🍅தக்காளி ஊறுகாய்🍅
தேவையான பொருட்கள் :
1.நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி – 1/2 கிலோ
2.பூண்டு – 50 கிராம்
3.காய்ந்த மிளகாய் – 8
4.மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
5.துருவிய வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன்
6.நல்லெண்ணெய் – 80 கிராம்
7.கடுகு – 1 டேபிள்ஸ்பூன்,
8.வெந்தயம் – 1/2 டேபிள்ஸ்பூன்
9.பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
10.உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
🍅தக்காளியை பொடியாக நறுக்கி,பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
🍅வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய், வெந்தயம், கடுகை தனித்தனியாக போட்டு வறுத்து, இறுதியில் தேவையான அளவு உப்பையும் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
🍅அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து 50 கிராம் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டை முழுதாக போட்டு வதக்கவும்.பூண்டு நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து (நீர் விடாமல்) வதக்கவும்.
🍅தக்காளி நன்றாக வதங்கி வரும் போது மஞ்சள்தூள், வெல்லம் சேர்க்கவும்.நன்றாக வதங்கி எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும்போது பொடித்த பொடியைத் தூவி, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
🍅இரண்டு கொதி வந்ததும் மீதியுள்ள 30 கிராம் நல்லெண்ணெயை ஊற்றிக் கிளறி இறக்கவும்.எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ஆறியவுடன் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
😋சுவை மிகுந்த தக்காளி ஊறுகாய் ரெடி….😋
நன்றி…🙏
