேகம் மறைத்தாற் போல சற்றே இருண்டிருக்க.. அக்கம் பக்கம் பாராமல் நடந்து சென்று கொண்டிருந்தாள் ஷேத்ரா.
தன் மனைவியான உஷை தான்.. மானுட பெண்ணுருவங் கொண்டு.. பாதையில் நடந்து செல்கிறாளோ.. என்று தூரத்திலிருந்து பார்த்து தப்புக் கணக்கு போட்ட ஆதவ வாலிபன்.. நண்பர்கள் குழுமி நிற்க காதலியை ஸைட் அடிக்கும் காதலனைப் போல.. மேக மறைவிலிருந்து மெல்ல வெளியே எட்டிப் பார்க்கலானான்.
தெருமுனையோரம் இரு மருங்கிலும் தளைத்து வளர்ந்திருந்த கொன்றை மரங்களின் பூக்களை, காதலனான தென்றல் போகிற போக்கில் மெல்ல உரசிச் செல்ல.. அந்த உரசல் பிடித்திருந்தாலும், பொய்யாய் முறைத்து சிணுங்கும் காதலியாகிய பூக்கள்.. ஆடி அசைந்து அழகாய் பூமாரி பொழிந்து .. பாதையில் விழுந்து..அவள் நடந்து செல்ல மலர்க் கம்பளம் விரிக்கலாயிற்று.
இப்படி ஆதவனும், மேகங்களும், பூக்களும், தென்றலும் மையல் ததும்ப.. காதல் ரசம் சொட்ட காலை பொழுதை ஆராதித்துக் கொண்டிருந்தாலும்…அத்தனையயும் ரசிக்கும் ரசிக மனமற்று.. தொங்கிப் போன முகத்துடன் நடை பயின்று கொண்டிருந்தது ஓர் வெண்ணிலவு.
அன்றைய டில்ட் ப்ரஷ் பெயின்டிங் ப்ரபோஸல் காட்சி நடந்து இன்றுடன் ஒரு கிழமையாகி விட்டது. அதன் பிறகு அவனிடமிருந்து எந்தவிதமான ஃபோன்கோலோ, மெஸேஜூமோ, எதுவுமோ இல்லை.
அவன் உதிர்த்த வார்த்தைகள்.. அன்று அந்த அறையிலிருந்து அவன் உதிர்த்த வார்த்தைகளே அவள் காதுக்குள் நித்தமும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.நிஜமாலுமே எந்த எண்ணமும் இல்லாமலா.. அவன் அவள் தலையை உரிமையோடு பற்றினாள்? அவன் மழையில் நனைந்து சளி பிடித்தாலும் கூட அவளுக்கென்ன?
அவன் அன்று சொன்னது போல ஆயிரம் பேர் சூழ்ந்து நிற்கும் அந்த கல்யாண மண்டபத்தில், கன்னிப் பெண்ணாகிய இவள், “நானும், ரகுவீரும் கட்டிக்கப் போறோம்”என்று விக்னேஷ் முன்னாடி அவளால் அறிமுகப்படுத்த எப்படி முடிந்தது?
தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டே.. புருவங்கள் இரண்டும் குழப்பத்தில் சுருங்க.. அவள் சென்று கொண்டிருந்த போது.. யாரோ அவளை பின்தொடர்ந்து வருவது போல… உள்ளுக்குள் ஓர் பிரமை தோன்ற.. வெடுக்கென நிமிர்ந்து திரும்பிப் பார்த்தாள் ஷேத்ரா. அவள் கண்கள் அந்த சாலையின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தலையைத் திருப்பித் திருப்பி துலாவின. அவள் எதிர்பார்த்தது போல யாருமே இல்லை.
‘சத்தியமாக அது என் மனப்பிரம்மை தான்’ என்று எண்ணிக் கொண்டவள்.. தலையை லைட்டாக சிலுப்பிக் கொண்டு.. மீண்டும் தன் நடையை தொடர்ந்தாள்.
இந்த இரண்டு, மூன்று நாட்களா அவளை யாரோ ஒருவர் பின்தொடர்வது போல ஓர் தோற்றமயக்கம் தோன்றுவது ஏனோ? அந்த கன்னிகையும் அறியாள்!
இருப்பினும் மனதினுள் சொல்லாமல், கொள்ளாமல் அச்சம் வந்து குடியேறிக் கொள்ள.. கொஞ்சம் வேகமாகவே அவள் செல்ல எத்தனித்த போது.. கொஞ்ச தூரத்தில் இருந்து சில ஆடவர்களின் குரல்கள் கேட்கவாரம்பித்தது.
அவள் வருமுன்பு.. கசகசவென்று கேட்டுக் கொண்டிருந்த அவ்வாடவர்களின் சலசலப்பு சற்றே நின்று, “இதோ பாருடா.. எங்க ஏரியா ஐஸ்வர்யா ராய..”என்று கேட்டது ஓர் கணத்த ஆண்குரல்.
அவர்கள் சொல்வது தன்னைத் தான் என்பது புரிய.. மெல்ல தன் கரு நயனங்களை மட்டும் உயர்த்தி.. கடைக்கண்ணால் அந்த ஆடவர்களைப் பார்த்தாள் ஷேத்ரா.
அது அந்த சாலையின் ஃப்ளேட்பார்ம். அங்கே அவர்களுடைய இரண்டு பைக் வண்டிகள் எதிர் எதிரே தரித்து வைக்கப்பட்டிருக்க.. அவற்றின் இருக்கைகளில் சாய்ந்தவர்களாக மூன்று தடித் தாண்டவராயர்கள்.
அனைவர் கையிலும் சிகரெட் ஸ்டைலாக அடைக்கலமாகியிருக்க.. அவர்களைச் சூழ ஒரே புகைமண்டலமாக இருந்தது.
அதில் ஆர்ம்லெஸ் டீஷேர்ட் அணிந்திருந்த ஓர் காட்டுப்பன்றி தான் அவளைப் பார்த்து, கிறங்கிப் போன கண்களுடன், “இதோப் பாருடா.. எங்க ஏரியா ஐஸ்வர்யா ராய”என்றது.
அதைக் கேட்டு சிற்றிடைப் பெண்ணுக்கு.. மூக்கு விடைத்து.. பெருமூச்சுகள் வெளிப்படுமளவுக்கு கோபம் வந்தாலும், எதுவும் பேசாமல்.. இதழ்களை அழுந்த மூடிக் கொண்டே அவர்களைக் கடந்து வேகமாக நடந்தாள் அவள்.
அதில் மற்றவன், தன் கை விரல்களுக்கிடையில் இருந்த சிகரெட்டை இழுத்து .. புகையை வட்ட வட்டமாக வெளியேற்றியவனாய், “சும்மா சொல்லக்கூடாது.. ஆள் பார்க்குறதுக்கு சும்மா கும்மனு இருக்கா..”என்றான் அவளை உச்சாதி பாதம் வரை ஆராய்ந்தவண்ணம்.
இதுவரை பேசாமல் அமைதியாக இருந்த மற்றவனோ.. கொஞ்சம் ஒரு படி மேலே போய், “டேய் ஆளு மூஞ்சி மட்டுமா கும்முன்னு இருக்கு.. ஆளோட **** தான்டா கும்முன்னு இருக்கு..”என்று மொழிய… அவர்களைத் திரும்பி நோக்கி.. கண்கள் சிவக்க, புருவங்கள் இரண்டும் நெற்றிக்கு இடம்பெயருமளவுக்கு விரித்து.. விட்டால் அடித்து விடுவாள் போல.. ருத்ர அவதாரம் கொண்டு முறைத்துப் பார்த்தாள் ஷேத்ரா.
அவர்கள் வாயிலிருந்து வந்து விழுந்த ‘கல்லெறி’ போன்ற சொற்கள், பெண்களை பார்வையாலேயே துகிலுரிக்கும் நவீன துச்சாதர்கள் எல்லாம் அக்கா, தங்கை கூட பிறக்கவில்லையா? என்ற கேள்வியை உருவாக்கியது.
அவள் முறைத்துப் பார்த்த பார்வையை எல்லாம் கண்டு கொள்ளாதவர்கள், அவளை பதிலுக்கு முறைத்துப் பார்த்து, “என்னடீ முறைக்குற..?உனக்கு பிடிக்கலைன்னாலும், பிடிச்சாலும் நாங்க அப்படித் தான்… கிளம்பு கிளம்பு..உனக்குத் தான் வேலைக்கு டைமாச்சுல.. போ போ”என்று ஒருவன் மொழிய.. அதற்கு மேலும் அங்கு நில்லாமல், ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்று தோன்ற.. அதே சமயம் வேலைக்கும் செல்ல வேண்டும் என்றும் மூளை சொல்ல.. முஷ்டியை மடக்கி.. தொடைக்கு ஓர் குத்து விட்டுக் கொண்டவள், அடக்கப்பட்ட கோபத்துடன்,
“ராஸ்கல்ஸ்.. இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்ஸ்.. பாஸ்டர்ட்ஸ்”என்று வாயிற்குள் திட்டிக் கொண்டே ,உச்சபட்ச சீற்றத்தின் இயலமையால் கண்கள் கலங்க அங்கிருந்து வேக வேகமாக நடந்தாள் அவள்.
அந்த கயவர்களுக்கு புறமுதுகிட்டு சிறிது தூரம் சென்றதும், அதில் ஒருவன், “அம்மாஆ! ”என்று பெருங்குரல் எடுத்து கத்தும் சத்தமும், கூடவே க்ரீஈஈச் என்ற ஒலியுடன் அவன் பைக் விழும் சத்தம் கேட்க, அப்படியே தன் நடையை நிறுத்தி நின்றவள், சட்டென திரும்பி அந்த கயவர் கூட்டத்தைப் பார்க்கலானான்.திரும்பிப் பார்த்தால் அங்கே அவள் சற்றும் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்தான் வீர்.
தன் கட்டம்போட்ட முழுநீளக்கை சொக்காவை.. முழங்கை வரை மேலேற்றி.. கை முஷ்டி இறுக்கி.. அதனால் கையெங்கும் நரம்போட.. தன் வலிய நெடிய கால்களை விரித்து வைத்துக் கொண்டு உருத்திரமான போஸில் நின்றிருந்தான் வீர்.
அவளைப் பார்த்து, “ டேய் ஆளு மூஞ்சி மட்டுமா கும்முன்னு இருக்கு.. ஆளோட **** தான்டா கும்முன்னு இருக்கு..” என்று ரொம்பவும் பேசிய அந்த எருமை மாடு கீழே ப்ளேட்பாரமில்.. பைக்கோடு விழுந்திருக்க.. மற்ற இருவரும்.. கையில் இருந்த சிகரெட் எங்கேயென தெரியாதளவுக்கு பயத்தில் உறைந்து போய் நின்று..தொடைகள் வெளவெளக்க வீரைப் பார்த்திருந்தனர்.
குரைக்கிற நாய் கடிக்காது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் பெரியவர்கள். எக்குத்தப்பாக பேசத் தெரிந்த அந்த துச்சாதனர்களுக்கு.. தன்னை அடிப்பவனை மீண்டும் அடிக்கத் தான் வலு இருக்கவில்லை.
வலது மணிக்கட்டை.. இடது கையால் கொஞ்சம் திருகியவனாய் திரும்பி.. அருகில் இருந்தவனின் கன்னத்துக்கு பொளீர் என்று ஒரு அறை வைக்க.. மூன்றாமவனோ, ‘ஆளை விடுங்கடா சாமி’ என்பது போல.. துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று.. கால் புட்டத்தில் பட.. தலை தெறிக்க ஓடலானான்.
கீழே விழுந்திருந்த பைக்காரன்..உடலை குறுக்கிக் கொண்டு, தன் வலது கையை, அடுத்த கையால் பிடித்துக் கொண்டு வலியில் முணக,
இவனோ அவனை வெறித்துப் பார்த்து, கழுத்து நரம்பு புடைத்து வெளித் தெரியுமளவுக்கு.. பற்களை கடித்துக் கொண்டு, “இனிமேல் ரோட்ல ப்போர்ர்ற.. வ்வர ப்பொண்ணுங்களை.. ஏதாச்சும் நீ சொன்ன.. இந்த தடவை உன் கை உடைஞ்சது.. அடுத்த தடவை…”என்றவன்.. சட்டென காலை தூக்கி.. அந்த கயவனின் நடு சென்டரில் ஓங்கி ஓர் மிதி மிதிக்கப் போக.. ன் உடைந்த கையின் வலியையும் மறந்து, இரு கைகளாலும் தன் மத்திய பிரதேசத்தை gகார்ட் பண்ணியவனாய், “ஐய்யோ வேணாம் சார்.. விட்டுருங்க சாஆஆ..ர்”என்று ஏறக்குறைய கத்தினான் அந்த கயவன்.
போனால் போகிறது என்று விட்டு விட்டு அவளை நோக்கி திரும்பியவனை.. இமைக்காமல் பார்த்திருந்தாள் தைர்யா. கண்களிலே முன்பிருந்த உயிரும், பளபளப்பும் இப்போது அவனிடம் இல்லை.
கண்கள் உள்ளே போய்.. கன்னத் தாடைகள் கொஞ்சம் உறுத்தி.. வெளித்தெரிந்து கொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக.. எப்போதும் க்ளீன் ஷேவ் பண்ணி.. அழகாக இருப்பவன்.. இன்று கன்னங்களிலும், நாடியிலும் ஒரு கிழமை தாடியுடன் இருந்தான்.
ஆக மொத்தத்தில் அவன் பழைய ரகுவீராக இல்லை என்பது மாத்திரம் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது அவனுக்கு.
வெகுநாட்கள் கழித்து.. அவனைக் கண்டதில் அவளுக்கு சந்தோஷமாகப் போய் விட..இயற்கையாக அவளுக்கு அவன் மீதிருக்கும் அன்பு துளிர்விட… கண்களில் தன் கருணையைத் தேக்கி சிரித்தாள் தைர்யா.
அதிலும் தன்னை தரக்குறைவாக பேசியவனை.. வீர் அடித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி தொற்றிக் கொள்ள… கொஞ்சம் விரிந்திருந்த அவள் அதரங்கள் மெல்ல மெல்ல முழுமையாக விரியலாயிற்று.
தன்னை நோக்கி முகம் மலர நிற்கும் அந்த சூரியகாந்திப் பூவை கணக்கில் எடுக்காத.. அந்த தகிக்கும் சூரியனோ.. தன் விரல்களினால் மீசையையும், தாடியையும் நீவி விட்டுக் கொண்டே, அந்த சீற்றம் மாறாமல் அவளைக் கடந்து சென்று விட்டது.
தன்னை பொருட்படுத்தாமல்.. கடந்து செல்லும் அவனையே உடலும், கண்களும் அவன் சென்ற திசையில் திரும்ப, பார்த்துக் கொண்டே இருந்தாள் தைர்யா.
அவன் புறமுதுகையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குள்… ‘அவன் எப்படி இங்கே திடீரென?’ என்ற கேள்வி பிறக்க.. அந்த கேள்வியின் விடையாக.. மூளை ஓர் பதிலைத் தவிர.. விழிகள் விரிய அதிர்ச்சியில் நின்றாள் அவள்.
அப்படியானால்.. இந்த சொற்ப நாட்களாக அவளை யாரோ பின்தொடர்வது போல ஒரு தோற்றமயக்கம் தோன்றுவதற்கு காரணம் அவனா!?
யோசித்துக் கொண்டே.. சாவி போட்ட பொம்மை போல.. தான் வேலை பார்க்கும் பல்லங்காடிக்கு நடந்து சென்று.. வேலையை கவனிக்கத் தொடங்கியவளின் முகம் ரொம்பவும் வாடிப் போயிருந்தது.
தன்னைப் பார்த்து.. பழகிய தோஷத்துக்காகவேனும் சிரிக்காத அவனது குழிவிழுந்த.. தாடி அடர்ந்த முகமே.. அவள் விழித்திரையில் மீண்டும் மீண்டும் வந்து இம்சிக்கத் தொடங்கியது.
ஏன் அவன் அப்படி இருக்கிறான்? அவன் சோகத்துக்கு காரணம் நானா? அவன் அழகாய் உதிர்த்த அந்த காதலை ஏற்க மறுத்ததனாலா இப்படி ஆகி விட்டான்? என்று தோன்ற தோன்ற அவள் கவனம் ஒழுங்காக தன் பணியில் பதியவேயில்லை.
அருகருகே நின்று கொண்டிருந்த இரு வாடிக்கையாளர்களின் பொருட்களையும், பில்லையும்.. ஒருவருக்கொருவர் மாற்றிக் கொடுத்தாள். இன்னொரு வாடிக்கையாளருக்கு.. பில்லை போட்டு விட்டு.. காசை வாங்காமல்.. அடுத்த வாடிக்கையாளரின் பில்லை போட ஆயத்தமாகி விட்டாள்.
அந்த வாடிக்கையாளர் ஏதோ நல்லவர் என்பதால், அவளை அழைத்து.. பொருட்களுக்கான பணத்தைக் கொடுக்கவும் தான் மீண்டும் கொஞ்சம் சுயநினைவுக்கு வந்தாள் அவள். மொத்தத்தில் அவள்.. அவளாகவே இல்லை. அவன் சோகம் நிறைந்த விழிகள் அவளை ரொம்பவும் வாட்டி வதைத்தது.
இதில் நைட் ஷிப்ட் விக்ரம் வேறு.. அன்று போல இன்றும் வருவதற்கு தாமதமாகி விட.. அவள் கிளம்பும் போது.. இன்றும் மணி ஒன்பதை தாண்டியிருந்து. அந்த பாரிய கண்ணாடிக் கதவுகளை தள்ளிய வண்ணம் வெளியே வந்தவளின் முகத்தில் இரவு நேர குளிர் காற்று மோதி.. அவளை தழுவி விட்டு செல்ல.. மனதுக்கு இதமாக இருந்தது அவளுக்கு.
தனிமை, இரவு.. கூடவே அவள் கவிதை, அவன் ஓவியம்.. ஆற்றோரமாய் ஓர் பொடிநடை.. அவன் தந்த ஜாக்கெட் என எல்லாமுமே நினைவுக்கு வர.. சந்தோஷமும், கலக்கமும் ஒருங்கே தோன்றியது அவளுக்கு.
கொஞ்ச தூரம் நடந்து சென்றவளுக்கு.. தனியே செல்வதை விட.. ஆட்டோவில் செல்வதே உசிதம் என்று தோன்ற..அருகில் இருந்த ஆள் அரவமே இல்லாத பஸ் ஸ்டாப் நிழற்குடையின் கீழ்.. ஆட்டோவுக்காக காத்திருக்கலானாள் அவள்.
தன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு.. தன் கையில் இருந்த செல்லில் அடிக்கடி மணி பார்த்துக் கொண்டு.. வெகுநேரமாக ஆட்டோ இல்லாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தாள் ஷேத்ரா.
அங்கணம் ஓர் ஆட்டோவும், கூடவே அத்துடன் நவீனரக ‘ஹங்க்’ வண்டியில் அவனும் வருவது புரிய..விழிகள் இடுங்க அமைதியாக நின்றிருந்தாள் அவள்.
முதலில் ஆட்டோ நிற்க.. ஆட்டோ பின்னாடி தன் பைக்கை நிறுத்தியவன், ஸ்டைலாக ஸ்டேன்டைப் போட்டு விட்டு.. அவளை நோக்கி உணர்ச்சி துடைத்த முகத்துடன் இறங்கி வந்தான்.
இரவில் அவன் வந்து நிற்பதைக் கண்டு.. மனதுக்குள் உருண்டு கொண்டிருந்த பயப்பந்துகள்.. திடீரென காணாமல் போக.. வானத்தில் இருக்கும் நிலவின் அழகையும் தோற்கும் வண்ணம்.. முத்து மூரல்களை வெளிக்காட்டி அவள் நகைக்க.. அவன் சாதாரணமாகவே நின்று கொண்டிருந்தான்.
அவன் வந்த பைக்கை கண்டவள், “அவனுக்கு இந்த பைக் ஏது? காலையில் கூட அவள் அவனை பைக்கோடு காணவில்லையே”என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டிருந்த வேளை, அவள் அருகில் வந்தவன், ஆட்டோவை கை காட்டி நிர்ச்சலனமான முகத்துடன், “ஏறு..”என்றான் எங்கோ பார்த்தபடி.
அவன் தன்னை பார்ப்பான். பார்ப்பான் என்று ஒரு சில நிமிடங்கள் அவன் கண்களையே பார்த்திருந்து ஏமாந்து போனவள், ஓரடி முன்னே எடுத்து வைத்து, ஆட்டோவில் ஏறப் போக.. ஆட்டோ டிரைவரைப் பார்த்து, சற்று குனிந்தவன், “அண்ணா சரியா.. அவங்க வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க..”என்றுரைத்த கணம்.. அவள் நடை தடைப்பட்டு நின்றது. அவனைத் திரும்பி நோக்கியவள், மிகவும் மென்மையாக, “நீயும் வரலாமே வீர்.” என்றுரைக்கவும், அவனுக்கோ ஆட்டோவில் தனியாக செல்ல பயப்படுகிறாள் போலும் என்றே தோன்றியது.
அதனால் அவள் அச்சத்தை போக்க நாடியவன், “நீ ஆட்டோவுல போ.. உன்னை யாரும், எதுவும் பண்ணிட முடியாது.. நான் என் பைக்ல.. உன் வீடு வரைக்கும் ஃபாலோவ் பண்ணிட்டுத் தான் வருவேன்.. ஓகே?” என்று அவன் உரைக்க.. அவன் தன்னோடு பேசி விட்டானே என்று உள்ளம் குதூகலமானது அந்த பேதை பெண்ணுக்கு.
அவன் நெருங்கி வந்து.. காதல் சொல்லிய போது.. அவனை விட்டு விலகிப் போன இந்த கிறுக்கிக்கு.. இன்று அவனது விலகல் சுடுகிறதோ?
ஆட்டோவில் ஏறாமல், டிரைவரை நோக்கி, “அண்ணா நீங்க போங்க அண்ணா..”என்று பிடிவாதமான குரலில் உரைத்து அவரை அனுப்பி விட்டவள், அடுத்த நொடி அங்கு நில்லாமல்.. அவன் நடப்பது எதுவும் புரியாது பேந்தப் பேந்த முழிக்க.. அவனையும் கைப்பற்றி அழைத்துக் கொண்டு.. அவனது பைக்கை நாடிப் போனாள்.
பிறகு.. ஆசை கமழ.. அந்த சிவப்பு நிற ஹங்க் வண்டியை.. தடவிக் கொடுத்தவள்.. தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவனை நோக்கி,
“சார்.. புது பைக் எல்லாம் வாங்கியிருக்கீங்க? .. என் கிட்ட கூட சொல்லலை.. இவ்ளோ அழகான பைக் வண்டியை வச்சிக்கிட்டு.. நான் எதுக்கு ஆட்டோவுல போகணும்.. நீயே என்னை வீட்டுல கொண்டு போய் விட்டுரு” என்று சொல்ல.. அப்போதும் கூட முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல், தன் பைக் ஹேன்டிலை பிடித்துக் கொண்டே.. ஸ்டேன்டை ஏற்றி.. லாவகமாக ஏறிக் கொண்டு.. வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
அவன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே.. வண்டியை கிளப்பியதை பார்த்து.. கிளுக்கிச் சிரித்தவள்.. தானும் அவன் பின்னால் ஏறிக் கொள்ள.. வண்டியும் புறப்பட்டது.
வரும் வழியில் எல்லாம்.. அவள் தொணதொணத்துக் கொண்டே.. வர.. அவனோ எதுவும் பேசாமல் ரோபோ போலவே அமைதியாக வந்தான். இரவு நேரக் கூதல் காற்று முகத்தில் வீச, பின்னோடு தன் காதலியை அழைத்துக் கொண்டு.. தன் பைக்கில் செல்லும் சுகமே தனி என இரசித்த மனதை.. ஓர் குட்டு வைத்து அடக்கிக் கொண்டான் அவன்.
அவளோ, “ இந்த பைக் உன்னதா? எப்போ வாங்கின?அவ்வளவு காசுக்கு என்ன பண்ண? இன்ஸ்டோல்மன்ட்ல கட்டவா? இல்லை வாடகை பைக்கா? ஆமா ஏன்.. என் கிட்ட கூட சொல்லலை? வீட்ல தாத்தாவும், மதுவும் எப்படியிருக்காங்க?”என்று எக்கச்சக்கமான கேள்விகள் கேட்க.. மௌனமாகவே வந்தான் அந்த சந்நியாசி.
அவன் தன்னோடு பேசாதது உள்ளுக்குள் கொஞ்சம் வலியைத் தவிர, பைக் கண்ணாடியில் தெரிந்த அவனது இறுகிய முகத்தை பார்த்தவாறு,
யாருக்கோ மூன்றாவது மனுஷனைப் பற்றி பேசுவது போல “ உனக்கொண்ணு தெரியுமா? எங்க ஏரியாவுக்கு பக்கத்து ஏரியாவுல ஒரு பையன் இருக்கான்… ஏதோ சுமாரா… கொஞ்சம் ட்ராயிங்க் வரைவான்” என்று அவனைப் பற்றி .. அவனிடமே உரைக்க, இவனோ உள்ளுக்குள் கொஞ்சம் பொறாமை மீதூற, ‘யார்டா அந்த பையன்?’என்பது போல கேட்கவாரம்பித்தான்.
“அந்த பையன் லாஸ்ட் வீக் தான் எனக்கு ப்ரபோஸ் பண்ணான்.. நான் எக்ஸெப்ட் பண்ணலைன்ற கோபத்துல.. ஆளோட கோலும் இல்லை.. மெஸேஜூம் இல்லை.. இப்போ கூட இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் மூஞ்ச வைச்சிட்டு தான் பைக் ஓட்டிட்டு இருக்கான்..என்மேல அக்கறையா எல்லாம் பண்ணுவானாம்.. ஆனா பேச மட்டும் மாட்டானாமா? இது எந்த ஊரு ஞாயம்.. சொல்லு?”என்று அவனைப் பற்றி அவனிடமே முறையிட.. இறுகியிருந்த அவன் முகத்தில்.. மெல்லிய மின்னல்கீற்றாய் ஒரு புன்சிரிப்பு.
