சிலிக்கன் காட்டுப் பூவே

சிலிக்கன் காட்டுப் பூவே

சிலிக்கன்  காட்டுப் பூவே

சிலிக்கன் காட்டுப் பூவே

சிலிக்கன்  காட்டுப் பூவே

சிலிக்கன் காட்டுப் பூவே

சிலிக்கன்  காட்டுப் பூவே

சிலிக்கன் காட்டுப் பூவே

சிலிக்கன்  காட்டுப் பூவே

சிலிக்கன் காட்டுப் பூவே

பூ 23/24
ஆண்டுக்கு ஒரு முறை அன்பாலயத்தில் உள்ள குழந்தைகளை வெளியூர்களுக்கு அழைத்து சென்று வருவது அங்கு வழக்கமாக நடைபெறும் ஒன்று!
இந்த முறை ஆரா வராத காரணத்தால் சீனியை முல்லை வரச்சொல்லி கூப்பிட்டிருக்க.. சீனி தன் குண்டு கிளியை மிஸ் பண்ணி சோக கீதம் வாசித்தாலும்.. வருங்கால மாமியார் கூப்பிட்டு ஒரு இடத்துக்கு போகாம இருப்பது ஆண்குழத்துக்கே இழுக்குன்னு.. 
தன் தேவதாஸ் தாடியை தியாகம் பண்ணி சட்டை துணிமணி எல்லாம் எடுக்கலாம் என்று பார்க்க.. வழக்கமான அழுக்கு துணி போடும் நாற்காலியில் முழுசும் அழுக்கு துணி மலை! 
அடடான்னு எப்போதும் போல புதுசா என்ன இருக்குன்னு வீட்டின் மூளை முடுக்கெல்லாம் தேடி கடைசியில் ஆரா வாங்கி வைத்து எடுக்காமல் சென்றிருந்த அந்த புதுசு தான் ஆபத்பாந்தவனாய் கையில கிடைச்சது.
சரி இது இருக்கட்டும்னு பெட்டியில் எடுத்தி வெச்சுட்டு கெளம்பிட்டார் சீனி. நேராக அன்பாலயம் போனா அங்க ஒரு குட்டி வேனில் முல்லை தாத்ஸ் அண்ட் ஒரு பத்து பதினைந்து பிள்ளைகள் பின்னாடி ஒரு பஸ் நிறைய பிள்ளைகள் ஆசிரியர்களோடு தயாரா நிக்க..
சீனி என்ட்ரி ஆனதும் பஸ்ஸில் இருந்த எல்லா குழந்தைகளும் குஷியோ குஷி. பஸ் எடுத்துக்கொண்டு எல்லோரும் பாண்டிச்சேரிக்கு கிளம்பி ஒரு நான்கு மணி நேரத்தில் வந்து சேர..
வெள்ளை தாடி வெச்சு வெள்ளை கவுன் போட்டு கழுத்தில் மஞ்சள் துண்டு அணிந்த ஒரு ஸ்வாமிஜி வந்து கூப்பிட்டு போனார். அங்கே உள்ள தியான மண்டபத்தில் எல்லாருமாக உக்காந்து தியானம் செய்ய சொல்ல..
அங்கு போய் உக்கார்ந்த சீனிக்கு யாராவது பச்சை தைலம் தேய்துகொண்டால் பக்கத்து வீட்டுக்கு வரை மணக்குமே அது போல .. அவனது குண்டு குல்பி ஆராவின் மனம்.. 
நாம் உபயோகிக்கும் இடங்கள் பொருட்கள், வீடுகளில் நமது எனர்ஜி இருக்குமாம்.. அது போல ஆராவின் எனர்ஜி அலைகளை உணர்ந்தான் சீனி.
இங்கு தான் இருக்கா ஆரா கண்டிப்பா கண்டிப்பா தேடுடா… மனசாட்சி தார் குச்சி போட்டு விரட்ட.. பாதி தியானத்தில் விருட்டென எழுந்து உள்ளுக்குள் சென்று எல்லா அறைகளிலும் தேட..
அங்கிருப்போர் முகங்களை கவனித்திருந்தால் ரொம்ப சுலபமாய் இருந்திருக்கும்.. எல்லோருக்கும் இவனது போட்டோ மூஞ்சி பரிச்சயம்.. அதனால் வாவ்.. இவனா? இவந்தானா? வந்துட்டானா? ஆமா வந்துட்டான் என்பது போல் அவனை பார்த்து வைக்க..
இவனுக்குள் இருக்கும் காதல் காட்டேரி தன் குண்டு குல்பி யின் சூடு ரத்தம் மட்டுமே கேட்டது..மற்ற ஆட்கள் எல்லாம் அவுட் அப் போகஸ்..!
தேடி கிடைக்கவில்லை எனவும் அங்கு அலுவலகத்தில் விசாரிக்க.. ஆரா பிராட் யாருக்கும் தகவல் எல்லாம் சொல்ல கூடாது சொல்லியபடி அந்த ரீசப்ஷனில் ஒரு துண்டு தகவல் கூட கொடுக்கப்படவில்லை.
முயன்று பார்த்துவிட்டு முடியவில்லை எனவும் தியானம் பண்ணினது எதுவோ கரண்டு கணெக்ஷன் மாத்தி உற்றுச்சு போல அதான் அவளோட நினைவுகள் வந்துடுச்சுன்னு தனக்கு தானே சமாதானம் சொல்லி பிள்ளைகள் கூப்பிட்டு பீச்சுக்கு போலாம் கிளம்பிட்டான்.
எல்லாரும் பீச்சில் காந்தி சிலை பாத்துட்டு பக்கத்தில் கொஞ்சம் தூரத்தில் இருக்கும் ரிசார்ட்க்கு போய் ரெஸ்ட் எடுப்பதாய் பிளான்..
பீச்சுக்கு போனதும் ஆளாளுக்கு விளையாட்டுகள் என்று சீனியை நச்சரிக்க கண்ணாமூச்சி என்று ஒரு வழியாக முடிவு எடுத்து.. முதலில் சில பிள்ளைகள் கூட விளையாடி.. சீனு அவுட்..
பின்னால் சீனி கண்ணை கட்டிக்கொண்டு பிள்ளைகள் எல்லோரையும் தேடி துழாவி கடற்கரையில் மணலில் சிறிது தூரம் சென்று விட..
சீனி அநியாயத்துக்கு நல்லவனாக தன் கண்கட்டை அவிழ்க்காமல் பிள்ளைகளை தேடி துழாவி கையில் கிடைத்த உருவம் பிள்ளையாக தெரியவில்லை..
அவள் தான் உள்மனம் அடித்து சொல்ல.. கையை விட்டால் மறைந்துவிடுவாள் என்று தோன்றிட அவளை தன்னோடு இறுக்கி பிடித்து கொண்டான்.
அங்கு ரிசார்ட் வேலைகள் அனைத்தும் முடித்து பின்னர் கொஞ்ச நேரம் கடல்காற்று வாங்கலாம்னு பீச் மணலில் கால் புதைய நடந்து கொண்டிருந்த ஆராதனா கடலை வெறித்தபடி நிற்க.. மிகச்சரியாக ஆரதனாவை தேடி வந்துட்டார் சீனி.
அவளோ திடீர் தாக்குதலில் யார் அது நம்மை கட்டி பிடிப்பது? என்று முதலில் குழம்பி பின்னர் அவளின் அவனது பிடி உணர்ந்து நீ எங்கே இங்க? என்பதுபோல மலைத்து நிற்க..
சீனி காணாத காதலியை கண்ட களிப்பில் கட்டிபிடி வைத்தியம்.. பிறகு முத்த ஒத்தடம் என்று இறங்கி சுற்று புறம் மறந்த நிலையில்.. காதல் வெக்கம் அறியாதது.. அக்கம் பக்கம் பாராதது சில நேரங்களில்.. உண்மையோ உண்மை..! (சிங்கிள் பாதிக்கப்பட்டோர் சங்கம்)
கொஞ்ச நேரத்தில் பிள்ளைகளின் ஆரா அக்கா என்கிற குதூகல குரலில் நிலைக்கு திரும்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க.. முல்லை அங்கிருந்து ஓடி வந்து “அம்மாடி ஆரா ஏன் டா நீ எங்கே இருக்க? என்ன பண்றனு கூட இந்த அம்மாவுக்கு சொல்ல கூடாதா?
உன்னை காணாம எப்படி தவிப்போம்னு உனக்கு தெரியாதா? அம்மா மேல என்ன தப்பு? எண்ணனாலும் சொல்லு டா.. இப்படி நீயும் எங்களை விட்டு வந்துட்டியே?” 
அவளை கேள்வி கேட்க பதில் எதுவும் சொல்லாமல் இதுக்கெல்லாம் காரணம் நீதான் என்பது போல சீனியை கண்களால் பஸ்பம் ஆக்கி நிற்க..
இதுக்கெல்லாம் அசருவோமா? கோவமா? நீ வேணுன்னா கோவமா இருந்துக்கோ நான் காதலா இருந்துகிறேன் என்பது போல காதல் பார்வை பார்த்து வைத்தான்.
இவள் ஒன்றும் பேசவில்லை எனவும் முல்லை தன் மீது கோபித்துக்கொண்டு தான் இவள் இப்படி தனியாக வந்து இருக்கிறாள் என்று முடிவுகட்டி கண்ணீர் விட ஆரம்பித்திருக்க..
“அய்யோ அம்மா இதுக்கெல்லாம் நீங்க ஒன்னும் காரணம் இல்லை கொஞ்ச மாறுதல் தேவைப்பட்டது வந்துட்டேன்.. விடுங்க அலாதிங்க வாங்க” என்றவள் “ஆமாம் நீங்க எங்க இங்க?” என்று நீண்ட நேர கேள்வியை கேட்க..
“ஆரா நாம அன்பாலயத்தில வருடா வருடம் டூர் போவோமே? ஞாபகம் இல்லையா அதான் இந்த வருஷம் இங்க வரலாம்னு வந்தோம்… இங்க கூட ஒரு ஆஸ்ரமத்துல பேசி ரிசார்ட் தயார் செஞ்சு தரேன்னு சொல்லி இருக்காங்க டா.. நீயும் வரியா? அம்மா கூட ப்ளீஸ்” என்று கெஞ்ச
அவரது கேள்விக்கு பதில் தராமல்” எந்த ஆஸ்ரமத்துல?” என்று கேட்க முல்லையின் பதிலில் அய்யோ அங்கதானா? அப்போ குருஜி உங்களுக்கு தான் ரிசார்ட் தயார் பண்ண சொன்னாரா?” என்று உளறிவிட.
அப்படின்னா அவர் சொன்ன பொண்ணு நீதானா? பார்த்தியா கடவுள் என் வேதனை தீர்த்து வெச்சுட்டார்.. என்று முல்லை சந்தோஷிக்க.. பக்கத்தில் சீனி “கண்டேன் சீதையை என்னும் பீலில்.. காற்றில் பறந்து கொண்டிருந்தார்.
பிறகு பேசி பேசி நேரம் கடக்க பிள்ளைகளை அழைத்து கொண்டு ரிசார்ட் போனதும் அங்கு எல்லோருக்கும் அறைகளை காண்பிக்க ஆரா செல்ல.. கடைசியாய் சீனு நல்ல பிள்ளை போல அவனுக்கான அறைக்கு போனவன் எச்சரிக்கையாக வெளியில் நின்று காண்பித்தவளை உள்ளே இழுத்து செல்ல..
சத்தம் போட போனவள் பின்பு அவனுக்கு அசிங்கமாய் போகும் என அவன் இழுத்த இழுப்புக்கு செல்ல.. உள்ளே சென்றவன் அவளை தன் அருகில் இழுத்து பிரிவு துயர் ஆற்றுபவன் போல இறுகி அணைத்துக்கொள்ள..
