Single White Female (1992)
பெண் பாத்திரங்கள் அறவே அற்ற படங்களைத்தான் சில தினங்களாக பார்த்து முடித்தேன் பழுப்பேறிய கண்கள், காமமற்ற உடம்புகள்,எப்பவும் வெயில் அப்பும் பகல் பொழுதுகள் அதனூடே பயணிக்கும் புழுதிகள் என்று அப்படி பார்த்து முடித்த பின் மனம் அப்படியே பெண்கள் மட்டுமே மையமாக கொண்ட அதுவும் நாடகத்தன்மை,நகைச்சுவை அல்லாத படங்கள் பார்த்தே ஆகவேண்டும் என்கிற தீவிர தன்மை ஓடிக்கொண்டே இருந்தது அப்படி தேடி கிடைத்த படம் தான் இது.
படம் உளப்பிணி கொண்ட ஒருத்தியுடைய கதை.நாவலை தழுவி எடுத்த படமும்.கதை என்று பார்த்தால் படத்தின் நாயகி ஒரு கணிப்பொறி ஆடை நிபுணர்.அவளிற்கு ஒரு காதலன்.அவள் வசிப்பதோ அடுக்கு மாடி வீட்டில்,அந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசிக்கும் ஒருவனும் நட்பாய் பழகி வருகிறான்.இப்படியாக படம் ஆரம்பமாகிறது.
நாயகிக்கும் அவனது காதலனுக்கும் சிறு பிரச்சனையில் பிரிகிறார்கள்.அந்த பிரிவை போக்க நமக்கு துணையாக ஒரு தோழி கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து நாளிதழில் அவள் விளம்பரம் கொடுக்கிறாள்.அந்த விளம்பரத்தை பார்த்து ஒருத்தி விண்ணப்பம் செய்ய அவளை நாயகி அறைத்தோழியாக இணைத்துக்கொள்கிறாள்.முதலில் நல்லபடியாக போய்க்கொண்டு இருக்கும் அவர்களின் நட்பில் குறுக்காக நாயகியின் காதலன் மீண்டும் காதலை புதுப்பித்து நாயகியுடன் இணைகிறான்.அங்கே ஆரம்பிக்கிறது அறைத்தோழியின் சைக்கோத்தனம்.
படம் வேகம் எடுக்கிறது.அந்த அறைத்தோழியின் உளப்பிணி என்னவெனில் தனக்கு பிடிவார்கள் என்னிடம் மட்டுமே அன்பாய் இருக்கவேண்டும் என்பதே யாரிடமும் பேசக்கூடாது பழக்கூடாது அவள் கூடவே இருக்கவேண்டும் என்பதே இதற்கு யார் யார் தடையாக இருக்கிறார்களோ அவர்களை இந்த அறைத்தோழிக்கு பிடிக்கவில்லை என போக போக நாயகி புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.காதலனைப்பற்றி தவறாக குறை கூறவும் செய்கிறாள்.
இது பிடிக்காமல் போக நாயகி அறையை காலி செய்ய சொல்கிறாள்.இதற்கு முன்பாக நாயகி அவளின் அறையை சோதனை செய்யும் போது அந்த உண்மையை கண்டுபிடிக்கிறாள்.அதை பக்கத்துக்கு அறை நண்பனிடம் அவளால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது நல்லவள்தான் இருப்பினும் அவளை நல்ல மருத்துவரிடம் காண்பித்தால் நன்றாக இருக்கும் என கூறுவதை இந்த அறைத்தோழி ஒட்டு கேட்டும் விடுகிறாள்.இந்த நிகழ்வுக்கு அடுத்து அந்த அறைத்தோழி செய்யும் சைக்கோத்தனம் தான் படத்தின் வேர்.ஒவ்வொரு சம்பவமும் தரமான செய்கை.படத்தை பாருங்கள்.கண்டிப்பாக பிடிக்கும் தரமான சைக்கோ படம்.
பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படமும் கூட.கண்டிப்பாக 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டும் இந்த படம்.
