தண்ணி வண்டி கனி..

ரெண்டு நாளைக்கு முன்ன மார்க்கெட் போயிருந்த போது தான் அவளப் பாத்தேன்… கனிமதி… தண்ணி வண்டி கனின்னா எங்க செட்ல எல்லாருக்கும் தெரியும்… (அவ அப்பா ஒத்த வண்டில பீப்பாய் கட்டி கடை கடையா தண்ணி சப்ளை பண்ணிக்கிட்டிருந்தார்….அவ்வளவு தான்….இஷ்டத்துக்கு ஓட்டாதீங்க) ..

அஞசாவதோட படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு இவளும் தண்ணி வண்டியோட்டப் போனதுல எனக்கு ரொம்பவே வருத்தம்…..ஏன்னா அவளத் தான் என் ஆளா நெனைச்சுக்கிட்டிருந்தேன்(திங்கள் கிழமை மட்டும்)….மொதல்ல அவ தான் அடையாளம் கண்டுக்கிட்டா…

“டேய்…..நீயா…..இன்னுமா சாவலை?”

“உன்னத் தன்னந் தனியா இந்த லோகத்துல விட்டுட்டுப் போவனா கனி?….பாத்து எத்தனை வருசமாச்சு….எப்படியிருக்கே?”

”எத்தன வருசமா? போன செல்லியம்மன் பொங்கலன்னிக்கு ரிப்பன் கடைக் கிட்டப் பாத்துட்டு ரெட்டைச் சடையும் ரிப்பனும் உனக்கு அழகா இருக்கும் கனின்னு மப்புல ஔறினியே…. ஞாபகமில்லையா?”

“நல்லாவே….ஆனா சரசு….அது ஔறல்னு சொல்றியா? உன்னோட ரெட்டைச் சடையும் செவப்பு ரிப்பனும் இன்னுங் கூட மனசுல இருக்கு ”

“அதுக்காக….இப்பப் போட்டுக்க முடியுமா?”

“போடலாமே….. முடியிருக்கே?

“ம்….நரைச்சுப் போயி……..கூம்…“

எங்கோ கனவுகளில் லயித்து மிதக்கும் கண்களில்……கனி இன்னும் அழகானாள்

“ஞாபகமிருக்கா கனி….உன்னக் கிள்ளினதுக்காக செல்வராஜ் சார் கிட்ட அடி வாங்கினேனே…?”

“ம்….பெரம்பே பொழந்து போச்சு…..ரெண்டு நாள் நெனைச்சு நெனைச்சு அழுதேன்”

”நாங் கிள்ளினதுக்கா….?”

“ச்சீ…..உன்ன அடிச்சதுக்கு…”

“எங்க கிள்ளி…………………………………………”

”போடா……பேரம்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *