சிந்து இளவரசி- என்னுரை
Ø எனது முக்கிய நோக்கம் இந்த புதினத்தில் வரும் சம்பவங்கள் போன்று இதைப் படிப்போர்வாழ்விலும் ஏற்பட்டால், அதை அவர்கள் எவ்விதம்எதிர் கொள்ளலாம் என்று சொல்வதுதான்.
Ø இந்தச் சரித்திரப் புதினத்தின் நாயகன் தீரன், பாண்டிய அரசர் கட்டளைக்கு இணங்க சிந்துசாம்ராஜ்யம் செல்கிறான்.
அங்குஅவனுக்கு ஏற்படும் சோதனைகளை அவன் எதிர் கொள்ளும் விதம், இந்தப்புதினம் படிப்போருக்கும் அதுபோன்ற சம்பவங்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் பொழுது தங்களைகாப்பாற்றிக் கொள்ள உதவும்.
Ø சிந்துசாம்ராஜ்யத்தின் மன்னரின் வளர்ப்பு மகளான இளவரசி புஷ்கரணி, அனைத்தையும் உதறிவிட்டு தன்னுடன் வரத் துணிந்தபோது, அதனால் இரு நாட்டுக்கும் எந்த பிரச்சனையும் வந்து விடாமல் இருக்க வேண்டும் என்று யோசனையுடன் கதாநாயகன் தீரன்நடந்த விதம், இன்றும் புதிய திருமணஉறவுகளால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க உதவும்.
Ø எனது குரு டாக்டர் மாதவன் குறிப்பிட்ட அன்பில் செப்பேடுகளைப்போல, சில பாண்டிய நாட்டுசெப்பேடுகள் கிடைத்து
உள்ளன.
தளவாய்புர செப்பேடுகள், பார்த்திவசேகரச் செப்பேடுகள், வேள்விக்குடி செப்பேடுகள் போன்றவை. தெய்வம் இதுபோன்ற பல ஆதாரங்களை கண்களில் காண்பித்து பாண்டிய நாட்டு வரலாற்றை நாம் முழுவதும் அறிந்துகொள்ள உதவும்.
Ø காதல் இல்லாமல், வாழ்வும் இல்லை. அகமும், புறமும் சேர்ந்த வாழ்வுதான் இனிக்கும். காதலைச் சொல்லாத எந்த சரித்திரப் புதினமும்இல்லை. இதில் சிந்து இளவரசியின் காதலும் உண்டு. நாட்டுக்காக அவளும் தீரனும் தங்களது திருமணம்பெரியோர்களின் அனுமதியுடன் நடக்க வேண்டும் என்று நடந்து கொண்ட விதம், இந்தப் புதினத்தைமேலும் மெருகு சேர்க்க உதவும்.
Ø எனது அருமை மிகுந்த அன்பானவாசகர்கள் எப்பொழுதும் போல இந்த புத்தம் புதிய சிந்து இளவரசியையும் படித்துப் பயன் அடைய எல்லாம் வல்ல சிவபெருமானிடம் சொல்ல, கருப்பண்ணரை வேண்டி, உங்களின்ம கிழ்வான முகத்தையும், ஆதரவையும், பலத்த கரகோஷத்தையும் ஏக்கத்தோடு எதிர்பார்க்கும்,
எழுத்தரசன் அட்வகேட் டாக்டர்
எல்.கைலாசம்
—————————————————————————————————————
சிந்து இளவரசி – முன்னுரை
Prof. Dr. P. Madhava Soma Sundaram Director
Manonmaniam Sundaranar University, Thirunelveli 627012
Ø டாக்டர் எல்.கைலாசம் அவர்கள் ‘சிந்துஇளவரசி’ என்ற அதிஅற்புதமான சிறியசரித்திரப் புதினத்தில் பாண்டிய நாட்டையும். சிந்து சாம்ராஜ்யத்தையும் இணைத்துஅவற்றிலிருக்கும் ஒற்றுமைகளைஅருமையாக குறிப்பிட்டுள்ளார்.
Ø இந்தப் புதினத்தில் குறிப்பிட்டவைகள்ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகுஎழுதப்பட்டிருக்கிறது என்பதிலும், அவைதொல்பொருள் ஆராய்ச்சிக்கு உதவும்என்பதிலும் எந்த சந்தேகம் இல்லை.
Ø ‘திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’என்ற கருத்தினைத் தெரிவித்தவர் தேவநேயப்பாவாணரும் மற்ற மதிப்புக்குரியதமிழறிஞர்களும். அவர்கள் சொன்னதுஉண்மையாகவே இருக்க வேண்டும். இந்தக்கருத்தினை மனதில் கொண்டு டாக்டர்கைலாசம் அவர்கள் ‘சிந்து இளவரசி’யைத்தீட்டியுள்ளார்.
Ø மிகச் செழுமையுடனும், வலிமையுடனும்இருந்த பாண்டிய நாட்டிலிருந்து இளைஞன்ஒருவன் கி.பி. 700ஆம் ஆண்டு வாக்கில், தொல்பொருள் ஆராய்ச்சிக்காக இன்றையபாக்கிஸ்தானில் இருக்கும்மொகஞ்சோதராவிற்குச் செல்கிறான். பாண்டிய நாட்டு அரசர் அவனுக்குதாமிரபரணியிலிருது எடுக்கப்பட்டஈமத்தாழியில் இருந்த இறந்தவனை பற்றிதெரிந்துகொண்டு வரச் சொல்கிறார். சிந்துநதிக்கரைக்குச் செல்லும் தீரனின்சாகசங்களைச் சொல்லும் புதினமே சிந்துஇளவரசி.
Ø டாக்டர் கைலாசத்துக்கு நான் அன்றுகுற்றவியலைச் சொல்லி கொடுத்ததன்முழுப்பலனை இன்று என்னால் உணரமுடிகிறது. அவர் தனது ஒவ்வொரு சரித்திரப்புதினத்திலும் ‘குற்றவியல்’ அல்லது‘பாதிக்கப்பட்டோரியலின்’ நுணுக்கத்தைப்படிப்பவர் மனதில் பதியும்படி செய்கிறார்.
Ø இந்தப் புதினத்திலும் குற்றவியலின்அடிப்படையாக, கொள்கையான ‘குற்றஎண்ணம் இல்லாத செயல் குற்றமாகாது’என்பதைச் சொல்லித் தருகிறார் சிறந்த புதினஆசிரியராக.
Ø ‘சிந்து இளவரசி’, டாக்டர் கைலாசத்தின்பத்தாவது சரித்திரப் புதினம் என்றுநினைக்கிறேன். அவரின் முதல் புதினமான‘மலர்ச்சோலை மங்கை’ யிலிருந்து சென்றவருடம் வெளியாகி மிகுந்த புகழ் பெற்றஅவரின் ‘ராஜாளி’ வரை அவரது எல்லாப்புதினங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன.
Ø சரித்திரப் புதினத்தின் நட்சத்திரஎழுத்தரசனான டாக்டர் எல். கைலாசத்தின்‘சிந்து இளவரசி’ மிகப் பெரிய வெற்றி பெறஅவர் வணங்கும் தெய்வமும், வாசகர்களும்துணை புரியட்டும்.
கிருஷ்ணகுமார்
முன்னுரையாக உன்னுரை எழுதிய விதம் என்னுரையை ஈர்க்கத் தன்னுரை வழங்கத் துணிந்து விட்டேன்.
