டிக் டிக் டிக் லப் டப் டப் இதயம் துடிக்குதே
டிக் டிக் டிக் லப் டப் டப்
இதயம் துடிக்குதே… ❤️❤️
ஹீரோ : சூர்யா
ஹீரோயின் : கமலி
1 : இதயம் துடிக்குதே❤️❤️
இடம் அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையம் தன்னுடைய பயணப் பொதிகளுடன் ஆறு அடிக்கும் சற்றே உயரமான பளபளக்கும் சருமத்தை கொண்ட அந்த இளைஞன் தன்னுடைய விமான இருக்கையில் வந்து ஏறி அமர்ந்தான்
பார்த்ததும் பெண்களுக்குப் பிடிக்கும் அழகன் சாக்லேட் பாய்
உடற்பயிற்சி செய்வான் போலும் கட்டுகோபான உடல் அமைப்போடு இருந்தான்
ஒயிட் ஃபுல் ஹேண்ட் சர்ட்டும், ப்ளூ ஜீன்சும் அணிந்திருந்தான் பார்த்ததும் அசரடிக்கும் அழகில் இருந்த அவனை விமானத்திலிருந்த ஒரு சில பெண்கள் குறு குறு வென்று பார்த்த வண்ணம் இருந்தார்கள்
அவனோ எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை அவன் சற்றே பதட்டமாக இருந்தான்
கண்ணை மூடி தன்னுடைய இருக்கையில் அமர்ந்து இருந்தவனுக்கு ஏதேதோ ஞாபகங்கள் வந்து முட்டிக் கொண்டு நின்றன
அவனுடைய முழு பெயர் சூரிய பிரபா…
.M.Tech முடித்திருந்தான் அப்பா சென்னையில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறார் அம்மா ஹவுஸ் வைஃப், ஒரு தங்கை பேர் லாவண்யா காலேஜில் B.com படிக்கிறாள்
கல்லூரி முடிக்கும் முன்பே
சென்னையில் புகழ்பெற்ற ஒரு
ஐடி கம்பெனியில் கேம்பஸ் இன்டர்வியூ அவனுக்கு வேலை
கிடைத்து விட அங்கு வேலை பார்த்தான் பிறகு பெங்களூரில் இரண்டு வருடம் வேலை அங்கிருந்தபடியே அமெரிக்காவி ற்கு போன வருடம் வந்தான்
இங்கே அமெரிக்காவில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான்
விமானம் டேக் ஆப் ஆகி
நீல வானத்தில் மேகத்தின் ஊடே பறக்க…அவன் நினைவலைகள் மூன்று வருடங்களுக்கு பின்னோக்கி சென்றன
” மச்சி என் பைக் கொஞ்சம் ப்ராப் ளமா இருக்கு நீ வந்து என்னை பிக்கப் பண்ணிக்கறீயா என்றான் தேவா….? சூர்யாவுடன் தற்சமயம் வேலை பார்ப்பவன்
ஓகே மச்சி நீ ரெடியா இரு இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் வந்திடறேன் என்றான் சூர்யா
காதில் ப்ளூடூத் ஹெட்போன் மாட்டிக்கொண்டு தலைக்கவசம் அணிந்தவனாய் தன்னுடைய ராயல் என்பீல்டை படுவேகமாக சென்னையின் நெடுஞ்சாலை வழியே ஓட்டினான்
” என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை…!!
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் உன் ஒரு துளி பார்வையிலே… !
அலைபாயுதே படத்தின் அந்த சாங் அவன் பிளூடூத் வழியாக அவன் செவியை நினைத்துக் கொண்டிருக்க
பரபரப்பான சென்னையின் டிராபிக் சாலையில் பாடல் கேட்டபடியே தன் பைக்கை இயக்கிக் கொண்டு இருந்தவன் தெரியாத்தனமாக ஒரு காரின் பின்னால் இடித்து விட்டான்
எந்தக் கடங்காரனோ என்று நினைத்தபடி….? வண்டியை காரின் முன்னால் சற்றே ஒதுக்கியவன் இன்னிக்கு காலையிலேயே சுப்ரபாரதம் கேட்கணுமா என்று அந்த காரையே பார்த்துக் கொண்டிருக்க
காரின் கண்ணாடி கதவு திறக்க ஆரம்பித்தது…அதன்வழியே பார்த்தவன் அசந்து விட்டான்
அழகிய ஏஞ்சல் ஒருத்தி காரின் முன்னிருக்கையில் அமர்ந்து இருந்தாள்
கொஞ்சம் அசடு வழிந்தவனாய் அவன் அவளைப் பார்க்க
காரைவிட்டு அவள் இறங்கி தன் காருக்கு என்ன டேமேஜ் ஆகி இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தால் அந்த பெண்
லேசாக நம்பர் பேட்டை தட்டி இருந்தான் வேறொன்றும் பெரிசாக இல்லை
அவள் காரை பார்த்துக் கொண்டிருக்க இவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்
ஒல்லியான கொடி போன்ற உடல்வாகு அவளுக்கு… பார்த்ததும் ஒட்டிக்கொள்ளும் அழகிய முகம் மாநிறத்தவள் தனக்கு சமமான உயரம் சிறிய கண்கள் தோள்பட்டை வரை நீண்டிருந்த முடியை… லூஸ் ஹேர் விட்டு சென்டர் கிளிப் மட்டும் போட்டு இருந்தாள்
கோபத்தோடு அவள் தன்னைப் பார்க்க அப்போதும் அவனுக்கு ஜிவ்வென்று தான் இருந்தது
“ஹேய் மிஸ்டர்…கண்ணை எங்க வச்சுக்கிட்டு வறீங்க என்றாள்…?
ஏனோ அவளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை அவளைப் பார்த்தபடியே இருந்தான்
அவள் அழகான லைட் எல்லோ வித் ஒயிட் காமினேஷனில் ஒரு பருத்திப் புடவையை அணிந்திருந்தாள் அவ்வளவு அழகாய் இருந்தது அது அவளுக்கு
காதில் சிறு வைரக்கல் கம்மல் கழுத்தில் மெலிதாய் ஒரு பென்டன் டாலரோடு ஒரு செயின் வலக்கையில் ஒரு கருப்புநிற வாட்ச்… மிக மிக எளிமையாய் இருந்தாள்
ஆனால் அந்த கண்களில் ஒரு ஸ்பார்க் கவர்ச்சி இருந்தது
ஐ டி பீல்டில் வேலை பார்க்கும் சூர்யா எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறான் யாரிடத்திலும் லயிக்காத இவன் மனம் இவளை பார்த்த ஒற்றை நொடியில் லயித்துப் போனது
என்ன பொண்ணுடா இவள் என்று பிரமிப்பாய் பார்த்தான்
அவள் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லாமல் அப்படியே சிலையென அவன் நின்று கொண்டிருக்க
இவன் சரியான வழிசல் பார்ட்டி போல என்று நினைத்தபடி கோபமாய் அவள் தன் காரைக் கிளப்பிக்கொண்டு செல்ல
அவள் கார் மூவ் ஆன் ஆனவுடன் தான் அவனுக்கு….. தான் எங்கே இருக்கிறோம் என்பதே புரிய ஆரம்பித்தது
தன் நண்பனை பிக்கப் பண்ண வேண்டும் என்ற நினைப் பெல்லாம் மறந்தவனாய் அவள் சென்ற அந்த காரை ஃபாலோ பண்ணி அவனும் பின் தொடர்ந்தான்
அவளும் தான் வேலை பார்க்கும் அதே ஐடி கம்பெனியின் கார் பார்க்கிங்கில் வந்து காரை நிறுத்தவும் அவனுக்குள் ஐஸ் மழை கொட்டியது
அவன் தன் டூவீலரை பார்க் பண்ணிவிட்டு வருவதற்குள் மிகப்பெரிய அந்த ஐடி நிறுவனத்தின் வளாகத்துக்குள் அவள் மாயமாகி இருந்தால்
அவள் இங்கு தான் வேலை பார்க்கிறால் என்பது தெரிந்து விட்டது இனி ஈஸியாக அவளை கண்டுபிடித்துவிடலாம் என்று தன் தலையை ஸ்டைலாக கோதி விட்டபடி… தன்னுடைய அலுவலக கேபினுக்குள் வந்தான் சூர்யா
சூர்யா இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பும் சந்தோஷத்திற்கும் பஞ்சமே இருக்காது.எல்லோரிடத்திலும் கலகலவென்று பழகுவான் வேலையில் சின்சியர் மட்டுமல்ல கொஞ்சம் அறிவாளியும் கூட
அதனால் எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும் குறிப்பாக பெண்களுக்கு… அவனுடைய நட்பு வட்டம் பெரியது எல்லோரிடத்திலும் இனிமையாக பழகுவான் அதுவே எல்லோருக்கும் அவனை எளிதில் பிடிக்கும்
அழகன் படிப்ஸ் பழகுவதற்கு இனியன் என்று பெண்கள் மத்தியில் அதிக ரேட்டிங் வாங்கி முன்னே நிற்பவன்
தன் புல் ஹாண்ட் ஷர்ட் பட்டனை கொஞ்சம் தளர்த்தி
தன்னுடைய இருக்கையில் சாய்வாக அமர்ந்து கொண்டான்
காலையிலிருந்து ஒருமாதிரியான இன்பமான மனநிலை அவனை அழுத்திக்கொண்டிருக்க அந்த சுகத்தில் லயித்தபடி இருந்தான் அவன்
பார்த்ததும் இவளை எனக்கு பிடிச்சியிருக்கே ….why…? எந்த பெண்ணு கிட்டயும் அஞ்சு செகண்டுக்கு மேல் இவன் ஓட்டமாட்டான் ஏனென்றே தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தது அவன் மனம்
அவளை பற்றிய விஷயங்களை இப்போதே தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தது
அப்போது பார்த்து அவன் போன் அடிக்க போனை எடுத்துப் பேசிய போதுதான் தேவாவை பிக்கப் பண்ண மறந்த விஷயம் புரிந்தது
“சாரி மச்சி சாரி மச்சி என்றவன் சாரி சொன்னபோதும்…. ஒத்த செகண்டில் எல்லாத்தையும் மறக்க வச்சுட்டாளே….?
இவள் ஊர் என்ன..? பேர் என்ன எதுவும் தெரியல இங்கே வேலை பார்க்கிறா அது மட்டும் தான் தெரியுது ஆனா அதற்குள் மனம் ஏன் இப்படி எக்ஸ்பிரஸ் வேகத்தில் போகுது
அவனுக்கே புரியவில்லை அவன் அப்படிப்பட்டவனும் கிடையாது.பெண்களிடம் இயல்பாக பழகுவான் பேசுவான் எல்லாம் செய்வான் ஆனால் ஒரு எல்லையில் தான்
யாரிடத்திலும் அவ்வளவு பிடித்தம் எல்லாம் ஏற்பட்டதே இல்லை….தேவா கூட தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களில் ஒரு சில பேரிடம் கடலை போடுவான்
சூர்யாவுக்கு அதெல்லாம் பிடிக்காது…
“நீ ரொம்பவே அழகா இருக்கடா அதான் உனக்கு எந்த பெண்ணையும் பிடிக்கல என்று தேவா கடுப்பேத்துவான்
இதுவரை எந்தப் பெண் ணிடத்திலும் லயிப்போ ஈர்ப்போ அவனுக்கு ஏற்பட்டதில்லை… பார்த்த ஒரு செகண்டில் அவள் அவனுக்குள் தீமூட்டி இருந்தாள்
தன் மேலதிகாரியிடம் திட்டு வாங்கிக் கொண்டே தன் கேபினுக்குள் நுழைந்தான் தேவா
வந்தவன் பக்கத்து கேபினில் இருந்த சூர்யாவை முறைத்துவிட்டு தன் கேபினில் அமர
“நல்ல நண்பன்டா என்றான் சத்தம்போட்டு…?
சூர்யாவுக்கு அதைக்கேட்டதும் ஒரு மாதிரியாக இருந்தது
ஒரு வருடமாக அவர்கள் இங்கே வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர்
இருவரும் உதவி கொள்வார்கள்
சூர்யாவுக்கு ஏதாவது ஒன்று என்றால் தேவாவும் தேவாவுக்கு ஏதாவது ஒன்று என்றால் சூரியாவும் முந்திக்கொண்டு நிற்பர்
அப்படி ஒரு அட்டேச்மெண்ட் இருவருக்குள்ளும்
மதியம் வரை கொஞ்சம் முறுக்கிக் கொண்டிருந்த தேவாவை அப்படி இப்படி என்று பேசி சமாதானப் படுத்தி விட்டான் சூர்யா
மதியம் கேண்டின் சென்று உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது தற்செயலாக மீண்டும் சூர்யா அவளைப் பார்த்தான்
இந்த முறை அவளை தவற விட்டு விடும் மனம் இல்லாதவனாய் தன் நண்பனை கூட கண்டுகொள்ளாமல் அவன் அவள் இருக்கும் டேபிள் நோக்கி செல்ல
தன் தோழியோடு உணவருந்திக் கொண்டு இருந்த கமலி…. தன் முன் ஏதோ நிழலாட நிமிர்ந்து பார் த்தால்
அது அவன் தானே காலையில் பார்த்தவன் என்று கொஞ்சம் அதிர்ச்சியாய் நோக்கினாள் கமலி
என்றைக்கும் இல்லாத அதிசயமாய் தன் நண்பன் சூர்யா தங்கள் ப்ராஜெக்ட் குரூப்பில் இல்லாத வேறு குரூப் பெண்கள் அருகே நின்றபடி இருக்க
தன் நண்பனை அதிசயமாய் பார்த்தான் தேவா
கமலியின் தோழி நேகா சூர்யாவை பார்க்க…..அவன் பார்வை தன் தோழி கமலி இடத்தில் படிந்திருக்க தன் தோழியை புரியாமல் பார்த்தாள் நேகா
“ஹே மிஸ்டர் என்னை பின்தொடர்ந்து நீ ஆபீஸ் வரைக்கும் வந்திருக்கியா என்றால் கடுப்போடு கமலி..?
கூல் கமலி…..! நீ ஏன் டென்ஷன் ஆகுற…. சாக்லேட் பாயை திட்டுவது பிடிக்கவில்லை நேகா விற்கு
“மிஸ்டர் உங்க பேர் என்ன..? வம்பு பண்றதுக்குனே இங்க வந்து இருக்கீங்களோ என்றால் நேகா அவன் பெயரை தெரிந்து கொள்ளும் ஆவலில்
“பய் த வே ஐ அம் சூர்யா…?இங்க ப்ராஜெக்ட் ஹெட்டா இருக்கேன் சி பிளாக் நீங்க என்று நேகாவோடு கை குலுக்கினான்…. ஆனால் அவன் பார்வை முழுவதும் கமலின் இடத்தில் இருந்தது
உங்க பிரண்டு என்ன காஷ்மீர் சில்லியா இவ்வளவு கோப படறாங்க…?
அப்படி எல்லாம் இல்ல காம் டைப் தான்….. அவளும் ப்ராஜெக்ட் ஹெட்டா தான் இருக்கா பேர் கமலி என்று நேகா சொல்ல
இவள் ஏன் என் பெயரை அவனிடத்தில் சொல்கிறாள் என்று கோபத்தோடு தன் தோழியை முறைத்தால் கமலி
எந்த பிளாக் எந்த டிபார்ட்மென்ட் என்று விசாரித்துவிட்டு கமலி இடத்தில் ஒரு வசீகர புன்னகையை சிந்தி விட்டு அவன் தன் கேபினுக்கு வந்தான்
ஒரே நாளிலேயே தன் நண்பனின் போக்கில் வித்தியாசம் தெரிய தேவா
“மச்சி என்ன மச்சி இங்க நடக்குது என்றான்…??
ஒன்னும் இல்லையே என்று சூரியா மறுக்க
போனா போகுதுனு அந்த பொண்ண பத்திய டீட்டைல்சை சொல்லாம் பார்த்தேன் நீ தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டியே என்று அவன் பம்ப
தன் நண்பன் சூர்யாவின் முகம் அதை கேட்டு சுருங்கிப் போக
அவனாகவே சொல்ல ஆரம்பித்தான்
பேர் கமலி அவளும் ப்ராஜெக்ட் ஹெட் தான் … பட் உன்ன விட ஒரு 5 வயசு அவளுக்கு அதிகம்டா என்றான்
காதலுக்கு என்று எந்த எல்லையும் இல்லை….?? யாருக்கு யார் மீது வேண்டுமென்றாலும் காதல் தோன்றலாம்
“காதல்… ! கருப்பா சிவப்பா நெட்டையா குட்டையா பணக்காரனா ஏழையா இந்த மதமா இந்த ஜாதியா இந்தப் பிரிவா எதுவும் பார்க்காது
காதல் சிலருக்கு பார்த்ததும் பத்திக்கும்… சிலருக்கு மாத கணக்கெடுக்கும் சிலருக்கு வருஷக்கணக்கு ஆகும்
For every day i miss you… !!
For every hour i need you….!!
For every minute i feel you….!!
For every second i want you…!!
For ever i love you….!!
விமானத்தில் பயணித்து கொண்டிருந்த சூர்யாவின் கையில் அந்த காதல் ப்ரோபோசல் கார்டு இருந்தது
அந்த ஆங்கில வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்தான்….!! அவன் உயிர் வரை தாக்கிய வரிகள் அவன் உணர்வுக்குள் சிக்கித்தவிக்கும் வரிகள்
அவன் கையில் இன்னொன்றும் இருந்தது அது ஒரு இன்விடேஷன் கமலி weds அசோக் நடராஜ்….!!
அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது காதலால்
யார் இதயம் யாருக்கோ….?
**********************************
Friends😍😍…last year உன் மேல் எனக்கு சம்திங் சம்திங்… !!! கதையோட…. காதல் ஸ்பெஷலா என்னுடைய journey ஸ்டார்ட் ஆச்சு…. this year அதே லவ் ஜானரில் வேறொரு பரிமாணத்தில் இந்த கதையை கொடுக்க போறேன் … இந்தக் கதையும் என்னுடைய கதை வரிசையில் உங்களுக்கு பிடிக்கும் நினைக்கிறேன் friends 😍😍
என்றும் அன்புடன் உங்கள்
ஸ்ரீலதா