அவனோடு இளையும் தன் உடலை சபித்தபிடி “விடுங்க சார் விடுங்க என்னை இப்போ எதுக்கு கட்டி பிடிக்கிறீங்க? இப்போ கட்டி பிடிச்சிட்டு உங்க அம்மா வந்ததும் என்னை வேறு மாதிரி பேச.. அதை மறுபடி பார்த்து ரசிக்கலாம்ன்னு ஆசை படறீங்களா?
எங்க உங்க அம்மா? உங்க கூட வரல? உங்கள மாதிரி பணக்கார பசங்களை வளச்சி போற்றுவேன்ணு.. உங்களுக்கு காவல் நின்னாங்களே? இப்போ எங்க? பின்னாடி வராங்களாமா?” என்க
இப்போது இவளுக்கு முதலும் கடைசியாக புரிய வைத்து விட வேண்டும் என்று “ஆரா இங்க பாரு அன்னைக்கு எங்க மம்மி பேசினது தப்புதான்.. ஆனால் அவங்க நம்மை பார்த்த நிலை அப்படி பட்டது.. உன்னை தப்பா நெனச்சாங்க ஆனால் அதுக்கப்புறம் நான் சொன்னது எல்லாத்தையும் புரிஞ்சிக்கிடங்க..
இப்போ உங்க அம்மா தாத்ஸ் எல்லார் கூடையும் மன்னிப்பு கூட கேட்டு ஒண்ணா சேர்ந்துட்டாங்க.. நீ தான் இது நடந்தது ஒன்னும் தெரிஞ்சுக்காம தனியா வந்து என்னை பாதி உயிரா ஆக்கிட்ட..
ப்ளீஸ் ஆரா பழைய எல்லாத்தையும் மறந்துடலாம் புதுசா காதலிக்கலாம்.. புதுசா தொடங்கலாம் ப்ளீஸ்..
எனக்கு சமாதானம் எல்லாம் செய்ய தெரியாது சோ ப்ளீஸ் எல்லாத்துக்கும் மன்னிச்சுடு..” என்று சீனி இறங்கி வந்து கெஞ்ச..
ஆரா மன்னிக்க தயாராக இருக்கவில்லை.. “இங்க பாருங்க சார் நீங்க என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை. உங்க கூட இருந்த எல்லா பிணைப்பும் அறுந்து போச்சு.. நான் உங்க வீட்டை விட்டு வந்தப்போவே..
அப்பறம் உங்களுக்கு கொடுக்க வேண்டிய எல்லாத்தையும் திரும்ப கொடுத்துட்டேன்னு நெனைக்கிறேன்.. பிறகு இப்போ நீங்க ஜூஸ்ட் எங்க அப்பாவோட தங்கை பையன்.. அவ்ளோதான் ஆனால் அந்த உறவையும் நீங்க நிறுதிகலாம்னு விரும்பினா மேல பேசுங்க..” என்று திட்டவட்டமாக கூறிவிட..
சீனிக்கு இவளை எப்படி சமாதானம் செய்யவென்று தெரியவில்லை தன் பக்கம் உள்ள தவறு பெரிதுதான் ஆனால் என்ன செய்ய? நடந்தவைகளை மாற்ற முடியாதே? 
திரும்ப தேவதாஸ் மோட்.. பீச் மணலில் கால் புதைய நடந்து சோக கீதங்கள் வாசிக்க.. பழைய பீஸ் தாத்ஸ் இன்று அவனது நடவடிக்கை கண்டு என்ன? ஏது? விசாரிக்க.. சோக கீதம் வாசித்து பெரிய ரம்பம் போட்டு விட்டான்..
தான் ஆரதனாவை காதலித்தது.. அவள் அவன் வீட்டில் தங்கியது.. அவள் திருடியது மட்டும் மறைத்து மாற்றி ஒருவாறாக காதல் கதையும் அது பிரிவில் முடிந்ததும் தாத்ஸ் கிட்ட சொல்லி அழ.. (சாரதா அவரிடம் நடந்தவற்றை எல்லாம் கூறி விட்டார் முன்னமே)
அவரோ அவனுக்கு சமாதானம் சொல்லி.. “சரி இப்போ ஒன்னும் கவலை பட வேணாம் . உன் காதலை சேர்த்து வைக்கிறேன்” ததாஸ்து சொல்ல..
தாத்ஸ் ய கட்டிப்பிடித்து கிஸ்ஸிவிட்டு அவரையே வெக்கப்படவைத்துவிட்டான் இந்த சீனி பையன்.இப்போ ஆராவை ஒருவழியாய் கண்டுபிடித்து ஆயிற்று அடுத்தது என்ன? என்ன? கேள்விகள் பெரியவர்களுக்கு..
அவங்க எல்லா கேள்விகளுக்கும் சொல்லும் ஒற்றை பதில் “எல்லாம் ஒரு கால்கட்டு போட்டுட்டா சரியா வந்துடும்” என்று கூட்டா சேர்த்து கும்மி அடிக்க..
ஆரா “வாய்ப்பில்லை ராஜா” சொல்லி நழுவ பார்க்க.. கடைசி பேராயுதம் “நீ இப்போ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்களைனா அப்பறம் என்னை உயிரோடு பார்க்க முடியாது..” சீனி ரெடி பண்ணி கொடுத்த போலி விஷ பாட்டிலோடு முல்லை அண்ட் கோ நடிப்பு வைக்க..
அப்பறம் என்ன கல்யாணம் கல்யாணம் குண்டு குல்பிக்கு கல்யாணம் தான்.. ஒருவழியா உள்ளுக்குள் இருந்த அசுரகாதலி முழிச்சு கல்யாணம் மட்டும் பண்ணிக்கோ ஆரா இலவச அறிவுரை வழங்க..
ஆரா சீனியை சந்தித்து “இங்க பாருங்க சார் இந்த கல்யாணம் என் அம்மா கட்டாயத்துக்கு தான் நடக்குது.. அதுனால் கல்யாணம் தான் ஆகப்போகுதுன்னு என்கிட்ட ஏதாவது அட்வான்ட்டேஜ் எடுத்துக்க முயற்சி செஞ்சீங்க அப்பறம் டைவர்ஸ் பண்ணிட்டு போயிடுவேன்..
கல்யாணம் கண்டிஷன் அப்பிளை போட்டு .. சீனு பையனின் கல்யாண கனவுகளில் கால் கிலோ நெருப்பள்ளி கொட்டினாள்..
புது மாப்பிள்ளை செய்யும் அதே பூம்பூம் மாடு ஸ்டைலில் தலை அசைத்து எல்லாவற்றையும் ஓத்துக்கொண்டு சீனி பல்லை காட்டி நிற்க.. 
ஆராவுக்கு மீண்டும் உள்ளுக்குள் குழப்பம் ” என்ன இவன் காதலிக்கிறேன்னு சொல்லாம இருந்த காலத்துல முழுக்க முழுக்க ரொமான்ஸ் மோட்ல இருந்தான்.. ஆனா இப்போ கல்யாணம் சரி சொல்லியும் ஏதும் செய்ய மாட்டேன்னு சொல்லி ஓகே சொல்றானே?
என்னவா இருக்கும்? சரி இவன் பிளான் என்னவா இருந்தாலும் நீ சரியா இருந்துக்கோ ஆரா, மறுபடியும் இவனை நம்பி ஏமாந்து போய்டாத.. (பயப்புடாத டா பயப்புடாத தலைவர் ஸ்டைல் மனசாட்சி கவுண்டர் கொடுக்க)..
ஒருவழியாய் சுபமாய் பாண்டிச்சேரியில் நிச்சயதார்த்தம் என்று பேசி.. முழு குடும்பம் சூழ கடற்கரை மணலில் கால் புதைய நின்றபடி இருவரும் பவுர்ணமி நிலவொளியில் ப்ரத்யோகமாய் வடிவமைக்கப்பட்ட இதய வடிவ மோதிரங்கள் மாற்றி நிச்சயமாக ஆராதனா பாரிவேந்தன் இப்போது ஆரதனா சஞ்சய் ஸ்ரீனிவாஸ் ஆகும் மங்கள தேதி குறிக்கப்பட்ட எல்லாம் சுபம்..
