திமிருக்கு மறு பெயர் நீயோ
திமிருக்கு மறு பெயர் நீயோ- 28
ஏற்கனவே குழம்பியிருந்த மண்டை இந்திரா அவளுடைய கடந்த கால வாழ்க்கையை சொன்னது, அவளை க்ரிஷ்விட்டு வேற யார் கூட நான் போயிடுவனு கேவலமாக பேசியது. எல்லாம் அவளை ரொம்ப கஷ்டப்படுத்த, எப்படியும் க்ரிஷ்க்கும் இந்த விஷயம் தன் அத்தை இந்திரா மூலம் தெரிஞ்சிருக்கும். அர்ஜு என்னை கஷ்டப்படுத்துறதுக்கு முன்னாடி நம்பளே இங்க இருந்து யாருக்கும் தெரியாமல் சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்து போனவளை தான், யாரோ கடத்தி விட்டனர்.
அவள் மூஞ்சியில் மயக்கம் மருந்து ஸ்பிரே பண்ணவும் மயங்கி விட்டாள். அவள் கண்னை திறக்கும் பொழுது, ஏதோ ஒரு லேபிள் சேரில் அவள் கை கால்களை கட்டி போட்டு இருந்தனர்.
ஆராதயாவை கடத்தி வந்தவர்கள் அவள் கண் முழித்ததும், அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் முகமுடியை கழட்டினர். அவர்களைப் பார்த்த ஆராதயாக்கு பேர் அதிர்ச்சி! அவர்களைப் பார்த்து நீநீ ங்ங் ககக.. நீங்க ஏன் என்ன கடத்தினீங்க.
ஸ்டீபனும், லாராவும் சிரித்துக்கொண்டே. உனக்கு ஒரு விஷயம் சொல்லவா, நீ உனக்கே தெரியாம என் வழியில வந்துட்ட. நான் க்ரிஷ் கம்பெனில் சேர்ந்ததிலிருந்து, க்ரிஷ் என் மேல ஆசைய வர வச்சு கல்யாணம் பண்ணிக்கணும் நெனச்சேன். அதுவும் நீ வரலைன்னா நடந்திருக்கும், நீ வந்ததும் அவன் பார்வை உன் மேல மாறிடுச்சு. என்கிட்ட பேசுறதே நிப்பாட்டிட்டான், இதுக்கெல்லாம் காரணம் நீதான்.
உன்ன எப்படியாவது இங்கே இருந்து தொரத்தணும்னு பிளான் பண்ணி நிறைய செஞ்சேன். ஆனா நீ எதுக்குமே மசிஞ்ச மாதிரி தெரியல சரி உன்ன கொலை பண்ணலாம் என்று நினைச்சேன். ஆனா போலீஸ் எப்படியும் என்னை கண்டுபிடிச்சிடும், அப்புறம் நான் க்ரிஷ் கூட வாழ்ற கனவு கனவாகவே போயிடும் பயன்படுத்தணும்னு நினைச்சேன்.
நம்ப போன கம்பெனி அவுட்டிங் ட்ரிப்ல, அந்த புதர்க்குள்ள உன்ன தள்ளிவிட்டேன். ஆனால் நீ எப்படியோ தப்பிச்சிட்ட, சரி நீ ஆளே காணும் பயந்து ஊரை விட்டு போயிட்டியேன்னு சந்தோஷமா இருந்தேன். ஆனா என் தலையில பெரிய இடியா நீயும் க்ரிஷ் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டீங்க. உன்ன என் க்ரிஷ்க்கு வைப்பா ஏத்துக்க என்னால முடியாது. அதுதான் இப்போ உனக்கு கொன்னுடலாம் நெனச்சேன். நான் ஆசைப்பட்டவன் எனக்கும் கிடைக்க கூடாது, உனக்கும் கிடைக்க கூடாது. என்று அகோரமாக சிரிக்க ஆராதயாவே சிறிது பயந்து போனாள்.
தன் மனதில் தைரியத்தை வரைய வைத்துக்கொண்டு, இது பயப்படுவதற்கான நேரம் கிடையாது ஏதாவது செஞ்சு இங்க இருந்து தப்பிச்சுடனும். நான் அர்ஜு கூட சந்தோஷமா வாழனும், என் முட்டாள் தனத்துனால தான் திரும்பவும் இவகிட்ட இப்படி மாட்டி இருக்கேன். அவளிடம் எப்படி தப்பிக்கிறதுக்கு பேசலாம் என்று யோசிக்கும்பொழுது, லாராவே திரும்ப பேச ஆரம்பித்தாள்.
நான் உன்னை சைலன்ட்டா கொன்னுடலாம்னு தான் . ஆனா உன் மாமியார்னு ஒருத்தி வந்தா. அவதான் எனக்கு பர்ஸ்ட்ல இருந்தே எதிரி, முதல்ல அவளை கொன்னு இருந்தா எல்லாம் சரியா போயிருக்கும். எப்ப பாத்தாலும் க்ரிஷ்க்கு கல்யாணம் பண்ணனும், போன் பண்ணி என்ன டென்ஷன் பண்ணுவா. நானும் அவள க்ரிஷ்கிட்ட, பேசவிடாம அவ போன வச்சிடுவேன். ஆனா எப்படியும் நேக்க பேசி அவனுக்கு கல்யாணத்தை பிக்ஸ் பண்ணிட்டா. சரி அவள வச்சே உன்ன எதனா பண்ணலாம்னு பார்த்தா நேத்து ஆபீஸ்க்கு வந்தா!
நேற்று நடந்த பிளாஷ் பேக்:-
க்ரிஷை பார்த்து வெளியே வந்த இந்திரா, லாராவை பார்த்து என்ன லாரா உன்னோட பிளான் எதுவுமே கரெக்டா சக்ஸஸ் ஆகவில்லை போல?
இந்திரா கேட்டதில் அதிர்ச்சியான லாரா, மேடம் நீங்க என்ன சொல்றீங்க. எனக்கு ஒன்னும் புரியல, நடிக்காத நான் என்ன சொல்றேன் உனக்கு நல்லாவே தெரியும். என் மருமகளை இந்த மலையில கீழே தள்ளிவிட்டதும் நீதான். எனக்கு போன் பண்ணி இங்க வர வச்சு தான் நீ தானே. எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்.
அவர் பேச்சில் இந்திராவை அதிர்ந்து பார்த்தாள் லாரா.
அவளையை பொருள் படுத்தாமல், உனக்கு இன்னொரு சீக்ரெட் சொல்லட்டா. இதைக் கேட்டு இன்னும் வயிறு எரிஞ்சி சாவு. ஆராதயா உனக்கு இந்த கம்பெனியில் வேலை செய்கிற ஸ்டாப் தான தெரியும்? ஆனா இன்னொரு உண்மை என்ன தெரியுமா? நான் க்ரிஷ்க்கு பார்த்த கல்யாண பொண்ணு ஆராதயா தான்.
லாரா இன்னும் அதிர்ந்து இந்திராவை பார்க்க!
இதுக்கே ஷாக்கானா எப்படி, ஆராதயா இங்க ஒர்க் ஜாயின் பண்ணது மட்டும் தான் உனக்கு தெரியும். அவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்து, ஒரே வீட்ல தான் ஸ்டே பண்ணி இருந்தாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உருவாகிடுச்சு, ஆனா அடுத்த கட்ட லெவலுக்கு எப்படி போறேன்னு தெரியாம என் பையன் முழிச்சிட்டே இருந்தா. ஆனா அவனுக்கு நீ ஒரு தனி ரூட் போட்டு கொடுத்த!
லாரா நான் என்ன பண்ண என்று யோசிக்க?
என்னன்னு உனக்கு புரியலையா, அதுதான் நீ அந்த மலையில் இருந்து ஆராதியாவை தள்ளி விட்ட இல்ல, அன்னைக்கு நைட்டே அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா வாழ ஆரம்பிச்சிட்டாங்க. ஆராதயா திரும்பவும் லூசு மாதிரி வேற எதுனா தப்பா யோசிக்க போறாள்னு, அவளை சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
எங்க ஊரு கல்யாணம் பந்தம் சும்மா நினைக்கிறியா? அது ஏழேழு ஜென்மம் தொடரும்னு நினைக்கிறவங்க. நாங்க உங்க ஊரு மாதிரியா இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அடுத்த வாரம் வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டோம். ஒருத்தனுக்கு ஒரு தின்னு வாழ்றவங்க, அந்த ஒருத்தன் சரியில்லையா, நீ வேண்டாம் போடா என்று தனியா தைரியமா வாழ்வோம் தவிற, அவனை தவிர இன்னொருத்தனை ஏறெடுத்து பாக்க மாட்டோம். அதுதான் எங்க தமிழ் பொண்ணுங்க, அதெல்லாம் எங்க உனக்கு புரிய போகுது.
லாரா அது எல்லா இருந்துட்டு போட்டும், எதுக்கு இந்த விஷயம் எல்லாம் என்கிட்ட சொல்லுற என்று இந்திராவை கேள்வியாய் பார்க்க.
எதுக்கு இவ இவ்வளவு விஷயம் என்கிட்ட சொல்லுறான்னு பாக்குறியா, அது ஒன்னும் இல்லம்மா உன்னையும் உன் கூட ஒரு எடுப்பு தொடுப்பா இருக்கானே. அவனையும் வேலையிலிருந்து தூக்கிட்ட, அதுதான் போறதுக்கு முன்னாடி உண்மையெல்லாம் தெரிஞ்சுட்டு போயி எங்கனா விழுந்து சாவு. இதெல்லாம் நானே சொல்லி, உன் மூஞ்ச பார்க்க தான் நேர்ல வந்து. உன் பயரட் ஆர்டர் கொடுக்கலாம்னு வந்தேன், வரட்டா லாரா. இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் என் மருமககிட்ட திரும்ப இந்த மாதிரி வேலை வச்சுக்காத, என் பையன எதுவும் பண்ண மாட்டான். ஆனா நான் உன்னை எங்கேயும் போய் வேலை செய்ய முடியாமல், உன்ன நடுரோட்டில் நிற்கிற மாதிரி பண்ண முடியும், பார்த்து நடந்துக்கோ என்று வீட்டிற்கு கிளம்பி விட்டார்.
லாராக்கு தனக்கு வேலை போய் விட்டது என்று கோபமும். தன்னை இத்தனை நாள் ஆராதயா ஏமாற்றி விட்டால் என்ற வெறியும். க்ரிஷ்யும் அவளும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்ற பொறாமையிலும், ஸ்டீபனுடன் அவர்களை எப்படி பிரிக்கலாம் என்று காரில் வரும்பொழுதே யோசிக்க? ஆராதயா தனியாக அவள் அப்பார்ட்மெண்ட் வீட்டு வெளியே வரவும், அவளைக் கடத்தி விட்டார்கள்.
உன் மாமியாருக்கு இவ்வளவு இருக்கக் கூடாது. ஏதோ என் மருமக என் மருமக பேசுறாங்க, அப்படி என்ன அவங்களே மயக்கிட்ட. ஏதோ அவங்க மகனை மயக்கினாலும் பரவால்ல, மாமியாரை கூட மயக்குறன உனக்கு திறமை தான்.
அதான் உன்னை யாருக்கு தெரியாம கடத்திட்டு உன் கதையை முடிக்கலான்னு பிளான் பண்ணிட்டேன். நீ எனக்கு அமைதியா சப்போர்ட் பண்ணுனா, கஷ்டமே இல்லாம நீ நிம்மதியா செத்திடலாம். இல்ல கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி தப்பிக்கலாம்னு முயற்சி பண்ணுனா, நீ கஷ்டப்பட்டு தான் சாகணும். என்று பாவமாக லாரா முகத்தை வைத்து சொல்ல?
ஆராதயாவுக்கு அவள் பேச்சில் பயம் வந்தாலும், தன் மாமியார் தனக்கு எவ்வளவு பெரிய சப்போர்ட் என்று புரிந்தும். எப்படியும் க்ரிஷ் வந்து என்னை காப்பாத்திடுவாங்க, அது வரையும் எப்படியாவது இவகிட்ட இருந்து தப்பிக்கணும் என்று யோசித்து அவளிடம் கெஞ்சுவது போல் நடித்தாள்.
ப்ளீஸ் லாரா என்ன விட்டுடு, நான் யார்கிட்டயும் நீ தான் எனக்கு கிடைத்திடும் சொல்ல மாட்டேன். உனக்கும் இங்க இருக்க லா, எல்லாம் தெரியும். உன்ன போலீஸ் மட்டும் கண்டுபிடிச்சிட்டாங்கன்னா, அதுக்கப்புறம் யாரு நெனச்சாலும் காப்பாத முடியாது. என்னை எப்படி கூட்டிட்டு வந்தியோ அப்படி கொண்டு போய் விட்டு, இல்லனா என் கைய மட்டும் கழட்டி விடு நானே போயிடுறேன். சத்தியமா உன்னையும், ஸ்டீபனியும் காட்டிக் கொடுக்க மாட்டேன். நான் இந்த ஊரில் கூட இருக்க மாட்டேன், கண்டிப்பா இந்த ஊரை விட்டு போயிடுறேன். ப்ளீஸ் நான் என் க்ரிஷ் கூட சந்தோஷமா வாழனும், இத்தனை நாள் முட்டாள்தனமா இருந்திருக்கேன். யார் மனசையும் புரிஞ்சுக்கல, நான் செஞ்ச தப்புனால தான் இப்போ உன்கிட்ட இவ்வளவு கஷ்டப்படுறேன். ப்ளீஸ் என்ன விட்று அவளிடம் கைப்பு கூப்பி கேட்க.
லாரா நீ இப்படி கெஞ்சுறது கேக்க நல்லா தான் இருக்கு. எனக்கும் உன்ன பார்த்தா பாவமா தான் இருக்கு, பட் இருந்தாலும் என்ன பண்ண உன்னை எப்படியாவது க்ரிஷ் கிட்ட இருந்து பிரிக்கணுமே. வேணும்னா உன்ன கொல்லாம வேற எதுனா பண்ணலாமா என்று யோசிச்சிட்டு வரேன், என்று அவள் சிறிது வெளியே போகவும்.
ஆராதயா ஒரு பெரும் மூச்சை விட்டு, தன் முட்டாள் தனத்தை நினைத்து இப்போ வருந்த நேரம் இல்லை. எப்படியாவது இங்கிருந்து தப்பிக்கணும் என்று ஏதாவது வழி கிடைக்க தான் என்று சுத்தி சுத்தி பார்க்க, தப்பிப்பதற்கு அங்கே இருக்கும் கதவை தவிர வேறு எதுவுமே இல்லை. அந்த லப்போ உபயோகிக்காமல், பல வருடமாக பூட்டி வைக்கப்பட்டிருப்பது போல் இருந்தது. தன்னை நிதானப்படுத்திக் கொண்டு யோசிக்கும் பொழுது தன்னுடைய போன் ஞாபகம் வந்தது. தன் பேண்ட் பாக்கெட்டில் அவளுடைய போன் இருக்கவும், அதை அசைத்த அசைத்து எடுத்து
கஷ்டப்பட்டு தன்னுடைய போன் ஓப்பன் பண்ண முயற்சிக்கும்பொழுது, அவளுடைய போன் பாஸ்வேர்ட் கேட்க? அதை கஷ்டப்பட்டு போட்டு போனை திறந்து தன்னுடைய வாட்ஸ் அப்பில் இருந்து க்ரிஸ்க்கு லைவ் லொகேஷனை ஷேர் செய்து, கால் பண்ணாத ப்ளீஸ் எப்படியாவது வந்து காப்பாத்திடு என்று தன்னுடைய போனை சைலன்டில் போட்டுதான், பாக்கெட்டில் மீண்டும் வைக்க.
கதவை திறந்து கொண்டு லாரா வந்தாள். நீ இவ்ளோ கெஞ்சுரதுனால, உனக்கு ஒரு சின்ன ஆபர் பண்ணலாம்னு யோசிச்சு இருக்கேன் என்னன்னு கேளு?
தயங்கிக் கொண்டு லாரா என்ன விட்டுட்டு. நான் யார்கிட்டயும் ஒன்னு சொல்ல மாட்டேன். திரும்ப அதையே சொல்ல.
நீ சொன்ன மாதிரி உன்ன விட தான் போறேன். ஆனா நீ அழகா இருக்க தானே உன் மாமியாருக்கும் திமிரு, நீ அழகா இருக்க தானே உன் அழகுல மயங்கி தானே அந்த க்ரிஷ் உன் பின்னாடி வரேன். என்று அவள் முகத்தை விரல் கொண்டு தடவ!
ஆராதயாவுக்கு அவள் தொடுகை அருவருப்பாக இருந்தது. அதை அவளால் வெளி காட்டாமல் அவள் முகத்தை உற்றுப் பார்க்க.
லாரா சிரித்துக் கொண்டே, ஒரு கண்ணாடி கூப்பியை எடுக்க. அசிட் லிக்விடை அவள் கண் முன்னாள் காட்டினாள். இது என்னன்னு தெரியுதா?
ஆராதயா மௌனமாக இல்லை என்ற தலை அசைக்க.
ஆசிட்ட்ட் என்று சந்தோஷமாக சொல்ல, உங்க ஊர்ல தான் ஆசிட் அடிக்கிறது எல்லாம் சகஜமாச்சே. அதான் அதே ஏன் உனக்கு பண்ண கூடாது, நீ அழகா இருக்கனால தானே உன் பின்னாடி க்ரிஷ் வரான். இப்ப இத உன் மூஞ்சில ஊத்திட்டா, நீ அசிங்கமா யாரும் பாக்க முடியாத அளவு இருப்ப. அப்போ க்ரிஷ் இல்ல வேற யாருமே உன்னை பார்க்க மாட்டாங்க. என்று அகோரமாக சிரித்து அவள் முகத்தில் ஊற்ற வர.
ஆராதயா பயந்து கொண்டு, ப்ளீஸ் வேண்டம் லாரா விட்டுரு என்ன. எனக்கு பயமா இருக்கு, ப்ளீஸ் வேண்டாம் விட்ற்று என் பக்கத்தில் அதை கொண்டு வராத என்று கத்த.
சிரித்துக் கொண்டே இந்த சத்தம் பத்தாது, இப்பதான் என் மனசுக்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் சத்தமா கத்து, என்று அவள் சத்தத்தை ரசித்துக்கொண்டே அவள் முகத்தில் ஆசிட் உற்ற போனாள்.
ஆராதயாவை க்ரிஷ் வந்து காப்பாற்றுவான்? இல்லை அவள் முகத்தில் லாரா அசிட்டை ஊற்றி விடுவாளா? பார்க்கலாம் யாருக்கு வெற்றி என்று.
