பூ _ 9
சீனி ஆராவிடம் கோவமா பேசிட்டு வந்து ஹால் சோபாவில் அயர்ந்து உட்கார…!!!
நாகராஜன் அடுபங்கரையில் இருந்து வரவும் சரியாக இருக்க… நாகஸ் சீனியிடம் ” என்ன இருந்தாலும் ஒரு பெண்ணை இப்படி அடிச்சது தப்பு டா..”
சீனி “அந்த நிமிஷம் மூளை வேலை செய்யலடா… அவளை அடிக்கணும்னு எனக்கு என்ன வேண்டுதலா?? நானே குற்றஉணர்ச்சில தவிச்சுக்கிட்டு இருக்கேன் நீயும் மேலும் ரணப்படுத்தாத டா மச்சி.” நண்பனிடம் தன் நிலை பகிர…!!
கொஞ்சம் அமைதிக்கு பின்!!
நாக்ஸ்”சரி நடந்ததெல்லாம் முடிஞ்சுபோச்சு.. இனிமேலும் அவளை ஏதும் கஷ்டப்படுத்தாத டா… தண்டணை கொடுப்பதெல்லாம் சரி ஆனால் ஒரு பொம்பள புள்ளையை இப்படி தண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது”… !!
சீனி அந்த பேச்சை மாற்ற எண்ணி… “போதும்டா..ஏதோ சமையல் பண்றேன் ன்னு போன.. என்ன சாப்பாடு செஞ்சி வெச்சுறுக்க..??”
“டாக்டர் காரமான சாப்பாடு குடுக்க கூடாது … மாத்திரைக்கு வயிறு வெந்திருக்கும் சொலிருக்கார் அதான் கஞ்சி செஞ்சேன்… ”
சீனி யக்… இது செய்ய தான் இவளோ நேரமா டா… போடா நான் ஏதாவது ஆர்டர் பண்றேன் ன்னு சொல்ல நாக்ஸ் உனக்கு சரி… ஆரா ஹெவி பவர் மாத்திரை சாப்பிடரா.. அவளுக்கு??? நாக்ஸ் கொக்கி போட…!!!
சரி சாப்பிடறேன் இதையே..!! சீனி வேண்டா வெறுப்பா ஒதுக்கீட்டு… ஆனால் பிரெஞ்ச் பிரைஸ் தொட்டு தான் சாப்பிடுவேன்.. ன்னு சின்ன பிள்ளையாட்டம் அடம் பன்னி .. அதையும் சேர்த்து ஆரா இருக்கும் ரூம்ல வை சொல்லி போயாச்சு…!!
ஆரா ரூமில் சோகப்பதுமையா படுத்திருக்க.!! சீனி ரூமுக்குள் நுழைய… இப்போ என்ன பண்ணுவானோ பயத்தில் ஆரா உதடுகளை பல்லால் இறுக்கி வாய்க்குள் வைத்து மூடி வைத்துக்கொள்ள!!!
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானம் ஆண்டி!! என்பதுபோல அவளை எழுப்பி உட்கார வைத்து சாப்பிட தயார் பண்ணலாம்னு வந்தவனுக்கோ… அட்டகாசமான சிரிப்பு!!!
குல்பி நான் கிஸ் குடுத்துருவேன் ன்னு பயந்து தானே வாயை இப்படி வெச்சுறுக்க… பயந்து பயந்து… ன்னு ரெண்டு மூன்று முறை அழுத்தி சொல்லி.. அவளை வெறுப்பேற்ற….!!!
நமது தன்மான தமிழச்சி….குல்பிக்கு வீரம் பொத்துக்கொண்டு வந்துட்டு… வாயை சரி பன்னி… அதெல்லாம் ஒன்னும் இல்லை…. படுத்தே கிடப்பது ஒரு மாதிரி இருந்துச்சு அதான் கொஞ்சம் வலி பொறுத்து எழுந்திருக்க முயற்சி பண்ணினேன்.. ன்னு அனாயசமாக புழுவ….!!
சீனியோ அப்போ சரி உனக்கு பயம் இல்லை…. ம்ம்ம்…. சொல்லிக்கொண்டே.. கிட்டே ஒரு ஒரு அடியாய் எடுத்து பக்கம் செல்ல… அவளுக்கு இதயம் வாய் வழியே வந்துவிடும் போல… டம் டம் ன்னு மத்தளம் கொட்ட..!!
கிட்டே நெருங்கி…. மெல்ல தன் கட்டிட்ட கையின் ஆட்காட்டி விரலால் அவள் நெற்றியில் வைத்து…. பயம் இருக்கணும் குல்பி… பயம் நல்லது…ன்னு சொல்லிக்கொண்டு… அந்த விரல் எங்கு முத்தம் வைக்கலாம் ன்னு இடம் தேடுவது போல்…
நெற்றியில் இருந்து மூக்குக்கு இறங்கி… அவள் மேலுதடு… கீழுதடு வந்து… கீழுதடை ஆட்காட்டி விரலும் கட்டைவிரலும் கொண்டு வலிக்க பிடித்து இழுத்து…
கிட்டே கிட்டே வர… அதுவரை அதிர்ச்சியில் விரிந்திருக்கும் கண்கள்… யப்பா நாங்க இதெல்லாம் பாக்க மாட்டோம் 18+ ன்னு சொல்லி தங்கள் இமை ஷட்டரை மூடி கடை அடைப்புக்கு சென்று விட…
சீனியின் சூடு மூச்சு இப்போ ஆராவின் முகத்தில் மோத…
என்ன குல்பி உன் உதட்டில் ரேகையை காணும்???
ஹஸ்கி குரலில் கேட்க!!!
எங்க முத்தம் கொடுக்க காணும்…. ன்னு யோசித்து!!!
அவன் பேசியதும் கொஞ்சம் நிம்மதி அடைந்து அவள் ஒரு கண் மட்டும் திறந்து பார்க்க..!!
அதற்கென காத்திருந்தாபோல்… அவள் உதட்டில் இருந்த கையை பட்டென விலக்கி.. கைச்சந்தை பற்றி.. டக்கென அவளை லாவகமாக எழுந்து உட்கார வெச்சுட்டான் பெட்டின் மேல்…!!
இப்போ அவளாகவே!! கொஞ்சமாக நகர்ந்து பெட்டின் தலை மாட்டு பக்கம் சாஞ்சி உக்காந்துக்க…!!
“ஒய் ஆரா… ஹ்ம்ம் இல்லை குல்பி தான் நல்லாருக்கு… அது என்ன ஆரா பூரான் ன்னு … உனக்கு யாரு பேர் வெச்சது..!! நீ இனி குல்பி தான்..!!
ஆரா தன் பெயரை பலித்ததற்கு முகம் சுளிக்க…
“சாப்பிட கூப்பிட தான் வந்தேன்.. மகாராணி எழுந்துக்க முடியாது அதான் தூக்கி உக்கார வெச்சேன்!!”
இந்த சீனி ரொம்ப ரிச் மாடல் மா…!! அடிக்கடி கிஸ் எல்லாம் கேக்க கூடாது ஓகே வா!!! சொல்லி
சாப்பாடு கொண்டு வரேன்..”ன்னு சீனி வெளிநடப்பு!!
புயல் அடித்து ஓய்ந்தது போல் ஆரா அப்பாடி ன்னு பெருமூச்சு விட… உன்னை இப்படியே விடுவேனா என்பதுபோல் சீனி உள்ளே எட்டிப்பார்த்து…
“எனக்கும் கை எல்லாம் காயம்.. அதுனால முதல் நாள் ஊட்டின இல்ல அது மாதிரி… ஊட்டனும்….. சொல்ல மறந்துட்டேன்…”
சொல்லி…… வெளியே போனமாதிரி தான் இருந்தது.. ஆனால் மறுபடியும் எட்டி பார்த்து.. உனக்கும் கை வலிக்கும் அதுனால… அதுனால…
உன் வாயால் ஊட்டி விட்டாலும் பரவாயில்லை அட்ஜஸ்ட் பன்ணிக்கிறேன்.. ஹீ ஹீ…” சொல்லிவிட்டு உண்மையா இப்போ தான் கிச்சன் பக்கம் நகர்ந்தான்…
ஆராவின் மனதோ…. இவன் கூட இந்த ரெண்டு நாள் இருப்பதற்கே இப்படி பாடாய் படுத்தறான்… அப்பப்பா… இவனுக்கு வரும் பொண்டாட்டி நிலைமை ரொம்ப பாவம்!!!
ம்ம்ம் எங்க இருக்காளோ?????
ஹ்ம்ம் யாரோ வா???
ஒருவேளை நானே வா இருந்தா???
அவள் அப்படி மனசுக்குள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மேலே போன தேவதை ஒன்று ததாஸ்து… கூறியதோ????
ம்ம்ம் இருக்கலாம்…. பிகாஸ்… நதி அப்பார்ட்மெண்ட் 18 ஆவது மாடி… சீனி ஆரா வீடு 17 ஆவது மாடி… !! நோ கல்!!! நதி பாவம்!!
அவளை மேலே சிந்திக்க விடாமல்.. சீனி சாப்பாடு கொண்டு அறைக்குள் நுழைய…. ஆராவின் கவனம் அவன் பக்கம் போயிடுச்சு!!!
சீனி கஞ்சியில் ஒரு ஸ்பூன் போட்டு பிரெஞ்சு பிங்கர்ஸ் கூட தன் காயம் பட்டு கட்டு போட்ட கையால் ஆராவுக்கு ஊட்ட… ஆராவுக்கு பாவம் கை வலிக்குமே ன்னு ஸ்பூனை வாங்கி அவனுக்கு திரும்ப ஊட்ட…. !!
உலகத்திலே சீனியும் ஆராவும் வெறுக்கும் ஒரே உணவான கஞ்சி… குண்டானோடு காலி!!!
மாற்றி மாற்றி ஊட்டி.. என்னோட பிரெஞ்ச் பிங்கர்ஸ் அனாதையாக கிடக்க… இது தான் நதியின் மிகுந்த சோகமான.. கண்கள் குளமான பகுதி…. சோ சாட்!!! பாவம் பிரெஞ்ச் பிரைஸ்!!!
இப்படி ஊடலும் இல்லை இல்லை…. ஊட்டலும்…… சீண்டலுமாக… இரண்டு மூன்று நாட்கள் கழிய.. நாக்ஸ் தன் சொந்த அப்பார்ட்மெண்ட் க்கு போய்ட்டான்.. தன் ஒரிஜினல் வாழ்க்கைக்கு…
இங்கு இருந்தால் ஆரா பார்க்கும் ஏமாற்றிவிட்டாயே என்கிற பார்வை தாங்கி கொள்ள முடியாமல்.. கிளம்பும் முன் ஆராவிடம் சாரி… சொல்ல வந்தவனிடம் ஆரா சின்ன முகசுழிப்பு கூட காட்டவில்லை….
புத்தம் சரணம் கச்சாமி.. போல்… மன்னிச்சுட்டேன் போடா… என்பதுபோல் ஒரு ராணி தோரணை!!!
நீ செஞ்சது எதுவும் என்னை பாதிக்கலை ன்னு கெத்து காமிச்சு உக்காந்துட்டா!!!
தவறு துரோகம் செஞ்சவங்களுக்கு தரும் ஆகச்சிறந்த தண்டனை… மன்னிப்பு!!!
ஆராவும் கொஞ்சம் சரி ஆகி… கால்களில் அதிக அழுத்தம் கொடுக்காமல் விரல்களை ஊனி கொஞ்சம் சுவற்றில் கை பிடிச்சு நடக்க ஆரம்பித்து விட்டாள்!!
சீனியின் கை கட்டு பிரிச்சு.. இப்போ சமையல் எல்லாம் சீனி செய்ய.. நாட்கள் கடந்தன.. சீனி தன் அலுவலகத்தில் ஒர்க் பிரம் ஹோம்…அனுமதி வாங்கி வீட்டில் இருந்தே தன் வேலையை செய்ய ஆராவுக்கு கை துருத்துருக்கும்!!!
போதை போட்டவர்களுக்கு ஆறு மணிக்கு மேல் கை நடுங்குவது போல… லேப்டாப் பார்த்ததும் ஆராவுக்கு நாக்கு ஊரும்!!!
அவள் லேப்டாப் யை பாச பார்வை பார்ப்பதை அறிந்த சீனி ஒரு முறை அவளிடம் நெட் பாதுகாப்பு குறியீட்டை சொல்லாமல்.. லேப்டாப் யை மட்டும் பாவம் பார்த்து கொடுத்து கேம் மட்டும் விளையாட சொல்லிவிட்டு…. பக்கத்து ரூம்க்கு போக…
அவன் திரும்ப வரும்போது அவனுடைய நெட் பாதுகாப்பு குறியீட்டை ஹாக் செய்து… மெயில் ஓபன் பன்னிக்கொண்டிருக்க… சீனிக்கு வந்த கோபத்தில்….
ஏன்னா அடி….!!!
பயங்கரமா ஒரு கிஸ் அடிச்சுட்டான்…!! கழுத்துல தான் இந்த தடவை….!!
கழுத்தில் பூனை முடி இருக்கும் காதுக்கு பின்னான பின்மண்டை பகுதி மிகவும் சென்ஸிட்டிவ்… பெண்களுக்கு!!!
அங்கு சீனி அழுந்த இதழ் பதித்து முத்தமிட… ஆராவின் மொத்த உடலும் சிலிர்த்து கூச….
ஆரா இனிமே இதுபோல செய்யமாட்டேன் செய்யமாட்டேன் ன்னு புறமுதுகிட்டு ஓடி வந்துட்டா!!!
ஒரு தடவை கோவப்பட்டு புண்ணாகி இருப்பது பத்தாதுன்னு மறுபடியும் அடிக்க சீனி முட்டாளா என்ன!!
அவளை அடிக்க போய் தன் கை காயப்பட்டு அவளும் அடிப்பட்டு… குற்றஉணர்ச்சி கொஞ்சமேனும் தன் பணியை அவனிடத்தில் சிறப்பாக செஞ்சிட்டு போயிருச்சு..!!
ம்ம்ம்… அது மட்டும் இல்லாமல் கிஸ் அடிக்கும் சான்ஸை மிஸ் செய்பவன்…. ஒரு பெண்ணை மிஸ்ஸஸ் ஆக்கும் தகுதியை இழக்கிறான்…. ன்னு மிக பெரிய மகான்கள் சொல்லி இருக்காங்க!!! நம்புங்க மக்களே!!
இதெல்லாம் இப்படி ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும் போது…. சீனி ஆராவின் பின்புலம் பற்றி முழுதாக தன் டிடெக்ட்டிவ் மூலம் விசாரணை பண்ணிக்கொண்டு… அவளுக்கு மேலே உள்ள ஆட்களை கண்டு பிடிக்க பயங்கரமா தீவிரமா ஆராவுக்கு தெரியாமல் முயற்சி செய்து கொண்டிருக்க!!!
அந்த கடுப்பில் இவள் இப்படி இருப்பதால் தானே இவளோ கஷ்டம் நல்லவளா இருந்து தொலைந்து இருக்க கூடாதா??? ன்னு அப்பப்போ ஆராவிடம் எரிந்து விழ!!!
ஆராவின் மனசில் அவன் காட்டும் பரிவு பாசம் எல்லாம் கடைநிலைக்கு போய்…. இந்த கோபமும் விஷம் சொட்டும் தேள் கொடுக்கு வார்த்தைகழும் மட்டுமே பதிந்தது!!!
மனிதர்களின் மனம் கண்ணாடி போல.. உடைந்தால் ஓட்ட வைக்க முடியாது என்று சொல்லி கேள்விப்பட்டதுண்டு… ஆனால் உண்மையில் மனித மனம் ஒரு டேப் ரெக்கார்டர் போல….
பத்து வருடத்திற்கு முன் நடந்த ஒரு குத்தல் பேச்சை ஞாபகம் வைத்து இப்போது அதையே வாய்ப்பு வரும் போது ஒளிபரப்பும்!!!!
ஆராவும் இப்போ அந்நிலையே!!! சீனியின் நேரம் வரும்போது ஆரா என்ன ஒளிபரப்புவாளோ??
பூவழகி வருவாள்