அவன் ஏதோ சுமாராக கொஞ்சம் ட்ராயிங்க் வரைவானாமா? அவன் மொட்டுநகை.. மெல்ல மெல்ல அரும்பு நகையாய் மாறியது. அதைக் கண்ணாடி வழியாகப் பார்த்து, தானும் புன்னகைத்த அந்த கணம்.. அவன் வண்டி ப்ரேக் போட்டு நின்றது.
அவளைப் பார்த்து முழுதாக திரும்பாமல்.. தன் தலையை இடது பக்கம் தொண்ணூறு பாகை செங்குத்தாக திருப்பி,“உன் கிட்ட நான் ஒண்ணு கேட்குறேன்..”என்றவன் சிறிது நேர மௌனத்தின் பின்,
“இதே வேற ஒருத்தன் கூட இந்நேரம் நீ பைக்கில் போவியா..?”என்று கேட்க.. அவன் கேள்வி அவள் இதயம் வரை சென்று தாக்க.. அதற்கு பதில் தெரியாமல்.. சுற்று முற்றும் பார்த்தவள்.. அப்போது தான் தன் வீட்டு தெருமுனை வந்திருப்பது புரிந்து.. வண்டியை விட்டும் மெல்ல இறங்கி.. கைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பிடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். அவள் பதில் சொல்ல முடியாமல் திணறி நிற்கவும், அவன் தொடர்ந்தான்.
“உன்னால பதில் சொல்ல முடியாது.. இந்த வன் வீக்கா நான் கோல் பண்ணலைன்னதும் என்னைப் பத்தி யோசிச்சியா? இல்லையா?இதோ எனக்கு ப்ரபோஸ் பண்ணவன் வரான்னு என் மேல உனக்கு வெறுப்பு தான் வரணும்.. மாறாக நீ ஏன் நான் உன் கூட பேசமாட்டேங்குறேன்னு கவலைப்படணும்?
இதுக்கு காரணம் என் மேல நீ வைச்சிருக்க காதல்.. நீயும் என்னை காதலிக்குறேன்னு தெள்ளத் தெளிவா புரியுது.. ஆனால் நானும் எங்கே விக்கி மாதிரி உன்னை ஏமாத்திட்டுப் போயிடுவேனோன்னு பயப்பட்ற? திரும்பும் இன்னொரு காதல் தோல்வி வந்துடுமோன்னு நீ அச்சப்பட்ற? நான் ஒண்ணும் விக்கி மாதிரி இல்லை.. எந்த சந்தர்ப்பத்திலும் என் காதலை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்.. விட்டுத் தரவும் மாட்டேன்..”என்று தீர்க்கமான குரலில் உரைத்தவன்,
ஹேண்டிலை முறுக்கிக் கொண்டு, “உனக்கு லாஸ்ட்டா ஒரு சான்ஸ் தர்றேன்.. நாளைக்கு மதியம் பன்னிரண்டுமணிக்கு முதல் “எஸ் என் ஸி” வந்து.. என் காதலை எக்ஸெப்ட் பண்ணிக்கிட்டா.. ஒரு நல்ல காதலனா.. உன்னை லைஃப் லோங்.. லவ் பண்ணுவேன்.. அதுவே நீ வரலைன்னா.. உனக்கு என்னை பிடிக்கலைன்னு எடுத்துக்கிட்டு.. உன் லைஃபை விட்டே விலகி போயிடுவேன்.. சாய்ஸ் இஸ் யோர்ஸ்”என்று உரைத்தவன்.. அடுத்த கணம் அங்கு நில்லாமல்.. பைக்கில் பறக்கவாரம்பித்தான்.
நாளை பண்ணிரண்டு மணிக்கு முன்னம்.. அவனை சந்திக்கச் சொல்லி விட்டு அவன் சென்று விட்டான்.
வீட்டுக்கு வந்த அந்த வெண்ணிலவுக்கோ..ஆதவன் உதிர்த்த சொற்களே மீண்டும் மீண்டும் காதுக்குள் எக்கோ போல ஒலிக்க… சரியாக உறக்கம் பிடிபடாமல் தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“நான் ஒண்ணும் விக்கி மாதிரி இல்லை.. விக்கி மாதிரி இல்லை.. விக்கி மாதிரி இல்லை.. எந்த சந்தர்ப்பத்திலும் என் காதலை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்.. விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்…விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்.” – அவன் சொற்கள் அந்த சுவர் எங்கும் பட்டு எதுரொலித்துக் கொண்டிருந்தது. அடுத்த நாள் மதியம் பன்னிரண்டரை மணி.
எஸ். என். ஸியின் ஆர்ட் வளாகத்தின்.. பெரிய ஆடிட்டோரியத்தில்… தன் முன்னே வைக்கப்பட்டிருந்த ஈஸல், பேப்பர், பேலட், பற்பல வர்ணங்கள் மற்றும் பலதரப்பட்ட வர்ணத் தூரிகைகளுடன் தரை பார்த்து குனிந்தவனாய் அமர்ந்திருந்தான் ரகுவீர்.
அவனோடு ஓர் பத்துப் பதினைந்து மாணவர்கள்.. அமர்ந்து.. ஈஸலில் இருக்கும் காகிதத்தையும், சுவரில் மாட்டப்பட்டிருக்கும் கடிகார முட்களின் அசைவையும் மாறி மாறி பார்த்த வண்ணமே ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தனர்.
அவனது ஈஸல் தாங்கியிருந்த கடதாசி மட்டும்.. இன்னும் எதுவுமே கீறப்படாமல் வெண்மையாக இருந்தது.
அவன் கையிலோ ஓர் வர்ணத் தூரிகை. இருந்தாலும்.. அவன் மனத் தூரிகை தான் வரைய இடம் கொடாமல் அவனை தடுத்து வைத்திருந்தது.
அவன் எதிர்பார்த்திருந்தான்… அவளது மனப் பருத்தியும் ஓர் நாள் நிச்சயம் வெடிக்கும். அவனுக்கான காதல் பஞ்சும் வெளியே வரும் என்று கண்மூடித்தனமாக நம்பியிருந்தான்.
ஆனால் அவள் வரவேயில்லை. இந்த நவீன சகுந்தலை.. தன் துஷ்யந்தனைக் காண வரவேயில்லை. அவன் விதித்த காலக்கெடு மணி நண்பகல் பன்னிரண்டு.
இப்போது பன்னிரண்டரை மணியைத் தாண்டி முட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஒன்றரை மணிக்கு இந்த ஓவியத்தின் காலக்கெடு முடிந்து விடும். ஷேத்ரா நேஷன் கேம்பஸுடைய நிர்வாக அதிகாரி திரு. குருலிங்கம் , விரிவுரையாளர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மற்ற பீட மாணவர்கள் என அனைவரும் அங்கு குழுமி நின்று.. ஓவிய போட்டியை கண்டு களித்துக் கொண்டிருக்க.. இவனது தாள் மட்டும் வெள்ளைக் காகிதமாய். அவளுக்கு என்னை பிடிக்கவில்லை. அவளுக்கு இந்த சுமார் மூஞ்சி குமாரை பிடிக்கவில்லை.
அந்த க்ளியோபெட்ராவுடன்.. இந்த சீஸர் கண்டு வைத்திருந்த ஆயிரம் ஆயிரம் கற்பனைகள் எல்லாம்.. அங்கணம் தவிடுபொடியானது. அந்த ஆண்மகனுக்கு.. இருப்பது பொது இடம் என்பது கூட புலப்படாமல் கண்கள் பணிக்க.. முகம் கருகிய இலையாய் வாட.. அமர்ந்திருந்தான்.
ரகுவீரின் முகச் சுணுக்கம், அந்த கண்களில் தெரிந்த அந்த வலி, வெண்மை கடதாசி என அனைத்தையும் குருலிங்கத்தின் கண்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்க..
அந்த கணம் ஆடிட்டோரியத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தாள் ஷேத்ரா. அவள் ஷல்வார் எங்கிலும் முத்து முத்தாக வியர்வை மணிகள் பூத்து.. நனைந்திருக்க.. உள்ளே நுழைந்தவளின் எதிரே தட்டுப்பட்டது.. ஆட்கள் சூழ்ந்து நின்றிருக்கும் ஓர் கூட்டம்.
அந்த கூட்டத்திற்குள் புகுந்து, ஆட்களை விலக்கிக் கொண்டு, உள்ளே நுழைந்தவளுக்கு.. அப்போது தான் அங்கே ஓர் ஓவியப் போட்டி நடந்தேறிக் கொண்டிருப்பது புரிந்தது.
அங்கு செல்வது பொருத்தமில்லை என்று தோன்ற.. கூட்டத்தில் ஒருத்தியாய் நின்றிருந்து.. போட்டி நடந்து முடியும் வரை அமைதியாக இருக்க முடிவு செய்தாள் ஷேத்ரா. அப்போது தான் அவளது காதல் தலைவன் அவள் கண்களில் விழுந்தான்.
அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் தீவிரமாக எதையோ வரைந்து கொண்டிருக்க.. இவன் மட்டும்.. ஒரு வர்ணத் துளி கூட தன் மேனியில் படாமல்.. ரொம்பவும் சுத்தமாக.. அந்த அந்த ஓவியப் பொருட்கள் அந்தந்த இடத்தில் இருக்க.. தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டாள் அவள்.
அதைக் கண்டதும் விழிகளில் பொளபொளவென கண்ணீர் கொட்ட.. இவன் நிலைமைக்கு தான் தானே காரணம் என்று தோன்ற.. கன்னத்தில் வழிந்த நீரை அழுந்த துடைத்துக் கொண்டு.. யார் பார்த்தாலும்.. அதாவது தன் சித்தப்பா குருலிங்கம் பார்த்தால் கூட பரவாயில்லை என்ற அசட்டுத்தனமான தைரியம் பிறக்க.. ஊசி விழுந்தாலும் துல்லியமாக கேட்கும் அந்த கூடத்தில்.. தன் ஹீல்ஸ் கால்கள் பதிய…. அவனை நோக்கி நடந்து சென்றவள், அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரம் அவன் இடது முன்னங்கையைப் பற்றினாள்.
தனக்கு பரிச்சயப்பட்ட ஓர் ஸ்பரிசம் தன் முன்னங்கையை தீண்ட.. இரத்த சிவப்பு நிறங் கொண்ட தன் விழிகளை மேலுயர்த்தி அவன் நோக்கிய போது அங்கு நின்றிருந்தது ஓர் வெண்பதுமை.
அந்நிலவைக் கண்டு.. இந்நிலத்தில் ஆயிரம் முல்லை மலர்கள் ஒருங்கே பூக்க… பற்கள் வெளியுலகத்துக்கு தரிசனம் தர…. அவன் மௌனமாக நின்றிருக்க, “என் கூட வா”என்று கண்களில் நீர் துளிர்க்க உரைத்தவள், அவனை தரதரவென அழைத்துக் கொண்டு.. ஆடிட்டோரியத்தின் முன்வாசல் கதவினூடாக வெளியேறினாள்.
தன் வெள்ளை பேன்ட்டில், தன்னிரு கைகளையும் போட்டுக் கொண்டு நின்றிருந்த சித்தப்பா குருலிங்கத்திற்கு.. எதிர்பாராத விதமாக.. மகளைக் கண்டதும்.. முகம் ஆயிரம் வால்ட் பல்ப் பிரகாசத்தை போல ஒளிரத் தான் செய்தது.
ஆனால் ஷேத்ரா தன்னை நாடி வராமல்.. நேரே அந்த பொடிப்பயலை நாடிச் சென்று.. கைப்பற்றி அழைக்கவும்.. முகம் கோபத்தில் செக்கச் செவேலென சிவக்கவாரம்பித்தது.வேகவேகமாக வெளியேறியவளின்.. கண்கள் அங்கிருந்த ஒதுக்குப்புறத்தை அலாதியாக தேட..அந்த தேடலின் முடிவில் தட்டுப்பட்டது.. ஆடிட்டோரியத்திற்குப் பின்னிருக்கும் குட்டியறை.
அந்த திறந்திருந்த குட்டியறைக்குள் அவனை அழைத்துச் சென்றவள்.. அந்த சுவரோடு அவசரமாக அவனை சாய்த்து.. அவனிரு கைச்சந்தினூடாக கையிட்டு.. அவனை இறுகக் கட்டிக் கொண்டவள்.. அவன் திண்ணிய மாரோடு தன் தலை சாய்த்தாள்.
எதிர்பாராமல் கிடைத்த அவளது முதல் அணைப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல்.. நாம் என்ன இன்னும் கனவுலோகத்திலா இருக்கிறோம் என்பது புரியாமல்.. உடலில் புது இரத்தம் பாய.. முதன் முதலாக ஓர் பெண்மையின் மென்மை சுகத்தை அனுபவித்தும், அனுபவிக்க முடியாமல் திணறி.. திக்குமுக்காடிப் போய் நின்றிருந்தான் அவன்.
அவன் கைகள்.. எங்கே அவள் தன்னை விட்டு மீண்டும் சென்றுவிடுவாளோ என்று தோன்ற.. அவளைக் கட்டியணைத்து.. இன்னும் இன்னும் அவளை தன்னோடு இறுக்கிக் கொள்ள அந்தரத்தில் பரபரத்தன.
அவன் கண்கள் கலங்குகின்றன. வாய் “தைர்யா.. என் தைர்யா”என்று முணுமுணுக்கின்றன. ஒரு கட்டத்தில் அவன் கைகள் அவள் முதுகை ஆரத்தழுவிக் கொள்ள.. சட்டென தலையை உயர்த்தினாள் அவள்.