கதாநாயகி அறிமுகம்.. பொதுவாக எந்த (திரைக்) கதாசிரியரும் வடக்கிலிருந்து தெற்கே இறக்குமதி செய்யும் நிலைமாற்றி இங்கே தெற்கிலிருந்து சிந்து வெளியில் வெளிக் கொணர்ந்தது வெகு பாராட்டுக்கு உரிய செயல். துணைப் பாத்திரங்களையும் தெற்கு விட்டு வடக்கே வாடகைக்கு
கதையோடு தூக்கிக் கொண்டு போகப் போகிறீர்கள் என்பதையும் கோடிட்டாற் போல புரிந்து கொள்ள முடிகிறது…
மொத்தத்தில்… தமிழிளவரசி
சிந்துநதிக் கரையில்..
நீராடுவாளா…….
நீராட்டுவாளா..
காத்திருப்போம்..
பார்த்திருப்போம்…
கணவிழி திறக்க…
கனிவிழும் திரைக்கு வரும்வரை…
காத்திருப்போம்..
————————————————————————————————————
சிந்து இளவரசி -1
நண்பரே
,
சுவாரசியமான
சிந்து இளவரசி எனும் மர்ம சரித்திரக் கதையை மேலும் தொடருவதற்கு முன்பு வாசக அன்பர்கள் சிந்துசாம்ராஜ்யத்தின் சரித்திரத்தை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொள்வது கதையின் நன்றாக புரிந்து கொள்ள உதவும்.
மிகப்பெரிய நதியான சிந்துநதி, கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்கு பகுதியில் தோன்றி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாட்டை வளப்படுத்திக் கொண்டிருக்கிறது.
‘சிந்து இளவரசி’ கதை நடந்த காலத்திற்கு சிறிது காலத்திற்கு முன் இப்பொழுது பாக்கிஸ்தான் வசம் உள்ள சிந்து பகுதியை மையமாகக் கொண்டு பலுசிஸ்தான், கந்தகார், காஷ்மீர், கராச்சி, சூரத், கட்ச் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியை இன்றைய காலக் கட்டத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ராய் குல மன்னர்கள் ஆண்டு வந்தார்கள்.
சிவபக்தி உடைய ராய் அரசர்கள் சுக்கூர் என்றும் இடத்தில் சிவாலயம் கட்டி நாட்டில் ஆன்மீகத்தை வளர்த்தார்கள்.
ஆனால் ராய் சாம்ராஜ்யத்துக்கு மேற்கே இருந்து பெரும் ஆபத்து வந்தது.
ராய் வம்சத்தின் கடைசி மன்னர் இரண்டாம் சகாசியுடன் ராய் வம்சம் முடிவுற்றாலும், அரசருக்கு ஆதரவாக இருந்தவர்கள் தங்கள் ராஜ்யம் மீண்டும் தழைக்க வேண்டும் என்று முயன்று வந்தார்கள்.
ராய் வம்சமத்தின் கடைசி அரசர் சகாசி இறந்ததும், ராய் அமைச்சரவையில் முதல் அமைச்சராக இருந்த அலோரின் சாச் என்பவர், நாட்டைக் காப்பாற்ற சிந்து சாம்ராஜ்யத்துக்கு அரசனனார்.
அந்தக்கால வழக்கப்படியும், சகாசியின் கட்டளைப்படியும் சகாசியின் மனைவியை திருமணம் செய்து கொண்டு அரசாட்சியை உறுதிப்படுத்திக் கொண்டார்.
சாச்சின் சகோதரர் சந்திரனை முதலமைச்சராக நியமித்துக் கொண்டு நேர்மையாக ஆட்சி செலுத்தி வந்தார்.
சாச், மற்றும் அவரின் சகோதரர் முதலமைச்சர் சந்திரன் திறமையினால், ராய் உறவினர்கள் ஆட்சி பீடம் ஏற ஆசைப்பட்டாலும் அவர்களால் அது முடியவில்லை. ஆனாலும் அவர்கள் சிந்து சாம்ராஜ்யத்தை கைப்பற்ற பலவிதத்திலும் முயன்று வந்தார்கள்.
சிந்து சாம்ராஜ்யத்தின் ஆட்சியைக் கைப்பற்ற சகாசியின் உறவின்ரகள் மட்டும் அல்லாமல், வெளிநாட்டினரும் முயன்று வந்தார்கள்.
இந்த ராஜ்ய சிக்கலான நேரத்தில் பாண்டிய நாட்டின் அரசர் ரணதீரன், இந்த கதையின் நாயகன் அன்னையின் சிறிய தந்தையை கொண்றவரை கண்டுபிடிக்க, உத்தரவிடுகிறார்.
தனது தொல்பொருள் ஆராய்ச்சியை தொடரவும், தனது சிறிய தந்தையை கொன்றவனைக் கண்டுபிடிக்கவும் சிந்து சாம்ராஜ்யத்துக்கு வந்து, அரசர் சாச்சை சந்திக்க முயல்கிறான்.
இனி தொடர்ந்து படிக்க எந்த சிக்கலும் இருக்காது.
அட்வகேட்
எழுத்தரசன்
டாக்டர்
எல்.
கைலாசம்.
சிந்து இளவரசி
ஆக்குவோன்
————————————————————————————————————–
சிந்து இளவரசி 2
சிந்து இளவரசி புதினத்தில் ஒரு பகுதி- தங்கள் மேலான பார்வைக்காக
தீரன் மனதில் வெகு தொலைவில் தெரிந்த வெண்ணிலாவில் புஷ்கரணி தெரிந்தாள்.
வெண்ணிலாவில் தெரிந்தவள் அங்கிருந்து இறங்கி மெல்ல பூமிக்கு பறந்து வந்தாள்.
அவள் அணிந்திருந்த பொன்நிற ஆடை நிலவின் வெளிச்சத்தில் பளிச்சிட்டது.
மழைகால மேக நிறத்திலிருந்த அவளின் கருங்கூந்தலில் மலர் சூடியிருந்தாள்.
வெகுதூரத்திலிருந்து வந்து இசையோடு அடித்த தென்றலில் அவளின் கருங்கூந்தல் மலர்கள் அங்கும் இங்கும் பறந்தன.
அவளின் சுட்டிடும் விழிகளில் விழுந்தவர் எழுவதில்லை என்பது பார்த்த உடனே புரிந்தது.
அவள் தன்னை தென்பாண்டி மன்னர் என்று நினைத்திருப்பாளோ? அவள் என்று தேனும், பாலும் தருவாள்?
அவனின் வானம் போன்ற நிறைந்த ஆசை நிறைவேறும் நேரம் வந்து விட்டதோ?
அன்புடன்
எழுத்தரசன்
அட்வகேட்
டாக்டர் எல். கைலாசம்
சிந்து
இளவரசி
ஆக்கியோன்
—————————————————————————————————————சிந்து இளவரசி 3
சிந்து இளவரசி புதினத்தில் ஒரு பகுதி-
”முதலமைச்சர் போல வேடமிட்டவரை”.
“அவரை இவர் கொல்வதற்கு எந்தவிதமான முகாந்திரம் இருக்கிறதா?
“இல்லை. அவர் யார் என்றே இவருக்குத் தெரியாது”.
“ஆக இவருக்கு அவரைக் அதாவதுகொல்லப்பட்டவரைக் கொல்வதில் எந்த நோக்கமும் இல்லை”
“இல்லாமல் இருக்கலாம். ஆனால் கொன்று விட்டாரே
”இவர் கொன்றவர் இவருக்கு எந்தவிதத்திலும் சம்மந்தமில்லாதவர். இதுவரை யாரென்றே அறியாதவர். அவரை கொல்லவேண்டும் என்று எந்தத் துர்நோக்கமும் இவருக்கு இல்லவே இல. குற்ற எண்ணம் இல்லாதச் செயல் எப்படிக் குற்றமாகும் அய்யா? இவர் செய்தது கொலை அல்ல. தேசத்துரோகமும் அல்ல. தெரியாது நடந்த விபத்து”.
“ஆனால் இவருக்கு முதலமைச்சரைகொல்ல வேண்டும்என்ற நோக்கம் இருந்திருக்கிறதே”
“அவரை இவர் கொல்லவில்லையே. நோக்கம்
மட்டும்தானே இருக்கிறது. செயல்படுத்தவில்லையே. இவர் தெரியாமல் தேசத்துரோகக் கும்பலின் வாக்கு வன்மைக்கு மயங்கிவிட்டார். அதைத்தவிர இவர் வேறு எந்தக் குற்றமும் செய்யவில்லை”
“அய்யா, இவர் குற்றவாளியல்ல. பாதிக்கப்பட்டவர். யாரோ தவறாக சொன்ன வாதத்தில் மயங்க விட்டார். இது ஒரு விபத்து இவர் மீது எந்தத் தவறும் இல்லை. இவரைவிடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்றார்.
நியாயாதிபதிக்கு அவர் செய்த
வாதம் முதலில் குழப்பினாலும் சிந்திக்க வைத்தது. அவர் சொல்வதிலும் நியாயம் இருப்பது புரிந்தது.
அன்புடன்
எழுத்தரசன் அட்வகேட்
டாக்டர் எல்.கைலாசம்
சிந்து இளவரசி
ஆக்கியோன்
————————————————————————————————————–
சிந்து இளவரசி புதினத்தில் ஒரு
பகுதி- 4
தீரன் தூங்கிக்கொண்டிருந்த அரசினர்விடுதியில் நடு இரவில் திடீரென்று காற்றுபலமாக வீசியது.
தீரன் படுத்திருந்த அறையில் இருந்த சாளரத்தின் கதவுகள் திறந்து திறந்துமூடின. திடீர் காற்று தீரனை சற்று விழிக்கவைத்தது.
ஆனாலும் அவனின் தூக்கம்முழுவதும் கலையவில்லை.
அரைகுறைத்தூக்கத்தில் கண்களைத் திறக்க முடியாமல்திறந்து பார்த்தான்.
சாளரம் வழியாக வெளியில் நிலவு இனிய வெளிச்சத்தை தீரன் படுத்திருந்த அறையில் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது.
கண்விழித்த தீரன் சாளரம் வழியாகப் பார்த்தான்.
தான் காலையில்சென்றிருந்த பாதுகாக்கப்பட்ட இடம்தெரிந்தது. அதோ அதன் உச்சியில் தோண்டிய ஞாபகம் வந்தது.
நிலவின் ஒளியில் அந்தஇடம் அழகாகத் தெரிந்தது.
எப்பொழுதோ மாட மாளிகைகளும் கோபுரங்களும் நிறைந்திருக்க வேண்டும்.
அதை ஆள்வதற்குமன்னவர்களும், அவர்களை ஆட்சி செய்ய ராணிகளும் இங்கு வாழ்ந்திருக்க வேண்டும்.
அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அப்பொழுது இருந்த கலைகள் எண்ண? இப்பொழுது இருக்கும் எண்ணும் எழுத்தும் அந்தக் இருந்தனவா?
தீரன் யோசித்தான்.
காற்று அதிகமாக அடித்ததால் சாளரத்தின் கதவுகள்திறந்து மூடுகின்றன என்று நினைத்த தீரன், சாளரத்தை மூடிவிடலாம் என்று நினைத்து அருகில் சென்றான்.
சாளரத்தின் கதவுகளை இருக்கிப்பிடித்துக் கட்ட முயன்றான்.
அப்பொழுது அவனுக்கு ஒரு பெரிய
மின்னல் தாக்கியதுபோல இருந்தது.
அங்கு யார்?
மெல்ல பறந்து போவது? மனிதனா?
இல்லை, பாண்டிநாட்டில்மட்டும் அல்ல, இந்த பூவுலகம் முழுவதும் சொல்கிறார்களே அதுதானா? இங்கேவந்து என்ன செய்கிறது?
அல்லது தான் காண்பது பிரமையா?
தீரனுக்கு மீண்டும் மயக்கம் வந்தது.
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பார்த்தான்.
அங்கு பறந்து போகும் மனிதனுடன் இன்னொருவனும் இல்லை இன்னொருத்தியும்செல்வதை பார்த்தான்.
ஆகா யார் இவர்கள்? எப்படி இவர்களால்பறந்துசெல்ல முடிகிறது?
என்று பயந்து போய்பார்த்தான்.
பெண்ணுடன்
மொகஞ்சோதரா குன்றில் பறந்து
செல்லும் அவனின்முகம் ஒருவிநாடி தெரிந்து மறைந்தது.
ஆகா இவன் எனது அன்னையின் சிறிய தம்பி போலல்லவா இருக்கிறது?
அவரைத்தான் தாமிரபரணி கரையில் எரித்து விட்டோமோ?
இல்லை, இல்லை, அவனில்லை. அரசசபையில் பார்த்தோமே அரசரின் சகோதரர் முதலமைச்சரா? அவரால் எப்படிப் பறந்து செல்ல முடிகிறது? அவருடன் பறப்பவள் யார்?
இப்பொழுது தீரனுக்கு தலை சுற்று மிகவும் அதிகமானது. சாளரத்தைப் பிடித்திருந்த பிடி கொஞ்சம் கொஞ்சமாக நழுவியது.
அப்படியே மயங்கிசாளரத்தின் கீழே விழுந்தான்
அன்புடன்
எழுத்தரசன் அட்வகேட்
டாக்டர் எல்.கைலாசம்
சிந்து இளவரசி
ஆக்கியோன்
———————————————————————————————————–
சிந்து இளவரசி புதினத்தில் ஒரு
பகுதி- 5
அரசே, நானும் தங்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவேண்டும்”
என்றான் தீரன்.
அரசர் அலோரின் சாச் சற்றுத் தயக்கதுடனே சம்மதித்தார்.
அவருக்கும் இந்த தீரன் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டியிருந்தது.
அப்பொழுது ஒருவர் அரசவையின் உள்ளே வந்தார்.
அரசருக்கு வணக்கம் செலுத்திவிட்டு அரசரின் முன்னால் இருந்தஇருக்கையில் அமர்ந்தார்.
அவரைப் பார்த்ததும் தீரனுக்கு தலை சுற்றியது.
இது எப்படி இருக்க முடியும்? முடியவே
முடியாதே? என்று எண்ணியவனுக்கு உலகம் சுழன்றது.
அவனிருந்த சிந்து-சாம்ராஜ்ய அரண்மனை சுழன்றது.
அவனின் சித்தம் பேதலித்தது.
கால்கள் தழன்றது. கொஞ்சம்
கொஞ்சமாக கீழே விழ
ஆரம்பித்தான்.
அருகிலிருந்த மணிஷ் அவனைத் தாங்கிக் கொண்டான்.
”இந்தப் பிள்ளைக்கு என்னவாகியது?
மருத்துவரை உடனே அழையுங்கள்” என்று அரசர் துடித்தார்.
உடனே அரண்மனை மருத்துவரை அழைத்து
வர ஏற்பாடு
செய்யப்பட்டது. மருத்துவர் வந்து தீரனை சோதனை செய்தார்.
அரசரிடம்
சொல்லவும் செய்தார்.
“அரசே, இந்த வாலிபன் எதையோ பார்த்து
பயந்திருக்க
வேண்டும்.
அவன் எதைப் பார்த்து பயந்தான் என்று
புரியவில்லை.
ஆனால் இது
மயக்கம்தான்.
சற்று நேரத்தில் குணமாகிவிடும்.
கவலை
வேண்டாம். இந்தவாலிபரை நமது ஆதுரச்சாலைக்கு அழைத்து செல்ல அனுமதி வேண்டும்”
என்றார்.
அன்புடன்
எழுத்தரசன் அட்வகேட்
டாக்டர் எல்.கைலாசம்
சிந்து இளவரசி
ஆக்கியோன்
—————————————————————————————————————
சிந்து இளவரசி புதினத்தில் ஒரு
பகுதி- 6
தீரன் சொல்ல ஆரம்பித்தான்.
“நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிக்கண்டம் இன்று இல்லை.
சிறிய சிறிய நாற்பத்து ஒன்பது நாடுகள் கொண்ட இந்தப்புண்ணிய பூமியில் பஃறுளி மற்றும் குமரிஎன்ற ஆறுகள் செழித்து ஓடின”.
“அதனால் என்ன?” என்றான் மணிஷ்.
“சொல்கிறேன். இன்றைக்கு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமித்தாய் தனது ஆடைகளை மாற்றிக் கொண்டாள்.
அப்பொழுது ஏற்பட்டப் பெரிய நிலநடுக்கத்தில் கடலால் இந்தப் பூமிக்கண்டம் சூழப்பட்டது.
அங்கிருந்தவர்கள் தங்கள் பொருட்களை மட்டும் அல்லாமல், செடிகொடிகளின் வித்துகள்
அனைத்தையும் எடுத்துக் கொண்டு பத்திரமான
இடத்துக்கு சென்றார்கள்.
அப்படி வந்தவர்களின் ஒரு பிரிவினர் இப்பொழுது உள்ளதென் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்கள்
அவர்களில் ஒரு
பிரிவினர் இங்கு சிந்துநதிக்கரைக்குவந்திருக்கலாம். இருவரும் தாங்கள் தங்களுடன் கொண்டு வந்திருந்த வித்துகளை நதிக்கரையில் விதைத் திருக்கலாம் தங்கள் பழக்கவழக்கங்களையும் மொழியையும் தாங்கள் சென்ற பகுதியில் பதித்திருக்கலாம்.
அதனால்தான் இத்தனை
காலத்துக்குப் பிறகும் இரண்டும் ஒன்றாக இருக்க முடிகிறது”
என்றான் தீரன்.
அன்புடன்
எழுத்தரசன் அட்வகேட்
டாக்டர் எல்.கைலாசம்
சிந்து இளவரசி
ஆக்கியோன்
————————————————————————————————————
சிந்து இளவரசி புதினத்தில் ஒரு
பகுதி- 7
அன்புடன்
எழுத்தரசன் அட்வகேட்
டாக்டர் எல்.கைலாசம்
ஆலமரத்தின் அடியில் இருந்த பானையை நோக்கித் தீரன் நடந்தான்.
எங்கோ கோட்டான் கூவுவது அவனின் மனதின் உறுதியைக் குறைத்தாலும் குலைக்க முடியவில்லை.
மினுமினுத்த நட்சத்திரங்களில், ஆலமரம் பயங்கரமாக தீரனுக்குத் தெரிந்தது.
ஆற்றில்கரைகளிலிருந்த சிறு செடிகள் கூடப் பயங்கரமாகத் தெரிந்தன..
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர்பரப்பிலிருந்து வெண்புகை போன்று மெல்ல கிளம்பி அது ஆலமரத்தின் மேல்வந்துஅமர்ந்தது.
தீரனுக்கு பயத்தை அதிகரித்தது.
அதைக் கவனித்தவன் பானையின் மூடியை மீண்டும் திறக்க முயன்றான்.
தாமிரபரணி
நதியின்
எதிர்க்கரையில் புகை போன்று
வந்து
அது மேலே
மேலே சென்று
கொண்டிருந்தது.
கோரைப்புல் அசைந்து சலசலத்தது. கொடிய பாம்பு போகிறதோ? தேவையில்லாமல் இந்த
நடுஇரவில்
வந்துவிட்டோமோ என்று தீரனுக்குத் தோன்றியது.
தீரனின் கால்கள்
நடுங்கின. இது போன்றஉணர்வை அவன் இதுவரை அனுபவித்ததில்லை. கையில் ஆயுதம்
ஒன்றும் எடுத்து வரவில்லையே
என்று எண்ணினான். அங்கிருந்து விலகி விடலாமா என்று
எண்ணியவனுக்குக் காவல்
தெய்வம்கருப்பண்ணசாமி ஞாபகம் வந்தது.
‘கருப்பண்ணா!
இது என்ன சோதனை?’ என்று நினைத்தவன் என்னை காப்பாற்று என்று மீண்டும் மனமுருகினான்.
இந்தக் கரிய இருளில் இருக்கும் அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்று’என்று வேண்டியவன், ஆலமரத்தில் இருந்தவெள்ளை நிற உருவம் அங்கிருந்து விலகிஎங்கோ பறந்து போனது
கோரைப்புல் அசைவும் சட்டென்று
நின்றது.
பானையின் மேலிருந்த சின்னத்தைப்பார்த்தவன், இது ஏதும் அபாயத்தைக் குறிக்கிறதோ என்று எண்ணினான்.
கருப்பண்ணசாமியை மீண்டும்
மனதில்எண்ணி,
மனதை உறுதிப்படுத்திக் கொண்டு பானையின் மேலிருந்த மூடியைத் திறக்க முயன்றான். அத்தனை இலகுவாகத் தீரனால் அதைத் திறக்க முடியவில்லை.
இந்தப் பானையில் ஏதேனும் மர்மமான பொருள் இருக்க வேண்டும் என்று எண்ணிய தீரன் அதன் மேல் மூடியை நன்றாக அசைத்துப் பார்த்தான். மெல்ல மெல்ல அதுஅசைந்தும் கொடுத்தது.
மீண்டும், மீண்டும்அவன் அசைக்க பானையின் மூடி திறந்தது.
நட்சித்தரங்களின் ஒளியில் பானையில் என்ன இருக்கிறது என்று உடனே தெரியவில்லை. உள்ளே கைகளை விட்டுப்பார்க்கலாம் என்று வலது கையை உள்ளே விட்டான்.
பானையின் உள்ளே இருந்து அவனது கையை யாரோ பிடித்து இழுப்பதுபோல இருந்தது.
இதுவரை பயமில்லாமல் இருந்தவன், பானைக்குள் இருந்து யாரோ கைகளைப் பிடித்து இழுப்பது போலிருந்ததும் தீரனுக்குத் தலையைச் சுற்றியது. வயிற்றில் இருந்து புறப்பட்ட பயம் நெஞ்சைத் தொட்டு உச்சந்தலைக்குப் போனது.
தீரனின் கண்கள்சுழன்றன. நெஞ்சு அடைத்தது.
சிந்து இளவரசி
ஆக்கியோன்
—————————————————————————————————————
சிந்து இளவரசி
-8
பத்மஸ்ரீ விருது பெற்ற, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து எழுத்துக்களை ஆராய்ந்து. அவை திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்ற அறிய கருத்தை வெளியிட்டார்(1977). அன்னாரின் ஆராய்ச்சியை அடிப்படையாக் கொண்டு டாக்டர் எல். கைலாசத்தால் எழுதப்பெற்றது ‘சிந்து இளவரசி’.
சிந்துசாம்ராஜ்ய அரசகுலத்தை சேர்ந்தவராக நம்ப்பட்டவர், கொல்லப்பட்டு தாமிரபரணி நதிக்கரையில் வீசப்படுகிறார். அவர் இறந்த காரணம் அறிய பாண்டிய அரசர் ரணதீரரின் கட்டளைப்படி சிந்து சாம்ராஜ்யம் செல்லும் தொல்லியல் ஆராய்ச்சியாளரான் தீரன் எதிர்கொள்ளும் சாகசங்களை அழகு நடையில் சொல்லும் புதினம் ‘சிந்து இளவரசி’
டாக்டர் எல். கைலாசம் அவர்கள், குற்றவியலின் அடிப்படை கருத்தான ‘குற்ற எண்ணம் இல்லா செயல் குற்றமாகாது’ என்பதை அனைவரும் புரியும் வண்ணம் எளிய விருவிருப்பான நடையில் ’சிந்து இளவரசி’ யிலும் கொடுத்துள்ளார்.
சரித்திர புதினங்கள் பொழுதுபோக்குக்காக மட்டும் அல்ல. நமது வாழ்வை அவை சீர்படுத்த உதவுவை என்ற கருத்தை உடைய டாக்டர் எல். கைலாசம், வாசகர்களின் வாழ்வின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு எழுதிய ‘சிந்து இளவரசி’ படிப்போரின் வாழ்வில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
எழுத்தரசன் அட்வகேட்
டாக்டர் எல். கைலாசம்
—————————————————————————————————-
சிந்து இளவரசி 9
சிந்து இளவரசி
பத்மஸ்ரீ விருது பெற்ற, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து எழுத்துக்களை ஆராய்ந்து. அவை திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்ற அறிய கருத்தை வெளியிட்டார்(1977). அன்னாரின் ஆராய்ச்சியை அடிப்படையாக் கொண்டு டாக்டர் எல். கைலாசத்தால் எழுதப்பெற்றது ‘சிந்து இளவரசி’.
சிந்துசாம்ராஜ்ய அரசகுலத்தை சேர்ந்தவராக நம்ப்பட்டவர், கொல்லப்பட்டு தாமிரபரணி நதிக்கரையில் வீசப்படுகிறார். அவர் இறந்த காரணம் அறிய பாண்டிய அரசர் ரணதீரரின் கட்டளைப்படி சிந்து சாம்ராஜ்யம் செல்லும் தொல்லியல் ஆராய்ச்சியாளரான் தீரன் எதிர்கொள்ளும் சாகசங்களை அழகு நடையில் சொல்லும் புதினம் ‘சிந்து இளவரசி’
டாக்டர் எல். கைலாசம் அவர்கள், குற்றவியலின் அடிப்படை கருத்தான ‘குற்ற எண்ணம் இல்லா செயல் குற்றமாகாது’ என்பதை அனைவரும் புரியும் வண்ணம் எளிய விருவிருப்பான நடையில் ’சிந்து இளவரசி’ யிலும் கொடுத்துள்ளார்.
சரித்திர புதினங்கள் பொழுதுபோக்குக்காக மட்டும் அல்ல. நமது வாழ்வை அவை சீர்படுத்த உதவுவை என்ற கருத்தை உடைய டாக்டர் எல். கைலாசம், வாசகர்களின் வாழ்வின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு எழுதிய ‘சிந்து இளவரசி’ படிப்போரின் வாழ்வில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
எழுத்தரசன் அட்வகேட்
டாக்டர் எல். கைலாசம்
—————————————————————————————————————
சிந்து இளவரசி
அத்தியாயம்
சிந்துநதிக்கரை மீன்கள்
ஆதவன், வெகுதூரத்தில் மேற்கில் தெரிந்த கடலுக்குள் மெல்ல மெல்ல அமிழ்ந்து கொண்டிருந்தான். கடலம்மை அவனை இருக்கி அணைத்துக் கொள்ள, மேகப் போர்வைகள் சிரித்துக்கொண்டே அவர்கள் இருவரையும் மூட முயற்சித்தன. மேகப்போர்வையும் மீறி அங்கும் இங்கும் தெரிந்த சிவந்த துளிகளின் வெளிச்சம், உள்ளே என்ன நடக்கிறது என்கிற கற்பனையில், சிந்துநதி முகத்துவாரத்தில் மயங்கி நின்ற இளைஞனின் முகத்தில் புன்முறுவலாக சிதறியது. சற்று வெட்கப்பட்டு திரும்பிய இளைஞன் சற்றுத் தடுமாறினான். நிதானித்த அந்த இளைஞனின் கால்களை நீர் இழுத்தது சிந்துநதி ஆற்று நீரின் வேகம். நீரின் வேகம் அவன் இதுவரை உணராத அளவுக்கு மிக மிக அதிகமாக இருந்தது.
இளைஞன் அணிந்திருந்த ஆடைகளிலிருந்து வெகுதொலைவில் இருந்து அவன் வந்திருக்க வேண்டும் என்பது விளங்கியது. சிந்துநதி தனது அன்பானவனோடு சேரும் இந்த இடத்துக்கு வருவது மிகவும் கடினம். வருபர்களும் அரிதிலும் அரிது. ஆழமான அரபிக்கடலில் படகிலோ கலத்திலோ வரலாம். நிலத்தில் வருவதற்கு புரவியைத் தவிர வேறு வழியில்லை
அந்த அற்புதமான இடத்துக்கு புரவியில் வந்த களைப்பு இளைஞனின் முகத்தில் தெரிந்தாலும், அவன் உள்ளத்தின் வேகம் அவன் காலைத் தொட்டு சென்ற சிந்துநதியின் வேகத்தைவிட பல மடங்கு பலமாக இருந்தது. தான் நினைத்த காரியத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று உள்ளத்தில் தோன்றிய எண்ணம் அவன் முகத்திலும் உறுதியாக பிரதிபலித்தது.
சற்று உயரமான இடத்தில், அகலமான மரத்தின் அடியில் நிறுத்தி வைத்து விட்டு வந்த அவனது புரவி பத்திரமாக இருக்கிறதா என்று உற்றுப் பார்த்தான். புரவி அவனைப் பார்த்து கணைத்தது தனது களைப்பு தீர, ஆற்று நீரில் தனது கைகால்களை சுத்தப்படுத்த வந்தவனை தொட்டுச்சென்ற நீர் இத்தனை வேகமாகச் செல்லும் என்று அவன் எண்ணவில்லை. முகத்தை கழுவியவன் சட்டென்று ஆற்று நீர் வேகத்துடன் அதிகமாக வருவதை உணர்ந்தான்.
அவனது பாதங்களை தொட்டுச் சென்ற நீரின் அளவு சட்டென்று முழங்கால் அளவு உயர்ந்தது. இனி இங்கு நிற்பது ஆபத்தை உண்டாக்கும் என்று எண்ணியவன், புரவி இருந்த இடத்தை நோக்கி விரைந்து மேலே ஏறினான். நிலம் சற்று வழுக்கினாலும் அவன் தயங்கவில்லை. மேலே சென்றவன் திரும்பிப் பார்த்தான்.
இளைஞன் எண்ணியது சரிதான் அவன் நின்ற இடம் முழுவதும் நீரில் முழ்கி இருந்த்து. சரியான நேரத்தில் மேலே வந்தோம் என்று எண்ணியவன் சிந்தனை செய்தபடியே புரவியை தட்டிக் கொடுத்தான். புரவி விரரைந்தோடிய வெள்ளநீரைப் பார்த்து சற்று மிரண்டாலும், அது நோக்கிய பார்வையிலிருந்து இளைஞனைப் போலவே எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பது புரிந்தது.
இதுவரை அவன் எத்தனையோ நதிகளைப் பார்த்திருக்கிறான். இது போன்ற வேகமாகச் செல்லும் நீரைக் கொண்ட நதியை அவன் பார்த்ததில்லை. மெல்ல மெல்ல நீர் உயர்ந்து அவன் இருந்த இடம் வரை வந்தது. ஆர்பரித்துக் கொண்டு கடலில் கலக்கும் நதியைப் பார்த்து ஆகா எத்தனை வேகம் இதற்கு என்று எண்ணியவன், இங்கும் நீர் வந்து விடலாம் என்று எண்ணி புரவியில் ஏறி நதியை விட்டு விலகிச் சென்றான்.
நதிக்கரையிலிருந்து விலகி சற்று தூரம் சென்றதும், நிச்சயமாக இங்கு சிந்து இங்கு வரமாட்டாள் என்று எண்ணியபடி அங்கிருந்து தனது பார்வையை நாலாபுறமும் செலுத்தினான்.
கடலும், நதியும் இணையும் இடத்திற்கு சற்று மேலே நின்று பார்த்த அவனுக்கு உலகம் சுழன்றது. ஒரு நிமிடம் கருப்பண்ண சுவாமியை எண்ணியவனுக்கு சற்று நிதானம் வந்தது. நதியின் வேகமும் கடலின் அரவணைப்பும் அந்தி சாயும் நேரத்தில் அந்த இடத்தை சொர்க்க புரியாக்கின. நதிக்கும் கடலுக்கும் இருக்கும் ஆர்வம், மனிதர்களுக்கு இந்த இடத்தின் மேல் இருக்கத்தான் செய்கிறது. தனது முன்னோர்களின் அபரிதமான இந்த இடத்தின் மீது கொண்ட ஆசை தான் அறியாமல் தனக்குள் வந்திருக்குமோ? அது தன்னை தென்தமிழகத்திலிருந்து வர வழைத்திருக்குமோ என்று எண்ணியபடி நதியின் வனப்பில் மயங்கினான்.
புரவியின் சேனத்திலிருந்து தான் கொண்டு வந்தது பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்தான். பத்திரமாக இருந்த்து. அதை எதற்கும் இன்னும் ஒரு முறை படித்து விடுவோம். தான் வந்தது சரியான இடம் தானா என்பதை உறுதி செய்து கொள்ள விரும்பினான். சற்று தொலைவில் தெரிந்த பெரிய ஆலமரத்தின் அடியில் மெல்லவே சென்று கொண்டிருந்த புரவியை நிறுத்தி இறங்கினான்.
அந்தி சாய்ந்திருந்தாலும் இன்னும் வெளிச்சம் இருந்த்து. இந்த வெளிச்சம் போதும் அதைப் படிக்க என்று எண்ணியவன் புரவியின் சேனத்திலிருந்து சிறிய அளவில் இருந்த மண்பாண்ட துண்டை எடுத்தான். அதில் தெரிந்த எழுத்துகளை மீண்டும் படித்தான். படித்தவன் இது எப்படி இருக்க முடியும்? என்று அவனுக்கு தோன்றியது. ஆனால் அதில் சொன்ன இடம் இதுதான் என்ற முடிவுக்கு வந்தவன், சுற்றும் முற்றும் பார்த்தான். தென்தமிழ்நாட்டில் நதியோரமாக இருக்கும் அந்த இட த்துக்கும் அங்கிருந்து ஆயிரம் காதம் தள்ளி இருக்கும் இந்த இடத்துக்கும் என்ன ஒற்றுமை? தாவரசங்கமங்களின் பசுமை கூட ஒன்றாக இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு மரத்தடியில் உட்கார்ந்தான்.
அந்தி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. நிலவுக்கன்னி இன்னும் வரவில்லை. தான் கொண்டு வந்த மண்பாண்டத் துண்டை மீண்டும் புரவியின் சேனத்தில் வைத்து விட்டு திரும்பி அந்த இளைஞன் திடீரென்று தாக்கப்பட்டான். அவன் அந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.
தட்டுத் தடுமாறி எழுந்தவன் சேனத்திலிருந்து வாளை எடுத்தான் புரவியை சுற்றி திடீரென்று தோன்றிய நான்கு ஐந்து திடகாத்திரமானவர்கள் அவனை தாக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கைகளில் நீண்டவாட்கள் இருந்தது யார் இவர்கள்? இவர்களுக்கு நான் என்ன பாதகம் செய்தேன்? ஏன் என்னை இவர்கள் தாக்க வேண்டும்? என்று எண்ணியபடியே சாமர்த்தியமாக வாளை சுழற்றினான்.
தென்தமிழ்நாட்டு இளைஞனை சிந்துநதிக்கரையில் தாக்கிய நால்வரிடமும் ஒரு ஒருங்கிணைப்பு தெரிந்தது. அவர்களிடம் வேகம் இருந்த அளவுக்கு விவேகமும் இருந்தது. அவர்கள் வீசிய வாள்வீச்சிலும் அது தெரிந்தது தென்தமிழக இளைஞனும் விடவில்லை. அவர்களுக்கு ஈடாக தனது வாளை வீசினான். வாட்கள் ஒன்றுடன் ஒன்று மோதி உண்டான நெருப்பு வெளிச்சம் மின்னலைப் போலத் மின்னி மறைந்த்து. வாட்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதனால் ஏற்பட்ட ஒலி, இடியின் ஒலியை விட அதிக சப்தமாக கேட்டது.
சிந்து நதிக்கரையில் நடந்த வாட்சண்டையைப் பார்க்க நதியில் நீந்திக் கொண்டிருக்கும் கருங்கயல்கள் தனது தலையைத் தூக்கிப் பார்த்துப் பயந்து போய் நீருக்குள் மூழ்கின.
————————————————————————————————————-
சிந்து இளவரசி
அத்தியாயம் 4
தாமிரபரணிப் பேய்
டாக்டர் எல். கைலாசம்
வேலூர் முழுவதும் உற்சாகம் வெள்ளம், தாமிரபரணி வெள்ளத்துக்கு இணையாக வேகமாகப் பரவி ஓடியது. படைவீரராகப் பணியாற்றத் தயாராக இருந்தவர்கள் நூறு பேருக்கு மேல் வேலுரில் இருந்தார்கள். அவர்கள் உற்சாகத்தில் மனது மகிழ்ந்து போயிருந்தார்கள். அவர்களின் தாய் தந்தையருக்கும் மகிழ்வு என்றாலும், குழந்தைகளை விட்டுப் பிரிய வேண்டுமே என்று தயங்கினார்கள். அந்த உற்சாகத்தில் தீரனும், செல்வனும் கலந்துக் கொண்டார்கள்.
இதற்கெல்லாம் காரணமாக இருந்த அவனியை பாராட்ட வேண்டும் என்று நினைத்தார்கள். அவனி விரைவில் மதுரை திரும்ப வேண்டி இருந்ததால், மாலையே பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்தார்கள்.
மாலையில் தளபதி அவனிக்கு பாராட்டு விழா திட்டமிட்டபடி நடைபெற்றது. ஊர்த்தலைவர்கள் ஒவ்வொருவராகத் தளபதியின் பெருமைகளைப் பேசினார்கள். சிறிய வயதில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து அதனை அவன் வெற்றியுடன் இணைத்துப் பராட்டினார்கள்.
பாராட்டு மழை முடிந்ததும், நாட்டிய நாடகம் ஆரம்பித்தது. பாண்டியர்களின் வெற்றிகளையும், பாண்டிய மன்னர்களின் சிறப்புகளையும் சொல்லும் நாடகமாக அது அமைந்திருந்தது. அத்தனை குறுகிய சமயத்தில் எப்படி இந்த நாடகத்தை ஏற்பாடு செய்தார்கள் என்று நம்மவே முடியவில்லை’
வாத்தியங்களின் ஒலி காதுக்கு இனிமையானதாக இருந்தது. எங்கிருந்து அத்தனை வாத்தியக்காரர்களைப் பிடித்து வந்தார்கள் என்பது ஊரார் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. தோல்வாத்தியங்கள், ஊதுகுழல்கள் போன்றவை சிறிதும் பிசகாத நாதங்களை எழுப்பின. பூம் பூம் என்ற சரும வாத்தியங்களின் ஆதார நாதமும், தந்தி வாத்தியங்கள், தாள வாத்தியங்கள் போன்றவற்றிலிருந்து வந்த கிண் கிணி சப்தமும் கேட்பவர்களை மெய்மறக்கச் செய்தது. அவர்கள் எழுப்பிய ஒலி வேலூர் முழுக்கப் பரவி அனைவரையும் சொர்க்கத்தின் வாத்திய இசை இப்படித்தான் இருக்கும் என்று எண்ண வைத்தது. மேடையின் பின்புறம் இருந்து அரம்பை போன்ற அழகு தேவதை ஒருத்தி, பாதரச மணிஒலிகளை எழுப்பிக் கொண்டு வந்தாள். அவள் அணிந்திருந்த நடன உடைகள், பாண்டி தேசத்தில் தயாரிக்கப்பட்டதா. இல்லை தெய்வலோகத்திலிருந்து அவளுக்காக நெய்து வரப்பட்டதா என்று அனைவரையும் சிந்திக்க வைத்தது.
அவள் எழுப்பிய ஒலி அங்கு தயாராக இருந்த தென்றலுடன் கலந்து பறந்து நாட்டியம் பார்க்க வந்தவர்களின் நெஞ்சில் கலந்தன. அவனி எத்தனையோ நாட்டியங்களைக் கண்டு களித்திருக்கிறான். ஆனால் இது போன்ற நாட்டியக்காரி எழுப்பிய ஒலியை அவன் காதுகள் கேட்டதில்லை. அவனை அடுத்து காளியம்மையும், தீரனும், செல்வனும் அமர்ந்திருந்தார்கள். அவள் எழுப்பிய ஜலங்கை ஒலியில் நாட்டியம் பார்க்க வந்தவர் சித்தத்தில் புகுந்து பரவசப்படுத்தியது.
தீரன் அவளை உற்றுப் பார்த்தான். அவள் வேலுரை சார்ந்தவள் அல்ல என்பது நன்றாகப் புரிந்தது. அவள் அணிந்திருந்தப் பட்டுப் பாவாடை கொழுந்தின் வெளிச்சத்தில் மிணுங்கியது. அவள் அணிந்திருந்த மெல்லிய மேலாடை உள்ளே இருப்பதை அரைகுறையாகக் காட்டியது. அவள் தலையில் வைத்த கிரீடத்திலிருந்தது உண்மையான வைர வைடுரியங்களா அல்லது போலியானதா என்று முடிவுக்கு வரமுடியவில்லை.
அவள் மெல்ல ஆட ஆரம்பித்தாள். அவள் கால்கள் வெள்ளை வெளேரென்று இருந்தன. கொழுந்தின் ஒளி அவற்றில் பட்டுக் காலின் அழகை மேலும் அழகுபடுத்தின. நாட்டுக்காரர்கள் ஒலிக்கு ஏற்ப அவள் தனது பாதங்களை மெல்ல அசைத்தாள். மெல்ல மெல்ல அந்த அசைவு கணுக்காலுக்கும் அதற்கு மேலேயும் பரவியது. நாட்டியத்தை வேகம் கொஞ்சம் அதிகரித்தது. அதற்கு ஏற்ப அவள் தனது சிற்றுடைய வளைத்து ஆடினாள். கொஞ்சம் கொஞ்சமாகத் தாளத்தின் வேகம் அதிகமானது அதற்கு ஏற்ப அவளும் வேகமாக ஆட ஆரம்பித்தால். ஜாதிகள் வேகம் பெற பெற அவள் நாட்டிய வேகமும் அதிகமானது. சற்று நேரத்தில் அவள் சுழன்று சுழன்று ஆடினாள். முதலில் ஆனந்தப் பாவத்தைக் காட்டியவள், சட்டென்று முகபாவத்தை மாற்றி வாட்டத்தைக்காட்டினாள். நவரசத்தை ஒவ்வொன்றாகக் காட்டியவள்,ஜதியின் வேகம் பலமடங்கு அதிகரிக்க அதற்கேற்றபடி வேகமாக ஆடினாள். நாட்டிய ஒலி சுழன்று ஒலிக்க அவளும் சுழன்று சுழன்று ஆடினாள். வேகம் மேலும் மேலும் அதிகரிக்க அவள் மேலும் சுழன்றாள்.
இப்பொழுது நாட்டியக்காரர்கள் எழுப்பிய ஒலி சட்டென்று மாறியது. உடனே அந்த அழகியும் தனது நாட்டியத்தை மாற்றினாள். சிவனை எண்ணி ஏங்கிய பார்வதியின் பாவத்தைத் தனது முகத்தில் கொண்டு வந்தாள். திரை மறைவிலிருந்து தோழிகள் சிவன் வந்து விடுவார் என்று ஆறுதல் பாடல் பாடினாலும், அவள் ஏக்கத்தை முகபாவத்தில் கொண்டு வந்தாள். சட்டென்று சிவன் போன்ற ஆடை அணிந்த ஒருவர் மேடையில் தோன்றினார். இருவரும் சேர்ந்து நடனமாட ஆரம்பித்தார்கள்.
நாட்டியக்காரர்கள் தாளம் தப்பாமல் ஆடினார்கள். இந்த அருமையான நாட்டியத்தில் மயங்கிப் போனது அவனி மட்டுமல்ல, தீரனும்தான். சிவன் பார்வடி நடனத்துடன் நாட்டியம் முடிந்து போனது. பார்த்துப் பரவசம் அடைந்தவர்கள் பாராட்டிய ஒலி, விண்ணுக்கும் கேட்டது.
விழா முடிய முன்னிரவு ஆகிவிட்டது. விழா முடிந்ததும் செல்வன் களைப்பு அதிகமாக இருந்ததால், வீட்டுக்குச் சென்று விட்டான். அவனியும், காளியம்மையும் படுத்து விட்டார்கள். ஊர் முழுவதும் அமைதியாக இருண்டு இருந்தது.
தீரன் அவனிடத்தில் படுத்திருந்தான். காலையிலிருந்து விடாது நிகழ்ச்சிகள் இருந்ததால் தாமிரபரணி ஆற்றங்கரையில் தானும் செல்வனும் பார்த்து எடுத்து அரச மரத்தடியில் வைத்த பெரிய பானை என்னவாகியது என்று எண்ண மறந்து விட்டான்.
இப்பொழுது எல்லாம் முடிந்து விட்டதால், அந்தப் பானையும் அதன் மேலிருந்த சின்னமும் அவனுக்கு ஞாபகம் வந்தது. உடனே தாமிரபரணி ஆலமரத்தடிக்குச் செல்ல வேண்டும் என்று அவன் துடித்தெழுந்தான். இந்த நேரத்தில் செல்வனை அழைப்பது கடினம். அதுமட்டுமல்லாமல் அவன் இந்நேரம் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பான். அவனைத் தொல்லை செய்ய வேண்டாம்.அந்த பெரிய பானைக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் அவ்வளவுதானே என்று நினைத்தவன் வீட்டின் வாசலுக்கு வந்தான். புதிதாகத் தந்தை பரிசாகக் கொடுத்தப் புரவி ஞாபகம் வந்தது. வீட்டின் பின்புறம் சென்றவன், புரவி விழித்திருப்பதைப் பார்த்ததும் அதன் அருகில் சென்று மெல்லத் தொட்டான். அவன் தொட்டவுடன் புரவியும் புறப்படத் தயாராகி இருந்தது. அதை மெல்ல வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தான். அரண்மனை காவலன் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான். ஆனால் ஒன்றும் கேட்காமல் கதவைத் திறந்து விட்டான்.
வீட்டின் வெளியே வந்ததும் புரவியின் மேல் ஏறி அதைக் கடிவாளத்தைப் பிடித்தான். அதை மீண்டும் தட்டிக் கொடுக்க, புரவி விரைந்து பாய்ந்தது. ஆகாயத்தில் ஒரிரண்டு நட்சித்திரங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மாவாசையாக இருக்க வேண்டும். நிலாவைக் காணவில்லை. மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆகாயத்தில் பரவிக் கொண்டிருந்தது. எந்த வெளிச்சமும் இல்லாமல் சுத்தமாக இருளாக இருந்தது.
தினமும் போய் வந்த பாதையானதால் தீரனுக்கு ஆற்றங்கரைக்குச் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. பாதையில் இருக்கும் ஒவ்வொரு மேடு பள்ளமும் தெரிந்திருந்ததால் புரவியை அனுசரித்து தாமிரபரணிக்கரையை நோக்கிச் செலுத்தினான்.
அரை நாழிகைக்கும் குறைவான நேரத்தில் தாமிரபரணிக்கரையில் இருக்கும் ஆலமரத்தை அடைந்தான். பகலில் எந்தப் பயமும் இல்லாவிட்டாலும் இரவின் மெல்லிய வெளிச்சத்தில் ஆலமரவிழுதுகளும் அதன் கிளைகளும் அங்கு செல்லும் யாவருக்கும் பயத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். தீரன் பொதுவாக பயப்படாதவனாக இருந்தாலும், சூழ்நிலை அவன் உள்ளத்தையும் சிறிது கலக்கத்தான் செய்தது. செல்வனையும் அழைத்து வந்திருக்க வேண்டும் தவறி விட்டோம் என்று எண்ணினான்.
புரவியை விட்டுக் கீழே இறங்கியவன் தான் ஆலமரத்தடியில் வைத்து விட்டுச் சென்ற பானை அங்கே இருக்கிறதா என்று பார்த்தான். அது அப்படியே அங்கு இருந்தது நட்சித்திரங்களின் அரைகுறை வெளிச்சத்தில் தெரிந்தது. தாமிரபரணியில் வேகமாகச் சென்று கொண்டிருந்த நீரின் சப்தம் பயம் ஏற்படுத்தும் சங்கீதமாகத் தீரனுக்கு கேட்டது.
ஆற்று நீர் நட்சித்திர ஒளியில் வெள்ளியாக உருகி ஓடிக் கொண்டிருந்தது தெரிந்தது.
ஆலமரத்தின் அடியில் இருந்த பானையை நோக்கித் தீரன் நடந்தான். எங்கோ கோட்டான் கூவுவது அவனின் மனதின் உறுதியைக் குறைத்தாலும் குலைக்க முடியவில்லை. மினு மினுத்த நட்சித்திரங்களில், ஆலமரம் பயங்கரமாக தீரனுக்குத் தெரிந்தது. ஆற்றில் கரைகளிலிருந்த சிறு செடிகள் கூடப் பயங்கரமாகத் தெரிந்தது.
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பரப்பிலிருந்து வெண்புகை போன்று மெல்லக் கிளம்பி அது ஆலமரத்தின் மேல் வந்து அமர்ந்தது தீரனுக்கு பயத்தை அதிகரித்தது. அதைக் கவனித்தவன் பானையின் மூடியை மீண்டும் திறக்க முயன்றான். தாமிரபரணி நதியின் எதிர்க்கரையில் புகை போன்று வந்து அது மேலே மேலே சென்று கொண்டிருந்தது
கோரைப்புல் அசைந்து சலசலத்தது. கொடிய பாம்பு போகிறதோ? தேவையில்லாமல் இந்த நடுஇரவில் வந்து விட்டுமோ என்று தீரனுக்குத் தோன்றியது. தீரனின் கால்கள் நடுங்கின. இது போன்ற உணர்வை அவன் இதுவரை அனுபவித்ததில்லை. கையில் ஆயுதம் ஒன்றும் எடுத்து வரவில்லையே என்று எண்ணினான்.
அங்கிருந்து விலகி விடலாமா என்று எண்ணியவனுக்குக் காவல் தெய்வம் கருப்பண்ணசாமி ஞாபகம் வந்தது.
‘கருப்பண்ணா இது என்ன சோதனை?’ என்று நினைத்தவன் என்னைக் காப்பாற்று என்று மீண்டும் மனமுருகினான். இந்தக் கரிய இருளில் இருக்கும் அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்று என்று வேண்டியவன், ஆலமரத்தில் இருந்த வெள்ளை நிற உருவம் அங்கிருந்து விலகி எங்கோ பறந்து போனது கோரைப்புல் அசைவும் சட்டென்று நின்றது.
பானையின் மேலிருந்த சின்னத்தைப் பார்த்தவன், இது ஏதும் அபாயத்தைக் குறிக்கிறதோ என்று எண்ணினான். கருப்பண்ணசாமியை மீண்டும் மனதில் எண்ணி, மனதை உறுதிப்படுத்திக் கொண்டு பானையில் மேலிருந்த மூடியைத் திறக்க முயன்றான். அத்தனை இலகுவாகத் தீரனால் அதைத் திறக்க முடியவில்லை.
இந்தப் பானையில் ஏதேனும் மர்மான பொருள் இருக்க வேண்டும் என்று எண்ணிய தீரன் அதன் மேல் மூடியை நன்றாக அசைத்துப் பார்த்தான். மெல்ல மெல்ல அது அசைந்தும் கொடுத்தது. மீண்டும் மீண்டும் அவன் அசைக்கப் பானையின் மூடி திறந்தது.
நட்சித்திரங்களின் ஒளியில் பானையில் என்ன இருக்கிறது என்று உடனே தெரியவில்லை. உள்ளே கைகளை விட்டுப் பார்க்கலாம் என்று வலது கையை உள்ளே விட்டான். பானையின் உள்ளே இருந்து அவனது கையை யாரோ பிடித்து இழுப்பது போல இருந்தது. இதுவரை பயமில்லாமல் இருந்தவன், பானைக்குள் இருந்து யாரோ கைகளைப் பிடித்து இழுப்பது போலிருந்ததும் தீரனுக்கு தலையைச் சுற்றியது. வயிற்றில் இருந்து புறப்பட்ட பயம் நெஞ்சை தொட்டு உச்சந்தலைக்குப் போனது. தீரனின் கண்கள் சுழன்றது. நெஞ்சு அடைத்தது.
‘கருப்பண்ணா என்னைக் காப்பாற்று’ என்று அவன் உள்ளம் இறைஞ்சி கதறியது. தலைசுற்றிக் கீழே விழுந்தான்.
கருப்பண்ணசாமி அழைத்தவரை கைவிடுவாரா என்ன? வெகுதூரத்தில் கொழுந்து வெளிச்சம் தெரிந்தது. வந்தவரின் நடையிலிருந்து அவனி என்பது புரிந்தது. அவனுடன் வருவது பெண் ஒருத்தி என்றும் தெரிந்தது. அவனியின் கொழுந்து வெளிச்சம் அவள் முகத்தில் விழ அவள் காளியம்மை என்று தெரிந்தது.
