தித்திக்கும் தீ நீயடா
தித்திக்கும் தீ நீயடா 14
இனியன் மஞ்சரியிடம் சேர்ந்து வாழ அழைக்கும்போது எல்லாம் இப்படியும் அப்படியுமாக அவள் மறுத்து கொண்டே இருக்க அவனும் செய்த அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிந்தது. சுதீப்பும் இன்பாவும் தங்கள் காதலில் அழுத்தமாக முன்னேறி சென்றுகொண்டு இருக்க.
மஞ்சரியும் இனியனும் மட்டும் எந்த வித முன்னேற்றமும் மாற்றமும் இல்லாமல் சண்டைகோழி போலவே திரிந்து கொண்டு இருந்தனர். ஆறுமாதங்கள் கடந்து இவர்களின் திருமண நாளும் வந்து சேர்ந்திருக்க அன்று காலையில் இனியன் அவளுக்கு வாழ்த்து சொல்லி தொலைபேசியில் அழைத்தான்.
அவளோ இந்த திருமணத்துக்கு வாழ்த்து ஒன்று தான் குறைச்சல் என்று திட்டிவிட்டு போனை வைக்க போக இனியன் இதுவரை கெஞ்சி கொஞ்சி கேட்டும் அவளிடம் தன்னுடைய பாட்சா பலிக்கவில்லை ஆதலால் இனிமேல் மீண்டும் ஏதாவது தில்லுமுல்லு செய்து தான் அவளை தன்னிடம் வரவழைக்க வேண்டும் என்று நினைத்து அவளுக்கு அலைபேசியில் மீண்டும் அழைத்தான்.
அவள் எடுத்ததும் “மஞ்சரி இதுவரைக்கும் நீ என்னை என்னிக்காவது மன்னிச்சு ஏற்றுகொள்ள வருவா அப்படின்னு நினைத்து தான் உனக்காக நான் காத்துட்டு இருந்தேன் அனால் இப்போ நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருசம் ஆகியும் உன்னோட கோபம் குறையவே இல்லை சோ இனிமேலும் உன்கிட்ட கெஞ்சிக்கிட்டு நிற்பது சரியாக வரும்னு எனக்கு தோணலை
இனிமேல் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன் உன்னோட விருப்பபடி உன் வாழ்கையை நீ அமைத்து கொள்ளலாம் நானும் எனக்கும் என் குடும்பத்துக்கும் ஏற்ற ஒரு பொண்ணை தேர்ந்து எடுக்க சொல்லி என்னோட அம்மாகிட்ட சொல்லிட்டேன்
இல்லேன்னா அந்த சுபிக்ஷா கிட்ட கூட பேசி பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்துட்டேன் நானும் எவ்வளவு நாளைக்கு உன்னை நினைச்சுட்டு இருப்பது..
நீ என்னோட பின்னால் சுற்றி சுற்றி வந்தப்போ எல்லாம் வராத காதல் எப்போ வந்ததுன்னு நீ கேட்கலாம்.. ஆனால் உன்னை அப்போவே எனக்கு உள்ளுக்குள் பிடிச்சு இருந்து இருக்கு அதனால் தான் அப்போவே ஏதேதோ பொய்யான காரணங்கள் சொல்லி உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லி இருந்து இருக்கேன்.
என்னக்கு பிடிக்காத ஒன்னை யாரு வற்புறுத்தினாலும் நான் எப்போதும் செஞ்சதே இல்லை.. உன்னை கல்யாணம் செஞ்சது கூட உன்னோட வற்புறுத்தல் தான் னு நெனச்சு தான் முதலில் லூசுதனமா சில தப்பு செஞ்சேன் பிறகு அதை எல்லாம் உணர்ந்து உங்கிட்ட வரும்போது என்னோட தப்புகள் சரி பண்ண முடியாத நிலைமைக்கு போயிருச்சு
நான் இப்போவும் சொல்றேன் உன்னோட அப்பா ஜெயிலுக்கு போக வேண்டியவர் தான் அதில் இப்போவும் எப்போவும் என்பக்கம் எந்த மாற்றமும் இருக்காது ஆனால் உன்னை பகடைக்காயாக மாற்றி பயன்படுத்திகொண்ட செயல் தப்புன்னு மட்டும் என்னால நிச்சயமா ஒத்துகிட்டு மன்னிப்பு கேட்க முடியும்.
இப்போவும் சொல்றேன் நான் உன்னை அப்படி சொல்லி போக சொன்னது தப்பு தான் ரொம்ப தப்பு ஆனால் உன்னை மனசார நான் போக சொல்லவே இல்லை.. நீ இப்போவும் எனக்கும் என்னோட வாழ்க்கைக்கும் வேனும்னு தோணுது அதனால் தான் உன்கிட்ட இப்போவும் கெஞ்சிக்கொண்டு கிடக்கிறேன்” என்றான்.
மஞ்சரியோ இத்தனை வாக்கியத்தையும் விட்டு விட்டு “ஒ அப்போ புதுசா வேறு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்துகொள்ள போறீங்க போல ம்ம் சரி பொண்ணு யாரு?” என்று எகத்தாளமாக கேட்க
அவனும் இத்தனை நாளாக வித விதமாக மஞ்சரியிடம் மன்னிப்பு கேட்டும் கிடைக்காமல் போன எரிச்சலில் “அது நானும் அவளும் இன்னைக்கு காப்பி சாப்ல மீட் பண்ண போறோம் நீயே வந்து யாரு என்னனு பார்த்துக்கோ.. சோ அந்த பொண்ணு என்னோட வாழ்கையில் வருவதில் உனக்கு ஒரு பிரச்னையும் இல்லை சரிதானே..
அப்போ நீயே அந்த பொண்ணு யாருன்னு வந்து பார்த்துட்டு உனக்கும் ஓகேவா இல்லை எனக்கு பொருத்தமா இருப்பாளானு பார்த்து சொலிட்டா எனக்கும் ஒரு உதவியாக இருக்கும்” என்று சீரியசாக பேசினான் .
அவனது உறுதியான பேச்சில் சற்று குழம்பினாலும் ஏற்கனவே இவன் செய்யும் பொய்யும் பிராடுதனமும் அவளுக்கு பழகி போன ஒன்றாக இருப்பதால் “ஓகே நீங்க இந்த தடவையும் அதே பழைய பல்லவியை பாடாமல் தொல்லையை முடிகிறேன்னு சொலிட்டு இருக்கீங்க அதனால் நானே உங்களுக்கு அந்த பொண்ணை பேசி முடிச்சு வைக்கிறேன் எதனை மன்னிக்கு வரணும்னு சொல்லுங்க” என்றவள் மனதுக்குள் இனியன் ஒருவேளை உண்மையாக தன்னை விட்டு விட்டு போக நினைகிறானோ? என்ற எண்ணம் சற்று பயத்தை கொடுத்தது.
அதனை வெளியில் காட்டிக்கொண்டு அவனை மேலும் ஆட விட மனமற்று அவனிடம் மேதாவியாக பேசிவிட்டு திக் திக்கென்ற மனநிலையில் அவன் சொல்லி இருந்த இடத்துக்கு சென்று காத்துகொண்டு இருந்தாள்.
அவள் வந்து சிறிது நேரத்தில் இனியனும் இன்னொரு பெண்ணும் கையை கோர்த்தபடி உள்ளே நுழைய மஞ்சரியின் இதயம் படபடக்க துவங்கியது.. அவள் உட்கார்ந்து இருந்த நார்காலியில் இருந்து எழுந்து அவர்களை பார்த்துகொண்டு நிற்க அவனோ அங்கிருந்து இவளை நோக்கி ஹாய் என்று புன்னகை புரிந்தான்.
முன்பு பார்ப்பதை விட இப்பொழுது மிகுந்த ஸ்டைலாக உடையை தேர்வு செய்து உடற்பயிற்சியில் முருக்கேரிய புஜங்களை தெரியும் படி உடலோடு ஒட்டி இருந்த டீ சர்ட்டில் கலக்கலாக் அப்பெண்ணோடு உள்ளே நுழைய… அந்த பெண்ணோ இனியனின் காதுக்குள் எதோ மஞ்சரியை பார்த்து சொல்லிக்கொண்டே வந்தாள்.
மஞ்சரிக்கு காதில் புகை வர இருவரையும் முறைக்க முயன்று பின் அவன் பார்த்தால் என்ன நினைப்பான் என்ற எண்ணத்தில் முகத்தை சாதரணமாக மாற்றி அவர்களிடம் சிரித்த முகமாக வரவேற்று அமர்ந்தாள்.
அந்த பெண் சற்று பதற்றமாக அமர்ந்திருக்க முகமெல்லாம் வியர்த்து கொண்டிருந்தது அவளுக்கு மஞ்சரி அவளையும் இனியனையும் சந்தேகமாக பார்க்க இனியனோ அந்த அப்பெண்னின் கையை ஆதரவாக பிடித்து கொண்டு மஞ்சரியிடம் “அது நீ என்ன சொல்லுவியோன்னு கொஞ்சம்அவளுக்கு பயம் அதனால தான்” என்றான்.
அவன் இயல்பாக இருக்க மஞ்சரிக்கு தான் முள்மேல் இருப்பது போன்ற நிலை அவள் அந்த பெண்ணை பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்க இனியனோ “இவுங்க தான் என்னோட முதல் மனைவி மஞ்சரி ரெண்டு பேருக்கும் சேர்ந்து வாழ இஷ்டம் இல்லை அதனால் பிரிஞ்சுட்டோம் முயுடுவல் தான் பிரிஞ்சு இருக்கோம்..
இப்போ நல்ல நட்பாக இருக்கோம் அதனால் உங்களை பார்க்கணும் என்று கேட்டாங்க அதனால் உன்னை கூப்டுட்டு வந்து இருக்கிறேன் நீ ஒன்னும் பயப்படாத அவுங்க உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்றான்.
மஞ்சரியோ உள்ளுக்குள் அவன் மீது கனன்ற கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு சிரித்துகொண்டே “ஹாய் உங்களை சந்திச்சதில் சந்தோசம் அப்புறம் சொல்லுங்க இனியனை உங்களுக்கு எப்போது இருந்து தெரியும்?” என்று கேட்க.
அந்த பெண்ணோ “அது மேடம் சாரை எனக்கு..ஹ்ம்ம் இல்லை இல்லை இவரை எனக்கு ரெண்டு மூணு வருசமா தெரியும்.. இவர் புதுசா வேலைக்கு சேர்ந்து இருந்தபோவே இவரை தெரியும்” என்று எதுவும் உளராமல் இருக்க முயன்று எதோ சொல்லி வைத்தாள்.
மஞ்சரிக்கு சற்று சந்தேகம் ஏற்பட “ஒ இன்னமும் உங்க பேரை கூட நான் கேட்க்கவே இல்லை பாருங்க உங்க பேர் என்ன? என்னோட பேர் மஞ்சரி.. மஞ்சரி கனலினியன்” என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணின் இனியனுடன் பிணைத்து வைத்திருந்த கையை பார்க்க..
அவளும் மஞ்சரி எதிர்பார்த்ததை போன்று அந்த கையை அவனிடம் இருந்து பிரித்து மஞ்சரியின் பக்கமாக நீட்டி “என்னோட பேர் சுபிக்ஷா மேடம்” என்றாள்.
மஞ்சரியின் புருவம் ஒருமுறை ஏறி இறங்க சிரிப்பை உள்ளுக்குள் மறைத்தவள் “ஒ இனியன் உங்களோட சுபியை சொன்னது போல கண்டு பிடிச்சுட்டீங்க போல செம செம போங்க..
எப்படியோ நீங்களும் சுபியும் தான் ஒன்னு சேரணும்னு இருந்து இருக்கும் போல வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு எழுந்து கொண்டு “ஓகே இனியன் மாம்ஸ் வாழ்த்துக்கள் உங்களோட கவிதை காதலி கிடைச்சுதுக்கு கல்யாணத்துக்கு கண்டிப்பா கூப்பிடுங்க நிச்சயமா வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்ததும்
இன்று போட்ட திட்டமும் இவளிடம் தோற்று போகுமோ என்று நினைத்து அவளை இன்னமும் வெறுப்பேற்ற நினைத்தவன் மஞ்சரியை அழைத்து “ஜெரி ஒ சாரி மஞ்சரி இப்போவே கிளம்பி போனால் எப்படி நாம எல்லோரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாம் அப்போதான் நாம எந்த பிரச்சனையும் இல்லாமல் பிரிய சம்மதிக்கிரோம்னு எல்லோரும் நம்புவாங்க.. வா ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்றவன் அவளுக்கு அருகில் நின்றுகொண்டு அந்த புதிய பெண்ணையும் அழைக்க
அந்த பெண்ணோ எழுந்து அவனுக்கு அருகில் வந்து நிற்க அவர்களுடன் சேர்ந்து மஞ்சரியும் படங்களை எடுத்து கொண்டு கிளம்புகிறேன் என்று சொன்னாள். இனியனோ “ஹேய் மஞ்சரி எங்களையும் கொஞ்சம் தனியா கொஞ்சம் பிக்ஸ் எடுத்து கொடு ப்பா.. நாங்க யூஸ் பண்ணிப்போம்” என்று தொலைபேசியை நீட்ட மஞ்சரியும் ஒன்றும் சொல்லாமல் அதனை வாங்கி எடுத்து கொடுத்தாள்.
இனியனுகோ எல்லாமே விட்டு போனது மஞ்சரியை மீண்டும் எப்படியாவது சமாதானம் செய்து தன்னுடன் சேர வைத்து விடலாம் என்று திட்டம் போட.. அவளோ எதையும் கண்டு கொல்லாமல் இவ்வளவு சுலபமாக எடுத்து கொள்கிறாள்..
என்ற விசயம் அவனுக்கு பலத்த அடிதான். மஞ்சரி தன்னை நிஜமாகவே வெறுத்து விட்டாளோ என்று உறுதியாக நம்பும்படி அவளது செயல்கள் இருக்க.. அவளோ இப்போ கிளம்பி போகலாமா என்பது போல நின்றிருந்தாள்.
அவள் போக முயற்சிக்கவும் இனியனுக்கு பொறுமை காற்றில் பரக்க அவளை நெருங்கியவன் “மஞ்சரி உண்மையாவே உனக்கு என்மேல் எந்த வருதமுய்ம் வரலையா? இன்னொரு பொண்ணை கூப்டுட்டு வந்து நிக்கிறேன் நே பாட்டுக்கு போய்ட்டு இருக்க?
என்மேல் கோபம் இருக்கலாம் ஆனால் ஒரு சின்ன உரிமை உணர்வு கூடவா இல்லை?” என்று எரிச்சலாக பேச ஆரம்பிக்க..
அவளோ “ம்ம் உரிமை உணர்வு எல்லாம் வரணும் என்றால் உண்மையாக நீங்க என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க என்று எனக்கு நியாயமா புரிய வைக்கணும்னு ஏன் உங்களுக்கு தோணலை?
ஹான் நீங்க எப்போவாவது என்கிட்ட நேர்மையா இருக்கணும்னு நினைத்து இருக்கீங்களா? உங்களுக்கு என்னி உண்மையா பிடிக்குமா பிடிக்காதான்னு தெரியாமல் பைத்தியகாரி போல உங்க பின்ன சுத்திக்கிட்டு இருந்தேன்
அப்போ எல்லாம் என்னை துரத்தி அடிச்சிட்டு பிறகு கல்யணம் பண்ணிக்கலாம் சொல்லி என் உணர்வுகளோடு விளையாடிட்டு பிறகு உன் அப்பனுகாக கல்யாணம் பண்ணினேன்னு சொன்னீங்க.. அது உங்களுக்கு வேணும் என்றால் சாதரணமாக தெரியலாம் அனால் எனக்கும் என்னோட காதலுக்கும் அது எவ்வளவு பெரிய அசிங்கம்னு உங்களுக்கு ஏன் தெரியாம போச்சு?
நான் அப்படியும் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன் அப்போவாவது என்னை புரிஞ்சிக்க முயற்சி செஞ்சு இருக்கலாம் அப்போவும் நீங்க பழைய தப்ப்பையே தான் செஞ்சுட்டு இருந்தீங்க..
இப்போவும் பொய்.. எப்போவும் பொய்.. என்கிட்ட மட்டும் எதுக்கு இவ்வளவு பொய்யாக இருக்கீங்க? இதோ இவ இவளும் கூட பொய் தானே எனக்கு தெரியும்..
என்கிட்ட எப்ப்போவாவது உண்மையா என்னை நேசிகிறேன்னு உண்மையாக உணர்வோட சொல்லி இருந்தீங்க என்றால் அப்போவே உங்க கிட்ட ஓடி வந்து இருப்பேன்.. ஆனால் நீங்க பேரில் மட்டும் தான் உண்மையின் சிகரம் பொண்டாட்டி கிட்ட மட்டும் எப்பொதும் பொய் பொய் பொய் மட்டும் தான்” என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து விலகி சென்றாள்.
இனியன் அவள் பின்னாலே சென்றவன் அவளது வழியை மறித்துக்கொண்டு “சாரி டி உங்கிட்ட பொய்யா நடிக்கணும் எல்லாம் என்னோட எண்ணம் கிடையாது ஆனால் உன்கிட்ட மன்னிப்பு கேட்க ஈகோ தடுத்து.. நீ என் மேல் உண்மையில் காதல் வெச்சு இருந்தா வருவேங்கிற கர்வத்தில் இப்படி எல்லாம் செஞ்சு எல்லாமே தப்பா போச்சு டி” என்றவன் “பிறகு இது இந்த பொண்ணு சுபிக்ஷா இல்லைன்னு உனக்கு எப்படி தெரியும்? இதுவும் பொய்ன்னு எப்படி கண்டுபிடிச்ச?” என்றான்.
அவளோ “உங்களுக்கு சுபிக்ஷா போன் பண்ணி எவ்வளவு நாள் ஆச்சு?” என்று கேட்க.. அவனோ கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு அது கடைசியாக நாம ஹாஸ்பிடல் போனோமே அதுக்கு முன்னாடி ஒருமுறை அதுக்கு பிறகு எதுவும் பேசலை நான் கண்டுக்கவும் இல்லை…” என்றான் யோசனையோடு..
அவளும் “ஹ்ம்ம்” என்றவள் “ஒரு நிமிஷம்” என்று கையில் இருந்து தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பை எடுத்தாள். இனியன் என்னவென்று பார்த்திருக்க இவனது தொலைபேசியில் சுபி என்ற என்னுடன் அழைப்பில் இணைந்தாள் மஞ்சரி.. சுபிக்ஷமஞ்சரி தர்மராஜன்!
அவனோ தன்னுடைய தொலைபேசியையும் அவளையும் மாற்றி மாற்றி பார்க்க மஞ்சரியோ “ஹ்ம்ம் என்னை பற்றி ஒண்ணுமே உங்களுக்கு அக்கறை இல்லாத பொழுது நான் சுபியாக இருந்தால் என்ன? மஞ்சரியாக இருந்தால் என்ன?
இப்போவும் உங்களால் என்னை புரிஞ்சுக்கவே முடியாது நான் போறேன்” என்றுவிட்டு அவள் கிளம்பினாள். சற்று நேரம் ஒன்றுமே புரியாமல் நின்றவன் பிறகு மண்டைக்குள் மணி அடிக்க போகும் அவளை துரத்தி கொண்டு ஓடினான்.
“ஜெரி ஜெரிம்மா நில்லு ப்ளீஸ் நான் இதுவரைக்கும் உன்னை புரிந்து கொள்ளவே இல்லை.. இப்போவாவது எனக்கும் காதலிக்க ஒரு வாய்ப்பு கொடேன் ப்ளீஸ்..
நீ என்னை விரும்பியது தெரியும் அனால் இவ்வளவு விரும்புவேன்னு நானே எதிர்பார்கவில்லை.. மஞ்சரி மறுபடி எனக்கு முதலில் இருந்து தொடங்க ஒரு சான்ஸ் கொடு ஜெரிமா.. இந்த முறை கண்டிப்பா உன்னை ஏமாற்ற மாட்டேன். சரி சொல்லேன் மஞ்சரி” என்று அவளிடம் கெஞ்ச அவள் மிஞ்ச..
மீண்டும் அங்கு இவர்களின் கலாட்டாக்கள் துவங்கியது.. கடைசியில் இனியன் அவளிடம் பேசி ஹி ஹி கெஞ்சி தான்.. அவளை சாமாதானம் செய்து தங்கள் வீட்டுக்கு கூப்பிட்டு கொண்டு செல்ல..
இன்பா குழலி ராஜதுரை எல்லோருக்கும் மகிழ்ச்சி… இன்பா சுதீப்பிடம் பேசி எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சியே.. மஞ்சரியை அழைத்து வந்து வீட்டில் வைத்தது முதல் இனியனின் காதல் அவதாரம் தான் எல்லோரும் பார்த்தார்கள் இனியன் அவளை விட்டு எப்பொழுதும் பிரிவதே இல்லை..
ஜெரி ஜெரி என்று அவளது புராணம் பாடி திரிய அவள் பின்னாலே இவன் சுற்றி கொண்டு இருக்க குழலியே அவனை வருதெடுக்க துவங்கிவிட்டார். பொழுதும் அவளிடம் கொஞ்சி மயங்கி கிடப்பவன் மஞ்சரியிடம் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டான்.
அவளுக்காக தன்னுடைய வேலையை வேறு மாநிலத்துக்கு மாற்றி எழுதி ட்ரான்ஸ்பர் கூட வாங்க எழுதி கொடுத்துவிட்டான். பிரச்சனைகள் இங்கு தானே துவக்கம் என்று நினைத்து வேறு இடத்துக்கு சென்று விடலாம் என்று முடிவு எடுத்து இதனை செய்தான்.
இவர்களின் கலாட்டாக்களில் மாதங்கள் ஓடி இருக்க இன்பாவும் படிப்பை முடித்துவிட்டால்.. அன்று எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த நேரம் ராஜதுரை இனியனிடம் என்ற”தம்பி இன்பாவுக்கு மாப்பிளை பார்க்கணும் பாப்பாவுக்கு இப்போ படிப்பு முடிஞ்ச கையேடு கல்யாணம் செய்து கொடுத்துட்டா நம்ம கடமை முடியும் அவளும் இப்போவே கொஞ்சம் ஊனி இருந்துப்பா..” என்று தன்னுடைய கருத்தை சொல்ல
இனியனும் “சரிங்க பா நானும் கூட இதை பத்தி யோசிச்சுட்டு தான் இருந்தேன் இன்பாவுக்கு வேலைக்கு போகணும் என்று எண்ணம் இருந்தா நாம அதுக்கும் அவளுக்கு அனுமதி கொடுக்கணும் தானே… அவகிட்ட கேட்டுட்டு நாம முடிவு செய்யலாம் பா’ என்றான்.
அதற்குள் மஞ்சரியோ எதோ சொல்ல தயங்குவது போல் நின்றிருக்க இனியன் அவளிடம் “ஏய் என்னாச்சு ஜெரி உனக்கு ஏதாவது சொல்லனுமா? சொல்லு நீயும் அவளுக்கு அண்ணி தானே என்றான்.
மஞ்சரி “இன்பா.. இன்பாவும் என்னோட அண்ணன் சுதீப்பும் லவ் லவ் பண்றாங்க..” என்று சொல்லிவிட்டு அவனை பார்க்க அவனோ ஒன்றும் சொல்லாமல் வேகமாக் எழுந்து உள்ளறைக்கு இன்பாவை காண சென்றான்.