அவள் தலை உயர்த்தியதில்.. எங்கே தான் அவளை தொட்டுவிட்டதால் கோபித்துக் கொள்ள போகிறாளோ என்று அவஸ்தையான எண்ணம் தோன்ற.. மெல்ல மெல்ல கைகளை விடப்பார்த்த நேரம்.. அவள் பேச்சுக்குரல் கேட்டது.
நா தழுதழுக்க “ஷார்ப் டுவெல்வ க்ளாக்குக்கு வர.. இதென்ன சினிமாவாடா? வழியில ட்ராஃபிக்கில் மாட்டிக்கிட்டேன்.. அதான் கொஞ்சம் லேட்டாகிருச்சி… அதுக்காக.. ட்ராயிங்க் கூட வரையாமல்.. இப்படித் தான் கிறுக்கன் மாதிரி உட்கார்ந்திருப்பீயா?”என்று கேட்டவள்.., அவனது தாடி அடர்ந்த கன்னங்களை தன் உள்ளங்கையில் ஏந்திக் கொண்டாள்.
அவளுடைய உதடுகள் நீண்ட நாட்களாக தன் மனதினுள் அடைத்து வைத்திருந்த அனைத்தையும் சொல்வதற்கு தயாராக.. அவள் கண்களில் நீர் அது பாட்டுக்கு வழிந்து கொண்டிருக்க.. கொஞ்சம் எம்பி.. ஆவேசத்துடன் அவன் முகமெங்கும் தன் இதழ்கள் பதித்தாள் ஷேத்ரா.
அவனோ அந்த முத்த தாக்குதலில்.. அசர்ந்து போன எதிராளியைப் போல.. இன்ப அவஸ்தையில் நெளிந்து கொண்டிருந்தான்.
அவள் இதழ்களின் ஸ்பரிசம், அவள் மூச்சுக் காற்று.. அவன் நாடி, நரம்பையெல்லாம் சுண்டியிழுக்கும் அவளது வியர்வை மணம்.. எல்லாமுமே அவ்வாண்மகனை கிறங்கடிக்க… அவன் கைகள் அவள் இடையை அனிச்சை செயலாக வருடத் தொடங்கின.
“எனக்கும்… உ.. ன்னை பிடிக்கும் வீர்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அன்னைய்க்கு உன் டேபிள் க்ளோத்க்கு அடியில் இருந்து அந்த பேப்பரைக் கண்டதும்.. எனக்குள்ள ஒரு.. இனம்புரியாத சந்தோஷம் தான் முதலில் வெளிப்பட்டது..ஆனால் நானும் எங்கே உன்னை வெ.. ளிப்படையாக காதலிச்சு… டுவேனோ.. ன்ற பயத்தில். நீயும் என்னை விக்னேஷ் மாதிரி ஏமாத்திட்டுப் போயிடுவியோன்ற அச்சத்தில் தான்.. என் காதலை நான் மறைச்சேன்.. உன்னை அவொய்ட் பண்ணுற மா.. மாதிரி நடி.. ச்சேன்… ஆனால்.. என்.. என்.. என்னால முடியய.. லை.. ஆனால் நேத்து.. நீ.. நீ என் மனசை நல்லா புரி.. ஞ்சிக்கிட்டவன் மாதிரி பேசின அந்த நொடி தெரிஞ்சிருச்சி… நானும்.. உன்னை லவ் பண்றேன்னு.. யெஸ் ஐம் இன் லவ் வித் யூ.. ஐ லவ் யூ வீர்.. ”என்று கண்ணீர் மல்க அவள் உரைக்க, அவளது கன்னங்களை தன் இரு கைகளாலும் தாங்கியவன், அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவனாய்.. அவளையே ஒரு சில கணங்கள் பார்த்திருந்தான்.
“தெரியும்.. நீயும் என்னைக் காதலிக்கிறேன்னு தெரியும்.. உன் வாயால அதை கேட்குறப்போ.. இப்போவே..இந் செக்கனே.. செத்துப்.. போ”என்று கண்கள் மூடி.. ஆழ மூச்செடுத்த வண்ணம்.. சுகம் அனுபவிப்பவன் போல அவன் மொழிய.. அவள் உதிர்க்கப் போகும் சொற்களின் மிகுதி.. அவன் முடிக்காமலேயே புரிய.. அவன் கழுத்தோடு கையிட்டு..அவளை நோக்கி குனிந்து.. அவனது முரட்டு அதரங்களை… காதலோடு கவ்விக் கொண்டாள் அவள்.
முதல் அணைப்பும் அவள். முதல் முத்தமும் அவள். காதல் எனும் பழம்பெரும் பள்ளியில்..சில வித்தைகள் தெரிந்த ஆசானாக அவள். புது சிஷ்யனாக அவன்.
அந்த முத்தத்தில் ஐஸ்கட்டியாய் கரைந்துருகிப் போனான் வீர். கண்கள் மூடி இசையை இரசிக்கும் மனோபாவத்துடன், அவன் இதழில்.. பெண்ணவள் வீணை.. மீட்ட.. காதல் பெருக்கெடுப்பு தாளமாட்டாமல், அவள் இடையோடு கையிட்ட அவன் கைகள்.. தன்னோடு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டன.
அவள் இதழ்கள் பிரிந்து கொண்டாலும்.. அவன் கைகள் மாத்திரம் அவளை விடவேயில்லை.
இருவர் முகத்திலும் சந்தோஷம் கலந்த திருப்தி விளைய, சற்று நேரத்திற்கு முன் ஆடிட்டோரியத்திற்கு நுழையும் கணம்.. எதுவுமே வரையாமல் சோபையிழந்து போன வீரின் முகம் ஞாபகம் வரவே, அவனைப் பார்த்து, “வீர் இனிமேல் இப்படி பேசாதே வீர்.. நாம வாழணும்.. உன் கூட ஒண்ணா நூறு வருஷம் சேர்ந்து நான் வாழணும்..எனக்கொரு சத்தியம் பணணிக் கொடு வீர்.. காதலுக்காக கலையையும், கலைக்காக காதலையும் என்னைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு வீர்”என்று தன் வலது உள்ளங்கை விரித்து மொழிந்தாள்.
அவள் பஞ்சு உள்ளங்கையில், தன் உள்ளங்கையை காதலோடு பதித்தவன், “சத்தியமா.. இந்த தைர்யாவுக்காக, அந்த தைர்யாவையும்.. அந்த தைர்யாவுக்காக இந்த தைர்யாவையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. போதுமா?” என்று மையலுடன் தலையாட்டிக் கேட்க.. அதில் மீண்டும் காதல் பெருக்கெடுக்க..
அவன் நெற்றியில் எம்பி ஓர் முத்தம் பதித்து, அவன் தாடியை அவன் வலியில் கத்த கத்த பிடித்திழுத்து, “என்னடா இது? ஆஹ். தாடி வைச்சிருக்கிறது என்ன நிவ் ஃபேஷனா?எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை.. இன்னைக்கே ஷேவ் பண்ணிடு.. சரியா?” என்று காதலுடன் அவனை அதட்ட.. அவன் தலையும் அந்த அதட்டலை இரசித்தவனாக மெல்ல ஆடியது.
அவனைத் திருப்பி.. முதுகில் கை வைத்து.. வெளியே தள்ளியவளாய், “போ.. போய்.. நல்லா வரை..”என்று உரைக்க, “நீ எங்கே போற? நீயும் வா தைர்யா” என்றவனாய்.. அவளையும் அந்த ஆடிட்டோரியத்திற்கு மீண்டும் அழைத்துச் சென்றான் வீர்.
வீரோடு படபடப்பாக சென்ற ஷேத்ரா.. தற்போது முகம் கொள்ளாத கொள்ளை அழகு சிரிப்புடனும், நாணத்துடனும் வருவதைக் கண்ட சித்தப்பா.. என்ன நடக்கிறது இங்கே என்பது போல முகத்தை கர்ண கொடூரமாக வைத்துக் கொண்டு.. வீரை கழுகுப் பார்வை பார்த்தார். அவரின் குரோதத்தை அறியாத வீரோ.. கூட்டத்தில் அவளை நிறுத்தி விட்டு, பழைய படி தன்னிடத்திற்கு சென்றவன், தன் தூரிகையை கையில் ஏந்தியவண்ணம் மணி பார்த்தான்.
மணி நேரம் ஒன்று பத்து என்று காட்டியது. இன்னும் இருபது நிமிடத்திற்குள் அந்த ஓவியத்தை அவனால் வரைய முடியுமா?
ஏதாவது ஆப்ஜக்ட் ஒன்றை நடுவில் வைத்து.. அது பார்வைக்கு படும் வண்ணம் வரைய வேண்டும் என்றால்.. அவனுக்கு இந்த சொற்ப நேரத்தில் வரைவது கடினம் தான்.
ஆனால் இந்த ட்ராயிங்க் காம்படிஷன் தான் அவ்வாறில்லையே. விரும்பியதை வரையலாம். புதுவித சிந்தனைகளுக்கு மட்டுமே வரவேற்பு.
அங்கிருந்த மஞ்சள் நிற அக்ரிலிக் பெயிண்டிங் ஸ்பேரேயை எடுத்தவன், அந்த வெண்காகிதத்தில் தாருமாறாக தெளித்தான். பிறகு சிவப்பு நிற பெயிண்டிங் ஸ்ப்ரேயை எடுத்தவன் அதற்கு மேல் தாருமாறாக இதையும் தெளித்தவன்.. பின்பு கறுப்பு நிற பெயிண்டிங் ஸ்ப்ரேயை எடுத்து அதற்கும் மேலாக தெளித்தான்.
அனைவரும் ப்ரஷ்களை கையாண்டு.. ஏதேதோ காட்சிகளை மிக மிக ஸ்லோவாக வரைந்து கொண்டிருக்க.. இடையில் எங்கேயோ போய் வந்த இவன் ஸ்ப்ரே அடித்து விளையாடுவது போல தோன்றிற்று பார்ப்பவருக்கு. இதுவே அவன் சந்தித்துக் கொண்டிருப்பது எழுத்துப் பரீட்சை என்றால்.. வெளியே சென்றவன் உள்ளே வர அனுமதி கிடையாது.
ஆனால் இது ஓவிய போட்டி. பிட் அடிக்கவும் சாத்தியமில்லை. பிட்டுக்கு உதவி புரியவும் வழிவகையில்லை என்பதனால் அவனை மீண்டும் அனுமதித்திருந்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
பிறகு நுண்ணிய ப்ரஷ்ஷின் கைப்பிடித்துண்டை தலைகீழாக பிடித்தவன், அதனால் அந்த நிறங்களில் எதையோ கீறி விடலானான். அப்படி அவன் கீற கீற.. முதலில் இருந்த கறுப்பு நிறம் மறைந்து .. கீழே.. இருக்கும் சிவப்பும் மஞ்சளும் வெளித்தெரியலாயிற்று.
அழகிய இரவு நேர மொட்டை மாடி நிலாவை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் ஓர் காதல் ஜோடி.. இருபது நிமிடத்தில் உருவானார்கள் அந்த கறுப்பு நிறத்தின் பிண்ணனியில்.
ஓர் ஓரத்தில் தைர்யா என்று கிறுக்கி கையெழுத்திட்டவன், அங்கிருந்தே தன் காதலியை நோக்கி, அடர்ந்த புருவங்கள் உயர்த்தி, “எப்படி ?”என்று சைகையில் அவன் கேட்க, அவள் தலையும் “சூப்பர்”என்பது போல தானாக ஆடியது. சக மாணவர்கள் கூட சொற்ப நேரத்தில்.. ரொம்ப அழகாய் வரைந்திருக்கும் ரகுவீரின் ஓவியத்தைப் பார்த்து மிரண்டு போயிருக்க.. அவனோ, “சார் ஃபினிஷ்ட்”என்று இன்விஜிலேட்டரை பார்த்து மொழிந்தவன், அவர் காட்டிய காகிதத்தில்.. தன் பெயருக்கு நேராக கையெழுத்திட்டு விட்டு.. தன் பொன்மானை தேடி ஓடோடி வந்தது ஓர் மரை மான்.
முழுக் கூட்டமும் அவனையே பார்த்திருக்க.., அவள் மட்டும் கேட்கக் கூடிய இரகசியமான குரலில், “நான் இன்னைக்கு ரொம்ப ஜாலி மூட்ல இருக்கேன்.. எங்கேயாச்சும் வெளியே போலாமா?”என்று அவள் கண்களைப் பார்த்து கேட்டுக் கொண்டே வாயிலை நோக்கி நடந்தான் அவளுடன்.
அவளும் அவன் கைகளை உரிமையுடன் பற்றிக் கொண்டே, சின்னஞ்சிறு உரையாடல்களை நிகழ்த்திய வண்ணம் சென்றாள்.
“எதுல? உன் பைக்லயா..?”
“யெஸ்.. என் பைக்ல தான்..இந்த ஹேன்ட்சம் ஹங்க்கோட ஹங்க்!”என்றான் பின்னந்தலை கோதியவாறு அவளைப் பார்த்து கண்ணடித்தவனாய். அதைக் கண்டு முகத்தில் நாணப்பூக்கள் பூக்க.. கிளுக்கிச் சிரித்தவள், “ஆமா அந்த பைக் என்ன உன்னோட சொந்த வண்டியா வீர்? ..”என்று கேட்டாள்.
“ஆமா.. நான் தான் சொன்னேன்ல மை பெயிண்டிங் வொஸ் ஸோல்ட் ஃபோர் ஃபைவ் லேக்ன்னு.. டில்ட் ப்ரஷ் டூல்ஸ் வாங்கிய.. மிச்ச காசுல பைக் வாங்கிட்டேன்”என்று உரைக்க, அவன் அன்று கலாபவனத்தில் வைத்து வரைந்த பெயிண்டிங்கை வாங்கிய சித்தப்பாவின் ஞாபகம் சடுதியாக வந்தது அவளுக்கு.
அவரை அவள் ஏறெடுத்தும் பாராவிட்டாலும், அவருடைய தீப்பார்வை இன்னும் தன்னை பின்தொடர்வது போலவே ஓர் எண்ணம் இருக்கத் தான் செய்தது அவளுக்கு.
இந்த சம்பவத்தின் பின்னர்.. ஷேத்ராவின் புதிய காதல் எஃபெயார் பற்றி நிச்சயம் அவருக்கு தெரிய வந்திருக்க கூடும். இதன்பின்னர் வீரின் படிப்புக்கு வருங்காலத்தில் இடையூறும் ஏற்படக்கூடும். அதற்கு முன்னர் ஏதாவது வழி செய்ய வேணும் என்று எண்ணிக் கொண்டவள்,
தன் முகத்தையே பார்த்திருந்து விட்டு.. தான் பார்த்ததும் “என்ன யோசனை?”என்று கேட்கும் அவனைப் பார்த்து, ஏதுமில்லை என்பது போல தலையாட்டியவள்.. அவன் கைச்சந்தில் தலை சாய்த்து அவன் கையினை இறுக பற்றிக் கொண்டாள்.
அத்தியாயம் – 16
இடுப்பில் சொருகியிருந்த தன் சேலைத் தலைப்பை எடுத்து விட்ட வண்ணம்.. இடது புறங்கையால் தன் மூன்றாம் பிறை நுதலில் மணிமணியாய் பூத்திருந்த வியர்வை பூக்களை.. துடைத்து விட்டுக் கொண்டே, வலது கையில தண்ணீர் கிளாஸூடன்.. தன் மாமன் ரகுவீரை மெல்ல நாடி வந்தாள் மதுமிதா.
நேற்றிரவு அந்த பொற்பாவை தானும் துயிலவில்லை என்பதற்கு சான்றாக.. சந்தனத்தில் குழைத்து குழைத்து செய்த அவளுடைய அழகிய கன்னங்களும், கயல் மீனை ஒத்த நயனங்களும் ரொம்பவும் சிவந்து வாடிப் போயிருந்தன.
காலையில் எழுந்தது முதல் பம்பரம் போல சுழன்று சுழன்று வேலை செய்யும் அந்த கங்காதவிக்கு.. இன்று உதய வேளையே உதாசனீமாகத் தான் கழிந்தது.
ரொம்பவும் சோர்ந்து போய் வந்தவளின் முகவாட்டத்திற்கு காரணமும் தான் யாதாய் இருக்க முடியும்? மையல் கொண்ட தன் தலைவனின் பிரிவே தான். உரிய காலம் வந்தும்.. இன்னும் தன்னை வந்து சேராத தலைவன் மேல் தீராத மையலுற்று.. பசலை நோய் வந்தாடும் சங்க கால தலைவி போல… ஒரு கிழமையாக.. ஃபோன்கோலோ, மெஸேஜூமோ அற்று, இன்னும் வீட்டுக்கு வந்து தன் சந்திர வதனத்தை காட்டாத தலைவன் அவனால்.. பசலை நோய் பீடித்து வருந்துகிறாள் இவளும்.
நிலா உலா வரும் காலம். அவள் காதில் அவனுடைய கிசுகிசுப்புக் குரல் ஓர் கானம். அந்த கானத்தைக் கேட்காத இந்த குயிலுக்கும் தான்… நாளும், பொழுதும் ஊழி காலம் போல ஆகி விட்டதோ? அப்படித் தான் போலும்.
யாருக்கும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே இத்தனை நாள் மருகிக் கொண்டிருந்தவளுக்கு.. அவள் காதல் காத்திருப்பின் பொறுமையும் ஓர் எல்லையை கடக்கத் தான் செய்தது. ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து, சற்று குனிந்து.. தன் பாதங்களுக்கு ஷூ லேஸ் கட்டிக் கொண்டிருந்தவனிடத்தில்.. மெல்ல நடந்து வந்தவள், “மாமா..தண்ணீ”என்றாள் மென்மையான குரலில்.
அவன் நிமிர்ந்து பாரவில்லை. தன் முன்னே நிழலாடும் அவள் உருவத்தை பார்த்துக் கொண்டே, “டீபோய் மேல வைச்சிட்டுப் போம்மா.. நான் குடிச்சிக்கிறேன்” என்றான் அவன். டீபோயும், தண்ணீர் க்ளாஸூம் ஒன்றுடன் ஒன்றுடன் முத்தமிட்டுக் கொள்ளும் சப்தம் இலேசாகக் கேட்டது. ஆனால் அவள் திரும்பிச் செல்லும் அரவம் மட்டும் கேட்கவேயில்லை.
அதை கவனிக்கும் நிலையில் அவனும் இல்லை. நீளக்கைச் சட்டையில் குப்பென்று வீசிக் கொண்டிருந்த சென்ட் வாசமும், தலை அலங்காரத்திற்கு உபயோகித்திருந்த ஹேர்ஜெல்லும் அவனை ஸ்மார்ட்டாக காட்டிக் கொண்டிருந்தது.
அந்த சேரன் செங்குட்டுவன் தன் கானகத்து இளவரசியைக் காண புறப்பட்டுக் கொண்டிருந்தான் எந்த பரிவாரங்களும் இல்லாமல். அதற்குத் தான் இத்தனை அலங்காரத் தோரணைகள்! மாமன் தன்னை பார்க்கக் கூடும். பார்க்கக் கூடும் என்று அங்கயே நின்று காத்திருந்தவள், ரகுவீர் இறுதி வரை பார்க்காமல் போகவே.. கொஞ்சம் வெளிவர மறுத்த குரலை செருகிக் கொண்டே, “மாமா” என்றாள் மீண்டும்.
அவன் தலை உயர்ந்து.. பார்வை கேள்வியுடன் அவள் முகத்தில் நிலைத்தது. அப்போது தான் அவளுடைய முக வாட்டத்தைக் கண்டு கொண்டவனின் கண்கள் சற்றே பதற்றத்தை வெளிக்காட்ட தவறவேயில்லை. அவள் அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள்.
“கொஞ்சநாளா அபி எனக்கு கோல் பண்ணவேயில்லை.. அவருக்கு ஏதாவது உடம்பு சரியில்லை….”என்று அவள் இறுதி வசனத்தை முடிக்காமல் அவஸ்தையுடன் இழுக்க.. ரகுவீருக்கோ ஒளிசூழ்ந்த வதனம் இன்னும் ஒளிர்ந்தது.“இது தானா விஷயம்.. நான் என்னமோ? ஏதோன்னு பயந்துட்டேன்”என்று நகைத்துக் கொண்டே தொடர்ந்தான் வீர்.
சோபாவில் இருந்து எழுந்து தன் டெனிம் பெல்ட்டை சரி செய்த வண்ணம், “அந்த எருமைக்கு என்ன?.. நல்லா மூணு வேளை மூக்கு முட்ட சாப்பிட்டுக்கிட்டு.. ஹெல்தியா தான் இருக்கான்… அவன் உன்கிட்ட சொல்லலையாமா..?”என்று பட்டென கேட்க,
“ என்ன பதில் நவில்வேன்? அந்த வஞ்சகன் தான் சொல்லவேயில்லையே”என்று மனதுக்குள் தோன்ற.. இதழ்கள் துடிக்க, கண்களில் நீர் துளிர்க்க மௌனமாய் நின்றாள் அவள்.
அவள் வாட்டம் கண்டு, அவளை தெளிய வைக்க நாடியவன், “ அவன் வர்க் பண்ற..க்ரிஸ்டல் பேலஸ் கம்பெனியில் இருந்து.. பையனை அமெரிக்காவுக்கு ட்ரான்ஸ்பர் பண்ண போறாங்களாம்.. அதனால் இந்த வன் வீக்கா இமிகிரேஷன் ஆபிஸ்க்கு அலைஞ்சிட்டிருக்கான்மா…உனக்கு சப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லாமல் விட்டிருப்பான். ..கவலைப்படாதே இந்த மேட்டர் எல்லாம் முடிஞ்சு ஃப்ரீயானதும் அவனே உனக்கு கான்டாக்ட் பண்ணுவான் பாரேன்”என்று இதமாக மொழிந்தவன், டீபோய் மீதிருந்த தண்ணீர் க்ளாஸை எடுத்து.. மடமடவென தொண்டைக்குள் சரிக்கலானான். கடைசி துளிவரை ஒன்று விடாமல் பருகியவன், இதழ்களில் புன்சிரிப்புடன் அத்தை மகளைப் பார்த்து, “சரி அப்போ நான் கிளம்பறேன்”என்றவன், வாசலை நோக்கி வேகமாக எட்டுக்களை எடுத்து வைத்தான்.
வாயிலில் நின்ற அவன் பைக்கை அவன் ஸ்டார்ட் செய்து.. ஓட்டிக் கொண்டு செல்லும் ஒலி அதிதீவிரமாக கேட்டு.. பின் மெல்ல மெல்ல காற்றோடு முற்றிலும் கரைய.. கண்களில் நீர் துளிர்க்க நின்றிருந்தாள் மது.
‘ஓ துரை அமெரிக்கா செல்கிறாராமா? அதுவும் அவளிடம் கூட சொல்லாமல்? அவள் தான் பட்டணத்து பட்டிக்காட்டுப் பெண்ணாயிற்றே? அமெரிக்கா செல்லப் போகிறவனின் மனது இனியும் இவளை கேட்குமா?’என்று எங்கிருந்தோ காற்றில் பரவும் விஷக்கிருமியைப் போல அவள் மனதிலும் பொல்லாத எண்ணங்கள் பரவ… கண்ணீர் மல்க கல்லாய் நின்றது அந்த நவீன அகலிகை சிலை.
இங்கே ஓர் பெண்ணுள்ளம் ஏங்கித் தவிக்க.. அங்கோ ஓர் பெண்ணுள்ளம் தன் மதுசூதனனுக்காய் கிறங்கித் தவித்துக் கொண்டிருந்தது. அவன் வண்டியில்.. அவனோடு ஒன்றாய் ஓர் குட்டிப்பயணம் ஷேத்ராவுக்கு.
அவனது பேக் இவள் முதுகுக்கு இடம்பெயர அவள் கண் முன்னே தரிசனமாய்.. பரந்து விரிந்த தேக்கு மரம் போல வீருடைய வலிய முதுகு. இரு பக்கவாட்டிலும் இருந்த டெனிமை இறுக்கிப் பிடித்திருந்த அவனுடைய தொடைகள்..எதிர்காற்றிலே குப்பென்று வீசிக் கொண்டிருந்த டியோடரன்ட் மணத்துக்கும், ஹேர் ஜெல் மணத்துக்கும் இடைப்பட்ட அவன் வாசம். எல்லாமே சேர்ந்து பெண்ணவளை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்துக் கொண்டிருந்தது.
அதிலும் அவனுடைய நீளக்கை சட்டையின் காலரும், சிகையும் முடியும் இடத்தில் தெரிந்த அவனது கழுத்தைக் கண்டு அங்கு முத்தம் வைக்க இதழ்கள் கூட துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவளது கிறங்கிய விழிகளை விஷமச் சிரிப்புடன் கண்ணாடியில் பார்த்த வண்ணம்.. சத்தமேயில்லாமல் உள்ளம் குத்தாட்டம் போட அமைதியாக வண்டியோட்டுவது போல காட்டிக் கொண்டான் அவன்.
அழகிய வெண்மங்கையின் தென்றல் வேஷமும்.. தென்றலோடு தென்றலாய் மறைய.. பெண்ணுக்குள்ளே காதல் தெறலும் (வெம்மை) நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே போனது. கொஞ்சம் முன்னே வந்து.. அவன் திண்ணிய தொடைகளோடு.. தன் மெல்லிய தொடைகளை இறுக்க.. அவன் கண்கள் அந்த பரவசத்தில் அகல விரிந்தன.
அவன் இதயம் திக் திக்கென அடித்துக் கொள்ள, அவ்வீரனின் முதுகுக் கவசத்தோடு ஓர் மென்மைத் தாக்குதலை அந்த பெண்மை நடத்த.. எதிர்க்க வழி அறியாது துவண்டு போனான் இந்த காதல் போர்வீரன். அவன் கைகள் வண்டி ஹேன்டிலை இறுக்கமாக பற்றிக் கொள்ள சீறிப்பாய்ந்தது வண்டி. அந்த காதல் எதிரியின் டார்கெட் அவன் பின்னங்கழுத்தாய் இருக்க.. அவளது இதழ் ஆயுதங்கள் வேகமாக முன்னேறலாயிற்று. அவள் நாசியைக் கடந்து.. நுரையீரல் வரை அவனது வாசம்.
கண்கள் மூடிக் கொண்டவளின் கைகள்.. அவன் வயிற்றில் பட்டாம்பூச்சி போல ஊர்ந்து கிச்சு கிச்சு மூட்ட.. அவன் பின்னங்கழுத்தில் இதழ் பதித்தாள் “பச்சக்”என்று. அந்த எதிர்பாராத முத்தத்தில் ஒரு கணம் வண்டி தடுமாறி நிலையானது. நெஞ்சில் காதல் அழுத்தம் கூடிப் போக, சட்டென திரும்பி அவளை முத்தாட துணிந்தது அவன் காதல் மனம்.
அந்த நேரம் பார்த்து இவர்கள் காதலின் ஒரிஜினல் எதிரியாக தெருவின் ஸ்பீட் ப்ரேக்கர். அந்த தூக்கிவாரிப்போடுதலிலும் ஓர் சுகமுண்டு. அவஸ்தையுண்டு. இரண்டையும் அனுபவித்தனர் இருவரும்.
வல்லினத்தோடு.. அவள் மெல்லினம் அழுத்தமாக மோதிக் கொள்ள.. அதில் கொஞ்சம் வலிக்கவும் செய்தது அவளுக்கு. அந்த வலி அவளுடைய காதல் தவத்தைக் களைக்க.. மெல்ல நனவுலகத்துக்கு வந்தவளின் கைகள்.. அவன் வயிற்றை விட்டும் சட்டென பிரிந்து கொண்டன. உள்ளுக்குள் அந்த ஸ்பீட் ப்ரேக்கருக்கு நன்றி சொல்லிக் கொண்டவனுக்கு… அவள் விலகிக் கொள்ளவும், “வடை போச்சே” ஃபீலாகி விட்டது.
இதழ்கள் சுருங்க அவன் வண்டியோட்டிக் கொண்டிருந்த போது, காதோரம் கிசுகிசுப்பாய் அவள் குரல். அவள் கேட்டது என்னமோ இயல்பான குரலில் தான். ஆனால் சேர மன்னனுக்குத் தான் சர்வமும் மையல் மயமாயிற்றே ஆகையால் கிசுகிசுப்பாகவே ‘கன்வே’ ஆனது“வீர்.. உன் ஃபோனை கொடு..”- அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல?’என்று பேக்ரவுண்டில் இசை வாசித்தார் இளையராஜா.
“ட்டேய்.. வீஈஈர்… ஃபோனை கொடுடா!” என்ற அவளுடைய முரட்டுக் கத்தலில் சட்டென வெளியே வந்தவன், கண்ணாடி வழியாக அவள் வதனம் பார்த்து “எதுக்கு?”என்று கேட்டான்.
அடங்க மறுத்து அலை பாய்ந்த தன் கார் குழல் கற்றையை காதுக்குப் பின் சொருகிக் கொண்டு“சொல்றேன் ஃபஸ்ட்டு கொடு..”என்றாள் அவள்.
அதை விம்பமாய் பார்த்து இரசித்தவனுக்கு அந்த கார்குழலாய் உருமாறிடத் தான் ஆசை. அடக்கிக் கொண்டான், ஆசையை.
பேன்ட் பாக்கெட்டினுள் கைவிட்டு.. செல்லை எடுத்தவன், கையை முதுகுக்குப் பின் நீட்டி, அவளிடம் கொடுக்க முனைய, அதை எடுத்தவள் செல்லுக்குள்ளேயே தலையை புதைத்து எதையெதையோ நோண்டவாராம்பித்தாள்.
தலையை உயர்த்தி அவன் பின்பக்க தோற்றத்தைப் பாராமலேயே…அதிகம் தெரிந்த அனுபவசாலி போல அட்வைஸிக் கொண்டே போனாள் தைர்யா.
ஏன் என்று புரியவில்லை. எதற்கு என்று தெரியவில்லை. இருப்பினும் அமைதியாக கேட்டுக் கொண்டே வந்தான் அவனும்.
“நாம என்னைக்குமே ஒருவழியையே நம்பி இருக்கக் கூடாது வீர்.. பல வழிகளை கைவசம் வைச்சிருக்கணும்.. அப்போ தான் ஒரு வழி மூடினாலும்.. இன்னொரு வழியால நாம முன்னேற முடியும்.. இதை எப்போவுமே மனசுல வைச்சுக்க”என்றுரைக்க, ஒன்றுமே புரியவில்லையாயினும்.. அவன் தலையை ‘சரி’ என்பது போல ஆட்ட.. புலனுணர்வால் அறிந்து கொண்டாள் அவள். அவளோடு பயணிக்கும் சுகானுபவம் முடிவுறாமல் தொடர்ந்து கொண்டே போகட்டும். அவன் அடைய வேண்டிய ஸ்தானமும் செந்தூரமாகவே இருக்கட்டும்.
அழகுப் பெண்ணொருத்தி.. தன் மனங்கவர் காதலியாக அவன் வண்டியில். சுமார் மூஞ்சி குமாருக்கெல்லாம் சூப்பர் ஃபிகர் மாட்டினால்.. அந்த பையன் காட்டும் கெத்து அது அவனுக்கு மட்டுமே தெரியும்.
மனமெல்லாம் சந்தோஷம் விதையாய் விழுந்து.. ஆல விருட்சம் போல விஸ்தாரமாக எழுந்து நிற்க, ஹேன்டிலில் இருந்த வலது கையை எடுத்து, ஸ்டைலாக தலை கோதிக் கொண்டான் ரகுவீர்.
அவன் மனம் காட்டும் கெத்து அறியாமல், அவளோ தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல், “ரகுவீர் பெயிண்டிங்க்ஸ்”. ஓகேயா?”என்று கேட்டாள் திடீரென.
புருவங்கள் இரண்டும் தானாக சுருங்க.. பைக்கின் வேகத்தை மெல்ல குறைத்தவன், “எதுக்கு கேட்குற?..”என்று கேட்டான்.
அவனை மீண்டும் நெருங்கி வந்தவள், அவன் ஷோல்டர் வழியாக தன் தலையைப் போட்டு.. அவன் பக்கவாட்டு கன்னத்தை எட்டிப் பார்த்தவளாக, “இல்லை.. உனக்கு ஒரு ஃபேஸ்புக் பேஜ் க்ரியேட் பண்ணலாம்னு பார்த்தேன்.. நீ சொல்லேன் வீர்.. “ரகுவீர் பெயிண்டிங்க்ஸ்” ஓகேயா? .. இல்லை “தைர்யா பெயிண்டிங்ஸா?”என்று சிறுகுழந்தைகள் பேசும் தோரணையில் கேட்க,
அவள் நெருக்கத்தில் வண்டியை ஓட்ட முடியாமல் கிறங்கிப் போனான் அவன். உடல் உலைக்களத்தில் பட்ட இரும்பு போல கடினம் கொள்ள.. தன்னைத் தானே முயன்று சமனப்படுத்திக் கொண்டு, “எனக்கு எப்போவுமே “தைர்யா”தான்” என்றான். அவன் சுட்டியது எந்த தைர்யாவை? கலையையா? காதலையா? இல்லை இரண்டையுமா?
அவன் எந்த தைர்யாவை சுட்டுகிறான் என்பதை நாங்கள் அறியாவிடினும்.. பெண்ணவள் அறிந்து கொண்டாள். அதற்கு சான்றாக அவளது இணைந்திருந்த இதழ்கள் மெல்ல பிரிந்து புன்னகைத்துக் கொண்டன.
“உன் கேலரில உன் பெயிண்டிங்க்ஸ் இருக்கா?சொல்லு வீர் பேஜ்க்கு அப்லோட் பண்ணனும் ..”- அவனது பின்னந்தலையை பார்த்த வண்ணம் கேட்டாள் அவள்.
“ஆமாடீ.. இருக்கும்”- என்றான் “டீ” போட்டு அவளை. அந்த டீ அவள் மனதில் இன்னும் கொஞ்சம் நெருக்கத்தைக் கூட்ட.. அவள் மில்லிமீட்டர் புன்னகை.. சென்டிமீட்டராக மாறியது.
“உன்கிட்ட இப்போ உன் க்ரெடிட்கார்ட் இருக்கா?..” அவளிடமிருந்து மீண்டும் ஒரு கேள்விக்கணை. எத்தனை கேள்விகள் கேட்டாலும் அலுக்கவேயில்லை அவ்வாண்மகனுக்கு.
“ம்.. இருக்கு.. பர்ஸ்ல..” என்றவன், வண்டியோட்டிக் கொண்டே.. கைவிட்டு தன் மணிப்பர்ஸை எடுக்கப் போக, அதை அவசரமாக இடையிட்டு தடுத்தாள் அவள்.
“சரி இரு நானே எடுத்துக்குறேன்..”என்றவளின் கை.. நிலத்தில் ஊரும் சர்ப்பம் புற்றுக்குள் அமைதியாக புகுவது போல.. அவன் தொடையோடு மெல்ல ஊர்ந்து.. அவன் பேன்ட் பாக்கெட்டினுள் புகுந்து கொள்ள.. “ஏனடா அவளுக்கு வழிவிட்டோம்”என்று ரொம்பவும் நொந்து போனான் அவன்.
ஒரு செக்கன் அவன் அவஸ்தையில் நெளிய, ‘என்னாச்சு’ என்பது போல புரியாமல் பார்த்தாள் அவள். சரியாக பர்ஸை எடுத்துக் கொண்டவள், “இதோ கிடைச்சிருச்சி”என்று அவன் முன்னே கைகளை கொண்டு சென்று ஆட்டிக் காட்டியவள், மீண்டும் செல்லுக்குள் மூழ்கிப் போனாள்.
சரியாக அவர்கள் செல்ல நாடிய விக்டோரியா பூங்காவிற்கு வந்து.. மறைவான ஓர் ஒதுக்குப்புறமாய் பார்த்து வண்டியை தரித்து விட்டு,அவளோடு இறங்கியவன்.. தன் முன்னே நின்றிருக்கும் அழகுப்பாவையை அப்படியே விழுங்கி விடுபவன் போல பார்த்துக் கொண்டேயிருந்தான் .
அவனது மையல் ததும்பிய விழிகளைப் பாராது, படபடவென பேசும் தொனியில், “பாரு உன் புனைப்பேர்ல பேஜ் திறந்திருக்கேன்.. பூஸ்ட்டும் பண்ணியாச்சு.. இதையும் நாலு பேர் பார்ப்பாங்க.. எஸ். என். ஸியை மட்டுமே நம்பி இருக்காதே.. இந்த பேஜ் மூலமா ஏதாவது ஆஃபர் வந்தா கப்புனு பிடிச்சுக்கோ” என்று தன் சித்தப்பா மூலம் வருங்காலத்தில் அவன் இலட்சியத்துக்கு ஆபத்து வந்தால்.. முன்னேற வழி வேண்டுமே என்பதற்காக அவள் கர்ம சிரத்தையுடன் அனைத்தையும் அவனுக்கு விளக்கிக் கொண்டிருக்க.. அவனோ அவளது அசையும் அதரங்களையே குதர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
நேரமாக ஆக.. ஆண்மகன் அவன் நெஞ்சில் காதல் சுமை கூடிக் கொண்டே போக.. அந்த ஒதுக்குப்புறத்தின் தனிமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நாடியவன், அவள் முன்னங்கைப் பற்றி..தனக்குள் இழுத்துக் கொண்டான் அவளை.
அவன் வலிய கைகள், அவள் முதுகில் அணிந்திருந்த ஷோல்டர் பேக்கிற்கும் கீழாக சென்று.. அவள் இடையோடு கையிட்டு.. அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டன.
அந்த இறுகிய அணைப்பில் ஒரு கணம் மூச்சு நின்று வர..உடலில் ஏதோ ஓர் சுகம் தாக்க.. கண்களை மெல்ல மேலே செருகி.. உணர்ச்சிகள் தாளாமல் கீழிதழை கடித்துக் கொண்டாள் அவள்.
அவள் கண்களின் செருகலும், இதழின் கடிப்பும் ஆண்மகனில் போதையை உருவாக்க.. அவன் அணைப்பு இன்னும் இறுக… மெல்ல அருகே இருந்த ஆலமரத்தோடு தன் முதுகு வைத்து சாய்ந்து கொண்டான் அவன். அம்மரம் அவர்களின் காதல் விளையாட்டை வெளியுலகுக்கு காட்டாத அரணாக அமைய.. சத்தமின்றி முன்னேறினான் வீர்.
மெல்ல அவள் வெண் சங்கு கழுத்தில் குனிந்து முத்தமிட.. பெண் தேகத்தில் எரிமலையும், பனிமலையும் ஒரு சேர வெடிக்கவாரம்பித்தது.
அந்த உணர்ச்சிகளின் சுகத்தை தாளமாட்டாமல்.. அவனது அடர்ந்த பின்னந்தலை சிகையை.. கையிட்டு அளைந்தவாறு… அணைத்துக் கொண்டாள் அவள்.
பெண்ணவளின் ஒத்துழைப்பும் கூட அவனுள் கிறக்கம் மூட்ட.. அவளது நடுத்தொண்டையை பாதையாக கருதி…. மூச்செடுத்துக் கொண்டே…மெல்ல மெல்ல அவள் இதழ்களுக்கு முன்னேறினான் அந்த காதல் கலைஞன். அவனுடைய இதழ் தீண்டலை காட்டிலும், அவனது மூச்சுக்காற்றின் தீண்டல்.. அந்த பதுமையினுள் காதல் தீயை மூட்டி விட… அவளது அணைப்பு இன்னும் இறுகியது.
அவன் இதழ்களின் தேடல்.. தன் இணையை கண்டதும் ஓர் முடிவுக்கு வந்தது. அந்த சீதையின் இதழ்களை சிறையெடுத்துக் கொண்டான் இந்த கலியுக ராமன்.
“காதல் ஒன்றும் சுத்தபத்தம் பார்ப்பதில்லையே..
அதில் எச்சில் கூட புனிதமானதே” – இம்முறை ஏ. ஆர். ரஹ்மான் பின்னணியில் இசை வாசிக்க.. அங்கே மூண்டது ஓர் அழகிய காதல் யுத்தம்.அவள் தன் நயனங்கள் மூடி.. சுவர்க்கத்திற்கு சென்று வர… அந்த காதல் கலைஞனோ..இதழ் “கள்”ளில் இருந்து கள் அருந்திக் கொண்டிருந்தான்.
உயிரையே கடைந்தெடுக்கும் அவன் உறிஞ்சுதலில்.. சஹாரா பாலைவனமாக வரண்டது போனது அவள் அதரங்கள். இருப்பினும் அந்த தாப வரட்சி அவளுக்கு பிடித்திருந்தது.
சில பல மணித்துளிகளாக நீண்டு கொண்டே போனது அந்த நெடிய முத்தம். அது ரவிவர்மன் தொடுத்த கொடிய யுத்தம். அவள் கைகள்.. அவன் பின்னந்தலை கேசத்தை.. உணர்ச்சிப் பெருக்கு தாளமுடியாமல் பிய்த்தெடுக்க.. வாய்.. மோன ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்தது.
பெண்ணவளின் ‘ஹூம்’ என்ற ஒற்றை சிணுங்கல் கூட சிருங்கார ரசத்தை கூட்டியது அவனுக்கு.
இவன் கைகளோ.. பெண்ணவளுக்கே தெரியாமல்.. எங்கெங்கோ நிசப்தமாக பயணித்துக் கொண்டிருந்தது. அவன் கைகளின் தீண்டல் அந் நிலவு மங்கைக்கு பிடித்துப் போக.. ஆதவனிலிருந்து பிரிய மனமற்று.. ஓட்டுக்குள் நத்தையாய்.. அவனுடன் ஒன்றிப் போனாள். அவளுக்கு முன்.. இவன் காதல் மயக்கத்திலிருந்து.. நனவுலகம் வந்து விட.. மெல்ல அவளிதழ்களில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டவன், இன்னும் காதல் போதை மூண்ட விழிகளுடன் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தன் அழகியை கண்டு வாய் விட்டு நகைத்தான்.
“ஹஹஹா.. இப்போதைக்கு இது போதும்.. சரி வா..நாம நம்ம வேலையை பார்க்கலாம்”என்று அவள் கைப்பற்றி அழைத்துக் கொண்டு.. அந்த பார்க்கின் அக்கினி மூலையை நோக்கி நடக்கவாரம்பிக்க, அவனோடு வர மறுத்து.. அடம்பிடித்து நின்றாள் அவள்.
தன்னுள் உணர்ச்சித் தீயை மூட்டிவிட்டு.. முத்தத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு அவன் செல்வதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அவன் எதற்கு தன்னை விக்டோரியா பூங்காவிற்கு அழைத்து வந்தான் என்று நன்கு அறிந்திருந்தும், அவனோடு செல்ல பிரியப்படவில்லை அவள்.
அவன் அவளை திரும்பிப் பார்க்க, “சன்டே அதுவுமா ரொமேன்ஸ் பண்ண கூப்பிடுறேன்னு பார்த்தால்.. இன்னெய்க்கும் பெயிண்டிங்கா? .. வீர் திஸ் இஸ் டூ மச்.. கொஞ்சம் அங்கே போய் பேசிட்டிருக்கலாமே வீர்.. ப்ளீஸ்..”என்று கண்கள் நிறைய காதலை தேக்கி வைத்துக் கொண்டு, கெஞ்சினாள் தைர்யா.
அவன் மனமோ.. அவளது விழிகளின் காதல் இறைஞ்சலுக்கு எல்லாம் கசிந்தது ஓரிரு கணங்களுக்குத் தான்.
பின் தன் முகத்தை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி, அவளை இழுத்துக் கொண்டே“நோ வேய்…காதல் வந்ததும் மாறுவதற்கு நான் ஒண்ணும் மத்த பசங்க மாதிரி இல்லை.. எனக்கு எப்போவுமே ரூட்டின் வர்க்ஸ் தான் முக்கியம்…பெயிண்டிங் முடிச்சதும் வேணும்னா அங்கே போய் பேசிட்டிருக்கலாம்.. இப்போ கம் வித் மீ”என்றவன்.. பிடித்த கையை விடாமல் முன்னேற… இவளுக்குத் தான் முகம் தொங்கிப் போனது.
பூங்காவின் ஒரு பகுதியில்.. அவனைப் போல சக ஓவியர்கள்.. அங்கே வரும் பூங்காவின் வாடிக்கையாளர்களை அழைத்து வந்து.. அவர்களை அழகிய பென்சில் ஸ்கெட்ச் ஓவியமாக வரைவதுண்டு. கிட்டத்தட்ட ஒரு சிறு கைத்தொழில் போல.
ரகுவீரிடம் அந்த பழக்கமுண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் விக்டோரியா பூங்கா வந்து.. அன்-நோவ்ன் மனிதர்களை.. தன் தூரிகையால் சித்திர விம்பமாக ஆக்குவது .
அந்த பகுதியில் பலரும்.. அந்த ஓவியர்களின் ஈஸல்களின் நேரெதிரே அமர்ந்து.. அமைதியாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்க.. அவற்றையெல்லாம் துல்லியமாக வரைந்து கொண்டிருந்தனர் அவ் ஓவியர்கள்.
ஓரிருவர்.. ரகுவீர் தன் வரைதல் இடத்தில் , அவனுக்கென்றிருந்த ஈஸலை நோக்கி வந்ததை கண்டு ஸ்நேகமாக புன்னகைத்தனர்.
எப்போதும் சிங்கிளாக வரும் வீர்.. இன்று ஓர் அழகான இளம் பெண்ணுடன் வருவதைக் கண்டு, “அன்ன கெல்லெக் ஹம்பவுனா த? (பார்ரா…பையனுக்கு பொண்ணு மாட்டிக்கிச்சா?)”என்று தமக்குள் புன்னகைத்துக் கொண்டே… அவனிடம் கேட்டும் வைத்தனர்.
கடைக்கண்ணால் திரும்பி தன் அழகு பெட்டகத்தைப் பார்த்தவன், அவள் முகம் கீழ்வானத்தின் சிவப்பை பூசிக் கொண்டதைக் கண்டு.. இரசித்த வண்ணம், “ஒவ் (ஆமா)”என்றான் நாணச்சிரிப்புடன்.
ஆண்களின் நாணம். வானில் தோன்றும் வால் நட்சத்திரம் போல. அபூர்வம் தான். இருப்பினும் தோன்றினால் வெகு அழகு. தன்னவன் முகத்தை இமை கொட்டாமல் பார்த்து இரசித்தாள் அவள்.
இவனும் அவர்களோடு இணைந்து கொள்ள ஆயத்தமாகியவன், அவளின் ஷோல்டர் பேகிலிருந்து.. தேவையான பொருட்களையெல்லாம் மெல்ல மெல்ல எடுத்து வைக்கத் தொடங்கினான் வீர்.
அவளும், காதல் கிறக்கத்தின் விளைவால் உண்டான வாட்டத்தை மறைந்து.. தன் தலைவனுக்கு வரைதல் பொருட்களை எடுத்து வைக்கலானாள்.
ஞாயிற்றுக்கிழமைகளில்.. பலவிதமான குடும்பத்தினர்களும், குழந்தைகளும் வரைவதற்கு வந்த வண்ணமிருக்க.. தன் நிஜக் காதலியை மறந்து.. கலைக் காதலியுடன் சங்கமித்துப் போனான் வீர்.
ஷேத்ராவோ.. அவனை டிஸ்டர்ப் செய்யாமல்.. பக்கத்தில் இருந்த மர பெஞ்ச்சில் தன் முதுகந் தண்டு கூனாமல்.. எகிப்திய இளவரசி கிளியோபெட்ரா போல அமர்ந்திருந்தவளின் கண்கள்.. மலரை மொய்க்கும் வண்டாய் அவனையே தான் மொய்த்துக் கொண்டிருந்தன.
அவன் கேசம்.. காற்றில் ஆடிக் கொண்டிருக்க.. அவனுடைய வலிய கைகள் சித்திரக் காகிதத்தில் பதிந்திருக்க.. அவனது வனப்பு மிகுந்த தொடைகளை இன்னும் கொஞ்சம் எடுப்பாக அவன் டெனிம் எடுத்துக்காட்ட… தன் எதிரே இருந்த பாலகனை வரைந்து கொண்டிருந்தான் வீர்.
அவனது பக்கவாட்டு தோற்றத்தை பார்த்திருந்தவளின் நயனங்கள் மென்மையாகின. என்ன தான் இருப்பினும் தனக்கு பிடித்த வேலையை.. பிடித்த மாதிரி செய்கிறான். அதுவும் ரொம்பவும் ரசித்து ருசித்து… செய்கிறான்.
அன்று இதே விக்டோரியா பார்க்கில் ஸ்ட்ரேஞ்சராக அறிமுகமானவன். இன்று அவளுடைய காதலனாய். விக்னேஷூக்காக.. மூர்ச்சையாகி விழாத குறையாக ஓவென்று அழுதவள், இன்று அவன் நினைவேயற்று.. இவன் காதலில் கட்டுண்டு கிடக்கிறாள்.
விக்னேஷின் நினைவே வராதிருக்க.. முழுமுதற் காரணமே அவனும், அவன் அருகாமையும் தானே. அவள் இமைத்தால்.. உலகத்தையே சமர்ப்பிப்பான் அவன்.அவள் நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பான் அவன். உயிரையும் ஈந்தருள்வான் அவன்.
அவனது அரிய காதலை பெற அவளும் தான் எத்துனை தவம் செய்திருக்க வேண்டும்?.
ரொம்ப நேரமாய் அவள் தன்னையே பார்ப்பதை உணரந்தவன், வெடுக்கென்று தலை திருப்பி.. அவளைப் பார்த்தான். அந்த திருப்பலை முற்றிலும் எதிர்பார்க்காதவளின் இமைகள் படபடவென அடித்துக் கொள்ள,முன்னெற்றிக் கூந்தலை சரி செய்வது போல.. தலை திருப்பிக் கொண்டாள் அவள்.
அவளது சிறுபிள்ளைத்தனமான செய்கையில்.. தலை சிலுப்பி சிரித்துக் கொண்டே…அவன் வரைதலை மீண்டும் தொடர… இவளும் திரும்பவும் அவனை காதலுடன் நோட்டம் விடத் தொடங்கினாள்.
நேரம் சென்று கொண்டேயிருக்க..கூட்டமும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய நேரம்.. பெஞ்சிலிருந்து எழுந்து அவனை நாடிப் போனாள் ஷேத்ரா.
அவன் பின்னால் போய் நின்று.. அவனது இரு திண்ணிய புஜங்களை பற்றியவள், “போதும் வீர்.. உனக்கு டயர்டா இல்லை? … வரைஞ்ச உனக்கு டயர்டோ இல்லையோ.. எனக்கு டயர்டா இருக்கு… இப்பவாவது அதை வச்சிட்டு வரலாமே… கொஞ்சம் அங்கே போய் உட்கார்ந்து பேசிட்டிருக்கலாம்.. ப்ளீஸ்”என்று மீண்டும் அழைத்தாள் அவனை.
அந்த அழைப்பின் உண்மையான அர்த்தம் புரிந்தவனின் இதழ்களோரம் இலேசான குறும்புச் சிரிப்பு எட்டிப் பார்க்க.. தன் தோளை பற்றியிருந்த அவள் வலக்கையை எடுத்து.. இதழ்கள் குறுகுறுக்க…புறங்கையில் முத்தமிட்டு விட்டு.. அவளை மையலுடன் நோக்கி.. ஏதோ பேச வாயெடுத்த கணம்.. எதிரே இருக்கும் இருக்கையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் அமரும் அரவம் கேட்டது. அவனும் அவள் கையை விடாமல் திரும்பி.. வந்த வாடிக்கையாளரை இன்முகத்துடன் நோக்க.. தைர்யாவின் முகமோ இறுகி வாடி… பதற்றத்துக்குளாகத் தொடங்கியது.
ஆம். அவன் எதிரே வந்து அமர்ந்ததோ அவளின் சித்தி கோகிலா. தன்னவனிடத்தில் சிறைப்பட்டிருந்த கையினை சட்டென பிரித்து எடுத்துக் கொண்டு… இயல்பாய் ஊறும் பாசம் மற்றும் கலக்கத்துடன்.. தர்மசங்கடமாக அவரைப் பார்த்தாள் அவள்.
அவர் எதுவும் பேசவில்லை. தன் ஸ்பெக்ஸை மட்டும் சரிசெய்து கொண்டவர், வீரை இன்முகத்துடன் பார்த்து விட்டு, அவன் பின்னால் நின்றிருக்கும் தைர்யாவை ஏற இறங்க ஓர் பார்வை பார்த்தார்.
“ரொம்ப மெலிஞ்சு போய் இருக்க.. டைமுக்கு சாப்பிட்றியா என்ன?”என்று அக்கறையாக அவர் விசாரிக்கத் தொடங்க… உள்ளுக்குள் ஓர் அன்ஈஸி மனநிலையை உணரந்தாள் அவள்.
ரொம்ப தெரிந்தவராய் சித்தி பேச, வீரிடம் என்ன சொல்லி சித்தியை அறிமுகப்படுத்தி வைப்பாள் அவள்? வெகுநாட்கள் கழித்து அவரைக் கண்டதும்.. பழைய கோபம் மனதில் நில்லாமல்.. படபடப்பு தான் அதிகமாயிற்று அவளுக்கு.
அவள் எதிர்பார்த்தது போலவே.. அவளை நோக்கி அவன் கேட்டான்“இவங்களை உனக்கு தெரியுமா தைர்யா? ..”என்று.
அவளும் தனக்குள் மீதூறிய படபடப்பை மறைத்தவாறு.. எங்கே இவர் தான் தன் சித்தி என்று அவர் கூறி விடுவாரோ என்ற அச்சத்தில் “ஆ. ஆமா.. தூரத்.. தூரத்து சொந்தம்..”என்றாள் திக்கித் திணறி.
தன் மகள்.. அந்த பையனிடம் இவர் என் சித்தி என அறிமுகப்படுத்த விளையாததைக் கண்டு… நெஞ்சம் வாட நின்றவர், தன் சோகத்தை மெதுவாக வெளிப்படுத்தி, “ஓ..”என்று மட்டும் இயம்பியவர் அதற்கு பின் எந்தவிதமான பதிலையும் உரைக்கவில்லை. அவளுடன் பேசவுமில்லை.
அவரை நோக்கி மரியாதைக்காக வணக்கம் வைத்தவன்.. தன் வரைதலில் கவனம் செலுத்தலானான். இம்முறை அவளும் பெஞ்சில் போய் அமராமல் .. அருகேயே நின்று அவன் வரைவதை வேடிக்கை பார்ககலானாள்.
சித்தியின் முக ஷேப்.. கூந்தல் அலங்காரம்.. கண்களின் திரட்சி..சருமத்தின் சுருக்கம், கண்ணாடியின் ஒளி பிரதிபலிப்பு என அனைத்தையும்.. அவனது கை வன்மையில் அக்யூரேட்டாக வர.. அந்த ஓவியத்தையே உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
இடையே அவள் பார்வையும், இவர் பார்வையும் ஒருமுறை சந்தித்துக் கொள்ள.. தன் இத்தனை நாள் பிரிவையெல்லாம் கண்களில் தேக்கி.. “நலமா?”என்று கண்ணசைத்து கேட்டார் அவர்.
அவன் முன் எதையும் காட்டிக் கொள்ளக் கூடாது என்று விடாப்பிடியாக இருந்தவளோ.. ஏதும் மறுசெய்கை காட்டாமல்.. தன் பார்வையை கடினப்பட்டு குனித்துக் கொண்டாள்.
வரைந்து முடிந்ததும் .. காசை எடுத்து அவர் நீட்டப் போக, புன்னகையோடு அதை மறுத்து, “வேணாம் ‘அத்தை’.. ‘என் தைர்யாவுடைய’ தூரத்து சொந்தம்.. அவள் அம்மா மாதிரி நீங்க.. உங்க கிட்ட காசு வாங்குறது நாகரிகம் அல்ல.. இது என்னோட கிப்ட்.. கிப்ட்டாக வைச்சிக்குங்க” என்றுரைக்க.. அந்த ஓவியனை ஒரு முறை கண்கள் சிமிட்டியவராய்.. வித்தியாசமாக பார்த்தார் கோகிலா. அவனது “அத்தை’ என்ற அழைப்பும், ‘என் தைர்யாவில்”இருந்த உரிமையும் அவன் மேல் அவருக்கு நன் மதிப்பை ஏற்படுத்தியது.
சிரித்துக் கொண்டே அவன் உச்சந்தலையை தொட்டு ஆசிர்வதித்தவர், கல்லாய் நின்ற தைர்யா தலையையும் தொட்டு விட்டு, “ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க..நீ எப்போ வேணாலும் வீட்டுக்கு வரலாம்” என்று அவளுக்கு மறைமுகமாக அழைப்பும் விடுத்து விட்டு…அங்கிருந்து நகர்ந்தார்.
போகும் அவரையே பார்த்திருந்த வீர், தைர்யாவிடம், “பாவம் அந்த ஆன்ட்டி.. ஏதோ மனக்கஷ்டத்தில் இருக்காங்க போல.. அவங்க கண்ணை வரையும் போது.. அந்த சோகம் ரொம்ப தெளிவா தெரியுது.. வயசான காலத்துல அப்படி என்ன சோகமாக இருக்கும்?” என்று கேட்க.. அங்கேயே அழுகை வரும் போல இருந்தது அவளுக்கு. அவர் கண்ணில் தெரியும் உச்சபட்ச சோகத்துக்கு காரணம் யார்? அவளே தானே?
போகும் அவர் காலைப் பிடித்து, ‘மன்னிச்சிடுங்க சித்தி.. நான் அன்னைக்கு பண்ணது தப்பு தான்’என்று கதறியழுது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தோன்ற கடினப்பட்டு அவள் அவ்வுணர்வை அடக்கிக் கொண்ட வேளை, அவள் முகம் பார்த்து திரும்பியவன் பதறிப் போனான்.
“ஹேய் என்னாச்சுமா?” – அவள் நாடியை தன் கையில் ஏந்தி அவன் கேட்ட தினுசில்… அடக்கப்பட்ட அழுகை.. தன் கட்டையும் மீறி வந்து விடுமோ என்றிருக்க, அவன் விழிகளை சந்திக்க முடியாமல், புல்வெளியை துலாவியவளாய்… “நான்.. நான்.. வீ.. வீட்டுக்குப் போ.. போகணும்” என்று முதல் நாள் பள்ளி செல்லும் குழந்தையை போல சிணுங்கினாள் அவள்.
“நீ தானே கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்ன.. வா உன்னிஷ்டம் போல அங்கே போய் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசலாம்”என்று அவள் மனதைத் தேற்ற நாட்டம் கொண்டு.. அவள் கைப்பற்றி அழைத்தான் அவன்.
கம்பன் மகன் அம்பிகாபதியுடன்.. மன்னன் மகள் அமராவதி செல்லவில்லை. இருந்த இடத்திலேயே நின்றவள்.. மீண்டும் அதையே சொன்னாள்.
“இல்லை.. இல்லை வீர்.. நான்.. நான்.. வீ.. வீட்டுக்குப் போ.. போகணும்”. அவள் சோகம் அவளைத் தாக்க.. பலரும் அங்கே நின்று கொண்டிருப்பதை மறந்து.. தன் திண்ணிய மாரில் அவளை இறுக அணைத்துக் கொண்டான் வீர்.
அவனுடைய அணைப்பில்.. கை, கால்கள் வெளவெளத்து.. கண்ணீர் சுரப்பிகள் அதிகமாக உற்பத்தியாக.. அவன் நெஞ்சில் சாய்ந்து அழுது… அனைத்தையும் ஒன்று விடாமல் உளறி விடுவோமா என்று ஐயுற்றவள், சட்டென அவனிடமிருந்து விலகினாள் அவள்.
புரியாது நோக்கியவனிடம்.. நெற்றியை அழுத்திக் காட்டி “வீர்.. எ.. எனக்கு த.. தலை வலிக்குது.. வீட்டுக்கு போகணும்” என்றாள்.
அதற்குப் பிறகும் அவளை வற்புறுத்த மனமற்றவன், அவளை இதமாக நோக்கி, “கொஞ்சம் இருமா.. சீக்கிரம் திங்க்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்துர்றேன்”என்றவன்,
தன் வரைதல் பொருட்களையெல்லாம் ஷோல்டர் பேகில் பரபரவென எடுத்து வைத்தவன், அவளை அழைத்தக் கொண்டு பைக்கில் செல்லலானான்.
இங்கு வரும் போது, அவன் கண்ணாடி வழியாக பார்த்து இரசித்த அவள் நிலா முகம். மேகம் மறைத்த நிலா முகமாக மாறிப் போயிருந்தது இப்போது.
அவள் கலக்கத்திற்கு காரணம் அந்த பெண்மணியா? இல்லை தலைவலியா? புரியவில்லை அவனுக்கு. இருப்பினும் ஜாலி மூடில் இருந்தவளை.. வரைய வலுக்கட்டாயமாக அழைத்துப் போய் “மூடி” மூடிற்கு மாற்றியவன் அவன்!
சீறிப் பாய்ந்தது வண்டி.சரியாக அவள் வீட்டில் அவளை விட..திரும்பி அவனைப் பார்த்து.. ஒரு புன்னகையாவது சிந்தாமல்.. உள்ளே ஓடி விட்டாள் அவள்.
அவள் முகத்தை இறுதியில் காணமல் போனது அவனை வாட்டம் கொள்ளச் செய்ய.. அவளை அழைக்க துடித்த உதடுகளை அழுந்த மூடிக் கொண்டு வண்டியை எடுத்தான் வீர்.
என்னவாயிற்று? தன்னிடம் கூட சொல்லாத அளவுக்கு பொல்லாத தலைவலியா அவளுக்கு?பார்த்தால் அப்படி தெரியவில்லையே? என்று பல்வேறு சிந்தனைகளுடன் அவன் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே அசுரவேகத்தில் இடித்து விடுவது போல வந்த வெள்ளைவேனில் மோதப் போய்.. நொடியில் சுதாரித்து ப்ரேக் போட்டு நின்றான் ரகுவீர்.
நின்றிருந்த வெள்ளை வேனில் இருந்து நாலைந்து குண்டர்கள் தடதடவென இறங்கி கீழேவந்து..அவனது பைக் வண்டியை சுற்றி வளைக்க.. இன்னும் சற்று நேரத்தில் தன்னை எமலோகம் அனுப்ப நினைத்த எமகாதர்களை கோபத்தில் எரித்து விடுபவன் போல பார்த்தான் வீர்.
ஒரு கால் ஸ்டேன்டில் இருக்க, மறுகாலை தரையில் ஊன்றி எழுந்து நின்று ..வந்தவர்களுள் வண்டிக்கு நேராக இருந்தவனைப் பார்த்து முறைத்தவன், “டேய்.. பார்க்காமல்.. வண்டியை ஓட்டி வந்ததும் மட்டுமில்லாமல், என்னடா முறைக்குற?”என்று எகிறியவனாய் கேட்க, அடுத்த செக்கன் வீர் முகத்தில்.. சைக்கிள் சைன் சுற்றப்பட்ட கை முஷ்டியால் ஓர் குத்து விட்டான் அந்த முரடன்.
அடித்த அடியில் மூக்கிலிருந்து இரத்தம் குபுகுபுவென இரத்தம் வர, இன்னொரு மாமிசப் பர்வதமோ, “டேய் நாங்க யாரு தெரியுமா? .. சி. ஐ. டி ஏஜன்ட்ஸ்.. எங்களையே எதிர்த்து பேசுறீயா?”என்று அதிரச் செய்யும் குரலில் கேட்ட அடுத்த நொடி.. ரகுவீர் மீது சரமாரியாக தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருந்தது.
அவன் பைக் எங்கோ? அவன் எங்கோ? என்று ஆக.. அந்த ஐந்து ராட்சதர்களிடம்.. நிலத்தில் வீழ்ந்து அடிவாங்கிக் கொண்டிருந்தான் வீர்.
“எதுக்குடா என்னை அடிக்கிறிங்க? நான் தான் எந்த தப்பும் பண்ணலையே?”என்று அவன் அந்த நேரத்திலும் உச்சஸ்தாயியில் கத்த,
“நீ பெரிய இடத்து பொண்ணு மேல கை வச்சதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு.. இன்னைக்கு நாங்க அடிக்குற அடியில… இனி நீ எந்த பொண்ணு பக்கமும் தலை வைச்சு படுக்கக்கூடாது… உனக்கு பொண்ணு கேட்குதா பொண்ணு..”என்ற வண்ணம் அடித்தான் ஒருவன்.
அவர்களின் அடியின் வீரியம் தாங்க முடியாமல்…ஒரு கட்டத்தில் சுயநினைவு இழந்து.. கண்கள் சொருகிக் கொள்ள, அடிப்பதை நிறுத்த சொன்ன மற்றொருவன், “போதும்டா.. செத்துட கித்துட போறான்.. வாங்கடா போகலாம்.. இனி அவன் எந்த பொண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூட மாட்டான்”என்றுரைத்து விட்டு.. அந்த வெள்ளை வேனில் மீண்டும் ஏறிச் செல்லலாயினர்.
அவன் வேதனையில் துவள்வதைத் தாங்கமாட்டாது.. பலத்த இடி சத்தத்தோடு.. பெருத்த மழையும் பெய்ய.. அவன் இரத்தமும், மழைநீரும் இரண்டறக் கலந்து ஓட.. கண்களில் இறுதி விம்பமாய் தைர்யாவின் சிரித்த முகம் தோன்ற.. மெல்ல விழிகளை மூடிக் கொண்டான் வீர்.
