திமிரழகே உன்இதழ் மென்மையை தீண்டவா

திமிரழகே உன்இதழ் மென்மையை தீண்டவா

திமிரழகே  உன்இதழ் மென்மையை தீண்டவா

திமிரழகே உன்இதழ் மென்மையை தீண்டவா

திமிரழகே  உன்இதழ் மென்மையை தீண்டவா

திமிரழகே உன்இதழ் மென்மையை தீண்டவா

அத்யாயம் – 7

              அழகாய் ஒளிவீசிடும் செங்கதிரின் ஸ்பரிசம் உலகெங்கும் பரவ தொடங்கிய நேரம் …….!பொழுது நன்றாக புலர்ந்துவிட்டது என்பதை உணர்த்திய நிமிடம் …….!!!
                  ‘ரோஸி’ என வேகமாக அழைத்த வித்யபூரணி தன் நான்கு வயது மகளை தேடி வந்தார் . கூப்பிட்ட அழைப்பிற்கு வந்த வேலை செய்யும் பெண் ரோஸியிடம் ‘ வர்ஷியை பார்த்தியா ம்மா ‘ என்று தேடலுடன் கேட்க .

                    கண்களை சுருக்கி யோசித்தவள் ‘நோ மேடம்’ என தலையை மேலும் கீழும் அசைத்தாள் பதட்டத்தில் ‌. ஹயோ நீ என்னவிட இப்படி பதட்டப்படுறியே சரி இங்க தான் எங்கயாவது விளையாடிட்டு இருப்பா வாலு …….எப்போ பாரு என்னைய தேடி அழையவைக்கிறதே வேலையா வச்சிருக்கா என வர்ஷியை செல்லமாக திட்டியபடி கண்களால் வீட்டை சுற்றி அளசினார் வித்யபூரணி . அதே சமயம் வீட்டின் உள்ளே நுழைந்தார் வேதாந்த். அதனையும் கவனித்துக்கொண்டிருந்தாள் மோனாலிஷா .

                 ‘என்னம்மா யார இப்படி தேடிட்டு இருக்க’ என்கிற ரீதியில் பார்வையை செலுத்தினார் வேதாந்த். எல்லாம் வர்ஷியை தான் தேடிட்டு இருக்கேன் ……நைட் அந்த பொண்ண உங்க கூட அனுப்பி வச்சதுக்கு அப்றமா தான் காணோங்க . நானும் அவ விளையாடுற டாய் ரூம் ‌…..எல்லா இடத்துலையும் பார்த்துட்டேன் இனி பாக்கி இருக்கிறது உதயாவோட ரூம் மட்டும் தான் என்றார் அழுத்துக்கொண்டு எப்படியும் வர்ஷி அவன் அரையில் இருக்கமாட்டாள் என்கிற நம்பிக்கையில் கூறினார் .

                 முழுபோதை தெளிந்தவுடன் கண்களை திறந்தான் சாஹித்ய உதயதேவன் .  விழிகளால் தன்னை சுற்றியும் பார்க்க மதுபாட்டில்கள் உடைந்து கண்ணாடி துண்டுகள் சிதறி கிடக்க ஆங்காங்கே இரத்த துளிகளும் பொட்டு பொட்டாக காட்சியளித்தது …….
எல்லாவற்றையும் பார்த்தவன் மூளைக்கு அனைத்தும் நினைவு திரும்பிட சய்ராவை தேடியவன் எழுந்து கொள்ள முயற்சி செய்ய …….ஏதோ உணர்ந்தவன் தன் மீது உற்று நோக்க ‘வர்ஷிதா …..நன்றாக அவனை கட்டிபிடித்து புஸ் புஸென மூச்சுவிட்டவாறு தூங்கிக்கொண்டிருந்தாள் ‘.
                 
               அவ்வளவு தான் கோவம் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைக்கு ஏறிய நிமிடம் ஏய் …..என வேகமாக கத்தினான் வர்ஷியை கண்டு . அக்குழந்தைக்கோ விழுக்கென்று தூக்கிப்போட திடுதிடுமென எழுந்து நிற்க பிதாபிதாவென முழித்தவள் அவன் மிரட்டிய பயத்தில் அவ்விடத்திலே உச்சா போய்விட்டாள் .
          
                   சிறு குழந்தையின் செயலால் மேலும் எரிச்சல் அடைந்தவன் மணியை பார்க்க ‘ எட்டு என காட்டி சிரித்தது முற்கள் ‘ . வர்ஷி தன் அண்ணனை மேலும் கீழும் விழிகளை உருட்டி பார்த்தபடி நின்றாள் . ஏய் …..ஏய் கொஞ்சம் கூட அறிவு இல்ல உன்ன யாரு என்னோட ரூம்க்குள்ள விட்டது இடியட் …….! என கடுமையாக வர்ஷியை திட்டியவன் அவளின் பிஞ்சுக்கையை இறுக்கி பிடித்து கதவை முழுதாக திறந்து சிறு குழந்தை என்றும் பாராமல் இரக்கமே இன்றி வெளியே தள்ளிவிட்டு கதவை இழுத்து சாத்தினான் உதயா .

                   மம்மி …..என ஒய்யென்று அழ ஆரம்பித்த வர்ஷியின் குரல் கேட்டு சடாரென கதவை திறந்து  ‘ தரையில் அமர்ந்தபடி வலியால் அழத்தொடங்கிய வர்ஷியை ……புருவம் உயர்த்தி தன் பார்வையால் முறைத்து உதயா அதட்டிவிட்டு செல்லவும் ‘ மூச்சுவிடாமல் வாயை மூடிக்கொண்டது குழந்தை .

               வர்ஷி குட்டிம்மா …..என்கிற அழைப்போடு உதயா அரையின் முன்பாக தரையில் படுத்திருந்த தன் மகளை கண்டு வேகமாக ஓடிவந்து அவளை தூக்கிக்கொண்டு ‘ வர்ஷிம்மா ….நீ எப்படி இங்க வந்த என சந்தேகமாய் கேட்ட வித்யபூரணிக்கு அப்போது தான் தெரிந்தது மகள் ட்ரஸ்லையே பாத்ரூம் போய் இருக்கிறாள் என்பது . அடிப்பாவி …என்னாடி ஆச்சு ஒருநாளும் இப்படி பன்னமாட்டியே இன்னைக்கு ஏன் இந்த மாதிரி ஆச்சு …..நைட் முழுசா எங்க போன என பல கேள்விகளை கேட்டவாறு அவளை தோளில் போட்டு வித்யபூரணி தூக்கிச்செல்ல..அவளின் குட்டி கண்களோ கலங்கி இருக்க சிமிட்டாது உதயாவின் அரையையே நோக்கினாள்.

             ரோஸி ……உதயா எழுந்ததும் நீ போய் அவனோட ரூம க்ளீன் பன்னிடு..! கொஞ்சம் பார்த்து பன்னு கண்ணாடி துண்டா கடக்கும் என்றுவிட்டு வர்ஷிக்கு உடைமாற்ற சென்றார் வித்யபூரணி . வேதாந்த் தனது அரையில் தலைவலி என படுத்திருந்தவர் ‘ உதயா ஏன் அந்த சின்ன பெண்ணிடம் மனசாட்சி இன்றி இத்தனை கொடூர மிருகமாக நடந்துகொண்டான்……’ என யோசித்தவருக்கு தன்னை அடித்தது பற்றி கூட கவலைப்படாமல் போனார் .

             நாவில் எச்சிலை முழுங்கிய ரோஸி ….! ஸ்கர்ட்டை கீழே நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு ‘மே ஐ கம் இன் சார்’ என வார்த்தைகள் திக்கிக்கொள்ள கண்ணாடி கதவில் தன் ஒருவிரல் கொண்டு தட்டினாள் ஒருகையில் தரையை சுத்தம் செய்யும் சிறு வண்டியில் அணைத்து பொருட்களையும் வைத்த நிலையில் .

                    சில நிமிடங்கள் கழித்து ‘ யாஹ் கம் இன்சைட் ‘ என்னும் பதில் உதயாவிடம் இருந்து வரவே . பயம் பீடித்துக்கொள்ள சிறு தைரியத்தோடு கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் ரோஸி ……..! சரியாக அவனும் குளித்துவிட்டு வந்தவன் கண்ணாடி முன்பாக நின்று தன் உடம்பை பார்த்தவனுக்கு கோவம் தான் வந்தது தோளில் பெண்ணவள் கண்ணாடியால் கிழித்த காயத்தை கண்டு .

               மதம் பிடித்த யானை போல் மாறியவன் கண்கள் கோவத்தின் உஷ்ணத்தில் நெருப்பாய் கொதிக்க ………! எதிரே அதீத பயத்தோடு நின்ற ரோஸி அவனிடம் ‘ சார்ர்ர் …..ரூம் க்ளீன் பன்ன…..ட்டு‌..மா ‌…’என தட்டுத்தடுமாறி கேட்டவளை நோக்கி சட்டென திரும்பினான் உதயா .

               அதில் ரோஸியின் உடம்பு நடுங்கியது ….! சார்ர்ர் என அழைத்தவளை இமைக்காது பார்த்த உதயாவிற்கு ஏனோ ‘ அவளின் ஆடை முட்டிவரை இருப்பதை காண்பதற்கும்… சிறு பெண் போல் இருந்த உருவமும்……எடுத்துக்காட்டியது சய்ரா தேன்நிலவாக ‘ தெரிந்தாள் .ரோஸி வெளிநாட்டு பெண் …..அவளது ஆடைக்கும் கலாசாரத்திற்கும் முழு சுதந்திரம் கொடுத்திருந்தார் வித்யபூரணி . மேலும் ரோஸிக்கு இம்மாதிரியான உடைகளை அணிவது மிகவும் பிடித்தது ஷாப்பிங் செல்லும் அவளுடைய கலெக்ஷன்களே இப்படி தான் இருக்கும் …..வித்யபூரணியும் சிரித்துவிட்டு அவளது இஷ்டம் என விட்டுவிடுவார் .

              தன்னிடம் இருந்து தப்பித்தவளை நினைக்க நினைக்க அதனை ஏற்றுக்கொள்ள முடியாதவன் நொடியில் ரோஸியை நெருங்கி’ நீ என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது ……’ என்றவன் வார்த்தைகள் தனலென தகிக்க . உதயாவின் மாற்றம் அவளை ஆடிப்போக செய்திட ‘ சார்ர் …..என வேகமாக அழைத்தாள் ‘ அவனோ சய்ரா என்கிற நினைவில் ரோஸியின் கையை பலம்கொண்டு பிடித்து தரதரவென இழுத்துச்சென்றவன் அவளை பெட்டில் அதிவேகமாய் தள்ளினான் .

                 நினைக்காத தெய்வத்தை எல்லாம் வேண்டியவள் கால்களை உரசினான் ……..! கயவன் . சார்ர்‌ ப்லீஸ் சார் ….என கெஞ்சியவளின் குரலையும் முகத்தையும் நன்றாக கவனித்தவன் ஒருதரம் கண்களை மூடி திறந்து காண…..எரிச்சல் அடைந்து ரோஸியின் கன்னத்தில் ‘பளார்’ என ஒரு அறையை இழுத்துவிட்டான். அவளோ வாங்கிய அறையில் சுருண்டு பெட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டாள் ….கெட் அவுட் என அவ்விடம் அதிரும் அளவிற்கு கத்தியவன் குரல் வித்யபூரணியின் செவிகளுக்கே எட்டிவிட்டது .

            சடசடவென சாரல் மழையாக அருவியாய் கொட்டிடும் நீர் வீழ்ச்சி !  பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்ல காண்பதற்கே சொர்கம் போல் காட்சி அளித்தது அவ்விடம் . பின்னே அகஷ்தியா நதி மற்றும் சய்ராவதம் நதி இரண்டும் ஒரே இடத்தில் ஒன்றாக இணைந்து வற்றாத நீர்வீழ்ச்சியாக கொட்டினாள் எப்படி இருக்கும் பேரழகே வியந்து போக கண்ணை கவர்ந்திழுத்தது . 

                   அதன் அடிவாரத்தில் கொட்டும் நீரில் நனைந்து இரண்டு நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியின் ஆர்பரிப்பாய் சோப்பு போட்டு குளித்துக்கொண்டிருந்தான் ருத்ரா . ஏனோ முகத்தில் படிந்திருந்த அழுக்கெல்லாம் கரைந்துவிட இப்பொழுது அழகாக இருந்தான் அவனின் சந்தோஷதிற்கு காரணம் இருக்கிறது அல்லவா .

       அந்த பக்கம் வந்த ஊர்காரர்கள் …….!
                டேய் ருத்ரா என்னடா எப்போ வந்த ஊருக்குள்ள காலங்காத்தாலையே சோப்பெல்லாம் போட்டு மணக்க மணக்க குளிச்சிட்டு இருக்கவன்
….! சிவபெருமான் கனவுல வந்து புத்திமதி சொன்னாரா டா என ஒருவன் எகத்தாளமாக பேசிட. மற்றொருவன் ‘ உனக்கு தெரியாதா நம்ப ருத்ரா …….ராமலிங்கம் பொண்ண காதலிக்கிறான்’ இப்போ பொண்ணு வேற இத்தனை வருசம் கழிச்சு வயசுக்கு வந்துடுச்சு அதான் ருத்ராவுக்கு சந்தோஷம் . நான் சொல்றது சரிதான என கேட்டபடி அருவியில் குளித்து கொண்டிருந்தவனை பார்க்க …….அவனோ அங்கு இல்லை .

                    அட நீங்க வேறப்பா …என மூன்றாமவன் சொல்லிட ‘ அந்த பொண்ண தான் நம்ப ஊர வாங்குன பாவி பய நேத்து நைட்டு தூக்கிட்டு போய் வச்சிருந்தான்னு ஒருபக்கம் சொல்லிட்டு இருக்காங்க இதுல உண்மை எது பொய் எதுனே தெரியமாட்டிக்குது ஆனா ஒன்னு பொண்ணு நல்லா நச்சுன்னு இருக்குப்பா …..பார்த்தா எவனுக்காவது இருந்தாலும் ஆசை வரத்தான செய்யும் அந்தளவுக்கு ஒட்டுமொத்த அழகையும் அந்த புள்ளைக்கே கடவுள் கொடுத்து வச்சிருக்கார் ….பத்தாததுக்கு வயசுக்கு வேற வந்துருச்சு’….என்று முழுதாக அவன் கூறி முடிக்கும் முன்பே
                பட்டென அவர் வாயில் வந்து விழுந்த குத்தால் பல் எல்லாம் உடைந்து தெரிக்க …..நரம்பெல்லாம் ஜிவ்வென்று இழுக்க …இரத்தம் பீய்த்துகொண்டு தெளித்தது ருத்ரா விட்ட ஒரு அடியின் தாக்கம் .
   