கல்யாண தேதி நெருங்க நெருங்க இயல்பாய் பெண்ணுக்கு நேரும் ஒரு பதட்டம் ஆராவுக்கு இயல்பாக தோன்றி சீனி பெயரை கேட்டாலே உள்நாக்கில் தித்திக்க..
திருமணம் என்ற பேச்சிலே முகம் சிவக்க.. சீனி வீட்டுக்கு வரும்போது எல்லாம் கோப முகமூடி போட்டு தனக்கு தானே வேலி போட்டுக்கொண்டாள் பெண்.
நாட்கள் நெருங்க சீனி ஆரா தவிர மற்ற எல்லோரும் கல்யாண கலாட்டாவில் கலைகட்டி இருந்தனர்.. கல்யாண பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் வாங்கப்பட்ட பின்.. இவர்கள் பெங்களூரு சென்று வசிக்க அதே வீடு முடிவாகி பின் பொருட்கள் எல்லாம் அங்கு அடுக்கி வைத்து குடும்பம் பண்ண போகும் இருவர் தவிர மீதி மிச்ச சொச்சம் எல்லாம் தயார்.
சாரதாவை கையிலே பிடிக்க முடியவில்லை தன் அவசரத்தினால் விட்டு போன தன் ரத்த சொந்தம் மீண்டும் கைசேர கனவுகளில் மிதந்து.. ஆராவுக்கு என்னென்ன வேண்டும் என எல்லாவற்றையும் வாங்கி குவித்துக்கொண்டு இருந்தார்.
திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் எல்லோரும் முகூர்த்த புடவை எடுக்க கடைக்கு படை எடுக்க.. ஓரமாய் நின்றாவது ஆராவை பார்க்கலாம் என்னும் முடிவில் சீனி கூட்டத்தில் ஐக்கியமாகி விட்டான்.
ஆரா மட்டும் ஆர்வம் இல்லாதவள் போல “நீங்களே பார்த்து எடுத்துடுங்க நான் வந்து என்ன ஆகப்போகுது ” விட்டேற்றி பதில் சொல்லி திரிய..
பொறுமையின் முல்லைக்கு கூட கடி ஆகி விட்டது “சை என்ன டா இது இந்த இளசு பிள்ளைகளோடு.. முதலில் கிரஷ் அப்பறம் பிரின்ட் அப்பறம் பெஸ்டி… பிறகு காதல் பிறகு பிரேக் அப் பேட்ச் அப்… இருவருக்கும் இடையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் பழகி அதை காதல் என்று சொல்லி சொந்த பந்தத்தில் இவனுக்கு இவள் 
இவளுக்கு இவனும் முடிவு செஞ்சத்துக்கு அப்பறம் தங்க உறவு என்னனு புரியாத ரெண்டும் நாங்க நல்ல நண்பர்களாக இருக்க போறோம்னு வந்து நிக்குங்க..
முடில இதுங்களோடு.. இன்னிக்கி ஒரு பஞ்சாயத்தை கூட்டினா தான் சரியா வரும்..ஹ்ம்ம்.. கூற்றா பஞ்சாயத்தை.. னு தாத்ஸ் சங்கீ நாக்ஸ் சாரதா அவரை கட்டிய அப்பாவி கணவர் திருவேங்கடம் முக்கிய குற்றவாளிகள் ஆரதனா சீனி எல்லாரும் ஒரு இடத்தில் கூடி நிக்க..
பிரச்சனைக்கு காரணமான தண்டங்கள் ரெண்டும் ஒன்னியும் சொல்லாம வேற வேற பக்கம் பார்வை வெச்சு பவ்யமா நின்னுச்சு.. வந்த கடுப்பில் முல்லை “ரெண்டு பேரும் என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க?ம்ம்
உங்களுக்கு கல்யாணம் ஏற்பாடு எல்லாம் விளையாட்டா போச்சா? நான் வரல நீ வரலனு பாச்சா காமிக்கிறீங்க? கல்யாண முகுர்தம் அப்பாவும் இப்படி தான் வரமாட்டேன்னு ஆடம் பணுவீங்க தானே? சரி இதுக்கு இப்போவே ஒரு முடிவு கட்டிடலாம்.. 
உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா இல்லையான்னு ஒரு வார்த்தை இப்போவே சொல்லிடுங்க பிறகு டைவர்ஸ் அது இதுன்னு இந்த காலத்து பிள்ளைக சுலபமா சொலிடறது மாதிரி சொல்லிட்டா எங்களுக்கு தாக்க தெம்பு இல்ல பா..
இப்போ நீங்க முடிவா சொல்லிட்டா கல்யாணம் நடக்கும் இல்லைனா நிறுத்திடுவோம்” என்க
சாரதா பதறி “அண்ணி என்ன இப்படி சொல்லிட்டீங்க உங்க எல்லார் வாழ்க்கையில் நான் பண்ணின விஷயங்களுக்கு இந்த கல்யாணத்து மூலமா பிராயச்சித்தம் நடக்குதுனு நான் இப்போதான் கொஞ்சம் ஆசுவாசப்படறேன் இப்போ நீங்களே இந்த கல்யாணத்தை நிறுத்த பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? 
ப்ளீஸ் அண்ணி இதை நிறுத்திடாதீங்க..” என்க
முல்லை நிர்தாசன்யமாய் மறுத்து “இப்போ இவங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்வோம்ன்னு எனக்கு சம்மதம் சொன்னா தான் கல்யாணம்.. இல்ல நிறுத்திடுவோம்” இதுவே என் கட்டளை! கட்டளையே சாசனம்! ரீதியில் சொல்லிவிட..
சொல்லுங்க ரெண்டு பேரும் என்று ஆராதனா சீனி இருவரையும் கேட்க.. மறுபடியும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி மீண்டும் முடிவானது..
திருமணத்திற்கு அச்சாணியாக குலதெய்வம் முன்னிலையில் ஒரு வட்டம் போட்டு ஏழு கோடுகள் போடப்பட்டது.
அந்த நடுவில் உள்ள கோட்டின் மீது ஒரு வெற்றிலை வைத்து அதில் பாக்கு கற்பூரம் வைத்து கொழுத்தி இருவரிடமும் சத்தியம் வாங்கிக்கொண்டு… கல்யாணம் செய்துகொள்ள ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
முகுர்த்த புடவை மற்றும் நகைகள் எல்லாம் வாங்கி சேர்த்து இன்னும் இரண்டு நாளில் திருமணம். மாப்பிள்ளைக்கு பெண்ணுக்கு என நழுங்கு தனி தனியே வைக்கப்பட..
சந்தனம் கூட மஞ்சளும் குழைத்து பன்னீரில் ரோஜா பூக்கள் சேர்த்து நன்னீர் ஊற்றி மணமக்கள் மங்களமாய் ஜொலிக்க..
ஜவ்வாது மனத்தோடு வீடெங்கும் நண்பர்கள் புடைசூழ ஆரா சீனி கல்யாண வைபோகமே!
ஆரா கல்யாண வைபோகமே!
வீட்டின் முழுமைக்கும் மஞ்சளும் வெள்ளையும் கலந்து வெளிநாட்டு பூக்கள் கொண்டு அலங்காரம் செய்திருக்க.. வடநாட்டு திருமணங்கள் போல சிறு கடைகள் வைத்து இளநீர் பஞ்சுமிட்டாய் சோன்பாப்பிடி என்று விதம் விதமாக உணவுகள் வழங்கப்பட..
இளசுகள் விளையாட பொருட்கள் குமிக்கப்பட்டிருக்க.. வயதானோர் கூட்டத்துக்கு தனி தனியாக பிடித்த பொழுதுபோக்குகள் ஒருபுறம் என கல்யாணம் களைகட்டியது.
நழுங்கு அடுத்து வரிசை வந்த புடவைகளோடு போட்டோ ஷூட் என ஒருவருக்கும் ஓய்வில்லாமல் அந்த நாள் ஓடிவிட.. கல்யாண நாளும் விடிந்தது.
காலையில் ஐந்து மணிக்கு போர்க்கால அடிப்படையில் ஆராவை எழுப்பி.. “அடியே எந்திரு டி, மாப்ள கெளம்பி வந்துட்டாரு, நீ இன்னும் கும்பகர்ணி தூக்கம் போடரே” முல்லையின் சுப்ரபாதத்தோடு விடிந்து…
ஆ இங்கே பூஸ்.. ஆ அங்கே பூஸ்.. டூ தீ லெப்ட்.. டூ தீ ரைட் என்று அழகு கலை நிபுணர் பெண்மணிகள் நாலாபக்கமும் நின்று ஆராவின் மீது ஆறு இன்ச் மாவு கோட்டிங் கொடுத்து.. அழகியாக இருந்தவளை பேர் அழகியாக மாற்றி.. அரக்கு நிற புடவையை கட்டி.. 
ஆரி வேலை செய்த ஐம்பதுனாயிரம் மதிப்பு ஜாக்கெட் ய அவளுக்கு மாட்டி.. கடைசி நேர கட்டிங் ஒட்டிங் வேலையெல்லாம் செய்து முடிக்கும்போது ஐயர் சாமி கூப்டுட்டார்.. “பொண்ணு அழச்சிண்டு வாங்கோ… நாளியாயிடுத்து….”
“அட பொண்ணுக்கு இன்னும் ஒரு பத்து நிமிஷ வேலை பாக்கி இருக்கு.. இந்த சாமி வேற” அழகுக்கலை பெண்ணின் சிறு புலம்பாலோடு மேடை ஏரிய ஆராவை பார்த்த ஐயர் வாய் பிளந்துட்டார்..
ஆரா அவ்ளோ அழகு.. (எவளோ நாளைக்கு தான் மாப்பிள்ளை மெய் மறக்கறது? ஒரு மாற்றத்துக்கு ஐயர்..ஹீ ஹீ)
ஆரா மணவரை நெருங்கிவர இங்கு இருவரின் இதயங்களும் கல்யாண மேளத்துக்கு இணையாய் மத்தளம் வாசிக்க.. சீனியின் பக்கத்தில் உட்கார்ந்தாள் ஆரா!
இப்படி பொருந்தமான ஜோடியை கடவுள் தனியா அளவெடுத்து தான் செஞ்சுருப்பான் போல என்று வந்திருந்தோர் எல்லாம் பேச.. நேரம் யாருக்கும் நில்லாமல்.. 
மாங்கல்யம் தந்துநானேனா 
மபஷீபன ஹேதுனாம்.. சஞ்சே பத்நாமி சுபஹே.. சஞ்சீவ சரதாம் சதம்….! முழங்கி கெட்டிமேளம் கெட்டிமேளம் ஐயர் சாமி சொல்ல..
தன் கையில் இருந்த மங்கள நானை ஆராத்தனாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு.. தன் சரி பாதியாக ஏற்று கொண்டான் சஞ்சய் ஸ்ரீனிவாஸ்…
ஆஃபீசியலி ஆரா பீகேம் மிஸஸ். ஆராதனா சஞ்சய் ஸ்ரீனிவாஸ்!
கல்யாணம் முடிந்து பால் பழம் தரும் சடங்குகளில் ஆரா தன் அன்னைக்காக எந்த சுணக்கமும் காட்டாமல் நல்ல பிள்ளையாய் நடந்து கொண்டாலும்.. சீனி இடையில் அவளை பார்த்து சிரித்தால் மிளகாய் போல காரமாய் யாருக்கும் தெரியாமல் முறைக்கவும் தவறவில்லை..
என்ன நடக்கும் எது நடக்கும் என்று தெரியாமல் கள்ளன் போல கல்யாண மாப்பிள்ளை திரு திரு! இந்த கல்யாணத்தால் என்ன நடக்கும் என்று பெரியவர்கள் மனதில் ஒரு குரு குரு! 
எல்லோர்க்கும் ஒவ்வொரு விதமான மனநிலையோடு ஆரா சீனி கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது! இந்த கலாட்டா காதல் முதல் கல்யாணம் வரை முடிந்து விட..
இனி ஆராதனா சஞ்சய் ஸ்ரீனிவாஸ் இருவரின் வாழ்க்கை என்னாகுமோ?

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *