சிலிக்கன் காட்டுப்பூவே
பூ 13
சீனி சங்கீ பனிப்போர் மிக பயங்கரமாய் நடந்து கொண்டிருக்க…!
சீனி… நான் வேற ஆராவுக்கு போன் பண்ணனும்.. இந்த சங்கீதா வேற நம்ம பின்னாடியே டிடெக்ட்டிவ் வேலை பாத்துட்டு இருக்கா…
இவளை எப்படி கழட்டி விட்டு.. குழப்பி விடரது… யோசிக்க…. மண்டையில் மசாலா இல்லாமல் மூளை மசால் வடை திங்க போய்டுச்சு..!
சீனிக்கு யோசிக்க நேரம் கொடுக்காமல் சங்கி.. அவனை ஒரு வார்டு சந்துக்குள் வைத்து மடக்கி பிடிச்சுட்டா…
“ஹலோ நீங்க யாரு? முல்லை ஆண்ட்டி க்கு ஹெல்ப் பண்றீங்க? தாத்ஸ் ய காப்பாற்ற இவ்ளோ ரிஸ்க் எடுத்து இருக்கீங்க??
உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?? ” சம்பந்தம் இல்லாத ஒரு ஆள் தன் குடும்ப வட்டத்திற்குள் வந்தது கண்டு யாரு இவன் புதுசா என்கிற குழப்பத்தில்…
கடுப்பில்.. காரமா… ரொம்ப வீரமா… கேள்விகளை நெத்தி பொட்டில் அடித்த மாதிரி சட்டு சட்டுனு கேட்க…!
அடடா… ஊர்ல அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாருக்கும் இந்த மாதிரி விவரமான விவகாரமான பிரின்ட் ஒருத்தி இருந்தா..?
என்னை மாதிரி கடத்தி போய் காதல் செய்யும்
ஆண்டி-ஹீரோ பாடு திண்டாட்டம் தான்… ஐயகோ.. ராமா…
இந்த அநியாயத்தை கேட்க எந்த நாவல் விமர்சகர்களும் இல்லையா??? முதலில் ஹீரோயின்ஸ்க்கு பிரின்ட்ஸ் ய கட் பண்ணுங்கயா… சீனிப்பையன் மனசாட்சி புலம்பல்கள்..!
மனடாட்சி புலம்பல்களை புறந்தள்ளிவிட்டு…. சீனி “இங்க பாருங்க சிஸ்டர்… நான்…”
(வெடிச்சது பஞ்சு மட்டும் இல்ல சங்கீ யோட குட்டி நெஞ்சும்தான்!! இவ்ளோ ஸ்மார்ட்யா ஒருத்தன் டக்குனு சிஸ் சொன்னா….. என்ன ஆகும்….. பீலிங்ஸ் எல்லோருக்கும் வரும்..யா..!)
“நான் சஞ்சய் ஸ்ரீநிவாஸ்..சோப்ட்வேட் என்ஜினீர் யா பெங்களூரு ல ரேமால் ல ஒர்க் பண்றேன்… அம்மா அப்பா சாரதா திருவேங்கடம்..பெத்த பேமிலி மா… பில்ட் அப்… பீலாஸ்..எக்சட்ரா…
முல்லை ஆண்ட்டி அவுங்க டாட்டர் மிஸ் ஆராதனா காக ××× மேட்ரிமோனியில் போட்ருந்தாங்க… நான் இன்டெரெஸ்ட் குடுத்துருக்கேன்…. அவங்க வந்து மீட் பண்ண சொல்லி கேட்டுக்கிட்டாங்க..
அதனால நான் இங்கு வந்தது.. பட் இங்க வந்து பார்த்தா.. நிலைமை சரி இல்லை சோ ஒரு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்றேன்…
நீங்க என்னன்னா… ஏதோ கொள்ளை கொலை பண்ற தேர்ட் ரேட் ஆளு போல விசரிக்கிறீங்க??
உங்க ஆளுங்க எல்லாம் எப்போ பார்த்தாலும் என்னை கேள்வி கேட்டு கொடையுறீங்க??
என்ன பத்தி என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க?? ஆச்சா பூச்சா.. ன்னு குதியோ குதி ன்னு துள்ள…”
சங்கீ… காதுக்குள்… ஒய் பிளட்… சேம் பிளட்… யப்பா ஆள விடரா சாமி ன்னு “சரிங்க சரிங்க நான் கேட்டது தப்பு தான்.. ஆயிரம்… சாரி சொல்லி …
கிட்னி பிடுங்க கூப்பிட்ட சீனியிடம் இருந்து வெற்றிகரமாக தன் உயிரை நெஞ்சோடு இறுக்கி பிடித்து கொண்டு வெள்ளை கொடிய கூட தூக்கி காட்டாமல்.. அப்படி ஒரு ஓட்டம்… சங்கீ…!
வீரம் எனப்படுவது யாதெனில்… கிட்னி பிடுங்கும் ஆட்களிடம்… கொஞ்சுண்டு சட்னியை நக்க கொடுத்துவிட்டு… திரும்பி பார்க்காமல் ஓடி வருவதே!!!
சீட நதியானந்தாவிற்கு குருஜீ அருளிய பொன்மொழிகள்.!!! நோ கல்… அது வன்முறை டார்லிங்ஸ்…ஹீ ஹீ
சீனி இவ்ளோ கோவ மூஞ்சியா சண்டை போட்டு தாக்க வந்த பானங்களில் இருந்து கிருட்டு கிருட்டு ன்னு ஜம்ப் ஆகி தப்பிச்சு அதில் மூளை சூடாகி…
அதை கூல் பண்ணிக்கிட்டு வரலாம் ன்னு… பாத்ரூம் பக்கம் போய் ஓரஞ்சாரமா யோசிச்சு பாத்தாலும்.. எந்த ஐடியா வும் வரல..
சரி விதி வீட்ட வழி ஆராவிடம் இங்க நடந்தது சுருங்க சொல்லி பாப்போம்… வந்தா மலை.. போனால் ஏதோ ன்னு முடிவு எடுத்து பெங்களூர் போய் பாத்துக்கலாம்… சீனி முடிவு தற்போது..!
மருத்துவமனை ஆட்கள்.. சங்கி.. எல்லாரையும் சமாதானம் செஞ்சிட்டு நானே ஆராவை கூப்பிட்டு வரேன் பெரிய மனுஷ தோரணையில் சொல்லிவிட்டு…
சங்கீ கிட்ட ஆராவின் அட்ட்ரஸ் எல்லாம் வாங்கிக்கொண்டு (இப்போ சீனி ஆராவை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கொண்டிருக்க மாட்டாரப்பா… நாதரித்தனம் பண்ணினாலும் நாசுக்காக பண்ணனும்…)
கிளம்பிட்டார் பெங்களூருக்கு தன் பைங்கிளியை பார்க்க…
இதெல்லாம் நடந்து முடிய இரண்டு நாட்கள் கடந்து போயிருக்க.. ஆராவுக்கு போனே பண்ணவில்லை சீனி….! இங்கு நடக்கும் கலவரங்களில் பண்ணலாம் நினைச்சாலும் முடியல…
ஆரா பசலை நோய் அடுத்த ஸ்டேஜ் க்கு போய்… இப்போ காதலன் மேல ஊடல் கொண்டு…
அதாவது மனைவிமார்கள் தன் கணவன் மீது கோவமா இருக்கும்போது… கணவன் ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வரட்டும் பாத்துகிறேன்…
இன்னைக்கு சம்… சம்… சம்மு சம்ஹாரம் பன்னிடறேன் என்னும் நிலை யை தான் நம் ஓல்ட் கவிஸ்… ஊடல்… ன்னு ஏமாத்தி… நம்மை நம்பவச்சி…
அழகான வார்த்தைகள் உள்ளுக்கும் அழகான அர்த்ததோடு இருக்க வேண்டிய அவசியமில்லை பாருங்க…!!
ஊடல்… ஆஹா என்ன அழகான வார்த்தை… வாவ்..!
ஆனா அர்த்தம் ஊட்டு பக்கம் போனா நீ காலி மவனே?? ஹா ஹா..
அதான் ஓல்டுஸ் நம்மை…
தமிழ் அழகை காமிச்சு காமிச்சு… தமிழ் மீது தீராக்காதல் கொள்ள வெச்சுட்டாங்க…!நாமும் அழகை உணர்ந்து?..ஆபத்தை உணராமல் போயாச்சு..!
சீனி ஆரா இருக்கும் பிளாட் பக்கம் நெருங்க நெருங்க….
ரூம் ஸ்பிரே அடித்தால் கும்முன்னு ரூம் முழுக்க ஒரு வாசம் நிரம்புமே அது போல…
ஆராவின் வாசம் அந்த ஊர் முழுவதும் நிரம்பியது போல ஒரு தோற்றமயக்கம்….
அவன் நினைப்புக்குள் முழுதும் ஆரா நிரம்பி வழிய தொடங்கினாள்… மூச்சு முட்ட முட்ட ஆரா வாசம் சீனியின் சுவாசப்பை எங்கும்…
இப்போ நாம் போய் நின்றதும்… அவளுக்கு எப்படி இருக்கும்?? என்ன சொல்லுவா…என்ன செய்வா? பலவிதமான.. கனவுகளில் பறந்து போய்க்கிட்டு இருந்தார் நம் ஸ்ரீனிவாஸ்…
நிகழ்வுகளின்போது கிடைக்கும் இன்பத்தை விட… அது எப்படி நிகழும் என்கின்ற கற்பனை காட்சிகள் மிக அழகானவை.. சுவாரஸ்யம் மிக்கவை…!
கனவு காணுங்கள் ப்ரோஸ்..!. இப்படி நடந்தால் அப்படி நடந்தால்…. என்கிற மாதிரி… நிஜமா நடக்கலைனாலும் அந்த கற்பனையில் வாழும் நிமிஷம் வரை சுகித்திருப்போம்..!
கற்பனைகளுக்கும் வார்த்தைகளுக்கும் நிறைய சக்தி உண்டாம்… ஈர்ப்பு விதி.. சொல்லுது..!
எடுத்துக்காட்டு… மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி… ஒரு நாளில் சிலபல முறை சொல்லி பாருங்க .. நிச்சயமா மகிழ்ச்சியான ஒரு மனநிலையை உணருவீர்கள்…!
இடம் பெங்களூரு.. பேய் பிளாட். 17 ஆவது மாடி
ஆராவுக்கோ அன்று காலை ஏழுந்ததில் இருந்து ஏதோ விளங்காத… இனம்புரியாத உற்சாகம் கரைபுரண்டு ஓட…
அதான் அந்த மான்ஸ்டர் காதலன்… வீட்டில் இல்லையே.. ஜாலி கே ஜிம்காணா தான் ன்னு எண்ஜோய்மெண்ட் மோடில் ஆரா ..
தனக்கு பிடித்த மாடர்ன் உடை ஒன்றை எடுத்து மினி ஸ்கர்ட்… ஒரு ட் ஷிர்ட் போட்டு கவர்ச்சி பொம்மை போல… சின்ன பிள்ளையாட்டம் வீட்டுக்குள் நடமாடிக்கிட்டு நடனமாடிக்கிட்டு இருக்க…
சீனி என்னும் காதல் காட்டேரி சூடு ரத்தம் குடிக்க… அவளை நோக்கி வந்தாச்சு…!
வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க… ஆரா சரி யாருன்னு பாப்போம்… கதவின் லென்ஸ் வழியா எட்டிப்பார்த்து… நின்றது சீனி என்றதும்…. கண்ணின் கருவிழி பூப்பில் தன் முழு விட்டம் விரிய…
சயின்ஸ் யா நம் இணை.. காதலன்.. காதலியை பார்க்கும் போது பரவசத்தில் கண்ணுக்குள் இருக்கும் பாப்பா பெருசா விரியுமாம்…
(பொறுப்பு துறப்பு:
இதெல்லாம் டெஸ்டிங் செய்யறேன்னு உங்க ஜோடிகளை கண்ணோடு கண்வச்சி உத்து உத்து பாத்து ஏதாவது சேதாரம் ஆனால் சங்கம் பொறுப்பல்ல..!)
ஆரா சீனி மீதான தன் காதல் உணர்ந்து முதல் முறை தன் இணையை பார்க்கும் வெட்கத்தோடு…. எதிர்பார்ப்போடு படார்னு கதவை திறக்க… சீனி அதற்கும் குறையாத எதிர்பார்ப்போடு….
குல்பி…விழி விரித்து கூப்பிட…. அது தந்த குத்துகலத்தில்… ஆரா பாப்பா… அப்டியேய் ஒரு ஸ்மால் ஜம்ப் போட்டு… சீனி கழுத்தை கட்டிக்கொள்ள…
ஆராவின் குண்டு குல்பி உடல் தன் மீது மோதியது… பஞ்சு மேகத்தில் மோதும் உணர்வு சீனிக்கு… ஆஹா….
இதெல்லாம் குண்டு குல்பி பொண்ணை கட்டும் ஆண்களுக்கு மட்டுமே… கிடைக்கும் அடிஷனல் அப்பரைசல்….!
கரும்பு மெஷின் ல மாட்டினது போல இருக்கும் என்பதெல்லாம்… என் கட்சிக்காரர்களை பார்த்து பொறமையில் சொல்லப்பட்டவை யூர் ஹானர்..!
ஒல்லி பெல்லிக்கள் பார்த்து ரசிக்க மட்டுமே… மோதினால் எழும்பு ஏடாகுடமாக குத்தும் வாய்ப்புகள் அதிகம்….
பிளஸ் மைனஸ் சொல்லி…. பக்தகோ(கே)டிகள் வார்னிங் கொடுக்கிறது நதி கடமை… eee
சீனி ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் மறந்து… அப்படியேஆராவை இன்னும் இன்னும் இறுக்கி தூக்கி ஒரு சுற்று சுத்த…
ஆரா தன் கையை விரிச்சு குழந்தை போல் குத்துகளித்து ஹா ஹா.. சிரிப்பு …. வீடு நிறைந்த சிரிப்பு சத்தம்…!
(ம்ம்ம் விட கூடாது… நாம் ஒரு தமிழ் நாவல் எழுதறோம்… அழனும் எல்லாரும் அழனும்…ஒருத்தரும் சந்தோஷமா இருக்க கூடாது… உள்ளுக்குள் ஒரு சைக்கோ… பிராண்டுது.. நதியை..ஹீ ஹீ)
சிரித்து சிரித்து ஓய்ந்து… ஆராவை… கீழ் இறக்கும்போது தான் சீனி ஆராவின் உடை பார்த்தான்… அய்யயோ…யப்பா… ஒரு முறை எச்சில் விழுங்கி தொண்டை குழி ஏறி இறங்க…
அப்படி ஏன்னா ட்ரெஸ் யா அது???
அது…அந்த ஹோட்டல் கனவில் வந்த உடை….. இப்போ சீனி கன்வர்ட் டூ கள்ளன் மோட்…
அவளை பார்த்த பார்வையில் மாற்றம்.. ஆராவின் அங்க லாவண்யங்கள் அனைத்தும் அந்த சிறிய உடையின் அளவினால் மறைக்க முடியாமல்…
அது இன்னும் அவள் சிலை மேனியை அழகாய் காட்ட… காதல் பித்து… சீனிப்பையனுக்கு… கிர்ருன்னு ஹை ஸ்பீடில் எரியாச்சு…!
அவன் பார்வை மாறியது கூட தெரியாமல் ஆரா அவனிடம் இப்போ கொஞ்சல் முடிந்து மிஞ்சல் போகலாம் ன்னு…
தன் கையை காலை தரையில் உதைத்து… அவனுக்கு எதிர் பக்கமா திரும்பி நிக்க…. முன்னாள் பார்த்ததை விட… முன்னாடி…பின்னாடி நல்லா இருஞ்சி… ஹீ ஹீ…
பேட்டரி பொம்மைக்கு சார்ஜ் ஏத்துறோம் தெரியாமல் இந்த மக்கு பொண்ணு ஆரா … அவன் எப்படி பார்க்கிறான் தெரியாமல் மண்டூகம் போல அங்கேயே சும்மா கோவமூஞ்சி வெச்சி நிற்க…
சீனு காதல் டிராகன் இப்போ சூடு மூச்சோடு… மெல்ல மெல்ல ஆரா பக்கம் அன்ன நடையிட்டு மூவிங்….
அவளும் இவனுக்கு வசதியா திரும்பி நிற்க… சீனி இப்போ ஆராவை பின்னால் இருந்து இடுப்பை கட்டி பிடிக்க..
அவள் கோவமாய் இருப்பதாய் காட்ட.. போங்க மாஸ்டர் என்ன உங்களுக்கு ஞாபகமே இல்லை… ஒரு கால் கூட பண்ணலை… நான் உங்களுக்கு வேலைக்காரி தானே.. அதான்.. கோவமில்லா கோப வார்த்தை பேச..
பேசும் உதடுகளை.. தன் இரு விரல் கொண்டு அழுந்த பிடிச்சி நிறுத்திவிட்டு… இன்னும் அவளோடு ஒட்டி அவளுக்குள்ளேயே போய் விடுபவன் போல… அவளை நொறுக்கி பிடிக்க…
அது வலித்தாலும் … அது மொழியில்லாமல் சொல்லும் அவனில் அவளின் பிரிவு தந்த வலியை… அவனின் பிரிவு துயரை…
அவனும் தன்னை தேடி இருக்கிறான் என்பது இந்த நெருக்கத்தில் புரிய…. ஆதர்சன தம்பதிகள் போல… அவன்பால் உள்ள கோவங்கள் அனைத்தும் காற்றிலிட்ட கற்பூரம் போல் கரைந்து சென்றுவிட….
இப்போது ஆராவும் தன் காதலானோடு ஒட்டி அவன்மேல் சாய்ந்து நிற்க.. இன்னும் இன்னும் உறப்பம் போடு ன்னு சீனி மனசுக்குள் காதல் சாத்தான் மூளைக்குள் மணி அடிக்க…
சீனி இன்னும் அவளை நெருங்கி நெருக்கி.. சீனி விஜய் தேவரகொண்டா… அனகோண்டாவாய் மாறி ஆராவை நெருங்க… அவளும் வெண்ணெய் சிலை யா மாறி அவள் இணைக்கு இணக்கம் காண்பிக்க…
மோகம் கொண்ட ஆணுக்கு அது இன்னும் சுதந்திரம் அளிக்க.. கைகள் அதுபாட்டுக்கு ஆராவின் திரண்ட சதை கோளங்கள் மீதில் கோலங்கள் போட…
சீனி மோகத்தால் தன் முத்த ஊர்வலத்தை தொடங்கி…
ஆராவின் கழுத்தின் பின்பாகம் தொடங்கி… காதுமடல் முத்தி எடுத்து… காதுநுனி கடித்து….
காதுக்குள் தன் நாக்கு நுழைக்க… ஆரா கூச்சத்தில் நெளிய. தன் ஜோடி பெண்ணின் கூச்ச பாகம் கண்டுபிடித்த கள்ளன். மறுபடி மறுபடி அவளை அதேபோல் கூச செய்ய…
அவள் அங்கும் இங்கும் அசைய… ஆசை கொண்ட அனக்கொண்டாவுக்கு அது இடைஞ்சலாக போய்… சிறு கோபம் முகிழ்க்க… அவசரமாய் அவளை தனக்கு நேருக்கு நேராக நெருக்கமாய் திருப்பி இன்னும் முழுதாய் அவளை தன்னுள் சுருட்டி இறுக்க ….
தன் சுந்தரன் மீது தன் முழு தேகம் உரச…வெட்கத்தில் ஆரா உடல் முழுவதும் செங்கொழுந்தாய் மாற….
அந்த வெக்கம் மறைக்க..ப்ரயத்தனப்பட்டு அவன் மீதே செஞ்சாந்தாய் அப்பிக்கொண்டாள் அந்த சுந்தரியானவள்….!
அவள் திமிர திமிர… இருநூறுக்கு போன சீனி காதல் மீட்டர்… அவளின் அபார ஒத்துழைப்பில்… தன் வேகம் அதிகரிக்கும் நேரம்…
பூஜை வேலை கரடியாக… நந்தி(தா).. இல்லை.. சீனியின் தொ(ல்)லை பேசி தான்…
தனக்கும் அவளுக்கும் மூச்சிரைக்க …அவளை தன் தோளிலே சாய்த்து… ஓய்வு கொடுத்து.. தானும் கொஞ்சம் நிதானப்பட்டு அழைப்பை ஏற்று பேச…
அழைத்தது மருத்துவமனை அட்மின் ஊழியர் ஒருவர்..
“சார் முல்லை பேசண்ட்.. பல்ஸ் கொஞ்சம் பாலன்ஸ் இல்லாம இருக்கு சார்..”
குறைவதும் கூடுவதுமா இருக்கு… இன்னும் ஒரு ஐந்து மணி நேரத்திற்குள் அவங்க ஸ்டேஜ் இம்ப்ரூவ் ஆகலைனா கஷ்டம் சார்..
டாக்டர் உங்களுக்கு இந்த தகவல் சொல்லிவிட சொன்னாங்க அப்பறம் அவங்க பொண்ணை அழைச்சிட்டு வராதா சொல்லி இருந்தீங்களாம்.. அதையும் கேட்டுக்க சொன்னாங்க சார் ”
“ம்ம்ம்… சரி.. நான் அவங்க பொண்ணை மீட் பண்ணிட்டேன்.. அவங்களை இன்றைக்கு இரவு பிலைட் ல கூப்பிட்டு வந்துறேன்… ஒரு 8 மணிக்குள் வந்திருவேன்”
“டாக்டர் சார் டீம் தயாரா இருக்க சொல்லுங்க… ” நீட் யா பேசிவிட்டு வைக்க”
ஆரா அவன் பேச்சின் சாராம்சம் கொஞ்சம் காதில் விழுந்த வரைக்கும்… யாரோ ஒரு அம்மா மருத்துவமனையில் இருக்காங்க… அவங்க பொண்ணை சீனி.. அழைத்து போகணும் இது போல…
கோடிட்ட இடங்களை நிரப்புக…மாதிரி மனசு ஒரு கதையை உருவகப்படுத்திக்கொண்டது….!
சீனிக்கு பேசி முடித்ததும் தான் ஆரா தன்னுடன் இருப்பதே புரிந்து.. திடுக்கிட்டு அவளின் முகம் பார்க்க… ஆரா சிறிய குழப்ப ரேகை சுமந்த முகத்துடன்.. தன் தலையை அவன் தோளில் இருந்து உயர்த்த….
திரும்பவும் தன் கை கொண்டு அவளை மெல்ல தன் தோளில் சாய்த்துக்கொண்டார் சீனி….எவ்விடர் வந்தாலும் என் தோள் சாயடி பெண்ணே… என்பதுபோல்.. சீனி பேச ஆரமிக்கும் முன்…
ஆரா ” மாஸ்டர் யாருக்காவது உடம்பு சரி இல்லையா?? உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு? கால் வந்ததும் அப்செட் ஆகிடீங்க?? ”
“மறுபடியும் நீங்க போக வேண்டி இருக்கா?? ஏதோ பொண்ணு ன்னு காதில் விழுந்தது.. அவங்களையும் கூப்பிட்டு போடனுமா??”
தனக்கு புரிந்த வகையில்… குண்டு கிளி மிழற்ற… சீனியும் இதுவே சாக்குன்னு…அவள் சொன்ன கதையை கையில் பிடித்துக்கொண்டு..
“ஆமா குல்பி.. என் நண்பன் ஒருத்தன் அம்மாவுக்கு சின்ன விபத்து.. அவங்களை பார்க்க அவந்தங்கச்சியை கூப்பிட்டு போகணும்.. சென்னைக்கு”
“அது பொண்ணு என்கிறதுனால நான் தனியா போய் கூப்பிட்டு போக கொஞ்சம் சங்கடமா பீல் பண்றேன்” வரிசைகட்டி பொய்களை வாரிஇறைக்க…
ஆராவும் அந்த அழைப்பு பேச்சு .. வச்சி உண்மைதான் போல நினைச்சு.. நான் வேணுன்னா அந்த பொண்ணுக்கு துணைக்கு வரவா??
சென்னை என்றதும் அவளுக்கு தன் ஊர் பார்க்கணும் என்கிற ஒரு சின்ன சுயநலமும் உருவாக… தானே வலிய வரேன் சொல்லி சீனி என்ன சொல்லுவானோ ஏன்று… அவன் முகத்தை பார்க்க..!
சீனி மனசுக்குள் … அப்பாடி நாம் நெனைச்சது இவ்ளோ சுலபமா நடக்கும் நினைகவே இல்லை… நினைப்போடு… ஆராவை பார்க்க பாவமாய் இருந்தாலும்
வேண்டா வெறுப்பாய் ஒத்துக்கொள்ளும் ஆள் போல பிகு பணிக்கொண்டிருக்க… ஆரா பல ப்ளீஸ்கள் போட்டு.. அவனை ஒத்துக்கொள்ள வைக்க வேண்டியதாயிற்று..!
சீனி “இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பனும்… உனக்கு தேவையான மிக முக்கியமான பொருட்கள் மட்டும் பேக் செஞ்சிக்கோ.. நானும் பிரேஸுப் பண்ணிட்டு வந்துடறேன்” சொல்லிவிட்டு எழுந்து தன் அறைக்கு போயாச்சு!
ஆரா யாரோ முகம் தெரியா அந்த பெண்ணிற்கு வருத்தம் கொண்டாலும்… தன் சொந்த ஊருக்கு போகும் மகிழ்ச்சி மனசுக்குள் ஒரு ஓரமாய்..!
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா??
அட என் நாடு என்றாலும்.. அது எந்நாடு போலாகுமா??
நேசம் சங்கத்தமிழ் பாசம்….
……அது தமிழ் போல் இனித்திடுமா???
மனசுக்குள் இசைஞானியின் இன்னிசை மலையோடு ஆரா பயணத்துக்கு தயார்..!
பூவழகி வருவாள்!