                      மூன்றாமவன் அடிவாங்கி மயக்கம்போட்டு கீழே விழவும் மற்ற இருவரும் வாயை பொத்திக்கொண்டு நிற்க . தலையை சிலுப்பிய ருத்ரா மூவரிடமும் ” தேனம்மா …என்னோட உசுரு இனி எவனாவது தேனம்மாவ தப்பா பார்த்திங்க அத்தனை பேருக்கும் சமாதி கட்டிடுவேன் இது அந்த சிவபெருமான் மேல நான் செஞ்சிக்கொடுக்குற வாக்கு ..! என்று கத்தியவன் குரலில் பறந்து சென்ற பறவை கூட்டங்களே அதிர்ந்து நாளா புறமும் சிதறி பறந்து சென்றன .

              தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்தவன் கீழே விழுந்து கிடந்தவரின் வேஷ்டியை நீக்கி அவரின் தொடையில் தன்னுடைய அகன்ற முட்டிகாலை வைத்து அழுத்தினான் …….மனிதருக்கு உயிர் போக . கையில் பிடித்திருந்த கத்தியை கொண்டு ‘ தேனம்மாவ இந்த கண்ணு தான தப்பா பார்த்துச்சு…….இனி குருடா தான் நீ இருக்கனும் அதுதான் சிவருத்ரன் உனக்கு கொடுக்கற முடிவு என கர்ஜித்தப்படி அவரின் இரண்டு கண்களையும் கத்தியை கொண்டு குத்தி கிழித்தான் ….இரத்தம் ருத்ரா முகத்தில் பட எவ்வித சளனமும் இன்றி எழுந்தவன் நேராக கொட்டும் அருவியில் கையை நீட்டி தண்ணீரை பிடித்து முகத்தில் தெளித்து கழுவினான் .

                   கண்ணை இழந்து கிடந்தவரை அப்படியே விட்டுவிட்டு தலைதெறிக்க ஊருக்குள் ஓடியே விட்டனர்.

               ஊரின் தொடக்கத்தில் இரண்டு பெட்டியை தூக்கமுடியாது இழுத்துவந்து அங்கே நின்றிருந்த உதயாவின் கார்ட்ஸ் இருவரிடம் வைத்துவிட்டு ‘ உங்க கேடுகெட்ட முதலாளிக்கிட்ட போய் சொல்லுங்க ……! பாலாபோன பணத்தை வச்சி எதையும் வாங்கமுடியாது அப்படின்னு ….’ என்று தெளிவாக சொல்லிவிட்டு தன் வீட்டை நோக்கி நடந்தார் ராமலிங்கம் .

               எந்த கடவுளின் கருணையோ தன் மகள் ஊராரின் வசையில் இருந்து மீண்டு வயதுக்கு வந்துவிட்டதை நினைத்து சந்தோஷப்படுவதா‌ இல்லை இனிமேல் என்ன நடக்கபோகும் என்பது தெரியாமல் வருத்தப்படுவதா‌ என யோசித்தவாறு நின்ற சுசீலாவை அழைத்தார்கள் பெண்கள் .
                சுசீலா ….நீ பாட்டுக்கு எதையோ யோசிச்சிட்டு இருக்கவ.என்ன பொண்ணு வயசுக்கு வந்துட்டா எந்த வீராதி வீரன் வந்து நம்ப வீட்டு பொண்ண கல்யாணம் பன்னி கூட்டிட்டு போவான்னு தான…..கவலையே படாத நம்ப தேன்நிலவ பாரு என சிந்துஜா என்னும் பெண் கூறிட .அவரும் தன் மகளை நோக்கினார்

            மரச்சேரில் ……அழகான மயில் போன்று புத்தம் புது மலராய் அணைவரின் கண்பட துண்டை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த சய்ரா தேன்நிலவின் தலை மீது  சுற்றியும் நின்றிருந்த பெண்கள் சல்லடையை தூக்கி பிடித்துக்கொள்ள ” அதன் வழியே மஞ்சல் நீரை ஊற்றினார்கள் …..அந்நீர் பெண்ணவளின் மீது மழைத்துளிகள் போல் சாரல் கீற்றாக வந்து விழுந்தது …..! “

                    முன்பை விட அழகானது மெருகேறிப்போய் இருக்க …..! தன்னை முதன் முதலாக புதிதாக உணர்ந்தவள் விழிகளில் ஏதோ ஒரு வித்யாசம் ; மென் இதழ்களில் நேற்று நடந்த அனைத்தையும் அம்மா அப்பாவின் அரவணைப்பில் மறந்த புன்னகை .   முதுகில் ஏற்பட்ட காயம் வலியை ஏற்படுத்தினாலும் அன்னையின் முகத்தில் இத்தனை வருடங்களுக்கு பிறகு பூரண சந்தோஷம் கிட்டும்போது வலி எல்லாம் திசையறியாது சென்றது ‌.

          வயசுக்கு வந்த பொண்ணையும் வாளத்தண்டையும் அதிக நாளு வூட்டுல வச்சிருக்க கூடாது ……எங்க வூட்டு மகாலட்சுமியை கட்டிக்க போறவன் எந்த சீமையில இருக்கானோ! எப்போ வருவானோ ! என ஒரு வயதான பாட்டி பெண்ணவளின் பட்டுபோன்ற கன்னத்தில் கைவைத்து கூறிட .எல்லோரும் சிரித்துவிட்டார்கள். சய்ரா நேற்று இரவு நடந்த அனைத்தையும் அம்மா அப்பாவிடம் ஒன்றுவிடாமல் கூறியதன் காரணமாக  அவளை பெற்ற கணவன் மனைவிக்கும் உள்ளம் பயத்துடன் காணப்பட்டது எங்கே மீண்டும் அந்த படுபாவி தங்கள் பொண்ணை நெருங்கிவிடுவானோ என்கிற சளனம்.

            அவளிடம் மயில்தோகை நிறத்தில் தாவணியை கொடுத்து கட்டிவரச்சொல்லி சில பெண்கள் காத்திருக்க .
             தேனு…ஏண்டி இப்படி சோகமாவே இருக்க…இங்க பாரு எதையும் மனசுல நினைச்சு வீணா குழப்பிக்கிட்டு இருக்காத . எப்பவும் ஆட்டம் போட்டுகிட்டு துருதுருன்னு சிரிச்சிட்டே எல்லாரையும் மிரட்டிட்டு இருக்க தேன்னு தான் எனக்கு வேணும் என்று காயத்ரி கடகடவென சொல்ல …..!
 
                    துண்டை அவிழ்த்தாள் தாவணியை எடுத்து தன் தேகத்தில் கட்டிக்கொண்டு கண்ணாடியில் தன் பூமுகத்தை பார்த்து வானவில் பொறாமை படும் அளவிற்கு அழகாய் வளைந்திருந்த இருப்புருவங்களுக்கு மத்தியில் சிறு கல் பொட்டை வைத்துக்கொண்டு ……திரும்பிய சய்ரா தேன்நிலவின் கூந்தலில் சொட்டிய நீர் காயத்ரியின் முகத்தில் பட்டது . ‘காயு…இப்போ இந்த தேன்னு ஓக்கே வா’ என சொல்லி கண்ணடித்தவளை தன்னை மறந்து இரசித்து பார்த்தாள் காயத்ரி உண்மையில் இப்பொழுது சய்ரா தேன்நிலவு புதிதான தோற்றத்துடன் தெரிந்தாள் . அங்கே வந்த பெண்மணிகள் பெண்ணவளை தனியறையில் அமரவைக்க அழைத்துச் சென்றார்கள் .

             ” டேட் …நீ பொய் சொல்லி இருந்தா இந்த கோப்ரா உங்கள கடிக்கும் ! உண்மைய சொல்லி இருந்தா கடிக்காது டேட் …” என தனக்கு முன்பாக இருந்த நாகபாம்பை தாங்கிய கண்ணாடி பெட்டியில் வேதாந்த்தின் இடது கையை வழுக்கட்டாயமாக நுழைக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தான் உதயா .
                    அவரோ பயத்தில் சிக்கிதவிக்க ‘ உதயா…நிஜமாதான் சொல்றேன் அந்த பொண்ணு தான் தப்பிச்சு போனுது நான் எதுமே பன்னல உதயா …….என மகனிடம் வேறு வழியில்லாமல் பொய் உரைத்து கெஞ்சினார் பாம்பு கொத்தி விடுமோ என்கிற பயம் காரணமாக .

                   இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வித்யபூரணி சிலையாக நிற்க …..!
           டேட் …இப்போ வெனா நீ அவள என்கிட்ட இருந்து காப்பாத்தி அனுப்பி இருக்கலாம் ஆனா …….நாளைக்கு முடியாது . அதே மாதிரி உதயாகிட்ட இருந்து எஸ்கேப் ஆனவள அனு அனுவா துடிக்க துடிக்க கொஞ்சம் கொஞ்சமா  முழுசா நான் எடுக்காம விடமாட்டேன் …!

                   என்று‌ கத்தியவன் அவரின் கையை வெளியே எடுத்துவிட்டு ‌‌……! தனது கையை உள்ளே விட்டு பாம்பின் தலையை பிடித்து வெளியே இழுத்தவன் தன்னுடைய துப்பாக்கியால் அதன் தலையில் நச்சென்று புல்லட்டை அதீத கோபத்துடன் சூட் செய்துவிட்டு அங்கிருந்து சென்றான் ……! பாவம் வாயில்லாத ஜீவனான நாகப்பாம்பின் உயிர் போனது ‌‌….அதனுடன் வேதாந்தின் பாதி உயிர் போனமாதிரி ஒரு உணர்வு ஆழ்மனதில் உண்டானது .
.
                  தனது ஹெலிகாப்டரில் ஏறிய சாஹித்ய உதயதேவன் ” இன்று நடக்கவிருக்கும் பிஸ்னஸ் சப்மிட் கான்பரென்ஸ் மீட்டிங்க்கு ” சென்றான் …….! நாளைய இரவோ பகலோ ஒருமணிநேரம் சய்ரா தேன்நிலவோடு தான் என்கிற எண்ணத்தில் .
            
                மிகப்பெரிய உள்அரங்கம் ……..முக்கியமான உலகநாடுகளின் பெரிய பெரிய பிஸ்னஸ் தலைவர்கள் வருகை தந்திருந்தார்கள் .ஒவ்வொருவரும் முக்கியமாக வந்ததற்கான காரணம் “ கேலக்ஸி ஆஃப் ஸ்டார் எம்என்சியின் எம்‌.டி சாஹித்ய உதயதேவனை நேரில் காண்பதற்காக ” .அவனை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் ஆணவனை நேரில் பார்த்தது ஒருசில பேர் மட்டுமே .

                 மேலும் இன்று ஒரு மிகப்பெரிய சியூகல் நிறுவனத்தை வாங்கப்போகும் நிறுவனம் எது ? என்ற கேள்வியும் எல்லோர் மனதிலும் இருக்கவே ……! அந்நிறுவனத்தின் ஓனர்கள் “ரிச்சர்ட் எரிகாம் மற்றும் ஆக்வஸ் தாமஸ் ” இருவரும் முக்கியமான விசயத்தை ஆலோசித்து கொண்டிருக்க ….! இறுதியாக முடிவெடுத்துவிட்டார்கள் .
    
                 நயக்ரயா முகுந்தன் வெகுநேரமாக தங்கள் எம்.டி வருகையை எதிர்பார்த்துக்காத்து கொண்டிருந்தாள் .

          மென்மையை தீண்டவா.

   பிடித்திருந்தால் படித்து விட்டு கமெண்ட் செய்ங்க ஃப்ரண்ட்ஸ் 🤗🍁💐💖💖💖💖

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *